Thursday, August 18, 2022

நினைவில் நூலகம் வைத்திருந்த பொக்கிஷம்.

 


கம்பனை 

நெல்லைக் கண்ணன் பேசினார். கம்பன் இதைக் கேட்கவில்லையே என வருந்தினேன் .


திருக்குறள் , சங்கம், பக்தி இலக்கியம், பாரதி என்று தமிழின் நீள அகலங்களை அவர் உரை காட்டியது. 


பாடலின் பொருள் கூறினார். உரை ஆசிரிய மரபின் ஆழ உயரங்களை அதில் அறிய முடிந்தது. 


புலமை அவரது குரலைக் கடைசிவரை ஒரு கம்பீரத்துடன் வைத்திருந்தது. 


மேடையில் குறிப்பின்றிப் பேசும் ஒரு சிலரில் ஒருவர். சொல்லேருழவர்.


சொல்லில் உயிர் குழைத்து  அமுதூட்டிய மேதை. 


நினைவில் நூலகம் வைத்திருந்த பொக்கிஷம்.


காலம் எனும் பேரியக்கத்தில் எல்லாவற்றுக்கும் ஆரம்பமும் முடிவும் இருக்கிறதே.... அதை யார்தான் மறுக்க முடியும்?


நெல்லைக் கண்ணன் விடைபெற்றார் இன்று. 

நினைவில் வாழ்வார் என்றும்.


அவர் குரல் ஒலி வட்டில் உறைந்திருக்கிறது. யூ ட்யூப் இல் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. 


அந்த அலை ஓசை ஓயாது.

தமிழ்க் கடலை இந்த மரணம் மூடாது.


ஆழ்ந்த துயரத்துடன்  அவரது அன்பர்கள் அனைவருக்கும் இரங்கல் தெரிவிக்கிறேன். நண்பர் சுகாவின் கரம் பற்றிக்கொள்கிறேன்.


புறப்படும் கப்பலுக்குக் கரையில் நின்று  கையசைக்கிறேன்.

*

         - பிருந்தா சாரதி


*

நெல்லைக்கண்ணன்நெல்லைக்கண்ணன், திருநெல்வேலி நெல்லையப்பருக்கு பக்கத்து வீட்டுக்காரர்.


ஆனால் நெல்லையில் மட்டுமல்லாமல், காங்கிரஸ் கட்சியில் செல்வாக்கோடு இருந்த நெல்லை கண்ணன், 1996-ம் ஆண்டில் சேப்பாக்கம் தொகுதியில் திமுக தலைவர் கருணாநிதியை எதிர்த்து சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டவர். அப்போது அதிமுக - காங்கிரஸ் கூட்டணியில் சேப்பாக்கம் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டபோது, அங்கே போட்டியிட காங்கிரஸில் பலரும் தயங்கிய நேரத்தில் நெல்லை கண்ணன் போட்டியிட்டதால் நாடறிந்தவரானார்


பிறந்தது 1945ம் வருடம் ஜனவரி 17ம் நாள்.தந்தை ந.சு.சுப்பையா பிள்ளை,தாய் முத்து லக்குமி.கண்ணனுடன் உடன் பிறந்தவர்கள் எட்டுப்பேர்.பாரம்பரிய விவசாயக் குடும்பம்.அதனால் காங்கிரஸ் சார்பு.தமிழ் இலக்கியத்தில் ஆர்வம் கொண்ட கண்ணன் பாரதி கவிதைகள்,கம்பராமாயணம் ஆகியவற்றில் ஆழ்ந்த புலமை கொண்டவர்.


இவரது மேடைப் பேச்சைப் போலவே இவரது கோபமும் நெருங்கிய வட்டாரத்தில் புகழ் பெற்றது.70-களில் தி.மு.க-வின் நட்சத்திரப் பேச்சாளர்களுக்கு ஈடு கொடுக்கக்கூடிய ஒரே காங்கிரஸ் பேச்சாளர் இவர்தான்.அரசியல் மேடைகளில் ஆன்மீகமும்,ஆன்மீக மேடைகளில் அரசியலும் இவருக்கு கைவந்த கலை. இப்போது ‘சோலிய முடி’ பேச்சைப்போல பேசி விவாதப் பொருளாவதும் புதிதல்ல.பாரதி மகாவி அல்ல என்றது,இன்னும் ஜெயகாந்தன், ரஜினிகாந்த் மனைவி என்று பலரைப் பற்றி மேடையில் விமர்சித்து சிக்கலில் மாட்டி இருக்கிறார். 


தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் பொதுச் செயலர், துணைத்தலைவர் பதவிகளை வகித்தவர்.கேரளாவின் ஆண்டனி,இன்றைய மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் இவரது நண்பர்கள். காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடும் போதெல்லாம் இவரைத் தான் நெல்லையில் நிற்க வைப்பார்கள்.வலுவான கூட்டணி அமையும்போது கண்ணனை ‘கை’ விட்டு விடுவார்கள். மூப்பனார், வாழப்பாடி ராமமூர்த்தி இருவராலும் மதிக்கப்பட்ட ஒரே காங்கிரஸ் தலைவர் இவர்தான்.


தேர்தல் சுற்றுப்பயணத்தின் போது ராகுல் காந்தி இவர் வீட்டில் வந்து மதிய உணவு சாப்பிட்டதுண்டு.சிவாஜி காங்கிரஸ் கட்சியில் இருந்த காலத்தில் அவர் பாளையங்கோட்டையில் பேசுவதாக இருந்தது.அவர் வரும் வரை பேசுங்கள் என்று கண்ணனை மேடை ஏற்றி விட்டார்கள். சிவாஜி வருவதற்கு 5 மணி நேரம் தாமதமானது.அதுவரை கண்ணன் பேசிக்கொண்டே இருந்தார்.கூட்டத்தைக் கட்டிப்போடுவதில் கண்ணன் சமர்த்தர்.


2001-ல் ராஜ்யசபை எம்.பி பதவிக்கு இவர் பெயரும் ஜெயந்தி நடராஜன் பெயரும் டெல்லிக்கு பரிந்துறை செய்யப்பட்டது.டெல்லி ஜெயந்தியை தேர்வு செய்ய கண்ணன் கோபித்துக்கொண்டு அ.தி.மு.க-வுக்கு போய்விட்டார். ஆனால்,ஒரு வருடம் கூட அங்கே தாக்குப்பிடிக்க முடியாமல் மீண்டும் காங்கிரசுக்கே வந்துவிட்டார்.இவர் அடிக்கடி சொல்லிப் பெருமைப்பட்டுக் கொள்வது’ நான் கருணாநிதியை எதிர்த்து நின்னவண்டா’ என்பதுதான்.

#ஆந்தை ரிப்போர்ட்டர் 🦉நெல்லைக்கண்ணன், திருநெல்வேலி நெல்லையப்பருக்கு பக்கத்து வீட்டுக்காரர்.


ஆனால் நெல்லையில் மட்டுமல்லாமல், காங்கிரஸ் கட்சியில் செல்வாக்கோடு இருந்த நெல்லை கண்ணன், 1996-ம் ஆண்டில் சேப்பாக்கம் தொகுதியில் திமுக தலைவர் கருணாநிதியை எதிர்த்து சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டவர். அப்போது அதிமுக - காங்கிரஸ் கூட்டணியில் சேப்பாக்கம் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டபோது, அங்கே போட்டியிட காங்கிரஸில் பலரும் தயங்கிய நேரத்தில் நெல்லை கண்ணன் போட்டியிட்டதால் நாடறிந்தவரானார்


பிறந்தது 1945ம் வருடம் ஜனவரி 17ம் நாள்.தந்தை ந.சு.சுப்பையா பிள்ளை,தாய் முத்து லக்குமி.கண்ணனுடன் உடன் பிறந்தவர்கள் எட்டுப்பேர்.பாரம்பரிய விவசாயக் குடும்பம்.அதனால் காங்கிரஸ் சார்பு.தமிழ் இலக்கியத்தில் ஆர்வம் கொண்ட கண்ணன் பாரதி கவிதைகள்,கம்பராமாயணம் ஆகியவற்றில் ஆழ்ந்த புலமை கொண்டவர்.


இவரது மேடைப் பேச்சைப் போலவே இவரது கோபமும் நெருங்கிய வட்டாரத்தில் புகழ் பெற்றது.70-களில் தி.மு.க-வின் நட்சத்திரப் பேச்சாளர்களுக்கு ஈடு கொடுக்கக்கூடிய ஒரே காங்கிரஸ் பேச்சாளர் இவர்தான்.அரசியல் மேடைகளில் ஆன்மீகமும்,ஆன்மீக மேடைகளில் அரசியலும் இவருக்கு கைவந்த கலை. இப்போது ‘சோலிய முடி’ பேச்சைப்போல பேசி விவாதப் பொருளாவதும் புதிதல்ல.பாரதி மகாவி அல்ல என்றது,இன்னும் ஜெயகாந்தன், ரஜினிகாந்த் மனைவி என்று பலரைப் பற்றி மேடையில் விமர்சித்து சிக்கலில் மாட்டி இருக்கிறார். 


தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் பொதுச் செயலர், துணைத்தலைவர் பதவிகளை வகித்தவர்.கேரளாவின் ஆண்டனி,இன்றைய மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் இவரது நண்பர்கள். காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடும் போதெல்லாம் இவரைத் தான் நெல்லையில் நிற்க வைப்பார்கள்.வலுவான கூட்டணி அமையும்போது கண்ணனை ‘கை’ விட்டு விடுவார்கள். மூப்பனார், வாழப்பாடி ராமமூர்த்தி இருவராலும் மதிக்கப்பட்ட ஒரே காங்கிரஸ் தலைவர் இவர்தான்.


தேர்தல் சுற்றுப்பயணத்தின் போது ராகுல் காந்தி இவர் வீட்டில் வந்து மதிய உணவு சாப்பிட்டதுண்டு.சிவாஜி காங்கிரஸ் கட்சியில் இருந்த காலத்தில் அவர் பாளையங்கோட்டையில் பேசுவதாக இருந்தது.அவர் வரும் வரை பேசுங்கள் என்று கண்ணனை மேடை ஏற்றி விட்டார்கள். சிவாஜி வருவதற்கு 5 மணி நேரம் தாமதமானது.அதுவரை கண்ணன் பேசிக்கொண்டே இருந்தார்.கூட்டத்தைக் கட்டிப்போடுவதில் கண்ணன் சமர்த்தர்.


2001-ல் ராஜ்யசபை எம்.பி பதவிக்கு இவர் பெயரும் ஜெயந்தி நடராஜன் பெயரும் டெல்லிக்கு பரிந்துறை செய்யப்பட்டது.டெல்லி ஜெயந்தியை தேர்வு செய்ய கண்ணன் கோபித்துக்கொண்டு அ.தி.மு.க-வுக்கு போய்விட்டார். ஆனால்,ஒரு வருடம் கூட அங்கே தாக்குப்பிடிக்க முடியாமல் மீண்டும் காங்கிரசுக்கே வந்துவிட்டார்.இவர் அடிக்கடி சொல்லிப் பெருமைப்பட்டுக் கொள்வது’ நான் கருணாநிதியை எதிர்த்து நின்னவண்டா’ என்பதுதான்.

🦉ஆந்தை ரிப்போர்ட்டர் 

ISR 5நிமிட குறும் பட போட்டி


 

Wednesday, August 17, 2022

 *உணவில் பாதாம் சத்துக்கள் அவசியம்*


வித்தியாச சுவையில் நட்ஸ் ஃபுட்


நட்ஸ்சில் உள்ள சத்துக்கள் பற்றிய பல அறிந்து இருப்போம். அதனுடைய நன்மைகளை, மருத்துவ பயன்களை எல்லாம் கேட்டிருப்போம். அதில் ஏராளமான நார்ச்சத்து மற்றும் புரோட்டீன் இருக்கிறது. இயற்கையில் விளைகின்ற பல பருப்பு, தானிய  வகைகள் எல்லாமே உடல்நலத்திற்கு தேவையான பல சத்துக்களை கொண்டவை தான். அந்த வகையில் எல்லோரும் உண்ணக்கூடிய பாதாம் பருப்பில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. பொதுவாகவே, பாதாம் பருப்பில் வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டிஆக்சிடன்ட்ஸ் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் ஆகியவை நிறைந்துள்ளன. வாரத்தில் ஒரு நாள் அசைவம் சாப்பிடுவது போல சமையலில் பாதாமை சேர்த்து சமைக்கலாம்.


அப்படி செய்யும் போது உடலுக்கு தேவையான புரதம் கிடைக்கின்றது. நம் உடல் ஆரோக்கியத்திற்கு நாம் எதிர்பாராத நன்மைகளை தரக்கூடியது. இந்த பாதாம் பருப்பை அப்படியே சாப்பிடலாம் அல்லது ஊறவைத்தும் சாப்பிடலாம். இவற்றை தவிர அதில் சிறப்பு உணவுகளை சமைத்தும் சாப்பிடலாம். கிச்சன் வாசகிகளுக்காக மூன்று பிரத்யேகமான பாதாம் ரெசிப்பிக்களை பற்றி தெரிந்துகொள்ளலாம்.


ஆல்மண்ட் ஸ்வீட் பொட்டேடோ டோஸ்ட்


தேவையானவை:


தோல் உரிக்கப்படாத பாதாம் - 3/4 கப்

பிரட் துண்டுகள் - 4

வட்டமாக வெட்டப்பட்டு ரோஸ்ட் செய்யப்பட்ட சர்க்கரைவள்ளிக் கிழங்கு - 2 கப்

உப்பு - சுவைக்கு ஏற்ப

மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்

சாட் மசாலா - 1/2 டீஸ்பூன்

எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன்

கொத்தமல்லி தழை - 2 டீஸ்பூன்

நறுக்கிய இஞ்சி - 1 டீஸ்பூன்

நறுக்கிய பச்சை மிளகாய் - 1/2 டீஸ்பூன்

கிரீன் சட்னி - 1 மேசைக்கரண்டி

ஆலிவ் எண்ணெய் - 1 டீஸ்பூன்

மயோனைஸ் - 1 டீஸ்பூன்


செய்முறை:


பாதாமினை நான்கு நிமிடம் 180 டிகிரியில் மைக்ரோவேவ் அவனில் வறுக்கவும். மைக்ரோ அவன் இல்லை என்றால் சாதாரண சட்டியில் வறுக்கலாம். பிறகு ஆறியதும் மெல்லியதாக சீவிக் கொள்ளவும். அதேபோல் பிரட் துண்டுகளையும் நன்கு டோஸ்ட் செய்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் பிரட் மற்றும் வறுத்த சர்க்கரை வள்ளிக்கிழங்கு, நறுக்கிய பாதாமினை தவிர மற்ற அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பிரட் துண்டுகள் மேல் சர்க்கரை வள்ளி கிழங்கு துண்டுகளை வைத்து அதன் மேல் கலந்த மசாலாக்களை பரப்பி அதன் மேல் பாதாமினை தூவி பரிமாறவும். குழந்தைகள் விரும்பும் மிகவும் ஆரோக்கியமான மற்றும் சத்துள்ள காலை உணவு.


ஆல்மண்ட் காலிஃபிளவர் ரைஸ் சாலட்


தேவையானவை:


தோல் உரிக்கப்படாத பாதாம் - 1 கப்,

துருவிய காலிஃபிளவர் - 2 கப்,

உப்பு - சுவைக்கு ஏற்ப,

'மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்,

கொத்தமல்லி தழை - 1 மேசைக்கரண்டி,

எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன்,

நறுக்கிய இஞ்சி - 1 டீஸ்பூன்,

நறுக்கிய பச்சை மிளகாய் - 1 டீஸ்பூன்,

சீரகம் - 1/2 டீஸ்பூன்,

ஆலிவ் எண்ணெய் - 2 மேசைக்கரண்டி.


செய்முறை:


பாதாமினை நான்கு நிமிடம் 180 டிகிரியில் மைக்ரோவேவ் அவனில் வறுக்கவும். மைக்ரோ அவன் இல்லை என்றால் சாதாரண சட்டியில் வறுக்கலாம். பிறகு ஆறியதும் மெல்லியதாக சீவிக் கொள்ளவும். ஒரு கடாயில் ஆலிவ் எண்ணெய் சேர்த்து அதில் சீரகம் பொரிந்ததும் இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். இதில் துருவிய காலிஃபிளவரை சேர்த்து நன்கு வேகும் வரை வதக்கவும். அதன் பிறகு அடுப்பை நிறுத்திவிட்டு அதில் எலுமிச்சைச் சாறு, கொத்தமல்லி தழை, மிளகுத்தூள், உப்பு மற்றும் பாதாமினை சேர்த்து நன்கு கலக்கவும். சுவையான சத்துள்ள சாலட். டயட் இருப்பவர்களுக்கு இது மிகவும் ஆரோக்கியமான உணவு.


ஆல்மண்ட் அமரந்த் கபாப்


தேவையானவை:


பாதாம் பருப்பு - 1/2 கப்,

அமரந்த் பொடி - 1/2 கப்,

பாதாம் மாவு - 1/2 கப்,

நறுக்கிய இஞ்சி - 2 டீஸ்பூன்,

நறுக்கிய பூண்டு - 1 டீஸ்பூன்,

நறுக்கிய பச்சை மிளகாய் - 1 டீஸ்பூன்,

வேகவைத்த மசித்த உருளை - 2 மேசைக்கரண்டி,

உப்பு - தேவைக்கு,

மிளகாய்த் தூள் - 1/2 டீஸ்பூன்,

கரம் மசாலா பவுடர் - 1/4 டீஸ்பூன்,

கொத்தமல்லி தழை - 1 மேசைக்கரண்டி,

எண்ணெய் - பொரிக்க,

நறுக்கிய வெங்காயம் - 3 மேசைக்கரண்டி.


செய்முறை:


பாதாமினை நான்கு நிமிடம்  180 டிகிரியில் மைக்ரோவேவ் அவனில் வறுக்கவும். மைக்ரோ அவன் இல்லை என்றால் சாதாரண சட்டியில் வறுக்கலாம். பிறகு ஆறியதும் மெல்லியதாக சீவிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் அமரந்த் பொடி, பாதாம் மாவு, நறுக்கிய பாதாம், நறுக்கிய இஞ்சி, நறுக்கிய பூண்டு, நறுக்கிய பச்சை மிளகாய், வேகவைத்த மசித்த உருளை, உப்பு, மிளகாய் தூள், கரம் மசாலா பவுடர், கொத்தமல்லி தழை, நறுக்கிய வெங்காயம் அனைத்தையும் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். பிறகு சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி வடைபோல் தட்டி வைக்கவும். எண்ணெய் சூடானதும் பொரிக்கவும். கிரீன் சட்னியுடன் பரிமாறவும். மாலை நேர சுவையான ஸ்னாக்ஸ்.


தொகுப்பு:- ப்ரியா...

உங்க ஃபோனில் 5ஜி சேவை

 

உங்க ஃபோனில் 5ஜி சேவை பயன்படுத்த முடியுமா? எப்படி தெரிந்து கொள்வது?


இந்தியாவில் 5ஜி சேவை வழங்குவதற்கான அலைக்கற்றை ஏலம் கடந்த ஜூலை 26ஆம் தேதி இணையதளம் வாயிலாக தொடங்கியது. 7 நாட்களாக 40 சுற்றுகளாக ஏலம் நடைபெற்று நிறைவடைந்தது. இந்த ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஐடியா, அதானி குழுமத்தின் அதானி டேட்டா நெட்வர்க் ஆகிய 4 நிறுவனங்கள் பங்கேற்றன. மொத்தம் ரூ.1.50 லட்சம் கோடிக்கு 5ஜி அலைக்கற்றை ஏலம் எடுக்கப்பட்டது.

ஜியோ நிறுவனம் அதிகபட்சமாக ரூ.88 ஆயிரம் கோடிக்கு ஏலம் எடுத்தது. பிரீமியம் 700 MHz அலைவரிசையை ஜியோ ஏலம் எடுத்துள்ளது. ஜியோவின் நேரடி போட்டியாளரான ஏர்டெல் ரூ.43,084 கோடி ஏலம் எடுத்தது. ஏர்டெல் தனது 5ஜி சேவையை இம்மாத இறுதியில் (ஆகஸ்ட்) நாடு முழுவதும் வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது. ஜியோ நிறுவனமும் விரைவில் அறிவிப்பு வெளியிட உள்ளது.


ஜி இணையசேவை இந்தியாவில் தொடங்க உள்ள நிலையில் பல முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் 5ஜி மொபைல் போன்கள் அதிகம் அறிமுகப்படுத்தி வருகின்றன. சாம்சங், மோட்டோரோலா, ஜியாமி, ரியல்மி உள்ளிட்ட பல நிறுவனங்கள் 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளன. ஒன் பிளஸ் நிறுவனம் OnePlus Nord 5G, OnePlus 8 Pro 5G போன்ற போன்களை அறிமுகப்படுத்தியது.

5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் நிறைவடைந்த நிலையில், ஏர்டெல், ஜியோ, வோடஃபோன் ஐடியா போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பல 5ஜி பேண்ட்களை (அலைவரிசையை) ஏலம் எடுத்தன. 12 அலைவரிசைகளை நிறுவனங்கள் ஏலம் எடுத்தன.

5ஜி பேண்ட் பற்றிய விவரம்

முதல் மூன்று n28, n5, n8 பேண்ட்கள் குறைந்த அளவு ஸ்பெக்ட்ரம் பேண்ட். இது குறைந்த வேகத்தில் விரிவான கவரேஜ் கொடுக்கும். விளம்பரப்படுத்தப்பட்ட 5ஜி வேகத்தை விட மெதுவாக இருக்கும், ஆனால் 4ஜி சேவையை விட வேகமாக இருக்கும்.

அடுத்த ஐந்து பேண்ட்கள் n3, n1, n41, n78, n77, இது மிட் ஸ்பெக்ட்ரம் பேண்ட். வேகமாகவும், நீண்ட தூர கவரேஜூக்கு இடையே சமநிலை வகிக்கும். கடைசியாக உள்ள mmWave உயர்தர ஸ்பெக்ட்ரம் ஆகும். ஆனால் குறைந்த பகுதிகளில் மட்டும் சேவை வழங்க முடியும். இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்களின் வரவேற்பு பெறவில்லை. எனினும் மூன்று முக்கிய தொலைத்தொடர்பு நிறுவனங்களும், அதானி குழுவும் n258 பேண்ட் உரிமம் பெற்றுள்ளன. வணிக நோக்கங்களுக்காக B2B சேவைகளுக்கு பயன்படுத்தலாம்.

உங்கள் ஃபோனுக்கு எந்த பேண்ட் சிறந்தது?

ஒரு நல்ல 5ஜி ஸ்மார்ட்போன் அனைத்து 12 பேண்ட்களையும் பயன்படுத்த முடியும். இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளுக்கு எங்கு சென்றாலும் சிறந்த 5ஜி கவரேஜை உறுதி செய்யும். இந்தியாவில் மேலே குறிப்பிட்டப்பட்டுள்ள எட்டு பேண்ட்கள் (n28, n5, n8, n3, n1, n41, n77, n78) பெரும்பாலான தேவைகளைப் பூர்த்தி செய்யும். 5ஜி சிப்செட் உள்ள ஸ்மார்ட்போன்களில் 5ஜி இணைய சேவை பயன்படுத்த முடியும்.

ஐபோன் 13 சீரிஸ், நத்திங் போன் (1), ரியல்மி GT2 Pro, சாம்சங் Galaxy S22 சீரிஸ், ஒன் பிளஸ் 10T ஆகியவற்றில் பயன்படுத்த முடியும். இன்னும் சில நிறுவன போன்களிலும் 5ஜி பயன்படுத்த முடியும்.

உங்கள் போனில் எந்த பேண்ட்களை பயன்படுத்த முடியும் என்று தெரிந்து கொள்வது அவசியம். நல்ல கவரேஜ் உள்ள பேண்ட்கள் உங்கள் போனில் பயன்படுத்த முடியும் என்றால் 5ஜி சேவை எளிதாக கிடைக்கும்.

n5, n8 பேண்ட்கள் மெட்ரோ நகரங்களில் நன்கு வேலை செய்யலாம். தொலைதூர பகுதிகளில் 5ஜி கவரேஜில் சிக்கல்கள் இருக்கலாம். உங்கள் 5ஜி போனில் n28, n5, n8, n3, n1, n41, n77 போன்ற முக்கிய பேண்ட்கள் பயன்படுத்த முடியவில்லை என்றால் 5ஜி அனுபவத்தை முழுமையாக பெறமுடியாது.

உங்க போனில் எந்த பேண்ட் பயன்படுத்த முடியும் என்பதை எவ்வாறு கண்டுபிடிப்பது?

பெரும்பாலான ஆண்ட்ராய்டு மற்றும் iOS சாதனங்கள் 5ஜி பயன்பாடு குறித்து அந்த நிறுவனத்தின் தயாரிப்புப் பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும். இல்லை என்றால் போன் பாக்ஸில் கொடுக்கப்பட்டிருக்கும். அப்படி இல்லை என்றால் அல்லது பாக்ஸ் தொலைத்துவிட்டீர்கள் என்றால், உங்கள் போன் நிறுவனத்தின் இணையதள பக்கத்திற்கு செல்லுங்கள். உங்கள் போன் மாடல் குறித்து தேடி ‘நெட்வொர்க்’ பகுதிக்கு சென்று உங்கள் போனில் எந்த 5ஜி பேண்ட் பயன்படுத்த முடியும். 5ஜி சேவையை போன் அனுமதிக்கிறதா என்பது குறித்த விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.


courtesy:https://tamil.indianexpress.com/


அமெரிக்காவில் டைம்ஸ் சதுக்கம், உலக வர்த்தக மையத்தில் மூவர்ண கொடி

 


இந்திய சுதந்திர தினம்: அமெரிக்காவில் டைம்ஸ் சதுக்கம், உலக வர்த்தக மையத்தில் மூவர்ண கொடிநாடு விடுதலை பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. எனினும், கடந்த ஓராண்டாக சுதந்திர தின அமுதப்பெருவிழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்த சூழலில், இந்தியாவின் 76-வது சுதந்திர தினம் நேற்று நாடு முழுவதும் கோலாகலமுடன் கொண்டாடப்பட்டது.

இந்தியாவின் 75 ஆண்டுகால சுதந்திர கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க டைம்ஸ் சதுக்கத்தில் இந்திய மூவர்ண கொடி ஏற்றப்பட்டது.

இந்த நிகழ்ச்சியை நியூயார்க் மெட்ரோபாலிடன் பகுதிக்கான இந்திய கூட்டமைப்பு சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்தது. இதனை முன்னிட்டு இந்திய தூதர் ரன்தீர் ஜஸ்வால் வருகை தந்து இந்திய தேசிய கொடியை ஏற்றினார்.

இந்நிகழ்ச்சியில் நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ் கலந்து கொண்டார். இந்தியாவின் பிரபல இசையமைப்பாளர்களான தேவி ஸ்ரீபிரசாத் மற்றும் சங்கர் மகாதேவன் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். பாடகர் சங்கர் மகாதேவன் நாட்டுப்பற்று பாடல் ஒன்றையும் பாடினார்.

அவருடன் சேர்ந்து கொண்டு இந்திய வம்சாவளியினரும் உணர்ச்சிப்பூர்வமுடன் இசைக்கேற்ப அசைந்து ஆடியபடி, பாடலை பாடினர். நிகழ்ச்சியில் தேவி ஸ்ரீபிரசாத், இந்திய தேசிய கீதம் பாடினார். மூவர்ண கொடியை ஏற்றும்போது, அதனை காண எண்ணற்ற மக்கள் திரண்டிருந்தனர்.

இதேபோன்று அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள புகழ் பெற்ற உலக வர்த்தக மையத்தில் இந்திய தேசிய கொடியானது டிஜிட்டல் முறையில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது பார்வையாளர்களை கவர்ந்தது.

5 நிமிட குறும்படப் போட்டி!

 


5 நிமிட குறும்படப் போட்டி!

தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகமும், ஐ.எஸ்.ஆர் வென்சர்ஸ் தயாரிப்பு நிறுவனமும் இணைந்து நடத்துகிறார்கள்.

இப்போட்டி ஆகஸ்டு 22ம் தேதி முதல் துவங்குகிறது.


ஒரு மாதம் நடக்கவுள்ள இப்போட்டியைப் பற்றி மக்களுக்கும், படைப்பாளிகளுக்கும் எடுத்துச் செல்ல பீப்பிள் டுடே பத்திரிகை, ஐ.எஸ்.ஆர் வென்சர்ஸ் நிறுவனத்துடன் கை கோர்த்துள்ளது. போட்டியாளர்கள், அவர்கள் இயக்கிய படங்கள், பேட்டிகள், போட்டி பற்றிய விபரங்கள் பீப்பிள் டுடேவில் தொடர்ச்சியாக வெளியாகும்.


"குழந்தைகள் உரிமை - Child Right" பற்றி அறிவுறுத்தும் குறும்படங்கள் மட்டும் போட்டிக்கு வரவேற்கப்படுகின்றன. சிறந்த 3 படங்கள் மற்றும் ஏராளமான பல விருதுகள் வழங்கப்படும்.


தமிழ்நாடு திறந்தவெளிப் பல்கலைக் கழகம் (School of Journalism and New Media Studies) இணைந்து நடத்தும் இப்போட்டியில்  நீங்கள் மிகவும் மதிக்கும் திரைப்பிரபலங்கள் நடுவர்களாக இருந்து சிறந்த படங்களை தேர்ந்தெடுப்பார்கள். 


போட்டிக்கு எப்படி பதிவு செய்வது? படத்தை எப்படி அனுப்புவது? பரிசுத் தொகை எவ்வளவு? குழந்தைகள் உரிமை என்றால் என்ன? என்பது போன்ற விபரங்களை அறிந்து கொள்ள 9962295636 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்.


#ISRventures #ISR5minuteShortFilmContest #TNOU #StellaMarisCollege #PeopleToday

ஆவணி மாத சிறப்புகள்

 ஆவணி மாத சிறப்புகள் 
 ஆவணி மாதத்தில், பௌர்ணமி ஷ்ரவண நட்சத்திர (திருவோணம்) நாளில் தோன்றும். இது, விஷ்ணுவின் ஜனன கால நட்சத்திரமாகும்.வேத ஜோதிட நாட்காட்டி, பஞ்சாங்கத்தின் படி, ஆவணி மாதம் மிகவும் சுபத்தன்மை நிறைந்த மாதம்.


 இந்த மாதம் முழுவதும் சிவ பெருமானை வணங்கி, வழிபடுவதற்காக, ஆசீர்வாதத்தைப் பெறுவதற்கு ஏற்ற மாதம். ஆயிரக்கணக்கான பக்தர்கள், இந்த மாதம் முழுவதும் விரதமிருந்து, தினமும் சிவலிங்கத்திற்கு பூஜை செய்கின்றனர். சிவபெருமானின் ஆசீர்வாதத்தைப் பெறுவதற்காக, கூடுதலாக, பல பூஜைகளையும், பிரார்த்தனைகளையும், வழிபாடுகளையும் செய்கின்றனர்.ஆவணி மாத திங்கட்கிழமை எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது


 ஆவணி மாதத்தில், பௌர்ணமி ஷ்ரவண நட்சத்திர (திருவோணம்) நாளில் தோன்றும். இது, விஷ்ணுவின் ஜனன கால நட்சத்திரமாகும். அல்லது, ஒவ்வொரு ஆண்டும் பௌர்ணமி நாளும், திருவோண நட்சத்திரமும் ஒன்றிணைந்து வரும். அதனாலேயே, இது ஆவணி / ஷ்ரவண மாதம் என்று அழைக்கப்படுகிறது. இந்த மாதத்தின் ஒவ்வொரு திங்களும், மிகவும் சுபத்துவம் வாய்ந்தது. சிவன் கோவில்களில், ஆவணி மாதத்தின் ஒவ்வொரு திங்கைகிழமை அன்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. சிவலிங்கத்திற்கு இரவும், பகலும் தொடர்ந்து நீர் மற்றும் பால் அபிஷேகம் செய்யப்படும். அது மட்டுமின்றி ஆவணி முழுவதும், ஒவ்வொரு திங்களன்றும் வில்வ இலைகள், சிவபக்தர்கள் புனித நீர், பால் மற்றும் பூக்களால் அர்ச்சிக்கின்றனர். பக்தர்களும் காலை முதல் இரவு வரை விரதமிருந்து, இரவு முழுவதும் எரியும் வகையில் ஒற்றை அகல் விளக்கை ஏற்றுவார்.ஆவணி மாதத்தில் திங்கட்கிழமை அன்று சிவபெருமானை வழிபடுவதால் கிடைக்கும் நன்மைகள் :

 


ஆவணி மாதத்தில் திங்கட்கிழமை அன்று சிவபெருமானை வழிபடுவதால் கிடைக்கும் நன்மைகள் :


 * பக்தர்கள் ஆன்மீக ரீதியான அறிவைப் பெறுவார்கள்


 * உடல் மற்றும் மன ரீதியான ஆரோக்கியம் மேம்படும்


 * பிரபஞ்சத்தை உருவாக்கியதும், அழிப்பதும் ஈசனே! எனவே, இந்த நாளில் சிவபெருமானை வழிபடுவது, நல்ல  ஞாபக சக்தியையும், மன உறுதியையும் கொடுக்கும்.


 * சிவபெருமான் நல்ல வாழ்க்கைத்துணையை வழங்குவார்கூடுதலாக, விரதமிருப்பது, நம் பாதையில் இருக்கும் நச்சுகள் மற்றும் இடையூறுகளை நீக்குகிறது


 * விளக்கு ஏற்றி வழிபட்டால், நம்முடைய அறிவு மேம்படும்


 * கங்கை நீரால் அபிஷேகம் செய்வது, முக்திக்கு வழிவகுக்கும்


 சிவபெருமானுக்கு விருப்பமான பிரசாதங்களை வழங்குவது, நமக்கு எல்லா விதத்திலும் வெற்றியைப் பெற உதவும். நம்முடைய ஆசைகளும் நிறைவேறும்.


 ஜோதிட ரீதியாக ஆவணி மாதத்தின் சிறப்புகள் :


 வேத ஜோதிடத்தின் கூற்று படி, சூரியன் சிம்ம ராசியில் பெயர்ச்சி ஆகும் நாள், ஆவணி மாதம் தொடக்கம் என்று கூறப்படுகிறது. இந்த கிரகத்தின் பெயர்ச்சி, அனைத்து ராசிகளையும் ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கிறது. அதனால் தான், பஞ்சாங்கம் இதனை மிகவும் விசேஷமான மாதமாகக் கருதுகிறது.


 ஆவணி மாதம் சிவபெருமானை வழிபடுவதற்கு மிகவும் உகந்த மாதமாகும். இது, வாழ்க்கையை புதிய கண்ணோட்டத்தில் பார்க்கவும், முக்தி அடையவும் உதவி செய்கிறது. சிவ ஆலயங்களிலும், ஆவணி மாதம் வரும் அனைத்து திங்கட் கிழமைகளிலும், நாள் முழுவதும் சிறப்பான பூஜைகள் நடைபெறுகின்றன.Tuesday, August 16, 2022

முதிர்கன்னியின் காதல் கவிதை|Nynarin Unarvugal

 

முதிர்கன்னியின் காதல் கவிதை|Nynarin Unarvugalvideo link
எடையை குறைக்க பப்பாளி டயட் !

 _


*எடையை குறைக்க பப்பாளி டயட் ! எப்படி எடுத்து கொள்ளலாம்?*_​பொதுவாக நாம் விரும்பி உண்ணும் பப்பாளி யில் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் உள்ளது.


இது இது செரிமான ஆற்றலை மேம்படுத்துவது, மலச்சிக்கலை தீர்ப்பது, சருமப் பளபளப்பை உண்டாக்குவது ஆகியவற்றோடு உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது.


அதற்கு மிகச்சிறந்த தீர்வாக இருக்கும். ஏனெனில் பப்பாளியில் உள்ள அதிக அளவிலான ஆன்டி - ஆக்சிடண்ட்டுகள் மற்றும் நார்ச்சத்துக்கள் உடல் எடை யைக் குறைக்கவும் தேவையற்ற கொழுப்புகளைக் கரைக்கவும் உதவி செய்கிறது.


இந்த பப்பாளி டயட்டை எப்படி பின்பற்ற வேண்டும் என்பது குறித்து இங்கே பார்ப்போம்.


 *காலை உணவில் பப்பாளி* 


காலை எழுந்ததும் ஒரு கப் பாதாம் பால் அல்லது ஓட்ஸை ஊறவைத்து அரைத்து வடிகட்டிய ஓட்ஸ் பால் இரண்டில் ஏதாவது ஒன்றை ஒரு கப் எடுத்துக் கொள்ளலாம். இதிலுள்ள புரதங்கள் மற்றும் நார்ச்சத்து உடலுக்குத் தேவையான எனர்ஜியைக் கொடுக்கும். பசும்பாலில் கொழுப்பு சத்து இருக்கும் என்பதால் அதை தவிர்ப்பது நல்லது.


அரை மணி நேரம் கழித்து ஒரு பௌல் பப்பாளி பழத் துண்டுகளை எடுத்துக் கொள்ளுங்கள். இது வயிறு நிரம்பிய உணர்வை தருவதோடு பசியைக் கட்டுப்படுத்த உதவும்.


​ *மதிய உணவில் பப்பாளி* 


பாதி பப்பாளி மற்றும் பாதி அளவு அன்னாசி பழத்தை எடுத்து இரண்டையும் நறுக்கி மிக்ஸ் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். இதை நேரடியாக பழமாகவோ அல்லது ஸ்மூத்தியாகவோ செய்து சாப்பிடலாம். அதோடு தக்காளி, கீரை, பூண்டு போன்றவற்றை சாலட்டாக சேர்த்துக் கொள்வது நல்லது.


இரண்டாவது நாளில் சிறிது சாதம், கீரை மற்றும் சுட்ட கத்தரிக்காய் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதோடு ஒரு கிளாஸ் பப்பாளி ஜூஸ் எடுத்துக் கொள்ள வேண்டும்.


​ *இரவு உணவில் பப்பாளி* 


ஒரு கிளாஸ் லெமன் ஜூஸ் (சர்க்கரை சேர்க்காமல்), காற்கறிகள், வெங்காயம் மற்றும் செலரி சேர்த்த சாலட் ஒரு கப். அதனுடன் ஒரு கப் பப்பாளி பழங்களை சாப்பிடுங்கள்.


இரண்டாவது நாள் எடுத்துக் கொள்ளும்போது ஒரு பெரிய கப் அளவு பப்பாளி துண்டுகளுடன் சுரைக்காய் கூட்டுடன் 2 ரொட்டி அல்லது சிறிய அளவில் சாதம் எடுத்துக் கொள்ளலாம்.


 அடுத்தடுத்த நாட்களில் பப்பாளியுடன் ஏதாவது ஒரு நீர்க்காய் அல்லது மேற்கூறியபடி சாலட் சேர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும்

*சுதந்திரச் சுடர்கள்: வரலாற்றுச் சிறப்புமிக்க சுதந்திர தின நள்ளிரவு*

 


*சுதந்திரச் சுடர்கள்: வரலாற்றுச் சிறப்புமிக்க சுதந்திர தின நள்ளிரவு*நாட்டுக்குச் சுதந்திரம் கிடைத்த 1947 ஆகஸ்ட் 14 – 15 நாள் களுக்கு இடைப்பட்ட அந்த நள்ளிரவு, சந்தேகமே இல்லாமல் நாட்டின் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த தருணமாகும். சுதந்திரமான இந்தியாவின் உதயத்தை அது உணர்த்தியது.


நாட்டின் சுதந்திரத்துக்காகத் தங்களுடைய இன்னுயிரை ஈந்தவர்களின் நம்பிக்கைகளையும் கனவுகளையும் உறுதிப்படுத்துவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திய உச்சகட்ட நிலை அது.


பவித்திரமான வரலாற்றுத் தருணமாக மட்டும் அது அமையவில்லை, நம்முடைய சமூகத்தில் நிலவும் விநோதமான முரண்பாடுகளை வெளிக்கொண்டுவரும் நேரமாகவும் அது அமைந்திருந்தது.


துணிச்சலாக சிந்திப்பவர்கள் - மூடநம்பிக்கைகளுக்கு அடிமையானவர்கள், மிகுந்த நேர்மை மிக்கவர்கள் – ஊழல் செய்யும் தன்மை உள்ளவர்கள், தீவிரமான தனித்துவம் கொண்டவர்கள் – மற்றவர்களுடன் இணைந்து செயல்பட்டே சாகசத்தில் ஈடுபட விரும்புகிறவர்கள் ஆகியோரைக் கொண்டதுதான் நம்முடைய தேசிய ஆளுமை.


இந்தியாவுக்கான சுதந்திரத்தை இந்திய அரசமைப்பு அவையிடம் ஆகஸ்ட் 15 நள்ளிரவு வழங்க வேண்டும் என்று பிரிட்டிஷ் அரசு தீர்மானித்திருந்தது.


முக்கியமான அரசியல் முடிவுகளை எடுக்கும்போது ஜோதிடர்களை ஆலோசிக்கும் வழக்கம் பிரிட்டிஷ்காரர்களுக்குக் கிடையாது. ஆனால், நல்ல நாள் பார்ப்பதில் நம்பிக்கை உள்ளவர்கள் பலர் டெல்லியில் இருந்தனர் (இப்போதும் இருக்கின்றனர்).


ஆகஸ்ட் 15 நள்ளிரவில் நட்சத்திரங்களின் இருப்பு எப்படி, அன்றைக்கு சுதந்திரம் பெறுவது எதிர்காலத்துக்கு நல்லதா என்று அவர்கள் பிரபல ஜோதிடர்களிடம் ஆலோசனை நடத்தினர். ‘ஆகஸ்ட் 15 சரியல்ல - ஆகஸ்ட் 14 தான் சுதந்திரம் பெறுவதற்கு மிகவும் உகந்த நாள்’ என்பதே அவர்களில் பெரும்பாலானவர்களின் கருத்து.


ஆனால், ஆகஸ்ட் 14-ல் பாகிஸ்தானுக்குத்தான் முதலில் சுதந்திரம் வழங்கப்படும் என்று பிரிட்டிஷ் அரசு முடிவெடுத்துவிட்டதால் வைஸ்ராய் மவுண்ட்பேட்டன் பிரபு அன்றைய நாள் காலை கராச்சி நகருக்கு சென்றுவிட்டார். பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திலிருந்து பாகிஸ்தான் (கிழக்கு பாகிஸ்தானும் சேர்த்து) விடுதலை பெறுவதை அன்று காலை முறைப்படி அறிவித்துவிட்டு, பிற்பகலிலேயே விமானம் ஏறி அவர் டெல்லி வந்துவிட்டார்.


ஆனால், நட்சத்திரங்களின் சேர்க்கை சரியில்லாததால் சுதந்திரம் பெறுவதற்கான நாள் சரியில்லை என்கிற மிகப் பெரிய பிரச்சினைக்கு, அறிவாற்றல்மிக்கவரான சர்தார் கே.எம். பணிக்கர் மிக எளிதான தீர்வைக் கண்டறிந்து விட்டார் என்பதே என்னுடைய நினைவு.


மலையாள அறிஞரும் ஆங்கிலத்தில் இந்திய வரலாற்றை மிகச் சிறப்பாக எழுதியவருமான பணிக்கர் இந்து மதத்தின் மறைபொருள்கள் பலவற்றைக் குறித்து ஆழ்ந்து கற்றவர், அத்துடன் நல்ல நகைச்சுவை உணர்வுமிக்கவர்.


பிரிட்டிஷ்காரர்கள் குறித்த நாளை மாற்றாமலும், நட்சத்திர சேர்க்கையால் எதிர்கால இந்தியாவுக்கு எந்தவித தீமையும் வராமலும் இருக்க, தானொரு வழியைக் கண்டறிந்துவிட்டதாகக் கூறினார்.


இந்திய அரசமைப்பு அவையின் உறுப்பினர்கள் அனைவரும் நள்ளிரவுக்கு அரை மணி நேரம் முன்னதாக - அதாவது ஆகஸ்ட் 14 இரவு 11.30 மணிக்கே – அவையில் கூடிவிடுவார்கள். இதனால் நட்சத்திரங்கள் சாந்தியடைந்துவிடும்.


புதிய சுதந்திர இந்தியாவுக்கான விசுவாசப் பிரமாணத்தை சரியாக நள்ளிரவு 12 மணிக்குப் பிறகு அவர்கள் மேற்கொள்வார்கள், பிரிட்டிஷார் கணக்குப்படி அது ஆகஸ்ட் 15-ல் சுதந்திரம் கொடுத்ததாகிவிடும். இந்தத் தீர்வு எல்லோருக்கும் திருப்தியாக இருந்தபடியால், அதற்கான ஏற்பாடுகள் செய்யத் தொடங்கப்பட்டன.


கவலையும் வியப்பும்அரசமைப்பு அவையின் இடைக்கால செயலாளராக நான் பொறுப்பு வகித்தேன். அதற்கும் சில மாதங்களுக்கு முன்னால் வரை பிரிட்டிஷ் இந்தியாவின் திட்டமிடல் – வளர்ச்சித் துறையின் செயலாளராக இருந்தேன்.


நான் செயலாளராக இருந்த துறையைக் கலைத்துவிடுவது என்று கவர்னர் ஜெனரல் முடிவெடுத்துவிட்டார் என்பதை ஒரு நாள் காலை பத்திரிகையைப் படித்தபோது தெரிந்துகொண்டு துணுக்குற்றேன்.


காலை உணவை முடித்துவிட்டு, அந்தத் துறையின் உறுப்பினரான சர் அக்பர் ஹைதரியைச் சந்தித்தேன். என்னுடைய வேலை போய்விட்டதே என்ற கவலையைத் தெரிவித்ததுடன், இப்படி என்னிடம் முன்கூட்டி சொல்லாமலேயே செய்துவிட்டார்களே என்கிற ஆதங்கத்தையும் கொட்டினேன்.


இதற்காக வருத்தப்படுவதாகக் கூறிய ஹைதரி, சுதந்திர நாள் நெருங்குவதால் அரசின் நடவடிக்கைகள் இப்படி திடீர் திடீரென எடுக்கப்பட வேண்டியிருப்பதாக சமாதானப்படுத்தினார்.


