ஜோ பைடன் தீபாவளி வாழ்த்து

நம்பிக்கை, மகிழ்ச்சி மற்றும் வளம் நிறைந்த புது ஆண்டாக அமையட்டும்; ஜோ பைடன் தீபாவளி வாழ்த்து









அமெரிக்க அதிபராக தேர்வான ஜோ பைடன் நம்பிக்கை, மகிழ்ச்சி மற்றும் வளம் நிறைந்த புது ஆண்டாக அமையட்டும் என தனது தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.


 



 

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.  தீபங்களின் ஒளியை போற்றும் வகையில் மண் விளக்குகளை கொண்டு தீபங்களை ஏற்றி ஒளியை பரவ செய்து கொண்டாடும் இந்த விழாவில் மக்களுக்கு பல்வேறு தலைவர்களும் தங்களது வாழ்த்தகளை தெரிவித்து கொண்டனர்.




 




 

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜோ பைடன் தனது தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.  அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ஒளியின் திருவிழாவை கொண்டாடும் கோடிக்கணக்கான இந்துக்கள், சமணர்கள், சீக்கியர்கள் மற்றும் புத்த மதத்தினருக்கு வாழ்த்துகள்.

 

தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாடுவதற்கு டாக்டர் ஜில் பைடன் உடன் சேர்ந்து வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.  உங்களுடைய புது ஆண்டில் நம்பிக்கை, மகிழ்ச்சி மற்றும் வளம் நிறைய எனது வாழ்த்துகள் என அவர் தெரிவித்து உள்ளார்.

 




Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,