Posts

Showing posts with the label /. அடிப்படை சட்ட தகவல் பகுதி

கிராம_நீதி_மன்றம் என்றால் என்ன? கிராம நீதிமன்றங்கள்…!

Image
 #கிராம_நீதி_மன்றம் என்றால் என்ன? கிராம நீதிமன்றங்கள்…! இந்திய கிராமப்புற மக்களின் 2 கோடியே 86 லட்சம் வழக்குகள் மாவட்ட நீதிமன்றங்களில் தேங்கியுள்ளன....! வரப்பு, வாய்க்கால் தகராறு, வாய்ச்சொல் தகராறு உள்ளிட்ட சின்னச்சின்ன பிரச்சினைகளுக்கு கூட வருடக் கணக்கில் கிராமத்து எளிய மனிதர்கள் மாவட்ட தலைநகரங்களுக்கு அலையோ, அலையென்று அலைந்து கஷ்டப்படுகிறார்கள்! இதற்கு முடிவுகட்டவும், கிராம மக்களுக்கு அவர்கள் வாழும் இடங்களிலேயே நீதி வழங்கவும் கொண்டு வரப்பட்டது தான் ‘கிராம நீதியாலயா- 2008’ என்ற சட்டமாகும், இதுவே கிராம நீதிமன்றம் என்று குறிப்பிடப்படுகிறது. கிராமப்புற மக்களுக்கு விரைவாகவும், சுலபமாகவும் நீதி கிடைக்க வழிவகை செய்வதே சட்ட கமிஷனால் பரிந்துரைக்கப்பட்ட இந்த சட்டத்தின் நோக்கம் என்று வியாக்கியானமும் தரப்பட்டது. இது சட்டமாக்கப்பட்ட ஆண்டு 2008. நடைமுறைக்கு வந்த தேதி அக்டோபர் 2, 2009. இதற்காக யு.என்.டி.பி. எனப்படும் ஐக்கிய நாடுகள் வளர்ச்சி முகமை 2009 ஆண்டு முதல் 2017 ஆண்டு வரை ரூ.44 கோடியே 60 லட்சம் நிதி உதவியும் தந்துள்ளது. ஆனால், இந்த அற்புதமான சட்டம் இது வரை இந்தியாவில் சரியாக  நடைமுறை...

24 மணி நேரம் மூடப்பட்ட சென்னை ஐகோர்ட்டின் கதவுகள்... ஆண்டுதோறும் நடக்கும் சம்பிரதாயம்

Image
  *24 மணி நேரம் மூடப்பட்ட சென்னை ஐகோர்ட்டின் கதவுகள்... ஆண்டுதோறும் நடக்கும் சம்பிரதாயம்!* ஐகோர்ட் வளாகத்தின் கதவுகள் அனைத்தும் ஆண்டுக்கொரு முறை ஒரு நாள் முழுவதுமாக மூடப்படும் வழக்கம், ஒரு சம்பிரதாயமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. சென்னை, ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டு சுமார் 150 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியத்தை தாங்கி நிற்கிறது சென்னை ஐகோர்ட் கட்டிடம். தினமும் ஏராளமான வழக்கறிஞர்கள், பொதுமக்கள் வந்து செல்லும் இந்த வளாகம், சென்னையின் பரபரப்பான இடங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. இருப்பினும் ஐகோர்ட் வளாகத்தின் கதவுகள் அனைத்தும் ஆண்டுக்கொரு முறை ஒரு நாள் முழுவதுமாக மூடப்படும் வழக்கம், ஒரு சம்பிரதாயமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கத்திற்கு பல்வேறு காரணங்களும், கதைகளும் சொல்லப்பட்டு வருகின்றன. தற்போது கோர்ட் கட்டிடம் அமைந்துள்ள இடத்தில் சென்னகேசவ பெருமாள் கோவில், சென்னமல்லேஸ்வரர் கோவில் என இரண்டு கோவில்கள் இருந்ததாகவும், அந்த கோவில்களுக்கு மாற்று இடம் வழங்கி ஐகோர்ட் கட்டிடம் கட்டப்பட்டதாகவும் ஒரு தகவல் கூறப்படுகிறது. இதன்படி ஐகோர்ட் வளாகம் கோவிலுக்குச் சொந்தமானது ...

தினமும் 10 வழக்குகளை சுப்ரீம் கோர்ட்டின் அனைத்து அமர்வுகளும் விசாரிக்க வேண்டும் -

Image
  தினமும் 10 வழக்குகளை சுப்ரீம் கோர்ட்டின் அனைத்து அமர்வுகளும் விசாரிக்க வேண்டும் - தலைமை நீதிபதி சந்திரசூட் தினமும் 10 வழக்குகளை சுப்ரீம் கோர்ட்டின் அனைத்து அமர்வுகளும் விசாரிக்க வேண்டும் என தலைமை நீதிபதி சந்திரசூட் அறிவுறுத்தி உள்ளார். புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட்டின் 49-வது தலைமை நீதிபதியாக இருந்தவர் யுயு லலித். அவர் பதவி காலம் முடிவடைந்த நிலையில் நாட்டின் 50-வது தலைமை நீதிபதியாக கடந்த 9-ம் தேதி டி.ஒய் சந்திரசூட் பதவியேற்றுக் கொண்டார். இவர் பணியை தொடங்கிய முதல் நாளிலே வழக்குகளை பட்டியலிட புதிய நடைமுறையை பின்பற்றுமாறு பதிவாளருக்கு உத்தரவிட்டார். அதன்படி, சுப்ரீம் கோர்ட்டில் திங்கள், செவ்வாய், புதன் கிழமைகளில் பதிவு செய்யப்படும் அனைத்து வழக்குகளும், அடுத்த திங்கள் கிழமை விசாரணைக்கு பட்டியலிடப்படும். மேலும், அவரச வழக்குகள் இருந்தால் நாங்கள் குறிப்பிடுவோம், பிற வழக்குகள் அனைத்தும் தானாக பட்டியலிடப்படும். இது தொடர்பாக நீதிமன்ற பதிவாளருக்கு அறிவுறுத்தி உள்ளதாக தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு அமர்வுகளுக்கு தலைமை நீதிபதி சந்திரசூட் புதிய அறிவுறு...

தேசிய சட்ட சேவைகள் தினம்

Image
  தேசிய சட்ட சேவைகள் தினம் இந்தியாவில் சட்ட சேவைகளின் செயல்பாடுகள் மற்றும் செயல்பாடுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த சட்ட சேவைகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்தியாவில், பல்வேறு சமூகங்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவுகள் போன்ற வகுப்புகள் பல்வேறு திட்டங்களின் கீழ் வெவ்வேறு உரிமைகள் மற்றும் பலன்களைப் பெறுகின்றன. சில சாதிகளுக்கு அட்டூழியங்கள் போன்ற சட்டப்பூர்வ உரிமைகள் உள்ளன, அவை அவர்களுக்குத் தெரியாது. மூத்த குடிமக்கள், சிறுபான்மையினர், அனாதைகள், திருநங்கைகள் ஆகியோருக்கும் அரசியலமைப்பின்படி சில உரிமைகள் உள்ளன. இந்த நாளில் பல்வேறு குடிமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த சட்டத்துறை வல்லுநர்கள் அனைத்து குடிமக்களுக்கும் உதவ முயற்சி செய்கிறார்கள்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும்: உச்ச நீதிமன்றம்*

Image
  பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும்: உச்ச நீதிமன்றம்* புதுடெல்லி: பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆயினும் இந்த வழக்கில் 5ல் இரு நீதிபதிகள் செல்லாது என மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளனர். 5ல் 3 பேர் செல்லும் எனக் கூறியதால் சட்டம் செல்லத்தக்காகியுள்ளது. பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு முறையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யுயு லலித் அடங்கிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. அதில் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, பேலா திரிவேதி, பி.பர்திவாலா ஆகியோர் 10 சதவீத இட ஒதுக்கீடு அரசியல் சாசன அடிப்படை கட்டமைப்பை மீறவில்லை என்றும் நீதிபதிகள் யுயு லலித், ரவீந்திர பட் ஆகியோர் 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லாது என்றும் தீர்ப்பளித்துள்ளனர். 3 2 என்ற வீதத்தில் வெளியாகியுள்ள இந்த தீர்ப்பு அரசுக்கு வெற்றியாகவே கருதப்படுகிறது. 2019 மக்களவை தேர்தலை ஒட்டி மத்திய அரசு இந்த சட்டத்தைக் க...

கருத்தரிக்கவோ, கருவைக் கலைக்கவோ பெண்ணுக்கு உரிமை உண்டு' - கேரள ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு*

Image
  கருத்தரிக்கவோ, கருவைக் கலைக்கவோ பெண்ணுக்கு உரிமை உண்டு' - கேரள ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு* கருத்தரிக்கவோ, கருவைக் கலைக்கவோ பெண்ணுக்கு உரிமை உண்டு என்று கேரள ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. கொச்சி, கேரள ஐகோர்ட்டில் 23 வயதான எம்.பி.ஏ.மாணவி ஒருவர் ஒரு வழக்கு தொடுத்திருந்தார். அந்த வழக்கில் அவர் தனது சக மாணவர் ஒருவருடன் மனம் ஒருமித்து, பாலுறவு வைத்துக்கொண்டதாகவும், அதனால் தான் கர்ப்பம் தரித்து இருப்பது 'அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்' பரிசோதனையில் தெரிய வந்துள்ளதாகவும் கூறி, தனது 26 வார கால கர்ப்பத்தை கலைக்க அனுமதி கோரி இருந்தார். இந்த வழக்கை நீதிபதி வி.ஜி. அருண் விசாரித்தார். இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவியின் உடல்நிலையை டாக்டர்கள் குழு சோதித்து, அந்தக்குழுவின் அறிக்கையை கோர்ட்டு பெற்றது. அதில், பாதிக்கப்பட்டுள்ள மாணவி மிகுந்த மன அழுத்தத்தில் இருப்பதாகவும், கர்ப்பத்தைத் தொடர்வது அவரது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த மாணவி கர்ப்பத்தை கலைத்துக்கொள்ள ஐகோர்ட்டு அனுமதி அளித்தது. இதுகுறித்த தீர்ப்பில், ஒரு பெண் கர்ப்பம் தரிக்கவும் அல்லது க...

*குழந்தை திருமண சட்டத்தின் கீழ் வராது; 15 வயது முஸ்லிம் சிறுமிகளின் திருமணம் சட்டப்படி செல்லும்: பஞ்சாப் உயர் நீதிமன்றம் தீர்ப்பு

Image
 *குழந்தை திருமண சட்டத்தின் கீழ் வராது; 15 வயது முஸ்லிம் சிறுமிகளின் திருமணம் சட்டப்படி செல்லும்: பஞ்சாப் உயர் நீதிமன்றம் தீர்ப்பு* சண்டிகர்: ‘பதினைந்து வயதை தாண்டிய முஸ்லிம் சிறுமிகளின் திருமணம் சட்டப்படி செல்லும், அது குழந்தை திருமண சட்டத்தின் கீழ் வராது’ என பஞ்சாப்-அரியானா உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அரியானா மாநிலத்தை சேர்ந்த ஜாவேத் (26) என்பவர் கடந்த ஜூலை மாதம் 16 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டார். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்யப்பட்டு, மைனர் பெண் என்பதால் சிறுமி பஞ்ச்குலா சிறார் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டார். இதற்கிடையே, தனது மனைவியை மீட்டுத் தரக் கோரி ஜாவேத் தரப்பில் பஞ்சாப்-அரியானா நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி விகாஸ் பால் அளித்த தீர்ப்பில், ‘‘இஸ்லாமியர்களின் ஷரியத் சட்டப்படி 15 வயது பூர்த்தி அடைந்தாலே, அந்த பெண் திருமணம் செய்து கொள்ளலாம். அதன்படி, 15 வயதுக்கு மேற்பட்ட முஸ்லிம் சிறுமிகளின் திருமணம் சட்டப்படி செல்லும். அதை குழந்தை திருமண சட்டத்தின் கீழ் கொண்டு வர ம...

*திருமண சடங்குகள் செய்யாமல் வெறுமனே பதிவுத்திருமணம் செய்வதை ஏற்க கூடாது. உயர்நீதி மன்ற மதுரை கிளை அதிரடி.*

Image
  *திருமண சடங்குகள் செய்யாமல் வெறுமனே பதிவுத்திருமணம் செய்வதை ஏற்க கூடாது. உயர்நீதி மன்ற மதுரை கிளை அதிரடி. * ஒரு தம்பதி திருமண சடங்குகள் செய்யாமல் வெறுமனே பதிவுத்திருமணம் மட்டும்  செய்துகொள்வதால் அது அவர்களுக்கு திருமண தம்பதி என்ற அங்கீகாரத்தை அளிக்காது என  உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.  It is not acceptable to simply perform a registered marriage without performing the marriage ceremony.  Madurai High Court branch.  Author First Published Oct 21, 2022, 2:14 PM IST ஒரு தம்பதி திருமண சடங்குகள் செய்யாமல் வெறுமனே பதிவுத்திருமணம் மட்டும்  செய்துகொள்வதால் அது அவர்களுக்கு திருமண தம்பதி என்ற அங்கீகாரத்தை அளிக்காது என  உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது. மேலும்  பதிவுத் திருமணத்தில் திருமண வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும் என்றும்  நீதிமன்றம் வலியுறுத்தி உள்ளது.    சமீபகாலமாக பதிவுத் திருமணம் செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பெரும்பாலான இளைஞர்கள் முறைப்படி தங்களது மத வழக்கப்படி திருமணங்களை...

திருமணம் ஆகாத பெண்களும் கருக்கலைப்பு செய்து கொள்ளலாம்

Image
  *திருமணம் ஆகாத பெண்களும் கருக்கலைப்பு செய்து கொள்ளலாம்  என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.*  அனைத்துப் பெண்களும் கருக்கலைப்பு செய்ய உரிமை வழங்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில் நீதிபதி சந்திரசூடு தலைமையிலான அம்ர்வு இன்று தீர்ப்பு வழங்கியது.  தற்போதைய கருக்கலைப்பு சட்டம் திருமண பந்ததின் அடிப்படையிலானது என்று குறிப்பிட்ட நீதிமன்றம் சமூக மாற்றங்களுக்கு ஏற்ப சட்டங்களிலும் மாற்றம் தேவை என்று தெரிவித்தது. திருமணமான பெண்களிடம் கூட அவர்களின்  விருப்பம் இல்லாமல்  உறவு கொண்டால் அது பாலியல் வன்முறைதான் என்றும் தெரிவித்துள்ளது. சட்டம் அனுமதிக்காததால் 67% பாதுகாப்பற்ற கருக்கலைப்பு நடப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. *தற்போதைய கருக்கலைப்பு சட்டம் பிரிவு 3(2) திருமணமாகாத பெண்களின் அடிப்படை உரிமைக்கு எதிராக உள்ளது. எனவே அதனை ரத்துசெய்வதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.* ஏதேனும் இக்கட்டான சூழ்நிலையில் ஒரு பெண் தனக்கு கருவை சுமக்க முடியவில்லை என்று கருதும் போது, அவர் கருக்கலைப்பைத் தேர்வு செய்யலாம். அதற்கு சட்டம் தடையாக இருக்க முடியாது. எனவே, திருமணம் ஆனவர் ஆகாதவர...

ஜீவனாம்சம்

Image
  கு. வி. மு. ச பிரிவு 125(4) ஆனது, மனைவி எந்தவிதமான காரணமும் இல்லாமல் கணவனை விட்டு பிரிந்து சென்று வாழ்ந்தால் அவருக்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று அவசியம் இல்லை என கூறுகிறது.  ஆனால் கு. வி. மு. ச பிரிவு 125(4) ஆனது விவாகரத்து பெறாமல், திருமணம் நடைமுறையில் இருக்கும் போது ஜீவனாம்சம் கோருகிற மனைவிகளுக்கு மட்டுமே பொருந்தும். ஒரு நீதிமன்றத்தால் மனைவி வேண்டுமென்றே பிரிந்து வாழ்ந்து வருகிறார் என்ற அடிப்படையில் விவாகரத்து வழங்கப்பட்ட மனைவிக்கு பொருந்தாது.  உச்சநீதிமன்றம் "ரொக்காட் சிங் Vs திருமதி. ராமுந்திரி *2000-3-SCC-180*" என்ற வழக்கில்,  கு. வி. மு. ச பிரிவு 125(4) இல் இரண்டு பிரிவுகள் உள்ளதாகவும், முதல் பகுதியில் திருமணம் நடைமுறையில் இருக்கும் பொழுது, ஒரு மனைவி ஜீவனாம்சம் கோருவது குறித்து கூறப்பட்டுள்ளதாகவும், விவாகரத்து பெற்ற மனைவி கு. வி. மு. ச பிரிவு 125(1)(b) இல் கூறப்பட்டுள்ள விளக்கத்தின் படி விவாகரத்து கோரலாம் என்றும், விவாகரத்து பெற்ற மனைவி தன்னைத்தானே பராமரித்து கொள்ள இயலாத நிலையில், அவர் மறுமணம் எதுவும் செய்து கொள்ளாமல் இருந்தால், அவர் ஜீவனாம்சம் பெறுவதற்க...

மக்களுக்கு விழிப்பு உணர்வு

Image
  போலி ஆவணங்கள் மூலம் கிரையம் செய்யப்பட்ட பத்திரப் பதிவுகளை உடனடியாக ரத்து செய்து சொத்தை உரியவர்களிடம் ஒப்படைக்க தமிழக அரசு கொண்டுவந்த சட்டத்திற்கு இந்திய குடிரசுத் தலைவர் ஒப்புதல். சட்டம் உடனடியாக நடைமுறைக்கு வந்து விட்டது! பாதிக்கப்பட்டவர்கள் விழித்துக் கொண்டு இழந்த சொத்தை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்கலாம்! நிலத் தகராறு,  பட்டா மாறுதல் போன்ற வழக்குகளில், நீதிமன்றங்கள் வழங்கி இருக்கின்ற தீர்ப்புகள். நீங்கள் பதிவு இறக்கம் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.  எந்த அளவு முடியுமோ அந்த அளவுக்கு,  உங்கள் நண்பர்களுக்கு தகவலை தெரிவிக்கவும். (Land Disputes) 1. வழக்கு நிலுவையில் இருக்கும் போது  பட்டா மாறுதல் போன்ற நடவடிக்கைகளில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஈடுபடக்கூடாது. நில நிர்வாக ஆணையர் - கடித எண் - K3/27160/2018, dt - 13.3.2018 சென்னை உயர்நீதிமன்றம் - W. P. No - 24839/2014, dt - 16.7.2018 W. P. No - 491/2012, dt - 4.6.2014 W. P. No - 16294/2012, dt - 4.4.2014 2. சொத்தின் பத்திரம் உரிமையாளர் பெயரில் இருந்தால்,  அவரிடமே சொத்தின் உரிமை மூலம் இருப்பதாகக் கருத வேண்டும்....

இந்திய தண்டனை சட்டம் பிரிவுகள்

Image
 இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 182 ஆனது, (#IPC) ஒருவருக்கு கேடு விளைவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு பொது ஊழியரிடம் தவறாக கொடுக்கப்படும் தகவல் பொய் #தகவல் ஆகும். இதற்கு 6 மாத காலம் சிறை தண்டனை மற்றும் #அபராதம் விதிக்கப்படும். அதேபோல பிரிவு 193 ஆனது, நீதிமன்றத்தில் நடக்கும் விசாரணையின் போது #பொய் #சாட்சி-யம் அளித்தல் குற்றமாகும். இதற்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும். செல்வம் என்பவரின் குடும்பத்திற்கும், நாகராஜ் என்பவருக்கும் இடையே விவசாய நிலத்தில் தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக பிரச்சினை இருந்து வந்தது. இதன்காரணமாக செல்வம் வகையறாக்கள் கண்ணன் என்பவரை தூண்டி விட்டு நாகராஜ் மீது ஒரு எப்ஐஆரை (#FIR) போட்டனர். அதேபோல் 2016 ஆம் ஆண்டில் செல்வத்தை நாகராஜ் அரிவாளால் வெட்ட முயன்றதாக ஒரு பொய் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் அன்றைய தினம் நாகராஜ் ஒரு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்தார். அதனை அறிந்து கொண்ட காவல்துறையினர் அந்த வழக்கை Mistake of Fact என்று முடித்து விட்டனர். பின்னர் நாகராஜ், பழனியப்பன் என்பவரை தாக்கியதாக ஒரு புகாரை பொய்யாக காவல் நிலையத்த...

இணையதள மோசடிகள்

Image
 ஐந்து வகை இணையதள மோசடிகள்ஒரு பார்வை 👇👇 ✍️✍️நாளுக்கு நாள் இணையத்தில் நடக்கும் மோசடிகள் அதிகரித்து வருகின்றன. எச்சரிக்கையாக இருந்தால் மட்டுமே இந்த வகை மோசடிகளிலிருந்து தப்பிக்க முடியும். இணையத்தளத்தில் என்னென்ன மோசடிகள் நடக்கின்றன. அவற்றை எப்படி வகைபடுத்தி இருக்கின்றனர் என்பதை அறிந்துகொள்வோம். இணையதள மோசடிகள் ****************************** அ. Phising – பிஷ்ஷிங் ********* இது மின்னஞ்சல் மூலம் பயனரை தன்னுடைய இணையதளத்திற்கு வரவழைத்து , அவருடைய வங்கி கணக்கு, பாஸ்வேர்ட் போன்றவற்றை புதுப்பிக்க கேட்டுக்கொள்ளும் மோசடி ஆகும். இந்த வகை மோசடியில் முதலில் ஒரு நம்பகமான மின்னஞ்சல் இமெயில் முகவரிக்கு வந்திருக்கும். ✍️✍️அதைத் திறந்து அதில் உள்ள இணைப்பை கிளிக் செய்தால், அவர்களுடைய இணையதளத்திற்குச் செல்லும். அங்கு, உங்கள் வங்கி கணக்கு விபரங்களை புதுப்பிக்க கேட்கும். நீங்களும் விபரமில்லாமல், வங்கி கணக்கை விபரங்களை கொடுத்ததால் அவ்வளவுதான். ஆ.  Vishing – விஷ்ஷிங்  ***** அலைபேசி அல்லது தொலைபேசி மூலம் நடக்கும் மோசடி இது. இதில் எதிர்முனையில் பேசுபவர் வங்கியிலிருந்து பேசுவது போல பேசி, உங்களது வங...

