Posts

Showing posts with the label மகளிர் தினம்2022

அவளே கண்டெடுத்தாள் ஆறாம் விரலாய்/கவிதை/மகளிர் தினம்2022,

Image
  தொலைந்து போன பால்யம்  தூக்கி எரியப்பட்ட கனவுகள் இளமையில் துரத்திய வறுமை விதியென வாய்த்த வாழ்க்கை  உரிமை இல்லா உறவுகள்  உண்மை இல்லா உணர்வுகள் புரிதல் இல்லா புணர்வுகள் அடைகாக்கும் சமையலறை அடுத்த சிறையாய் படுக்கையறை அலுவலகத்தில் அசடுகள் அங்கும் அக்னி பரீட்சை தான் உடல்மொழி தனிக்கதை உளவியலானது விடுகதை பிள்ளை வளர்ப்பு பெருங்கதை  குடும்பமது போர்க்களம் சுயம் மறந்து நாட்களாக  நட்புகள் ஏது சிந்தையில்  பெரியாரும் பாரதியும் பெருமூச்சிறைக்கச் செய்ய  வாசிக்கப் பழகியவள்  எழுதத் தொடங்கினாள்  எழுத்துகள் தந்தது விடுதலை எண்ணங்களில் எழுச்சி  வேர்களைத்தேடிய எழுத்தில்  அவளை அவளே கண்டெடுத்தாள்  ஆறாம் விரலாய் அவள் பேனாவும்  அஞ்சாத அறமுறைத்தது. பெண்களாய் வாழ்வதே சாதனை தான் அனுதினம் உன்னை நீ கொண்டாடு🎊🎉 தீபிகா சுரேஷ்  அனைத்து தேவதைகளுக்கும் மகளிர் தின வாழ்த்துகள்♥️ #தீபிகா_சுரேஷ் 

கருப்புச் சாயம் பூசிவிடாதீர்கள் படபடக்கும் பட்டாம்பூச்சி நாங்கள்.../கவிதைகள்/மகளிர் தினம்2022,

Image
  மாதர் அனைவருக்கும் மகளிர் தினத்தில் வாழ்த்துகள் மாதர் தம்மை அடிமை செய்யும் மடமையை கொளுத்துவோம் என்றார் மகாகவி மகளிர் சிலர் இதனை மருந்தாக இல்லாமல் விருந்தாக பயன்படுத்துகின்றனர் விடுவேனா அவனை என்றே விடா கொண்டனாக வீட்டு சண்டையை வீணே பெரிதாக்கி வீதிக்கு கொண்டு வந்து குடும்ப வாழ்க்கையையும் நிம்மதியையும் தொலைக்கின்றனர் ஆணுக்கு பெண் அடிமையில்லை அழுந்த சொல்வோம் நாம் ஆணும் பெண்ணுக்கு அடிமையும் இல்லை என அறிந்தே நடப்போம் ன சிவனின்றி சக்தி இல்லை சக்தியின்றி சிவனில்லை என்ற சான்றோர் வாக்கினை சடுதியில் மறக்கின்றோரை சிந்திக்க வேண்டுகிறேன் ஆண்டவன் படைப்பில் அனைவரும் சமமே சம நிலை போயின் சகலமும் பாழே என்பதனைச் சற்றே சிந்திப்போம் நம் சமூகத்தை என்றும் காப்போம் -கவிதாயினி - மஞ்சுளா யுகேஷ். Enter Manjula கண்ணைக் கட்டிய கருப்புத்துணியை கொஞ்சம் விலக்கி விட்டுப் பாருங்கள் வானவில்லின் வண்ணங்கள் நாங்கள் ... கருப்புச் சாயம் பூசிவிடாதீர்கள் படபடக்கும் பட்டாம்பூச்சி நாங்கள்... சிறகுகளை வெட்டிடாதீர்கள்... பளபளக்கும் பட்டாடை மட்டுமே தரும் கூட்டுப் புழுக்களல்ல ...

கல்கியின் பொன்னியின் செல்வனில் வரும் நந்தினி/ மகளிர் தினம் 2022

Image
  என்னை கவர்ந்த சரித்திர நாவல் பாத்திரம் கல்கியின் பொன்னியின் செல்வனில் வரும் நந்தினி எனது பென்சில் ஒவியம் by uma