Saturday, November 30, 2019

சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் கனமழை

தாம்பரம் பல்லாவரம் குரோம்பேட்டை மீனம்பாக்கம் அனகாபுத்தூர் குன்றத்தூர் சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது 


 பாஸ்டாக் அட்டை பெறுவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு


 

 •  
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் மின்னணு முறையில் கட்டணம் செலுத்துவதற்கான பாஸ்டாக் அட்டையை பொருத்துவதற்கான அவகாசம் வரும் 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பாஸ்டாக் அட்டையை வாகனங்களில் பொருத்தாவிடில் நாளை முதல் இரு மடங்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், பாஸ்டாக் அட்டை பெறுவதற்கான அவகாசத்தை வரும் 15ம் தேதி வரை சாலைபோக்குவரத்து அமைச்சகம் நீட்டித்துள்ளது. அதுவரை ரொக்கமாகவும் சுங்கச் சாவடிகளில் கட்டணம் செலுத்தலாம். இதுவரை சுமார் 70 லட்சம் வாகனங்களுக்கு பாஸ்டாக் அட்டை விநியோகம் செய்யப்பட்டுள்ளது.


பாஸ்டாக் அட்டை இல்லாத வாகனங்களுக்கு நாளை முதல் இரு மடங்கு சுங்கக் கட்டணம் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நடிகை நமீதா பாஜகவில் இணைந்தார்.

இன்று சென்னையில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக வருகை தந்துள்ள பாஜகவின் செயல்தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் நடிகை நமீதா பாஜகவில் இணைந்துள்ளார்.


சும்மா கிழி பாடல் 'தண்ணி கொடம்' பாடலின் காப்பி

தர்பார் படத்தின் சும்மா கிழி பாடல் 'தண்ணி கொடம்' பாடல் டியூன் காப்பிதண்ணி கொடம் எடுத்து பாடல் டியூனை காப்பியடிச்சா கூட பரவால  அதை எஸ்.பி.பி.யை வைத்தே பாட வைத்தது தான் ஹைலட் என்று நெட்டிசன்கள் அனிருத்தை கிண்டல் செய்து வருகின்றனர்.


தர்பார் படத்தில் வரும் சும்மா கிழி பாடலின் லிரிக்கல் வீடியோ சமீபத்தில் வெளியானது. அனிருத் இசையில் எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடிய அந்த பாடலை  கேட்டவர்கள் ஆஹா, நல்லா இருக்கே என்றார்கள். ஆனால் இசை பிரியர்களோ, இதை எங்கேயோ கேட்டது போல  இருக்கே என்று யோசிக்கத் துவங்கினார்கள். அனிருத்து ஐயப்பன் பாட்டு டியூனை இப்படி காப்பியடித்திருக்காரே  சாமி கண்ணைக் குத்தாதா என்று கேட்டு சமூக வலைதளங்களில் சிரிக்கிறார்கள்


. பெரிய ஆளுய்யா நீங்க, இதில் சும்மா கிழிக்க ரெடியா கண்ணுங்களான்னு கொஞ்ச நஞ்ச பில்ட்அப்பா கொடுத்தீர் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.


 


 


 


 


   இன்னும் சிலரோ சும்மா கிழி பாடலை கேட்டவுடன் அட தண்ணி கொடம் எடுத்து தங்கம் நீ நடந்து வந்தா தவிக்குது மனசு தவிக்குது பாடலின் டியூனை தான் அனிருத் சுட்டுட்டார் என்று கூறி அந்த பாடலின் வீடியோ வெளியிட்டுள்ளனர். மேலும் தண்ணி கொடம் எடுத்து பாடலை பாடிய எஸ்.பி. பாலசுப்ரமணியத்தையே சும்மா கிழி பாடலையும் பாட வைத்த அனிருத் பெரிய ஆளு தான் என்று கூறி கலாய்த்து மீம்ஸ் போட்டு தள்ளுகின்றனர்


சும்மா கிழி பாடலை ரஜினி ரசிகர்கள் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருக்க மற்றவர்களோ, அனிருத்தின் இப்படி காப்பியடித்து அதற்கு பெரிய பில்ட்அப் கொடுப்பது சூப்பர் ஸ்டாரின் இமெஜை பாதிக்கிறது பாலுவின் இமெஜையும் இப்படி பாதிக்கவைக்கிறதே . என்ன தான் காப்பின்னாலும் ஒரு நியாயம் வேண்டாமா அனிருத்து என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பிக்கொண்டிருக்கிறார்கள்


விவேக் ரஜினிக்காக அவரின் வருங்கால அரசியல் வாழ்க்கையை எல்லாம் மனதில் வைத்து யோசித்து யோசித்து மாஸாக பாட்டு எழுதியுள்ளார் என்று ரசிகர்கள் பாராட்டிக் கொண்டிருக்க ஒரு கூட்டமோ இப்படியும் வீடியோ போட்டு ஒன்னுமே இல்ல கண்ணா என்று கிண்டல் செய்து கொண்டிருக்கிறது.


  


வசூல் ராஜா

மக்கள் நீதி மய்யமா? அல்லது , மல்ட்டி லெவல் மார்க்கட்டிங்கா?


 நடிகராக இருந்த கமல்ஹாசனின் படங்கள் கலெக்‌ஷனை பார்ப்பதே கடினம்


ஆனால் அரசியல்வாதி ஆகிவிட்ட கமலின்.. கட்சி தற்போது  செம  கலெக்‌ஷனை அள்ளிக் குவிக்க துவங்கியிருக்கிறது! என்று தாறுமாறாக வசூல் ராஜா எள நம்மவரை கிண்டலடிக்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்....


 கட்சியை வெச்சு சம்பாதிக்க ஆரம்பித்துவிட்ட கமல் அது  மக்கள் நீதி மய்யமா? அல்லது , மல்ட்டி லெவல் மார்க்கட்டிங்கா என பேச ஆரம்பித்துவிட்டனர்...
எதிர்வரும் உள்ளாட்சி மற்றும் சட்டமன்ற தேர்தல்களை எதிர்கொள்ள தயாராகி வரும் மக்கள் நீதி...மைய்யம்

இதுவரையில் மாநில, மண்டல  மற்றும் மாவட்டத்தின் தலைமை பதவிகளில்தான் நபர்களை நியமித்திருந்தார் கமல். தற்போது உள்ளாட்சி  தேர்தல்களை எதிர்கொள்ள வசதியாக இப்போது மாநிலம் முழுக்க வட்டங்கள், மாவட்டத்தின் பிற அணிகள் என .. எல்லாவற்றையும் ஏகபோகமாக நிரப்ப முடிவெடுத்து, ஆணைகளை வழங்கிவிட்டார். ...
மாவட்டம், வட்டம் அளவில் நிர்வாகிகளை நியமிக்க அவர் போட்டிருக்கும் திட்டம் அக்கட்சியின் நிர்வாகிகளை  திகைக்க வைக்கிறதாம்


...அது கிட்டத்தட்ட மல்ட்டி லெவல் மார்க்கெட்டிங் பிஸ்னஸ் போன்ற யுக்தியை அவர் பயன்படுத்தி அதன்படி, ஒவ்வொரு வட்டத்துக்கும் இருபது பேரை மய்யத்தில் சிறப்பு உறுப்பினர்களாக சேர்க்கனும்  ஒவ்வொரு நபரிடம் இருந்தும் தலைக்கு ஐநூறு ரூபாயை உறுப்பினர் கட்டணமாக் பெற வேண்டும். இப்படி சேரும்... பத்தாயிரம் ரூபாயைஅவர்  மய்யத்தில் கட்ட வேண்டும். இப்ப, இந்த நபர் சேர்த்துவிட்ட இருபது நபர்களும் ஆளுக்கு . இருபது பேரை சேர்க்க வேண்டுமாம். இப்படி செய்வதாலே, யார் அதிக நபர்களை சேர்க்கிறாரோ அவர்தான் நகரம், .. ஒன்றியம் மாதிரியான பதவிகளில் உட்கார வைக்கப்படுவாராம்!.என சொல்கிறார்கள்.. தலைமை வகுத்திருக்கும் இந்த  'வசூல் சட்டம்' மக்கள் நீதி மய்யத்தின் முக்கிய நிர்வாகிகளைக் கடுப்பாக்கி 'ஏற்கனவே லோக்சபாவுக்கு கட்சிக்கு மவுசு மடங்கிப்போச்சு! . ...
இதுல இவரு வேற வசூல் திட்டத்தை போட்டு கட்சியை அசிங்கப்படுத்துறாரே  என புலம்ப ஆரம்பித்துவிட்டனராம்அப்பல்லோவிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகிய கமல்,இது பற்றிலாம் அலட்டிக்கொள்ளாமல் தன் குடும்பத்தினர் எடுக்கும் ஆரத்தி தட்டின் ...
முன் பகுத்தறிவுடன் தலைகுனிந்து நிற்கிறார்.


 


பீகாரி ல் வெங்காயம் கிலோ 35ரூ

*பீகார் மாநிலத்தில் வெங்காயம் ஒரு கிலோ 35 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் அலைமோதும் மக்கள் கூட்டம்.


*பாதுகாப்பு கருதி ஹெல்மெட் அணிந்து விற்பனை செய்யும் கூட்டுறவு அங்காடி ஊழியர்கள்.


 


Friday, November 29, 2019

கனமழை காரணமாக திருச்சி மற்றும் அரியலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை


தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. இதனால், கடந்த சில தினங்களாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. 

 

இந்த நிலையில், கனமழை காரணமாக திருச்சி மற்றும் அரியலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.  

பாரதிராஜா கோரிக்கை

இசையமைப்பாளர் இளையராஜா 45 ஆண்டுகளாக இசையமைத்து வந்த இசைக்கூடத்தை காலி செய்ய பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகம் போதுமான அவகாசம் தர வேண்டும் -பாரதிராஜா கோரிக்கை .


        இளையராஜா கடந்த 45 ஆண்டுகளாக தனது படங்களுக் கான இசைப் பணிகளை சென்னை சாலிக்கிராமம் பிரசாத் ஸ்டுடியோவில் மேற்கொண்டு வந்தார்., கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரசாத் ஸ்டுடியோ - இளையராஜா தரப்பினர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு. தனது இசைப் பணிகளுக்கு பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகம் இடையூறாக இருப் பதாக இளையராஜா தரப்பில் போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. இளையராஜாவும்  கடந்த 2 மாதங்களாக பிரசாத் ஸ்டுடியோவுக்கு செல்லாமல் இருந்தார்.   இந்நிலையில், இயக்குநர்கள் பாரதி ராஜா, பாக்யராஜ், சீமான், ஆர்.கே.செல்வ மணி உள்ளிட்ட திரையுலகினர் பலரும் நேற்று கூட்டாக பிரசாத் ஸ்டுடியோவுக்கு சென்று, இந்த விவகாரம் தொடர்பாக நிர்வாகத்தினரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு முடிவு காண முன்றனர் . பிறகு செய்தியாளர் களிடம் பாரதிராஜா இது குறித்து :


இசையமைப்பாளர் இளையராஜா வுக்காக ஒட்டுமொத்த திரையுலகமும் இங்கு வந்திருக்கிறது. அவர் ஓர் அற்புத மான கலைஞன். கடந்த 45 ஆண்டுகளாக ஒரே இடத்தில் அமர்ந்து தனது இசைப் பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார். காலச்சூழல் காரணமாக, அந்த இடத்தை காலி செய்யுங்கள் என நிர்வாகம் கூறுகிறது. ஒருவர் 10 ஆண்டு கள் ஒரே இடத்தில் இருந்தாலே, அந்த இடம் சென்டிமென்டாக பிடித்துப் போய்விடும். அந்த வருத்தம் அவருக்கு இருக்கலாம். பிரசாத் ஸ்டுடியோ நிர்வாக மும் பெரிய நிறுவனம். அதனால்தான் இரு தரப்புக்கும் சாதக, பாதகம் இல்லாமல் பேச திரையுலகினர் கூடி பேச்சு வார்த்தைக்கு வந்துள்ளோம். இளைய ராஜா இந்த இடத்தை காலி செய்ய போதுமான அவகாசம் தேவை. அதுவரை இந்த இடத்தில் பணியாற்ற அவரை அனுமதியுங்கள் என்று கடிதம் வாயிலாக கோரிக்கை வைத்துள்ளோம்.  


தற்போது எடுக்கும் முடிவால் இளைய ராஜா, பிரசாத் ஸ்டுடியோ, ஒட்டுமொத்த திரையுலகம் என யாருக்கும் பாதகம் இருக்கக்கூடாது. இது பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகத்தின ருக்கு சொந்தமான இடம். இந்த இடத்தில் இருந்து இளையராஜா நாளை வெளியே வரவேண்டிய சூழல் இருந்தால், இன்னொரு இடத்தை அவரே அமைத்துக் கொள்ளலாம். அல்லது, திரையுலகினராக நாங்கள் அவருக்கு ஓர் இடம் அமைத்துக் கொடுக்கவும் வாய்ப்பு உண்டு.


இளையராஜா இங்கு இருந்து பணியாற்றி, வாழ்ந்த உரிமை இருப்ப தால்தான் இரண்டு பேருக்கும் இந்த இடத் தில் உரிமை உண்டு என்று கூறியுள்ளோம்.


பிரசாத் ஸ்டுடியோவை நிர்வகிக்கும் முக்கிய மேலாளர் ஊரில் இல்லாதததால்  தற்போதுள்ள நிர்வாகத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினோம்  .அவர் வந்ததும் மீண்டும் ஒருமுறை எல்லோரும் கூடி பேசி விரைவில் நிச்சயம் நல்ல முடிவு எட்டப்படும். நல்ல முடிவு எடுப்பதாக பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகத்தினரும் தெரிவித்துள்ளனர். இவ்வாறு பாரதிராஜா கூறினார்.


 


ரஜினி சொன்னது தப்பு ரோஜா

ரஜினி சொன்னது தப்பு.. முதல்வர் பழனிசாமி நல்ல ஆளுமை மிக்க தலைவர்.. ரோஜா !


  


தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையுடன் செயல்படுகிறார், தமிழகத்தில் ஆளுமை மிக்க தலைவர்கள் இல்லை என்று நடிகர் ரஜனிகாந்த் கூறியது தவறு என்று நடிகையும் ஆந்திர பிரதேச எம்எல்ஏவுமான ரோஜா கருத்து தெரிவித்துள்ளார்


. கடந்த சில தினங்களுக்கு முன் சென்னையில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் தமிழகத்தில் ஆளுமையான தலைவர்கள் இல்லை. நல்ல தலைவர்களுக்கு இங்கு வெற்றிடம் நிலவி வருகிறது. முறையான வலிமையான தலைவர்களுக்கு வெற்றிடம் நிலவி வருகிறது என்று குறிப்பிட்டார். இது தொடர்பாக அரசியல் தலைவர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். முதல்வர் பழனிசாமி உட்பட அதிமுக தலைவர்கள் எல்லோரும் இதை எதிர்த்து கருத்து தெரிவித்துள்ளனர்.


தமிழக எல்லை இந்த நிலையில் இது தொடர்பாக நடிகையும் ஆந்திர பிரதேச ஆளும் கட்சி எம்எல்ஏவுமான ரோஜாஅளித்த பேட்டியில், ஜெயலலிதா இறந்த பின் நானும் தமிழக அரசியலை கவனிப்பதை நிறுத்திவிட்டேன். ஆனால் என்னுடைய தொகுதியில் பல இடங்கள் தமிழகத்தின் எல்லையில் இருக்கிறது. இதனால் அங்கு தமிழக மக்கள் நிறுவனங்கள் அமைக்க வருவார்கள். அப்போது என்னுடன் பேசுவார்கள். அரசு எப்படி அப்போதெல்லாம் அவர்கள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து பேசினார்கள். தமிழக முதல்வர் சாதாரண பின்னணியில் இருந்து வந்தார். ஆனால் இப்போது அவர் கட்சியை சிறப்பாக வழி நடத்துகிறார். இப்போது இருப்பவர் நன்றாக ஆட்சி செய்கிறார்.


நல்ல தலைவர் நல்ல தலைவராக உருவெடுத்துள்ளார். அதிமுக இல்லாமல் போகும் என்று நினைத்த போது அவர் கட்சியை முன்னுக்கு கொண்டு சென்றுள்ளார். அவர் பெரிய அளவில் முன்னேறி இருக்கிறார். கட்சியை அவர் முன்னேற்றி உள்ளார். ஜெயலலிதா ஜெயலலிதா இருந்த போது அவர் முகத்தை கூட பார்த்தது இல்லை. ஆனால் இப்போது தனிப்பட்ட வகையில் அவர் முக்கிய தலைவராக உருவெடுத்து இருக்கிறார். அவரிடம் ஆளுமை இருக்கிறது. ஆனால் ஏன் நடிகர் ரஜினிகாந்த் தமிழகத்தில் ஆளுமை மிக்க தலைவர்கள் இல்லை என்று கூறினார் என்று தெரியவில்லை என்று ரோஜா குறிப்பிட்டுள்ளார்.


பாக்கியராஜ்க்கு பெண்கள் ஆணையம் சம்மன் 

பெண்களைப் பற்றி அநாகரீகமான முறையில் பேசியதற்காக நடிகர் பாக்கியராஜ்க்கு பெண்கள் ஆணையம் சம்மன் . தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவி கண்ணகி பாக்கயநாதன் சம்மன் வருகின்ற திங்கட்கிழமை விசாரணைக்கு நடிகர் பாக்கியராஜ் ஆஜராகுமாறு அனுப்பியுள்ளார். முன்னதாக பெண்கள் குறித்து அவதூறாக பேசிய நடிகர் பாக்யராஜ் மீது நடவடிக்கை எடுக்க கோரி, தமிழ்நாடு சுதேசி பெண்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் 'கருத்துக்கள் பதிவு செய்' என்ற படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 25ம் தேதி நடந்தபோது விழாவில் கலந்து கொண்ட பாக்யராஜ் 'ஊசி இடம் தராமல் நூல் நுழையாது' என  சொல்வர், பெண்கள் இடம் கொடுப்பதால்தான் தப்பு நடப்பதற்கு வழி வகுக்கிறது. பெண்கள் உஷாராக இருந்தால் நல்லது. ஆண்களை மட்டுமே தப்பு சொல்வது தவறு, ஆண் தவறு செயதால் போகிற போக்கில் போய்விட்டு வந்து விடுவான்.  ஆனால் பெண் தவறு செய்தால் அது, மிகப்பெரிய தவறுக்கு வழி வகுத்துவிடுகிறது.

பெண்கள் சுய கட்டுப்பாடு வைத்துக்கொள்ள வேண்டும். இன்று மொபைல் போன் வளர்ச்சியால் பெண்கள் எங்கேயோ போய்க்கொண்டிருக்கின்றனர். அதனால் தவறும் சுலபமாக நடக்கிறது. பொள்ளாச்சி பாலியல் குற்றத்திற்கு ஆண்கள் மட்டுமே  காரணம் அல்ல. பெண்களின் பலவீனத்தை ஆண்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர். ஆண்கள் செய்தது தப்பு என்றால், அந்த வாய்ப்பை உண்டாக்கி கொடுப்பது பெண்கள்தான்'' என்று பேசியுள்ளார்


ஒட்டு மொத்த பெண்களின் கவுரவத்தை  இழிவுசெய்யும் விதமாக பேசியுள்ள நடிகர் பாக்யராஜ் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி புகார் மனுவில் கூறிப்பட்டுள்ளது. இதனையடுத்து  வரும் டிசம்பர் 2ம் தேதி நடிகர் பாக்யராஜ் நேரில் ஆஜராக தமிழக மகளிர் ஆணையம் சம்மன் அளித்துள்ளது


பொங்கல் பரிசு தொகுப்பு திட்டம் தொடக்கம்


பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.


 


ஆயிரம் ரூபாய் ரொக்கத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்புத் திட்டத்தை முதலமைச்சர் இன்று தொடக்கி வைக்கிறார். சென்னை தலைமைச் செயலகத்தில், இன்று காலை நடைபெற்ற விழாவில், பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்


மற்றும் 1கோடி 67 இலட்சம் மதிப்புள்ள.விலையில்லா வேட்டி சேலை வழங்கும திட்டத்தையும் தொடங்கி வைத்தார்


 நிகழ்வீன் அடையாளமாக முதற்கண் இன்று 16 குடுமபங்களுக்கு பொங்கல் பரிசும் மற்றும் விலையில்லா வேட்டி சேலைகளும் வழங்கப்பட்டன.


 


 இந்த விழாவுக்கு, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, உணவுத் துறை அமைச்சர் காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


 


 தலைமைச் செயலாளர் க.சண்முகம், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலாளர் தயானந்த் கட்டாரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 


 


இந்தப் பொங்கல் பரிசு 2 கோடியே 5 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படுகிறது. பொங்கல் பரிசு தொகுப்பில், ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம், பச்சரிசி, சர்க்கரை தலா 1 கிலோ, கரும்பு, முந்திரி, உலர் திராட்சை, ஏலக்காய் ஆகியவை இடம் பெற்றிருக்கும். 


திருப்பத்தூர் மாவட்டம் உதயம்

வேலூர் மாவட்டம் மூன்றாக பிரிக்கப்பட்டு திருப்பத்தூர், ராணிப்பேட்டை புதிய மாவட்டங்கள் உதயமானது. இந்த மாவட்டங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தொடங்கி வைத்தார்.


,

வேலூர் மாவட்டம் நிர்வாக வசதிக்காக 3 ஆக பிரிக்கப்படும் என்று சுதந்திர தின விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்படி  வேலூர் மாவட்டத்தை 3 ஆக பிரித்து திருப்பத்தூரை தலைமையிடமாகக் கொண்டு திருப்பத்தூர் மாவட்டமும், ராணிப்பேட்டையை தலைமையிடமாகக் கொண்டு ராணிப்பேட்டை மாவட்டமும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.
புதிதாக தோற்றுவிக்கப்பட்ட மாவட்டங்களின் தொடக்க விழா 28.11.2019 நேற்று கோலாகலமாக நடந்தது. திருப்பத்தூர் மாவட்டத்தின் தொடக்க விழா திருப்பத்தூரில் உள்ள டான்பாஸ்கோ மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நேற்று காலை 11 மணிக்கு நடந்தது.

விழாவுக்கு  துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமை தாங்கினார். அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், கே.சி.வீரமணி, நிலோபர் கபில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை செயலாளர் க.சண்முகம் வரவேற்று பேசினார். கூடுதல் தலைமை செயலாளர் அதுல்யமிஸ்ரா திட்ட விளக்க உரையாற்றினார்.

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு 35-வது மாவட்டமாக திருப்பத்தூர் தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், ஏற்கனவே முடிவுற்ற பணிகளை தொடங்கியும் வைத்தார். மேலும் பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.திருப்பத்தூர் மாவட்ட தொடக்கவிழாவில் ரூ.94 கோடியே 37 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள், நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வழங்கினார்.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் திரு ம. ப. சிவன் அருள் , இ .ஆ .ப அவர்கள்நலத்திட்ட உதவிகளுக்கான காசோலையை முதலமைச்சரிடமிருந்து பெற்றுக்கொண்டார்அதை தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்ட தொடக்க விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசிய தாவது:-

புதிதாக மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளதற்கும், உள்ளாட்சி தேர்தலுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1790-ம் ஆண்டில் திருப்பத்தூர் மாவட்டம் உருவாக்கப்பட்டு 3-4-1792 வரை செயல்பாட்டில் இருந்தது. பின்னர் ஒருங்கிணைந்த சேலம் மாவட்டம் உருவாக்கப்பட்டு அதன் தலைநகராக திருப்பத்தூர் இருந்தது. ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட கலெக்டர் அலுவலகம் இன்று ரெயில்நிலையமாக இருக்கிறது. முதல்-அமைச்சர் ஜெயலலிதா காட்டிய வழியில் நடைபெறும் அரசால் திருப்பத்தூர் புதிய மாவட்டமாக தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.Thursday, November 28, 2019

மராட்டியத்தில் முதல் மந்திரியாக உத்தவ் தாக்கரே


மராட்டியத்தில் முதல் மந்திரியாக உத்தவ் தாக்கரே


 

மராட்டிய சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா-சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றும் கருத்து வேறுபாடு காரணமாக ஆட்சி அமைக்க முடியாததால், அந்த மாநிலத்தில் கடந்த 12-ந்தேதி ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

 

அதன்பிறகு அங்கு அடுத்தடுத்து அரசியல் திருப்பங்கள் நிகழ்ந்தன. காங்கிரஸ், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே ஆட்சி அமைக்க இருந்த நிலையில், எதிர்பாராத திருப்பமாக கடந்த 23-ந்தேதி அதிகாலை 5.37 மணிக்கு மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி விலக்கி கொள்ளப்பட்டு, தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித்பவார் ஆதரவுடன் பாரதீய ஜனதா ஆட்சி அமைத்தது. தேவேந்திர பட்னாவிஸ் முதல்-மந்திரியாகவும், அஜித்பவார் துணை முதல்-மந்திரியாகவும் பதவி ஏற்றனர். தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் தொடர்ந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நேற்று மாலைக்குள் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு தேவேந்திர பட்னாவிசுக்கு உத்தரவிட்டதால், தீர்ப்பு வெளியான சில மணி நேரத்தில் துணை முதல்-மந்திரி பதவியை விட்டு அஜித்பவார் விலகினார். அவரை தொடர்ந்து முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசும் ராஜினாமா செய்தார். அவசரகதியில் பதவி ஏற்ற பாரதீய ஜனதா அரசின் ஆயுள் வெறும் 4 நாட்களில் முடிந்து போனது. இதனால் அந்த கட்சிக்கு சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய அவசியமும் இல்லாமல் போனது.

 

இந்நிலையில்  சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி (மராட்டிய வளர்ச்சி முன்னணி) அரசு அமைக்க வழி பிறந்தது. இதையடுத்து, சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே இன்று மராட்டிய முதல் மந்திரியாக பதவியேற்று கொண்டார்.  அவருக்கு கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி பதவி பிரமாணம் செய்து வைத்து உள்ளார்.

 

இந்நிகழ்ச்சியில், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர்களான அஜித் பவார், சகன் புஜ்பால் மற்றும் பிரபுல் பட்டேல் கலந்து கொண்டனர்.  மராட்டிய நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே, தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், முன்னாள் மந்திரி டி.ஆர். பாலு, காங்கிரஸ் தலைவர் அகமது பட்டேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

 


மராட்டிய முதல் மந்திரியாக பதவியேற்ற உத்தவ் தாக்கரேக்கு பிரதமர் மோடி வாழ்த்து


மராட்டிய முதல் மந்திரியாக பதவியேற்ற உத்தவ் தாக்கரேக்கு பிரதமர் மோடி தனது டுவிட்டர் பதிவில் வாழ்த்து தெரிவித்துள்ளார்..  முதல் மந்திரியாக பதவியேற்கும் உத்தவ் தாக்கரேக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதி உள்ளார்.


வெற்றிகரமாக விண்ணில் சீறிப்பாய்ந்த கார்ட்டோசாட் 3

கார்ட்டோசாட்-3' உள்பட 14 செயற்கை கோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி-47 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் சீறிப்பாய்ந்தது.


 


 இந்த வெற்றிக்காக இஸ்ரோ குழுவினருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.


,


. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் இஸ்ரோ ஏற்கனவே பூமி ஆராய்ச்சிக்காக 'கார்ட்டோசாட்' என்று அழைக்கப்படுகிற, முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 8 செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தியுள்ள நிலையில், 9-வது செயற்கைகோளாக 'கார்ட்டோசாட்-3' என்ற செயற்கைகோளை இஸ்ரோ உருவாக்கியது. இது மேம்படுத்தப்பட்ட, அதிநவீன, மூன்றாம் தலைமுறை செயற்கை கோள் ஆகும்.


 


  1,625 கிலோ எடை கொண்ட இந்த 'கார்ட்டோசாட்-3' செயற்கைகோளை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-47 ராக்கெட் மூலம் கடந்த 25-ந் தேதி காலை 9.28 மணிக்கு விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டு பணிகள் நடந்து இதற்காக 26 மணி நேர 'கவுண்ட் டவுன்' என்னும் இறங்குவரிசை ஏற்பாடுகள் நேற்றுமுன்தினம் (செவ்வாய்க்கிழமை) காலை 7.28 மணிக்கு தொடங்கி  நேற்று காலை சரியாக 9.28 மணிக்கு 'கார்ட்டோசாட்-3' மற்றும் 13 நானோ செயற்கை கோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி-47 ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக சீறிப்பாய்ந்தது.


   பி.எஸ்.எல்.வி. சி-47 ராக்கெட்டின் முதல் நிலை மற்றும் 2-ம் நிலையில் திரவ எரிபொருள் நிரப்பப்பட்டு இருந்தது. இந்த ராக்கெட்டின் உயரம் 44.4 மீட்டர் ஆகும். பி.எஸ்.எல்.வி. சி-47 ராக்கெட் புறப்பட்ட 17 நிமிடம் 46 வினாடிகளில் பூமியில் இருந்து 509 கிலோ மீட்டர் உயரத்தில் சூரிய சுற்றுவட்ட பாதையில் திட்டமிட்ட இலக்கில் 'கார்ட்டோசாட்-3' செயற்கைகோளை நிலை நிறுத்தியது.அதைத் தொடர்ந்து அமெரிக்க நாட்டின் 13 நானோ செயற்கை கோள்களும் ஒன்றன் பின் ஒன்றாக சூரிய சுற்றுவட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட்டன.


    பி.எஸ்.எல்.வி. சி-47 ராக்கெட், 'எக்ஸ் எல்' வகையில் 21-வது ராக்கெட் மற்றும் பி.எஸ்.எல்.வி. ரகத்தில் 49-வது ராக்கெட் என்ற பெருமையை பெறுகிறது. அதேபோல் ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து ஏவப்பட்டுள்ள 74-வது ராக்கெட் என்பதுடன் இந்த ஆண்டு ஏவப்பட்டிருக்கிற 5-வது ராக்கெட் என்ற பெருமையையும் இந்த ராக்கெட் பெறுகிறது.


பி.எஸ்.எல்.வி. சி-47 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் சீறிப்பாய்ந்ததும், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் கூடி இருந்த விஞ்ஞானிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். இந்திய விண்வெளி ஆய்வு நிறுவன தலைவர் கே.சிவன், இஸ்ரோ விஞ்ஞானிகள், என்ஜினீயர்கள் மற்றும் ஊழியர்களுடன் கைகுலுக்கி வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டார். ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து இஸ்ரோ தலைவர் கே.சிவன் பேசுகையில், “கார்ட்டோசாட்-3 செயற்கை கோள் மற்றும் 13 வாடிக்கையாளர் செயற்கைகோள்களையும் பி.எஸ்.எல்.வி. சி-47 ராக்கெட், விண்ணில் திட்டமிட்டபடி 509 கி.மீ. உயரத்தில் சுற்றுவட்டப்பாதையில் நிலை நிறுத்தி உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்” என கூறினார்.


தொடர்ந்து பேசும்போது, “இதுவரை இஸ்ரோ வடிவமைத்த செயற்கை கோள்களில் எல்லாம் இந்த கார்ட்டோசாட்-3 செயற்கைகோள் மிக துல்லியமான, நுட்பமான, சவால் நிறைந்த தொழில் நுட்பங்களுடன் வடிவமைக்கப்பட்ட பூமி கண்காணிப்பு செயற்கை கோள் ஆகும்” என்று கூறினார். இந்த அற்புதமான வெற்றிக்காக இஸ்ரோவின் ஒட்டுமொத்த குழுவினருக்கும் அவர் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார். மேலும், வரும் மார்ச் மாதத்துக்குள் 13 விண்வெளி திட்டங்களை இஸ்ரோ நிறைவேற்ற உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 6 ராக்கெட்டுகள் மூலமாக 7 செயற்கை கோள்களை அனுப்ப உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 


    விண்ணில் செலுத்தப்பட்டுள்ள 'கார்ட்டோசாட்-3' செயற்கைகோளின் ஆயுட்காலம் 5 ஆண்டுகள். பொதுவாக செயற்கைகோள்கள் மூலம் பூமியில் உள்ள காட்சிகளை பார்க்க மற்றும் படம் எடுக்க முடியும். ஆனால் 'கார்ட்டோசாட்-3' செயற்கைகோள் சாலையில் செல்லும் வாகனங்கள் மட்டும் அல்லாது சாலையில் நடந்து செல்பவர்களை கூட துல்லியமாக பார்க்கவும், படம் எடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. 'கார்ட்டோசாட்-3' செயற்கைகோளானது பெரிய அளவிலான நகர்ப்புற திட்டமிடலுக்கான பணிகளுக்கு உதவும். கிராமப்புற வள மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களுக்கும் இது உதவும். மேலும், கடலோர நில பயன்பாடு பணிகளுக்காகவும் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த செயற்கைகோள் மூலம் நிலப்பரப்பில் எவ்வளவு தூரம் கடல் வெளியே வந்து உள்ளது அல்லது கடல் எந்தப்பகுதிகளில் உள்வாங்கி உள்ளது என்பதை துல்லியமாக பார்க்க, படம் பிடிக்க முடியும்.  எதிரிகளின் ராணுவ நிலைகள், ஆயுதக்கிடங்குகளையும் கூட கார்ட்டோசாட்-3 செயற்கை கோள் படம் பிடித்து அனுப்பும். இந்த செயற்கை கோளில் பொருத்தப்பட்டுள்ள அதிநவீன கேமராக்கள் மூலம் எடுக்கப்படும் படங்கள் மிகவும் துல்லியமாகவும், தெளிவாகவும் (0.25 மீட்டர் அதாவது 25 சென்டி மீட்டர் வரை) இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


 


பி.எஸ்.எல்.வி. சி-47 ராக் கெட் விண்ணில் வெற்றிகரமாக சீறிப்பாய்ந்ததற்கு இஸ்ரோ குழுவினருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.


மு.க.ஸ்டாலின் மும்பையில்

உத்தவ் தாக்கரே பதவியேற்பு விழா

 


உத்தவ் தாக்கரேவின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மும்பை சென்றுள்ளார்.

 


,

 

மராட்டிய மாநிலத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி (மராட்டிய வளர்ச்சி முன்னணி) அரசு அமைய உள்ளது. இந்த கூட்டணியின் தலைவராக சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.1

இதையடுத்து உத்தவ் தாக்கரே இன்று மராட்டிய மாநிலத்தின் முதல் மந்திரியாக பதவியேற்க உள்ளார். மும்பையில் உள்ள சிவாஜி பார்க் மைதானத்தில் இன்றி மாலை 6.40 மணிக்கு இந்த பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. 