சைபர் குற்றங்களைப் பற்றி எவ்வாறு புகார் அளிப்பது?ஒரு அலசல்

Image
 சைபர் குற்றங்களைப் பற்றி எவ்வாறு புகார் அளிப்பது?ஒரு அலசல்  👉👉இன்றைய டிஜிட்டல் உலகில் குற்றங்களும் அதிகம் டிஜிட்டலாக நடைபெறுகின்றன. 👉👉தகவல் திருட்டுக்களாக, பண மோசடிகளாக, சமூக வலைதள அவதூறுகளாக எனக் குற்றங்களும் டிஜிட்டல் வடிவம் பெற்றிருக்கின்றன. 👉👉இந்த சைபர் குற்றங்கள் குறித்து எங்குப் புகார் அளிப்பது என நம்மில் பலருக்குத் தெரிவதில்லை. 👉👉மேலும், இவையெல்லாம் சைபர் குற்றங்கள் என பொதுவாக சில குற்றங்களைப் பற்றி நாம் தெரிந்து வைத்திருப்போம். ஆனால் எவையெல்லாம் சைபர் குற்றங்களுக்குள் அடங்கும் எனத் தெளிவாக நமக்குத் தெரிவதில்லை.   👉👉நம் கையிலுள்ள தொழில்நுட்ப விஷயங்களான கைபேசி, இணையம், கணினி இவற்றைப் பயன்படுத்தி நிகழ்த்தப்படும் அனைத்து குற்றங்களுமே சைபர் குற்றங்களுக்குள் தான் அடங்கும். 👉👉உதாரணத்திற்கு‌ சில குற்றங்களைச் சொல்லலாம். நீங்கள் ஆன்லைனில் ஏதாவது பொருள் வாங்கும்போது உங்களுக்கு அந்த பொருளை அனுப்பாமல் வேறு ஏதாவது பொருளை அனுப்புவது, உங்களுடைய கைபேசி எண்ணைத் தெரிந்துகொண்டு ஃபோன் கால் மூலமாகவோ அல்லது குறுஞ்செய்தி மூலமாகவோ ஏதாவது தொந்தரவு தருவது, இணைய வழி பரிவர்த...

வாகன காப்பீடு (#VEHICLE_INSURANCE) இழப்பீடு CLAIM யாருக்கு ?

Image
 வாகன காப்பீடு (#VEHICLE_INSURANCE)  இழப்பீடு CLAIM யாருக்கு ? வாகனங்களை வாடகைக்கு எடுத்தவர் விபத்து ஏற்படுத்தினாலும் காப்பீடு நிறுவனமே இழப்பீடு வழங்க வேண்டும் - உச்சநீதிமன்றம் உத்தரவு. (#Supreme_Court) வாகனத்தின் உரிமையாளர்கள் வாடகைக்கு விட்டிருந்தாலும் வாடகைக்கு எடுத்தவர் தான் அந்த குறிப்பிட்ட காலத்திற்கு உரிமையாளர்.அவருக்கே காப்பீட்டு உரிமை பொருந்தும். வாடகைக்கு எடுத்தவர் விபத்து ஏற்படுத்தினால் இழப்பீடு தர முடியாது என காப்பீட்டு நிறுவனம் மறுக்க முடியாது. #காப்பீடு வழங்குவதில் இருந்து தப்பித்து செல்லவும் முடியாது.#இழப்பீடு (#compensation ) வழங்கியே ஆக வேண்டும் என இந்திய உச்சநீதிமன்றம் வழக்கு ஒன்றில் உத்தரவு பிறப்பித்துள்ளது

மதச்சார்பற்ற, ஜனநாயக, இந்தியக் குடியரசை உருவாக்கியதிலும் பெரும் பங்காற்றிய பி.சுந்தரய்யா

Image
 ஆந்திராவில் பிறந்து இந்திய சுதந்திரப் போராட்டத்திலும், இந்தியாவில் பொதுவுடமைக் கட்சியை உருவாக்கியதிலும், கட்டியெழுப்பியதிலும், சுதந்திரத்திற்குப் பின் மதச்சார்பற்ற, ஜனநாயக, இந்தியக் குடியரசை உருவாக்கியதிலும் பெரும் பங்காற்றிய பி.சுந்தரய்யாவின் நினைவு நாள் - (மே 19, 1985) . சுந்தரய்யா ,  1913ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேசத்தின் நெல்லூர் மாவட்டம் அழகின்படுவில் பிறந்தார் .சிறுவனாக இருந்த போது அவருடைய முதல் பொது நடவடிக்கை என்பது தன்னுடைய கிராமத்தில் தலித்துகளுக்கு எதிராக நடைமுறைப் படுத்தப்பட்டு வந்த சாதிய ஒடுக்குமுறை களுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்து உண்ணாவிரதம் மேற்கொண்டதாகும். பிற்காலத்தில் விவசாயிகளின் உரிமைகளுக்காக நிஜாம் ஆட்சிக்கெதிராகிய தெலுங்கானா ஆயுத போராட்டங்களை நடத்தியவர் சுந்த ரய்யா அவர்கள் மக்களுக்காகவும், சமூகத்திற் காகவும், கம்யூனிஸ்ட் இயக்கத்திற்காகவும் தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தவர் கம்யூனிஸ்ட் தலைவராகத் திகழ்ந்தது மட்டுமல்ல; அரசியல் வேறுபாடின்றி அனைத்துத் தரப்பு மக்களாலும் மதிக்கப்பட்ட தலைவராகவும் அவர் விளங்கினார். அவர்ஒரு சிறந்த நாடாளுமன்றவாதியும் கூட. நாடா...

Evidence Act - sec 3

Image
 Evidence Act - sec 3 #கண்காணிப்பு கேமராவில் இருந்து பெறப்படும் படங்கள் மற்றும் Hard Disc, Compact Disc, Pen Drive ஆகியவற்றிலிருந்து பெறப்படும் தகவல்கள் சாட்சிய சட்டம் பிரிவு 3ன் கீழ் ஆவணமாக கருதப்படும். விசாரணை நீதிமன்றத்திற்கு கண்காணிப்பு கேமராவில் உள்ள படங்களை பார்த்து எதிரியின் அடையாளத்தை உறுதி செய்து கொள்ளும் அதிகாரம் உண்டு. அவ்வாறு பெறப்படும் தகவல்களை முதல்நிலை சாட்சியமாகவோ அல்லது இரண்டாம் நிலை சாட்சியமாகவோ இருந்தால் கூட அதை பார்க்கும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு உண்டு. நீதித்துறை நடுவர் மின்னணு பதிவு ஆவணத்தை சாட்சியாக பெறும் போது அதை பார்த்து விட்டு அந்த பதிவை CD யிலோ அல்லது Pen Drive விலோ பதிவேற்றம் செய்து பாதுகாப்பாக வைக்க வேண்டும். ஒரு வழக்கு அமர்வு நீதிமன்றத்தால் விசாரிக்க வேண்டிய வழக்காக இருக்கும் போது நீதித்துறை நடுவர் பதிவேற்றம் செய்த ஒளிப்பதிவுகளை அமர்வு நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். விசாரணை நீதிமன்றம் கண்காணிப்பு கேமராவில் இருந்து ஒளிப்பதிவு செய்யப்பட்ட படங்கள் குறித்து எதிரியிடம் Crpc sec 313ன் கீழ் கேள்வி எழுப்ப வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு ...

பாகப்பிரிவினை வழக்குகளுக்கு காலக்கெடு உண்டா ? - உச்சநீதிமன்ற தீர்ப்பு

Image
 பாகப்பிரிவினை வழக்குகளுக்கு காலக்கெடு உண்டா ? - உச்சநீதிமன்ற தீர்ப்பு ! . 1960-ல் ஒரு தாயும் மகனும், மற்ற மகன்கள் மீது குடும்பச் சொத்துக்களைப் பொறுத்து பாக வழக்கு போட்டார்கள் .நிலங்கள் அல்லாத சில அசையாச் சொத்துக்களையும் அசையும் சொத்துகளையும் பாகம் செய்ய வேண்டும் என்பது வழக்கு ! கீழ்கோர்ட்டில், வழக்கு நடந்து, 1964-ல் பாகப் பிரிவினை வழக்கில் முதல் தீர்ப்பு வருகிறது ! மூன்றில் ஒருபாகம் வாதிகளுக்கு பாக உரிமை உள்ளது என முதல் நிலைத் தீர்ப்பானை வருகிறது. இதை Preliminary Decree என்பர் முதல் நிலைத் தீர்ப்பில், வழக்குப் போட்டவர்கள் பாகம் பெற உரிமை உள்ளவர்களா என்றும், அப்படியென்றால், அவர்களுக்கு எவ்வளவு பாகம் உரிமை உள்ளது என்றும் தீர்ப்பு வரும் ! அதன் அடுத்த கட்டமாக பைனல் டிகிரி (Final Decree) க்கு மனுச் செய்ய வேண்டும் . அதில், அவ்வாறு பாகம் கேட்டவரின் பாகத்தை, அளந்து பிரித்து தனியாக கோர்ட் தனி அனுபவத்துக்குக் கொடுக்கும்; இதுவே பொதுவான நடைமுறை. இந்த வழக்கில், 1964-ல் முதல்நிலை தீர்ப்பானையை கோர்ட் கொடுத்தது. ஆனால் வாதிகள் 1987-ல் (சுமார் 23 வருடங்கள் கழித்து) பைனல் டிகிரி வழங்கும்படி கோர்ட்டை...

ஒரே #சொத்து, இரண்டு #பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?

Image
 ஒரே #சொத்து, இரண்டு #பத்திரம் - என்ன செய்ய வேண்டும்? **************** ஒரே சொத்தை இருவருக்கு விற்பது சட்டப்படி குற்றம் ஆகும். அவ்வாறு ஒருவர் விற்பனை செய்திருந்தால் இரண்டாவதாக செய்த விற்பனை செல்லாது. இருந்தாலும், அந்த சொத்தை முதலாவதாக வாங்கியவர் சட்டப்படி சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அந்த இரண்டாவது பத்திரத்தை முறைப்படி  #ரத்து செய்ய என்ன செய்ய வேண்டும்?  இரண்டாவதாக பதிவு செய்யப்பட்டுள்ள பத்திரத்தின் பதிவுகளை ரத்து செய்யக் கோரி, பதிவுச்சட்டம், 1908 - பிரிவு 82ன் கீழ் பதிவுத்துறைத் தலைவர் அவர்களுக்கு முதலில்  உரிய ஆவண நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். பதிவுத்துறைத் தலைவர் அவர்களின் உத்தரவின்படி தங்களின் விண்ணப்பமானது  தங்களது மாவட்டப் பதிவாளர்  (நிர்வாகம்) அவர்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்க அனுப்பப்படும். மாவட்டப் பதிவாளர் அவர்கள், சமபந்தப்பட்ட இரண்டு தரப்பினரையும் அழைத்து விசாரணை மேற்கொண்டு ஆவணங்களை ஆய்வு செய்வார்.  உங்களது புகாரில் உண்மை இருப்பது மாவட்டப் பதிவாளர் (நிர்வாகம்) அவர்களுக்கு தெரிய வந்தால், இரண்டாவதாக பதிவு செய்யப்பட்ட பத்திரஙளை ரத்து செ...

*பாகப்பிரிவினை வழக்குகளுக்கு காலக்கெடு உண்டா ? - உச்சநீதிமன்ற தீர்ப்பு.

Image
 *பாகப்பிரிவினை வழக்குகளுக்கு காலக்கெடு உண்டா ? - உச்சநீதிமன்ற தீர்ப்பு. (#Partition_Suit)* 1960-ல் ஒரு தாயும் மகனும், மற்ற மகன்கள் மீது குடும்பச் சொத்துக்களைப் பொறுத்து பாக வழக்கு போட்டார்கள் .நிலங்கள் அல்லாத சில அசையாச் சொத்துக்களையும் அசையும் சொத்துகளையும் பாகம் செய்ய வேண்டும் என்பது வழக்கு. கீழ்கோர்ட்டில், வழக்கு நடந்து, 1964-ல் பாகப் பிரிவினை வழக்கில் முதல் தீர்ப்பு வருகிறது ! மூன்றில் ஒருபாகம் வாதிகளுக்கு பாக உரிமை உள்ளது என முதல் நிலைத் தீர்ப்பானை வருகிறது. இதை Preliminary #Decree என்பர் முதல் நிலைத் தீர்ப்பில், வழக்குப் போட்டவர்கள் பாகம் பெற உரிமை உள்ளவர்களா என்றும், அப்படியென்றால், அவர்களுக்கு எவ்வளவு பாகம் உரிமை உள்ளது என்றும் தீர்ப்பு வரும் ! அதன் அடுத்த கட்டமாக பைனல் டிகிரி (Final Decree) க்கு மனுச் செய்ய வேண்டும் . அதில், அவ்வாறு பாகம் கேட்டவரின் பாகத்தை, அளந்து பிரித்து தனியாக கோர்ட் தனி அனுபவத்துக்குக் கொடுக்கும்; இதுவே பொதுவான நடைமுறை. இந்த வழக்கில், 1964-ல் முதல்நிலை தீர்ப்பானையை கோர்ட் கொடுத்தது. ஆனால் வாதிகள் 1987-ல் (சுமார் 23 வருடங்கள் கழித்து) பைனல் டிகிரி வழங...