ரமணமகரிஷி (30)
ரமணமகரிஷி (30)
பகவான் ஸ்ரீ ரமணர் குறித்தான தொடர் :
பகுதி 30
பகவான் ஸ்ரீரமணரோடு உடனிருந்த முக்கியமானவர்களுல் ஸ்ரீகுஞ்சு சுவாமிகள் என்பவரும் ஒருவர்.
இவர் 1897 ஆம் ஆண்டு கேரள மாநிலத்தில் பாலக்காட்டுக்கு அருகில் உள்ள செறக்கோடு என்னும் கிராமத்தில் பிறந்தார் மற்ற குழந்தைகளைப் போல ஓடி ஆடியோ, பிடிவாதம் பிடித்து அழுவதோ செய்யாது ஓர் இடத்தில் அமைதியாக இருக்கும். இக்குழந்தையின் குணத்தைக் கண்ட அவரது பெற்றோர்கள் குழந்தையின் தாய் மாமனிடம் அழைத்துச்சென்று ஜாதகத்தினை கணித்தனர்.
அவரோ இக்குழந்தை மிகவும் தெய்வீகமான, அபூர்வ குணம் கொண்டதாகவும் எப்போதும் அமைதியாக இருக்கும் என்றும் கணித்து சொன்னார்.
நல்ல பெற்றோர்கள் அவர்களுக்கு அமைந்த காரணத்தால் ஸ்ரீ குஞ்சுசுவாமிகள் சரியானபடி வளர்க்கப்பட்டனர். இவர் பாலகனாய் இருந்த பருவத்தில் தகப்பனாருடன் குளத்தில் நீராட காலையில் போகும் போது மறுகரையில் வைதீக பிராமணர்கள் நீரில் நின்றும், படித்துறையில் அமர்ந்தும் மந்திர ஜெபம் செய்வதை கண்டார்.
அவ்விதம் தாமும் செய்ய வேண்டும் என்ற ஆவல் உண்டாயிற்று. ஆனால் யாரிடம் கேட்பது என்று தெரியவில்லை அன்றிரவு கனவில் ஜடாமுடியும் விபூதியும் அணிந்து கொண்ட கோலத்தோடு பரமேஸ்வரன் தோன்றி சிவ பஞ்சாட்சர மந்திரம் உபதேசித்தார். விடிந்ததும் அக்கனவு நினைவில் இருந்தது. சற்று நேரத்திற்குள் மந்திரம் மறந்து விட்டது, இது என்ன சோதனை என்று மனம் வருத்தம் அடைந்தார் . ஆனால் அன்றிரவு சிவபெருமான் மறுபடியும் கனவில் தோன்றி மீண்டும் பஞ்சாட்சர மந்திரத்தை உபதேசிக்க, விடியலில் அதை நினைவில் தங்கிய முதல் இடைவிடாத பஞ்சாட்சர மந்திரங்களை ஜெபம் செய்வதை வழக்கமாகக் கொண்டார் குஞ்சு சுவாமிகள்.
பஞ்சாட்சர மந்திரங்களை சொல்லியபடியே, மனதில் தோன்றும் போதெல்லாம் திருநீறு இட்டுக் கொள்ள வேண்டும் என்கிற ஆவல் எழுந்தது.அன்றிரவு கனவில் சிவபெருமான் அவருக்கு ஒரு மரத்தைக் காட்டி அந்த மரத்தின் கீழ் உள்ள காசுகளை எடுத்து விபூதிப்பை வாங்கிக் கொள்ள சொன்னார். சொன்னபடியே மறுநாள் காலை சென்ற போது அம் மரத்தின் கீழ் மூன்று காலணாக்கள் இருந்தன. கடையில் விபூதிப்பை விலைக் கேட்ட போது மூன்று காலணா தான் ஆகிறது என்று சொல்லப்பட்டது. கூடுதலும் இல்லாமல் குறைவும் இல்லாத தன்னிடம் காசு சரியான இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டார், ஒரு விபூதிப்பை வாங்கிய அந்த ஆசை நிறைவேறியது.
விபூதிப்பை ஏது என தகப்பனார் கேட்க குஞ்சு சுவாமி தந்தையிடம் விவரங்கள் சொன்ன பிறகு அவரும் மகிழ்ச்சியடைந்தார்
சிறிது நாட்களுக்கு பின்பு ருத்ராட்ச மாலை அணிந்து கொள்ள ஆசை வந்தது. நண்பனுடன் குளம் நோக்கி நீராட போகும் போது, காரணம் ஏதுமில்லாமல் அவனது நண்பன் திடீரென்று பிரிய அடுத்த ஐம்பதிடி நடந்து போன தொலைவில் ஒரு பெரிய தாமரைப்பூ கிடந்தது. அதனை எடுத்துப் பார்த்ததும்,, அப்பூவின் நடுவே தங்கத்தில் கோர்த்த ருத்ராட்சம் இருந்தது.இது என்ன அதிசயம் என்று ஸ்ரீகுஞ்சு சுவாமிக்கு கொண்டாட்டமானது இந்தப் பிள்ளை தனக்கு சிவபெருமான் கொடுத்த ஒரு வரம் என்ன நினைத்து மகிழ்ந்தார்
அவர் இருந்த ஊருக்கு அருகே திருவிளையாடல் புராணம் தமிழில் உள்ளதை படித்து மலையாளத்தில் விளக்கி தொடர் சொற்பொழிவு நடந்தது..அதை கேட்க தந்தையும் மகனும் போவார்கள். இதை மனதில் பதித்துக்கொண்டு உறவினர்களுக்கு விவரித்துக் கூறும் ஆற்றல் ஸ்ரீ குஞ்சு சுவாமிக்கு இருந்தது. கதை சொல்லும் போது அந்த ஊரே கேட்டு சந்தோஷப்படும், என்ன ஞானம் என்ன ஞானம் என்று வியக்கும்.
ஒரு முறை எலப்புளி சுவாமிகள் என்கின்ற பெரியவர் ஊருக்கு வந்தபோது அவரை கொண்டாட வேண்டும் என்றும் ஊர் மக்கள் உபசாரங்கள் செய்தனர்.
ஸ்ரீ குஞ்சு சாமியை அவர்களின் தந்தை, அழைத்துக் கொண்டு சென்றார்.
குஞ்சு சுவாமிகள், எலப்புள்ளி சாமியாரிடம் ஒரு கேள்வி கேட்டார்.
அக்கால முனிவர்கள் உன்னத நிலையை அடைந்தது போல நாமும் அடைய முடியவில்லையே அப்படிப் பட்ட முனிவர்கள் இறைவனை தன்னுள் கண்டவர்கள் இப்போது யாரும் உளரோ என்றார்.
ஏன் இல்லை, தமிழ்நாட்டில் திருவண்ணாமலை என்னும் தலத்தில் பகவான் ஸ்ரீ ரமணர் என்பவர் இருக்கிறாரே என்று எலப்புளி சுவாமிகள் சொன்னதும் குஞ்சு சுவாமிக்கு உடம்பில் மின்சாரம் பாய்ந்தது போல அதிர்ச்சி உண்டானது.
ரமண மகரிஷி ரமண மகரிஷி என்று அவர் பெயரையே திரும்பத் திரும்பச் சொல்லி, உள்ளத்தளவில் பேருவகை அடைந்தார்.
திருவண்ணாமலை, ஸ்ரீ ரமணர் ஆசிரமத்திற்கு எவ்வாறு குஞ்சு சுவாமிகள் வந்தார். என்பதன் விவரம் நாளைய பதிவில்.
Comments