Posts

Showing posts with the label விளையாட்டு

*டெஸ்ட் போட்டி: பரபரப்பான ஆட்டத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி இந்திய அணி வெற்றி -

Image
 *டெஸ்ட் போட்டி: பரபரப்பான ஆட்டத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி இந்திய அணி வெற்றி - தொடரையும் கைப்பற்றி அசத்தல்...!* இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்றியது. டாக்கா, வங்காளதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அந்நாட்டுடன் ஒருநாள், டெஸ்ட் தொடரை விளையாடி வருகிறது. ஒருநாள் தொடரில் 2-1 என்ற புள்ளிகள் கணக்கில் வங்காளதேசம் கைப்பற்றியது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றிபெற்றது. இதனை தொடர்ந்து 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கடந்த 22-ம் தேதி தொடங்கியது. இதில், முதலில் ஆடிய வங்காளதேசம் முதல் இன்னிங்சில் 227 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து, முதல் இன்னிங்சை ஆடிய இந்தியா 314 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனை தொடந்து 2-வது இன்னிங்சை தொடங்கிய வங்காளதேசம் 231 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. வங்காளதேசத்தின் லிண்டன் தாஸ் அதிகபட்சமாக 73 ரன்கள் குவித்தார். இந்திய அணி தரப்பில் அக்சர் பட்டேல் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து, 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியுள்ளது. சுக...

டெஸ்டா டி20 கிரிக்கெட்டா?: முதல் நாளில் உலக சாதனைகள் படைத்த இங்கிலாந்து பேட்டர்கள்!*

Image
 டெஸ்டா டி20 கிரிக்கெட்டா?: முதல் நாளில் உலக சாதனைகள் படைத்த இங்கிலாந்து பேட்டர்கள்!* பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் முதல் நாளில் இங்கிலாந்து அணி 75 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 506 ரன்கள் எடுத்து உலக சாதனைகள் படைத்துள்ளது. பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்டுகளில் விளையாடுகிறது இங்கிலாந்து அணி. இதற்காக ராவல்பிண்டியில் இங்கிலாந்து வீரர்கள் பயிற்சி மேற்கொண்டிருந்தபோது திடீரென 8 வீரர்கள் உள்பட இங்கிலாந்து அணியைச் சேர்ந்த 14 பேர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டார்கள். ஒரு வீரரைத் தவிர அனைவரும் உடல்நலம் தேறிவிட்டதால் திட்டமிட்டபடி டெஸ்ட் தொடர் இன்று தொடங்கியது. இங்கிலாந்து அணியில் போக்ஸுக்குப் பதிலாக வில் ஜாக்ஸ் தேர்வானார். போப் விக்கெட் கீப்பராகச் செயல்படவுள்ளார். வில் ஜாக்ஸ், லிவிங்ஸ்டன் ஆகிய இருவரும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அறிமுகமாகியுள்ளார்கள். பாகிஸ்தான் அணியில் ஹாரிஸ் ராஃப் உள்பட நான்கு பேர் அறிமுகமாகியுள்ளார்கள்.டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. பாகிஸ்தானில் 17 வருடங்களுக்குப் பிறகு டெஸ்டில் விளையாடும் இங்கிலாந்து அணிக்கு அற்புதமான தொடக்...

கிரிக்கெட் வீரர் ஶ்ரீகாந்த் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Image
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஶ்ரீகாந்த் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து 1983ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி உலக கோப்பை வென்றதை குறிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள நினைவுப்பரிசை வழங்கினார்

ஜெகதீசனின் உலக சாதனை

Image
 *விஜய் ஹசாரே கோப்பைத் தொடர்: ஜெகதீசனின் விளாசலால் ஒரே ஆட்டத்தில் பல உலக சாதனைகளை படைத்த தமிழ்நாடு அணி - தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஒருவர் இமாலய சாதனையை நிகழ்த்தியுள்ளார். லிஸ்ட் ஏ கிரிக்கெட் வரலாற்றில் தமிழ்நாடு அணியும்  ஒரு மாபெரும் மைல்கல்லை எட்டி உலக சாதனையை படைத்திருக்கிறது.    என்ன நடந்தது?   இந்தியாவில் 50 ஓவர்களை கொண்ட விஜய் ஹசாரே கோப்பைத் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற குரூப் ஆட்டத்தில் தமிழ்நாடு மற்றும் அருணாச்சல பிரதேச அணிகள் மோதியதில் தமிழ்நாடு அணி அருணாச்சல பிரதேச அணியை 435 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த போட்டியில் பல்வேறு உலக சாதனைகள் படைக்கப்பட்டுள்ளதாக  இஎஸ்பிஎன் கிரிக் இன்ஃபோ கூறுகிறது.   இதில் முதலில் பேட்டிங் செய்த தமிழக அணி 50 ஓவர்கள் முடிவில் இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 506 ரன்கள் எடுத்தது.  ஆடவர் கிரிக்கெட்டில் லிஸ்ட்-ஏ கிரிக்கெட் போட்டிகளில் 50 ஓவர்களில் ஒரு அணி அடித்துள்ள அதிகபட்ச ரன்கள் இதுதான்.   முன்னதாக இந்த ஆண்டு ஜூன் மாதம் நெத...

சூர்யகுமார் சதம், 2வது டி20 போட்டி - நியூசிலாந்து அணியை எளிதில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி*

Image
 சூர்யகுமார் சதம், 2வது டி20 போட்டி - நியூசிலாந்து அணியை எளிதில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி* இந்திய அணி 65ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மவுன்ட் மாங்கானு, நியூசிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. இன்று 2வது போட்டி நடைபெற்றது . இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக ரிஷாப் பண்ட் ,இஷான் கிஷான் களமிறங்கினர். தொடக்கம் முதல் இஷான் கிஷான் அதிரடியாகி விளையாடினார்.மறுபுறம் பண்ட் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் இஷான் கிஷான் 36 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ஷ்ரேயாஸ் அய்யர் 13 ரன்களில் வெளியேறினார் . அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் ,ஹார்திக் பாண்டியா இருவரும் அதிரடியாக விளையாடினர்.குறிப்பாக சூர்யகுமார் யாதவ் நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தார் பந்துகளை நாலாபுறமும் பறக்க விட்ட சூர்யகுமார் யாதவ் சிக்ஸர் மழை பொழிந்தார். இதனால் சூர்ய...

*வண்ணமயமான கலைநிகழ்ச்சிகளுடன் உலக கோப்பை கால்பந்து தொடர் கோலாகலமாக தொடங்கியது*

Image
 *வண்ணமயமான கலைநிகழ்ச்சிகளுடன் உலக கோப்பை கால்பந்து தொடர் கோலாகலமாக தொடங்கியது* தோஹா: ஃபிபா உலக கோப்பை கால்பந்து போட்டித் தொடர், கத்தார் நாட்டின் அல் கோர் நகரில் நேற்று வண்ணமயமான கலைநிகழ்ச்சிகள் மற்றும் வாணவேடிக்கையுடன் கோலாகலமாகத் தொடங்கியது. கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்த தொடரில் மொத்தம் 32 அணிகள் சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்புடன் களமிறங்குகின்றன. இத்தொடருக்கான பிரமாண்ட தொடக்க விழா, அல் பேட் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடைபெற்றது. தென் கொரியாவை சேர்ந்த பிடிஎஸ் இசைக்குழுவின் நட்சத்திரப் பாடகர் ஜங் குக் ‘ட்ரீமர்ஸ்’ என்ற பாடலை உற்சாகமாகப் பாடி ரசிகர்களை மகிழ்வித்தார். அவருடன் இணைந்து கத்தார் பாடகர் பகத் அல் குபைசியும் இசை மழை பொழிந்தார். கத்தார் நாட்டின் பாரம்பரியப் பெருமைகளை விளக்கும் வகையிலான கலைநிகழ்ச்சிகள், லேசர் விளக்குகளின் ஜாலம், வாணவேடிக்கை என அசத்தலான தொடக்கவிழா பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தியது. இதைத் தொடர்ந்து நடந்த ஏ பிரிவு முதல் லீக் ஆட்டத்தில் கத்தார் - ஈக்வடார் அணிகள் மோதின....

உலகக்கோப்பை கால்பந்து : 1930 முதல் 2018 வரை..சாம்பியன் பட்டம் வென்ற அணிகளின் முழு விவரம்..!

Image
  உலகக்கோப்பை கால்பந்து : 1930 முதல் 2018 வரை..சாம்பியன் பட்டம் வென்ற அணிகளின் முழு விவரம்..! பிபா சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை கால்பந்து உலக கோப்பை தொடரை நடத்திவருகிறது. பிபா சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை கால்பந்து உலக கோப்பை தொடரை நடத்திவருகிறது. கால்பந்து உலக கோப்பை தொடர் சர்வதேச அளவில் கால்பந்து ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் விளையாட்டு திருவிழா. 1930 முதல் 2018 வரை... கால்பந்து உலகக்கோப்பையை வென்ற அணிகளின் முழு விவரம்..!1930 முதல் 2018 வரை... கால்பந்து உலகக்கோப்பையை வென்ற அணிகளின் முழு விவரம்..!உலகக்கோப்பை கால்பந்து தொடர் 2022 இந்த மாதம் 20ஆம் தேதி கத்தாரில் தொடங்கப்பட உள்ளது.கத்தார் கால்பந்தின் மிகப்பெரிய போட்டியை நடத்தும் மத்திய கிழக்கு நாடுகளில் முதல் நாடாகும். இதில் 5 முறை சாம்பியனான பிரேசில், நடப்பு சாம்பியன் பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து, நெதர்லாந்து, அர்ஜென்டினா, ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, டென்மார்க், போர்ச்சுகல், உருகுவே, பெல்ஜியம் உள்பட 32 அணிகள் களம் இறங்குகின்றன. அவை 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்...

உலககோப்பை கால்பந்து கொண்டாட்டம்:சிறிய நாடு நடத்தும் பெரிய திருவிழா முழு விவரம்*

Image
  உலககோப்பை கால்பந்து கொண்டாட்டம்:சிறிய நாடு நடத்தும் பெரிய திருவிழா முழு விவரம்* 32: இந்த ஆண்டு எட்டு பிரிவுகளில் 32 அணிகள் போட்டியிடுகின்றன. குழு ஏ: கத்தார், இக்வடார், செனகல், நெதர்லாந்து குழு பி: இங்கிலாந்து, ஈரான், அமெரிக்கா, வேல்ஸ் குழு சி: அர்ஜென்டினா, சவுதி அரேபியா, மெக்சிகோ, போலந்து குழு டி: பிரான்ஸ், ஆஸ்திரேலியா, டென்மார்க், துனிஷியா குழு இ: ஸ்பெயின், கோஸ்டா ரிகா, ஜெர்மனி, ஜப்பான் குழு ep: பெல்ஜியம், கனடா, மொராக்கோ, குரேசியா குழு ஜி: பிரேசில், செர்பியா, சுவிட்சர்லாந்து, கேமரூன் குழு எச்: போர்ச்சுகல், கானா, உருகுவே, கொரிய குடியரசு 12 நாட்கள் நீடிக்கும் குழு சுற்றுப் போட்டிகளின்போது, ஒவ்வொரு நாளும் நான்கு போட்டிகள் நடைபெறும். ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் கடைசி 16 அணிகள் மோதும் கட்டத்திற்கு முன்னேறும். 8: இதுவரை எட்டு நாடுகள் மட்டுமே கோப்பையை வென்றுள்ளன. பிரேசில் ஐந்து முறையும், ஜெர்மனி மற்றும் இத்தாலி தலா 4 முறையும் வென்றுள்ளன. அர்ஜென்டினா, பிரான்ஸ், உருகுவே ஆகிய அணிகள் தலா இரண்டு முறையும், இங்கிலாந்து, ஸ்பெயின் அணிகள் தலா ஒரு முறையும் உலகக் கோப்பையை ...

2வது முறையாக டி20 உலக கோப்பையை வென்று இங்கிலாந்து சாதனை*

Image
  * T20 WC: ஃபைனலில் பாகிஸ்தானை வீழ்த்தி 2வது முறையாக டி20 உலக கோப்பையை வென்று இங்கிலாந்து சாதனை* டி20 உலக கோப்பை ஃபைனலில் பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி 2வது முறையாக டி20 உலக கோப்பையை வென்றது டி20 உலக கோப்பை இறுதிப்போட்டி மெல்பர்னில் நடந்தது. பாகிஸ்தான் - இங்கிலாந்து இடையேயான இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். இரு அணிகளின் ஆடும் லெவன் காம்பினேஷனிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அரையிறுதியில் ஆடிய அதே ஆடும் லெவனுடன் தான் இரு அணிகளும் களமிறங்கின. பாகிஸ்தான் அணி: பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), முகமது ஹாரிஸ், ஷான் மசூத், இஃப்டிகார் அகமது, முகமது நவாஸ், ஷதாப் கான், முகமது வாசிம், ஹாரிஸ் ராஃப், ஷாஹீன் அஃப்ரிடி, நசீம் ஷா. இங்கிலாந்து அணி: ஜோஸ் பட்லர் (கேப்டன், விக்கெட் கீப்பர்), அலெக்ஸ் ஹேல்ஸ், ஃபிலிப் சால்ட், பென் ஸ்டோக்ஸ், ஹாரி ப்ரூக், லியாம் லிவிங்ஸ்டோன், மொயின் அலி, சாம் கரன், கிறிஸ் வோக்ஸ், கிறிஸ் ஜோர்டான், அடில் ரஷீத்.  முதலில் பேட்டிங்  ஆடிய பாகிஸ்தான் அ...

*T20 WC அரையிறுதி | தேறாத சுழல்… 42 டாட் பந்துகள்... - இந்திய அணியின் தோல்விக்கான காரணங்கள்*

Image
 *T20 WC அரையிறுதி | தேறாத சுழல்… 42 டாட் பந்துகள்... - இந்திய அணியின் தோல்விக்கான காரணங்கள்* அடிலெய்டு: டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் ஜாஸ் பட்லர், அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோரது அதிரடியால் இந்திய அணியை 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இங்கிலாந்து அணி. ஐசிசி டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதன் 2-வது அரை இறுதி ஆட்டத்தில் நேற்று அடிலெய்டில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதின. முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 33 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 63 ரன்களும், விராட் கோலி 40 பந்துகளில், ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 50 ரன்களும் எடுத்தனர். கே.எல்.ராகுல் 5, கேப்டன் ரோஹித் சர்மா 27, சூர்யகுமார் யாதவ் 14, ரிஷப் பந்த் 6 ரன்களில் நடையை கட்டினர். முதல் 10 ஓவர்களில் இந்திய அணி மந்தமாக பேட் செய்து 62 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்த 5 ஓவர்களில் 38 ரன்கள் சேர்க்கப்பட 15 ஓவர்களில் 100 ரன்களை எட்டியது. கடைசி ...

மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட்டில்... மகுடம் சூடிய இளைஞர்

Image
  மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட்டில்... மகுடம் சூடிய இளைஞ ர் நம் மதுரை மண்ணில் பிறந்த, ‘சச்சின் சிவா’ என்ற இளைஞர், இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்றிருக்கிறார். அதுமட்டுமல்ல... மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட்டிலும் அதிரடியாக விளையாடி பல சாதனைகளை படைத்திருக்கிறார். அவரை சந்திக்க சென்ற நமக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில், இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணியின் கேப்டனான இவர், ஒரு சாதாரண பெட்டிக்கடையில் அமர்ந்து வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்திற்கிடையே அவரிடம் பேச தொடங்கினோம். ''விருதுநகர் மாவட்டம் வீரசோழன் அருகே உள்ள பாப்பாக்குளம் தான் பூர்வீகம். பிறந்தது மதுரையில் தான். போலியோ பாதிப்பினால் சிறுவயதிலேயே பாதிக்கப்பட்டு சரிவர நடக்கமுடியாமல் முடங்கினாலும் சிறப்பாக கிரிக்கெட் விளையாடுவேன். ஆனால், என்னை யாரும் சேர்த்து கொள்ளமாட்டார்கள். கிரிக்கெட் மட்டுமின்றி மற்ற போட்டிகளிலும் என்னை இணைந்து கொண்டேன். அந்த சமயத்தில், அதாவது 2008-ம் ஆண்டில் மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் பற்றி அறிந்தேன். அதற்கு சென்னையில் வீரர்கள் ...

நெதர்லாந்திடம் தோற்று தொடரைவிட்டு வெளியேறியது தென்னாப்பிரிக்கா! அரையிறுதிக்கு இந்தியா தகுதி

Image
 T20 World Cup: நெதர்லாந்திடம் தோற்று தொடரைவிட்டு வெளியேறியது தென்னாப்பிரிக்கா! அரையிறுதிக்கு இந்தியா தகுதி டி20 உலக கோப்பையில் நெதர்லாந்திடம் தென்னாப்பிரிக்கா அதிர்ச்சி தோல்வியடைந்து தொடரைவிட்டு வெளியேறியது. தென்னாப்பிரிக்கா தோற்றதால் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது. பாகிஸ்தான் - வங்கதேசம் போட்டியில் ஜெயிக்கும் அணி அரையிறுதிக்கு முன்னேறும்.   டி20 உலக கோப்பையில் க்ரூப் 1லிருந்து நியூசுலாந்து, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறிய நிலையில், க்ரூப் 2லிருந்து அரையிறுதிக்கு முன்னேற நெதர்லாந்தை வீழ்த்தினால் போதும் என்ற சூழலில் ஆடிய தென்னாப்பிரிக்க அணி அதிர்ச்சி தோல்வியடைந்து தொடரை விட்டு வெளியேறியுள்ளது. தென்னாப்பிரிக்கா - நெதர்லாந்து இடையேயான போட்டி இன்று அடிலெய்டில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.  தென்னாப்பிரிக்க அணி: டெம்பா பவுமா (கேப்டன்), குயிண்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), ரைலீ ரூசோ, எய்டன் மார்க்ரம், டேவிட் மில்லர், ஹென்ரிச் கிளாசன், வைன் பார்னெல், கேஷவ் மஹராஜ், ககிசோ ரபாடா, அன்ரிக் நோர்க்யா, லுங்கி இங்கி...

டி20 உலக கோப்பையில் சாதனை படைத்த வீரர்கள் - ஒரு பார்வை...!*

Image
டி20 உலக கோப்பையில் சாதனை படைத்த வீரர்கள் - ஒரு பார்வை...!* இதுவரை நடந்து முடிந்த 20 ஓவர் உலக கோப்பை போட்டிகளில் சில சாதனைகளின் விவரம். 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி 2007-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக அமீரகத்தில் கடந்த ஆண்டு நடந்த போட்டியில் ஆஸ்திரேலியா முதல்முறையாக கோப்பையை கைப்பற்றியது. இந்த நிலையில் ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் 8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் இன்று தொடங்கி நவம்பர் 13-ந்தேதி வரை நடைபெறுகிறது. மெல்போர்ன், சிட்னி, பிரிஸ்பேன் உள்பட 7 நகரங்களில் நடக்கும் இந்த போட்டியில் 16 அணிகள் பங்கேற்கின்றன. இதில் முதல் சுற்றில் 8 அணிகள் இடம் பெற்றுள்ளன. அவை இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இலங்கை, நெதர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம், நமிபியா, 'பி' பிரிவில் வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே, அயர்லாந்து, ஸ்காட்லாந்து ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்12 சுற்ற...

தமிழ்நாடு வீராங்கனை பவானி தேவி தங்கம்

Image
  குஜராத்தில் நடந்துவரும் தேசிய விளையாட்டு 2022: வாள் வீச்சு போட்டியில் தமிழ்நாடு வீராங்கனை பவானி தேவி தங்கம் வென்று அசத்தல்

College Athlete Sprints Training/DUBAI

Image
College Athlete Sprints Training at  Dubai by  Kanish Kumar video link by Kanish Kumar

*மனுவேல் ஆரோன்: இந்திய செஸ் விளையாட்டின் பிதாமகர்!*

Image
  *மனுவேல் ஆரோன்: இந்திய செஸ் விளையாட்டின் பிதாமகர்!* சென்னையில் செஸ் ஒலிம்பியாட் 2022 தொடங்கியுள்ள இந்த இனிய வேளையில், இந்திய செஸ் விளையாட்டின் பிதாமகர் என போற்றப்படும் மனுவேல் ஆரோன் குறித்து பார்ப்போம். சதுரங்க விளையாட்டில் அவரது அசாத்திய சாதனைகள் படைத்த அவர், மாடர்ன் டே சர்வதேச செஸ் விளையாட்டு நடைமுறைகளை இந்தியாவில் பிரபலப்படுத்திய ஜாம்பவான் எனவும் அறியப்படுகிறார். இன்று இந்தியாவில் செஸ் விளையாட்டில் சர்வதேச அளவில் சாதனை படைத்த பல கிராண்ட் மாஸ்டர்கள் உள்ளனர். அதில் லேட்டஸ்ட் சென்சேஷனாக இருப்பவர் பிரக்ஞானந்தா. ஆனால், இவர்கள் அனைவருக்கும் முன்னவராக இந்தியா சார்பில் சர்வதேச அளவில் சாதித்தவர்தான் மனுவேல் ஆரோன். சர்வதேச மாஸ்டர் (இன்டர்நேஷனல் மாஸ்டர்) என்ற பட்டத்தை வென்ற முதல் இந்தியர். 20-ம் நூற்றாண்டில் கருப்பு மற்றும் வெள்ளை நிறத்திலான 64 கட்டங்களில் தனது ஆட்சியை நிறுவியவர் மனுவேல் ஆரோன். நெதர்லாந்து வீரர் மேக்ஸ் யூவே, ஹங்கேரி வீரர் லாஜோஸ் போர்டிஷ், ஜெர்மன் வீரர் வூல்ஃப்கேங் உல்மன் போன்ற பல சர்வதேச நாடுகளை சேர்ந்த வீரர்களுடன் இவர் விளையாடிய போட்டிகள் புகழ்பெற்றதாக அறியப்படுகிறது. ச...

GYNMC team are giving stress management for chess players of 44th INTERNATIONAL

Image
The Government Yoga and Naturopathy Medical College and Hospital Team giving stress management to the chess players GYNMC team are giving stress management for chess players of 44th INTERNATIONAL  CHESS OLYMPIAD  

இந்திய மல்யுத்த வீரர் தாரா சிங்

Image
  ஜூலை 12 - இன்று புகழ்பெற்ற இந்திய மல்யுத்த வீரர் தாரா சிங் நினைவு நாள் (2012)  பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் தர்மூசக் என்ற இடத்தில் பிறந்தார் (1928). தாராசிங் ரன்தாவா என்பது இவரது முழு பெயர். இவரது ஊர் ஊராகச் சென்று மல்யுத்தப் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிகளைப் பெற்றார் . 1947-ல் சிங்கப்பூர் சென்றார். அங்கு பல போட்டிகளில் வென்றார். 1954-ல் இந்தியா திரும்பியபின் இந்திய மல்யுத்த சாம்பியனாக உயர்ந்தார். 1959-ல் முன்னாள் உலக சாம்பியனை வென்று காமன்வெல்த் உலக சாம்பியன் பட்டத்தை வென்றார். 1968-ல் அமெரிக்க சாம்பியன் லவ் தேஸை முறியடித்து ஃப்ரீஸ்டைல் மல்யுத்தத்தில் உலக சாம்பியன் பட்டம் வென்றார். தொடர்ந்து கனடா, நியுசிலாந்து, ஜப்பான், பாகிஸ்தான், இங்கிலாந்து நாட்டு வீரர்களை வென்றார்.      தாரா சிங் 1960 ஆம் ஆண்டு உலக மல்யுத்தப் பட்டத்தை வென்றவர். பின்னர் பல ஹிந்தி திரைப்படங்களிலும், தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்தார். இந்தியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராமாயணம் தொடரில் அவர் ஹனுமானாக நடித்தார். அதன் மூலம் அவர் மேலும் மக்களிடம் பிரபலமானார். அவர் இந்திய நாடாளுமன்றத்தின...

ஜூன் 25, 1983 - கிரிக்கெட் உலக கோப்பை

Image
 வரலாற்றில் இன்று ஜூன் 25, 1983 - கிரிக்கெட் உலக கோப்பையை இந்திய அணி வென்றது   இந்த போட்டியில் இந்திய அணி ஆல்-ரவுண்டர் கபில்தேவ் தலைமையில் களம் கண்டது. இந்திய அணியில் ஸ்ரீகாந்த், சுனில் கவாஸ்கர், மொகிந்தர் அமர்நாத், கீர்த்தி ஆசாத், ரோஜர் பின்னி, சையது கிர்மானி, மதன்லால், சந்தீப் பட்டில், பல்விந்தர் சந்து, யஷ்பால் ஷர்மா, ரவிசாஸ்திரி, சுனில் வல்சன், வெங்சர்க்கார் ஆகியோர் இடம் பிடித்து இருந்தனர். லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இறுதிப்போட்டியில் இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் சந்தித்தன இந்திய அணி 54.4 ஓவர்களில் 183 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக தமிழகத்தை சேர்ந்த ஸ்ரீகாந்த் 38 ரன்கள் எடுத்தார்.. குறைந்த எண்ணிக்கையிலான இலக்கு என்றபோதிலும்  வெஸ்ட்இண்டீஸ் அணி 52 ஓவர்களில் 140 ரன்னில் சுருண்டது. இதன் மூலம் 43 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று முதல்முறையாக உலக கோப்பையை தன்வசமாக்கியது. இந்திய அணி தரப்பில் மொகிந்தர் அமர்நாத், மதன்லால் தலா 3 விக்கெட்டும், பல்விந்தர் சந்து 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். இந்திய வீரர் மொகிந்தர் அமர்நாத் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

தமிழனாய் வாழ்வது எனக்குப் பெருமை: மகளிர் கிரிக்கெட்டை 23 ஆண்டுகள் ஆண்ட தமிழச்சி மிதாலி ராஜ்

Image
  சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இந்தியாவின் மிதாலி ராஜ் ஓய்வு மிதாலி ராஜ் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் எண்ணற்ற பல சாதனைகளை படைத்துள்ளார். மும்பை, அனைத்து வடிவிலான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் (வயது 39) இன்று அறிவித்துள்ளார் . இந்திய பெண்கள் கிரிக்கெட் அணிக்கு மகத்தான பங்களிப்பை வழங்கியுள்ள மிதாலி ராஜ் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் எண்ணற்ற பல சாதனைகளை படைத்துள்ளார். அயர்லாந்து அணிக்கு எதிராக 1999 ஆம் ஆண்டு இந்திய அணிக்கு அறிமுகமாகிய மிதாலி, பெண்கள் ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர் என்ற சாதனையுடன் ஓய்வு பெற்றுள்ளார். இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் 232 போட்டிகளில் 7805 ரன்களை மிதாலி ராஜ் குவித்துள்ளார். இவரது தலைமையின் கீழ் இந்திய அணி 2017 ஆம் ஆண்டு உலகக்கோப்பை இறுதிப்போட்டி வரை முன்னேறியது. தனது டுவிட்டர் பக்கத்தில் ஓய்வு முடிவை அறிவித்துள்ள அவர் பதிவிட்டுள்ளதாவது, "பல ஆண்டுகளாக உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. உங்கள் ஆசிர்வாதத்துடனும் ஆதரவுடனும் எனது 2வது இன்னிங்ஸை எதிர்நோ...