இன்றைய நயினாரின் உணர்வுகள்
புத்தாண்டு வாழ்த்துக்கள் கவிதை|2022|new year wishes in tamil|Nynarin Unarvugal
இன்றைய நயினாரின் உணர்வுகள்
புத்தாண்டு வாழ்த்துக்கள் கவிதை|2022|new year wishes in tamil|Nynarin Unarvugal
*முளைத்த தானியங்களின் பலன்கள்.*
முளைத்த தானியங்கள், சில சமயங்களில் உங்கள் வழக்கமான சமைத்த பருப்பு வகைகளை விட சரியான ஊட்டச்சத்தை கொடுக்க முடியும்.
ஏனெனில் முளைக்கும் செயல்முறை கார்போஹைட்ரேட்டுகளை குறைக்கிறது மற்றும் புரதம் மற்றும் நார்ச்சத்தின் அளவை 10-20 சதவீதம் அதிகரிக்கிறது.
72 மணி நேரம் ஊறவைத்த பருப்பு வகைகளை சாப்பிடுவதன் மூலம் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை பெறலாம். ஏனெனில் அவற்றில் உள்ள ஆக்ஸிஜனேற்ற அளவு 50 சதவீதம் அதிகரிக்கும்.
ஊறவைத்த தானியங்களை உட்கொள்வது உங்கள் இருதய ஆரோக்கியத்திற்கு எவ்வாறு சிறந்தது என்பதை ஆய்வுகள் காட்டுகின்றன. ஏனெனில் அவற்றை சாப்பிடுவது நீரிழிவு அல்லது உடல் பருமன் உள்ளவர்களுக்கு கொழுப்பின் அளவைக் குறைக்கும். முளைகளை சாப்பிடுவது உடலில் நல்ல கொழுப்பை அதிகரிக்கச் செய்வதோடு ட்ரைகிளிசரைடுகள் மற்றும் எல்டிஎல் கொழுப்பைக் குறைக்க உதவும் என்று ஒரு ஆய்வு காட்டுகிறது.
முளைக்கும் செயல்முறை கார்போஹைட்ரேட்டுகளைப் பயன்படுத்துகிறது. கார்போஹைட்ரேட்டுகள் பயன்படுத்தப்படுவதால், மற்ற எல்லாவற்றின் அடர்த்தியும் அதிகரிக்கிறது. புரோட்டீன் மற்றும் நார்ச்சத்து இரண்டும் 10 முதல் 20% வரை உயர்கிறது என்று சமீபத்திய ஆராய்ச்சி காட்டுகிறது.
தானியங்கள் மற்றும் கொட்டைகளை ஊறவைக்கும் செயல்முறையானது டானின் மற்றும் பைடிக் அமிலத்தை குறைக்கிறது. இதன் விளைவாக ஊட்டச்சத்துக்கள் சிறப்பாக கிடைக்கும்.
பருப்புப் பழங்களில் டானின்கள் மற்றும் பைடிக் அமிலம் போன்ற ஊட்டச்சத்து எதிர்ப்புச் சத்துக்கள் உள்ளன. இவை உணவில் இருந்து நுண்ணூட்டச் சத்துக்களை உறிஞ்சுவதைத் தடுக்கின்றன. முளைப்பது இதை 90% வரை குறைக்கிறது.
ஆக்ஸிஜனேற்ற அளவு அதிகரிப்பு:
உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், பல நோய்களைத் தடுக்கவும் நீங்கள் விரும்பினால், உங்கள் பருப்பு வகைகளை ஊறவைத்து, முளைகளின் சூப்பர்-ஆரோக்கியமான காலை உணவை உண்ணுங்கள். ஊறவைக்கும் செயல்முறை ஆன்டிஆக்ஸிடன்ட்களின் அளவை அதிகரிக்கிறது மற்றும் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். முளைத்த 24 மணி நேரத்திற்குப் பிறகு, ஆக்ஸிஜனேற்ற செயல்பாட்டின் அதிகரிப்பு சுமார் 50% ஆகும். 72 மணி நேரத்திற்குப் பிறகு அதிகபட்சம் 80% ஆகும்.
நீங்கள் பருப்பு வகைகளை ஊறவைக்கும் போது, அவற்றில் உள்ள நீரின் அளவு அதிகரிக்கும் போது அதன் அளவு 50% அல்லது அதற்கு மேல் அதிகரிக்கும். இது அவற்றின் ஊட்டச்சத்து அடர்த்தியைக் குறைக்கும் அதே வேளையில், பருப்பை விட அதிக அளவில் முளைகளை வைத்திருப்பது போதுமான புரதம் மற்றும் நார்ச்சத்தை உறுதி செய்யும். முளைகளில் எந்த கொழுப்பும் இல்லை.
*பகிர்வு*
*அல்சருக்கு தீர்வு தரும் பழங்கள்.*
தொண்டையில் தொடங்கி இரைப்பை வரை உணவு செல்ல உதவும் உணவுக்குழாய், இரைப்பை, முன்சிறுகுடல் ஆகியவற்றில் ஏற்படும் புண்களைப் பொதுவாக 'பெப்டிக் அல்சர்' (Peptic ulcer) என்கிறோம்.
இரைப்பையில் புண் ஏற்பட்டால் 'கேஸ்ட்ரிக் அல்சர்' (Gastric ulcer) என்றும், முன்சிறுகுடலில் புண் ஏற்பட்டால் 'டியோடினல் அல்சர்' (Duodenal ulcer) என்றும் அழைக்கிறோம்.
இரைப்பையில் உணவு செரிப்பதற்காகச் சுரக்கப்படுகின்ற ஹைட்ரோகுளோரிக் அமிலமும் பெப்சின் எனும் என்சைமும் சில காரணங்களால் அளவுக்கு அதிகமாகச் சுரக்கும்போது, இரைப்பை, முன்சிறுகுடலின் சுவற்றில் உள்ள மியூகஸ் படலம் அழற்சியுற்று வீங்கிச் சிதைவடையும். இதை 'இரைப்பை அழற்சி' (Gastritis) என்கிறோம். இதைக் காலத்தோடு கவனிக்கத் தவறினால், நாளடைவில் இது இரைப்பைப் புண்ணாக மாறிவிடும்.
நமது உடலில் செரிமானம் என்பது இறைவனால் கொடுக்கப்பட்ட ஒரு அற்புதமான வரப்பிரசாதம். நமது இரைப்பையில் சுரக்கும் அமிலங்கள்தான் நாம் உண்ணும் உணவிலுள்ள சத்துக்களை பிரித்தெடுத்து நமது செரிமானத்துக்கு உதவுகிறது.
