இக்கிகய் தொடர் பகுதி ( 6)

 இக்கிகய்  தொடர்  பகுதி ( 5) 

இக்கிகய் பற்றிய ஐந்து தொடரிலும் வாழ்க்கையை சலிக்காமல் எப்படி வாழ வேண்டும் அப்படி வாழ்ந்தால் நாம் இக்கிகயை எளிதாக அடைந்து விடலாம் என்பதை  பார்த்து வந்தோம்



இக்கிகய் தொடரின் முடிவாக இக்கிகய் புத்தகத்தில் சொல்லிய சொல்லப்பட்ட கருத்துக்களை பத்து விதிகளாக சொல்லுகிறார்கள் ஹெக்டேர் கார்சியா மற்றும் பிரான்செஸ்க் மிராயியஸ் .


1. எப்போதும் மும்மரமாக இருங்கள், வேலையிலிருந்து ஓய்வு பெறாதீர்கள் 


2. அவசரப்படாதீர்கள் 


3. வயிறு நிறையச் சாப்பிடாதீர்கள்


4. உங்களைச் சுற்றிலும் நல்ல நண்பர்களை வைத்துக் கொள்ளுங்கள்


5. உங்களுடைய அடுத்த பிறந்தநாளுக்கு ஒரு நல்ல உடல்வலிமையை பெற 

உறுதி கொள்ளுங்கள்.


6. புன்னகை செய்யுங்கள்


7. இயற்கையுடனான தொடர்பைப் புதுப்பித்து கொள்ளுங்கள்.


8. நன்றியுணர்வுடன் இருங்கள் 


9.நிகழ்கணத்தில் வாழுங்கள்


10. உங்களுடைய இக்கிகயை பின்தொடருங்கள்.


இது தான் அவர்கள் கூறிய பத்து விதிகள்.மேலே கூறிய ஒன்பது விதிகளை ஒருவர் பின்பற்றினாலே போதுமானது பத்தாவது விதியை அடைந்து விடலாம்.


வாழ்க்கையை வாழனும் என்று வாழ்ந்தாலோ, பணத்தைத் தேடி ஓடினாலோ வாழ முடியாது.வாழ்க்கையை அப்போ அப்போ ரசித்து கொஞ்சமாக சிரித்து வாழ்ந்தால் மட்டுமே வாழ முடியும்.


இங்கு உள்ள அனைவரின் தற்போது மனநிலை பணம்.பணம் இன்றைக்கு இருக்கும் நாளைக்கு இருக்குமா இல்லாத என்பது யாருக்கும் தெரியாது.


மனிதர்கள் பொதுவாகவே தனக்குள்ளே  மகிழ்ச்சியை வைத்துக் கொண்டு அதை வெளியில் தேடுவார்கள்.தனக்குள் மகிழ்ச்சி என்பதே முதலில் நீங்கள் செய்யும் வேலை,உங்களை சுற்றியுள்ள நல்ல உறவுகள்,நல்ல நண்பர்கள்,நிறைய பேர் உண்ண உணவின்றி இருக்கும் நிலையில் நீங்கள் யாரிடமும் கை ஏந்தாமல் உணவு உட்கொள்கிறீர்கள்.


இம்மாதிரியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருக்கும் போதே உங்களுக்குள் கவலை சோர்வு தற்கொலை எண்ணம் இவையெல்லாம் வருவதற்கான காரணம் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் திருப்தி அடைவதே இல்லை என்பது தான் உண்மை.


போதும் என்று உணருங்கள்.ஆசைப்படுங்கள்.பேராசைப்படாதீர்கள்.பணத்தின் பின் ஓடாதீர்கள்.பணத்தை உங்களை தேடி வருமாறு உங்கள் திறமையை வெளிப்படுத்துங்கள்.


உறவுகளையும் சுற்றி இருப்பவர்களையும் போற்றுங்கள்.யாரையும் குறை கூறாதீர்கள்.உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அவரிடமே நேரடியாக சென்று உங்கள் கோபத்தைக் காட்டுங்கள்.யாரையும் நடித்து ஏமாற்றாதீர்கள்.புன்னகை செய்யுங்கள்.


உறவுகளிடமோ நண்பர்களிடமோ வேலை செய்யும் இடங்களிலோ Ego பார்க்காதீர்தள்.அப்படி தான் உங்கள் குணம் என்றால் அந்த உறவிடம் போலியான அன்பைக் காட்டாதீர்கள்.கண்டிப்பாக அதற்கான எதிர்வினையை அனுபவிப்பீர்கள்.


வாழ்க்கை வாழுங்கள் வீட்டின் ஜன்னல்களில் அமரும்  சிட்டுக்குருவியைப் போல், முகம் தெரியாத குழந்தை தெருவில் செல்லும் போதும் நம்மைப் பார்த்து சிரிப்பது போல், புத்தகத்தில் ஏதோவொரு வரி நம்மை கவர்ந்து இழுப்பது போல்,என்றோ நடந்த ஒரு காரியத்தை இன்று நினைத்தாலும் அமைதியை உணர முடிவது போல் வாழுங்கள்.


- கீர்த்தனா பிருத்விராஜ்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,