Posts

Showing posts with the label தொடர்./ கட்டுரைகள்/பொது/கருத்து பெட்டகம்

தேசிய பெண்கள் குழந்தைகள் தினமின்று

Image
தேசிய பெண்கள் குழந்தைகள் தினமின்று ❣️ சமூகத்தில் பெண் குழந்தைகளுக்கு சம உரிமை, சம வாய்ப்பு அளிப்பதை உறுதி செய்யும் பொருட்டு, 2008-ம் ஆண்டு ஜனவரி மாதம் 24-ந் தேதி முதல் ‘தேசிய பெண் குழந்தைகள் தினம்’ கொண்டாடப்படுது.  பெண் குழந்தைகள்... பூக்குட்டிகள்.. வாழ்வில் நாம் காணும் உயிரோவியங்கள்... வீட்டுக்குள் வளைய வரும் பெண்தெய்வம்... அவள் இருந்தாலே வீடு நிறைவு பெறும்.. இப்படி பெண் குழந்தைகளின் முக்கியத்துவத்தை ஊக்குவிக்கும் விதமாகவும் கொண்டாடப்படும் இந்நாள், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் கொண்டுவரப்பட்டு, இந்தியா முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வருது.  பெண் குழந்தைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது, அவர்களுக்கு நேரும் பிரச்சினைகளைத் தடுப்பது, பெண் குழந்தைகளுக்கான கல்வியை உறுதி செய்வது ஆகியவை இந்நாளின் நோக்கமாகும். தற்போதையச் சூழலில் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும், அவர்களுக்கான தேவைகள் பூர்த்தி செய்யப்படுகின்றனவா என்பது சந்தேகமே.  அனைவரும் முதலில் குடும்பத்தில் தங்கள் பெண் குழந்தைகளை மதிப்பான முறையில் நடத்த ஆரம்பிக்க வேண்டும். இதுவே, சமூகத்திலும் மாற...

!அழியாத சுவடாகிய அரியலூர் ரெயில் விபத்து*

Image
 200 பேரை பலிகொண்ட கோர தினம் இன்று... !அழியாத சுவடாகிய அரியலூர் ரெயில் விபத்து* அதாவது அரியலூரில் மிகப்பெரிய ரெயில் விபத்து நடந்த நாள் இன்று. அப்போது ரெயில் பெட்டிகளில் தூங்கிக்கொண்டிருந்த பலர் ஜலசமாதி அடைந்தது பெரும் சோகமாகும். அரியலூர் விபத்துகள் என்பது புதிதல்ல, பல நூற்றாண்டுகளாக வெவ்வேறு ரூபங்களில் அவை ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் அவற்றில் சில, பல மனித உயிர்களை காவு கொண்டு, மக்கள் மனதில் என்றென்றும் அழியாத சுவடாக மாறிவிடுகிறது. உதாரணமாக கும்பகோணம் பள்ளி தீ விபத்து போன்றவற்றை கூறலாம். சமீபத்தில் குஜராத் மாநிலம் மோர்பி நகரில் மச்சு ஆற்றின் குறுக்கே இருந்த 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான தொங்கு பாலம் கடந்த 30-ந்தேதி அறுந்து விழுந்தது. இந்த விபத்தில் குழந்தைகள், பெண்கள் உள்பட 140-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். சமீப காலத்தில் நாட்டில் நடந்த மோசமான விபத்தாக இதை கூறலாம். ஆனால் கடந்த 66 ஆண்டுகளுக்கு முன்பும் இதேபோன்ற சம்பவம் நடந்துள்ளது. அதாவது அரியலூரில் மிகப்பெரிய ரெயில் விபத்து நடந்த நாள் இன்று. அப்போது ரெயில் பெட்டிகளில் தூங்கிக்கொண்டிருந்த பலர் ஜலசமாதி அடைந்தது பெரும் ...

*ஔரங்கசீப் தன் மகனுக்கு இந்தி கற்பிக்க உருவாக்கிய அகராதி -

Image
 *ஔரங்கசீப் தன் மகனுக்கு இந்தி கற்பிக்க உருவாக்கிய அகராதி - இந்துக்களை வெறுத்த ஒரு கடுமையான இஸ்லாமிய ஆட்சியாளராக ஔரங்கசீப் பார்க்கப்படுகிறார். ஆனால் ஔரங்கசீப், வரலாற்றின் மிகவும் சிக்கலான ஒரு பாத்திரம். அவருடைய வாழ்க்கையில் மக்களை ஆச்சரியப்படுத்தக்கூடிய பல விஷயங்கள் அடங்கியுள்ளன. ஔரங்கசீப்பின் சகோதரர் தாரா ஷிகோ, வேதங்களையும் உபநிடதங்களையும் பாரசீக மொழியில் மொழிபெயர்த்த இளவரசராக புகழ் பெற்றவர். 1659 இல் நிகழ்ந்த அதிகாரப் போரில் ஔரங்கசீப் அவரை கொடூரமாகக் கொன்றார். இருப்பினும், ஔரங்கசீப் தனது மகனின் கல்விக்காக இந்தி-பாரசீக சொல் அகராதியைத் தயாரிக்கும் பணியைச்செய்தார். அது அவரது ஆளுமையில் பெரிதாக அறியப்படாத அம்சத்தைச் சுட்டிக்காட்டுகிறது. வரலாற்றாசிரியர் ஓம் பிரகாஷ் பிரசாத்தின் 'ஒளரங்கசீப், ஏக் நயீ த்ரிஷ்டி' என்ற புத்தகம், 'தோஃபத்துல்-ஹிந்த்' என்ற இந்த ஹிந்துஸ்தானி அகராதி, பாரசீக மொழி தெரிந்த ஒருவர் இந்தி கற்றுக்கொள்ளும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடுகிறது. ஔரங்கசீப்பின் மூன்றாவது மகன் ஆசம் ஷாவுக்கு உள்ளூர் மொழியான இந்தியை கற்பிப்பதற்காக உருவாக்கப்பட்ட அகராதியின் ப...

*72 உறுப்பினர்கள் கொண்ட கூட்டுக் குடும்பம்*

Image
  *72 உறுப்பினர்கள் கொண்ட கூட்டுக் குடும்பம்* கூட்டுக்குடும்பமாக வாழ்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டு இருக்கிறது. தனி குடும்ப வாழ்வின் மீதுதான் பலருக்கும் நாட்டம் இருக்கிறது. கூட்டுக்குடும்பமாக வாழ்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டு இருக்கிறது. தனி குடும்ப வாழ்வின் மீதுதான் பலருக்கும் நாட்டம் இருக்கிறது. விதிவிலக்காக, கூட்டுக் குடும்ப வாழ்வியலை உயிர்ப்புடன் வைத்திருக்கும் குடும்பங்களும் இருக்கத்தான் செய்கின்றன. மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரே குடும்பத்தில் 72 உறுப்பினர்கள் ஒன்றுபட்டு வாழும் நிகழ்வு கவனம் ஈர்த்துள்ளது. ஒன்றல்ல.. இரண்டல்ல.. நான்கு தலைமுறைகளாக கூட்டு குடும்பமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். 'டோய்ஜோட்' எனப்படும் அந்த குடும்பத்தினர் அங்குள்ள சோலாப்பூரில் வசித்து வருகிறார்கள். இவர்கள் கர்நாடக மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர்கள். அங்கிருந்து சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு தொழில் நிமித்தமாக சோலாப்பூருக்கு குடியேறி இருக்கிறார்கள். தரை விரிப்புகள், திரை சீலைகள் சார்ந்த அலங்கார பொருட்களை விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்கள். 72 பேர் குடும்ப...

: *ஏ. பி. ஜே. அப்துல் கலாம்*

Image
: *ஏ. பி. ஜே. அப்துல் கலாம்* இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், மிகப்பெரிய பொருளாளர், இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர், இந்திய ஏவுகணை நாயகன், இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, சிறந்த ஆசிரியர் மற்றும் அனைவராலும் மதிக்கதக்க அற்புதமான பேச்சாளர், வருங்கால இளைஞர்களின் முன்மாதிரியாக கருதப்படும் நம் எல்லோருக்கும் தெரிந்த ஏ.பி.ஜே அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றை பற்றி மேலும் தெரிந்துகொள்ள மேலும் படியுங்கள். பிறப்பு: அக்டோபர் 15, 1931 மரணம்: ஜூலை 27, 2015 இடம்: இராமேஸ்வரம் (தமிழ் நாடு)   பிறப்பு: 1931 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 15 ஆம் நாள் ஜைனுலாப்தீனுக்கும், ஆஷியம்மாவுக்கும் மகனாக இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில், பாம்பன் தீவில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறிய நகராட்சியான இராமேஸ்வரத்தில் பிறந்தார். இவர் ஒரூ இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்தவர். இளமைப் பருவம்: அப்துல் கலாம், இராமேஸ்வரத்திலுள்ள தொடக்கப்பள்ளியில் தனது  பள்ளிப்படிப்பை தொடங்கினார். ஆனால் இவருடைய குடும்பம் ஏழ்மையில் இருந்ததால், இளம் வயதிலே இவர் தன்னுடைய குடும்பத்திற்காக வேலைக்...

உலக மரண தண்டனை எதிர்ப்பு தினம்

Image
  உலக மரண தண்டனை எதிர்ப்பு தினம் ஒரு சமூகத்தில், பெரும் மக்கள் கூட்டம் இருக்கும் இடத்தில் குற்றங்கள் நடப்பது தவிர்க்க இயலாது. ஓவ்வொரு நாட்டிலும் அதன் சட்டத்துக்கு ஏற்ப குற்றங்கள் வரையறுக்கப்படுகின்றன. சிலர் சட்டங்களுக்கு அப்பாற்பட்டு குற்ற செயலில் ஈடுபடுவதால் அதற்கான தண்டனையும் வழங்கப்படுகிறது. தண்டனைகளில் மிகவும் கொடூரமானது மரண தண்டனை. பெரும்பாலான நாடுகளில் தற்போது மரண தண்டனை வழங்கப்படுவதில்லை. இந்த தண்டனையை வழங்கிக் கொண்டிருக்கும் இன்னும் சில நாடுகளும் இதை தடை செய்ய வேண்டும். உலகம் முழுவதும் இதை பற்றிய விழிப்புணர்வு அளிக்கப்பட வேண்டும் எனும் நோக்கில் அக்டோபர் 10-ம் நாள் ‘உலக மரண தண்டனை எதிர்ப்பு தினம்’ கடைப்பிடிக்கப்படுகிறது.

வெள்ளையனே வெளியேறு இயக்கம்

Image
  வரலாற்றில் இன்று - வெள்ளையனே வெளியேறு இயக்கம் (Quit India Movement) 1942 இல் இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்ட ஒத்துழையாமை இயக்கம் ஆகும். இவ்வியக்கம் மகாத்மா காந்தியின் இந்திய விடுதலைக்கான அழைப்பினைத் தொடர்ந்து ஏற்படுத்தப்பட்டது. இது ஆகஸ்ட் புரட்சி என்றும் அழைக்கப்படுகிறது.பிரித்தானிய அரசை அடிபணிய வைத்து பேச்சுவார்த்தை மேசைக்கு அழைப்பதே இதன் முக்கிய நோக்காக இருந்தது. இந்திய தேசிய காங்கிரஸ் பம்பாயில் ஆகஸ்ட் 8, 1942இல் கூட்டிய மாநாட்டில் இந்த இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல தீர்மானம் நிறைவேற்றியது. மாநாட்டில் பேசிய மகாத்மா காந்தி, செய் அல்லது செத்து மடி என்ற கோஷத்தை வலியுறுத்தி வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார். இதனை ஒடுக்க நினைத்த பிரிட்டிஷ் படை, மறுநாள் பெரும்பாலான காங்கிரஸ் தலைவர்களை சிறைப்பிடித்தது. ஓராண்டுக்குள் இந்த இயக்கத்தையும் ஒடுக்கி விட்டது. ஆனால், இந்த இயக்கம் ஆரம்பித்த பிறகுதான், விடுதலைப் போராட்டம் வெகுஜனப் போராட்டமாக உருவெடுத்தது சுதந்திரத்திற்கு வித்திட்டது

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் பிறந்த நாள்

Image
  இன்று இந்தியாவில் பசுமைப் புரட்சியை ஏற்படுத்தி, உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற வைத்த பெருமைக்குரிய வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் பிறந்த நாள் (1925-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 ) கும்பகோணத்தில் பிறந்த இவர், நாட்டின் முதுகெலும்பாக உள்ள வேளாண் துறையில் அபரிமித வளர்ச்சி ஏற்படுத்தி, உலக அரங்கில் இந்தியாவை வியந்து பார்க்க வைத்தவர். இந்திய வேளாண் உற்பத்தி பொருள்கள் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் சூழ்நிலையை ஏற்படுத்தினார். இந்திய மண்ணில் விதைத்து, அறுவடை செய்து புரட்சிபுரிந்துவிட்டு நாடாளுமன்றத்திலும் முத்திரை பதித்த எம்.எஸ். சுவாமிநாதன் எந்த ஆடம்பரமும் இல்லாத எளிமையான மனிதர். பட்டினியில்லாத இந்தியாதான் என் கனவு என்கிறார் இந்த வேளாண் விஞ்ஞானி. இந்தியாவிலும் உலகின் பலவேறு நாடுகளிலும் உள்ள 38 பல்கலைக்கழகங்கள் இவருக்கு மதிப்புறு முனைவர் பட்டங்கள் வழங்கியுள்ளன • தேசிய, சர்வதேச அளவில் 41 விருதுகளை பெற்றவர். • பெருமைமிகு மகசேசே விருது • கிராமப்புற மக்களின் மேம்பாடு, வேளாண் ஆராய்ச்சிக்காக கொலம்பியா பல்கலைக்கழகத்தின் 'வால்வோ' விருது. மற்றும் பல !

உலக நண்பர்கள் நாள்

Image
  இன்று உலக நண்பர்கள் நாள் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் முதலாம் ஞாயிறு அன்று நண்பர்கள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது      உலகில் வாழும் ஒவ்வொரு மனிதருக்கும் நட்பு என்பது மிகவும், முக்கியமான ஒன்றாகும். நீ தேர்ந்தெடுக்கும் நட்போ உன்னையே காட்டும் என்பார்கள். ஆம், உன்னை யாரென்று தெரிந்து கொள்ள தேவைப்பட்டால், உன் நண்பனை அடையாளம் காட்டு என்பார்கள். அந்தளவு என்பது நட்பு என்பது புனிதமானது, வலிமையானது, ஆத்மார்த்தமானது. நம்முடைய பெற்றோருக்கு பின், உறவுகளுக்கு முன்பு நம்முடைய வாழ்க்கையில் முக்கியப் பங்கு வகிப்பது நண்பர்கள் மட்டும் தான். அத்தகைய புனிதமான நட்பிற்கு நட்புக்கு எல்லையே கிடையாது.       இன்றைய மாறி வரும் நவீன கால சூழலில், மன அழுத்தத்தைக் குறைக்க நம்முடைய வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு நோக்கி கடந்து செல்வதற்கு நட்பே உறுதுணையாக இருக்கிறது.. நம் அன்றாட வாழ்வை உற்சாகமானதாக வைத்து  கொள்ள நண்பர்கள் அவசியம். எனவே, நீங்கள் இந்த நாளில் பிரிந்து போன நண்பர்களை தேடி, நட்பு  கொள்ளுங்கள். புதிய நபர்களைச் சந்தித்து நல்லுறவை பேணுங்கள்.