நமது இரைப்பை மற்றும் சிறுகுடலின் உட்பகுதியை மூடி உள்ள சளிச்சவ்வுகள் இந்த அமிலங்களின் இருந்து வரும் தாக்குதலை காப்பாற்றி இரைப்பை மற்றும் சிறுகுடலைப் பாதுகாக்கின்றன
இந்த சளிச்சவ்வுகள் சரிவர செயல்படாத போதுதான் நமக்கு அல்சர் புண் (ulcer) ஏற்படுகிறது. அத்தகைய புண்ணானது மிகவும் தீவிரமடையும்போது அது இரைப்பை மற்றும் சிறுகுடலில் துளையை ஏற்படுத்தி ரத்தக் கசிவையும் ஏற்படுத்தும் பொழுது நமக்கு தீராத வயிற்று வலியும், நெஞ்சு எரிச்சலும் ஏற்பட அதிக வாய்ப்புகள் அதிகம்
அல்சர் வர காரணங்கள்:
உணவகங்களில் மசாலா, காரம் நிறைந்த உணவை சாப்பிடும் பொழுதும், மதுபானம் அருந்துதல், புகையிலைப் பழக்கம், மற்றும் புகை பிடித்தல், போன்ற காரணத்தினாலும் கணையத்தில் ஏற்படும் கட்டினாலும் இந்த அல்சர் ஆனது உருவாகக்கூடும்.
அறிகுறிகள்:
வயிற்றின் மேல் பகுதியில் வலி, உணவு சாப்பிட்ட ஓரிரு மணி துளிகளில் பசி ஏற்படுவது, நோய் தீவிரமடையும்போது ரத்தம் கலந்த அல்லது கறுப்பு நிறத்தில் மலம் வருவது, நெஞ்சு வலி, ரத்த வாந்தி, உடல் பருமன், சோர்வு, போன்றவையும் அறிகுறிகளாகும்
ஸ்ட்ராபெர்ரியில் அதிகளவிலான ஆன்டி-ஆக்ஸிடன்ட், உடலை அல்சரில் இருந்து பாதுகாக்கிறது. இது தவிர, இது வயிற்றுச் சுவர்களை வலுப்படுத்த உதவுகிறது. எனவே அல்சர் குணமாக தினமும் ஒரு கப் ஸ்ட்ராபெர்ரியை மதிய வேளையில் சாப்பிடுங்கள்.
ஆப்பிள் சாப்பிட்டால் அல்சர் வருவதற்கான வாய்ப்புகள் குறையும். மேலும் ஆப்பிளில் ஆப்பிளில் எச்.பைலோரியின் வளர்ச்சியைத் தடுக்கும் ஃபிளாவோனாய்டுகள் உள்ளன. ஆகவே அல்சர் இருக்கும் போது ஆப்பிள் சாப்பிட்டால், விரைவில் அல்சர் குணமாகும்.
ப்ளூபெர்ரியை காலையில் எழுந்ததும் சாப்பிடுவது வயிற்றுப் புண்ணைக் கட்டுப்படுத்த உதவும். இவற்றை உண்ணும் போது நோயெதிர்ப்பு மண்டலம் வலுவாகும் மற்றும் அல்சரில் இருந்து விரைவில் குணமாக உதவும்.
மாதுளை ஜூஸை குடிப்பது வயிற்றுப் புண்கள் மற்றும் குடல் எரிச்சலைக் குணப்படுத்தும். அதுவும் ஒவ்வொரு வேளை உணவு உண்ட ஒரு மணிநேரம் கழித்து சிறிது மாதுளையை அதன் மஞ்சள் தோலுடன் சாப்பிட்டால், வயிற்றுப் புண்கள் விரைவில் குணமாகுமாம்.
முலாம் பழத்தில் உள்ள நீர்ச்சத்து மற்றும் குளிர்விக்கும் தன்மை குடல் பிரச்சனைகளை சரிசெய்வதுடன், அல்சரையும் குணப்படுத்த உதவுகிறது.
பலாப்பழத்தில் அல்சரேட்டிவ் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் உள்ளன. இவை அல்சரைக் குணப்படுத்தவும், வயிறு தொடர்பான பிரச்சனைகள சரிசெய்யவும் உதவுகின்றது.
சீத்தாப்பழத்தில் உள்ள வைட்டமின் ஏ, புண்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கக்கூடியவை. எனவே அல்சர் உள்ளவர்கள் சீத்தாப்பழத்தை தினமும் ஒன்று சாப்பிட்டால், விரைவில் வயிற்றுப் புண்களில் இருந்து விடுபடலாம்.
*பகிர்வு*
*
*உடலுக்கு பல நன்மைகளை அள்ளித்தரும் சிவப்பு அவல்.*
சிவப்பு அவலில் நார்ச்சத்து, வைட்டமின் பி, கால்சியம், ஜிங்க், இரும்புச்சத்து, மாங்கனீஸ், மக்னீசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.
இது பட்டை தீட்டப்படாத சிவப்பு அரிசியில் இருந்து தயாரிக்கப்படுவதால் மிகவும் சத்து நிறைந்ததாக உள்ளது.
அவல் சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன. அவல் உடல் சூட்டை தணித்து நல்ல புத்துணர்ச்சியை தருகிறது. காலையில் அவல் உணவுகளை சாப்பிடுவதன் மூலம் அந்த நாள் முழுமையும் சுறுசுறுப்புடன் இருக்க செய்யும்.
குழந்தைகளின் வளர்ச்சிக்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் உதவும் அவலை அப்படியே வேக வைக்காமல் வெல்லம் கலந்து சாப்பிட தரலாம். நீரிழிவு நோயாளிகள் அவ்வப்போது பசிக்கும்போது கொஞ்சம் அவலை வாயில் போட்டு மென்று சாப்பிடலாம். தனித்து உண்ணும் போதே நல்ல ருசியாக இருக்கும் அவலை விதவிதமான உணவு வகைகளாக சமைத்து உண்ணலாம்.
சத்துக்கள் நிறைந்த சிகப்பு அரிசியில் தயார் செய்யப்படுவது சிகப்பு அவல். உடலுக்கு உறுதியும், நோய் எதிர்ப்பு சக்தியும் தரும் சிகப்பு அவல் கொண்டு ஏராளமான உணவு வகைகள் செய்யப்படுகின்றன. சிகப்பு அவல் இனிப்பு மிக பிரபலமானது. அதுபோல் சிகப்பு அவல் கொண்டு கஞ்சி, பாயாசம், புட்டு போன்றவை செய்து உண்ணப் படுகிறது.
*பகிர்வு*
*சர்க்கரை வள்ளிக் கிழங்கை தொடர்ந்து சாப்பிடுவதால் என்ன நன்மைகள்.*
சர்க்கரை வள்ளிக் கிழங்கில் கொழுப்பு என்பது அறவே இல்லை. எனவே கொலஸ்ட்ரால் பிரச்சனை ஏற்படாமல் தடுக்க நினைப்பவர்கள் சர்க்கரை வள்ளிக்கிழங்கை தாராளமாக சாப்பிடலாம்.
அன்றாடம் காலை உணவை தவிர்ப்பவர்களுக்கும், அதிகமான கார வகை உணவுகளை சாப்பிடுபவர்களுக்கும் வயிறு மற்றும் குடல் போன்றவற்றில் அல்சர் உருவாகிறது. சக்கரை வள்ளி கிழங்கை அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு வயிற்றில் ஏற்படும் இத்தகைய அல்சர் விரைவில் குணமாகிறது.
சர்க்கரைவள்ளி கிழங்குகளில் அதிகம் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. சர்க்கரைவள்ளிக் கிழங்கை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்கள் உடலில் ஏற்படும் ப்ரீ ராடிக்கல்கள் செல்களின் அழிவினை தடுத்து, உங்கள் உடலுக்கு புத்துணர்ச்சி தந்து எப்போதும் இளமை தோற்றத்தை இருக்குமாறு செய்கிறது.
சர்க்கரைவள்ளிக் கிழங்கில் பீட்டா கரோட்டின், வைட்டமின் பி, சி, இரும்புச்சத்து போன்றவை உள்ளன. இக்கிழங்கை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு உடலில் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவடையும். நோய் தொற்று ஏற்படுவதை தடுக்கும்.
சர்க்கரைவள்ளிக் கிழங்கில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது உங்களின் வயிறு மற்றும் குடல்களில் இருக்கும் புண்கள், நச்சுக்களை போக்கி, உங்களுக்கு மலச்சிக்கல், மூலம் போன்ற நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது.
*பகிர்வு*
நாட்காட்டியின் இறுதி பக்கத்தினை கிழிப்பது என்பது எப்போதும் ஒரு கண நேரத்து செயலாய் இருப்பதேயில்லை. கிழிப்பதென்ற எண்ணம் மனதில் எழும் போதே வருடத்தின் ஒட்டுமொத்த நிகழ்வுகளும் சிந்தனையில் தோன்றி மறைகின்றன.
2019 என்பது ரொம்பவே சந்தோசமாக இருந்த வருடம். பாரீஸ் தலைநகரில் அட்டகாசமாச வானவேடிக்கையை கண்டுகளித்தவாறே 2020 புத்தாண்டை வரவேற்றது அவ்வளவு ஆனந்தமாக இருந்தது. இந்த வருடத்தினை நாங்கள் ரொம்பவே ஆனந்தமாக தான் ஆரம்பித்தோம். போன வருடம்என் வாழ்க்கையை என் கையில மீட்டுத் தந்திருக்கின்றது. தூரப் பயணங்கள், அவை தந்த அனுபவங்கள், வாழ்க்கையில் மறக்க முடியாத சந்திப்புக்கள், அந்த சந்தோசங்களை சுமந்த எழுத்துகள், நம்பிக்கை தந்து வாழ்வை மீட்டுத் தந்த வார்த்தைகள், எங்குமே வெளிப்படுத்தத் தோன்றாத பொக்கிஷமான புகைப்படங்கள என இந்த ஆண்டின் நினைவுகள் எல்லாம் எண்ணிலடங்காதவை. எனக்கு எழுத்தாளர்,கவிஞர் என பெருமையை தேடித்தந்த *பீப்பிள் டுடே * உமாகாந்தன் அவர்களும் என்னை கவிஞர் என அடையாளம் படுத்தி பெருமை தந்த நிலாமுற்றம் மாறன் ஐயா மற்றும் குழுவினர்கள் உலகமெங்கும் எனக்கு பெருமையைத்தேடி தந்த * ராணி வார இதழ் * ஆசிரியர் சகோதரி அவர்களும் அனைவரும் எனக்கு கிடைத்த பொக்கிஷம். இந்த ஆண்டின் சகல சந்தோசங்களிலும் துன்பங்களிலும், மன உளைச்சல் ஏற்படும் போதும் ஆறுதல் பேச்சால் நம்பிக்கை ஏற்படுத்தும் என் உறவுகள்பலம் தருவதும் ஓர் பெரும் வரம். அதுவும் ஒவ்வொரு நாளையும் ஓர் புதிய விஷயங்களைக் கற்றுக் கொடுத்து என்னை சுவாரசியமாய் கடத்தவும்,எதைப்பற்றியும் பேசி ஊக்கமளிக்கும் கணவரும் பிள்ளையும் என் நல்வினை. ஆனால் நடுவில் பல போராட்டங்கள் எனினும் அவற்றை எதிர்கொள்ள வைத்த எங்கள் இறைவன் சிவபெருமான் துணையுடன் ரொம்ப அழகாக சந்தோசத்தோடு முடித்து புது வருட தொடத்தை வரவேற்க தயாராகின்றோம். என் வாழ்நாளில் நான் அதிகமாய் வாசித்தது இந்த வருடத்தில்தான். நிறைய படிப்பினைகள் வேதனைகள் உறவுகளை காண முடியாத தவிப்புகள் அவர்களை ப்பற்றிய அக்கறை கலந்த பயங்கள் என நமது பாதுகாப்பு சிக்கனம் குடும்பத்தினருடன் ஒன்றுமை அனைவருக்காகவும் ஆண்டவரிடத்தில் பிரார்த்தனை செய்வது என நம்மை சீராக்கியது என்றே சொல்வேன் . வாழ்நாளில் நாங்கள் அதிகமாய் நல்லநல்ல திரைப்படங்களைத்தேடி தேடி பார்த்ததும் இவ்வருடத்தில்தான். 2021 ஆம் வருடம் ஆரம்பித்த பொழுது மனம் இறுக்கமாக இருந்தது. உறவுகளை காண முடியாமல் தவித்து உள்ளுக்குள் ஏக்கத்துடன் கடவுளிடம் மிகுந்த நம்பிக்கை வைத்து பிராத்தனைகளுடன் ஆரம்பித்தது. ஒருவாறாக எல்லாம் சீராக செல்கையில் சொந்த மண்ணில் கால்பதித்து உறவுகளை கண்டு கல்யாண நிகழ்ச்சியில் கலந்து கொண்டது கடவுளின் ஆசி என்றே சொல்லுவேன் இவையெல்லாம் எத்துன்பம் வந்தாலும் துவண்டிடாதவாறும், எவ்வின்பம் வந்தாலும் ஆர்ப்பரித்திடாதவாறும் மனதினை பதப்படுத்தி தந்திருக்கின்றன. இந்த வருடமும் நான் யாருடைய தனிப்பட்ட சுதந்திரத்திலும் தலையிடவில்லை, எவர் தவறினை பற்றியும் விமர்சிக்கவில்லை. யாரையும் உற்றுப் பார்த்துக் கொண்டு திரியவுமில்லை. மனிதர்களை அவர்களாகவே ஏற்றுக் கொண்டேன். இயலுமான வரை அவர்களை புரிந்து கொண்டேன். பல மதங்களில், பல மொழிகளில், பல நாடுகளில் எனக்கு பல நண்பர்கள் கிடைத்திருக்கின்றார்கள். இயன்றவரை என்னை சுற்றியிருந்த Negative Vibs கொண்ட பலரை விட்டும் நான் என்னை தூரமாக்கி வைத்திருந்தேன். வஞ்சிக்க மட்டும் வருகின்றவர்களை விட்டும் நகர்ந்து போனேன். இந்த வாழ்க்கை சந்தோசமாய் இருக்கிறது. நாளை இவ்வருடம் என்பது கடந்த வருடமாய் காலாவதியாய் போய்விட்டிருக்கும். வாழ்வு மீட்டப்படும் போதெல்லாம் இவ்வாண்டு மீட்டப்பட்டுக் கொண்டே இருக்கும். இவ்வாண்டு முழுவதுமாய் வாழ வைத்த இறைவனுக்கு நன்றிகள்...ராதா கிருஷ்ணாகுமார் இயக்கத்தில் பாகுபலி நடிகர் பிரபாஸ், பீஸ்ட் படத்தின் கதாநாயகி பூஜா ஹெக்டே இணைந்து நடித்தவரும் ராதே ஷ்யாம் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடித்துள்ளார். இப்படம் முழுக்க முழுக்க காதல் படமாக எடுக்கப்பட்டுள்ளது.டிரைலர் வெளியான 24 மணி நேரத்தில் அனைத்து மொழிகளிலும் 64 மில்லியன் பார்வைகளைப் பெற்று புதிய சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் பாகுபலி 2 டிரைலர் 24 மணி நேரத்தில் படைராதே ஷ்யாம் படத்தில் சாமியாராக நடித்துள்ள சத்யராஜ் கதாபாத்திரமும் பாகுபலி கட்டப்பா அளவுக்கு பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ராதே ஷியாம் திரைப்படம் அடுத்தாண்டு ஜனவரி 14 ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலக முழுவதும் திரையரங்கில் வெளியாகும் என் படக்குழு அறிவித்துள்ளது.த்த சாதனையை ராதே ஷ்யாம் படம் முறியடித்தது.
