*ஃபேஷியல்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்!*
*ஃபேஷியல்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்!* ஆர்கானிக் ஃபேஷியல், கோல்டன் ஃபேஷியல், பியேர்ல் ஃபேஷியல், டைமண்ட், ஹைட்ரா ஃபேஷியல், ஒயின் ஃபேஷியல், ஃபுரூட் ஃபேஷியல், சக்லேட் ஃபேஷியல், என எத்தனையோ ஃபேஷியல்கள் உள்ளன. பார்லருக்குச் சென்று ‘என் முகம் கொஞ்சம் பார்க்க நல்லா இருக்கணும்’ என சொல்லிவிட்டால் முடிந்தது ஜோலி. அவர்களிடம் இருக்கும் அத்தனை ஃபேஷியலையும் நம்மிடம் காண்பித்து குழப்ப நிலைக்குக் கொண்டு சென்றுவிடுவார்கள். கடைசியில் ‘ஃபேஷியலே வேண்டாம்ப்பா வெறும் ஐப்ரோவை மட்டும் நறுக்கி விடு’ என்னும் அளவுக்கு சோர்வடைந்துவிடுவதும் நிகழும். சரி ஃபேஷியல் எப்படி தேர்வு செய்ய வேண்டும்?, யாருக்கு என்ன ஃபேஷியல்? எதற்கு முதலில் ஃபேஷியல் விவரமாகச் சொல்கிறார் பியூட்டிஷியன் மற்றும் செலிபிரிட்டி மேக்கப் ஆர்டிஸ்ட் ரம்யா அழகேந்திரன். ஃபேஷியல் பயன்கள் பெரும்பாலும் 45 நாட்களுக்கு ஒரு முறை ஃபேஷியல் செய்வதால் ஏகப்பட்ட நன்மைகள் உண்டு. முகத்தில் சுருக்கம் வராமல் சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை வெளியேற்றி முகத்தை புத்துணர்ச்சியாக வைக்கவே ஃபேஷியல் செய்யப்படுகிறது. அரோமோதெரபி ஃபேஷியல், நறுமண எண்ணெய் கொண்டிருக்கு...