 

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சோனியா காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சத்திஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகல், மத்திய பிரதேச முதல்வர் கமல் நாத் மற்றும் பல முக்கிய நபர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக  மும்பை சென்றுள்ளார்.  இன்று மாலை நடைபெறும் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார். 

Tuesday, November 26, 2019

1980 களின் பிரபல  நடிகர்கள் நடிகைகள் சந்திப்பு1980-களின் பிரபல  நடிகர், நடிகைகள் சந்திப்பு


 தென்னிந்திய திரையுலகம் 1980கள்  ஒரு பொற்காலமாக திகழ்ந்ததது  அப்போது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களில் அறிமுகமானவர்கள் முன்னணி கதாநாயகர்களாகவும்  கதாநாயகியாகளாகவும் பிரபலமானார்கள்.


சினிமாவில் நீண்ட காலம் நீடித்து பல சாதானைகளை செய்தார்கள்ர். அப்போதைய நடிகர்களைத்தான் ஒவ்வொரு மொழியிலும் இன்றைக்கும் சூப்பர் ஸ்டாராக ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். 


 


. 80-களின் திரையுல நடிகர்-நடிகைகள் ஒவ்வொரு வருடமும் குறிப்பிட்ட இடத்தில் சந்தித்து பேசுவது வழக்கம்.


 


சென்னையில்தான் இந்த சந்திப்புகள் நடந்துள்ளன. இந்த ஆண்டுக்கான சந்திப்பு ஐதராபாத்தில் உள்ள நடிகர் சிரஞ்சீவி வீட்டில் நடந்தது. இதில் நடிகர்கள் சரத்குமார், பாக்யராஜ், பிரபு, சிரஞ்சீவி, ஜெயராம், சுமன், சுரேஷ், ரகுமான், நாகார்ஜுனா, மோகன்லால், வெங்கடேஷ், ஜெகபதி பாபு, ரமேஷ் அரவிந்த், பானுசந்தர், நடிகைகள் குஷ்பு, ராதிகா, ஜெயசுதா, ஷோபனா, சுமலதா, நதியா, ராதா, அமலா, சரிதா, லிசி, பூர்ணிமா, ஜெயபிரதா, ரேவதி, மேனகா, அம்பிகா, சுகாசினி உள்பட பலர் கலந்து கொண்டனர். 


 


அனைவரும் வழக்கம்போல ஒரே நிறத்தில் ஆடை அணிந்து இருந்தனர். ஒருவருக்கொருவர் கைகுலுக்கியும் கட்டிப்பிடித்தும் நலம் விசாரித்தனர். பழைய நினைவுகளையும் பகிர்ந்து கொண்டனர். பின்னர் அனைவரும் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர். சிரஞ்சீவி வீட்டிலேயே அனைவருக்கும் விருந்து பரிமாறப்பட்டது.


அரிசி குடும்ப அட்டையாக மாற்றுவதற்கான காலக்கெடு

        சர்க்கரை குடும்ப அட்டையை அரிசி குடும்ப அட்டையாக மாற்றுவதற்கான காலக்கெடு மூன்று நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

  

   தமிழகத்தில் ரேசன் பொருட்களை பெறுவதற்கான குடும்ப அட்டைகளில் 10 லட்சத்திற்கும் அதிகமானவை சர்க்கரை குடும்ப அட்டகளாக உள்ளன.  இவற்றை அரிசி குடும்ப அட்டைகளாக மாற்ற விரும்புவோர் அதற்கான விண்ணப்பங்களை சமர்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.


இந்த விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி இன்றோடு  முடிவடையும் நிலையில் இதனை வரும் 29-ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

 

தமிழகத்தில் 10 லட்சத்திற்கும் அதிகமான சர்க்கரை குடும்ப அட்டைகள் உள்ள நிலையில் இதுவரை 1 லட்சம் விண்ணப்பங்கள் மட்டுமே பெறப்பட்டுள்ளன. எனவே விண்ணப்பங்களை சமர்ப்பிக்க மேலும் மூன்று நாட்கள் கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. 

 

சர்க்கரை குடும்ப அட்டையை அரிசி அட்டையாக மாற்ற விரும்புவோர் வட்ட வழங்கல் அலுவலர், உதவி ஆணையர் அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம். மேலும், இணையதளம் வாயிலாக www.tnpds.gov.in என்ற இணையதள முகவரியிலும் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.நீங்கள் அனைவருமே முதல்-மந்திரிகள் தான் உத்தவ் தாக்கரே


நான் மட்டுமல்ல, நீங்கள் அனைவருமே முதல்-மந்திரிகள் தான் உத்தவ் தாக்கரே


 


நான் மட்டுமல்ல நீங்கள் அனைவருமே இம்மாநிலத்தின் முதல்-மந்திரிகள் தான் என்று எம்எல்ஏக்கள் முன்னிலையில் உத்தவ் தாக்கரே கூறினார்.


,


 


மராட்டிய  மாநிலத்தின் புதிய முதல்-மந்திரியாக  சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே விரைவில் பதவி ஏற்க உள்ளார். இன்று மாலை மும்பையில் நடைபெற்ற 3 கட்சிகளின் எம்.எல்.ஏக்கள்  ஆலோசனை கூட்டத்தில் உத்தவ் தாக்கரே ஒருமனதாக முதல்-மந்திரியாக தேர்வு செய்யப்பட்டார்.


 


இந்த நிலையில் சிவசேனா,தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் முன்னிலையில் உத்தவ் தாக்கரே பேசியதாவது:-


 


ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை வைத்து தேசத்துக்கு புதிய பாதையை காட்டியுள்ளோம். மாநிலத்தின் முதல்-மந்திரி ஆவேன் என ஒருபோதும் கனவு கண்டது இல்லை. சோனியா காந்திக்கும் மற்றவர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். சிவசேனா தொண்டர்களுக்கு நன்றி, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் நன்றி. முக்கியமான நேரத்தில் ஒற்றுமை காத்த  அனைத்து எம்எல்ஏக்களுக்கும் நன்றி. நான் எதற்கும் அஞ்சவும் இல்லை, பொய்கள் என்பது இந்துத்துவாவின் அங்கம் அல்ல.


 


தேவேந்திர பட்னாவிஸ் எழுப்பிய அத்தனை கேள்விகளுக்கும் நான் பதிலளிக்க தயார். பாஜக மக்களை ஏமாற்றிவிட்டது. நான் மட்டுமல்ல நீங்கள் அனைவருமே இம்மாநிலத்தின் முதல்-மந்திரிகள் தான், இன்றைய நிகழ்வு தான் உண்மையான ஜனநாயகம். சத்ரபதி சிவாஜி கனவு கண்ட  மராட்டிய மாநிலத்தை நாம் உருவாக்குவோம். 


 


 


பொங்கல் பண்டிகைக்கு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000

பொங்கல் பண்டிகைக்கு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000

 


               பொங்கல் பண்டிகைக்கு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

 


 


     கள்ளக்குறிச்சி புதிய மாவட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று துவக்கி வைத்து பல்வேறு புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அவர் பேசியதாவது:-

 

                   பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக தலா 1000 ரூபாய் வழங்கப்படும். அரிசி ரேசன் அட்டை வைத்திருப்போருக்கு இந்த தொகை வழங்கப்படும். மேலும் பொங்கல் வைப்பதற்கான ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முந்திரி, திராட்சையுடன் கரும்பு ஆகியவை அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பும் வழங்கப்படும்” என்றார்.

இளையராஜா பிரசாத் ஸ்டூடியோ விவகாரம்  பேச்சுவார்த்தை

இளையராஜா - பிரசாத் ஸ்டூடியோ விவகாரம்  பேச்சுவார்த்தை


இசையமைப்பாளா் இளையராஜாவுக்கு ஆதரவாக பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகத்துடன் பேச திரையுலகம் மற்றும் ரசிகா்களுக்கு இயக்குநா் பாரதிராஜா அழைப்பு விடுத்துள்ளார்.


சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோ. இங்குதான் பல ஆண்டு காலமாக இளையராஜா இசையமைத்து வருகிறார். அவருக்கென தனி தியேட்டா் ஒதுக்கி கொடுத்திருந்தது பிரசாத் நிர்வாகம்.


 தற்போது வருமானத்தை பெருக்கும் விதமாக, எல்.வி.பிரசாத்தின் வாரிசுகள் இளையராஜாவின் ஸ்டூடியோவை இடித்து விட்டு, மாற்று தியேட்டா் கொண்டு வர முடிவு செய்தனா். இதனால் அங்கே இப்போது இளையராஜாவின் இசைப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.


இந்த நிலையில் திரையுலகினா் பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகத்தினரை சந்தித்து இளையராஜாவின் காலம் வரை அவரை அந்த ஸ்டூடியோவை பயன்படுத்திக் கொள்ள அனுதிக்க கேட்டு பேச இருக்கிறார்கள். இது தொடா்பாக பாரதிராஜா அவர்கள்


''அரை நூற்றாண்டு கடந்து தமிழ் சினிமாவை இன்றும் தன் இசையால் உலகத் தமிழா்களின் நெஞ்சங்களை தொடா்ந்து தன்வசப்படுத்திக் கொண்டிருக்கும் இளையராஜாக்வுகும், பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகத்துக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் பிரசாத் ஒலிப்பதிவு கூடத்தில் இளையராஜாவின் திரைப்பட ஒலிப்பதிவு வேலைகள் பாதிக்கப்பட்டுள்ளது.


இது மிகவும் வருத்தத்திற்குரிய நிகழ்வாகும். ஆகையால் மீண்டும் இசைப்பணிகளை அங்கு தொடா்ந்திட, பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகத்துடன் சுமூகமான பேச்சுவார்த்தை மேற்கொள்ளும் விதமாக அனைத்து படைப்பாளிகளும் ,தயாரிப்பாளா்களும், ரசிகா்களும் வரும் வியாழக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு சாலிகிராமம் பிரசாத் ஸ்டூடியோவில் ஒன்றுகூடுமாறு அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் ''என தெரிவித்துள்ளார்


.


 


இளையராஜா விழாவில் பிரதமர் மோடி

இளையராஜா விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு?மோடியின் நம்பிக்கைக்குரியவரும், பா.ஜ.க. நிர்வாகிகளிடம் வீடியோ கான்ஃப்ரன்ஸ் மூலம் மோடி கலந்துரையாடிய நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தவருமான ப்ரித்வி. தமிழ்நாட்டு அரசியலில் சினிமாவுக்கு இருக்கும் தாக்கத்தை உணர்ந்து, நட்சத்திரக் கலைவிழாவை சென்னையில் நடத்த அனுமதி பெற்றிருக்கிறார்


 


 சினிமா ஸ்டார்கள் சங்கமிக்கும் விழாவாக நடத்தி அதில் மோடி கலந்துகொள்ள வைப்பதன்  மூலமாக பா.ஜ.க.வின் மீதான பார்வையை தமிழகத்தில் அதிகம் பதியவைக்க முடியும் என்ற அடிப்படையில், "இளையராஜாவுக்கு சென்னையில் பாராட்டு விழா' என்ற பெயரில் கலைவிழா நடத்தி, அதில் ஒட்டுமொத்த தென்னிந்திய திரைப்பட உலகமே கலந்துகொள்வதற்கான கான்செப்ட்டை தயாரித்து, மோடியின் ஒப்புதலையும் பெற்றுவிட்டது ப்ரித்வி டீம்.
 


 தேதி குறிக்கப்பட்டதும் விழாவுக்கான செயல்திட்டங்கள் விறுவிறுப்படையும்...'. மேலும் நட்சத்திர கலை விழாவில் மோடி பங்கு பெறுவதற்கான வாய்ப்பும் அதிகமாக உள்ளதாகவம்  சொல்லப்படுகிறது. இந்த விழாவில் தமிழ் சினிமாவில் இருக்கும் அனைத்து பிரபலங்களும்ம் கலந்து கொள்ள ஏற்பாடு நடைபெறுவதாகவும் சொல்லப்படுகிறது. இந்த திட்டம் தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சியினருக்கு ஒரு அதிர்ச்சியாக இருக்கலாம் எனவும்பேசப்படுகிறது.  


Monday, November 25, 2019

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


 


இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-


 


“தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பசலனம் காரணமாக, தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழையும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யும்.


 


சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


 


சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, அடுத்த 2 நாட்களுக்கு குமரிக்கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தினார்.


 


தமிழகத்தை பொறுத்தவரை கடந்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன், தங்கச்சிடம் ஆகிய இடங்களில் அதிகபட்சமாக 7 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.


Wednesday, November 20, 2019

சிறந்த செய்திவாசிப்பாளர் ரஞ்சித்

நேர்மையான          மக்கள்_விருதுகள்.
இந்த வருடத்தின் அடுத்த அங்கீகாரம். சிறந்த_செய்திவாசிப்பாளர்  விருதினை திரு ரஞ்சித் அவர்கள் பெற்றுள்ளார்.


இந்த கௌரவத்தை  Sparkling_Events' அவருக்கு வழங்கியுள்ளதுஇந்த பரிசு குறித்து திரு ரஞ்சித் அவர்கள்


    'பாலிமர்_தொலைக்காட்சி  இல்லை என்றால், இந்த விருது இல்லை. உணர்ச்சியோடு செய்தியின் தன்மை அறிந்து செய்தி வாசிக்க முழு சுதந்திரம் தந்ததால்தான் எனக்கென்று தனி ஸ்டைல் உருவாக்கி அதை மெருகேற்றினேன். பல நேரங்களில் அதுவே ட்ரெண்டிங்கிலும் வந்தது.


தொடர்ந்து ஊக்கமளித்து வரும் என் பெற்றோர், மனைவி, முகநூல் சொந்தங்கள், என் மகள் அனைவருக்கும் எனது முத்தங்கள்.


தொடர்ந்து இது போல விருதுகளும் அங்கீகாரமும் கிடைத்திட உங்கள் ஆதரவு இன்று போல் என்றும்' தெரிவித்தார்


டாக்டர் ராமதாசை சந்தித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நலம் விசாரிப்பு

            சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்று வரும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

 . மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவர் என்ற முறையிலும், கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக  கட்சி நிறுவனர் என்ற வகையிலும் அவரை முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி இன்று சந்தித்து நலம் விசாரித்தார்.

அப்போது அமைச்சர்கள் விஜயபாஸ்கர், எம்.சி சம்பத் உடனிருந்தனர்.


மேயர் பதவிக்கு மறைமுகத் தேர்தல்

மேயர் பதவிக்கு மறைமுகத் தேர்தல் நடத்துவதற்கான அவசரச்சட்டத்தை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

 


,

 

மேயர் பதவிக்கு மறைமுகத் தேர்தல் நடத்துவதற்கான அவசர சட்டத்தை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.  மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் மூலம், மேயர் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்களும் மறைமுகத்தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படுவர்  என்று அவசர சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது


அஜித். கண்ணியமானவர் ;

          தொழிலில் மட்டுமே கவனம் செலுத்தும் டீசென்ட் நடிகர் அஜித். கண்ணியமானவர் ; தொழில் பக்தி மிக்கவர் -அமைச்சர் ஜெயக்குமார்.

அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

 

உள்ளாட்சி தேர்தல் குறித்து திமுகவினர் அச்சத்தில் உள்ளனர்.  உள்ளாட்சி தேர்தலை தடுப்பதற்கான முயற்சியில் திமுக இறங்கி உள்ளது.
 

ரஜினி, கமல், விஜய் எல்லாம் மாய பிம்பங்கள், கானல் நீர் போன்று காணாமல் போய்விடுவார்கள். அதிமுக கூட்டணி முன் ரஜினி கமல் இணைப்பெல்லாம் தூள் தூளாகும்.

 

தொழிலில் மட்டுமே கவனம் செலுத்தும் டீசென்ட்  நடிகர் அஜித்.  நடிகர் அஜித் கண்ணியமானவர் ; தொழில் பக்தி மிக்கவர் என கூறினார்.


வெளிநாட்டு நிறுவனங்கள் முதலமைச்சருடன் ஆலோசனை

முதலமைச்சருடன் ஆலோசனை.


ஐக்கிய அரபு நாடுகளை சேர்ந்த முக்கிய பிரதிநிதிகள் மற்றும் தொழிலதிபர்கள் முதலமைச்சரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.


தமிழகத்தில் வெளிநாட்டு நிறுவனங்கள் தொழில் தொடங்குவது தொடர்பாக ஆலோசனை.


Tuesday, November 19, 2019

மக்களின் நலனுக்காக நானும், கமலும் இணையும் சூழ்நிலை ரஜினிகாந்த்

கோவா செல்லும் முன் சென்னை விமான நிலையத்தில் ரஜினிகாந்த் பேட்டி!மக்களின் நலனுக்காக நானும், கமலும் இணையும் சூழ்நிலை ஏற்பட்டால் நிச்சயம் இணைவோம்.


 


ஓ.பன்னீர்செல்வம் கருத்து குறித்து செய்தியாளர்கள் கேட்ட போது "பதில் கூற விரும்பவில்லை" என பேட்டி!


[நானும், ரஜினியும் இணைய வேண்டிய அவசியம் ஏற்பட்டால் இணைவோம்- கமல்ஹாசன்.


 


ரஜினி சொன்ன அதிசயம் உண்மைதான்.


 


நானும், ரஜினியும் இணைய வேண்டிய அவசியம் ஏற்பட்டால் இணைவோம்; தமிழகத்தின் மேம்பாட்டிற்காக சேர்ந்து பயணிக்க வேண்டும் என்றால் பயணிப்போம்- கமல்ஹாசன்.


 


நல்ல தலைவராக இருக்கும்பட்சத்தில் கோத்தபய ராஜபக்ச நியாயமான ஆட்சியை தர வேண்டியது அவரது கடமை- கமல்ஹாசன்.


 


கமலை கிண்டல் செய்த இளையராஜா

கமலை கிண்டல் செய்த இளையராஜா       கமல் 60 நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசனை இளையராஜா கிண்டல் செய்து ரசிகர்களை  கவர்ந்தார்


.  இந்த நிகழ்வில் இசைஞானியின் இசைக்கச்சேரி நடைபெற்றது


       கமல் 60 ஆண்டுகள் சினிமாவில் அவர் சாதனை புரிந்ததை கவுரவிக்கும் வகையில் அவருக்கு விழா17.11.22019 அன்று நடத்தப்பட்டது.


  சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்ற இந்த விழாவில்  கமலுடன் நடித்த நடிகர்கள், நடிகைகள், அவரது நண்பர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.


   உங்கள் நான் எனும் இந்த பிரமாண்ட விழாவில் கமலுடன் 80களில் ஜோடியாக நடித்த பல கதாநாயகிகள் பங்கேற்றனர்.


 பங்கேற்க வந்த சகோதரிகளான அம்பிகாவையும் ராதாவையும் நடிகர் கமல்ஹாசன், மேடையிலிருந்து கீழே இறங்கி சென்று வரவேற்றார்.


அம்பிகா, கமலுக்கு கை கொடுத்து வாழ்த்து கூறினார். ஆனால் நடிகை ராதா கமலை அணைத்து கன்னத்தில் முத்தமிட்டர்.


இதனை மேடையிலிருந்து கவனித்த இளையராஜா, கமல் சார் என அவசரமாக அழைத்தார். ஆனால் அது கமலுக்கு கேட்காததால் அவர், தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தார் இதையடுத்து இப்போதெல்லாம் நாங்கள் கூப்பிட்டால் உங்களுக்கு காது கேட்காதே என்று கிண்டலாக கூறவும்  ரசிகர்கள் ஓவென கத்தி ஆரவாரம் செய்தனர்.


பிறகு  மீண்டும் சத்தமாக அழைத்த இளையராஜா அதே மூடில் என்னுடன் வந்து பாடுப்பாடுங்கள் என்று கூறினார். இதையடுத்து மேடைக்கு சென்ற கமல் மைக்கேல் மதன காமராஜன் படத்தில் இருந்து சுந்தரி நீயும் பாடலை பாடி அசத்தினார்


ஜி யோ மி 5G

வருகிற 2020-ம் ஆண்டு முதல் ஜியோமி சார்பில் வெளியாகும் அத்தனை ஸ்மார்ட்போன்களும் 5ஜி தொழில்நுட்பத்துடனே இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


சோனியா காந்தி மலர் தூவி அஞ்சலி

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது சமாதியில் சோனியா காந்தி மலர் தூவி அஞ்சலி .முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.  இதனை முன்னிட்டு டெல்லியில் உள்ள அவரது சமாதியில் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.


 


இதேபோன்று முன்னாள் பிரதமரான மன்மோகன் சிங் மற்றும் முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி ஆகியோரும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். 


 


Monday, November 18, 2019

காவியமான கருப்பு வெள்ளை திரைப்படங்கள் ---அவள் அப்படிதான்

காவியமான கருப்பு வெள்ளை திரைப்படங்கள்அவள் அப்படிதான்


திரைப்படம்


 


  • ருத்ரய்யா... கிட்டத்தட்ட 36 ஆண்டு காலம் தமிழ் சினிமா தவறாமல் உச்சரிக்கும் படைப்பாளியின் பெயர் இது. இத்தனைக்கும் ருத்ரய்யா இயக்கியவை இரண்டே இரண்டு படங்கள்தான்.

 • இரண்டு படங்களும் பாக்ஸ் ஆபீஸில் பெரிதாகப் போகவில்லை. ஆனால் ருத்ரய்யாவுக்கென்று தமிழ் சினிமாவில் ஒரு பக்கத்தை உருவாக்கும் அளவுக்கு அழுத்தமான பதிவுகளாக அமைந்தன.

 •  

 • ஒன்று அவள் அப்படித்தான். இன்னொன்று கிராமத்து அத்தியாயம்.


   சி.ருத்ரைய்யா தமிழ்த் திரையுலகில் மாறுபட்ட ஒரு இயக்குனராக நுழைந்தவர்.இவரின் சொந்த ஊர் சேலம் அருகிலுள்ள ஆத்தூர். திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் படித்தவர்.சென்னை தரமணியில் உள்ள திரைப்படக் கல்லூரியில் திரைக்கதை எழுத்து மற்றும் இயக்கம் படித்தார்


     இவரது முதல் படமான "அவள் அப்படித்தான்", முன்னணி நட்சத்திரங்களான கமலஹாசன்ரஜினிகாந்த் மற்றும் ஸ்ரீபிரியா ஆகியோர் நடித்திருந்தபோதும்  அவர்களிடமிருந்து வழமையாக ரசிகர்கள் எதிர்பார்க்கும் அம்சங்களைக் கொண்டிராது,


    வேறுபட்ட, உளவியல் தொடர்பான கதையைமைப்பைக் கொண்டிருந்ததால் தோல்வியுற்றது. இருப்பினும், இன்றளவும், தமிழில் வெளிவந்த சிறந்த படங்களில் ஒன்றாகக் கொண்டாடப்படுகிறது.


    புதுமுகங்களை வைத்து 1980 ஆம் ஆண்டு சி.ருத்ரைய்யா இயக்கிய "கிராமத்து அத்தியாயம்" என்னும் திரைப்படமும் தோல்வியுற்றது. இதன் பிறகு அவரது படம் எதுவும் வெளிவரவில்லை. சில முயற்சிகள் துவக்கத்திலேயே தோல்வியுற்று விட்டன.


2014 ஆம் ஆண்டு நவம்பர் 18 ஆம் நாளன்று தனது 67வது அகவையில் சென்னையில் காலமானார்


.


. 1978-ஆம் ஆண்டு வெளிவந்த "அவள் அப்படித்தான்'


. ரஜினி, கமல், ஸ்ரீபிரியா, சரிதா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த இந்தப் படம் இதுவரை வெளிவந்த தமிழ் திரைப்படங்களில் சிறந்த ஒன்றாகக் கருதப்படுகிறது.


   ,இவரது அடுத்த படம் 1980ம் ஆண்டு சந்திரஹாசன் நடிப்பில் வெளிவந்த "கிராமத்து அத்தியாயம்' என்ற படமும்  தமிழ் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றது.


 


       ஒரு சிலருக்கு சிறுவயதில் பார்க்க நினைத்த படங்களை இப்போது பார்க்க வேண்டும் என்று தோன்றும் . தனக்குப் பிடித்த நடிகர்,நடிகை மற்றும்  இயக்குனர்களின் வேறு படங்களைப் பார்க்கத் தோன்றும் . வாசிப்பின் மூலமும் நிறைய திரைப்படங்களைப் பார்க்கத் தோன்றும் . நண்பர்கள் மூலமாகவும் தற்போது Facebook மூலமாகவும் உலகெங்கும் வெவ்வேறு மொழிகளில் உருவான மாறுபட்ட திரைப்படங்கள் பற்றித் தெரிந்து கொள்கிறோம் .புதுத்திரைப்படங்கள் ,படம் பார்த்தவர்களின் கருத்துக்களை வைத்தே மற்றவர்களால் பார்க்கப்படுகின்றன . திரைப்படம் பார்க்கும் பழக்கம் உள்ள ஒவ்வொருவருக்கும்  " இந்தப் திரைப்படங்களைப்  பார்க்க வேண்டும் !" என்று பட்டியல் வைத்து இருப்பார்கள் . ஒவ்வொருவரின் பட்டியலும் கண்டிப்பாக வேறுபடும் .

     அப்படி பார்க்க வேண்டிய திரைப்படங்களின் பட்டியல், அனுபவம் கூட கூட  மாறிக்கொண்டே இருக்கும் .  பார்க்க வேண்டும் என்ற பட்டியல்லில்  " அவள் அப்படித்தான்  கட்டாயம் இடம் பெற்று இருக்கும்


   ஆறுமுகம் என்னும் தனது பெயரை ருத்ரய்யா என்று மாற்றி வைத்துக்கொண்டார்  இப்படத்தின் இயக்குனர்


 . ஸ்ரீபிரியா,கமல்,ரஜினி மற்றும் பலர் இந்தத் திரைப்படத்தில் நடித்திருந்தனர். இளையராஜா இந்தப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

   தமிழ்த் திரைப்பட வரலாற்றில் முற்றிலும் மாறுபட்ட திரைப்படம். நமது எதிர்பார்ப்புகளை பல மடங்கு பூர்த்தி செய்துள்ளது  .மஞ்சு,அருண் மற்றும் தியாகு இந்த மூன்று கதாப்பாத்திரங்களுக்கு இடையேயான உரையாடல் தான் இந்தத் திரைப்படமே . உரையாடல்களின் மையப்புள்ளி அருண் கதாப்பாத்திரம் . அருண் மற்றும் தியாகு ஆகிய இருவருக்கும் இடையேயான உரையாடல் .அருண் மற்றும் மஞ்சு இடையேயான உரையாடல் இத்திரைப்படத்தில் அடுத்தடுத்து இடம்பெறுகிறது . ஆனால் , இந்தக் கதையின் மையப்புள்ளி மஞ்சு கதாப்பாத்திரமே .

    உரையாடல் ,  அதாவது வசனம் இந்தத் திரைப்படத்தில் மிகவும் சிறப்பாக எழுதப்பட்டுள்ளது. ஆங்கிலப்படங்கள் போல இந்தப்படத்திற்கு ருத்ரய்யா ,வண்ணநிலவன் மற்றும் சோமசுந்தரேஸ்வர் ஆகிய மூவரும்  இணைந்து திரைக்கதையும் ,வசனமும்  எழுதியுள்ளனர்


     தமிழ்ச் சூழலில் இது மிகவும் அரிது . ஆங்கில வசனங்கள் அதிகம் இடம்பெற்று இருந்தாலும் கதைச் சூழலுக்கு அழகாக பொருந்துகிறது


. ஒரு சமூக சேவகி கேமரா முன்பு  தோன்ற மேக் அப் போடனுமா னு கேட்குறாங்க .அதற்கு மஞ்சு கதாப்பாத்திரம் சொல்லும் பதில் " நீங்க எப்பவும் போடுவீங்களே இந்த சொசைட்டி மேக் அப் அதைப் போட்டா போதும் " ," வித்தியாசமா இருக்குற மாதிரி காட்டிகிறது ஒரு passon " என்று மஞ்சு தியாகுவே பார்த்து கேட்பார் .அதற்கு அருண் (கமல்)" அப்படி இருக்குறதுதான் சரி னு நான் நம்பறேன் "என்று சொல்வார் .
மனித மனங்களின் கருப்புப்பக்கங்களைப் படம்பிடித்துக் காட்டப்படுவதன் காரணமாகவோ என்னவோ இந்தப்படத்தின் பெரும் பகுதி இருட்டிலேயே படமாக்கப்பட்டுள்ளது . குளோசப் காட்சிகள் சிறப்பாக எடுக்கப்பட்டுள்ளன . நல்லுசாமி மற்றும் ஞானசேகரன்  ஆகியோர்  ஒளிப்பதிவு செய்துள்ளனர் .


வழக்கமான இரண்டரை மணி நேர படங்களோடு ஒப்பிடுகையில் இதன் கால அளவு சிறிது குறைவானது


இளையராஜாவின் இசைக்கு இதில் பெரும்பங்கு உண்டு. வித்தியாசமான படமென்றாலே ராஜாவிற்கு பயங்கர மூடு வந்துவிடுமோ என்னமோ. மனிதர் பின்னியிருந்தார்.

உறவுகள் தொடர்கதை ....
பன்னீர் புஷ்பங்களே.... (கமலின் குரலில்)
அங்குமிங்கும் பாதை உண்டு, இதில் நீ எந்தப்பக்கம்...

போன்ற பாடல்கள் ராஜாவின் சிறந்த இசை வெளிப்பாடுகளில் சில..
அவள் அப்படித்தான் ஒரு அபூர்வமான படம்  தன்னுடன் பழகும் ஆண்களின் தொடர்ச்சியான துரோகத்தினால் பாதிக்கப்பட்டு எல்லா ஆண்களின் மீதும் வெறுப்பை உமிழும் ஒரு பெண், தன்னை அணுகும் ஒரு யோக்கியமான ஆணையும் அவ்வாறே தன் ஒவ்வாத பார்வையினால் ஒதுக்கி பின்னர் தன் தவறை உணருகின்ற கதை. இதை இயக்குநர் சொல்லியிருக்கும் விதம்தான்  நம்மை அசர வைக்கிறது.

    . கமலுக்காகவும் , . இப்படி ஒரு படம் எடுக்க மிகப்பெரும் துணிச்சல் வேண்டும் . படிப்பறிவு சதவீதம் மிகவும் அதிகரித்துள்ள இன்றைய சூழலில் இப்படி ஒரு படம் எடுக்க யாருக்கும் அன்று துணிச்சல் இல்லை . 1978 -ல் இப்படி ஒரு படம் தயாரிக்க யாரும் முன்வராத காரணத்தாலோ என்னவோ ருத்ரய்யாவே இந்தப்படத்தை தயாரித்துள்ளார் . 

   டைட்டில் முதல் முடிவு வரை இந்தப்படம் மற்ற படங்களிலிருந்து வேறுபடுகிறது .. மஞ்சு  கதாப்பாத்திரம் ,மிகவும் சிறப்பாக  படைக்ப்பட்டுள்ளது . பெண்ணிற்கு முக்கியத்துவம் கொடுத்து மிகவும் குறைந்த படங்களே தமிழ் மொழியில் எடுக்கப்பட்டுள்ளன .பெண்களைப் பற்றிப் பேசும் இந்த படம் தமிழ்ப் படங்களில்  பெண்கள் பற்றிய படங்களை முதல் 5 படங்களுக்குள் இந்தப்படம் கண்டிப்பாக இடம்பெறும் முதல் னு கூட சொல்லலாம்


 .    
        இந்தக் கதாபாத்திரத்திற்கு அப்போதிருந்த கதாநாயகிகளில் ஸ்ரீப்ரியாவைத் தவிர வேறு யாரையும் பொருத்திப் பார்க்கமுடியவில்லை மனோரீதியாக பாதிக்கப்பட்ட நிலையில் மூர்க்கத்தனமாக தன் உணர்வுகளை வெளிப்படுத்தும் காட்சிகளை யதார்த்தமாக செய்திருந்தார் .

கமல்தான் இந்தப் பாத்திரத்திற்கு ஸ்ரீப்ரியாதான் சரியாக இருக்கும் என்று இயக்குநருக்கு சிபாரிசு செய்ததாவும் அவரது பேட்டிகளின் மூலம் அறியப்படுகிறது


. ஸ்ரீப்ரியாவும் இதற்காக கமலுக்கு தன் இன்னொரு பேட்டியில் நன்றி தெரிவித்திதாக செய்திகள் உள்ளது.

 

        கமலுக்கு ஒரு மிக கண்ணியமான ஜென்டில்மேன் கதாபாத்திரம். மஞ்சுவின்  கடநத் கால நிகழ்வுகளை அவளின் மூலமே அறிந்தபின்னால் அவள் மீது அனுதாபம் கலந்த தன் காதலை வெளிப்படுத்துகிறார். ஆனால் ஒரு சிக்கலான அதை அவன் மூர்க்கமாக நிராகரிக்க, மனம் உடைந்துபோய் தன் பெற்றோர் நிச்சயித்த பெண்ணை ( சித்ரா) திருமணம் செய்து கொள்கிறார்.

ப்ரியாவிற்கு மேலதிகாரியாகவும், கமலுக்கு நண்பராக வரும் ரஜினிகாந்தின் பாத்திரம் பெண்களின் மீது ஒரு ஆணாக்கியவாதியின் பார்வையை வைத்திருப்பதை கொண்டது  . நெற்றியில் விபூதி பட்டையும், கையில் மது கிளாஸீமாக "நான் என்ன சொல்றேன் மச்சான்" என்று வரும் காட்சிகள் களை கட்டும். பெண்களின் மீது ஒரு ஆணாக்கியவாதியின் பார்வையை வைத்திருக்கும் இவர் பெண்களை வெறும் போகப் பொருகளாக மட்டுமே பார்ப்பார்.

இவ்வளவு திறமையுள்ள இவர் சூப்பர் ஸ்டார் என்கிற அந்தஸ்துடன் வணிக
சூழலில் சிக்கிக் கொண்டதுநமது துரதிர்ஷடமே.

இந்தப்படத்  பெரும்பான்மையான இடங்களில் வசனங்கள் புது சவரக்கத்தி போல் மிக கூர்மையாக இருக்கிறது.
கமல் தன் மீது அபிமானம் காட்டுவதை வெறுக்கும் ஸ்ரீப்ரியா, அவரை வெறுப்பேற்றும் விதமாக ரஜினியுடன் ஒரு பார்ட்டிக்கு செல்வார். அங்கே இருவரும் தனியாக இருக்கும் சூழ்நிலையில், ரஜினி தவறாக அவரை அணுக முயல, ரஜினியின் கன்னத்தில் அறைந்துவிடுவார்.

மறுநாள் ஸ்ரீப்ரியாவை சந்திக்கும் ரஜினி முந்தின நாள் நடந்த நிகழ்வைப்பற்றிய எந்தவித சலனமும் இல்லாமல் உரையாடத்துவங்க, திகைத்துப் போய் நிற்கும் ஸ்ரீப்ரியாவிடம் இவ்வாறு கூறுவார்.

"ஒரு ஆம்பளை, தனியா இருக்கற பொண்ணு கிட்ட எப்படி நடந்துகனமோ அப்படித்தான் நான் நடந்துகிட்டேன். ஒரு துணிச்சலான பொம்பள எப்படி நடந்துகனமோ அப்படித்தான் நீயும் நடந்துகிட்ட. லீவ் இட்."


செம வசனம் இல்ல
இந்தப்படத்தின் இயக்குநர் ருத்ரைய்யால் ஆனந்தவிகடன் இதழுக்கு பேட்டி அளித்தபோது .

'சரியான கதை கிடைக்கவில்லை' என்று இப்போதைய தமிழ் இயக்குநர்கள் கூறுகிறார்களே? என்கிற கேள்விக்கு .

'சிவகாசியில் இருந்து கொண்டு, தீப்பெட்டியை தேடுபவர்கள் இவர்கள்'


என பதில் அளித்திருந்தார் 


 


 


 


. அருணின் கமல்  மென்மையான ஆண்மை குணம் மஞ்சுவிற்குப் பிடித்திருக்கிறது. இருந்தாலும் அவனிடம் கடுமையாகப் பேசுகிறாள். பாறை போன்ற மனதில் வேர்விடத் துடிக்கும் அருணை ஜாக்கிரதையாகத் தவிர்க்கப் பார்க்கிறாள்.

அருணின் வீட்டிற்குச் செல்லும் மஞ்சு ஒரு புத்தகத்தைக் கையிலெடுத்து "நீங்க கம்யுனிஸ்டா?" என்று கேட்கிறாள்.

"இல்லையே...! எல்லாத்தையும் தெரிஞ்சிக்கத் தான் படிக்கிறேன். அப்படியே இருந்தாத் தான் என்ன?" என்று அருண் சொல்கிறான்.

கேள்விக்கான பதிலைச் சீண்டாமல் "எனக்கு செகப்பக் கண்டாலே எரிச்சல்" என்று எங்கோ நகர்ந்து செல்கிறாள். புரட்சிக்கான அதே நிறம் தானே விளக்குடன் தொடர்புபடுத்தி விபச்சாரத்தின் இடத்தை சுட்டிக்காட்டப் பயன்படுகிறது. அந்த முரண்பாடுகளே மஞ்சுவின் வாழ்விலும் பேச்சிலும் வெளிப்படுகிறது.


. வியாபார சினிமா முற்றிலும் ஜீரணித்த ரஜினியின் ஆரம்பகால அசத்தலான நடிப்பு இந்தப் படத்தில் வெளிப்படுகிறது. ரஜினியிடம் இருக்கும் நடிப்புத் திறமை உண்மையிலேயே உயர்ந்தது. அவரும் சவாலான பாத்திரங்களையே விரும்புவார் என்று நினைக்கிறேன். இன்றைய திரைப்படங்களில் அவர் செய்யக் கூடிய கதாப்பாத்திரங்கள் எதிர்காலத்தில் அவரை நகையாடப்போகிறது. அந்த நகைப்பில் இது போன்ற பங்களிப்புகள் மறைந்து  போய்விடுகிறதுஅந்தக்காலத்தில் இசையமைப்பாளர்தான்,
தயாரிப்பு அலுவலகத்துக்கு வரவேண்டும்.
இசையமைப்பாளர் இளையாராஜா அலுவலகத்துக்கு வருகிறார் என்பதற்காக அவசரம் அவசரமாக பேன் வாங்கி மாட்டி இருக்கிறார்கள்.
அது வரை படத்தயாரிப்பு அலுவலகத்தில் பேன் கூட கிடையாது.
ஆனால் அவர் வரும் நேரம் கரண்ட் இல்லை.
அந்த புழுக்கத்திலேதான்,
இன்றும் குளிர்ச்சியையும் இனிமையையும் தரும் டியூனை உருவாக்கி இருக்கிறார்.
இசைக்கருவிகளில்... பியானோதான் இளையாராஜாவுக்கு 'பெட்'.
அவர் பியானோ இசையில் போட்ட 'மாஸ்டர் பீஸ்களில் ஒன்று' ...
'உறவுகள் தொடர் கதை' என்ற பாடலும் ஆகும்.
[ மற்றொன்று 'ஹேராம்' படப்பாடலான 'நீ பார்த்த பார்வை']
இப்பாடலில், இளையராஜாவின் இசையில் 'மோனாலிஸா' தன்மையை உணரலாம்.
கதையின் மையக்கருத்து,


படம் வெளியான நேரம்,
திரைப்பட மேதை மிருணாள் சென் சென்னைக்கு வந்திருக்கிறார்.
தற்செயலாக தியேட்டரில்  'அவள் அப்படித்தான்' படம் பார்த்திருக்கிறார்.
ஒரு கலைத்திரைப்படம் இப்படி புறக்கணிக்கப்பட்டு கிடப்பதைக்கண்டு
மனம் வெதும்பி பத்திரிக்கையாளர்களை வரவழைத்து,
தனது மனக்குமுறலை வெடித்திருக்கிறார்.
'நல்லதோர் வீணையை புழுதியில் கிடத்தியதை' சாடி அவர் கொடுத்த பேட்டி பத்திரிக்கைகளில் வெளியானது.
பத்திரிக்கைகள் தொடர்ந்து கமல்,ரஜினி,ஸ்ரீப்ரியா,ருத்ரையாவிடம் பேட்டி வாங்கி வெளியிட்டு கலை ரசிகர்களிடம் படத்தை கொண்டு சேர்த்தன.
படம் சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய நகரங்களில் நூறு நாட்கள் ஓடியது.

ஒளிப்பதிவு மேதை  'மார்க்கஸ் பார்ட்லே' ,
அந்த வருடத்திற்கான சிறந்த ஒளிப்பதிவிற்கான விருதை
'அழகே உன்னை ஆராதிக்கிறேன்' படத்தை தேர்வு செய்து அறிவித்து விட்டார்.
காரணம் வண்ணப்படங்களுக்கு  மட்டும்தான்,
அப்போது விருது வழங்கி வந்தார்கள்.
எனவே  'அவள் அப்படித்தான்' ,
மார்க்கஸ் பார்ட்லே பார்வைக்கே வரவில்லை.
ஆனால் 'சிறந்த படத்திற்கான' தேர்வுப்பட்டியலில் இருந்த படங்களை திரையிட்ட போது,
'அவள் அப்படித்தானை' பார்த்து இருக்கிறார் மார்க்கஸ் பார்ட்லே.
படத்தின் ஒளிப்பதிவு மிகச்சிறப்பாக இருப்பதை கண்டு,
இப்படத்திற்கும் சிறந்த ஒளிப்பதிவிற்கான விருது வழங்கப்பட வேண்டும்
என அடம் பிடித்திருக்கிறார்.
எனவே முதன் முறையாக 'கருப்பு - வெள்ளை' படத்திற்காக
தனிப்பிரிவு ஒதுக்கப்பட்டது.
அதன்படி,  'அவள் அப்படித்தான்' ஒளிப்பதிவாளர் நல்லுசாமிக்கு
விருது வழங்கப்பட்டது.
சிறந்த படமாக 'அவள் அப்படித்தான்' படத்தை,
தேர்வு செய்து விருது வழங்கினார்கள்.


  • தமிழ் சினிமா முழுமையாக வண்ணத்துக்கு மாறிக் கொண்டிருந்த தருணத்தில், தன் முதல் படத்தை கறுப்பு வெள்ளையில் தந்தார் ருத்ரய்யா. அன்று முன்னணி நடிகர்களாகத் திகழ்ந்த ரஜினி, கமல் (அன்றைய தேதிக்கு கமல் - ரஜினி என்ற வரிசைதான்!) ஸ்ரீப்ரியா, சிவச்சந்திரன் என பாத்திரங்களுக்கேற்ப தேர்வு செய்திருந்தார்.

 •  

 • இறுதிக் காட்சி, ரஜினி காரை ஓட்டிக் கொண்டிருப்பார். பின்னிருக்கையில் புதுமணத் தம்பதிகள் கமல் - சரிதா. உடன் ஸ்ரீப்ரியா. சரிதாவைப் பார்த்து 'பெண்ணுரிமை பத்தி என்ன நினைக்கிறீங்க?' என்று கேட்பார் ஸ்ரீப்ரியா.

 • பதிலுக்கு 'ஓ.. எனக்கு அதப் பத்தியெல்லாம் ஒண்ணும் தெரியாது' என்பார் சரிதா.

 • 'ஆச்சர்யமே இல்ல.. நீங்க சந்தோஷமா இருப்பீங்க!' என்று கூறிவிட்டு இறங்கிக் கொள்வார் ஸ்ரீப்ரியா.

 • 'மீண்டும் ஒரு முறை இறக்கிறாள். இருப்பினும் அவள் மீண்டும் பிறப்பாள். அவள் அப்படித்தான்..' என்ற வாய்ஸ் ஓவருடன் படம் முடியும்!

 •  

 • அன்றைய தேதிக்கு தமிழ் சினிமாவுக்கு ரொம்பவே அந்நியமான, புதிய முயற்சி இந்தப் படம். தோல்வியைச் சந்தித்தது. ஆனால் பின்னாட்களில் மறுவெளியீடாக வந்து வெற்றிப் பெற்றது.

 • இந்தப் படத்தை 100 மறக்க முடியாத இந்திய சினிமாக்களில் ஒன்றாகத் தேர்ந்தெடுத்து கவுரவித்தது ஐபிஎன் தொலைக்காட்சி.


 


---தமிழ் உமா…


மெட் ரோ ரயில் களில் பொழுது போக்கு அம்சங்கள்

மெட்ரோ ரயில் பயணிகளுக்கு இலவச பொழுதுபோக்கு அம்சங்கள்: புதிய செயலி ஜனவரியில் அறிமுகம்
சென்னை மெட்ரோ ரயில் பயணிகளுக்காக பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த செல்லிடப்பேசி செயலி, வரும் ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.


தினசரி ஒரு லட்சம் பயணிகள்: சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், மெட்ரோ ரயில் திட்டம் உருவாக்கப்பட்டது. இதன்படி, விமான நிலையம் முதல் வண்ணாரப்பேட்டை வரை முதல் வழித்தடத்திலும், பரங்கிமலை-சென்ட்ரல் வரை இரண்டாவது வழித்தடத்திலும் திட்டப்பணிகள் நிறைவடைந்து, மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் தினசரி ஒரு லட்சம் போ வரை பயணம் செய்கின்றனா். இந்தப் பயணிகளின் வசதிக்காக பல்வேறு நடவடிக்கைகளை மெட்ரோ ரயில் நிறுவனம் எடுத்து வருகிறது.
இணைப்பு வாகன சேவை, இணைய வசதி(இண்டா்நெட்) உள்பட பல்வேறு வசதிகளை பயணிகளுக்கு மெட்ரோ ரயில் நிறுவனம் வழங்கியுள்ளது.


பொழுதுபோக்கு அம்சங்கள்: இந்நிலையில், மெட்ரோ ரயில் பயணிகளுக்காக பொழுதுபோக்கு அம்சங்களுடனான செல்லிடப்பேசி செயலி, வரும் ஜனவரியில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. மெட்ரோ ரயில் பயணத்தின்போது, பயணிகள் இந்த செயலியை பதிவிறக்கும் செய்து, பாடல்கள், திரைப்படங்கள், நாடகத் தொடா்கள் உள்பட பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை இலவசமாக கண்டு மகிழலாம். இந்த வசதியை, மெட்ரோ ரயில் நிலையங்களில் ஓடும் 42 ரயில்களில் ஏற்படுத்துவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.


