பரமு என்கிற பரமேஸ்வரி எட்டாம் வகுப்பு. ... #சிறுகதை./எழுத்தாளர் இளங்கோவன்
பரமு என்கிற பரமேஸ்வரி எட்டாம் வகுப்பு. ... #சிறுகதை. பூங்குளம் கிராமம்... அந்த கிராமத்தில் குளம் இருக்கா? அதில் பூக்கள் இருக்கா? னு தெரியல... ஆனால் பூங்குளம் கிராமத்தின் பெயர் ஆலங்காயம் - திருப்பத்தூர் நெடுஞ்சாலையில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும். விவசாய வேலைகளில் மக்கள் மூழ்கியே இருப்பதால், படிப்பறிவு குறைவே. இருந்தாலும், கிராமத்தில் உள்ள ஆரம்ப பள்ளியில் தங்கள் பிள்ளைகளை சேர்த்துள்ளனர். கைநாட்டு கைலாசம் என கிராமமே அழைக்கின்ற கைலாசம், ஒன்னாம் கிளாஸ் கூட போகல, ஆனால், சாகக்கிடக்கிற ஒன்னுவிட்ட அத்தைக்காரி எட்டாவது படிச்ச தன் பொண்ணை கைலாசத்துக்கு கட்டி வச்சிட்டு, தம்பி மகனுக்கு பொண்ணை கொடுத்துட்டோம் இனி கவலையில்லை னு கண்ணை மூடிட்டாள். மசக்கையான கைலாசம் பொண்டாட்டி, வாக்கப்பட்ட பூங்குளத்தில், எட்டாவது படிச்ச படிப்பாளி னு பெயர் பெற்றவள். பிரசவம் பார்த்த உள்ளூர்க்கிழவி, டேய்...கைலாசம் உனக்கு பொம்பள பொண்ணு பிறந்திருக்காடா என கத்தி கொண்டாடினாள். கிராமமே கள்ளிப்பாலை ஊத்தி சிசுக்களை சாகடிச்ச காலம் போயிடுச்சின்னு மகிழ்ந்தன. "யோவ்..மாமா... பொண்ணு பொறந்திருக்கா, அவளையாச்சும் படிக்க வ