பாகுபலி படத்தில் கட்டப்பாவாக கலக்கிய சத்யராஜ் ராதே ஷ்யாம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சாமியார் வேடத்தில் நடித்துள்ளார். பாகுபலியை போலவே இப்படத்திலும் சத்யராஜுக்கு வலிமையான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கும் என பேசப்படுகிறது. சத்யராஜ் ஒரு சிறு கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் கனகச்சிதமாக நடிப்பா
இப்படத்தில் யுவி கிரியேஷன்ஸ் மற்றும் கோபி கிருஷ்ணா மூவிஸ் தயாரித்துள்ளது. ராதே ஷ்யாம் படம் 350 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ளது. ராதே ஷ்யாம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி வைரல் ஆனது.
உடல் சுறுசுறுப்பிற்கு முருங்கைக் கீரை சாப்பிட சொல்வது வழக்கம். ஆனால், அதிலிருக்கும் 18 அமினோ அமிலங்கள், முட்டை, பால், இறைச்சிக்கு இணையான புரத சத்துகளை நம் உடலுக்குக் கொடுக்கக்கூடிய திறன் கொண்டது என்பது உங்களுக்குத் தெரியுமா?
அடிக்கடி முருங்கை கீரையை ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் சிறந்தது. உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி, நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ்வதற்கு இந்த முருங்கை கீரை மிகவும் உதவுகிறது. ஒரே ஒரு முருங்கை மரத்தை நட்டு வைத்து, அதன் பயன்களை முழுவதுமாய் அனுபவித்து இருப்பவர்கள், வயதான காலத்திலும் கோலூன்றி நடக்காமல் ஆரோக்கியமாக வாழ உதவும் என்பதைதான், ‘முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான்’ என்று அந்த காலத்தில் பழமொழியாகக் கூறினார்கள்.
கீரை என்றாலே அதனை ஆய்வதில் இருக்கும் சிரமத்தை நினைத்தே பலரும் அவற்றைத் தவிர்க்கின்றனர். ஆனால், இனி அதை நினைத்துக் கவலைப்படத் தேவையில்லை. ஒரு கட்டு கீரையை ஒரே நிமிடத்தில் ஆய்ந்துவிட முடியுமென்றால், கீரையை ஒதுக்க மாட்டார்கள் தானே! ஆம், மனிதனுக்குத் தேவையான அத்தனை அத்தியாவசிய அமினோ அமிலங்கள் இருக்கும் ஒரே சைவ உணவு, முருங்கை கீரைதான். இதனை முறையாக சமைத்து சாப்பிட்டு வந்தால் அவ்வளவு நன்மைகள் உள்ளன. அந்த வகையில் இந்த எளிய முறையைப் பின்பற்றி ஒரே நிமிடத்தில் கீரையை ஆய்ந்துவிடுங்கள்.
அதிலும் முக்கியமாக வேலைக்கு செல்பவர்களாக இருந்தால், முருங்கைக் கீரையை அவ்வளவு எளிதில் சுத்தம் செய்ய முடியாது. இவர்களுக்கு இந்த டிப்ஸ் நிச்சயம் உபயோகமாக இருக்கும். வீட்டில் முருங்கை வளர்ப்பவர்களாக இருந்தாலும் சரி அல்லது கடையில் வாங்குபவர்களாக இருந்தாலும் சரி, முந்தைய நாள் இரவே முருங்கைக்கீரைக் கட்டை தனியே எடுத்து, அதில் இருக்கும் மஞ்சள் இலைகள், தேவையற்ற இலைகள், குப்பைகள் ஆகியவற்றை மட்டும் தனியே அகற்றிக் கொள்ளவும்.
பிறகு, ஒரு பெரிய நியூஸ் பேப்பரை விரித்து, அதில் முருங்கைக் கீரையை வைத்து சுற்றிக் கொள்ளுங்கள். அவ்வளவுதான். இதனை அப்படியே ஒரு ஓரமாக வைத்துவிட்டு மறுநாள் காலையில் எழுந்து பாருங்கள், இலைகள் தனியாகவும், குச்சிகள் தனியாகவும் இருக்கும். இப்போது நீங்கள் சுலபமாகக் குச்சிகளை மட்டும் தனித்தனியாக எடுத்து விட்டு, கீரையைக் கழுவி சுத்தம் செய்து கொள்ளலாம்.
அவ்வளவுதான்.. இவ்வளவு எளிதான முறையில் கீரையை ஆய்ந்து சமைக்க முடியுமென்றால் நிச்சயம் இத்தனை சத்துகள் நிறைந்த கீரையைத் தவிர்க்காதீர்கள்.
பகிர்வு
பஞ்சு போன்ற சுவையான ரவா இட்லியை சுலபமாக வீட்டிலேயே செய்திட
வழக்கமான இட்லி, தோசை என்று சமைத்து கொடுக்காமல் அதே இட்லியை சற்று வித்தியாசமான முறையில் சுவையாக செய்து கொடுத்து பாருங்கள். நான்கு இட்லி சாப்பிடுபவர்கள் கூட இன்னும் இரண்டு இட்லி வேண்டும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். இதன் சுவை மிகவும் அருமையாக இருக்கும். இதனுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட வெங்காய சட்னி, தக்காளி சட்னி, புதினா சட்னி, தேங்காய் சட்னி இவற்றில் எதை வேண்டுமானாலும் சேர்த்து தொட்டுக் கொண்டு சாப்பிடலாம். இதனை செய்வதற்கு நேரமும் மிகவும் குறைந்த அளவு தான் தேவைப்படும். இந்த ரவா இட்லி செய்வதற்கு சேர்க்கப்படும் பொருட்களும் வீட்டில் எப்பொழுதும் பயன்படுத்தும் பொருட்கள் தான்
தேவையான பொருட்கள்: ரவை – ஒரு கப், தயிர் – முக்கால் கப், நெய் – ஒன்றரை ஸ்பூன், முந்திரி பருப்பு – 10, உளுத்தம்பருப்பு – ஒரு ஸ்பூன், கடலைப்பருப்பு – ஒரு ஸ்பூன், பச்சை மிளகாய் – 2, கறிவேப்பிலை – ஒரு கொத்து, இஞ்சி சிறிய துண்டு – 1, சோடா உப்பு – கால் ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், கொத்தமல்லி தழை – ஒரு கொத்து.
செய்முறை: முதலில் கறிவேப்பிலை மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு கடாயை அடுப்பின் மீது வைத்து, ஒன்றரை ஸ்பூன் நெய் ஊற்ற வேண்டும். நெய் நன்றாக உருகியதும் முந்திரி பருப்புகளை நெய்யில் சேர்த்து பொன்னிறமாக வறுத்து கண்டு, ஒரு தட்டில் மாற்றி வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு அதே கடாயில் அரை ஸ்பூன் கடுகு, ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு, ஒரு ஸ்பூன் உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். இவற்றுடன் ஒரு கப் ரவை சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து சிறிது நேரம் வறுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் இவற்றை ஒரு பாத்திரத்தில் சேர்த்து, அதனுடன் முக்கால் கப் தயிர் மற்றும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து அதனுடன் ஒரு கொத்து கொத்தமல்லி தழையை நறுக்கி சேர்த்து, அனைத்தையும் ஒன்றாக கலந்து விடவேண்டும். பிறகு இவற்றை 15 நிமிடம் அப்படியே ஊற வைக்க வேண்டும்.
15 நிமிடத்திற்க்கு பிறகு மாவு நன்றாக ஊறிய பின்னர் கெட்டியாகிவிடும். இவற்றுடன் மீண்டும் கால் கப் தண்ணீர் சேர்த்து, அதனுடன் ஒரு ஸ்பூன் உப்பு மற்றும் கால் ஸ்பூன் சோடா உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட்டு, மாவினை இட்லி தட்டில் ஊற்றி, இட்லி பாத்திரத்தில் வைத்து 10 நிமிடம் வேக வைக்க வேண்டும். பின்னர் இட்லி வெந்ததும் அதனை ஒரு தட்டில் வைத்து அதனுடன் ஏதேனும் சட்னி வைத்து பரிமாறி கொடுக்க வேண்டும். அவ்வளவுதான் சுவையான ரவா இட்லி தயாராகிவிட்டது.
இன்றைய
சூடான நீரில் எலுமிச்சை கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..
காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால் அந்த நாள் முழுவதும் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் இயங்கலாம்.
இந்த தண்ணீரை கொஞ்சம் சூடாக்கி, அதில் எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் பல நன்மைகள் கிடைக்கும்.
1. நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. எலுமிச்சையில் உள்ள பொட்டாசியம் மூளை, நரம்பு பிரச்சனையை சீராக்குகிறது.
2. உடல் எடையைக் குறைக்கிறது. எலுமிச்சையில் உள்ள பெக்டின் நார்ப்பொருள் பசியைக் குறைக்கிறது.
4. சிறுநீர்த் தொகுதியைச் சுத்திகரிக்கிறது.
5. தோலில் ஏற்படும் கரும்புள்ளிகள், சுருக்கங்களைக் குறைக்கிறது.
6. வாய் துர்நாற்றத்தை போக்கி, சீரான சுவாசம் தருகிறது.
7. நுரையீரல் தொற்றுக்களை குறைக்கிறது.
8. காலையில் டீ அல்லது காபி குடிக்கும் பழக்கத்தை நீக்குகிறது.
தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் முதலாவது டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து, முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 105.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 327 ரன்களை குவித்தது.
இதையடுத்து, முதல் இன்னிங்சை துவங்கிய தென் ஆப்பிரிக்க அணி இந்திய அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் 62.3 ஓவர்களில் 197 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இதன் மூலம் 130 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. ஆனால், தென் ஆப்பிரிக்க அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். இறுதியில் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சில் 62.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 197 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதனால், தென் ஆப்பிரிகாவை விட 304 ரன்கள் முன்னிலையில் உள்ளது. இதையடுத்து, 305 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற தென் ஆப்பிரிக்கா தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கி விளையாடி வந்தது.
இந்நிலையில், இன்றைய 4-ம் நாள் ஆட்ட நேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 4 விக்கெட் இழப்பிற்கு 94 ரன்கள் எடுத்துள்ளது.
டெஸ்ட் போட்டியில் நாளை ஒருநாள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் தென் ஆப்பிரிக்கா வெற்றிபெற இன்னும் 211 ரன்கள் தேவைப்படுகிறது. அதேவேளை இந்தியா வெற்றிபெற இன்னும் 6 விக்கெட்டுகள் தேவை.
இதனால், செஞ்சூரியன் டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் ஆட்டமான நாளை விறுவிறுப்பிற்கு பஞ்சம் இருக்காது என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
புதிய ஆண்டு
அமைச்சர்
சேகர்பாபு
ஜனவரி 1 புத்தாண்டையொட்டி அனைவரும் கோவிலுக்கு செல்வது வழக்கம். மக்கள் தற்போது உள்ள சூழ்நிலையை மனதில் கொண்டு, கூட்ட நெரிசல் இன்றி சாமி தரிசனம் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள். திருக்கோயிலில் சாமி தரிசனத்திற்கு அனுமதி இல்லை என்று எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. அவ்வாறு திருக்கோயில்களில் தரிசனத்திற்கு செல்பவர்கள் முதல்வரின் அறிவுரைப்படி முகக்கவசம் அணிந்து கூட்ட நெரிசல் ஏற்படுத்தாமல், சமூக இடைவெளியை பின்பற்றி கோவில்களில் சாமி தரிசனம் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள். நாடு நலம் பெற, மக்கள் வளம் பெற வருகின்ற ஆண்டு நல்லாண்டாக அமைவதற்கு திருக்கோயில்களில் தரிசனத்திற்கு செல்பவர்கள் நோய் தொற்றுக்கு ஆளாகாமல் இருக்கின்ற அனைத்து வழிமுறைகளையும் கையாள வேண்டும் என்று அமைச்சர் சேகர் பாபு வலியுறுத்தியுள்ளார்.
சென்னை: புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி சென்னையில் நாளை இரவு 12 மணி முதல் ஒன்றாம் தேதி காலை 5 மணி வரை வாகன போக்குவரத்திற்கு மாநகர காவல்துறை தடை விதித்துள்ளது.சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள கடற்கரைகளில் டிசம்பர் 31-ஆம் தேதி இரவு பொதுமக்கள் கூடி புத்தாண்டு கொண்டாட காவல்துறை தடை விதித்துள்ளது.
அத்துடன் புத்தாண்டில் அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என்றும் பொது இடங்களில் அமைதிக்கு குந்தகம் விளைவித்தால் காவல்துறையினர் தக்க நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் டிசம்பர் 31-ஆம் தேதியன்று மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக் கூடாது, மீறினால் ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டு, வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் புதிய கட்டுபாடாக, சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை இரவு 12 மணி முதல் ஒன்றாம் தேதி காலை 5 மணி வரை, அத்தியாவசிய வாகன போக்குவரத்திற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் மற்ற வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது என்று சென்னை காவல்துறை திட்டவட்டமாக அறிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் நாளை இரவு 12 மணிக்கு முன்பாகவே தங்கள் பயணங்களை முடித்துக்கொள்ளுமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
தமிழில் எழுதுவோம் தவறில்லாமல்
நாற்பதாண்டு கால ஆசிரியப் பணியில் ஒரு முப்பதாயிரம் விடைத் தாள்களையாவது திருத்தியிருப்பேன். விடைத்தாள் திருத்தும்போது முதலில் மாணவர் செய்த பிழைகள்தாம் கண்ணில் படும். இப்போதும் நான் பார்க்கும் இடங்களில் எல்லாம் பிழைகளே என் கண்ணில் படுகின்றன. படிக்கும் நாளிதழ், பார்க்கும் தொலைக் காட்சி என அனைத்திலும் பிழைகளே முதலில் தெரிகின்றன.
முன்பு ஒருநாள் உணவுப் பொருள் பங்கீட்டுக் கடையில் பொருள்களை வாங்குவதற்காகச் சென்றிருந்தேன்.
நீண்ட வரிசையில் நின்றபடி நோட்டமிட்டேன்.
கடையில் அரிசி மற்றும் பருப்பு வழங்கப்படுகிறது என எழுதப் பட்டிருந்தது.
ஒரு வரியில் இரு பிழைகள். அரிசி, பருப்பு வழங்கப்படுகின்றன என அமைய வேண்டும். And என்பதன் மொழிபெயர்ப்பு மற்றும் என்பது.
ஆங்கிலத்தில் bread and butter, ladies and gentlemen என்று எழுதுவது அவர்கள் மரபு. நாமும் அவர்களைப்போல ரொட்டி மற்றும் பால் கிடைக்கும் என்று எழுதுவது சரியன்று. சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் ஆண்டனர் என்று எழுதுவது தமிழ் மரபு. சேர மற்றும் சோழ மற்றும் பாண்டிய மன்னர்கள் ஆண்டனர் என எழுதுவது தவறு.
கபிலர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி என எழுதுவது ஆங்கில மரபு. கபிலர் கலை அறிவியல் கல்லூரி என எழுத வேண்டும். இதுதான் தமிழ் மரபு.
ஒரு வாக்கியத்தை ஒருமையில் தொடங்கினால் ஒருமையில் முடிக்க வேண்டும். பன்மையில் தொடங்கினால் பன்மையில் முடிக்க வேண்டும்.
அரிசி, பருப்பு என ஒன்றுக்கும் மேற்பட்டப் பொருள்களை வழங்குகிறார்கள். வாக்கியம் பன்மையில் தொடங்குகிறது; வழங்கப் படுகின்றன என்று பன்மையில் முடிய வேண்டும். மாடுகள் மேய்கிறது என எழுதலாமா?
மாடுகள் மேய்கின்றன என எழுத வேண்டும். உதடுகள் ஒட்டாது என்பது தவறு. உதடுகள் ஒட்டா என்பதே சரி.
அங்கே இருந்த கரும்பலகையில், அரிசி இருப்பு- முன்னூறு மூட்டைகள் என எழுதப்பட்டிருந்தது. முன்னர் நூறு மூட்டைகள் இருந்தன என்றால் இப்போது இருப்பில் எத்தனை மூட்டைகள் உள்ளன என்று கேட்கத் தோன்றியது. முந்நூறு மூட்டைகள் என எழுதுவதே சரியாகும். அதே கரும்பலகையில் இக் கடைக்கு ஐநூறு அட்டைதாரர்கள் இணைக்கப்பட்டுள்ளனர் என எழுதப் பட்டிருந்தது. ஐநூறு என்பது தவறு. ஐந்நூறு என எழுதுவதே முறையாகும்.
வரிசை ஆமை வேகத்தில் நகர்ந்தது. எதிரில் இருந்த உணவகம் கண்ணில் பட்டது.
போவோர் வருவோரைக் கவரும் “இன்றைய ஸ்பெஷல்” பலகையில் அக் கடைக்காரர் எழுதியிருந்த பட்டியலைப் பார்த்தேன். மீன் குழம்பு, மீன் வருவல், கேரட் பொறியல் எனப் பட்டியல் நீண்டது.
கடைசியில் அன்புடன் வரவேற்க்கிறோம் என்று எழுதி “முயற்ச்சி உடையார் இகழ்ச்சி அடையார்” என்னும் பொன்மொழியுடன் முடித்திருந்தார்.
பொரிப்பதால் பொரியல், வறுப்பதால் வறுவல். இது தெரியாமல் பொறியல், வருவல் என எழுதிவிட்டார்.
பொறி என்னும் சொல்லுக்கு இயந்திரம், கருவி எனப் பல பொருள்கள் உண்டு. எலியைப் பிடிக்க உதவும் கருவிக்கு எலிப்பொறி என்று பெயர். வருவல் என்றால் வருக என்று பொருள்.
கோழி வருவல் என்றால் கோழியே வருக என்றாகிவிடும்! வரவேற்க்கிறோம் முயற்ச்சி என்பனவும் பிழையுடைய சொற்கள்தாம்.
இரண்டு வல்லின மெய்கள் இணைந்து வாரா என்பது விதி.
அதாவது க்,ச்,ட்,த்,ப்,ற் என்னும் ஆறு மெய் எழுத்துகளில் எந்த இரண்டு எழுத்துகளும் அருகருகே அமைவது தவறு.
அங்கே சாலை ஓரத்தில் காவல் துறையினர் வைத்திருந்த ஒரு வாசகம் கண்ணில் பட்டது. சாலை விதிகளைக் கடைபிடிப்பீர் என்பதாகும்.
கடைப்பிடிப்பீர் என எழுதியிருக்க வேண்டும். நடுவில் ப் போடாமல் கடைபிடிப்பீர் என்று எழுதினால், கடையை வாடகைக்குப் பிடித்தல் என்றுதான் பொருள் தரும்.
