தசாரா பண்டிகை நிகழ்ச்சியில் மோடி, அதானி, அம்பானி கொடும்பாவிகள்







தசரா பண்டிகையின் போது வட இந்தியாவில் ராவணன் உருவபொம்மையை எரிப்பது வழக்கம். இதற்காக பல அடி உயரமான ராவணன் பொம்மைகளை வைத்து நிகழ்ச்சியின் முடிவில் அவற்றை தீ வைத்து எரிப்பர்.

 




இந்த ஆண்டு பஞ்சாப்பில் ராவணன் உருவபொம்மை எரிப்புக்கு பதிலாக பாரதீய கிஸான் யூனியன் (Ugrahan) விவசாயிகள் அமைப்பு நூதன முறையை கடைபிடித்தனர். மத்திய அரசின் புதிய விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பிரதமர் மோடியின் பல அடி உயர கொடும்பாவியை தயார் செய்தனர்.

மத்திய அரசின் விவசாய சட்டங்களால் தொழிலதிபர்கள் அதானி, அம்பானிதான் பயனடைகின்றனர் என்பதை குறிக்கும் வகையில் அவர்களது படங்களும் இந்த கொடும்பாவில் சேர்க்கப்பட்டன.

பின்னர் தசாரா பண்டிகை நிகழ்ச்சியில் மோடி, அதானி, அம்பானி கொடும்பாவிகள் ஒருசேர கொளுத்தப்பட்டன.










 



 



 



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி