உறவு, நட்பு இடையே பிரைவசி முக்கியம்..? அந்தரங்கம் காப்பது எப்படி
உறவு, நட்பு இடையே பிரைவசி ஏன் முக்கியம்..? அந்தரங்கம் காப்பது எப்படி தனித்து வாழ்தல் மனிதரின் இயல்பல்ல. ஆனால், ஒவ்வொரு மனிதருக்கும், அவருக்கு மட்டுமே உரிய, அவருக்கு மட்டுமே தெரிந்த, அவருக்கு மட்டுமே சொந்தமான ஒரு விஷயம் பொ துவான பார்வையிலிருந்தும் கவனத்திலிருந்தும் விலகி, ஓரிடத்தில் அது வீடோ, வெளியிடமோ, யாராலும் கண்காணிக்கப்படாமல், யாருடைய தொல்லையும் இல்லாமல், தன் விருப்பப்படி இயல்பாக இருக்கும் நிலையை `பிரைவசி' எனலாம். இன்றைய நிலையில் தனிப்பட்ட வாழ்க்கையில் மட்டுமல்ல, உறவுகளுக்கிடையிலும் பிரைவசி தேவையாக இருக்கிறது. சில விஷயங்களைப் பகிர்ந்துகொள்வதும், சிலவற்றைப் பகிராமல் இருப்பதும், பிறருடைய அந்தரங்க எல்லையை மதிப்பதும் அதன் அங்கம்தான். தனித்து வாழ்தல் மனிதரின் இயல்பல்ல. ஆனால், ஒவ்வொரு மனிதருக்கும் அவருக்கு மட்டுமே உரிய, அவருக்கு மட்டுமே தெரிந்த, அவருக்கு மட்டுமே சொந்தமான விஷயங்கள் பல உண்டு. அவர் அனுமதிக்காத பட்சத்தில் அவருக்கான வெளிக்குள் நுழைய யாருக்கும் உரிமையில்லை. தனிமையில் தம்பதியினர் நெருக்கமாக இருத்தல், எந்தவித தொந்தரவும் இல்லாமல் தன் அறைக்குள் பாடல் கேட்டுக்கொண்ட...