எல்லை பாதுகாப்பு படையின் 56வது எழுச்சி நாள்

 


எல்லை பாதுகாப்பு படையின் 56வது எழுச்சி நாள் :

எல்லை பாதுகாப்பு படையினரின் (Border Security Force) 56வது எழுச்சி நாள் இன்று கொண்டாடப்படுகிறது. அதை முன்னிட்டு எல்லை பாதுகாப்பு படையினருக்கு பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

எல்லை பாதுகாப்பு படை பிரிவு அமைக்கப்பட்ட நாள் ஒவ்வொரு ஆண்டும் எழுச்சி நாளாக கொண்டாடப்படுகிறது. . அந்த வகையில் எல்லை பாதுகாப்பு படை பிரிவு உருவாக்கப்பட்டு 55 ஆண்டுகள் நிறைவடைந்து 56வது ஆண்டுக்குள் அடியெடுத்து வைக்கிறது.

இதனை முன்னிட்டு பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,  ‘‘துணிச்சலான படையாக எல்லை பாதுகாப்பு படையானது தனித்துவமுடன் செயல்பட்டு வருகிறது. நாட்டை பாதுகாக்கும் பணியில் மற்றும் தேசிய பேரிடர் காலங்களில் குடிமக்களுக்கு உதவிடுவதில் ஈடுபாட்டுடன் பணிபுரிந்து வருகிறது. எல்லை பாதுகாப்பு படையால் நாடு பெருமை அடைகிறது’’ என டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா டுவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘‘எல்லை பாதுகாப்பு படையின் 56வது எழுச்சி நாளை முன்னிட்டு, அவர்களின் சேவை மற்றும் நாட்டுக்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றுக்காக தைரியமிக்க அனைத்து வீரர்களையும் நான் வணங்குகிறேன்’’ என்று அமித் ஷா பதிவிட்டுள்ளார்.

எல்லைப் பாதுகாப்புப் படை (Border Security Force) என்பது இந்திய சர்வதேச எல்லைப்பகுதியைப் பாதுகாக்கும் இந்திய அரசின் ஒரு படையாகும். இதுவொரு மத்திய காவல் ஆயுதப் படைகளுள் ஒன்றாகும். இந்திய துணை இராணுவங்களில் ஒரு பிரிவாகக் கருதப்படும் இப்படை 1 டிசம்பர் 1965ல் உருவாக்கப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இப்படைப்பிரிவின் முக்கிய பணி, எல்லை ஊடுருவலைத் தடுப்பதும், எல்லையைப் பாதுகாப்பதுவும் ஆகும்.


1965 வரை இந்திய பாகிஸ்தான் எல்லைப் பகுதியை அந்தந்த மாநில ஆயுதப் படைகளே பாதுகாத்துவந்தன. 1965 ஏப்ரல் 9 குஜராத் மாநில கட்ச் பகுதியில் பாகிஸ்தான் இராணுவத்தால் சர்தார் போஸ்ட், சார் பெட் மற்றும் பெரியா பெட் ஆகிய இந்திய வீரர்கள் தாக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து இந்திய-பாகிஸ்தான் போர், 1965 நடந்து முடிந்தது. அதனையடுத்து இந்திய சர்வதேச எல்லைப் பகுதியை பாதுகாக்க எல்லைப் பாதுகாப்புப் படை என்ற வலிமையான படை டிசம்பர் 1, 1965 அன்று உருவாக்கப்பட்டது. இதன் முதல் தலைமை இயக்குநராக கே எஃப் ரஸ்டம்ஜி பொறுப்பேற்றார்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி