*பன்முக திறமையால் கவனம் ஈர்க்கும் மாணவி..!*
*பன்முக திறமையால் கவனம் ஈர்க்கும் மாணவி..!* *பிளஸ்-2 மாணவியான சக்தி பூரணி, பல கலைகளைக் கற்று, அசத்தி வருகிறார். அதில் சிலவற்றில் கின்னஸ் சாதனைகளையும் படைத்திருக்கிறார். அவருடன் சிறுநேர்காணல். * உங்களைப் பற்றி சிறு அறிமுகம்? திருவாரூர் எங்களுடைய பூர்வீகம். இப்போது சென்னைக்கு அருகே இருக்கும் பாடியநல்லூரில், பெற்றோருடன் வசித்து வருகிறேன். அம்மா-அப்பா இருவருமே அரசுப்பள்ளி ஆசிரியர்கள். நானும் செங்குன்றம் பகுதியில் இருக்கும் புனித மேரி மேல்நிலைப்பள்ளியில், பிளஸ்-2 படிக்கிறேன். * நிறைய கலைகளை கற்றுக்கொள்ளும் ஆர்வம் பிறந்தது எப்படி? வழக்கமான குழந்தை களைவிட, சிறுவயதில் எனக்கு கூடுதலான மூச்சுப்பயிற்சி தேவைப்பட்டிருக்கிறது. அதற்காக மருத்துவர்கள், வாய்ப்பாட்டு சம்பந்தமான பயிற்சி வகுப்புகளை பரிந்துரைத்துள்ளனர். அப்படிதான், கலைகள் என் வாழ்க்கைக்குள் அறிமுகமாகின. நான் வாய்ப்பாட்டு வகுப்பிற்கு சென்றாலும், அங்கு அரங்கேறும் நடனம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் ஆர்வமாக இருந்தேன். அதன் காரணமாய், வெகுவிரைவிலேயே நடன வகுப்பிலும் கலந்துகொண்டு நடனம் பயின்றேன். * பல கலைகளை கற்றுக்கொள்ள தொடங்கியது எப்போது? 6-...