ஸ்ரீ ராமகிருஷ்ணர்

 ஸ்ரீ ராமகிருஷ்ணர் பிறந்த தினம்!
















###########################################


கிராமத்தில் இருந்து ஏழை ஒருவன் தலைநகருக்கு ராஜாவைப் பார்க்க வருகிறான்.
அவன் இதற்கு முன்னர் நகரத்தையோ நகரத்து மக்களையோ அரண்மனைகளையோ பார்த்ததே இல்லை.
முதலில் அரண்மனை வாசலில் நின்றிருக்கும் காவலாளியைப் பார்த்தான். அவன் கம்பீரமாக வாள்தாங்கி நின்றிருப்பதைப் பார்த்து "அரசே, வணக்கம்" என்றான் ..அதற்கு அவன் "நான் ராஜா இல்லை..இன்னும் உள்ளே போ" என்கிறான்..
கிராமத்து மனிதன் கொஞ்சம் உள்ளே சென்றதும் படைத்தளபதி தென்படுகிறான்.. அலங்காரங்களுடன் இருந்த அவனைப் பார்த்து "நீங்கள் தான் ராஜாவா?"என்கிறான்..தளபதி "இல்லை, இன்னும் உள்ளே போ" என்று சொல்லவே மேலும் உள்ளே செல்கிறான்..
வழியில் தென்பட்ட மந்திரி மற்றும் இளவரசனைப் பார்த்து அதே கேள்வியைக் கேட்கவே அவர்களும் 'இல்லை' என்கிறார்கள்..
கடைசியில் அரசன் வீற்றிருக்கும் மண்டபத்திற்கு வந்து ராஜாவைப் பார்கிறான். அவன் சிம்மாசனம், அவன் அமர்ந்திருக்கும் கம்பீரம், அவன் முகத்தில் தெரியும் ராஜகளை இவற்றைப் பார்த்து எந்த கேள்வியும் கேட்காமல் உடனே அவனை "அரசே" என்று விழுந்து சேவிக்கிறான்..
இதே மாதிரி சாதகத்தில் இருக்கும் ஒரு பக்தன் தன் பாதையில் பொய்யான தியான அனுபவங்களால் ஏமாற்றப்படுகிறான். உடல் மறந்த உணர்வு ஏற்பட்டாலோ ,தியானத்தில் ஒளி தெரிந்தாலோ , தெய்வீகக் காட்சி தோன்றினாலோ இது தான் இறுதி இறைநிலை என்று தவறாக நினைக்கிறான்..
ஆனால் அந்த ஒப்பற்ற உண்மையான தெய்வீக அனுபவத்தை சந்திக்கும் போது அவனது சந்தேகங்களும் குழப்பங்களும் தானாகவே மறைகின்றன..சமாதி அனுபவத்தின் தன்மை அப்படிப்பட்டது🙏🙏🙏..>>>ராமகிருஷ்ணர் சொன்னது



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி