Thursday, December 31, 2020

உயிருக்கும் தோல்விக்கும் பயந்தவர்கள் போருக்கு வரக்கூடாது

 உயிருக்கும் தோல்விக்கும் பயந்தவர்கள் போருக்கு வரக்கூடாது என்று ரஜினியை நடிகை கஸ்தூரி கிண்டல் செய்துள்ளார்.‘உடல்நிலையை கருத்தில்கொண்டு கட்சியை ஆரம்பித்து அரசியலுக்கு வரமுடியவில்லை’, என நடிகர் ரஜினிகாந்த் நேற்று பரபரப்பு அறிக்கை வெளியிட்டார். இது அவரது அரசியல் வருகையை எதிர்நோக்கியிருந்த ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்தநிலையில் சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் ரஜினிகாந்த் இருப்பதை அறிந்துகொண்டு ரசிகர்கள் நேற்று மாலை அவரது வீட்டின் முன்பு திரண்டனர். அப்போது ‘அரசியலுக்கு வாங்க தலைவா’, என்று தொடர்ந்து கோஷங்கள் எழுப்பியபடி இருந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், தான் கட்சி தொடங்கவில்லை என ரஜினிகாந்த் நேற்று அதிரடியாக அறிவித்தார். ரஜினியின் இந்த அறிவிப்புக்கு பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில், இதுப்பற்றி நடிகை கஸ்தூரி டுவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது,
''கோடி பண நஷ்டத்தை விட கோடி மனக்கஷ்டம் பெரிது. உயிருக்கும் தோல்விக்கும் பயந்தவர்கள் போருக்கு வரக்கூடாது. ரஜினியின் முடிவுக்கு பாராட்டுக்கள். நீங்கள் பூரண நலத்துடன் நிம்மதியாக நீடூழி வாழ வேண்டும்.
எதிர்பார்த்தது தான். எத்தனையோ முறை நான் உட்பட பலரும் சொன்னது தான். எப்பவோ சொல்லியிருந்தால் ஏராளமானவர்களுக்கு வலியை தவிர்த்திருக்கலாம். வருடங்களை மிச்சப்படுத்தியிருக்கலாம். இப்பவாச்சும் சொன்னாரே. இப்ப இல்லை, எப்பவுமே இல்லை'' என பதிவிட்டுள்ளார்.
எதிர்பார்த்ததுதான்.
எத்தனையோ முறை நான் உட்பட பலரும் சொன்னதுதான். எப்பவோ சொல்லியிருந்தால் ஏராளமானவர்களுக்கு வலியை தவிர்த்திருக்கலாம். வருடங்களை மிச்சப்படுத்தியிருக்கலாம்.
நன்றி; தினத்தந்தி

தேசத்தை கட்டமைப்பதில் காவல் துறையின் பங்கு "

 பள்ளி மாணவ மாணவியர்க்கு " தேசத்தை கட்டமைப்பதில் காவல் துறையின் பங்கு " என்ற தலைப்பில் நடந்த தமிழ் மற்றும் ஆங்கில பேச்சு போட்டி 73 பள்ளிகளிலிருந்து 316 மாணவ , மாணவிகள் பங்கேற்பு . முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ , மாணவிகளுக்கு காவல் ஆணையாளர் அவர்கள் வெற்றிக்கோப்பை மற்றும் சான்றிதழ்களை வழங்கினார் (3012.2020).

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால் , இ.கா.ப அவர்களின் உத்தரவின் பேரில் , மண்டல அளவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் காணொளி வாயிலாக, " தேசத்தை கட்டமைப்பதில் காவல் துறையின் பங்கு " என்ற தலைப்பில் தமிழிலும் , " Role of Police in Nation Building " என்ற தலைப்பில் ஆங்கிலத்திலும் பேச்சுப்போட்டி நடத்தப்பட்டது.


சென்னை பெருநகரில் உள்ள 73 பள்ளிகளிலிருந்து 316 மாணவ மாணவியர்கள் இப்பேச்சு போட்டியில் பங்கேற்றனர். சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால் , இ.கா.ப அவர்கள் இன்று ( 30.12.2020 ) காலை வேப்பேரி , ஆணையாளர் அலுவலகத்தில் உள்ள கலந்தாய்வு கூடத்தில் நடந்த பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டு இறுதிப் பேச்சுப்போட்டியில் தமிழ் பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற 3 மாணவ, மாணவிகளுக்கும், ஆங்கிலப்பேச்சுப்போட்டியில் 3 மாணவ , மாணவிகளுக்கும், மண்டல அளவில் வெற்றி பெற்ற 15 மாணவ , மாணவிகளுக்கும் பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். மேலும் மேற்படி பேச்சு போட்டியில் நடுவர்களாக பங்கேற்றவர்களுக்கு நினைவு பரிசுகளையும் வழங்கினார்.


இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆணையாளர் முனைவர் திரு . A. அமல்ராஜ் , இ.கா.ப , ( தலைமையிடம் ) , இணை ஆணையாளர்கள் திரு . R. சுதாகர் , இ.கா.ப ( மேற்கு ) , திருமதி . S. மல்லிகா , ( தலைமையிடம் ) துணை ஆணையாளர் திரு.பெரோஷ்கான் அப்துல்லா , ( நிர்வாகம் ) காவல் அதிகாரிகள் மற்றும் மாணவ , மாணவிகள் கலந்து கொண்டனர்.

ஜி.கே. வாசன் பிறந்த நாள் விழா

 தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மக்கள் தளபதி ஐயா ஜி.கே. வாசன் பிறந்த நாளை முன்னிட்டு இன்று  திங்கட்கிழமை (28.12.2020) காலை 10:00 மணியளவில் வடசென்னை கிழக்கு மாவட்டம் ஆர்.கே. நகர் தொகுதி பகுதி தலைவர் திரு. J.மாரி ஏற்ப்பாட்டில்  மண்ணப்ப முதலி தெருவில் பொதுக்கூட்டமும்,  கேக் வெட்டி, பொதுமக்கள் 500 க்கும் மேற்பட்டோருக்கு  மாவட்ட தலைவர் C.பிஜூ அவர்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். உடன் நிர்வாகிகள் வேணுகோபால், சக்திவடிவேல், முருகன், சுகுமாரன், பாலசந்தானம், சென்னை கணேஷ், பாக்ஸர் ஜானி,பொன்வில்சன்,சுதாகர் ஸ்ரீதர்,வேலு, கிருபாகரன், அங்கவள்ளி, கலாவதி, செல்வக்குமார்,  மகேஷ், துரைபாபு, அனிக்ஸ், சாரா,தீபா,  வட்ட தலைவர்கள் பிரதீப்,மணிவண்ணன், நாகேஷ்,  தினேஷ்பாபு, பாஸ்கரன், டில்லிராஜ், உதயகுமார்,  மற்றும் பலர் கலந்து கொண்டனர்...

ரமணமகரிஷி (24)

 ரமணமகரிஷி (24)  

பகவான் ஸ்ரீ ரமணர் குறித்தான தொடர் :  

பகுதி 24

 பகவான் ஸ்ரீ ரமணர் "அட்சரமணி  மாலை" பாட ஒரு சுவையான பின்னணியும்  இருக்கிறது. அவர் விருபாட்ச  குகையில் வாழ்ந்த காலத்தில் அவருடைய சீடர்கள் "பிட்சை"க்கு போகும் போது" அற்புத விக்ரக அமராவதீஸ்வரர்"

(ஆதிசங்கரர்           இயற்றியது) என்ற "அட்சரமண மாலையை "ப்  பாடுவார்கள்.  பகவானின் சீடர்கள் வருவதறிந்து வீட்டில் உள்ளவர்கள் சுத்தமான ஆகாரம் அளித்து வந்தனர். அந்த ஆகாரத்துக்கும்  போட்டி வந்தது. ஊரில் உள்ள பிற  சாதுக்கள் சிலர் தாங்களும் அதே சுலோகங்களை பாடிக்கொண்டு ஆசிரம பக்தர்களுக்கு முன்பே பிச்சை வாங்கி கொண்டு சென்றுவிடுவார்கள். தாங்கள் ஏமாற்றப்பட்டதறிந்து வீட்டுக்காரர்கள் வருந்துவார்கள். பழனி  சுவாமி இப்பிரச்சனைக்கு முடிவு கட்டவும், வீட்டுக்காரர்களின் சங்கடத்தை போக்கவும் வேறு பாடல்கள் வேண்டும் என்று

 பகவானிடம் கேட்டுக்கொண்டார் அப்படி பகவான் அருளியது தான் "அட்சரமணமாலை". பகவானின் சீடர்கள் அது  முதல் "அட்சரமண மாலை" பாடிக்கொண்டு "பிட்சை"க்கு போவார்கள்.


 ஸ்ரீரமணரைப் போல அண்ணாமலையிடமும் அண்ணாமலையாரைப்  போல ஸ்ரீரமணரிடம் ஆழ்ந்த அன்பு வைத்தவர்களுக்கு இப்பதிவுகள் உள்ளார்ந்த தத்துவங்கள் நிறைந்த  புலனாகும் நாம் கேட்பதைக் கொடுக்கும் இறைவனைப் போற்றித் துதிப்பதும்,  வாட்ட முற்று சோதனைகளுக்கு உட்பட்டு வருந்தும் நிலையிலும் அவனை மறவாது இருப்பதே சிறப்பு அண்ணாமலையாரைத்  துதிப்பவர்கள் துன்பத்திலும் இன்பம் காணும் தூய ஆன்மாக்கள் என்கிறார் பகவான் ஸ்ரீ ரமணர்.


 "அட்சரமணி மாலை"  பாடல்களை படிக்கும் போது  படைத்த பரம்பொருளாகிய இறைவனுடன்  இம் மணி மாலை படைத்த ஸ்ரீ ரமணரும் நம் உள்ளத்தில் இருப்பார்கள் என்பது உறுதி.


 ஸ்ரீ அருணாசல "அட்சரமணமாலை" யில் உள்ள  சில பாமாலைகளை  நாம் பார்ப்போம்.


 காப்பு பாமலை 

------------====---------

 அருணாச்சல வரற்கு ஏற்ற அட்சரமணமாலை சாற்றக் கருணாகர கணபதியே கரம் அருளிக் காப்பாயே." அருணாசல சிவ அருணாசல சிவ அருணாசல சிவ அருணாசலா!"


 "அருணாசல சிவ அருணாசல சிவ அருணாசல சிவ அருணாசலா!" அருணாசலம் என அகமே நினைப்பவர் அகத்தை வேரறுப்பாய் அருணாசலா! அழகு சுந்தரம் போல் அகமும் நீயும் முற்று அபின்னமாய் இருப்போம் அருணாசலா!


 அகம் புகுந்து ஈர்த்து உன் அக குகை சிறையாய்  அமர் வித்து என்கொள்  அருணாசலா!


 ஐம்புலக் கள்வர் அகத்தில் புகும்போது அகத்தில் நீ இலையோ அருணாசலா! கண்ணுக்கு கண்ணாய் கண் இன்றிக்  காண் உனை  காணுவது எவர் யார்  அருணாசலா!


 காந்தம் இரும்பு போல் கவர்ந்து எனை விடாமல் கலந்து என்னோடு இருப்பாய் அருணாசலா!


 அன்போடு உன் நாமம் கேள் அன்பர் தம் அன்பருக்கு அன்பன்  ஆயிட அருள் அருணாசலா!


 மெய்யகத்தின் மென் மலர் அனையில் நாம் மெய் கலந்திட அருள் அருணாசலா!


 மலை மருந்து இட நீ மறைத்திடவோ அருள் மலை மருந்தாய் ஒளிர் அருணாசலா!


 நோக்கியே கருதி மெய் தாக்கிய பக்குவம் ஆக்கி நீ ஆண்டு அருள் அருணாசலா!


 சொல்லாது சொலி நீ சொல்லற நில் என்று சும்மா இருந்தாய்  அருணாசலா!இப்பாமாலை  வரிகள் மூலம் அவர் அருணாச்சலத்தை மட்டுமா அழைக்கிறார். அருணாச்சலத்திடம்  வந்து சேரும்படி நம்மையும் அல்லவா அழைக்கிறார்.


 அறமும் பொருளும் சிவம்

 ஆனந்தம் தருவது சிவம்


 மனமொன்றி வேண்டுவதும் சிவம்


 மாசில்லா இறைவனே சிவம் அல்லவா


 பகவான் ஸ்ரீ ரமணர், தன்னுடைய வாழ்நாளில் திருவண்ணாமலையில்  ஒரே ஒருவர் வீட்டுக்கு மட்டும் சென்று விருந்து உண்டார்,  இதன் விவரம் நாளைய பதிவில்.


Nynarin Unarvugal/புத்தாண்டு வாழ்த்துக்கள்

  Nynarin Unarvugal
புத்தாண்டு வாழ்த்துக்கள்|new year wishes 2021 tamil|கவிதை|


video link
எடப்பாடி காலில் விழுந்த விஜய்..?

 

எடப்பாடி காலில் விழுந்த விஜய்..? டிரெண்டாகும் ஹேஷ்டேக்..!நடிகர் விஜய், விஜய்சேதுபதி இணைந்து நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். பெருந்தொற்று பரவல் காரணமாக, நீண்ட நாட்களாக வெளியாகமல் இருந்த திரைப்படம், வரும் 13-ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக படக்குழுவினர் முதலமைச்சர் பழனிச்சாமியை சந்தித்ததாக தகவல் வெளியானது.

இதற்கிடையே, நெட்டிசன்கள் பலர், எடப்பாடி காலில் விழுந்த விஜய் என்ற ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கி வருகின்றனர். இது விஜய் ரசிகர்களுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது

ஒளிக்கற்றுக் குழவி

ஒளிக்கற்றுக் குழவி
---கவிதை

தொட்டுக் கொள்ளும் தூரம்தான்
இருந்தும்
இருவரும் சேர்ந்தே தனிமையின்
ஆழ்ந்த இருளுக்குள்
தொடுதிரைகளின் ஒளிக்கற்றையில்
உன்னை நீயும் என்னை நானும்
நம்மை நேரமுமாக மாற்றி மாற்றித்
தேடுகிறோம்.
அதன் குழைந்த
சிணுங்கள்கள் தனித்திருத்தலை
நினைவுருத்தித் தொட்டணைக்கக்
கெஞ்சுகிறது.
ஒரு பசியுள்ள சிசுவைப் போல
அதன் கணத்த அழுகையானது
விரல்காம்புகளில்
விசும்புகிறது.
சுரக்கும் உள்ளுணர்வுகளையெல்லாம்
அதன் மென்மையான நாவிடுக்கில்
கசிந்துவிட்டு வற்றிய இருபெரும்
என்புகளாக காலத்தைக் கட்டியணைத்து
உறங்கச்செல்வோம் வா..

Wednesday, December 30, 2020

ஜோதிட தொழிலை கைவிடும் ஷெல்வி

 ரஜினிகாந்துக்காக ஜோதிட தொழிலை கைவிடும் ஷெல்வி..! கணிப்பு பாவங்கள்தமிழக பா.ஜ.க.வில், அறிவுசார் பிரிவுத் தலைவராக உள்ள ஜோதிடர் ஷெல்வி என்பவர், டிசம்பர் மாதத்திற்குள் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்கவில்லை என்றால் ஜோதிடம் பார்க்கும் தொழிலை விட்டு விடுவதாக அறிவித்திருந்த நிலையில், அவரது கணிப்பு பொய்யாகி உள்ளதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.


கொரோனாவால் மக்களை முடக்கி போட்டிருந்த 2020 ஆம் ஆண்டு எல்லோருக்கும் சிறப்பாக இருக்கும் என்று முன் கூட்டியே கணித்த யதார்த்த ஜோதிடர் ஷெல்வி இவர்தான்..!


இதே போலத்தான், நடிகர் ரஜினிகாந்த் டிசம்பர் மாதத்திற்குள் அரசியல் கட்சி தொடங்குவார் என்றும், அப்படி அவர் தொடங்கவில்லை என்றால் தான் பார்த்துவரும் ஜோதிடத் தொழிலையே விட்டு விடுவதாகவும் யதார்த்தமாக சவால் விட்டிருந்தார் ஜோதிடர் ஷெல்வி.


இந்த நிலையில், யதார்த்த ஜோதிடர் ஷெல்வியின் கணிப்பை, ரஜினி அரசியலுக்கு வரப்போவதில்லை என்ற அறிக்கை பதம் பார்த்துவிட்டது. தற்போது ஷெல்வி ஜோதிட தொழிலை கைவிடுவாரா ? அல்லது தனது கணிப்பு தவறிவிட்டது என்பதை ஒப்புக்கொள்வாரா? என சமூகவலைதளங்களில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்

வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டம்

 வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டம் 
வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியத்தில் பாமக நாகை மாவட்ட செயலாளர் C.D..இராஜசிம்மன் தலைமையில் நடைபெற்றது இதில் மாநில மாவட்ட ஒன்றிய நகர கிளை நிர்வாகிகள் பாட்டாளி மற்றும்  வன்னிய சொந்தங்கள் கலந்து கொண்டனர்..

காவல் துறை எப்.ஐ.ஆர் போடவிலையா

 காவல் துறை எப்.ஐ.ஆர் போடவிலையா???படித்து பயன் அடையுங்கள்! 


ஒரு குற்ற சம்பவம் குறித்து, காவல்துறையினரிடம் புகார் அளிக்கும்போது, காவல்துறையினர் அந்தப்புகார் மீது நடவடிக்கை எடுப்பார்களா என்பதை புரிந்து கொள்வதில் பெரிய சிரமங்கள் இருக்காது. புகார் கொடுக்க வருபவரையே மிரட்டுவதும், அச்சுறுத்துவதும் ஏறக்குறைய அனைத்து காவல் நிலையங்களிலும் நடைபெறும் வழக்கமான நடைமுறையே.


1.  புகார் ரசீது அல்லது எப்.ஐ.ஆர் கொடுக்காத நிலையில்  புகார் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்வதற்கு காவல்துறையினர் முனைப்பு காட்டாத நிலையில், அந்தப் புகாரின் நகல் ஒன்றை ஒப்புதல் அட்டையுடன் கூடிய பதிவு அஞ்சல் மூலம், குறிப்பிட்ட காவல் நிலையத்திற்கு அனுப்பலாம்.


பிரிவு 154 (2)  சி.ஆர்.பி. சி படி  விசாரனை செய்ய சொல்லி காவல் கண்காணிப்பாளருக்கு ஒப்புகை அட்டையுடன் கூடிய பதிவு அஞ்சலில் தபால் மூலம் அணுபவும்


இவற்றை ஆதாரமாக கொண்டு உரிய குற்றவியல் நீதி துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு கொடுத்து முதல் தகவல் அறிக்கை பதிய உத்திரவு பெறலாம் பிரிவு 156 (3) சி.ஆர்.பி. சி  மற்றும் 190  சி.ஆர்.பி. சி 

 

மேலும் புகாரின் நகல்களை, தொலைநகல் மூலம் காவல்துறை ஆணையர் போன்ற உயர் அதிகாரிகளுக்கும் அனுப்பலாம்.


2.   குற்ற நிகழ்வுகளில் உயர்நீதிமன்றத்தை அணுகுவது பல நேரங்களில் பலன் அளிப்பதாக உள்ளது.


குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 482, உயர் நீதிமன்றத்தின் உயர் அதிகாரங்கள் குறித்து விளக்குகிறது. இந்த சட்டப்பிரிவின் அடிப்படையில் கீழ்நிலையில் உள்ள குற்றவியல் நீதிமன்றங்களுக்கும், காவல்துறைக்கும் உரிய அனைத்து உத்தரவுகளையும் பிறப்பிக்கும் அதிகாரம் உயர்நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.


இந்த அதிகாரத்தின்கீழ், நியாயமான காரணங்களுக்காக புகாரை பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு காவல்துறைக்கும், இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துமாறு குற்றவியல் விசாரணை நீதிமன்றங்களுக்கும் உத்தரவிடும் அதிகாரம் உயர்நீதிமன்றத்திற்கு உள்ளது.


3.  பாதிக்கப்பட்டவர்கள், தங்கள் நியாயமான புகார்கள் மீது தேவையான நடவடிக்கை மேற்கொள்வதற்கு குற்றவியல் நடைமுறைச் சட்டம் வழிகாட்டுகிறது. இச்சட்டத்தின் அத்தியாயம் 15இல் உள்ள பிரிவு 200 இதுகுறித்து விளக்குகிறது. இந்த சட்டப்பிரிவின் கீழ், ஒரு குற்ற சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஒரு நபர் நேரடியாக குற்றவியல் நடுவரை அணுகலாம்.


இவ்வாறு பெறப்படும் ஒரு புகாரை விசாரிப்பதற்கு குற்றவியல் நடுவருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான முதல் புகாரை பெறும் குற்றவியல் நடுவர், புகார் தருபவரையும், அவரது சாட்சிகளையும் விசாரித்து அவர்களது வாக்குமூலங்களை பதிவு செய்யலாம். இவ்வாறு பெறப்படும் புகாரை விசாரிக்கும் குற்றவியல் நடுவர், புகாரில் உண்மையும் – குற்றம் சாட்டப்பட்ட நபரை கைது செய்வதற்கான முகாந்திரமும் இருப்பதாக திருப்தி அடைந்தால் அப்பகுதிக்குரிய காவல்துறை அதிகாரிகளிடம், குற்றம் சாட்டப்பட்ட நபரை கைது செய்து நடவடிக்கை எடுப்பதற்கு உத்தரவிடலாம். இதற்கான அதிகாரம் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 156 (3)ன் படி குற்றவியல் நடுவருக்கு வழங்கப்பட்டுள்ளது.


ஆனால் நடைமுறையில் இது போன்ற நிகழ்வுகள் மிகவும் அரிதாகவே நடைபெறுகிறது. ஏனென்றால் குற்றவியல் நீதிமன்றங்களில் தேங்கியிருக்கும் ஏராளமான வழக்குகளோடு, இதுபோன்று பாதிக்கப்பட்டவர்களால் நேரடியாக வழங்கப்படும் புகார்கள் கூடுதல் பணிச்சுமை என்பதால் நீதிமன்றங்கள் இதுமாதிரியான மனுக்களை பரிவுடன் அணுகுவதில்லை. மேலும் புகாரில் கூறப்படும் குற்றச்செயலை நிரூபிக்கும் பொறுப்பு பாதிக்கப்பட்டவரிடமே விடப்படுவதும் உண்டு. குற்றப்புலனாய்வில் அறிவோ, அனுபவமோ இல்லாத சாமானியர்களிடம் குற்றத்தை நிரூபிக்கும் பொறுப்பை ஒப்படைப்பது என்பது நடைமுறையில் சாத்தியமில்லாதது என்பதை புரிந்து கொள்ள சிறப்புத் திறமைகள் தேவையில்லை. ஆனால் சில நேரங்களில் இதுபோன்ற உத்தரவுகளை நீதிமன்றம் பிறப்பிப்பதையும் மறுக்கமுடியாது.


ஒரு குற்ற சம்பவம் குறித்து, காவல்துறையினரிடம் புகார் அளிக்கும்போது, காவல்துறையினர் அந்தப்புகார் மீது நடவடிக்கை எடுப்பார்களா என்பதை புரிந்து கொள்வதில் பெரிய சிரமங்கள் இருக்காது. புகார் கொடுக்க வருபவரையே மிரட்டுவதும், அச்சுறுத்துவதும் ஏறக்குறைய அனைத்து காவல் நிலையங்களிலும் நடைபெறும் வழக்கமான நடைமுறையே.


சில காவல்நிலையங்களில், யார் மீது புகார் கூறப்படுகிறதோ – அவரையே தொடர்பு கொண்டு, அவரிடம் முதல் புகாரைதாரர் மீது வேறுபுகாரை பெற்று அதை முதல் புகாராக பதிவு செய்வதும் வழக்கத்தில் உள்ளது.


இத்தகைய சிக்கல்களை தவிர்ப்பதற்கு குற்றவியல் சட்டத்தில் அனுபவமும், நேர்மையும் கொண்ட ஒரு வழக்குரைஞர் உதவியுடன் புகார்களை அளிப்பது நல்லது. இந்தப்புகார் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்வதற்கு காவல்துறையினர் முனைப்பு காட்டாத நிலையில், அந்தப் புகாரின் நகல் ஒன்றை ஒப்புதல் அட்டையுடன் கூடிய பதிவு அஞ்சல் மூலம், குறிப்பிட்ட காவல் நிலையத்திற்கு அனுப்பலாம். மேலும் புகாரின் நகல்களை, தொலைநகல் மூலம் காவல்துறை ஆணையர் போன்ற உயர் அதிகாரிகளுக்கும் அனுப்பலாம். இதன் மூலம் காவல்துறையினர், குறிப்பிட்ட புகார் குறித்து விசாரணை நடத்துவதற்கான அழுத்தத்தை அளிக்கலாம். குறிப்பிட்ட புகார் சமூகத்திற்கு எதிரான குற்றச்செயல் குறித்ததாக இருந்தால், அந்தப் புகார் குறித்து அப்பகுதியில் இருக்கும் செய்தியாளர்களை தொடர்பு செய்தி வெளிவரச்செய்வதும், அந்தப் புகார் மீது விசாரணை நடத்துவதற்கு அழுத்தம் கொடுப்பதாக அமையும்.


இவ்வாறு எத்தகைய அழுத்தம் கொடுத்தாலும் அதற்கெல்லாம் கலங்காது, அந்தப்புகாரை உரிய முறையில் விசாரிக்காமல் தள்ளிவிட முயற்சிக்கும் அதிகாரிகளுக்கும் நம் நாட்டில் பஞ்சமில்லை. இத்தகைய சூழ்நிலையில், புகார்தாரர் நீதிமன்ற விசாரணையில் பங்கேற்கவும் சட்டம் வழிகாட்டுகிறது.


குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 301 (2), புகார்தாரரின் தரப்பில் அரசு வழக்கறிஞருக்கு துணையாக, அரசு வழக்கறிஞர் அல்லாத ஒரு வழக்கறிஞர் செயல்படுவதற்கு அனுமதி அளிக்கிறது. குறிப்பிட்ட குற்றப்புலனாய்வு ஆவணங்களையும் புகார்தாரர் பெறமுடியும். இதற்கு கிரிமினல் ரூல்ஸ் ஆஃப் பிராக்டிஸ் வழி வகுக்கிறது. இதன் மூலம் ஆவணங்களைப் பெறும் புகார்தாரரின் வழக்கறிஞர், சாட்சிகள் மற்றும் சான்றாதாரங்கள் ஆய்வு முடிந்தபின்னர், அரசு வழக்கறிஞர் பரிசீலிக்கத் தவறிய அம்சங்கள் ஏதேனும் இருந்தால் அதனை எழுத்து மூலமாக வடித்து குறிப்பிட்ட நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கலாம்.


இவ்வாறு குற்றவியல் வழக்கில் புகார்தாரர் சார்பில் தனி வழக்கறிஞரை அனுமதிப்பதற்கு உயர்நீதிமன்றத்தை அணுகுவது நல்லது.


இந்த முயற்சிகள் பலன் அளிக்காத நிலையிலும், காவல்துறை நடத்தும் விசாரணை அல்லது வழக்கின் போக்கு குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஆதரவளிப்பதாக நம்புவதற்கு இடம் அளிக்கும் நிலையிலும்கூட புகார்தாரர் அதில் தலையிடலாம். காவல்துறை நியாயமாக நடக்கவில்லை என்பதை நீதிமன்றம் ஏற்கும் வகையில் நிரூபித்தால், அந்த வழக்கின் விசாரணையேயோ, வழக்கையோ உள்ளூர் காவல்துறை அல்லாத வேறு புலனாய்வு அமைப்புகள் நடத்த உத்தரவிட வேண்டி உயர்நீதிமன்றத்தை அணுக சட்டம் இடம் அளிக்கிறது. குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 482, உயர்நீதிமன்றத்திற்கு அளிக்கும் அதிகாரத்தினஅ அடிப்படையில் இத்தகைய வழக்குகளை உயர்நீதிமன்றம் விசாரிக்கும்.


அப்போது இந்த புகார் அல்லது வழக்கு, சிபிசிஐடி எனப்படும் மத்திய குற்றப்புலனாய்வுத் துறைக்கோ அல்லது சிபிஐ எனப்படும் மத்திய புலனாய்வு அமைப்புக்கோ மாற்றப்படும் வாய்ப்புகள் உள்ளன. அவ்வாறு புகார் மீதான விசாரணையோ, வழக்கோ வேறு புலனாய்வு அமைப்புகளுக்கு மாற்றப்படும்போது, புகார்தாரர் உரிய புலனாய்வு அதிகாரிகளை அணுகி, தங்கள் ஐயப்பாடுகளை எடுத்துரைக்க முடியும்.


இவை அனைத்திற்கும் தேவை, புகார் அளிக்கும் நிலையிலும் அதைத் தொடர்ந்த நிலையிலும் குற்றவியல் சட்டத்தில் அனுபவமும், நேர்மையும் கொண்ட வழக்குரைஞரின் உதவியே!


ஒரு புகார் காவல்துறையின் கவனத்தை கவர்ந்து சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால் அடுத்த நடவடிக்கை கைது செய்வதாகவே அமையும். மிகச்சில நேரங்களில் குற்றவாளிகளும், மிகப்பல நேரங்களில் குற்றத்திற்கு எந்த தொடர்பும் இல்லாத நபர்களும் கைது செய்யப்படுவர். சில அரிதான நேரங்களில் நாம் மேலே பார்த்ததுபோல புகார் தரும் நபர் மீதே வேறு புகார் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்படுவதும் உண்டு. எப்படிப் பார்த்தாலும் குற்றவியல் சட்டத்தின் அடிப்படை நடவடிக்கையாக “கைது” இருக்கிறது. தற்போது, குறிப்பிட்ட காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு, நடவடிக்கை இல்லாவிட்டால், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அல்லது ஆணையாளருக்கு மனு அனுப்பி, அஞ்சல் ஒப்புதல் அட்டை பெற்று கொண்டு, அதன் பின்பும் நடவடிக்கை இல்லை என்றால், குற்றவியல் நீதிமன்றத்தை நாட வேண்டும். அங்கும் பலன் இல்லாவிட்டால், உயர்நீதிமன்றத்தை நாடலாம் என்று, குற்றவியல் சட்டத்தில் உள்ளதை, பின்பற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் சொல்லி உள்ளது. இன்னொரு கருத்தாக, உரிய காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்று, உயர்நீதிமன்றத்தை அணுகினால், பத்து நாட்களுக்குள் மனுதாருக்கு, புகார் மீதான நடவடிக்கையை காவல் துறை தெரிவிக்க வேண்டும். ஒன்று, அவர் அளிக்கும் புகாரில், உண்மை இருந்தால், வழக்கு பதிய வேண்டும். அல்லது அவரது மனுவை close செய்து, அதை மனுதாருக்கு தெரிவிக்க வேண்டும் என்று, இன்னொரு தீர்ப்பும் உள்ளது. அதே போல, ஏழு வருடங்கள் சிறை தண்டனை, குற்றம் நிரூபிகபட்டால் என்று இருக்கும் குற்ற பிரிவுகளில் வழக்கு பதிந்தால், குற்றவாளியை ஏன் கைது செய்ய வேண்டும் என்று, காவல் அதிகாரி உரிய காரணம் தெரிவிக்க வேண்டும். குற்றவியல் நீதிபதியும், உரிய காரணம் எழுதி, remand செய்ய வேண்டும் என்று, மற்றொரு உச்ச நீதிமன்ற தீர்ப்பு கூறுகிறது.Nynarin Unarvugal/கணவன் மனைவி காதல் கவிதைகள்.

  Nynarin Unarvugal
கணவன் மனைவி காதல் கவிதைகள். kanavan manaivi kadhal kavithaigal in tamil கணவன் மனைவியின் ஊடலை காதலோடு கவிதையாக சொல்லியிருக்கிறேன்.

Nynarin Unarvugal
ஒரு வாழ்வியல் செய்தி

 ஒரு வாழ்வியல் செய்திபுத்தாண்டுக்கு நிறைய வாழ்த்து சொல்லுவாங்க

..நான் உங்களுக்கு ஒரு வாழ்வியல் செய்தி அறிவிக்கிறேன்

. வேறொன்றும் இல்லை , இந்த கசப்பான ஆண்டு விட்டு சென்ற தடத்தின் நீட்சியாக இருக்க விருக்கும் பெரும் சவாலான வரவு - செலவு திட்டமிடுதல் சம்பந்த பட்டதே..


இதற்கு ஜப்பானியர்களை துணைக்கு அழைத்து கொள்கிறேன்.. அவர்களின் கூட்டு வெற்றிக்கு தனிப்பட்ட பொருளாதார திட்டமிடுதல் முக்கிய பங்காற்றுகிறது.. அதை காகீபோ முறை (Kakeibo method) என அழைக்கிறார்கள்..


அதை நீங்கள் இணையத்தில் தேடினால் ,கொட்டிகிடைக்கும் உங்களுக்கான வழிகாட்டல்கள்..


அதில் முக்கியமான நான்கு பயிற்சிகளை மட்டுமே குறிப்பிடுகிறேன்.


அ. உங்கள் செலவுகளை நான்கு தலைப்புக்குள் அடக்குங்கள் . வாழ்வியல் அத்தியாவசிய செலவுகள் , சமூக & கல்வி செலவுகள், பொழுதுபோக்கு செலவுகள் மற்றும் இதர செலவுகள் என..

நான்கு செலவுகளையும் அடிக்கடி பரிசீலனைக்கு உட்படுத்துங்கள் , கடைசி இரண்டையும் கொஞ்சம் அதிகமாகவே ..


ஆ. உங்கள் வருமான பணத்தில் முதல் பங்கு சேமிப்பாக இருக்கட்டும்.அதை ஒரு சுப செலவுகணக்காகவே கணக்கில் கொள்ளவும் . 


இ. உங்கள் வருமானங்கள் , சேமிப்புகள், செலவினங்களை ஒரு நோட்டு புத்தகத்தில் தினசரி எழுதி வைக்கவும்.. கணனியில் பதிப்பதை விட நோட்டில் எழுதி வைப்பது மனதில் அச்சாணி போல பதியும் என்பது உளவியல் கூற்று.


ஈ.செலவுகளை முடிந்த வரை பணமாக செலவு செய்யுங்கள், இணையம் வழியோ , கடன் அட்டைகள் வழியோ செலவழிக்கிற போது நமக்கு எந்த உறுத்தலும் இருக்காது ..கைவிட்டு செலவழிக்கிற போது ஒரு பொறுப்புணர்வு தன்னாலே வெளிப்படுவதாக அதே உளவியல் கட்டியம் கூறுகிறது..in fact , வேறொரு பதிவில் நான் இந்த கருத்தை வலியுறுத்தி சொல்லி இருந்தேன், என்பது எதேச்சையான ஒற்றுமை.ஆக , சிம்பிளாக சொல்லபோனால் ,கடந்த இருபது வருடத்தில் உருவான கலாச்சார மற்றும் மென்நுட்ப தொழில் புரட்சியை, உங்கள் தனிப்பட்ட பொருளாதார திட்டமிடுதலில் தவிர்த்தாலே ,

 வரும் வருடம் நீங்கள் ராசி பலனுக்கு அப்பாற்பட்டு சிறப்பாகவே வாழலாம்..


--நாகராஜ்


ரமணமகரிஷி (23)

 ரமணமகரிஷி (23)  

பகவான் ஸ்ரீ ரமணர் குறித்தான தொடர் :  

பகுதி 23முகவைக் கண்ண முருகனார்''

 பகவான் ஸ்ரீ ரமணரால் ஈர்க்கப்பட்டவர் முருகனார்  என்னும் தமிழ்க் கவிஞர்.

 இவரது இயற்பெயர் சுப்பிரமணியன். உற்றார் உறவினர்களால்  சாம்பமூர்த்தி என்றழைக்கப்பட்டார்.  கல்லூரி நாட்களில் அவருக்கிருந்த  தமிழ்ப்  பற்றின் காரணமாக தமது பெயரை முருகனார் என்று   தூய தமிழாக்கிக் கொண்டவர். தமிழ் பண்டிதர் வேலையில் இருந்தவர். வீடு வாசல் துறந்து தனியாக திருவண்ணாமலை சென்று ரமணரின் மனதில் இடம் பிடித்தார்.

 புற  வாழ்வை அறவே துறந்து கடைசிவரை துறவியாகவே வாழ்ந்தார்.  மகரிஷியை சந்தித்தது முதல் வேறு ஒருவர் பற்றியும் எதைப் பற்றியும் பாடாமல் இருந்தவர்.

குரு ரமணர், தனக்கும் பிற அடியார்களுக்கும் கூறிய கருத்துக்களையும், உபதேசங்களையும், ரமணர் குறித்து தாம் இயற்றிய தோத்திரங்கள், அவரால் தனக்கு ஏற்பட்ட ஆன்மீக அனுபவங்கள் பற்றியும் கிட்டத்தட்ட 30,000 தமிழ்ப் பாக்களாக  இயற்றியுள்ளார்.

 ரமணர் பக்தர்களுக்கு அருளிய உபதேச வாசகங்களையும், எளியே ஆன்ம விசாரத்  தத்துவத்தையும் முருகனார் கவனமாக கிரகித்துக் கொண்டு அவற்றை கருத்துச் செறிவான செந்தமிழ் செய்யுள்களாக திறம்பட எழுதினார். அவ்வப்போது ரமண மகரிஷியிடம் காண்பித்து அவரது ஆலோசனை மற்றும் அனுமதி பெற்று வந்தார். ஆங்காங்கே மகரிஷி அளித்த திருத்தங்களை புகுத்தி பாடலை தயார் செய்தார். இவ்வாறு தொகுத்த நூலே  குருவாசக்  கோவை என்பது. மொத்தம் 1282 நாலடி வெண்பாக்கள் கொண்டது.  அவற்றில் 28 வெண்பாக்கள் ஸ்ரீரமணர் இயற்றியவை.  இக்கோவை குரு ரமணரின் ஒப்புதல் பெற்றது.

