இன்றைய செய்தி சிதறல்கள்
இன்றைய செய்தி சிதறல்கள்
கொரோனாவில் இருந்து விடுபட இன்னும் பல காலம் பிடிக்கும் என உலக சுகாதார நிறுவன தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதாநோம் கெப்ரியெசஸ் கூறியுள்ளார்.
ஒரு வாரத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை இருப்பு வைத்திருக்க வேண்டும்.
மழைக்காலங்களில் மெழுகுவர்த்தி, தீப்பெட்டி போன்றவற்றை வைத்துக்கொள்ள வேண்டும் : பொது மக்களுக்கு தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தல்.
மக்கள் யாரும் நீர் நிலைகளில் குளிக்கவோ, கடந்து செல்லவோ வேண்டாம் - பேரிடர் மேலாண்மை முகமை எச்சரிக்கை.
பழுதடைந்த ஊரக சாலைகளை மேம்படுத்த ரூ.1000 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ரத்து.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் தொடர் மழைப் பொழிவால் 14 ஏரிகள் முழுவதும் நிரம்பின.
தனிகட்சி தொடங்குகிறாரா முக.அழகிரி ? வரும் 20ஆம் தேதி ஆலோசனை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் 6 கோடியே 10 லட்சத்து 44 ஆயிரத்து 358 வாக்காளர்கள் : புதிய பட்டியல் வெளியீடு.
10,11,12 பொதுத் தேர்வுகள் குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை - அரசு தேர்வுகள் இயக்ககம் விளக்கம்.
இந்து கடவுள்களையும், கந்த சஷ்டி கவசத்தையும் இழிவுப் படுத்தியவர்களை கண்டிப்பதற்காகவே வேல் யாத்திரை நடத்தப்படுகிறது - எல்.முருகன் தமிழக பாஜக தலைவர்.
எல்.முருகனின் கருத்துக்கள் அதிமுகவை விமர்சிப்பதாக எடுத்துக்கொள்ள முடியாது - அமைச்சர் காமராஜ்.
கல்குவாரி தாரைவார்ப்பு அமைச்சர் சி.வி சண்முகம் பதவி விலக திமுக தலைவர் முக.ஸ்டாலின் வலியுறுத்தல்.
ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் கணினி உதவியாளர்களுக்கு மாத ஊதியம் ரூ.12,000-லிருந்து ரூ.14 ஆயிரமாக உயர்த்தி வழங்க அரசாணை - தமிழக அரசு.
அண்ணா பல்கலை. துணைவேந்தர் சூரப்பா மீதான குற்றச்சாட்டுகள்- விசாரணை ஆணைய நீதிபதி கலையரசன் பொறுப்பேற்றார்.
கொடைக்கானலில் உள்ள மோயர் சதுக்கம் , பைன் மரக்காடுகள் , குணா குகை, தூண் பாறை உள்ளிட்ட இடங்களை பார்வையிட நாளை முதல் அனுமதி.
திராவிட மொழியை சிந்து சமவெளி மக்கள் பயன்படுத்தியது உறுதி : மேற்குவங்க மொழி அறிஞர் முகோபாத்தியாய் ஆய்வில் நிரூபணம்.
அஷ்டதள பாத பத்ம ஆராதனை சேவையில் பங்கேற்க குடும்பத்துடன் திருப்பதி கோயில் சென்றுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
அமெரிக்காவின் மாடர்னா நிறுவனம் தயாரித்து வரும் கொரோனா தடுப்பூசி 95% பலன் தருவதாக அறிவிப்பு.
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மீண்டும் திட்டவட்டம்.
ஸ்டெர்லைட் ஆலையின் மேல்முறையீட்டு மனு விசாரணை டிசம்பர் முதல் வாரத்துக்கு ஒத்திவைப்பு.
தமிழகத்தில் இன்று 1725 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று.
பீகாரில் 7வது முறையாகவும், தொடர்ந்து 4வது முறையாகவும் முதல்வரானார் நிதிஷ்குமார் : பாஜகவைச் சேர்ந்த 2 பேர் துணை முதலமைச்சர்களாக பதவியேற்பு.
ராஜஸ்தான் மாநில சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் பன்வாரிலால் மேக்வால் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
ஆன்லைன் கடன் செயலிகளை தடை செய்ய திமுக எம்பி செந்தில்குமார் வலியுறுத்தல்.
பாம்பன் பாலத்திற்கு இடையே சிக்கிய கிரேன் - 8 நாட்களுக்குப் பிறகு பத்திரமாக மீட்பு.
மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று முதல் பக்தர்களுக்கு அனுமதி.
சுமார் 8 மாதங்களுக்குப் பிறகு ஷீரடி சாய்பாபா கோவில் மீண்டும் திறப்பு.
நீதிபதி என்வி.ரமணா மீது ஜெகன்மோகன் குற்றச்சாட்டுகளை கூறிய விவகாரம் வழக்கை வேறு அமர்வுக்கு மாற்ற நீதிபதி யு.யு.லலித் பரிந்துரை.
பழனியில் துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்தவர்களில் பழனிசாமி என்பவரின் காலில் பாய்ந்த குண்டை மருத்துவர்கள் அகற்றினர்.
தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக 12 மாவட்டங்களில் கனமழையும், 4 மாவட்டங்களில் மிகக் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Comments