அந்த வழியாக ஒரு கல்லூரிப் பேருந்து கடந்து சென்றது. அதன் பின்புறம் ‘மாணவியர்கள் உள்ளே’ என எழுதப் பட்டிருந்தது. வாழும் வழியிலும் சரி, பேசும் மொழியிலும் சரி கள்ளின் ஆதிக்கம் அதிகம். மாணவி என்பது ஒருமை; மாணவியர் என்பது பன்மை. பிறகு எதற்கு மேலும் ஒரு கள்? மாணவியர்கள் என்று எழுதலாமா? கூடாது.
அப்போது அவசரமாக வந்த ஒருவர் வரிசையில் முண்டியடித்துக்கொண்டு நுழைந்தபோது, மற்றொருவர், ”அங்கே என்ன எழுதியிருக்கு? பாருங்க” என்றார். வரிசையில் நிற்கவும் என்று எழுதியிருந்தார்கள். வரிசையில் நிற்க என்பதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்.
எல்லோரும் வரிசையில் வரவும் என்பது தவறு. விரைந்து செல்லவும் என எழுதினால் தவறு. செல், செல்க, செல்ல வேண்டும் என எழுதலாமே.
வரிசையில் வருக என்பதே சரி. உம் என்னும் ஓசையுடன் வாக்கியம் முற்றுப்பெறுவது தமிழ் மரபு அன்று.
என் பணியை முடித்துத் திரும்பினேன், எனது அலைபேசியில் குறுஞ்செய்தி வந்ததாக ஒலித்தது. ஒரு நண்பர், ”இன்று இரவு எட்டு மணிக்கு என் உரை திருச்சி வானொலியில் ஒளி பரப்பாகிறது” என்று செய்தி அனுப்பியிருந்தார்.
வானொலியில் ஒலிபரப்பும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பும் நிகழும். இந்த வேறுபாட்டை அவர் அறியவில்லை.
அவர் ஒரு கல்லூரியில் கணிதப் பேராசிரியராக உள்ளார்!
கட்சித் தொண்டர்கள், நடிகர்களின் இரசிகர்கள் வைக்கும் பதாகைகளில் காணப்படும் பிழைகளுக்கு அளவே இல்லை. செய்தித் தாள்களின் தலையங்கக் கட்டுரைகளிலும் பிழைகள் மலிந்துள்ளன. வணிக எழுத்தாளர்களின் படைப்புகளில் எண்ணற்றப் பிழைகள்! சமூக வலைத் தளங்களில் காணப்படும் பதிவேற்றங்களில் உள்ள பிழைகளுக்கும் பஞ்சமில்லை.
“இவை எல்லாம் பெரிய பிழைகளா? பிழை இருந்தாலும் விஷயம் புரிகிறது. அது போதாதா?” இப்படிக் கேட்டவர் ஒரு தமிழர்.
இன்னொருவர் இப்போது காணப்படும் பிழைகளுக்கு ஏற்பளித்துப் புதிய இலக்கணம் எழுத வேண்டும் என்கிறார்.
இப்படி ஒரு சமரசம் நம் மூதாதையர்களிடம் இருந்திருந்தால் இன்றைக்குத் திருக்குறளும், தொல்காப்பியமும், சங்க இலக்கியமும் நமக்குச் சிந்தாமல் சிதறாமல் கிடைத்திருக்குமா?
ஒருவன் தன் தாய்மொழியில் பிழையின்றி எழுதவும் பேசவும் கற்றுக் கொள்வது ஒரு வாழ்வியல் திறனாகும். இந்தத் திறமை வாய்க்கப் பெறாதவர்கள், திறனுடையாரை அணுகித் தவறில்லாமல் எழுதிட ஆவன செய்வது தாய்மொழிக்குச் செய்யும் மிகப்பெரிய நன்மையாகும்.
இப்போது பாரதியார் இருந்தால், நம்மைப் பார்த்துப் ‘பிழை மலிந்த மொழியினாய் போ போ போ’ என்று பாடியிருப்பார்;
முனைவர் அ.கோவிந்தராஜூ,
படித்தில் பகிர்வு
சென்னை லயன்ஸ் கிளப்பான அறம் செய்ய விரும்பு 324 Mன் சார்பாக
இன்று 29.12.2021 நடைபெற்ற நல திட்டம்
மனதைத்
தெப்பமாக்குங்கள். துன்பங்கள் ஓடிவிடும்' மஹா பெரியவர்
காஞ்சி
மஹாஸ்வாமிகளின் 28ஆவது வார்ஷிக
ஆராதனை 30ந் தேதி (30-12-21)
அனுசரிக்கப்படுகிறது.
ஒரு முறை மகா பெரியவரிடம் ஒரு பெண்மணி `நான் நிறைய ஸ்லோகங்கள்
சொல்றேன்.ஆனால் என் பிரச்னைகள் தீரவில்லை. பகவான் கண் திறந்து பார்க்கலை.' என்று
வருத்தப்பட்டார்.
பெரியவர் கேட்டார்: `எப்படி சுலோகம் சொல்றே? சுவாமி முன்னால
உட்கார்ந்து ஸ்வாமியை மனசுல நிறுத்தித் தானே சொல்றே?'
`வேற வேலை பார்த்துண்டே சொல்றேன். மனப்பாடம் பண்ண ஸ்லோகங்கள்.' என்றார்
பெண்மணி.
அதற்குப் பெரியவர் சொன்னார்.` காய் நறுக்கணும்னா அருவாமனை, கத்தியைக் கிட்டே
வச்சுக்கறோம். சமைக்கணும்னா அடுப்புகிட்ட போகணும். குளிக்கணும், துவைக்கணும்னா
தண்ணி கிட்டப் போறோம். ஸ்கூட்டர், கார் எதுவா இருந்தாலும் கிட்ட இருந்து ஓட்டினாத்தான் ஓடறது.
சுலோகம் சொல்லணும்னா மனசு சுவாமி கிட்ட போகவேண்டாமா? சர்வ அந்தர்யாமி அவன். ஆனாலும் பிரச்னை பெரிசுன்னா பக்கத்துல உட்கார்ந்து
அனுசரணையா சொல்லுங்கோ. நிச்சயம் கேட்பான். கல்லைத் தூக்கி சமுத்திரத்துல போட்டா
மூழ்கிடும். ஆனாலும் மரத்தால கப்பல் பண்ணி அதுல எவ்வளவு கல்லை ஏத்தினாலும் ஒண்ணும்
ஆகறது இல்லை. நம் கவலைகள் கல் மாதிரி. பகவான் தெப்பம் மாதிரி. மனசு என்கிற
சமுத்திரத்தில் பகவானைத் தெப்பமாக்கணும். தெய்வத்தை இணைக்கிற ஆணிகள்தான் பூஜை, மந்திரங்கள் எல்லாம். அப்புறம் கவலைகளைத்
தூக்கி தெப்பத்தில் இறக்கலாம். சம்சார சாகரத்தில் முழுகாம கரை சேர்ந்து விடலாம். '
தொகுப்பு ஸ்ரீதர் சாமா
_________________________
உயிரைத் துண்டு துண்டாக
வெட்டி எறியப்பட்ட நதி
கிழக்கும் மேற்குமாக
கிடத்தப்பட்ட வெண்ணிற சாம்பலில்
எனது முத்தங்கள்..