ஆக்சிஜன் தனிமம், கண்டறியப்பட்ட நாள்

Image
  ஆக்சிஜன் தனிமம், கண்டறியப்பட்ட நாள் இன்று (1774). 1774 - பிரிட்டன் விஞ்ஞானி -அறிவுக்கடல் ஜோசஃப் பிரீஸ்ட்லி (Joseph Priestley) ஆக்சிஜன் வாயுவைக் கண்டுபிடித்தார். சுவீடனைச் சேர்ந்த கார்ல் வில்லெம் சீலெ (Carl Wilhelm Scheele) என்ற வேதியிலாளர் 1772லேயே ஆக்சிஜனை எரிவதற்கு உதவும் வாயு என்று கண்டுபிடித்தார். ஆனாலும் இதுதொடர்பாக இவர் எழுதிய "வாயுவும் தீயும் தொடர்பான நூல்" என்ற ஆய்வுக்கட்டுரை 1777ல்தான் வெளியானது. 1774லேயே ஜோசஃப் பிரீஸ்ட்லி கண்டுபிடிப்பை வெளியிட்டுவிட்டதால் ஆக்சிஜன் அவரது கண்டுபிடிப்பாகவே வரலாற்றில் பதிவாகியது

பால கங்காதர திலகர் நினைவு நாள்

Image
  " சுதந்திரம் எனது பிறப்புரிமை" என்று முழங்கிய பால கங்காதர திலகர் நினைவு நாள்  இன்று. இளங்கலைப் பட்டம் பெற்ற திலகர், அதன்பின் சட்டம் பயின்றார். தேச பக்தர்களுக்காக வாதாடி அவர்களை சிறையிலிருந்து மீட்டார். 1881 ஆம் ஆண்டு நண்பர்களுடன் சேர்ந்து கேசரி என்ற மராட்டிய மொழி மற்றும் மராட்டா என்னும் ஆங்கில மொழி பத்திரிகையையும் தொடங்கினார். ஆங்கில அடக்குமுறை மற்றும் சுரண்டல்களைப் பற்றி பத்திரிகையில் தொடர்ந்து எழுதினார். இதனால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பின் 1885ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். 1896ஆம் ஆண்டு பஞ்சாபில் மிகப்பெரிய பஞ்சம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அடுத்த ஆண்டே “பிளேக்” நோய் பரவியது. அதனை தடுப்பதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்த இரக்கமற்ற ஆங்கில அரசு, விக்டோரியா மகாராணியின் வைர விழா கொண்டாட்டத்தில் ஈடுபட்டு இருந்தது. இதனை திலகர் கண்டித்து பத்திரிகையில் எழுதினார். இதற்காக கைது செய்யப்பட்டார். விடுதலைக்குப் பின் மீண்டும் சுதந்திரப் போராட்டத்தில் தீவிரம் காட்டிய திலகர் அரசியலில் தீவிரமாக செயல்பட்டார். 1907ஆம் ஆண்டு நாக்பூரில் காங்கிரஸ் மா...

மங்கள் பாண்டே.

Image
  இந்தியாவின் முதல் சுதந்திரப்போர் என வர்ணிக்கப்படும் சிப்பாய்க் கலகம் உருவாக காரணமானவர் மங்கள் பாண்டே. 1827-ம் ஆண்டு, இதே நாளில்தான் உத்தரபிரதேசத்தில் உள்ள நாக்வா என்ற ஊரில் பிறந்தார் மங்கள் பாண்டே. பாரக்பூரில் கிழக்கிந்தியக் கம்பெனியின் 34-வது ரெஜிமென்டில் படை வீரராக பணிபுரிந்தார். மங்கல் பாண்டே 1857-ம் ஆண்டு மார்ச் 29-ம் நாள் ராணுவ உயர் அதிகாரியைத் தாக்கி, சிப்பாய் கலகத்தைத் தொடக்கி வைத்தார். சிப்பாய் கலகத்தை கட்டுப்படுத்திய கிழக்கிந்தியக் கம்பெனி, கிளர்ச்சியில் ஈடுபட்ட மங்கல் பாண்டே மீது தேசதுரோக குற்றம் சாட்டி மரணதண்டனை விதித்தது. அந்த மங்கள் பாண்டே பிறந்த நாள் இன்று (ஜூலை 19, 1827 )

இரு நகரங்களின் கதை"

Image
  ஜூலை 11, 1859 "இரு நகரங்களின் கதை" என்ற புகழ்பெற்ற ஆங்கில நாவலை  சார்லஸ் டிக்கன்ஸ் எழுதி வெளியிட்ட  நாள்  இன்று. ஆங்கில எழுத்தாளர்களில் மிக முக்கியமானவர் சார்லஸ் டிக்கன்ஸ். A Tale of Two Cities என்ற இவரது ஆங்கில நாவல் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு   எழுதப்பட்டாலும், இன்று வரை பரபரப்பாக விற்பனையாகிக் கொண்டுள்ளது இந்தியா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளில் ஆங்கில மொழி பயில்வோருக்கு இது பாடப் புத்தகமாக உள்ளது பாரீஸ், லண்டன் என்ற இரு நகரங்களுக்கு இடையே கதை பயணிக்கிறது. பிரெஞ்சுப் புரட்சி நடைபெற்ற காலகட்டம். முன்னோர்கள் செய்த தவறுகளுக்கு கதாநாயகனைப் பிடித்து, தண்டனை அளிக்கிறது புரட்சிப்படை. தண்டனையில் இருந்து தப்பினாரா, இல்லையா என்பதை சுவாரசியமாகச் சொல்கிறது இந்த நாவல்.

மனதில் ஒரு பெரும் வலி

Image
  "என் மனைவிக்கு உடல் சொகமில்லாம போச்சு. ஆஸ்பத்திரியில வெச்சி மருத்துவம் பாத்தோம். ஆனாலும் காப்பாத்த முடியல. மாசங்கள் உருண்டோடுனாலும் அவளோட இழப்பை என்னால ஜீரணிக்க முடியல. போராட்டம், பொதுக்கூட்டம்னு என் உடல் எங்கெங்கயோ அலஞ்சுட்டு இருந்தாலும், மனசு அவளை நினைச்சுட்டேதான் இருக்கு. அந்த வேதனையைச் சுமந்துட்டேதான் திரியுறேன். என்னை, என்னைவிட முழுசா புரிஞ்சிகிட்டவ என் மனைவி. என் வாழ்க்கையில எல்லா வகையிலும் அவளோட பங்களிப்பு இருந்துச்சு. அவ அப்பாவும் கம்யூனிஸ்ட் கட்சிகாரர்தான். அதனால என்னை ஏத்துக்கிறது அவளுக்கு சுலபமா இருந்திச்சி. டீச்சரா வேலை பாத்தா. காசி பாரதி, ஆண்டாள்னு எங்களோட ரெண்டு பொம்பளப் புள்ளைகள வளர்த்து படிக்க வெச்சது, ஆளாக்குனது அவங்களோட எல்லா தேவைகளையும் என்னை எதிர்பார்க்காம அவளே செஞ்சிருவா. அரசியல் வாழ்க்கை, போராட்டம், காசு பணம் சேர்க்கத் துடிக்காத மனசுனு என் போக்குக்கு என்னை விட்டவ என் மனைவி. கட்சி வேலைகள்ல திரிஞ்சிட்டு வீட்டுக்குப் போகும்போது, கூடடைஞ்ச திருப்தி கிடைக்குற விதமா அந்த வீட்டை எனக்கானதா வெச்சிருப்பா. இப்போ வீட்டுக்குப் போனா, அவ இல்லாத அந்த வெறுமையும் தனிமையும் ரொ...

கடமை கண்ணியம் கட்டுப்பாடு

Image
 கடமை கண்ணியம் கட்டுப்பாடு * எதையும் தாங்கும் இதயம் வேண்டும். * மறப்போம்; மன்னிப்போம். * கத்தியை தீட்டாதே;  புத்தியைத் தீட்டு. * எங்கிருந்தாலும் வாழ்க. * ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம். * மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு. * மாநிலத்தில் சுயாட்சி மத்தியிலே கூட்டாட்சி * மக்கள் தொண்டே மகேசன் தொண்டு . * நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்; இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும். * அன்றாடம் அரசியல் மேடைகளில் புழக்கத்தில் இருக்கும் இவை போன்ற எண்ணற்ற பிரபலமான வரிகள் அறிஞர் அண்ணாவினுடையதே.. ஜனநாயகத்தின் உயர்ந்த லட்சியங்களை பாமரர்களிடமும் கொண்டு சேர்த்து வளர்த்த பேறிஞர் அண்ணா என்றும் மறையாத சூரியன்.  அவருடைய நினைவு நாளில் அழியாத  அவரது  நினைவைப் போற்றுகிறேன்.  - பிருந்தா சாரதி * #Anna #CNAnnadurai #arignaranna *

’world-wide-web’ இதே நாளில்தான் உதயம்

Image
1991-ம் ஆண்டு பிரிட்டன் நாட்டு கம்ப்யூட்டர் விஞ்ஞானியான டிம் பெர்னெர்ஸ் லீ என்பவர் உலக மக்கள் அனைவருக்கும் பயன்தரும் வகையில் இணையதளம் என்ற ஓர் கம்ப்யூட்டர்களுக்கு இடையிலான வெளிப்படையான ஓர் இணைப்பை அறிமுகப்படுத்தினார். இந்த www இணைப்பின்மூலம் ஆராய்ச்சியாளர்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்விக்கூடங்களுக்கு இடையிலான தகவல் பரிமாற்றம் மிக எளிதாக நடந்து வந்தது. அதற்கும் முன்னதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்ட்டகானில் சில தகவல்களை ரகசியமாக பரிமாறிக் கொள்ள இணையம் பயன்பட்டது. எனினும், இந்த கம்ப்யூட்டர்களில் உள்ள தகவல்களை வெளிநபர்கள் பார்க்க அனுமதி இல்லை. ஆனால், டிம் பெர்னெர்ஸ் லீ கண்டுபிடித்த WWW என்ற அடைமொழியுடன் கூடிய இந்த இணைய இணைப்பு அனைத்து தரப்பினரும் பயன்படுத்தும் வகையில் அமைந்திருந்ததால் நல்ல வரவேற்பை பெற்றது. இதன் விளைவாக 1993-ம் ஆண்டுவாக்கில் சுமார் 500 இணையதள சர்வர்கள் உலகம் முழுவதும் ஏற்படுத்தப்பட்டன. ஆனால், இணையங்களை பயன்படுத்தியவர்கள் எண்ணிக்கை வெறும் ஒரு சதவீதமாக மட்டுமே இருந்தது. ஆனால், இன்றைய நிலவரப்படி ஆறரை கோடி இணையதளங்கள் இயங்கிவரும் நிலையில் கடந்த 6-8-1991 அன்று டிம் பெர்ன...

20 லட்சம் இந்தியர்களின் கணக்குகள் முடக்கம்.

Image
 ஒரே மாதத்தில் திடீரென இப்படியா?... 20 லட்சம் இந்தியர்களின் கணக்குகள் முடக்கம்... வெளியானது பகீர் விளக்கம்! இந்தியாவில் சில மாதங்களுக்கு முன்பு புதிய தொழில்நுட்ப விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளது. சமூக வலைத்தளங்கள் இந்த புதிய வழிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டுமென மத்திய அரசு வலியுறுத்தி இருந்தது. முதலில் இதற்கு ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சோசியல் மீடியா நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்த போதும், பின்னர் மத்திய அரசின் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு அளிப்பதாக ஏற்றுக்கொண்டன.  இந்நிலையில் புதிய விதிகளுக்குட்பட்டு மே மாதம் 15ம் தேதி முதல் ஜூன் மாதம் 15ம் தேதி வரை 345 புகார்கள் பெறப்பட்டதாகவும், அதனடிப்படையில் 20 லட்சம் இந்திய வாட்ஸ் அப் பயனாளர்களின் கணக்குகளை முடக்கியுள்ளதாகவும் வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. தவறுகள் நடக்கும் முன்பே அதை தடுப்பதில் கவனம் செலுத்துவதாகவும், ஒருவரின் கணக்கை மூன்று கட்டங்களாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் வாட்ஸ் அப் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. அதாவது பதிவு செய்தல், தகவல்களை  அனுப்புதல்,  அதற்கான எதிர்மறையான பதிவுகளை பெறும்போது கண...

ஆட்டிசம் அறிந்து கொள்ள வேண்டிய கோளாறு

Image
  ஆட்டிசம் அறிந்து கொள்ள வேண்டியது ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதத்தை ஆட்டிசத்தின் மாதமாகக் கொண்டாடுகிறார்கள். ஏப்ரல் இரண்டாம் தேதியை உலக ஆட்டிச விழிப்புணர்வு தினமாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. ஆட்டிசக் குறைபாடு உள்ள குழந்தைகளும் அதன் பெற்றோர்களும் சந்தித்து உரையாடுவதும்,அக்குழந்தைகளுக்கான சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்துவதுமென .. மேலை நாடுகளிலும், வட இந்தியாவிலும் இந்த நாள் சிறப்புக் கவனத்தைப் பெறுகிறது. ஆனால் நம் ஊரில் இன்னும் இது போன்ற நிகழ்வுகள் இல்லை என்பதும் பெரும் குறையாகவே உள்ளது. அதிலும் நம் அரசு கூட ஆட்டிசம் என்பதைத் தனித்துறையாகக் கொள்ளாமல், மூளை வளர்ச்சிக் குறைபாடு உடையவர்களோடு தான் இவர்களை இணைக்கிறது. ஆட்டிசம் என்பது இப்படித்தான் இருக்கும் என்பதை வரையறுக்க முடியாது. இதன் அறிகுறிகளின் தீவிரம் பல்வேறுபட்ட அளவுகளில் இருக்கும். மிக்க மெலிதான கற்கும் திறன் குறைபாட்டில் தொடங்கி, மிகத் தீவிரமான பாதிப்பு வரை அதன் அளவு பரந்துபட்டது. ஆட்டிசம் என்ற சொல்லுக்கு தமிழில் “தன் முனைப்புக் குறைபாடு” என்று கூறலாம்.இது ஒரு நோய் அல்ல. இது மன வளர்ச்சி சம்பந்தப்பட்ட ஒரு கோளாறு. நமது மூளையின் இயல்...

அறிஞர் அண்ணாவின் ஆங்கிலப் புலமை

Image
 அறிஞர் அண்ணாவின் 52 ஆவது நினைவு தினம் இன்று (03.02.1969)        அறிஞர் அண்ணாவின் ஆங்கிலப் புலமை       முதன்முதலாக நாடாளுமன்ற மேலவையில் பேசிய கன்னிப்பேச்சு.       " I am the Representative of the man in the street ". " தெருவோரத்தில் தேம்பி அழுகிறானே ஏழை மகன், அவன் பிரதிநிதியாகத்தான் நான் இங்கே வந்திருக்கிறேன் " என்று தன்னை வித்தியாசமாக அறிமுகப்படுத்தி கொண்ட போது , நேருவின் விழிகள் வியப்புடன் விரிந்தன.      தமிழ் மொழிக்காக வாதாடும் போது ,       " If Hindi is imposed on us, we will be definitely become the second rate citizens in the country "  என்று ஆங்கிலத்தில் பேச",         " Mr. Annadurai, bear it in mind ;  Hindi is being spoken by the largest majority of the people of this country ;  Hence it will be the official Language of this nation "  என்று ஆளுங்கட்சியினர் எதிர்த்தனர்.        அதற்கு அறிஞர் அண்ணா அற்புதமான ஆங்கிலத்தில் சூ...