தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு பிப்., 28 வரை
சென்னை: தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு பிப்., 28 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், 9 மற்றும் 11ம் வகுப்புகளுக்கும், கல்லூரிகளில் இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கும் பிப்.,8 ம் தேதி வகுப்புகள் திறக்கப்படுகின்றன. @@இது தொடர்பாக முதல்வர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசின் சிறப்பான நடவடிக்கையினாலும், பொது மக்கள் ஒத்துழைப்பினாலும் கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. தற்போது 4,629 பேர்கள் சிகிச்சை என்ற நிலையில் உள்ளது. ஜன.,31 வரை பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டது. ஆய்வு கூட்டத்தின் அடிப்படையிலும், ஜன.,29ல் நடந்த மாவட்ட கலெக்டர்கள், மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார வல்லுநர்களுடன் நடந்த ஆலோசனை அடிப்படையிலும், உருமாறிய கொரோனா வைரசை கருத்தில் கொண்டு, தற்போதுள்ள ஊரடங்கு உத்தரவு, பல்வேறு கட்டுப்பாடுகளில், கீழ்கண்ட தளர்வுகளுடன் பிப்.,28 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர்த்து மற்ற பகுதிகளில் கீழ்கண்ட பணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது: * கலை அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், வேளாண்மை, மீன்வளம், கால்நடை உள