நேற்று புத்தனின் பாதங்களில் இருந்து
பறித்துக் கொண்ட பூக்களை தான்
உன் அன்பெனும் கல்லறைக்கு சாத்தி இருக்கிறேன்
நான் உயிர்த்தெழுதலில்
உன் சொற்களில்
உன் அரவணைப்பில்
உன் உள்ளங்கைகளில்
கடவுளாய் பிறந்துவிட்ட தினம் ஒன்றில்..
நதி முழுவதும் முத்தங்களாய் பிறந்திருக்கிறேன்
முத்தங்கள் நிரம்பிய நதியில்
முதல் அடி எடுத்து வைக்கையில்
அதிரும் சிறு அதிர்வு தான்
என் இதயம் துடிக்கும் ஓசை...
சகுந்தலா சீனிவாசன்✍️
45-வது புத்தகக் காட்சி : வரும் ஜனவரி 6-ம் தேதி மாலை 5:30 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
துருக்கியில் நடைபெற்று வரும் ஆசிய அளவிலான சீனியர் வலுதூக்கும் போட்டியில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்த கல்லூரி மாணவி இலக்கியா (22) வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தல்!
திருப்பதியில் ஜன., 13ல் சொர்க்கவாசல் திறப்பு: 10 நாட்கள் திறந்திருக்கும்
திருப்பதி : திருமலை ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஜன., 13லிருந்து 22 வரை 10 நாட்கள் சொர்க்க வாசல் திறக்கப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருமலை திருப்பதி தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி தர்மா ரெட்டி திருமலையில் நேற்று அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அவர் கூறியதாவது: ஜன., 13-ம் தேதி வைகுண்ட ஏகாதசி தினம். இதற்காக 13-ம் தேதியிலிருந்து 22-ஆம் தேதி வரை சொர்க்க வாசல் தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். ஜன., 13ம் தேதி அதிகாலை 2:00 மணிக்குப் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு முக்கிய பிரமுகர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்த 300 ரூபாய் சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட், இலவச தரிசனம், கல்யாண உற்ஸவம், ஆர்ஜித பிரம்மோற்ஸவம் டிக்கெட்டுகள் ஆன்லைனில் பெற்ற பக்தர்கள் காலை 9:00 மணி முதல் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளனர். தினமும் 45 ஆயிரம் பக்தர்களை ஏழுமலையான் தரிசனத்திற்கு அனுமதிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. காய்ச்சல், உடல்வலி, சளி உள்ளிட்ட அறிகுறி உள்ளவர்கள் தரிசனத்திற்கு வரவேண்டாம்.
ஏழுமலையான் தரிசனத்திற்கு வரக்கூடிய பக்தர்கள் கட்டாயம் இரண்டு டோஸ் தடுப்பு ஊசி போட்டதற்கான சான்றிதழ் அல்லது 48 மணி நேரத்திற்கு முன் எடுக்கப்பட்ட நெகடிவ் சான்றிதழ் இருந்தால் எடுத்து வர வேண்டும்.ஜனவரி 1 மற்றும் வைகுண்ட ஏகாதசி நடக்கக்கூடிய 13ம் தேதி முதல் 22-ம் தேதி வரை சென்னையில் உள்ள தகவல் மையத்தில் தினசரி 30 ஆயிரம் லட்டுகள் விற்பனை செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
: ஊசி போடலயா..? திருப்பதிக்கு வராதீங்க.. தேவஸ்தானம் ‘புது’ அப்டேட் !
திருப்பதி கோவிலுக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும். இல்லையென்றால் அனுமதி கிடையாது என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவுறுத்தி இருக்கிறது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதம் (ஜனவரி) 1-ந்தேதி ஆங்கில புத்தாண்டு தரிசனம் மற்றும் வைகுண்ட ஏகாதசி விழா ஆகியவை நடக்கயிருப்பதால் வருகிற 13-ந்தேதியில் இருந்து 22-ந்தேதி வரை முக்கிய வி.ஐ.பி. பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்ய வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் அனுமதிக்கப்பட உள்ளனர். இதுகுறித்து திருப்பதி தேவஸ்தானம் கூறியிருப்பதாவது, ‘ திருப்பதி கோவிலில் ஜனவரி மாதம் 13-ந்தேதி வைகுண்ட ஏகாதசி மற்றும் 14-ந்தேதி வைகுண்ட துவாதசியை முன்னிட்டு கொரோனா விதிமுறைகளை கடைப்பிடித்து பக்தர்களுக்கு தரிசன ஏற்பாடுகள் செய்து தரப்படும்.
ஜனவரி 13-ந்தேதியில் இருந்து 22-ந்தேதி வரை 10 நாட்களுக்கு பக்தர்களுக்கு வைகுண்ட வாசல் தரிசனம் வழங்கப்படும். வைகுண்ட ஏகாதசியையொட்டி ஏழுமலையானை தரிசிக்க எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், அரசு அதிகாரிகள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர் மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். அவர்களுக்கு மட்டுமே வி.ஐ.பி. பிரேக் தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படும். சாதாரணப் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
ஜனவரி மாதம் 11-ந்தேதியில் இருந்து 14-ந்தேதி வரை தேவஸ்தான விடுதி அறைகள் முன்பதிவு செய்வது ரத்து செய்யப்பட்டுள்ளது. கல்யாண கட்டாக்களில் பக்தர்கள் தங்களின் தலைமுடியை காணிக்கை செலுத்த போதிய ஊழியர்கள் நியமிக்கப்படுவார்கள். கல்யாணக் கட்டாக்களில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க வழிகாட்டுதல் விதிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. தலைமுடி இறக்கும் பணியில் நவீன கருவிகள் பயன்படுத்தப்படுகிறது.
Devotees visiting the Tirupati temple must be vaccinated with two doses Tirupati Devasthanam has advised that otherwise there is no permission
வைகுண்ட ஏகாதசியையொட்டி திருமலையில் உள்ள தரிகொண்டா வெங்கமாம்பா அன்னதானக்கூடத்தில் பக்தர்களுக்கு தினமும் அதிகாலை 4 மணியில் இருந்து இரவு 12 மணி வரை 10 நாட்களுக்கு உணவு வழங்கப்படுகிறது. பக்தர்களுக்கு மருத்துவச் சேவை அளிக்க பல்வேறு பகுதிகளில் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட உள்ளது.
வைகுண்ட வாசல் தரிசனத்தையொட்டி திருமலையில் வாகனங்களை நிறுத்த போதிய இட வசதி செய்து தரப்படும். மேலும், திருப்பதிக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் அல்லது கொரோனா பரிசோதனை சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்று பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறது கோயில் நிர்வாகம்.
பூக்களால் உருவாக்கப்பட்ட வீடு.. கண்ணை கவரும் உதகை ரோஜா மலர் கண்காட்சி ! நீலகிரியில் ஆண்டுதோறும் கோடை விழாவின் ஒரு பகுதியாக நடைபெறும் ரோஜ...