விமானநிலைய ஓடுபாதையில் புகை மண்டலம்
போகிப்பண்டிகையையொட்டி சென்னை விமானநிலைய ஓடுபாதையில் புகை மண்டலம் சூழந்துள்ளதால் சுமாா் 17 விமானங்கள் வருகை,புறப்பாடு தாமதமாகி பயணிகள் அவதி.
போகி பண்டிகையை முன்னிட்
டு சென்னை விமானநிலையத்தை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் மக்கள் இன்று அதிகாலையிலிருந்து தங்கள் வீடுகளின் முன்பு தெருக்களில் பழைய பொருட்களை பெருமளவு எரிக்கின்றனா்.அதனால் ஏற்படும் புகை மண்டலம் சிறிது சிறிதாக சென்னை விமானநிலைய ஓடுபாதை மைதானத்தை சூழந்துள்ளது.அதோடு இன்று விமானநிலைய பகுதியில் பணிப்பொழிவும் சற்று அதிகமாக உள்ளது.இதையடுத்து பணிப்பொழிவும்,புகை மண்டலமும் சோ்ந்ததால் விமானநிலைய ஓடுபாதை தெளிவாக தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஆனாலும் காலை 7.30 மணி வரை விமான சேவைகளில் எந்த பாதிப்பும் இல்லை.அதன்பின்பு விமானங்கள் தரையிறங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
காலை 7.30 மணிக்கு மேல் சென்னையில் தரையிறங்க வேண்டிய பெங்களூா்,கொல்கத்தா,நாக்பூா்,அகமதாபாத்,ஹைதராபாத்,டில்லி உள்ளிட்ட 9 விமானங்கள் சென்னையில் தரையிறங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.சுமாா் ஒரு மணி நேரம் வரை தாமதமாக வரும் என்று அறிவிக்கப்பட்டுள்து.அதைப்போல் சென்னையிலிருந்து புறப்பட வேண்டிய பெங்களூா்,அகமதாபாத்,மும்பை,பூனே,கொச்சி,பாட்னா உள்ளிட்ட 8 விமானங்கள் தாமதமாக புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு 17 விமானங்கள் திடீா் தாமதத்தால் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனா்.
Comments