ஸ்மாா்ட் போனில்...: இதுகுறித்து மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியது: மெட்ரோ ரயிலில் பயணத்தின் போது, பயணிகளுக்கு பொழுதுபோக்கு அம்சங்களை ஸ்மாா்ட் போன் மூலமாக வழங்க சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் மும்பையை சோந்த சுகா் பாக்ஸ் நெட்ஒா்க் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, மெட்ரோ ரயில்களில் பயணிக்கும் பயணிகள் ஸ்மாா்ட் போன், ஆப்பிள் போன் மூலமாக இந்தச் செயலியை பதிவிறக்கம் செய்து பாடல்கள், திரைப்படங்கள், தொடா்கள் உள்பட பல்வேறு அம்சங்களை ரசித்து மகிழலாம். பயணிகள் மெட்ரோ ரயிலில் ஏறிய பிறகு, ஒய் பை வசதி மூலமாக இந்தச் செயலியைப் பதிவிறக்கம் செய்யலாம். அதன்பிறகு, பாடல்கள், திரைப்படங்கள், நாடகங்கள் ஆகியவற்றை பாா்க்க முடியும். இதற்கு மொபைல் டேட்டா தேவையில்லை.


4 மொழிகளில் நிகழ்ச்சிகள்: தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய 4 மொழிகளில் இந்த பொழுதுபோக்கு அம்சங்களை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தச் செயலியை ஏற்படுத்தும் பணிகள் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது. மெட்ரோ ரயில்கள், பணிமனைகள், மெட்ரோ நிலையங்களில் உள்ள சா்வா்களில் இந்த அம்சங்கள் ஏற்படுத்தப்படுகின்றன. தற்போது, ஒரு மெட்ரோ ரயிலில் முழுமையாக இந்த வசதி முழுமையாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 5 ரயில்களில் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டு, சோதிக்கப்படுகிறது. சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் ஓடும் 42 ரயில்களில் இந்த புதிய செயலியை பயன்படுத்தி பொழுதுபோக்கு அம்சங்கம் நிறைந்த நிகழ்ச்சிகளை பாா்க்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த வசதியை மெட்ரோ ரயில் நிறுவனம் இலவசமாக வழங்கவுள்ளது. மெட்ரோ ரயில் பயணிகள் தங்களின் 45 நிமிஷ பயணத்தில் பாடல்கள், திரைப்படங்கள், தொடா்கள் போன்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை தங்கள் ஸ்மாா்ட் போன் இலவசமாக மூலமாகபாா்த்து மகிழ்ச்சியுடன் செல்ல வேண்டும் என்பதே எங்களது நோக்கம் என்று தெரிவித்தனா்.


திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சென்னையில் புதிய கோவில்

திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சென்னையில் புதிய கோவில் கட்டப்படும்       திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் சென்னை, பெங்களூரு, ஐதராபாத், புவனேஸ்வர், மும்பை மற்றும் டெல்லி ஆகிய 5 இடங்களில் உள்ள திருமலை- திருப்பதி தேவஸ்தான வெங்கடேஸ்வர சாமி கோவிலில் உள்ளூர் ஆலோசனை குழுக்கள் செயல்பட்டுவருகிறது. இந்த குழுக்களின் தலைவர்களை  சமீபத்தில் ஆந்திர மாநில அரசு தேர்வு செய்து முறைப்படி அறிவிப்பு செய்ததது   நேற்று சென்னை தியாகராயநகரில் உள்ள திருமலை- திருப்பதி தேவஸ்தானம் கோவிலில் உள்ளூர் ஆலோசனை குழுவின் புதிய உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழா . விழாவுக்கு தியாகராயநகர் திருமலை-திருப்பதி தேவஸ்தான கோவில் உள்ளூர் ஆலோசனை குழு தலைவர் ஏ.ஜெ.சேகர் ரெட்டி தலைமை தாங்கி  திருமலை-திருப்பதி தேவஸ்தான தலைவர் ஓய்.வி.சுப்பாரெட்டி, துணைத்தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.


இந்த குழுவின்  ஆலோசகர்களாக ஓய்வுபெற்ற நீதிபதிகள் கே.பி.கே.வாசுகி, பி.கலையரசன் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சி.ராஜேந்திரன் பதவி ஏற்றனர். துணைத்தலைவர்களாக ஆனந்தகுமார், பிரபாகர், அனில்குமார் ஆகியோர் பதவி ஏற்றனர். மேலும், 30 பேர் உறுப்பினர்களாக பதவியேற்றனர்.

        பின்னர் ஓய்.வி.சுப்பாரெட்டி, ஏ.ஜெ.சேகர் ரெட்டி ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது கூறியதாவது:-

               திருப்பதி கோவிலில் லட்டு விலையை உயர்த்திவிட்டதாக வந்த தகவல்கள் தவறானவை. பழைய விலையில் தான் லட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது. லட்டு விலையை உயர்த்துவது குறித்து பரிசீலனையில் இருந்து வருகிறது. வி.ஐ.பி.க்கள் தங்கும் அறை வாடகைகள் உயர்த்தப்பட்டு உள்ளது. சாதாரண பக்தர்கள் தங்கும் அறைகள் வாடகை உயர்த்தப்படவில்லை.

         சென்னையில் இருந்து திருமலைக்கு நடைபாதையாக வரும் பக்தர்கள் வசதி கருதி திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் தங்கும் விடுதிகள் கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

              திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில் புதிதாக வெங்கடேசபெருமாள் கோவில் கட்டுவதற்காக தமிழக அரசு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் 2 இடங்களை ஒதுக்கி தந்துள்ளது. இந்த இடங்கள் வாஸ்து சாஸ்திரப்படி இருக்கிறதா? என்பது குறித்து ஆய்வு நடந்து வருகிறது. விரைவில் இடத்தை தேர்வு செய்து தமிழக அரசிடம் அளிப்போம். அதன்பின்பு அரசு அனுமதி அளித்த உடன் கோவில் கட்டுமான பணி தொடங்கப்படும். தியாகராய நகர் கோவிலில் திருப்பதியில் இருப்பது போன்று மொட்டை போடும் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்


தமிழ் மொழி கடிகாரங்கள்

வாட்ச்சில் தமிழ் டைட்டன் நிறுவனம் .


நம்ம தமிழ்நாடு என்ற பெயரில் புதிதாக தொடங்கப்பட்ட வாட்ச் மாடல்களில் தமிழ் மொழியை டைட்டன் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.         டைட்டன் வாட்ச் நிறுவனம் புதுமை புகுத்துவதில் தனித்துவமானது ஆகும். இந்த நிறுவனத்தின் சார்பில் சாதாரண மக்கள் கோட்டீஸ்வரர்கள் அணியும் வகையிலான வாட்ச்களை நிறுவனம் விற்பனை செய்கிறது. தற்போது வாட்சில் தமிழ் மொழியை புகுத்தும் முயற்சியில் டைட்டன் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.


        அதன்படி டைட்டன் தமிழ்நாடு என்ற பெயரில் தமிழ்மொழி மற்றும் தமிழர்களின் கலையை போற்றும் விதமாக அதன் நிறுவன வாட்சுகளில் தமிழ் மொழியில் எழுதப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் வாட்ச்சின் உள்ளே தமிழக கோவில் தூண்கள், யாழி, கோபுரங்களை பொறித்துள்ளது. அதற்கு நம்ம தமிழ்நாடு வாட்ச் என பெயரிடப்பட்டுள்ளது. மேலும் பெண்கள் அணியும் வாட்ச்களில் காஞ்சிபுரம் புடவைகளில் பதிக்கப்படும் மயில் டிசைனை உள்ளே பதித்துள்ளனர். அதற்கு காஞ்சிபுரம் வாட்ச் பெயரிடப்பட்டுள்ளது.


                 இதுகுறித்து டைட்டன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் உலகிலேயே மிகவும் பழமையான மொழி தமிழ்தான். காஞ்சிபுரம் பட்டு மல்பரி பட்டு நூலால் நெய்யப்பட்டு அதன் பாரம்பரியம் வெளிப்படுகிறது என குறிப்பிட்டுள்ளது


Sunday, November 17, 2019

 உலகின் மிக உயரமான 111 அடி உயர சிவலிங்கம்


     உலகின் மிக உயரமான 111 அடி உயர சிவலிங்கம் கன்னியாகுமரி மாவட்டத்தில்  மக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டது.
கர்நாடக மாநிலம் கோலார் அருகே கம்மசந்த்ரா கோடிலிங்கேஸ்வரர் கோயிலில் அமைந்துள்ள 108 அடி உயர சிவலிங்கமே உலகின் மிக உயரமான சிவலிங்கம் என்ற பெருமையை பெற்றிருந்தது. இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் கேரள எல்லை பகுதியான உதயம் செங்கல் மகேஸ்வர சிவபார்வதி கோயிலில் அமைக்கப்பட்டுள்ள 111.2 அடி உயர சிவலிங்கம் அந்த பெருமையை பெறுகிறது.
இந்த சிவலிங்கம் அமைக்கும் பணி நிறைவடைந்து, அதன் உட்பகுதியில் பக்தர்கள் சென்று பார்க்கும் வகையில் கட்டமைப்பு பணி நடந்தபோதே, இந்தியா புக் ஆப் ரிக்கார்டு, ஆசியா புக் ஆப் ரிக்கார்டு ஆகிய புத்தகங்களில் உலகிலேயே உயரமான சிவலிங்கம் என இடம்பெற்றுவிட்டது. இந்த சிவலிங்கம் மக்கள் பார்வைக்காக நேற்று திறந்து வைக்கப்பட்டது. கோயில் மடாதிபதி மகேஸ்வரானந்த சரஸ்வதி சுவாமிகள் குத்துவிளக்கேற்றி சிவலிங்கத்தை திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து அங்கு திரண்டிருந்த பக்தர்கள் பிரம்மாண்ட சிவலிங்கத்தை வழிபட்டனர்.
லிங்கத்தினுள் சிற்பங்கள்இதுகுறித்து கோயில் நிர்வாகிகள் கூறும்போது, “உலகிலேயே உயரமான 111.2 அடி உயரம், தரையில் உள்ள பீடம் 13 மீட்டர் சுற்றளவு கொண்ட சிவலிங்கத்தை உருவாக்கும் பணி கடந்த 2012-ம் ஆண்டு மே மாதம் தொடங்கியது.
      தத்ரூபமாக அமைய வேண்டும் என்பதற்காக 6 ஆண்டுகளுக்கும் மேலாக அவகாசம் எடுத்துக் கொண்டோம். சிவலிங்கத்தின் உட்பகுதி 8 மாடிகளைக் கொண்டு குகை வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் வாசல் வழியாக பக்தர்கள் சென்று தரிசிக்கலாம். உட்பகுதி நடைபாதை ஓரங்களில் சித்தர்கள், சிவனடியார்களின் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் 108 சிவலிங்கங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. லிங்கத்தின் உட்பகுதியில் 8-வது நிலையில் கைலாச மலையில் சிவன், பார்வதி பக்தர்களுக்கு அருட்காட்சி தருவது போன்ற சிற்பம் கலையம்சத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் தந்த நன்கொடைகள் மூலம் இந்த சிவலிங்கம் அமைக்கப்பட்டது” என்றனர்.


காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்றத்தின் ஆண்டு விழா

 Featured Post

மனிதனை மீறிய சந்தர்ப்பங்கள் வாழ்க்கையை எவ்வளவு தூரம் திருப்பிவிடுகின்றன

  மனிதனை மீறிய சந்தர்ப்பங்கள் வாழ்க்கையை எவ்வளவு தூரம் திருப்பிவிடுகின்றன என்பதற்கு நான் ஓர் உதாரணம்.’’ – இது, ‘சரித்திர நாவல்களின் ஜாம்பவான...