 ஸ்ரீ ரமணர் சித்தாந்தத்தை அதன் இயல் வடிவிலே  விரிவாக விளக்கம் செய்த நூல் என்று மகரிஷியே பாராட்டியிருக்கிறார். இதனால் மகரிஷியே  ஆசிரியர் என்று ரமணர் அடியார்களிடையே  பரவலாக கருதப்படுகிறது. இப்பாடல்கள் அனைத்தும் பேராசிரியர் சுவாமிநாதன் என்பவர் ஆங்கிலத்தில் மொழிப் பெயர்த்துள்ளார்.

1928 ல் தொடங்கி முருகனாரின வேண்டுதலால் ஸ்ரீ ரமணர் அவ்வப்போது இயற்றிய பாடல்கள் (வெண்பாக்கள்) ஒன்று திரட்டப்பட்டு சீரமைத்து தொகுக்கப்பட்டன.  இவையே உள்ளது நாற்பது மட்டும் மற்றும் அனுபந்தம் என்ற தலைப்பில் நூலாக வெளியிடப் பட்டன. மேலும்  முருகனாரின் வேண்டுதலால் மகரிஷியே  இயற்றிய நூல் தான் உபதேச உந்தியார்.

 குரு வாசகக்  கோவை, உள்ளது நாற்பது,உபதேச உந்தியார் ஆகிய மூன்றும்  மதிப்புமிக்க பொக்கிஷங்களாய் ஸ்ரீரமணர்  அடியார்களின் சீடர்கள் கருதினர்.

 முருகனார் பின்னாளில் இயற்றிய ரமணி சந்ததி முறை எந்த நூலில் ரமண புராணம் என்ற பகுதியில்  ரமணர் இயற்றிய  வரிகளே உள்ளன. ரமணர் இயற்றிய பல்வேறு நூல்கள் அடங்கிய ரமணா நூற்றிரட்டு  என்ற தொகுப்பில் முருகனார் இயற்றிய சில பாடல்கள் ஸ்ரீ ரமணர் சேர்த்துள்ளார். இவ்வாறு ஆக்கியோன் தானே என்ற பாகுபாடில்லாமல்  குரு ரமணரும் முருனாரும்  கவிதைகள் புனைந்தனர்.

 கலங்கும் உள்ளங்களுக்கு கலங்கரை விளக்கமாய், ஆறாத ரணங்களுக்கு அருமருந்தாக விளங்குவது அருணாச்சலம் துதி  பஞ்சகம். இதன் விவரம் நாளைய பதிவில்.


உட்கார்ந்திருக்கும் மேடைக்கும் தான் உயிர் இருக்கிறது - பகவான் ரமணர்

 

உட்கார்ந்திருக்கும் மேடைக்கும் தான் உயிர் இருக்கிறது - பகவான் ரமணர்

( நன்றி : arull .wordpress.com)

(31-12-20 பகவான் அவதார  தினம்)

(உண்ணும் உணவு  பற்றி ரமண மகரிஷி)
முன்பொருமுறை திருமதி பிக்காட் என்கிற ஆங்கிலேயப் பெண்மணி பகவானுடன் நடத்திய உரையாடலின் ஒரு பகுதி;

“ஆன்ம ஞானம் பெற எந்த வகையான உணவினை பரிந்துரைக்கிறீர்கள்?”

“சாத்வீக உணவுகுறைந்த அளவில். அதாவது ரொட்டி, பழம், காய், பால் போன்றவை”

பிக்காட்: வட இந்தியாவில் சிலர் மீன்களை உண்கிறார்களே, அது சரியா?

( பகவானிடமிருந்து பதில் இல்லை)f

பிக்காட்: ஐரோப்பியர்களான எங்களுக்கு எங்கள் ஒருவித உணவு பழகிவிட்டது. அதை மாற்றினால், உடலும் அதனால் மனமும் சக்தியிழந்து விடுகிறது. உடல் நலம் பேணுவது அவசியம் அல்லவா?

ரமணர்: நிச்சயமாக. உடல் சக்தியிழக்கையில், வைராக்கியம் என்னும் சக்தியை மனம் பெறுகிறதே!

பிக்காட்: ஆனால், நாங்கள் மனவலிமை இழக்கிறோமே?

ரமணர்: மனவலிமை என்று எதைச் சொல்கிறீர்கள்?

பிக்காட்: உலகத்தின் பந்தங்களில் இருந்து விடுபடும் சக்தியினை சொல்கிறேன்.

ரமணர்: உண்ணும் உணவைக் கொண்டே மனம் வளர்கிறது. அதனால் உணவு சாத்வீகமாக இல்லாவிட்டால் அதனால் மனமும் பாதிக்கப்படுகிறது.

பிக்காட்: நிஜமாகவா, அப்படியென்றால், நாங்கள் எப்படி சாத்வீக உணவுக்கு வழக்கப்படுத்திக்குள்ளது.

ரமணர்: ( அருகில் இருக்கும் இவான்ஸ்-வெண்ட்ஸ் என்பவரைக் காட்டி ) நீங்கள் எங்கள் உணவை உண்ணுவதால், ஏதேனும் சங்கடம் இருக்கிறதா?

இவான்ஸ்-வெண்ட்ஸ்: இல்லை, ஏனெனில் அது எனக்கு பழகிவிட்டது.

பிக்காட்: பழக்கம் இல்லாதவர்களுக்கு என்ன சொல்வீர்கள்?

ரமணர்: பழக்கம் என்பது சூழ்நிலைக்கேற்ப தன்னை தயார் செய்து கொள்வதுதான். இங்கே மனம் தான் முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியது. மனம் சில வகையான உணவுகளை சுவையானதாகவும், நல்ல உணவாகவும் நினைத்துக் கொண்டு இருக்கிறது.

பிக்காட்: புலால் உணவுக்காக உயிர்கள் கொல்லப்படுகிறதல்லவா?

ரமணர்: யோகிகளுக்கு அஹிம்சையே தலையாய கொள்கை.

பிக்காட்: செடிகளுக்கும், அதில் காய்க்கும் காய், பழங்களுக்கும் உயிர் இருக்கிறது அல்லவா?

ரமணர்: நீங்கள் உட்கார்ந்திருக்கும் மேடைக்கும்தான் உயிர் இருக்கிறது!

பிக்காட்: நாங்கள் கொஞ்சம் கொஞ்சமாக புலால் அற்ற உணவுக்கு பழகிக் கொள்ளலாமா?

ரமணர்: அதுவே வழி.

 

( தகவல் : ஸ்ரீதர் சாமா)

 

 

Tuesday, December 29, 2020

உடல் உறுப்புகளை பலப்படுத்த சின்னச்சின்ன வழிகள்

 உடல் உறுப்புகளை பலப்படுத்த  சின்னச்சின்ன வழிகள்.  பெரிய பெரிய பலன்கள்.
மூளை


கறிவேப்பிலைத் துவையலை 48 நாள்கள் சாப்பிட்டு வந்தால் மூளையின் செயல்பாடு சீராகி, நாம் சுறுசுறுப்புடன் இருப்போம்.


வல்லாரை இலைகளை நெய்யில் வதக்கி சுடுசாதத்துடன் இரண்டு கவளம் சாப்பிட்டு வர வேண்டும்.


தினசரி இரண்டு துண்டு தேங்காயை மென்று தின்பதால் மூளையில் எந்தப் புண்களும் வராது.


கண்கள்


பாலுடன் குங்குமப்பூ சேர்த்துக் குடித்து வருவது நல்லது.


தினமும் 50 கிராம் அளவுக்கு மாம்பழம் அல்லது பப்பாளியைச் சாப்பிட்டு வர பார்வைத்திறன் மேம்படும்.


அரைக்கீரையை வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் கண்கள் குளிர்ச்சியடையும். அதுபோல் பொன்னாங்கண்ணி, முருங்கைக் கீரைக்ச் சாப்பிட்டாலும் பார்வைத்திறன் மேம்படும்.வெண்டைக்காய் மோர்க்குழம்பு, வெண்டை மசாலா, வெண்டைக்காய் பொரியல் என சாப்பிட கண்களுக்கு நல்லது.


தினந்தோறும் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வந்தால், கண் தொடர்பான பிரச்னைகள் வராது.


பற்கள்


மாவிலைப் பொடியை பற்பொடியாகப் பயன்படுத்தி பல் தேய்த்து வந்தால் பற்கள் உறுதியாகும்.


கோவைப்பழம் சாப்பிட்டால் பல் தொந்தரவுகள் வராது. உணவிலும் அடிக்கடி கோவைக்காயைச் சேர்த்துக்கொள்ளலாம்.


செவ்வாழைப் பழத்தை தினமும் இரவில் சாப்பிட்டு வர பல்லில் ரத்தக்கசிவு, பல் சொத்தை ஆகியவை வராது.


பல் உறுதியாக, உணவை நன்றாக மென்று சுவைக்க வேண்டும். கேரட், கரும்பு, ஆப்பிள் போன்றவற்றைப் பத்து முறையாவது நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.


நரம்புகள்


சேப்பங்கிழங்கை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் நரம்புகள் பலம் பெறும்.


இரண்டு அத்திப்பழத்தை தினந்தோறும் சாப்பிட்டு வரலாம்.


மாதுளைப் பழச்சாற்றில் தேன் கலந்து 48 நாள்கள் குடித்து வரலாம்.


இலந்தைப் பழத்தை அவ்வப்போது சுவைத்து வரலாம்.


கரிசலாங்கண்ணிக் கீரையை அடிக்கடி சாப்பிட்டு வருவது நல்லது.


ரத்தம்


வாரம் இரண்டு நாள்கள் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் ரத்தம் உற்பத்தியாகும்.


திராட்சைப் பழ ஜூஸ் ஒரு டம்ளர் அல்லது ஒரு ஸ்பூன் இஞ்சிச் சாற்றில் சிறிது தேன் கலந்து குடித்து வந்தால் ரத்தம் சுத்திகரிக்கப்படும்.


தினம் ஒரு கப் அளவுக்கு தயிர் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாய் அடைப்புகள் நீங்கும்.


அடிக்கடி விளாம்பழம் சாப்பிட்டு வந்தால், ரத்தத்தில் உள்ள கிருமிகள் அழியும்.


இரண்டு லிட்டர் நீரைக் கொதிக்க வைத்து, அதில் சீரகத்தைப் போட்டு 10 மணி நேரம் கழித்து, அந்தத் தண்ணீரை நாள் முழுவதும் குடித்து வந்தால் ரத்தம் சுத்தமாகும்.


சருமம்


தேகம் பளபளப்பாக மாற ஆவாரம் பூ டீ குடித்து வரலாம். ஆரஞ்சுப் பழத்தையும் சாப்பிட்டு வரலாம்.


முட்டைக்கோஸ் சாற்றை முகத்தில் தடவி வர முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மறையும்.


சந்தனக் கட்டையை இழைத்து அதனுடன் எலுமிச்சைச் சாறு கலந்து முகத்தில் பூசினால் பருக்கள் நீங்கும். முகம் பிரகாசமாகும்.


ஆரோக்கியமான உடல், பொலிவான முகம், பளபளப்பான சருமம் பெற அறுகம்புல்லை நீர் விட்டு அரைத்து, வெல்லம் சேர்த்து வாரம் மூன்று முறைக் குடித்து வரவேண்டும்.


நுரையீரல் & இதயம்


தேனில் ஊறவைத்த நெல்லிக்காயை தினசரி சாப்பிட்டு வர நுரையீரல், இதயம் பலமாகும்.


கரிசலாங்கண்ணிக் கீரையை வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் நல்லது.


ஆர்கானிக் ரோஜாப்பூ, பனங்கற்கண்டு, தேன் ஆகியவற்றை லேகியம் போல கலந்து, தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வர இதயம் பலமாகும்.


இஞ்சி முரப்பா, இஞ்க்ச் சாறு, இஞ்சித் துவையல் ஆகியவற்றைச் சாப்பிட்டால் இதயம் ஆரோக்கியமாக துடித்துக் கொண்டிருக்கும்.


சுண்டை வற்றலை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொண்டால் நுரையீரல் ஆரோக்கியத்துடன் இருக்கும்.


திராட்சை ஜூஸ், உலர் திராட்சையை சாப்பிட இதயம் பலம் பெறும்.


முள்ளங்கிச் சாற்றை அரை கப் அளவுக்கு மூன்று வாரங்களுக்கு குடித்து வருவது நல்லது. இதனால், நுரையீரல் தொடர்பான பிரச்னைகள் நெருங்காது.


ஆளிவிதைகள், பாதாம், வால்நட் ஆகியவற்றில் ஒமேகா 3, நல்ல கொழுப்பு இருப்பதால் இதயத்துக்கு நல்லது.


வயிறு


காலையில் எழுந்ததும் ஊறவைத்த ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை சாப்பிட்டு சிறிதளவு தயிரையும் குடிக்க வேண்டும். வயிறு சுத்தமாகும்.


மாதுளம்பூவை தேநீராக்கிக் குடித்து வந்தால், வயிறு தொடர்பான பிரச்னைகள் நீங்கும்.

வறுத்துப் பொடித்த சீரகத்தை ஒரு டம்ளர் மோரில் போட்டுக் குடிக்க வேண்டும்.


வாரத்தில் இரண்டு நாள்கள் ஒரு டம்ளர் தேங்காய்ப்பாலுடன் கருப்பட்டி சேர்த்துக் குடித்து வருவதால், வயிறு தொடர்பான பிரச்னைகள் எதுவும் வராது.


சுரைக்காயை வாரம் இருமுறை உணவில் சேர்த்துக்கொள்ள தொப்பை கரையும்.*


வாழைப்பூ, மணத்தக்காளிக் கீரையை வாரம் ஒருமுறையாவது சாப்பிட வயிற்றுத் தொந்தரவுகள் நீங்கும்.


வாரம் ஒருமுறை கொள்ளு ரசம் சாப்பிடக் கெட்டக் கொழுப்பு கரையும். தொப்பையும் குறையும்


கல்லீரல் & மண்ணீரல்


கரிசலாங்கண்ணிக் கீரையைக் கூட்டாக செய்துச் சாப்பிடலாம். கீழாநெல்லியை புளியங்கொட்டை அளவு வெறும் வயிற்றில் மாதந்தோறும் ஐந்து நாளைக்குச் சாப்பிட வேண்டும்.


மாதத்தில் இரண்டு நாள்கள் வேப்பம்பூ ரசம் வைத்துச் சாப்பிடுங்கள்.


திராட்சை பழச்சாற்றை அருந்தி வந்தால் கல்லீரல், மண்ணீரல் உறுப்புகளுக்கு நன்மையைச் செய்யும்.


குடல்


அகத்திக்கீரையை வாரம் ஒருநாள் சமைத்துச் சாப்பிட வேண்டும். இதனால், மலக்குடல் சுத்தமாக இருக்கும்.


பப்பாளிப் பழத்தை வாரம் மூன்றுமுறை சாப்பிடுவது நல்லது.


அடிக்கடி முளைக்கீரையை சமையல் செய்து சாப்பிட்டு வரலாம்.


மாலை ஆறு மணி அளவில், மாம்பழ சீசனில் மாம்பழத்தைத் தொடர்ந்து சுவைத்து வரலாம்.


மாதுளைப்பூ சாறு 15 மி.லி, சிறிதளவு பனங்கற்கண்டு சேர்த்து மூன்று வேளையும் குடித்து வரவேண்டும்.