ஜின்னா எதிர்ப்பு


பாகிஸ்தானுக்குத் தலைவராகப் பொறுப்பேற்கவிருந்த முகமது அலி ஜின்னா, அப்போது வைஸ்ராயாக இருந்த வேவல் பிரபுவைச் சந்தித்தார். சுதந்திரம் வழங்கப்பட்ட பிறகு திட்டமிடல் – வளர்ச்சிக்கான துறை ஒரு நாட்டுக்காகச் செயல்படுமா அல்லது இரண்டு நாடுகளுக்கும் சேர்த்து செயல்படுமா என்று ஜின்னா கேட்டிருக்கிறார்.


ஒரு நாட்டுக்காகத்தான் (இந்தியா) என்றால், அது பாகிஸ்தானை பாரபட்சமாக நடத்துவதாகிவிடும். எனவே, இனி பிரிட்டிஷ் அரசுடன் சுதந்திரம் தொடர்பான பேச்சுவார்த்தை களில் ஈடுபட மாட்டேன் என்று கண்டிப்பாக எச்சரித்திருக்கிறார்.


இதற்கு ஒரே தீர்வு அந்தத் துறையையே இத்துடன் மூடிவிடுவதுதான் என்று வேவல் பிரபு முடிவெடுத்துவிட்டார் என்பதை அறிந்தேன். இந்த வேலைக்குப் பதிலாக எனக்கு புதிய வேலை தர இரண்டொரு நாள்கள் பிடிக்கும் என்று ஹைதரி என்னிடம் கூறினார்.


புதிய பொறுப்பு


இந்தியாவுக்கான புதிய அரசமைப்பு அவையை உருவாக்கத் தொடங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்றும், புதிய அரசமைப்பை உருவாக்குவதுடன் அந்தப் பணி முடிக்கப்படும் வரை, அதுவே தேசிய சட்டப் பேரவையாக (நாடாளு மன்றத்துக்கு இணை) செயல்படும் என்றும் கூறிய ஹைதரி, அதன் நிர்வாக நடவடிக்கை களுக்குப் பொறுப்பாளராக என்னை நியமிக்கத் தீர்மானித்திருப்பதாகத் தெரிவித்தார். அரசமைப்பை உருவாக்குவதற்கான ஆலோசனைகளை வழங்கத் தனியாக ஆலோசகர் பதவி ஏற்படுத்தப்பட்டது.


மிகச் சிறந்த நீதிமானான சர் பி.என். ராவ் சட்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டார். அவர் கூச்ச சுபாவம் கொண்டவர், அதிகம் யாருடனும் கலந்து பழகமாட்டார், எப்போதும் தன்னுடைய வேலையிலேயே மூழ்கியிருப்பார்.


அரசமைப்பு அவை தேவைப்படும் தகுதியான ஊழியர்களைத் தானே நியமித்துக்கொள்ளலாம் என்று சுதந்திரம் வழங்கப்பட்டிருந்தது. ஆனால், அதற்கான ஆயத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதற்காகவே தற்காலிக அடிப்படையில் நானும் பி.என். ராவும் நியமிக்கப்பட்டிருந்தோம்.


- கட்டுரையாளர், முன்னாள் ஐசிஎஸ் அதிகாரி. அரசமைப்பு வரைவுக்குழுச் செயலர், பிரதமருக்குத் தனிச் செயலர், உள்துறைச் செயலர், ரிசர்வ் வங்கியின் கவர்னராகப் பதவி வகித்தவர்.


(‘தி இந்து’ ஆங்கில நாளிதழில்

15.08.1972-ல் வெளியான கட்டுரை)

நன்றி: ‘தி இந்து’ ஆவணக் காப்பகம், கே.ஆர். நரேஷ் குமார், விபா சுதர்சன்

தமிழில்: வ. ரங்காசாரி

அடல்பிகாரி வாஜ்பாய் நினைவஞ்சலி

 


🦉அடல்பிகாரி வாஜ்பாய் நினைவஞ்சலி🇮🇳 😰


⚖ஆட்சிக் கால நிஜச் சாதனைகள்💥


✍🏻தங்கத்தை இங்கிலாந்தில் அடமானம் வைத்து அரசாங்கம் நடத்திய இந்தியாவில் இவர் பிரதமராக பதவியேற்ற பின்தான்...

தங்கம் விலை பவுன் 4470/-இல் இருந்து 3300/- ஆக குறைந்தது ..


✍🏻இவர் ஆட்சியில்தான் 4.5 ஆண்டுகள் விலைவாசி உயரவில்லை. 


✍🏻இவர் ஆட்சியில்தான் பெட்ரோலிய பொருட்கள் விலை எகிற வில்லை ...

petrol 36/- rs per litre rate.


✍🏻இவர் ஆட்சியில்தான் செல்வந்தர்கள் மட்டுமே 3000O/- 0YT 3 மாதம் 15000/- 6மாதம் கழித்து கிடைத்த  தொலைபேசி இணைப்பை 1000ரூபாய் செலுத்தி உடனடியாக சாமானிய மக்கள் பெற்றார்கள்...


✍🏻இந்தியா முழுவதும்  விபத்தில்லா நான்கு வழி சாலை வந்தது..


✍🏻சர்வசிக்ஷ் அபியான் மூலம் இந்தியாவின் கடைசி கிராமம் வரை கல்வி வளர்ச்சி அடைந்தது.


✍🏻பிரதான்மந்திரி கிராம் சடக் யோஜனா மூலம் கடைக்கோடி கிராமம் வரை சாலைகள் கண்டது .


✍🏻இவர் ஆட்சியில்தான்  வங்கி வீட்டு கடன் வட்டி குறைந்து பலர் வீடு கட்டினார்கள்..


✍🏻வாகன உற்பத்தியும் இந்தியாவில் அதிகரிக்கப்பட்டு வாகன கடனும் தாராளமாக கிடைத்ததன் பலனாக மிதிவண்டியை மட்டுமே பார்த்த பலர் வாகனங்கள் வாங்கினார்கள்:


✍🏻விறகு அடுப்பு மண்ணெண்ணெய் அடுப்புமே பயன்படுத்திய இந்திய குடி மக்கள் பலர்  இவர் ஆட்சியில்தான் கேஸ் அடுப்பு வாங்கி உபயோகித்து நிம்மதி பெருமூச்சு விட்டார்கள்..


✍🏻இவர் ஆட்சியில் தான் அதிகப்படியாக  இருளில் இருந்த பலருக்கு காற்றாலை மின் உற்பத்தி மூலம் தடையில்லா மின்சாரம் கிடைத்தது ..


✍🏻இவர் ஆட்சியில்தான் போக்குவரத்திற்கு இந்தியா முழுவதும் தரமான  தேசிய நெடுஞ் சாலை கள் கிடைத்தது .

💥அதில் தமிழகத்தில் 

NH.66 கிருஷ்ணகிரி to பாண்டிச்சேரி 

NH,68 சேலம் to உளுந்தூர்பேட்டை  

NH 208 மதுரை to கொல்லம்

NH 45A விழுப்புரம் to நாகப்பட்டனம் 

NH 206 ...NH 67 திருச்சி to  ராமேஸ்வரம்   

NH 207 NH 209 சாம்ராஜ்நகர் to திண்டுக்கல்  மற்றும் NH 45B ஆகியவை.


✍🏻இவர் ஆட்சியின் போதுதான் மதுரை சின்னப்பிள்ளை காலில் விழுந்து ஊக்குவித்து மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மூலம் மகளிர் வாழ்வு மேம்பாடு அடைந்தது..


✍🏻இவர் ஆட்சியில் தான் அமெரிக்காவின் கண்ணில் மண்ணை தூவி பொக்ரான் அணுகுண்டு வெடித்து இந்தியா உலக அரங்கில் தலை நிமிர்ந்தது,.


✍🏻இவர் ஆட்சியில் நம்மூர் மேதை விஞ்ஞானி அப்துல்கலாம் ஜனாதிபதியானார்,.


✍🏻இவர் ஆட்சியில் தான் பனிமலை கார்கிலில் ஆக்கிரமிக்க நினைத்த அந்நிய நாட்டினரை துரத்தியடித்து வெற்றிவாகை சூடப்பட்டது..


✍🏻இவர் ஆட்சியில் தான் சுற்றுலா கூட போக முடியாத ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் (ஸ்ரீநகரில்) தீவிரவாதிகளை  அடக்கி சுற்றுலா சுலபமானது..


✍🏻இவர் ஆட்சியில் தான் வெளிநாடுகளில் திட்டங்களுக்கு கையேந்திய இந்தியாவை அந்நிய செலாவணி கையிருப்பு 1.5லட்சம் கோடியாக உயர்த்தி நாம் அவர்களுக்கு கடன் கொடுக்கும் நிலை உருவானது..


✍🏻இவர் ஆட்சியில்தான் எதிர்கட்சியாக இருந்தாலும் S.M.கிருஷ்ணா கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரை சிலிகான்vally யாக்க 1500 கோடி உடன் ஒதுக்கி  மென்பொருள் உற்பத்தியை தன்னிறைவாக்கி இந்தியாவில் உள்ள படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு குறை போக்கப்பட்டது..


✍🏻இவர் ஆட்சியில் தான் இந்தியா பால் உற்பத்தியில் முதலிடம் பிடித்தது ..


✍🏻இவர் ஆட்சியில்தான் டெல்லியில் முதல் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டது


✍🏻இவர் ஆட்சியில்தான் மிகச்சிறப்பான நிறைய சுரங்கபாதைகள்.. கடல் பாலங்கள் கொண்ட கொங்கன் ரயில்வே மங்களூர்to மும்பை பாதை அமைக்கப்பட்டது ..


✍🏻இவர் ஆட்சியில்தான் ஏழைகளுக்கு அந்தியோதையா அன்னபூர்னா திட்டத்தில் ஏழைகள் பசியைபோக்க மாதம் 25கிலோ அரிசி இலவசமாக தரப்பட்டது,..


✍🏻இவர் ஆட்சியில்தான்  வால்மீகி அம்பேத்கார் ஆவாஸ்யோஜனாஅய்யா திட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வீடு கட்டி தரப்பட்டது,.


✍🏻இவர் ஆட்சியில் தான் அம்பேத்கார் பிறந்தநாள் அரசு விடுமுறை நாள் ஆக்கப்பட்டது..


✍🏻இவர் ஆட்சியில்தான் மிலாடிநபி விடுமுறை நாளாக ஆக்கப்பட்டது... 


✍🏻நாட்டு மக்களுக்காக மெய்யாலுமே திருமணமே செய்து கொள்ளாத வாஜ்பாய் அவர்களின் பல சாதனைகள் சொல்லி கொண்டே போகலாம்.🙏🏻😢

சென்னை கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக்கொடி ஏற்றி வைத்து உரை

 


சென்னை கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக்கொடி ஏற்றி வைத்து உரை


அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு..

31 சதவீதத்திலிருந்து 34 சதவீதம் உயர்வு

இதன் மூலம் 16 லட்சம் பேர் பயன் பெறுவர்..


சுதந்திரத்திற்காக போராடிய தியாகிகளுக்கு வீரவணக்கம்..

எண்ணற்ற தியாகிகளின் தன்னலமற்ற தியாகத்தால் பெற்ற விடுதலை இது..


காந்தியை மகாத்மா காந்தியாக மாற்றியது தமிழ்மண்..

ஒத்துழையாமை இயக்கத்தை தொடங்கப்போவதாக சென்னையில் தான் காந்தி அறிவித்தார்..


விடுதலை நாள் அருங்காட்சியகம் அமைக்கப்படும்


இந்திய விடுதலைக்காக முதலில் குரல் கொடுத்தது தமிழகம் தான் ..


பூலித்தேவன், மருதநாயகம், வீரபாண்டிய கட்டபொம்மன், வேலுநாச்சியார், மருதுபாண்டியர்கள் உள்ளிட்டோரின் வீரமும், வ.உ.சி., பாரதியார், சுப்பிரமணிய சிவா ஆகியோரின் தியாகங்களும் போற்றத்தக்கது..


-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
*_
பாடகி ஜிக்கி Jikki , நினைவு தினம் ஆகஸ்ட் 16, 2004.🥲


ஜிக்கி ( Jikki , 1937 - ஆகத்து 16, 2004) என்று பரவலாக அறியப்பட்ட பிள்ளைவாள் கஜபதிநாயுடு கிருஷ்ணவேணி புகழ்பெற்ற தமிழ்த் திரைப்பட பின்னணிப் பாடகி. இவர் பாடிய பாடல்கள் பத்தாயிரத்திற்கும் அதிகமானவை. 


தமிழ்த் திரைப்படங்களில் மாத்திரமன்றி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, சிங்களம் ஆகிய மொழிப்படங்களிலும் பாடியுள்ளார். 


1943 இல் பந்துலம்மா திரைப்படத்தில் நடிகையாகவும், பின்னணிப் பாடகியாகவும் அறிமுகமாகி 2002 வரை, கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகள் திரையுலகில் பாடியிருக்கிறார். எழுபது வயது நெருங்கும் சமயத்திலும் இவருக்குப் பாடல் வாய்ப்பு கிடைத்திருந்தது. இவர் பின்னணிப் பாடகர் ஏ. எம். ராஜாவின் மனைவி.


நாயகன் படத்தில் நான் சிரித்தால் தீபாவளி -ஜிக்கியின் பிரபல பாடல்களில் இன்றும் ஹிட். தமிழக அரசின் கலைமாணி விருதைப் பெற்றிருந்த ஜிக்கி, புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நிலையில் இதே ஆகஸ்ட் 162004)ல் காலமானார்.

🎬From The Desk of கட்டிங் கண்ணையா!

கொளத்தூர் பூம்புகார் குடியிருப்போர் நலச்சங்கத்தின் சார்பாக 75வது சுதந்திர திருநாள் தின விழா

 

கொளத்தூர் பூம்புகார் குடியிருப்போர் நலச்சங்கத்தின் சார்பாக 75வது சுதந்திர திருநாள்  தின விழா

  சென்னை கொளத்தூர் பூம்புகார் நகரில்

கொளத்தூர் பூம்புகார் குடியிருப்போர் நலச்சங்கத்தின் சார்பாக இந்திய நாட்டின் 75வது சுதந்திர திருநாள்  தின விழா 15,08,.2022அன்று காலை 7.30 மணியளவில் கொளத்தூர் பூம்புகார் பூங்காவில்  நடைபெற்றது

இந்த நிகழ்வுக்கு சங்கத்தின் தலைவர் திரு கன்னியப்பன்தலைமை தாங்கினார்

சங்கத்தின் உறுப்பினர் தியாகராஜன் வரவேற்பு உரை நிகழ்த்தினார்

65வது வார்டு மாமன்ற உறுப்பினர் K.சாரதா,M.C.அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தேசிய கொடியேற்றி உரையாற்றி பின் அனைவருக்கும இனிப்பு வழங்கினார்

                         
                                    

 

சிறப்புஅழைப்பாளராக பீப்பிள் டுடே நிர்வாக ஆசிரியர் திரு என்,எஸ்,உமாகாந்தன் கலந்து கொண்டார்

நிகழ்ச்சி ஏற்பாட்டை சங்க கணக்கர் திரு ராமசாமி அவர்களும் சங்க உறுப்பினர் திரு மகேஷ் அவர்களும் செய்திருந்தனர்,

இந்த நிகழ்வில் கொளத்தூர் பூம்புகார் குடியிருப்போர் நலச்சங்கத்தின் நிர்வாக உறுப்பினர்கள்உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்            

 

சங்கத்தின் செயலாளர் திரு இராமதாஸ் அவர்கள் நன்றி கூற விழா இனிதாக முடிவுற்றது