மனு கொடுத்துட்டு வீட்டுக்கு போறதுக்குள்ள வேலை பெற்ற பெண்

மனு கொடுத்துட்டு வீட்டுக்கு போறதுக்குள்ள போன் வந்துடுச்சு!' - வியப்பு தெரிவித்த தூத்துக்குடி பெண்


‘மனு கொடுத்துவிட்டு வீட்டுக்கு போறதுக்குள்ள எங்களுக்கு போன் வந்துட்டுச்சு’ என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து தங்களுக்கு போன் வந்து விட்டதாகத் தூத்துக்குடியில் 2 மணி நேரத்தில் வேலை பெற்ற பெண் வியப்புடன் தெரிவித்துள்ளார்.


தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தூத்துக்குடியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். தூத்துக்குடி தெற்குக் காவல் நிலையம் அருகே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் கார் வந்த போது, சாலை ஓரத்தில் கையில் மனுவுடன் மாரீஸ்வரி என்ற மாற்றுத்திறனாளி பெண் பரிதாபமாக நின்று கொண்டிருந்தார். இதைப் பார்த்த முதல்வர் மாரீஸ்வரியிடம் என்ன, ஏதுவென்று விசாரித்தார். அப்போது, மாரீஸ்வரி தனக்கு அரசு வேலை கேட்டு முதல்வரிடம் மனு அளித்தார்.


மனுவைப் பெற்றுக் கொண்ட முதல்வர், 2 மணி நேரத்துக்குள் சுகாதாரத் துறை மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் வார்டு மேலாளர் பணி வழங்க  நடவடிக்கை எடுத்தார். உடனடியாக , பணி நியமன ஆணையும் மாரீஸ்வரிக்கு வழங்கப்பட்டது.  பணி ஆணையைப் பெற்ற மாரீஸ்வரி கண்ணீர் மல்க முதல்வருக்கு நன்றி தெரிவித்தார். மாரீஸ்வரிக்கு மாதம் ரூ.15,000 சம்பளம் கிடைக்கும்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி