எஸ்எம்எஸ்.,க்கு இன்றுடன் 28 வயது
எஸ்எம்எஸ்.,க்கு இன்றுடன் 28 வயது
3rd December
உலகின் முதல் எஸ்எம்எஸ் அனுப்பப்பட்டு இன்றோடு 28 வருடங்கள் ஆகி விட்டதாம்.
இன்று ஸ்மார்ட்போனில் வாட்ஸ் அப், ஃபேஸ்புக் என்று எவ்வளவு தான் வந்தாலும், நோக்கியா மொபைலில் இருந்து அனுப்பும் மெசேஜ்களுக்கு ஈடாகாது. இந்நிலையில், இத்தகைய டெக்ஸட் மெசேஜ்களுக்கு இன்றோடு 28 ஆண்டுகள் ஆகி விட்டதாம்.
உலகின் முதல் மெசேஜ் எப்படி அனுப்பப்பட்டது என்று தெரியுமா? நம்புவதற்கு கொஞ்சம் கடினம் தான். உலகின் முதல் மெசேஜ் கணினியில் இருந்து வோடபோனுக்கு தான் அனுப்பப்பட்டதாம். 1992 ஆம் ஆண்டு, நெயில் பாப் வொர்த் என்ற பொறியாளர், தன்னுடைய நண்பருக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்தை மெசேஜ் மூலம் அனுப்பியுள்ளார்.
இதற்குப் பின்பு தான், நோக்கியா மொபைல் 1993 ஆம் ஆண்டு, தன்னுடைய கையடக்க மொபைலில், மெசேஜ் வசதியைக் கொண்டு வந்தது. வோடபோன் நிறுவனத்தைப் பொறுத்த வரையில், 1980 களில் வந்துள்ளது.
இது குறித்து, பாப்வொர்த் கூறுகையில், ‘’இன்று வரை என்னுடைய குழந்தைகளுக்கு, உலகில் முதன் முதலாக நான் தான் மெசேஜ் அனுப்பியதாக மகிழ்ச்சியடைவேன். மேலும், இன்று மெசேஜ், எமோஜி என்பது இவ்வளவு பிரபலமாக மாறும் என்பது அப்போது எனக்குத் தெரியாது. நான் சும்மா டைப் பண்ணி அனுப்புவேன். அதற்கு இவ்வளவு சக்திகள் இருப்பது ஆச்சரியம்’’ தான் என்று மகிழ்கிறார்.
Comments