Posts

Showing posts with the label /

புதுவருட சிந்தனைகள்/மஞ்சுளாயுகேஷ்

Image
  நாட்காட்டியின் இறுதி பக்கத்தினை கிழிப்பது என்பது எப்போதும் ஒரு கண நேரத்து செயலாய் இருப்பதேயில்லை. கிழிப்பதென்ற எண்ணம் மனதில் எழும் போதே வருடத்தின் ஒட்டுமொத்த நிகழ்வுகளும் சிந்தனையில் தோன்றி மறைகின்றன. 2019 என்பது ரொம்பவே சந்தோசமாக இருந்த வருடம்‌. பாரீஸ் தலைநகரில் அட்டகாசமாச வானவேடிக்கையை கண்டுகளித்தவாறே 2020 புத்தாண்டை வரவேற்றது அவ்வளவு ஆனந்தமாக இருந்தது. இந்த வருடத்தினை நாங்கள் ரொம்பவே ஆனந்தமாக தான் ஆரம்பித்தோம். போன வருடம்என் வாழ்க்கையை என் கையில மீட்டுத் தந்திருக்கின்றது. தூரப் பயணங்கள், அவை தந்த அனுபவங்கள், வாழ்க்கையில் மறக்க முடியாத சந்திப்புக்கள், அந்த சந்தோசங்களை சுமந்த எழுத்துகள், நம்பிக்கை தந்து வாழ்வை மீட்டுத் தந்த வார்த்தைகள், எங்குமே வெளிப்படுத்தத் தோன்றாத பொக்கிஷமான புகைப்படங்கள என இந்த ஆண்டின் நினைவுகள் எல்லாம் எண்ணிலடங்காதவை. எனக்கு எழுத்தாளர்,கவிஞர் என பெருமையை தேடித்தந்த *பீப்பிள் டுடே * உமாகாந்தன் அவர்களும் என்னை கவிஞர் என அடையாளம் படுத்தி பெருமை தந்த நிலாமுற்றம் மாறன் ஐயா மற்றும் குழுவினர்கள் உலகமெங்கும் எனக்கு பெருமையைத்தேடி தந்த * ராணி வார இத...