வேலியே பயிரை மேய்ந்தது என்பார்கள். இங்கு வேலி, வேலியையே மேய்ந்த அவலமாகியுள்ளது. பெண் ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர், தனக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் காவல்துறை உயரதிகாரியான சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ் தாஸ் மீது கொடுத்துள்ள புகார், காவல்துறை தாண்டியும் அரசியல் தளம் முதல், பொதுமக்கள் வரை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில், மேலும் அதிர்ச்சி ஏற்படுத்துவது, புகார் கொடுக்கச் சென்ற பாதிக்கப்பட்ட பெண் ஐ.பி.எஸ் அதிகாரி, ராஜேஷ் தாஸ் அழுத்தத்தின் காரணமாகக் காவல்துறை உயரதிகாரிகள் இருவரால் புகாரை தவிர்க்கும்படி அறிவுரை கூறப்பட்டிருக்கிறார், தடுக்கப்பட்டிருக்கிறார், மிரட்டப்பட்டிருக்கிறார், உடல் ரீதியான மல்லுக்கட்டு அளவுக்கு மரியாதையின்றி நடத்தப்பட்டிருக்கிறார். நடந்த சம்பவங்களின் கோவை, ஒரு பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கே இந்த நிலைமை என்றால், சாமான்யப் பெண்களின் நிலை என்ன என்பதை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. குற்றங்களைத் தடுக்க வேண்டிய பொறுப்பில் முதலாவதாக இருக்கும் காவல்துறையிலேயே மலிந்துகிடக்கும் பாலியல் குற்றங்கள், அம்பலமாகியுள்ளன. என்ன நடந்தது? தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கடந்த ஞாயிற்றுக்கிழமை, அதாவது