Tuesday, March 31, 2020

பெருமாள் வழிபட்ட சிவாலயங்கள்

             பெருமாள் வழிபட்ட சிவாலயங்கள் பல்வேறு புராண சம்பவங்கள் ஹரியும், சிவனும் ஒன்றே என்று நமக்கு உணர்த்துகின்றன.


  திருமாலின் இருதய மத்தியில் என்றும் நீங்காமல் சிவன் இருக்கிறார் என்று தைத்திரிய ஆரண்யம் என்ற நூல் கூறுகிறது. சிவபெருமான் கைலாயத்தில் எப்போதும் ராமநாமாவை சொல்லிக் கொண்டே இருக்கிறார் என்று விஷ்ணு சகஸ்ரநாமம் கூறுகிறது.


              திருமால் பத்து அவதாரங்கள் எடுத்தார். இந்த பத்து அவதாரங்களில் பெருமாள் சிவபிரானை பூஜித்ததற்கு பல சான்றுகள் உள்ளன. அவற்றின் தொகுப்பே இது.


01. மச்சாவதாரம் சோமுகாசுரன் வேதங்களை திருடிச்சென்று, கடலுக்கடியில் ஒளிந்துகொண்டபோது, திருமால் பெரிய சுறா மீனாக உருவம் தாங்கி, கடலுக்கடியில் சென்று, அவனை சம்ஹாரம் செய்து, வேதங்களை மீட்டு பிரம்மனிடம் தந்தார். பிறகு மீன் உருவத்துடன் கடலுக்கடியில் சென்று மகிழ்ச்சியில் கடலை கலக்கி விளையாடினார். இந்த செயலால் உலகம் துன்பமடைந்தது. அப்போது சிவபெருமான் பெரிய கொக்கு வடிவமெடுத்து திருமாலுக்கு தன் தவறை உணர்த்தினார். திருமால் மத்ஸ்ய (மீன்) உருவத்துடன் பல காலம் சிவபூஜை செய்ததாக வரலாறு கூறுகிறது. காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலின் முன் உள்ள 16 கால் மண்டபத்தில் உள்ள தூணில் பெரிய கொக்கு வடிவில் சிவபெருமானும், அவருடைய அலகில் சிக்கிக்கொண்டு மீன் உருவத்தில் வழிபடும் பெருமாளையும் காண்கிறோம். திருமால் மீனாக அவதாரம் எடுத்து சிவனை வழிபட்டதால் இக்கோயில் இறைவன் மச்சேஸ்வரர் எனப்படுகிறார். கும்பகோணம் அருகிலுள்ள தேவராயன்பேட்டை என்ற ஸ்தலம் முன்னாளில் சேலூர் (சேல் - மீன்) என்று அழைக்கப்பட்டது. அங்குள்ள சிவபெருமானையும் மீன் வடிவ திருமால் வணங்கியதால், இறைவன் மச்சேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.


02. கூர்மாவதாரம் திருப்பாற்கடலை தேவர்களும், அசுரர் களும் கடைந்தபோது, மத்தாக இருந்த மந்திரமலை கடலுக்கடியில் மூழ்காமல் இருக்க ஆமை (கூர்மம்) அவதாரம் எடுத்து தன் முதுகில் தாங்கினார் திருமால். ஆமை வடிவம் கொண்ட பெருமாள், மலையை தாங்கும் வல்லமையை தர சிவபெருமானை வேண்டினார். இதற்காக, காஞ்சிபுரத்திலுள்ள திருக்கச்சூர் சிவன் கோயிலில் ஆமைமடு என்ற தீர்த்தம் உண்டாக்கி பூஜித்ததாக தல வரலாறு கூறுகிறது. இங்குள்ள விநாயகர் சன்னதி விதானத்தில் திருமால் ஆமை வடிவில் சிவபூஜை செய்வது சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. முருங்கை மரத்தின்கீழ் ஜோதி வடிவாக விளங்கும் சிவலிங்கத்தை பெருமாள் ஆமை வடிவத்தில் வழிபட்டதால் இந்த சிவபெருமானுக்கு கச்சபேஸ்வரர் (கச்சபம் - ஆமை) என்ற பெயர் ஏற்பட்டது.


03.வராக அவதாரம் இரண்யாட்சன் என்ற அசுரன் பாதாள லோகத்தில் இருந்தபடி தேவர்களைத் துன்புறுத்த பெருமாள் வராக அவதாரமெடுத்து பூமியை தோண்டி அங்கு சென்று அவனை அழித்தார். கோபம் நீங்காத அவரை சிவபெருமான் சாந்தப்படுத்தினார். சிவ தரிசனத்தால் சினம் தணிந்த பெருமாளுக்கு சிவபெருமான் அருள் புரிந்த தலமே திருப்பன்றிக்கோடு (வராகம் - பன்றி) ஆகும். இது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளது.


04.நரசிம்மஅவதாரம் தன் பக்தனான பிரகலாதனை இரண்யனிடமிருந்து காப்பாற்ற நரசிம்ம அவதாரம் எடுத்து பெருமாள் வெளிப்பட்டார். இரண்யனைக் கொன்றார். அவரது உக்கிரத்தைத் தணிக்க, அதனினும் மேற்பட்ட உக்கிரத்துடன் சிவபெருமான் சரபேஸ்வரராக வடிவெடுத்தார். காஞ்சிபுரத்தில் தாமல் என்ற பகுதியில், நரசிம்மர் வழிபட்ட நரசிம்மேஸ்வர சிவாலயம் உள்ளது. புதுச்சேரி அருகிலுள்ள வில்லியனூர் தலத்தில் நரசிம்மர் வழிபட்ட காமீஸ்வரர் என பெயர் கொண்ட சிவபெருமானை தரிசிக்கலாம்.


05.வாமன அவதாரம் மலை நாட்டை ஆண்ட மகாபலியின் ஆணவத்தை அடக்க அவனை குள்ள அந்தணன் (வாமனன்) வடிவெடுத்து திருமால் முக்தி கொடுத்தார். அவனை காலால் அழுத்தி பாதாள லோகம் அனுப்பிய பாவம் தீர பெருமாள் வழிபட்ட சிவத்தலம் கடலூர் அருகிலுள்ள திருமாணிக்குழியாகும்.


06.பரசுராம அவதாரம் ஜமதக்னி என்ற முனிவரின் மகனாய் பிறந்து, தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்ற தத்துவத்தை உணர்த்த, தன் தாயின் தலையையே கொய்து, அவளுக்கு மீண்டும் உயிர் வரம் கேட்ட அவதாரம் பரசுராம அவதாரம். இந்த அவதாரத்தில் மன்னர்களின் செருக்கையும் அடக்கினார் திருமால். திருமால் பரசுராமராய் பூஜித்த சிவத்தலங்கள் பெரம்பலூர் மாவட்டம் அரியலூர் அருகிலுள்ள பழுவூர் மற்றும் மயிலாடுதுறை அருகே உள்ள திருநின்றியூர் ஆகும்.


07.ராமாவதாரம் ஒருவனுக்கு ஒருத்தி என்ற தத்துவத்தை உணர்த்தவும், பெற்றவர் சொல் கேட்டு நடக்கவும், அநியாயத்தை எப்பாடுபட்டேனும் வேரறுக்கவும், சிவ பக்தனாயினும் காமத்திற்கு அடிமைப்பட்ட அரக்கனை அழிக்கவும் திருமால் எடுத்த அவதாரம் ராமாவதாரம். ராம நாமத்தை சிவனே உச்சரிக்கிறார் என்பதும் வரலாறு. அவரே அனுமானாக உருவெடுத்து, ராவணனை அழிக்க திருமாலுக்கு உதவினார் என்பதும் செவிவழிச் செய்தி. திருமால், ராமாவதார காலத்தில் சிவனுக்காக சேதுக்கரையில் ஒரு தலமே உருவாக காரணமாக இருந்தார். சிவலிங்கம் சமைத்து பூஜித்தார். அதுவே ராமேஸ்வரம் ராமநாதர் கோயிலாகும். தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்திலுள்ள சிவனை ராமர் வழிபட்டதாக கூறப்படுவதால் அவர் ராமலிங்கேஸ்வரர் எனப்படுகிறார்.


08. பலராம அவதாரம் திருமால் கிருஷ்ணாவதாரம் எடுக்கும் முன்பு, அவரது சயனமான ஆதிசேஷன் பலராமனாக உருவெடுத்ததாகவும், திருமால் அதனைக் கவுரவிக்க தன் அண்ணனாக உருவெடுக்கச் செய்தார் என்பதும் பலராம அவதாரத்தின் வரலாறு. காஞ்சிபுரத்தில் பலராமர் வழிபட்ட சிவன் கோயில் பலபத்ர ராமேஸ்வரம் என பெயர் கொண்டதாகும். திருமறைக்காடு எனப்படும் வேதாரண்யம் (நாகப்பட்டினம் மாவட்டம்) அருகிலுள்ள கோடியக்கரை குழகர்கோயில் பலராமர் வழிபட்ட தலமாகும்.


09.கிருஷ்ண அவதாரம் கண்ணன் தனது சிவயோக மகிமையால் சிவபெருமானாகவே இருந்து, குரு÷க்ஷத்ர யுத்தத்திற்கு காரண பூதராய் அழித்தல் தொழிலை செய்ததாக பாகவதம் கூறுகிறது. மேலும் கண்ணன் தன் வினைகள் தீர, திருவீழிமலை (திருவாரூர் மாவட்டம்) மற்றும் திருவிடை மருதூர் (தஞ்சாவூர் மாவட்டம்) சிவபெருமானை பூஜித்த தலங்களாக கூறப்படுகிறது


 


 


மஞ்சுளாயுகேஷ்


 


Monday, March 30, 2020

கூட்டுறவுகள் மூலம் மக்களுக்கு அவர்கள் இருப்பிடத்திற்கு பொதுவிநியோகபொருட்கள் வழங்க ஆலோசனை

கொரானா வைரஸ்வின் சமுதாய விலகல் காலத்தில்  பொது விநியோகம் முறையில் வழங்ப்படும் பொருட்களை மக்களுக்கு வழங்க கீழ்க்கண்ட நடைமுறைகளை பின்பற்றினால் நிச்சயமாக இதிலிருந்து மீளலாம் என . ஓய்வுபெற்ற கூட்டுறவு சங்க துணைப்பதிவாளர்கள் மற்றும் கூட்டுறவு சார் பதிவாளர்கள் அவர்கள் நமக்கு அரசுக்கு தெரிவிக்கும் பொருட்டு  இதனை செயல்படுத்த கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்றலாம்.என தெரிவித்துள்ளனர்


    தற்போதுள்ள அனைத்து  தரப்பு மக்களுக்கும் (சுமார் 80% மக்கள்)ஆதார் கார்டுடன் இணைக்கபட்ட காஸ் பதிவு உள்ளது அதில் அவர்களுடைய வங்கிக்கணக்கு விவரங்கள் உள்ளன . சுமார்i 2 கோடிகார்டுதாரர்க ளில் அரிசி கார்டு,கெரசின்கார்டு சர்க்கரை கார்டு மற்றும் இதர பிரிவினருக்கான வெள்ளை கார்டு உள்ளன.சுமார் 95%பேர் ஆதார் கார்டு வைத்துள்னர். சென்னையில் சிவில் சப்ளை கார்ப்பரேஷன் மற்றும் கூட்டுறவு கடைகள் மூலம் ரேஷன் பொருட்கள் வினியோகிக்கப்படுகின்றன.தமிழ்நாடு முழுவதும்  கூட்டுறவு கடைகள் மூலம் ஏழை மக்களுக்கு அரிசி கோதுமை சர்க்கரை பருப்பு பாமாயில் கெரசின் ஆகிய பொருட்கள் வினியோகிக்கப்படுகின்றன. டியூசிஎஸ் மற்றும் சிந்தாமணி கூட்டுறவு மொத்த விற்பனை பண்டககசாலைக ளிலும் அனைத்து மளிகை மற்றும் காய்கறி பிரிவுகளும் உள்ளன .இந்நிலையில் கொரானா வைரஸ் ஐ தடுக்கும்பொருட்டு ஊரடங்கு சட்டம் அமல் படுத்தப்பட்டுள்ளது


       .தற்போது தமிழ்நாட்டில் நிலவரம் 2ம் நிலையில் உள்ளது. பல முன்னேறிய நாடுகளான அமெரிக்கா பிரிட்டன் பிரான்ஸ் இத்தாலி சைனா ஜெர்மனி போன்ற நாடுகளே இந் நோய் கண்டு அவதியுறும் நிலையில் 130கோடிமக்கள் தொகை கொண்டஇந்தியாவில் 3-ம் நிலை அடைந்தால் நிலைமை மோசமாகும் . இந்நிலையில் முழு ஊரடங்கு சட்டம் கடுமையாக கடைபிடிக்கப்படவேண்டும்.இதற்கு ஒரே வழி அனைத்து கடைகளும் 21நாட்களுக்கு மூடப்படவேண்டும்(except medical shops,gas supply,hospitals) அரசே கோயம்பேடு மார்க்கெட்டில் மொத்தமாக கொள் முதல் செய்தும் ரேஷன் கார்டுகள் மூலம் அனைத்து ஏழை மக்களுக்கும் முதலில் 1 வாரத்திற்கான அரிசி கோதுமை எண்ணை பருப்பு மற்றும் பால் பவுடர் காய்கறி ஆகியவற்றை இலவசமாக வார்டு கவுன்சிலர் மூலம்வேன்மூலமாக வீட்டுக்கு வீடு வழங்க ஏற்பாடு செய்யலாம்.இதை கண்காணிக்க எம்எல்ஏ மற்றும் அரசு அதிகாரிகளை நியமிக்கலாம்.இதுபோன்று அரசு இதர பிரிவினருக்கும் அவர்களுக்கு அவர்களது Debit/credit card மூலமாக வழங்கலாம். ரொக்கத்தொகை அளிக்க வேண்டிய அவசியமில்லை. இதே போன்று தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு கடைகள் மூலமாக வேன் மூலம் அவர்கள் வீட்டிலேயே டெலிவரி செய்யலாம். அனைவரையும் வீட்டிலிருக்கும்படி செய்யலாம்இதற்கு தேவையான தற்காலிக பணியாளர்களையும் நியமித்துக்கொள்ளலாம். சென்னையில் தங்கியுள்ளஇதரமாநில பணியாளர்களுக்கு அரசு தற்போது அளித்துவரும் உணவு(அம்மா உணவகம் மூலமாக) இருப்பிடம் போன்றவற்றை தொடர்ந்து அளிக்கலாம். இம்முறை பயன்படுத்தப்பட்டால் 90 சதவீதத்திற்கு மேல் ஊரடங்கை அமுல் படுத்தலாம்


  பொதுவிநியோகத்திற்கு அரசு மேற்கண்ட நடவடிக்கைகளை எடுக்க பரிசிலிக்கலாம்


விழிப்புணர்வு இல்லாத மக்கள்

சென்னை பல்லாவரம் மார்க்கெட்டில் மக்கள் இன்னும் விழிப்புணர்வு இல்லாததால் கூட்டம் கூட்டமாக   வருகிறார்கள்


144 தடையுத்தரவை சிறிதும் மதிக்காத நம் மக்கள்


நமது செய்தியாளரின் புகைப்படங்கள் இது இன்று


சமூ க பொறுப்புணர்வுடன் நண்பர் திரு அல்லாபக்ஷ் அவர்கள் விழிப்புணர்வு பதாககைள அவரே சுமந்து கொண்டு உலா வந்தாலும்


மக்கள் அதை கவனித்ததாக தெரியவில்லை


நண்பர் திரு அல்லாபக்ஷ் அவர்களுக்கு பாராட்டுதல்கள்


சமூக விலக்கலை கடைபிடியுங்கள்  மக்களே


 


 


திருக்குறள் சுவையான தகவல்கள்

திருக்குறள் சுவையான தகவல்கள் • திருக்குறளின் முதல் பெயர்- முப்பால்

 • திருக்குறளில் உள்ள அதிகாரங்கள்- 133

 • திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-380

 • திருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள்-700

 • திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-250

 • திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்கள்-1330

 • திருக்குறள் அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிகிறது.

 • ஒவ்வொரு குறளும் இரண்டு அடிகளால், ஏழு சீர் களை கொண்டது.

 • திருக்குறளில் உள்ள சொற்கள்-14,000

 • திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள்- 42,194

 • திருக்குறளில் தமிழ் எழுத்துக்கள் 247-இல், 37 எழுத்துக்கள் மட்டும் இடம் பெறவில்லை

 • திருக்குறளில் ‘தமிழ்‘ என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை.

 • திருக்குறளில் இடம்பெறும் இருமலர்கள்-அனிச்சம், குவளை

 • திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம்- நெருஞ்சிப்பழம்

 • திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை- குன்றிமணி

 • திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து-ஒள

 • திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம்- குறிப்பறிதல்

 • திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள்- பனை, மூங்கில்

 • திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட (1705) ஒரெழுத்து-னி

 • திருக்குறளில் ஒரு சொல் அதிக அளவில், அதே குறளில் வருவது "பற்று" - ஆறு முறை.

 • திருக்குறளில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துக்கள்-ளீ,ங

 • திருக்குறளில் இடம்பெறாத இரு சொற்கள்- தமிழ், கடவுள் ( அகர முதல என தொடங்கும் முதல் குறள் கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் உள்ளது, இதில் ஆதி பகவன் - என்பது கடவுளை குறிக்கிறது)

 • திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர்- தஞ்சை ஞானப்பிரகாசர்

 • திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர்-மணக்குடவர்

 • திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்- ஜி.யு,போப்

 • திருக்குறளை உரையாசிரியர்களுள் 10-வது உரையாசிரியர்-பரிமேலழகர்

 • திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண்- ஒன்பது.

 • திருக்குறளில் கோடி என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது.

 • எழுபது கோடி என்ற சொல் ஒரே ஒரு குறளில் இடம்பெற்றுள்ளது.

 • ஏழு என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது.

 • திருக்குறள் இதுவரை 107 மொழிகளில் வெளிவந்துள்ளது.

 • திருக்குறளை ஆங்கிலத்தில் 40 பேர் மொழிபெயர்த்துள்ளனர்

 • திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு-1812


திருக்குறள் இயற்ற பெற்றதன் காரணம்:


இன்றைய நிலையை விட, சங்க காலத்தில் சாதி, மத அரசியல் பெரியதாக இருந்ததற்கு பல்வேறு சான்றுகள் உள்ளன. மக்கள் யாரும் தெளிவு பெற்று விடக்கூடாது என்னும் நோக்கில் ஆரியர்கள் ரிக், யசூர், சாம, அதர்வணம் போன்ற நூல்களை மக்களிடம் சென்று அடையாமல் மறைத்து உள்ளனர்.


 


 


இந்திய மொழிகளில் 1. இந்தி

 2. வங்காளம்

 3. குஜராத்தி

 4. கன்னடம்

 5. மலையாளம்

 6. மராத்தி

 7. ஒரியா

 8. பஞ்சாபி

 9. இராஜஸ்தானி


10.சமசுகிருதம்


11.சௌராட்டிரம்


12.தெலுங்கு


13.உருது 1.            நரிக்குறவர் பேசும் வக்போலி மொழி


ஆசிய மொழிகளில் 1. அரபு மொழி

 2. பர்மிய மொழி

 3. சீன மொழி

 4. சப்பானிய மொழி

 5. மலாய் மொழி

 6. சிங்கள மொழி

 7. பிஜி மொழி


ஐரோப்பிய மொழிகளில்[தொகு] 1. ஆங்கிலம்

 2. பிரெஞ்சு மொழி

 3. இடாய்ச்சு மொழி

 4. இலத்தீன் மொழி

 5. போலந்து மொழி

 6. ஆர்மீனியம்

 7. செக்கோஸ்லோவாக்கிய மொழி

 8. பின்னிய மொழி

 9. உருசிய மொழி


10.சுவீடிய மொழி


11.இத்தாலிய மொழி


  1. மொழிபெயர்ப்புகள்செ ஏ துரைபாண்டியன்


உலக இட்லி தினம்

உலக இட்லி தினம்


இன்று 30.3.2020 உலக இட்லி தினம்


     இட்லியைப் பற்றி தெரியாத  தமிழர்களே இருக்க முடியாது.    இந்த இட்லி பற்றி  கி.பி.1130-ம் ஆண்டில், மேலை சாளுக்கிய மன்னன், மூன்றாம் சோமேஸ்வரன், `மானசொல்லாசா” என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.  


உலக சுகாதார அமைப்பு, உயர்ந்த ஊட்டச்சத்து கொண்ட உணவுப் பண்டங்களின் பட்டியலில் இட்லிக்கு, முக்கிய இடம் அளித்ததன் அடிப்படையில் கடந்த 2015ம்  ஆண்டு  முதல்  உலக இட்லி  தினம்  கொண்டாடப்படுகிறது.


இட்லி (இட்டளி)) என்பது அரிசி மற்றும் உளுத்தம்பருப்பு கலந்து  செய்யப்படும் ஒரு உணவு. இது ஆவியில் வேகவைத்து செய்யப்படுகிறது. தென் இந்தியாவின் பல பகுதிகளில் மிகவும் பிரபலமான உணவு. இது தட்டையான உருண்டை வடிவம் கொண்டது. வெண்மையான நிறத்தில் இருக்கும். அரிசி, உளுத்தம் பருப்பு போன்ற செய்பொருள் கொண்டு செய்யப்படுவது.   இது இட்டவி (இட்டு அவி) என்னும் தமிழ்ச்சொல்லிருந்து மருவி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.


இட்லி சுமார் 700 ஆண்டுகளாக இந்தியாவில் அறியப்பட்டு வந்த ஒரு உணவு பதார்த்தம் ஆகும். இட்லியின் பண்டையகால பெயர் இட்டரிக என்பதாகும். பண்டைய இந்திய இலக்கியங்களில், இட்லி பற்றிய முதல் குறிப்பு, கன்னட மொழியில், சிவகோட்டி ஆச்சாரியர் 'வடராதனே' என்னும் காவியத்தில் குறிப்பிட்டுள்ளார்.


பண்டைய நூல்களில் குறிப்பிட்டுள்ள இட்லியின் செய்முறை வேறு, இப்போது தயாரிக்கும் இட்லியின் செய்முறை வேறு. நவீன முறை இட்லி, 1250ம் ஆண்டு பின் எழுதப்பட்ட நூல்களில்தான் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தோனேஸியாவை ஆண்ட இந்து சமய அரசர்களின் நூல்களில் குறிப்பிட்டுள்ள செய்முறைதான் இப்போது பின்பற்றுவதாக, உணவு நிபுனர் அட்சயா தனது பதிப்பில் குறிப்பிட்டுள்ளார்


 


பொதுவாக இட்லியை தனியாக உண்ணமாட்டார்கள், ஏனெனில் சற்றே வெற்று சுவை கொண்டது. ஆதலால், உணவில் சுவையினைக் கூட்டுவதற்காக சில துணை உணவுகள் சேர்த்துக் கொள்ளப்படுகின்றன. தென் இந்தியாவில் இட்லியுடன் சேர்க்கப்படும்பெரும்பாலானதொட்டுக்கொள்ளும் உணவுகள் சட்னி,  சாம்பார், வடைகறி,  கொத்சு, கார சட்னி, புதினா சட்னி,   மற்றும்  மிளகாய்ப் பொடி / இட்லி பருப்புப்  பொடி, காய்கறி குருமா.  சில நேரங்களில் குழம்பு வகையும் சேர்த்துக் கொள்ளப்படும்.


இட்லி செய்முறை • ஒரு பங்கு உளுத்தம் பருப்புக்கு நான்கு பங்கு அரிசி அல்லது அரிசி அளவில் நான்கில் ஒரு பங்கு உளுத்தம்பருப்பு என்பது கணக்கு. உளுத்தம் பருப்பு புதிதாக இருப்பின் சிறிது குறைத்தும் போடலாம்.

 • அரிசியையும் உளுத்தம் பருப்புவையும் தனித்தனியாக ஊற வை. சுமார் 3 மணிநேரம் ஊறவை. முழு உளுத்தம் பருப்பாக இருப்பின் ஒன்று அல்லது ஒன்றரை மணி நேரம் போதுமானது.

 • அரிசியையும், உளுத்தம் பருப்பினையும் தனித்தனியாக அரைத்துக் கொள். கெட்டியாக வெண்ணெய் பதத்தில் இருக்குமாறு அரைத்துக் கொள்.

 • பிறகு, இரண்டு மாவினையும் ஒன்றாகக் கலந்து, தேவையான அளவு உப்பு சேர்த்து சுமார் 3 அல்லது 4 மணிநேரம் புளிக்க வைத்தலே போதுமானது என்றாலும், பலர் முதல் நாள் இரவே மாவினை அரைத்து வைத்து மறுநாள் காலை பயன்படுத்துகின்றனர்.

 • இட்லி செய்ய அதற்கென வடிவமைக்கப்பட்ட சட்டி தேவை. வட்ட வடிவத்தில் குழிகள் கொண்ட தட்டுக்களை கொண்ட, நீர் ஆவி மூலம் வேக வைக்க என தயாரிக்கப்பட்ட சட்டி, அதற்கான மூடி ஆகியவற்றைக் கொண்டது இட்லி சட்டி.

 • புளித்த மாவினை இட்லி தட்டில் ஊற்றி, வேகவைத்து எடுக்கவும். வேகவைக்கும் நேரம் நாம் பயன்படுத்தும் உபகரணத்தினைப் பொறுத்து வேறுபடும்.


பொதுவாக, இட்லியை மல்லிப்பூ போல் செய்ய, அரிசியின் தரம், அளவு, உளுந்தின் அளவு, அறைக்கும்போது ஊற்ற வேண்டிய தண்ணீர் அளவு, கெட்டியாக அறைக்க வேண்டிய விதம், சேர்க்க வேண்டிய உப்பு அளவு, தட்ப வெப்ப நிலைக்கு ஏற்ப புளிக்க வைக்க வேண்டிய நேரம், கை பக்குவம் என பல உண்டு.  அப்போதுதான் அது பூப் போல இருக்கும் என்பதோடு மட்டுமல்ல, புளிக்காமலும் இருக்கும். .   


 


இட்லியில் பல வகை உண்டு. அவற்றில் சில: • மல்லிப்பூ இட்லி

 • டம்பளர் இட்லி

 • செட்டிநாடு இட்லி

 • மங்களூர் இட்லி

 • காஞ்சிபுரம்இட்லி  (டம்ளர்  வடிவம்)

 • ரவா இட்லி

 • சவ்வரிசி இட்லி

 • சேமியா இட்லி

 • ஐந்து பருப்பு இட்லி

 • புதினா இட்லி

 • சத்துமாவு இட்லி

 • கறிவேப்பிலை பொடி இட்லி

 • தக்காளி இட்லி

 • ராகி இட்லி

 • பனீர் இட்லி

 • சுக்கு திப்பிலி இட்லி

 • நிவாரண் இட்லி

 • இந்திய கொடி வண்ண இட்லி

 • லாலி பாப் இட்லி

 • பிளேட் இட்லி

 • ஸ்டப்டு இட்லி

 • சோயா இட்லி

 • நூடுல்ஸ் இட்லி

 • முளை கட்டிய பயறு இட்லி

 • ட்ரை நட்ஸ் இட்லி

 • மிளகு இட்லி

 • சவ்வரிசி இட்லி

 • தேங்காய் பால் இட்ல

 • பூண்டு இட்லி

 • ஓமம் இட்லி

 • குல்கந்து இட்லி

 • பூரணம் இட்லி

 • சாக்லெட் இட்லி

 • மிக்கி மவுஸ் வடிவ இட்லி

 • குங்பூ இட்லி

 • குஷ்பு இட்லி- கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் முக்கியத்துவமுடையது.

 • குட்டி இட்லி  - சின்ன சின்னதாக 14 இட்லிகள், ஒரு தட்டிலோ அல்லது கிண்ணத்திலோ சாம்பார் நிரப்பப்பட்டு பரிமாறப்படும்.

 • சாம்பார் இட்லி- ஒரு தட்டிலோ அல்லது கிண்ணத்திலோ சாம்பார் நிரப்பப்பட்டு பரிமாறப்படும்.

 • பொடி இட்லி- இட்லி மீது மிளகாய்பொடி தூவப்பட்டு பரிமாறப்படும்.


           ஒரு இட்லியில் சராசரியாக 65 கலோரிகள், 2 கிராம் புரோட்டீன், 2 கிராம் நார்ச்சத்து, 8 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது. ஆவியில் வேக வைத்தல் முறையில் சமைக்கப்படுவதால் இதில் கொழுப்புச்சத்து இருக்காது. இட்லியில் மட்டுமே ஊறவைத்த அரிசியின் மூலம் கார்போஹைட்ரேட்டும், பருப்பின் மூலம் புரதச்சத்தும் ஒன்றிணைந்து  கிடைக்கும்.  இதனாலேயே பெரும்பாலான நோயாளிகளுக்கு  எளிதில்   செரிக்கக்கூடிய உணவு கொடுக்க வேண்டுமென்றால், இட்லியைப் பரிந்துரைக்கிறார்கள் மருத்துவர்கள்.   குறிப்பாக,  முதியவர்கள்,  ஓய்வை நாடுபவர்கள்   இரவு நேரங்களில் மட்டுமின்றி, காலை சிற்றுண்டியாக இட்லியை  சாப்பிட வேண்டுமென்று பொதுவாக  மருத்துவர்களால்  பரிந்துரைக்கப்படுகிறது.  இந்த இட்லி  உலக சுகாதார அமைப்பினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட உணவு. 


                கோயமுத்தூரை சேர்ந்தவர் இனியன், பள்ளி படிப்பை 8 ஆம் வகுப்போடு கைவிட்ட இவர், ஆட்டோ டிரைவாக பணி யாற்றியபோது இட்லி செய்வதில் கைதேர்ந்த  பெண்ஒருவரிடம்   இத்தொழிலைக் கற்றுக் கொண்டு இட்லி தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டார். தொடர்ந்து  2013-ல், 128 கிலோ எடை கொண்ட  இட்லியை தயாரித்து  கின்னஸ்  சாதனை படைத்தார். அதில் திருப்தி அடையாத அவர், 2019 ஏப்ரலில் நாடாளுமன்ற தேர்தல் வாக்கெடுப்புக்கு ஓரிரு நாட்களுக்கு முன் 2000 வகை இட்லியை தயாரித்து மேலும் ஒரு கின்னஸ் சாதனை படைத்து மக்களின் கவனத்தை ஈர்ந்தார்.  அதில் முக்கியமானது மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் உருவத்திலும், அன்னை தெரசா உருவத்திலும் இட்லி தயாரித்ததுதான்.


   செ ஏ  துரைபாண்டியன்


 


டாஸ்மார்க் கடையில் மதுபாட்டில்களை திருடிச் சென்ற இருவர் கைது.

திருத்துறைப்பூண்டியில் கரோனாவைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் 144 தடை உத்தரவு உள்ள நிலையில் வயல்பகுதியில் அமைந்துள்ள டாஸ்மார்க் கடையில் பின்புறம் துளையிட்டு ரூ 47 ஆயிரம்  மதிப்புள்ள மதுபாட்டில்களை திருடிச் சென்ற இருவர் கைது.

உலகம் முழுவதும் பேரழிவை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிரதமா் அறிவித்துள்ள ஊரடங்கு நாடு முழுவதும் கடைபிடிக்கபட்டு வருகிறது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  பள்ளி கல்லூரிகள், டாஸ்மாக் மதுபான கடைகள், வணிக நிறுவனங்கள் ஆகியவை ஏப்ரல் 14 வரை திறக்கக் கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது.  கடந்த 5 நாட்களாக அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே  மடப்புரம் மெயின்ரோட்டில் இருந்து 500 மீட்டர் தொலைவில் இருந்த டாஸ்மாக் கடை ( எண் 9667) செயல்பட்டு வந்தது தமிழக அரசின் உத்தரவின்படி வரும் ஏப்ரல் 14-ந்தேதி பூட்டப்பட்டுள்ளது. இந்தநிலையில் கடந்த 28-ந்தேதி மர்ம  நபர்கள் டாஸ்மாக் மதுபான கடையின் பின்புற சுவரை  துளையிட்டு கடையின் உள்ளே நுழைந்து ரூ 47 ஆயிரம் மதிப்பிலான 298 மதுபாட்டில்கள் திருடிச் சென்றனர். இது குறித்து நேற்று முன்தினம் தகவலறிந்த டாஸ்மாக் கடை சூப்பர்வைசர் முருகானந்தம் திருத்துறைப்பூண்டி போலீசில் புகார் செய்தார் புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து டாஸ்மாக் கடை பின்புறம் சுவரை துளையிட்டு மதுபாட்டில்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று மடப்புரம் பிள்ளையார்கோவில் அருகில் சந்தேகத்திற்கிடமாக நின்றுகொண்டிருந்த மடப்புரம் பகுதியை சேர்ந்த அஜித்குமார்(25) , அய்யர் பாலு (எ) முருகேசன்(19) ஆகியோரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் மப்புரம் அருகே டாஸ்மாக் கடையில் கடந்த 28-ந்தேதி கடையின் பின்புறம் துளையிட்டு ரூ 47,000 மதிப்புள்ள  298 மதுபாட்டில்கள் திருடியது தெரியவந்தது அவர்களை கைது செய்து அவர்களிடம் மதுபாட்டில் விற்ற பணம் ரூ 11,500 மற்றும் 20 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து வழக்குபதிவு செய்து கோர்ட்டில் ஆஜர் செய்தனர். இதுதொடர்பாக மேலும் செல்வம் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.


 


 


செய்தியாளர். பாலா திருத்துறைப்பூண்டி


தேசிய மருத்துவர்கள் நாள்

தேசிய மருத்துவர்கள் நாள்


 


சமூகம் மற்றும் தனி மனிதருக்கு  மருத்துவர்கள்  செய்யும் மகத்தான சேவையை அங்கீரிக்க உருவாக்கப்பட்டதே  தேசிய மருத்துவர்கள் தினம்  (National Doctors' Day) ஆகும்.  இந்த நாள் கொண்டாடப்படும் தேதி பல்வேறு காரணங்களைப் பொறுத்து நாட்டுக்கு நாடு மாறுபடுகிறது. சில நாடுகள் இதை விடுமுறை தினமாகவும் அறிவித்துள்ளன. பெரும்பாலும் மருத்துவ நிறுவனங்களே இத்தினத்தைக் கொண்டாடுகின்றன.


            சில நாடுகளில் கொண்டாடப்படும் மருத்துவர்கள் நாள் வருமாறு


          அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளில் மார்ச் 30 அன்று கொண்டாடப்படுகின்றது.


 


வியட்நாமில் பிப்ரவரி 28 அன்றும் குவைத்தில் மார்ச் 3 அன்றும் நேபாளத்தில் மார்ச் 4 அன்றும் கனடாவில் மே 1  அன்றும்  மலேசியாவில் அக்டோபர் 10 அன்றும் பிரேசில் நாட்டில் அக்டோபர் 18  அன்றும் க்யூபாவில் டிசம்பர் 3 அன்றும் தேசிய மருத்துவர்கள் நாள் கொண்டாடப்படுகிறது.   


 


இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும்  சூலை திங்கள் முதல் தேதி  தேசிய மருத்துவர்கள்  நாளாக   1991 ஆம் ஆண்டு முதல்  கொண்டாடப் படுகின்றது.


வரலாற்று புகழ்மிக்க மருத்துவரும்  மேற்கு வங்காளத்தின் இரண்டாவது முதலமைச்சருமான  மருத்துவர் பிதான் சந்திர ராய்  நினைவாக இந்தியாவில்  தேசிய மருத்துவர்கள்  நாள்  கொண்டாடப்படுகிறது.  1882 சூலை திங்கள் முதல் தேதி பிறந்த அவர், சரியாக 80 ஆண்டுகள் கழித்து அதே தேதியில் மறைந்தார்.   இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா  விருதை 4, பிப்ரவரி 1961 ஆம் ஆண்டு பெற்ற இவரின் நினைவாகவும், மருத்துவர்களின் சேவையை பாராட்டவும்  இந்நாளானது  இந்தியாவில்  1991 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்படுகிறது.     


 


இன்றைய தினம் உலகமே நினைவு கூர்கிறதோ, கொண்டாடுகிறதோ, இல்லையோ, அறிந்தோ அறியாமலோ  மருத்துவர்களை உயிர்காக்கும் தெய்வங்களாக அனைத்து அரசுகள், மக்கள் பாவிக்கின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை.  காரணம், கொடுமையான கொரோனா தொற்று.  கிட்டத்தட்ட அனைத்து நாடுகளுமே ஊரடங்கு சட்டத்தைப் பிறப்பித்துக் கடை பிடிக்க வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளாகியுள்ளனர். 


வழக்கமாக, மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கும்போது தங்களால் இயன்ற அளவு முயற்சி செய்தாகிவிட்டது. இனி ஆண்டவனை பிரார்தித்துக் கொள்ளுங்கள் என்றுதான் நோயாளிகளின் உறவினர்களிடம் கூறுவது என்பது வாடிக்கையான ஒன்று.  ஆனால், ஆலயத்திற்குச்  சென்று  தெய்வத்திடம் முறையிட முடியாத நிலையில்  மத வேறுபாடற்று உலகம் முழுவதும்  சிறியது, பெரியது, சக்தி வாய்ந்தது என்ற நிலைமை இல்லாமல் அனைத்து  மத ஆலயங்களும் மூடப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது,


ஊர் கூடி தேர் இழுப்பார்கள்.  இப்பொது சந்து, பொந்து, கிராமம், சிற்றூர், பேரூர், நகரம், தலைநகரம் என்றில்லாமல் கரொனா என்ற கொடி தொற்று அரக்கனை எதிர்க்க, தனிமைப்படுத்துவோம், ஒற்றுமையை காட்டுவோம் என்று உலகிலுள்ள அனைத்து நாட்டுத் தலைவர்களும் குரல் கொடுக்கும் அளவு ஆட்டிப்படைக்கிறது மக்களை.  அத்தொற்று உயர்ந்தவன், தாழ்ந்தவன்  பணக்காரன், ஏழை, படித்தவன், படிக்காதவன்,  ஆளுங்கட்சியைச் சேர்ந்தவன், எதிர்க்கட்சியைச் சேர்ந்தவன், மருத்துவர், செவிலியர், தூய்மைத் தொழிலாளி, உயர் அதிகாரி, கடைநிலை ஊழியர், முதலாளி, தொழிலாளி, இந்த மதத்தவன், இந்த இனத்தவன்  என்றெல்லாம்  பாராமல்,  அனைத்து தரப்பு மக்களையும் பாதித்துள்ளது.  சிகிச்சை பலனில்லாமல், தொற்றுக்கு மருந்து இல்லாமையால், மக்கள் கொத்து, கொத்தாக மரணத்தைத் தழுவுகின்றனர் எடனறு மனத்தை உலுக்கும் செய்திகள் அன்றாடம் வந்த வண்ணம் உள்ளன.    மருத்துவர்களது மகத்தான சேவையை அங்கீரியுங்கள்.  அவர்களுடன் சேர்ந்து இத்தொற்றை எதிர்க்கப் போராடும் அனைத்துத் தரப்பினருக்கும் இந்த நாளில் ஒத்துழைப்பு கொடுப்போம், நன்றி தெரிவிப்போம்,   தொற்றை விரட்ட மவுனமாகப்  போராடுவோம், மனம் தளராமல் இருப்போம், மன உளைச்சலைப்  போக்குவோம்,  நம்பிக்கையுடன்  இருப்போம், மிகப் பெரிய கொடிய நோயை விரட்டுவோம்.   


வாழ்க நலமுடன்.  


செ ஏ துரைபாண்டியன்


திருத்துறைப்பூண்டியில் டாஸ்மாக் கடையை உடைத்து 40 ஆயிரம் மது பாட்டில்கள் திருட்டு

              உலகம் முழுவதும் பேரழிவை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் தடுப்பதற்காக  பிரதமா் அறிவித்துள்ள ஊரடங்கு நாடு முழுவதும் கடைபிடிக்கபடுகிறது. தமிழ்நாட்டிலும் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டுவருகிறது. பெரும்பாலான பொதுமக்கள் வீடுகளிலியே தங்கி இருக்கின்றனர். அத்தியாவசியத் தேவைகளான பால் பொருட்கள் பொருட்கள் , செய்தித்தாள்கள், காய்கறி கடைகள் உள்ளிட்டவைகள் மட்டும் இயங்கலாம் என்று அரசு தெரிவித்துள்ளது. பள்ளி கல்லூரிகள், டாஸ்மாக் மதுபான கடைகள், வணிக நிறுவனங்கள் ஆகியவை ஏப்ரல் 14 வரை திறக்கக் கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 5 நாட்களாக அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே  மடப்புரம் பகுதியில் ஒரு டாஸ்மாக் கடை எண் 9667 செயல்பட்டு வந்தது. இந்நிலையில் மர்ம நபர்கள் டாஸ்மாக் கடையின் பின்புற சுவரை  துளையிட்டு கடையின் உள்ளே இருந்த 40 ஆயிரம் மதிப்பிலான 288 மதுபாட்டில்கள் திருடிச் சென்றனர்.  சுவரைத் துளையிட்டு மதுபான பாட்டில்களை திருடிச் சென்றவர்களை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 144 தடை உத்தரவு காரணமாக மூடப்பட்டிருந்த டாஸ்மாக் கடையை உடைத்து 40 ஆயிரம்  மதிப்பிலான மது பாட்டில்கள் திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


 


 


 


செய்தியாளர். பாலா திருத்துறைப்பூண்டி


திட்டக்குடி  சட்டமன்ற உறுப்பினர் திமுக கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் சி.வெ கணேசன் டாடா ஏசி வாகனம் மூலம் கொரோனா கிருமி நாசினி மருந்து தெளிப்பு

திட்டக்குடி  சட்டமன்ற உறுப்பினர் திமுக கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர்
சி.வெ கணேசன் டாடா ஏசி வாகனம் மூலம் கொரோனா கிருமி நாசினி மருந்து தெளிப்புகடலூர் மாவட்டம் திட்டக்குடி தாலுக்கா கல்லூர் ஊராட்சியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.


இந்நிலையில் கொரோனா வைரஸ் நோய் பரவாமல் தடுக்க கல்லூர், மற்றும் பொடையூர் ஊராட்சியில் உள்ள கடைவீதி, பேருந்து நிலையம், மருத்துவமனை, தெரு பகுதிகள் வடக்கு ஒன்றிய கவுன்சிலர் கே.என்.டி. சுகுணா சங்கர் தலைமையில் 
சிறப்பு அழைப்பாளராக திட்டக்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திமுக மேற்கு மாவட்ட செயலாளர் சி.வெ.கணேசன் கலந்துகொண்டு டாடா ஏசி வாகனம் உதவியுடன் ஸ்பிரேயர்  மூலம் கொரோனா கிருமி நாசினி மருந்து தெளித்தார்.


பின்னர் கொரோனா  நோய் பற்றிய விழிப்புணர்வு மற்றும் அனைவரும் மாஸ்க் அணிந்து செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.


இதில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் வெள்ளையம்மாள் ஜானகிராமன் ,கிராம நிர்வாக அலுவலர் மகேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.


 


செய்தியாளர். காமராஜ். விருத்தாசலம்


Sunday, March 29, 2020

திருத்துறைப்பூண்டியில் கரோனாவைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை ள் டேங்கர் லாரிகள் மூலம் ஏர் கம்பிரஷர் வைத்து நகராட்சிபகுதிகளில் கிரிமிநாசினி தெளிக்கும் பணி

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் கரோனாவைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை நகராட்சி சுகாதார ஆய்வாளர் வெங்கடாசலம் தலைமையில் நகராட்சி பணியாளர்கள் டேங்கர் லாரிகள் மூலம் ஏர் கம்பிரஷர் வைத்து நகராட்சி, காவல்நிலையம், பழைய பேருந்துநிலையம்,புதிய பேருந்துநிலையம் மற்றும் நகராட்சிபகுதிகளில் கிரிமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது. திருத்துப்பூண்டியில்
கரோனாவைரஸ் முன்னெச்சரிக்கை 144 தடை உத்தரவை மீறி நகருக்குள் வரும் வாகனங்களில் மீண்டும் வராமல் இருக்க பெயின்ட் முத்திரையிட்டு எச்சரிக்கை.
திருத்துறைப்பூண்டி நகரருக்கள் 144 தடை உத்தரவை மீறி நகருக்குள் வந்த இருசக்கர வாகனம், கார், ஆட்டோ , டாடா ஏசி உள்ளிட்ட வாகனங்கள் கடந்த 25-ந்தேதி முதல் இதுவரை 50 வாகனங்ககளை போலீஸ் டிஎஸ்பி பழனிச்சாமி மேற்பார்வையில்  இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையில் போலீசார் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்துவந்தனர். இந்த நிலையில் நகருக்குள் மீண்டும் மீண்டும் வரும் வாகனங்களை அடையாளம் காண்பதற்கு போலீசார் பெயின்டால் அடையாளம் இட்டு தொடர்ந்து இதேபோல் தடை உத்தரவை மீறி வந்தால் வாகனங்கள் பறிமுதல் செய்து திரும்ப வாகனங்களை நீங்கள் பெற முடியாத நிலை ஏற்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


 


செய்தியாளர். பாலா திருத்துறைப்பூண்டி


Saturday, March 28, 2020

மொபைல் அப்ளிகேஷன் வழியாக திணைநில வாசிகள் இளைஞர்களின் நாடகம்

Thinai NilaVaasigal - திணை நிலவாசிகள்


இளைஞர்களால் நிரம்பிய  குழு நேற்று (March 27) உலக நாடக தினத்தை Zoom என்கிற App வழியாகக் கொண்டாடினார்கள்


கொரோனா அச்சத்தால் நடிகர்களும், பார்வையாளர்களும் வெவ்வேறு ஊர்களில், வெவ்வேறு சூழல்களில் தனித்து இருந்தார்கள் . ஆனாலும் Zoom App வழியாக இணைந்து நேற்று சுமார் ஒரு மணி நேரம் நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார்கள்


. சுமார் 100 பேர் வரை இவர்களுடன்  இணைந்து நிகழ்ச்சியை இரசித்தார்கள்.


மிக முக்கியமாக திருமிகு.நாசரும், திருமிகு. அம்பையும் இவர்களுடன்  இணைந்திருந்து, இந்த இளைஞர்களின்  முயற்சியை பாராட்டி ஊக்கமளித்தார்கள்.


   ”உலகிலேயே முதல் முறை என்று பெருமைபட்டுக் கொள்ளலாம். கொரோனா நம்மை வீட்டுக்குள்ளே முடக்கி வைத்தாலும், ஒரு நிஜக் கலைஞன் தன்னை எப்படியாவது வெளிப்படுத்திக் கொள்வான், தனக்கான பார்வையாளனை எப்படியாவது தேடி இணைத்துக் கொள்வான் என்பதை இந்த நிகழ்வு உணர்த்தியிருக்கிறது”, என்று நாசர் பாராட்டு தெரிவித்தார்.


  


     ”நாடகம் என்பதே ஒரு உயிர்க்கலை, பார்வையாளர்களுடன் நேரடியாக உரையாடும் கலை. அதை மொபைல் ஃபோன் App வழியாக நடத்துவதும், பார்ப்பதும் வித்தியாசமான முதல் முறை அனுபவம். ஆனாலும் Wi-fi சங்கடங்களை மீறி என்னால் ஓரிரு இடங்களில் நாடகத்தை முழுமையாக உணர முடிந்தது. பார்வையாளர்களை விட நடிகர்களுக்கு இது மிக மிக வித்தியாசமான சோதனை முயற்சி. அதனால் அவர்களுடைய அனுபவத்தைக் கேட்க ஆர்வமாக இருக்கிறேன்”, என்று அம்பை பேசினார்.


         கொரோனா அச்சத்தால் வெளிய நடத்த இயலாத முடியாத நிலையில்  தொடர்ந்து குழு நண்பர்களின் ஆலோசனையில் தில் Zoom App வழியாக இணைவோம் என்று முடிவாகியதாம் . இரண்டே நாட்கள்தான், குழுவில் இருந்த அனைவரும் அதில் Overlap, time delay, distorted audio சிக்கல்களை மீறி நடிப்பதற்கான உத்திகளை கண்டுபிடித்துவிட்டார்கள்


. நேற்று காலை ரிகர்சல், வெவ்வேறு அறைகளில், வெவ்வேறு ஊர்களில் இருந்து அனைவரும் பயிற்சி செய்தார்கள். அந்த பயிற்சிசெய்துள்ளனர்


. மாலை 5 மணி அளவில் துவங்கி, குழப்பங்கள் இல்லாமல் தெளிவாக உலக நாடகதினத்தை Zoom App-ல் மனநிறைவுடன் கொண்டாடி சாதனை படைத்துள்ளார்கள்


இந்த திணைநிலவாசிகள்


இந்த கான்செப்ட் புரிந்து  இயக்கிய பகு, இசை இயக்குநர்கள் சாரு மற்றும் லியோன் ஆகியோர்களை நாம் பாராட்டியே ஆக வேண்டும்


இந்த திணைநிலவாசிகள் - தொடர்ந்து Zoom App வழியாக நடிப்பு மற்றும் இசை தொடர்பான பயிற்சி வகுப்புகள் (Workshop) நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள்


 


இதனை தயாரித்தவர் .. டைரக்டர்.திரு செல்வகுமார் ( பிரபல நகைச்சுவை நடிகர் ஐ எஸ் ஆர் அவர்களின் புதல்வர்)


உலகிலேயே முதல் முறையாக, மொபைல் ஃபோனில், ஒரு App வழியாக நாடகம் நடத்திய குழு என்று பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.


அவருக்கும் இந்த திணைநிலைவாசிகள் குழுவிற்கும் நமது பாராட்டுதல்கள்


திருப்பதி லட்டுக்கு வயது 300

திருப்பதி லட்டுக்கு வயது 300


           திருமலை: திருப்பதி என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது லட்டு பிரசாதம்தான். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பல்லவர் காலத்தில் இருந்து பிரசாதங்கள் சுவாமிக்கு சமர்ப்பிக்கப் பட்டது.  அதன்பின்னர் கிருஷ்ணதேவராயர் காலத்தில் பிரசாதத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இதை தயாரிக்க அப்போதைய அமைச்சர் சேகர மல்லண்ணா, கோயிலில் பலவிதமான தானங்களை செய்துவந்தார்.


அந்த நாட்களில் திருமலை கோயில் அடர்ந்த காடுகளுக்கிடையே இருந்தது.  கோயிலுக்கு வருபவர்கள் மலை அடிவாரத்திலிருந்து பல நாட்கள் நடந்துதான் மேலே  வரவேண்டும். கீழேயோ, இடையிலோ, மலை மேலோ உணவு கிடைப்பது அரிதாக இருந்தது. எனவே சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு சுவாமிக்கு சமர்ப்பிக்கப்படும் நைவேத்திய பிரசாதங்களே வழங்கப்பட்டு வந்தன. இது திருப்பொங்கம் என அழைக்கப்பட்டு வந்தது. இதில் அப்பம், சுழியம், அதிரசம், வடை ஆகிய பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதையடுத்து கி.பி.1715 ஆகஸ்டு 2 முதல் பூந்தி அறிமுகம் செய்யப்பட்டது. 1940 முதல் இது லட்டாக மாற்றப்பட்டது.


லட்டு 3 ரகமாக தயாரிக்கப்பட்டது. 750 கிராம் எடையில் ஆஸ்தான லட்டு தயாரிக்கப்பட்டது. முக்கிய பிரமுகர்கள் வரும்போது, அதிக நெய் மற்றும் குங்குமப்பூ ஆகியவற்றை கொண்டு தயாரிக்கப்பட்டது.


2வது ரகம் 350 கிராம் எடையில் கல்யாண உற்சவ லட்டு.
இது ஆர்ஜித சேவையில் பங்கேற்கும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.


3வது ரகம் ப்ரோத்தம் -  175 கிராம் எடையில் தயாரிக்கப்பட்டு ரூ.25க்கு பக்தர்களுக்கு விற்கப்பட்டது. ஆரம்பத்தில் இது 80 காசுக்கு விற்கப்பட்டது. இலவச, திவ்ய தரிசன பக்தர்களுக்கு சலுகையில் ஒரு லட்டு ரூ.10 வீதம் 2 லட்டு வழங்கப்பட்டது.


1970 களில் ஒரு ரூபாய்க்கு ஒவ்வொரு கரண்டி சர்க்கரைப் பொங்கள், வெண் பொங்கல், புளிசாதம், தயிர்சாதம் என கோவிலுக்கு உள்ளேயே உரிமைதார பட்டாச்சார்யர்களால் விற்கப்பட்டது.  அந்த ரூ.1 பிரசாதம், பகல் உணவுக்குப் போதுமானதாக இருந்தது.  தற்போது, பக்தர்கள் அனைவருக்கும் ஒரு சிறிய லட்டு இலவசமாக வழங்கப்படுகிறது.  


தற்போது ஒரு நாளைக்கு சுமார் 4 லட்சம் லட்டுகள் வரை தயாரிக்கப்படுகின்றன. லட்டு பிரசாதத்துக்கு முன்னாள் தலைமை செயல் அலுவலர் கே.வி.ரமணாச்சாரி எடுத்த முயற்சியால் 18.09.2009 முதல் திருப்பதி லட்டுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது. இவ்வளவு சிறப்புமிக்க பிரசாதம் 1715ம் ஆண்டு தொடங்கப்பட்டு தற்போது 300 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.


 


1940ம் ஆண்டு பூந்தியாக வழங்கப்பட்ட  பிரசாதம்  லட்டாக  மாற்றப்பட்டு  வழங்கப்பட்டது.   லட்டு பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு 80  ஆண்டுகள் நிறைவு பெற உள்ள நிலையில் ஓராண்டுக்கு ரூ.300 கோடி செலவில் 10  கோடி லட்டு செய்யப்படுகிறது.


1950ம் ஆண்டு லட்டு தயாரிப்பதற்கான கொள்முதல் பொருட்கள் எவ்வளவு இருக்க வேண்டும் என்ற திட்டம் வழிமுறையாகக் கொண்டு வரப்பட்டது.


      அப்போது, தேவஸ்தானம் அதை மாற்றி கொண்டு வந்தது. அதன் பிறகு நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வந்தது.  2009ம் ஆண்டு மீண்டும் அதன் அளவு மாற்றப்பட்டு  அதை  படிகார திட்டம் என்று  அழைத்து 5,100 லட்டுகள் தயார் செய்வதற்காக 108 கிலோ நெய், 200 கிலோ கடலை பருப்பு, 400 கிலோ சர்க்கரை, 35 கிலோ முந்திரி, 17 கிலோ திராட்சை, 10 கிலோ கற்கண்டு, 5 கிலோ ஏலக்காய் என 8,101 கிலோ மூலப்பொருட்கள் கொண்டு 5,100 லட்டு தயார் செய்யப்பட்டது.      


      லட்டு தயார் செய்வதற்கான பூந்தி கோயிலுக்கு வெளியே தயார் செய்யப்பட்டு கன்டெய்னர் மூலம் கோயிலுக்குள் கொண்டு செல்லப்பட்டு லட்டாக மாற்றி விற்பனை செய்யப்படுகிறது. அதனால் தான்  பக்தர்களுக்கு       தினந்தோறும்  சுமார் 4 லட்சம் லட்டு தயார்   செய்யப்பட்டு  வழங்கப்படுகிறது.


      1940ம் ஆண்டு பிரோத்தம் என்று அழைக்கப்பட்ட லட்டு 170 கிராம் அளவிற்குத் தயார் செய்யப்பட்டு 1 லட்டு விலை 50 பைசாவாக இருந்து ரூ.1 முதல் 10 வரை படிப்படியாக  விலை உயர்த்தி விற்கப்பட்டு 2007ம் ஆண்டு முதல் 2020  வரை ரூ.25க்கு வரை விற்கப்பட்டு வந்தது. தேவஸ்தானம் ஒரு லட்டு தயாரிக்க 38 ரூபாய் செலவு செய்கிறது.  தற்போது வைகுண்ட ஏகாதசி முதல்  ஒரு பக்தருக்கு 1 லட்டு இலவசம், எஞ்சிய லட்டுகள் ஒன்று ரூ50 என்ற விலையில் எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கலாம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தவிர, ஒரு லட்டு ரூ.200 என்ற விலையில் பெரிய லட்டு விற்கப்படுகிறது.


செஏ துரைபாண்டியன்     


PM CARES FUND

It is my appeal to my fellow Indians, ‬


‪Kindly contribute to the PM-CARES Fund. This Fund will also cater to similar distressing situations, if they occur in the times ahead. 


The PM-CARES Fund accepts micro-donations too. It will strengthen disaster management capacities and encourage research on protecting citizens. ‬


‪Let’s leave no stone unturned to make India healthier and more prosperous for our future generations.


இசைப்பேரரசி டி. கே. பட்டம்மாள்  

       பாபநாசம்  சிவன்   1939 – ல்  நடித்த  "தியாக பூமி"  படத்தில்  எழுத்தாளர் கல்கி எழுதி,  பாபநாசம் சிவன் & ராஜகோபால அய்யர்  இசையமைத்து,    "தேச சேவை செய்ய வாரீர்"  என்று  தொடங்கும் பாடல்தான்  அந்த இசைக் குயில் பாடிய முதல் திரையிசைப் பாடல்.  12 வாரங்களாக அரங்கம் நிறைந்து ஒடி கொண்டிருந்த அந்த "தியாக பூமி" படம் ஆங்கில அரசால் தடை செய்யப்பட்டது.  இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகே தடை விலக்கப்பட்டது.    


      "தேச சேவை செய்ய வாரீர்" என்ற அந்தப் பாடலைப் பாடியவர்  யார் தெரியுமா?   பாடகி   நித்யஸ்ரீ   மகாதேவன்,    அவர்களது பாட்டியான டி. கே. பட்டம்மாள்  என்று   பரவலாக   அறியப்படும்   தாமல்   கிருஷ்ணசாமி பட்டம்மாள் என்ற புகழ்பெற்ற கருநாடக இசைப்  பாடகிதான்.     காஞ்சிபுரத்தைச்   சேர்ந்தவர்.


      இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலங்களில் ஆண்களே கோலோச்சி வந்த கருநாடக இசை மேடைகளில் தங்கள் இசைத் திறமையால் 'பெண் மும்மூர்த்திகள்' என நிலைநாட்டிக்கொண்ட மூவரில் ஒருவர். மற்றவர்கள் எம். எஸ். சுப்புலட்சுமியும்  எம். எல். வசந்தகுமாரியும்.


      அலமேலு என்ற இயற்பெயருடைய “பட்டா” எனச் செல்லமாக அழைக்கப்பட்ட பட்டம்மாள் தமிழ்நாடு காஞ்சிபுரத்திற்கு அருகில் உள்ள தாமல் என்ற ஊரில் ஒரு பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். தந்தை தாமல் கிருஷ்ணசுவாமி தீட்சிதர். தாயார் காந்திமதி (ராஜம்மாள்) ஒரு சிறந்த பாடகி.    


      அக்காலக் குடும்ப மரபுக்கேற்ப ராஜம்மாள் என்றும் பொது மேடைகளிலோ அல்லது குடும்ப நண்பர்கள் அல்லது உறவினர்களின் முன்னிலையிலோ பாடுவதற்கு அனுமதிக்கப்படவில்லை. ஆனாலும் அந்த மரபுகளையும் தாண்டி பட்டம்மாள் தனது 4 ஆவது வயதிலேயே பாடத் தொடங்கினார். அவருடன் உடன்பிறந்த மூன்று சகோதரர்கள் டி.கே.ரங்கநாதன், டி.கே.நாகராஜன்,  டி. கே. ஜெயராமன் ஆகியோரும் சிறந்த பாடகர்கள். பட்டம்மாள்  1939 ஆம் ஆண்டில் ஆர். ஈசுவரன் என்பவரைத்  திருமணம்  செய்துகொண்டார்.


இசைத் துறையில்


பட்டம்மாள் முறையாக  கருநாடக இசை கற்கவில்லை. கச்சேரிகளில் பாடல்களைக் கேட்டே தன் திறமையை வளர்த்துக் கொண்ட எல்லாரும் பின்பற்ற வேண்டிய பெண்மணி ஆவார். சிறு வயதிலேயே தனது தந்தை சொல்லிக்கொடுத்த பக்திப் பாடல்களைப் பாடுவார்.   தெலுங்கு ஆசிரியர் ஒருவரிடம் சிறிது காலம் பயிற்சி எடுத்துக் கொண்டார்[5].


 


பட்டம்மாள் (வலது) தனது சகோதரர் டி. கே. ஜெயராமனுடன், 1940களில்


 


1929 ஆம் ஆண்டில் தனது 10வது அகவையில் முதற் தடவையாக வானொலியில் பாடினார். அந்த பாடலுக்குப் பிறகுதான் டி.கே.பட்டம்மாள் என்ற பேர் பிரபலமானது. மூன்று ஆண்டுகளுக்குப்  பின்,  1932  இல்  எழும்பூர்  மகளிர் மன்றத்தில் தனது முதல் கச்சேரியை அரங்கேற்றினார்.   பின்னர்  காங்கிரஸ் கட்சிக்  கூட்டங்களில் நிறைய பாட ஆரம்பித்தார். மகாகவி சுப்பிரமணிய பாரதியின் பாடல்களைத் தமது  மேடைக்  கச்சேரிகளிலும்  திரைப்படங்களிலும் பாடி வந்தார். 


பாபநாசம் சிவன்கோபாலகிருஷ்ண பாரதி மற்றும் முத்துத் தாண்டவர்  பாடல்களையும் பதங்களையும் பாடி தமிழ் பாடல்களின் சிறப்பைப்  பறைசாற்றினார்.


      பட்டம்மாள் பல வெளிநாடுகளுக்குச் சென்று வந்திருக்கிறார். அவரது சீடர்கள்  ஜப்பான்சிங்கப்பூர்பிரான்சுஜெர்மனிஅமெரிக்கா


கனடா முதலிய நாடுகளில் உள்ளனர். ஜப்பானிய 'அகிகோ'வை திருவையாற்றில் பாட வைத்திருக்கிறார்.


அவர் வாங்கிய விருதுகள்


சங்கீத நாடக அகாடெமி விருது, 1962
1-1-1939  முதல் ஆனந்த விகடனில் தொடர்கதையாக கல்கி அவர்கள் எழுதிய "தியாக பூமி" கதை,  திரைப்படமாக கே சுப்ரமணியம் அவர்களின் இயக்கத்தில் 20-5-1939- ல்  சென்னை கெயிட்டி தியேட்டரில் திரைக்கு வந்தது.   தற்போதைய  கேசினோ  தியேட்டர் அருகில்தான் கெயிட்டி தியேட்டர் இருந்தது என்பது குறிப்படத்தக்கது. இப்போது


சென்னை  என்றழைக்கப்படும் அப்போதைய மெட்ராசில் கட்டப்பட்ட முதல் திரையரங்கம் கெயிட்டி என்றழைக்கப்பட்ட திரையரங்கம் ஆகும். 


 


"தியாக பூமி"  கதை வருமாறு. 
      தஞ்சை மாவட்டம்  நெடுங்கரை  கிராமத்தில் வாழ்ந்த சாம்பு சாஸ்திரிகள் (பாபநாசம் சிவன்)  தனது  ஒரே  மகள் சாவித்ரியை (எஸ் டி சுப்புலக்ஷ்மி)  ஸ்ரீதரன் என்ற வங்கியில் வேலை செய்யும் வாலிபனுக்கு


(கே ஜே மகாதேவன் பி ஏ)  திருமணம்  செய்து  கொடுக்கிறார். மனைவி சுத்த  கர்நாடகமாக  இருப்பது,  மேல்நாட்டு  மோகம்  கொண்ட ஸ்ரீதரனுக்கு  பிடிக்கவில்லை.

சுசி  (ஜெயலக்ஷ்மி) என்ற  நாகரீகப் பெண்ணை காதலிக்கிறான்.
விளைவு...கைக்குழந்தையுடன் விரட்டப்படுகிறாள் சாவித்திரி...தந்தையிடம் குழந்தையை சேர்த்துவிட்டு சென்னை செல்கிறாள்...
தொடரும் ஆறு வருடங்களில் உமாராணி என்ற பெயர் மாறி பெரும் பணக்காரி ஆகிறாள்...
உமாராணி தனது மனைவி என அறிந்துகொள்ளும் ஸ்ரீதரன் சேர்ந்து வாழ அழைக்கிறான்..
மனைவி மறுத்ததால் தாம்பத்திய உரிமை கேட்டு நீதிமன்றம் செல்கிறான்...
கோர்ட்  இருவரையும்  இணைந்து  வாழ  வலியுறுத்துகிறது...
பல  பெண்களின்  தியாகத்தால்  விளைந்த பூமி  இது  என  சொல்லி  மகள் சாவித்திரியை  திருந்திய கணவனிடம் சேர்ந்து வாழுமாறு சொல்கிறார் சாம்பு சாஸ்திரிகள்...

சுதந்திரப் போராட்டத்தில்  கலந்து  கொண்டு  சிறை செல்லும் உமாராணி அங்கே அதே காரணத்திற்காக சிறையிலிருக்கும் கணவனை பார்க்கிறாள்...  இருவரும் மனம் இணைய ... சுபம்...


            படத்தில் இடம்பெற்ற தேச சேவை செய்ய வாரீர் என்ற பாடல்,   இறுதிக்காட்சியில்  இடம்  பெற்ற  சுதந்திரப்போராட்ட பேரணிகள் மற்றும் படம் பார்த்த ரசிகர்களிடம் விளைந்த எழுச்சி ஆங்கில அரசை பயமுறுத்தியதால் 12 வாரங்களாக அரங்கம் நிறைந்து ஒடி கொண்டிருந்த தியாக பூமி படம் தடை செய்யப்பட்டது...
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகே தடை விலக்கப்பட்டது


 


  செ ஏ துரைபாண்டியன்


பிரபாஸ்   கொரோனா நிவாரணமாக பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.4 கோடி நன்கொடை.

தெலுகு நடிகர் பிரபாஸ்   கொரோனா நிவாரணமாக பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.4 கோடி நன்கொடை.


இந்திய நடிகர்களிலேயே மிக அதிகமான தொகையை நன்கொடையாக வழங்கியவர் பிரபஸ்.


தனது படம் ரிலீஸ் நேரத்தில் மட்டும் பட புரமோஷனுக்காக சமூக அக்கறை பற்றியோ அரசியலோ பேசாதவர் பிரபாஸ் என்பது குறிப்பிடக்தக்கது...


Friday, March 27, 2020

ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் COVID19 மருத்துவமனையாக 500 படுக்கை வசதிகளுடன் மாற்றி அமைக்கப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரி

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் இன்று சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் COVID19 மருத்துவமனையாக 500 படுக்கை வசதிகளுடன் மாற்றி அமைக்கப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் வார்டுகளை பார்வையிட்டார்


Featured Post

மனிதனை மீறிய சந்தர்ப்பங்கள் வாழ்க்கையை எவ்வளவு தூரம் திருப்பிவிடுகின்றன

  மனிதனை மீறிய சந்தர்ப்பங்கள் வாழ்க்கையை எவ்வளவு தூரம் திருப்பிவிடுகின்றன என்பதற்கு நான் ஓர் உதாரணம்.’’ – இது, ‘சரித்திர நாவல்களின் ஜாம்பவான...