Wednesday, February 3, 2021

அறிஞர் அண்ணாவின் ஆங்கிலப் புலமை

 அறிஞர் அண்ணாவின் 52 ஆவது நினைவு தினம் இன்று (03.02.1969)      அறிஞர் அண்ணாவின் ஆங்கிலப் புலமை


      முதன்முதலாக நாடாளுமன்ற மேலவையில் பேசிய கன்னிப்பேச்சு. 


     " I am the Representative of the man in the street ". " தெருவோரத்தில் தேம்பி அழுகிறானே ஏழை மகன், அவன் பிரதிநிதியாகத்தான் நான் இங்கே வந்திருக்கிறேன் " என்று தன்னை வித்தியாசமாக அறிமுகப்படுத்தி கொண்ட போது , நேருவின் விழிகள் வியப்புடன் விரிந்தன.


     தமிழ் மொழிக்காக வாதாடும் போது , 


     " If Hindi is imposed on us, we will be definitely become the second rate citizens in the country "  என்று ஆங்கிலத்தில் பேச", 


       " Mr. Annadurai, bear it in mind ;  Hindi is being spoken by the largest majority of the people of this country ;  Hence it will be the official Language of this nation "  என்று ஆளுங்கட்சியினர் எதிர்த்தனர்.


       அதற்கு அறிஞர் அண்ணா அற்புதமான ஆங்கிலத்தில் சூடாகவும் சுவையாகவும் பதிலளிக்கிறார்.


       " If that is your syllogism ,  what is your National Bird ? Peacock !  But if you think about the majority of the bird's in the country, Crow must be the National Bird !"


    " பெருவாரியானவர் பேசும் இந்தியைத் தான் மற்றவர்களும் கட்டாயம் படித்தாக வேண்டுமென்றால் , இந்தியாவில் பெருவாரியாக வாழும் காக்கையைத் தானே நீங்கள் தேசியப் பறவையாக்கி இருக்க வேண்டும் !  ஏன் மயிலை வைத்திருக்கிறீர்கள் ?"  அவரின் ஆணித்தரமான பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் அடங்கி போயினர்.


      அதன் பின்னரே ஜவகர்லால் நேரு  கீழ்க்கண்ட உறுதிமொழி நடைமுறைக்கும் வந்தது.


     " Hindi will not be imposed against the wishes of the Non Hindi People "


      நாடாளுமன்ற மேலவையில் அறிஞர் அண்ணாவின் அற்புதமான ஆங்கில பேச்சாற்றலால் கிறங்கி போன பண்டித ஜவகர்லால் நேரு மற்றும் அவையினரும் உணவு நேரத்தையும் மறந்து , 

" Let him continue his excellent speech, "  எனக்கேட்டு கொண்டதால் , மேலவையின் துணைத் தலைவர் திருமதி வயலட் ஆல்வா மரபையும் மீறி , மேலவையை நீட்டித்து வரலாற்றில் இடம்பெற்ற புதுமையான நிகழ்ச்சி.


       இவரின் உரையால் ஈர்க்கப்பட்ட பாபு ஜெகஜீவன்ராம் , " Mr. Anna,  Your speech is so marvelous ;  I join with your sentiments as I am a Dravidian from Bihar "  

என்று பூரிப்புடன் தன்னை அறிமுகப்படுத்தி கொண்டாராம்.


      அண்ணாவின் கன்னிப் பேச்சை , 'தி இந்து' ஆங்கில நாளிதழில் "' இதுவரை எந்த பாராளுமன்ற உறுப்பினர் பேசும் போது இந்தளவுக்கு குறுக்கீடுகள் இருந்ததில்லை. அதேபோல் எந்த உறுப்பினர் உரையாற்றும் போதும் அவர் இந்தளவிற்கு உறுப்பினர்களின் கவனத்தை முழுமையாக ஈர்த்ததுமில்லை "


     " கத்தியைத் தீட்டாதே, தம்பி ! உன் புத்தியைத் தீட்டு '  எனறுரைத்த அண்ணா , ஆங்கிலத்தில்  ' Revolution should not be by the bullet, but by the ballot ' என்றார்.


    " வடக்கு வாழ்கிறது ; தெற்கு தேய்கிறது " என்று குரல் கொடுத்த , அறிஞர் அண்ணா , ' North flourishes, but South Perishes '   என அழகுபட ஆங்கிலத்தில் எடுத்துரைத்தார்.


     அமெரிக்க ' யேல்‌ ' பல்கலைக்கழகத்தில் விருது பெறச் சென்ற போது , அவரிடம் அமெரிக்கா மாணவர்கள் கேள்வி மேல் கேள்வி எழுப்பினர்.  


    அதிலொன்று , 

" What do you think about your Indian Union ?"  

       

       அதற்கு அறிஞர் அண்ணா ,

" Indian Union is nothing but Onion ! "

 என் பதிலளித்தார்.  ' உரிக்க உரிக்க வெங்காயம் ஒன்றுமில்லாமல் போவது போல, ஒருமைப்பாடு உணர்வுக்கு குந்தகம் ஏற்பட்டால் இந்தியாவே 

இல்லை ' என்பதை நளினமான முறையில் கூறினார்.


      சட்ட மன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர் தகாத வகையில்  , Mr. Chief Minister , your days are numbered, " என அமங்கலமாக கூற , உடனே அண்ணா , 

" Yes, my steps are also measured, " என பலத்த கரவொலிக்கிடையே் பதிலளித்தார்.


     எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் " Delays is dangerous, " எனக் கூற , உடனே அண்ணா ,

" Haste always makes waste,"  எனக் கூற அவை சிரிப்பில் ஆழ்ந்தது.


       அரசு கொள்கை முடிவு எடுப்பதில் தாமதமாக எதிர்க்கட்சி உறுப்பினர் பெரிதுபடுத்தி , 

" Delayed judgement is a denied judgement," என்றார். அதற்கு பதிலளித்த அறிஞர் அண்ணா அவர்கள், 

" Hurried judgement is a buried judgement,' என்ற போது அவரின் சமயோசித உணர்வை அறிந்து மகிழ்ந்தோம் என்றனர் அவையில் அமர்ந்திருந்தவர்கள்.


       ' தெரிய... தெளிய ' என்ற  கா.வேழவேந்தன் எழுதிய கட்டுரைத் தொகுப்பிலிருந்து


தொகுப்பு மற்றும் பகிர்வு: ராஜகோபாலன்

No comments:

Featured Post

கட் - கட எனும் சங்கேத ஒலிகள் கொண்ட தந்தி முறை

 வரலாற்றில் இன்று மே 24, 1844- கட் - கட எனும் சங்கேத ஒலிகள் கொண்ட தந்தி முறையைக் கண்டு பிடித்த சாமுவேல் மோர்ஸ் உலகின் முதலாவது தந்திச் செய்த...