பாதம்


விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் சம அளவு எடுத்து பாதத்தில் தடவி வந்தால் பாதம் மிருதுவாக இருக்கும்.


லேசாக சூடு செய்த வேப்பெண்ணெயை விரல்களின் இடுக்கில் தடவினால் சேற்றுப் புண்கள் சரியாகும்.


வாழைப்பூவை பருப்பு சேர்த்துச் சமைத்து சாப்பிட்டு வந்தால், கை, கால்களில் வரும் எரிச்சல் நீங்கும்.


இரண்டு கால் விரல்களையும் தினமும் ஐந்து நிமிடத்துக்கு நீட்டி - மடக்கும் பயிற்சியைச் செய்து வரவேண்டும். ரத்த ஓட்டம் சீரடைந்து புத்துணர்வு பெறலாம்

சக்கரை நோய் உள்ளவர்களுக்கு

 சக்கரை நோய் உள்ளவர்களுக்கு


சாப்பிடக் கூடாதவைநுங்கு

சர்க்கரை

சாக்லெட்

கரும்பு

ஜஸ் கிரீம்

பால்கட்டி (பன்னீர்)

மாம்பழம்

சீத்தாபழம்

பலாப்பழம்

சப்போட்டா

வாழைப்பழம்

காம்பளான்

திரட்டுபால்

குளுகோஸ்

சேப்பங்கிழங்கு

உருளைகிழங்கு

சக்கரைவள்ளி கிழங்கு

உலர்ந்த திராட்சை

குளிர் பானங்கள்


அளவோடு சாப்பிடலாம்


அரிசி

அவல்

ஓட்ஸ்

சோளம்

கேழ்வரகு

கோதுமை

பார்லி அரிசி

வேர்க்கடலை

பாதாம் பருப்பு

முந்திரிபருப்பு

மக்காச்சோளம்


அளவில்லாமல் சாப்பிடலாம்


கீரை

தக்காளி

காராமணி

வாழைத்தண்டு 

வாழைப்பூ 

பாகற்காய்

சுரைக்காய்

பீர்க்கங்காய்

வெங்காயம்

கத்தரிக்காய்

பூசணிக்காய்

அவரைக்காய்

பப்பாளிக்காய்

கோவைக்காய்

வெள்ளரிக்காய்

வெண்டைக்காய்

முருங்கைக்காய்

கொத்தவரங்காய்

சீமைகத்தரிக்காய்

முட்டைகோஸ்

வெள்ளை முள்ளங்கி 

தீராத வயிற்று வலி பிரச்சனையா

 தீராத வயிற்று வலி பிரச்சனையா? உடனடித் தீர்வு.
நமக்கு அடிக்கடி வயிற்று வலி வருவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. பொதுவான வயிற்று வலி எதனால் ஏற்படுகிறது, அதன் காரணங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.


செரிமானக் கோளாறு, மலச்சிக்கல், வாயு தொல்லை, பூச்சித் தொல்லை, வயிற்றுப் பொருமல், உணவு நச்சு முதலியனவாகும். இது மாதிரியான சாதாரண வயிற்று வலிக்குப் பாட்டி வைத்தியம் குறிப்புகளைப் பார்க்கலாம்.


சீரக நீர்


ஒரு சொம்பு தண்ணீர் எடுத்து அதே பாத்திரத்தில் ஊற்றி கறிவேப்பிலை, இஞ்சி மற்றும் சீரகம் ஆகியவற்றைச் சேர்த்துக் கொண்டு, நன்கு கொதிக்க விடவும். பின்னர் வடிகட்டியைக் கொண்டு தண்ணீரை வடித்து எடுத்துக் கொள்ளவும்.இந்த தண்ணீரை அருந்தி வந்தால் , வயிற்று வலி குணமடையும்.


வேப்பம்பூ


வேப்பம்பூவைப் எடுத்து பறித்து வெயிலில் காய வைக்கவும். பின் இதனைத் தூளாகப் பொடித்துக் கொள்ளவும். இதை வெந்நீரில் கலந்து காலை மாலை என இருவேளையும் பருகி வரலாம். இதைச் செய்து வரும் பொழுது வாயு தொல்லையால் ஏற்பட்ட வயிற்று வலி குணமடையும்.


சுக்கு


சோம்பு அரைக் கப், தனியா கால் கப் மற்றும் சுக்கு ஒரு சிட்டிகை என்ற அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த மூன்றையும் மிக்சியிலோ அல்லது அம்மியிலோ போட்டு அரைத்து பொடியாக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். பாத்திரத்தில் ஒரு சொம்பு தண்ணீரை ஊற்றிக் கொண்டு, பொடியைச் சேர்த்து விடுங்கள். இதை நன்கு கொதிக்கவிடவும். அரை சொம்பு அளவிற்குத் தண்ணீர் சுண்டியவுடன், இதில் பனை வெல்லமும் பாலும் சேர்த்து அருந்த வேண்டும். இது மலச்சிக்கலைக் குணமடையச் செய்யும்.


கசகசா


ஒரு தேக்கரண்டி அளவு கசகசா மற்றும் சிறிதளவு பனங்கற்கண்டையும் எடுத்துக் கொள்ளவும். இரண்டையும் மிக்ஸியில் அரைத்து நன்கு பொடித்துக் கொள்ளவும். இதைத் தினம் மூன்று வேளை எடுத்துக் கொள்வதன் மூலம் வயிற்று வலி நிவாரணம் அடையும்.


சுக்கு கருப்பட்டி


சுக்கு கருப்பட்டி மற்றும் நான்கு மிளகுகளை எடுத்துக் கொள்ளவும். இதை உரலில் போட்டு நன்கு இடித்துக் கொள்ளவும். இந்தப் பொடியை இரண்டு வேளை சாப்பிடுவதன் மூலம் வயிற்று வலி குணமடையும்.


சாதம் வடித்த நீர்


அஜீரணக் கோளாறை சரி செய்ய மற்றும் ஒரு எளிய வழி உள்ளது. இதற்குத் தேவையானது ஒரு டம்ளர் அளவு சாதம் வடித்த நீர் ஆகும். இதில் ஒரு சிட்டிகை அளவு மஞ்சள் தூள் கலந்து பருக வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் வயிற்றுத் தொந்தரவு குறையும்.


வெந்தயம்


நெய் விட்டு வெந்தயத்தை வறுத்துக் கொள்ளவும். பின் இதனை நன்கு பொடித்து தூளாக்கிக் கொள்ளவும். இந்தத் தூளை மோரில் கலந்து குடித்து வர வயிற்று வலி சரியாகும்.


தேன்


ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விடவும். இதில் ஒரு தேக்கரண்டி அளவு தேனைக் கலக்கவும். இந்த நீரை அருந்தி வர வயிற்று வலி குணமடையும்.


தண்ணீர்


வயிற்றுக் கோளாறு இருக்கும் சமயத்தில் அதிக அளவு தண்ணீர் எடுத்துக் கொள்வது நல்லது. இவ்வாறு தண்ணீர் பருகுவதன் மூலம் வயிற்றில் உள்ள நச்சுக்கள் சிறுநீர் வழியாக வெளியேற்றப்படும். அதனால் வயிற்று வலி சீக்கிரம் குணமாக வாய்ப்புள்ளது.


பாதிரிப் பட்டை


பாதிரிப் பட்டையைத் தண்ணீரில் ஊறவைத்து,அந்த நீரை அருந்துவதாலும் வயிற்று வலி

சரியாகும். இந்த பாதிரி மரத்தின் பூ வெண் சிவப்பு நிறம் உடையது என்பது குறிப்பிடத் தகுந்தது.


செய்யக் கூடாதது


வயிற்று வலி இருக்கும் சமயத்தில் படுக்கக்கூடாது. அவ்வாறு படுக்கும் பொழுது வயிற்று வலி இன்னும் அதிகமாக வாய்ப்பு உள்ளது.