செட்டிநாடு நெஞ்செலும்பு முருங்கைக்காய் சாம்பார்
செட்டிநாடு நெஞ்செலும்பு முருங்கைக்காய் சாம்பார்
நவம்பர் 27, 2020 15:11
எலும்பு சாம்பார் ஒரு செட்டிநாடு அசைவ உணவு, ஆட்டு நெஞ்சு எலும்பில் செய்வார்கள். நெஞ்சு எலும்பும், முருங்கைக்காயும் சேர்த்து சமைக்கும்போது, வீடே மணக்கும்.
தேவையான பொருட்கள்:
எலும்பு - 250 கி
முருங்கைக்காய் – 1
து.பருப்பு – 50 கி
வெங்காயம்– 1
இஞ்சி – பூண்டு விழுது – 1 மேசைக்கரண்டி
தக்காளி – 2
மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
தனியா தூள் – 4 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – ½ தேக்கரண்டி
புளித் தண்ணீர் – 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
அரைத்துக் கொள்ள:
தேங்காய் – 2 மேசைக்கரண்டி
கசகசா - 1 தேக்கரண்டி
மிளகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
தாளிக்க:
பிரியாணி இலை – 1
பட்டை - சிறிய துண்டு
கல் பாசி – சிறிது
சோம்பு – 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 2
கறிவேப்பிலை – 1 கொத்து
நல்லெண்ணெய் – 2 மேசைக்கரண்டி
செய்முறை:
வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்.
முருங்கைக்காயை துண்டுகளாக வெட்டிக்கொள்.
எலும்பை நன்றாகக் கழுவி குக்கரில் போட்டு து.பருப்பு, உப்பு, மஞ்சள்தூள் மற்றும் 2 கப் தண்ணீர் சேர்த்து 3 விசில் விட்டு 5 நிமிடங்கள் சிம்மில் வேக வை.
கடாயில் நல்லெண்ணெய் விட்டு, தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து பொரிய விடு.
பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கு.
பின் , தக்காளியைச் சேர்த்து கூழாகும் வரை வதக்கு.
பிறகு, குக்கரில் உள்ள பொருட்களைச் சேர்.
பின் மசாலா தூள் அனைத்தையும் சேர்த்து , முருங்கைக்காய், தேவையான உப்பு சேர்த்துக் கலந்து கொதிக்க வை.
புளித் தண்ணீர் சேர்த்து ஒரு கொதி வந்ததும் தேங்காய் விழுதைச் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கு.
சுவையான, மணம் மிகுந்த செட்டிநாடு நெஞ்செலும்பு முருங்கைக்காய் சாம்பார் சாப்பிட தயார்
Comments