சென்னையின் தாகம் தீர்க்க இன்னொரு நீர்த்தேக்கம்!

 

செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம் ஆகிய நான்கு ஏரிகளும் சென்னை மாநகரின் முக்கிய நீர் ஆதாரங்களாக உள்ளன. இவற்றின் வரிசையில் மாநகரின் தாகம் தீர்க்க வந்துவிட்டது இன்னொரு நீர்த்தேக்கம்.

 பல்நோக்கு திட்டங்களுடன் திருவள்ளூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டு அண்மையில் பயன்பாட்டுக்கு வந்துள்ள தேர்வாய் கண்டிகை எனும் இப்புதிய நீர்த்தேக்கம்

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டிக்கு உட்பட்ட பகுதியில் அமைந்திருந்த தேர்வாய் கண்டிகை -கண்ணன்கோட்டை ஆகிய இரண்டு ஏரிகளை இணைத்து, தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கம் அமைக்கப்பட்டுள்ளது. 1,485 ஏக்கர் நிலப்பரப்பில், 280 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமான இந்த நீர்த்தேக்கம் அமைக்கப்பட்டுள்ளது. சென்னையின் குடிநீர் தேவையை சமாளிக்க 72 ஆண்டுகளுக்கு பிறகு புதிதாக அமைக்கப்பட்டுள்ள இந்த நீர்தேக்கம், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின கனவு திட்டங்களில் ஒன்றாகும்.
இயற்கையாக பெய்யும் மழை, ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீர் போன்றவற்றின் மூலம் 0.5 டிஎம்சி கொள்ளளவுக்கு கண்டிகை நீர்த்தேக்கம் நிரப்பப்படுகிறது. இவ்வாறு நிரப்பப்படும் நீரை, நாள் ஒன்று 66 மில்லியன் லிட்டர் வீதம் பூண்டி ஏரிக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. கண்டலேறு அணையிவிருந்து நீர்த்தேக்கத்துக்கு தண்ணீரை கொண்டுவர மொத்தம் 8.6 கிலோமீட்டர் நீளத்துக்கு கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. நீர்த்தேக்கத்தை ஆண்டுக்கு இருமுறை 1 டிஎம்சி அளவுக்கு தண்ணீரை நிரப்புவதன் மூலம் சென்னை மாநகரில் கோடை காலத்தில் ஏற்படும் கூடுதல் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கம் மட்டுமின்றி, நீர்த்தேக்கத்தை சுற்றியுள்ள 200 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் தேர்வாய் -கண்டிகை நீர்த்தேக்கத்தில் ஐந்து மதகுகள் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன் நீர்த்தேக்கம் அமைந்துள்ள பகுதியை சுற்றி 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டு மண் வளம், மழை வளத்தை பெருக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இது, வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளதால், எதிர்காலத்தில் பறவைகள் சரணாலயமாகவும், சுற்றுலா தளமாகவும் உருவாக வாய்ப்புள்ளது. நீர்த்தேக்கத்தில் மீன்வளத்தை பெருக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி