Wednesday, June 30, 2021

ஷோபனா ரவி

 உங்கள் அம்மா துார்தர்ஷனில் பணிபுரிந்ததால், உங்களுக்கு செய்தி வாசிப்பாளராகும் எண்ணம் வந்ததா?


அப்படியும் சொல்லலாம். என் அம்மா வானொலியில் செய்தி வாசித்ததை, சிறுவயதில் இருந்தே கேட்டிருக்கிறேன். அதனால், அந்த வாய்ப்பு வந்தபோது, எனக்கு எளிதாக இருந்தது.
முதன் முதலில் செய்தி வாசித்தபோது ஏற்பட்ட உணர்வு...
படிப்பது தானே... எளிதாக தான் இருந்தது.
தமிழ் மற்றும் ஆங்கிலச் செய்திகளை வாசிக்க பிரத்யேக பயிற்சி எடுத்தீர்களா?
தமிழ் உச்சரிப்பின் முக்கியத்துவத்தை பள்ளி நாடகங்களில் நடித்தபோதும், ஆங்கில உச்சரிப்பை, கல்லுாரி பாடத்தின் போதும், நான் ஏற்கனவே உணர்ந்திருந்தேன். எனக்கு எழுத, படிக்கத் தெரிந்த மொழிகளான ஆங்கிலத்தையும், தமிழையும் சரியாக உச்சரிக்கும் போது, நாவில் அமுதுாறுவதாக உணர்வேன்.
அத்துடன், தமிழை ஏற்ற, இறக்கத்துடன் வாசிக்க, என் ஆசிரியர்களும், அம்மாவும் எனக்கு பழக்கி இருந்தனர். ஆங்கில இலக்கியம் படித்தபோது, அதற்கு, என்னை நானே பழக்கிக் கொண்டேன். தமிழ், 'ட' வேறு, ஆங்கிலத்தில், 'ட' உச்சரிப்பு வேறு. மொழிக்கு மொழி இப்படி பல வேறுபாடுகள் உண்டு. ஒவ்வொரு மொழிக்கும் தனித்துவம் உள்ளது.
மறக்க முடியாத நிகழ்வுகள்?
பல ஆண்டுகள் செய்தி வாசித்ததால், உயரத்தில் இருந்தவர்களைக் காலச்சக்கரம் புரட்டிப் போடுவதையும், வேறு சிலரைக் கொஞ்சம் கொஞ்சமாக மேலே ஏற்றுவதையும் பார்த்த வண்ணம் இருந்தேன். இயற்கையும், அவரவர் வினைப்பயனும், எல்லாவற்றையும், எல்லாரையும் மாற்றியபடியே இருந்ததை, திரைப்படம் பார்ப்பது போல் உள்வாங்கிக் கொண்டேன்.
அரசு சார்ந்த செய்திகளை மட்டுமே வாசித்தது சலிப்பை ஏற்படுத்தவில்லையா? உறுத்தல் இல்லாமல் இருந்ததா?
பி.டி.ஐ., - யு.என்.ஐ., - ராய்டர் செய்திகளை அடிப்படையாக வைத்துத் தான், செய்திகள் தயாரிக்கப்பட்டன. என் அம்மா செய்தி ஆசிரியராகப் பணியாற்றியதால், தன் விருப்பு வெறுப்புகளை விட்டு, வேலை செய்வதைப் பார்த்திருக்கிறேன். அவர்கள், செய்தியின் நம்பகத்தன்மைக்கு முக்கியத்துவம் தந்தனர். செய்தி ஆசிரியரின் இடைச்செருகல் இருக்காது. அந்த தொழில் தர்மம், பிற்காலங்களில் குறைந்து விட்டது.
நான், என் பணியை ஒரு தொழிலாகப் பார்த்தேன். எனக்கு செய்தியில் ஏதேனும் வரிகள் சரியாகப் படாவிட்டால், செய்தி ஆசிரியரிடம் சொல்லி, அவற்றை மாற்றிக் கொள்வேன்; அவ்வளவு தான்.
தாங்கள் விருப்ப ஓய்வு பெற்ற போது, நிறைய சாதிக்க உள்ளதாக கூறினீர்கள். உங்கள் சாதனை பயணம் எப்படி உள்ளது?
அப்படி சொன்னதாக நினைவில்லை; எதையும் சாதிக்க வேண்டும் என்ற விருப்பம் எனக்கு இல்லை. என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்று நினைத்தேனோ, நினைக்கிறேனோ, அவற்றை செய்கிறேன். என்னை நான் அறிய வேண்டும் என்ற அவா ஒன்று தான், என்னை சிறுவயதில் ஆக்கிரமித்திருந்தது. அதை என் குருநாதர், டாக்டர் நித்யானந்தம் நிறைவேற்றித் தந்துவிட்டார்.
அதே இளமையும், சுறுசுறுப்பும் தொடர்கிறதே; ரகசியம் என்ன?
நான், பெரிதாக எதையும் அசைபோட மாட்டேன்; திட்டமிடமாட்டேன். செய்ய வேண்டிய பணிகளை, உடனுக்குடன் முடித்து விடுவேன். 25ம் வயதில், யோகா செய்ய துவங்கி விட்டேன்.
தினமும் மாலை, நடைப்பயிற்சியில் ஈடுபடுகிறேன். ஆனால், பெரும்பாலான பெண்கள், தன் குடும்பம், தன் குழந்தை என, பிறருக்காகவே சுழல்வதால், தன்னைப் பற்றி யோசிப்பதில்லை.
பெண்கள், தங்களின் உடல்நலனில் கவனம் செலுத்த வேண்டும். உடற்பயிற்சியை வழக்கமாக்கினாலே, உடல் சுறுசுறுப்பாக இருக்கும். சில ஆண்டுகளாக, நான், 'தாய்ச்சி' என்கிற, தற்காப்பு கலையை பயின்று வருகிறேன். ஆக, உடலுக்கு உடற்பயிற்சி, மனதுக்கு தியானம். இவற்றை தவிர, என்னிடம் வேறெந்த ரகசியமும் இல்லை.
தற்போதைய செய்தி சேனல்கள் பற்றியும், செய்தி வாசிப்பாளர்கள் எப்படி இருப்பதாக உணர்கிறீர்கள்?
பரபரப்பாக இருக்கிறது. மொழி ஆளுமைக்கு போதுமான முக்கியத்துவம் இல்லை. வாக்கிய அமைப்புகளில் குழப்பம் நிலவுகிறது. சரிவரப் பராமரிக்கப்படாத பேச்சு வழக்கால், தமிழ் தேய்ந்து கொண்டிருக்கிறது.
ஷோபனா ரவி பேட்டியில் சொன்னது
நன்றி: தினமலர்

வாட்ஸ்அப் நம்பர் Save செய்யாமல் எப்படி மெசேஜ் அனுப்புவது?

 

வாட்ஸ்அப் நம்பர் Save செய்யாமல் எப்படி மெசேஜ் அனுப்புவது?

உங்கள் வாட்ஸ் அப்பில் இருந்து நீங்கள் யாருக்கும் மெசேஜ் அனுப்ப வேண்டும் என்றால், முதலில் உங்களுடைய வாட்ஸ்அப் காண்டக்ட்டில் அவர்களின் வாட்ஸ்அப் எண் சேமிக்கப்பட்டிருப்பது அவசியம். வாட்ஸ்அப் எண்களை நமது காண்டக்ட்டில் சேமித்து வைக்காமல் வேறு ஒருவருக்கு மெசேஜ் செய்ய வலி எதுவும் உள்ளதா என்ற சிலரின் கேள்விக்கு நிமிடம் பதில் இருக்கிறது. வாட்ஸ்அப் எண்களை சேவ் செய்யாமல் மெசேஜ் அனுப்ப ஒரு எளிய வழி உள்ளது. அதை எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.
வாட்ஸ்அப் பற்றி நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு பொதுவான விஷயம் என்னவென்றால், வாட்ஸ்அப் மூலம் நாம் வேர் ஒருவருக்கு மெசேஜ் அனுப்ப வேண்டும் என்றால், முதலில் அவர்களின் நம்பரை சேவ் செய்வது என்பது கட்டாயம். அவர்களின் எண்களை நீங்கள் சேவ் செய்திருந்தால் மட்டுமே அதற்குப் பிறகு தான் நீங்கள் அந்த நபருக்கு மேசேஜ் அனுப்ப முடியும்.
ஆனால், சில நேரங்களில் சிலரின் எண்களை சேவ் செய்ய விரும்புவதில்லை. இருப்பினும் அவசரத்திற்கு மெசேஜ் செய்ய நினைப்போம். இப்படியான நேரத்தில் அவர்களின் எண்களை சேவ் செய்யாமல் எப்படி வாட்ஸ்அப் மூலம் அவர்களுக்கு மெசேஜ் செய்வது என்பதைப் பார்க்கலாம். இது இப்போது உங்களுக்கு தேவைப்படாவிட்டாலும் நிச்சயம் வரும் காலத்தில் கட்டாயமாக எப்போதாவது தேவைப்படும்.

உதாரணத்துக்கு, ஷாப்பிங் கடைகளுக்குச் செல்லும் போதோ அல்லது ஒரு முறை பயனுக்காக ஒரு சிலரின் வாட்ஸ்அப் எண்களுக்கு ஏதேனும் தகவலை பகிர நினைக்கும் போது இந்த நிலைமையை நீங்கள் சந்தித்து இருப்பீர்கள். இதுபோன்ற நேரங்களில் அந்த நம்பரின் வாட்ஸ்அப் எண் நமக்கு முக்கியமானதாக இருப்பதில்லை. இருப்பினும் அதுபோன்ற எண்களுக்கு மெசேஜ் அனுப்ப வேண்டும் என்றால் அவர்களின் நம்பரை சேவ் செய்யாமல் எப்படி வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பலாம் என்று பார்க்கலா

நம்பர் சேவ் செய்யாமல் வாட்ஸ்அப்பில் மெசேஜ் செய்ய இந்த செயல்முறையை பின்பற்றுங்கள் முதலில் நீங்கள் உங்கள் ஸ்மார்ட்போனில் இருக்கும் கூகிள் குரோம் அல்லது வேறு ஏதேனும் வெப் பிரௌசரை ஓபன் செய்ய வேண்டும். பிறகு உங்கள் பிரௌசரில் http://api.whatsapp.com/send?phone=xxxxxxxxxx என்ற இந்த லிங்கை ஓபன் செய்துகொள்ளுங்கள்.

xxxxxxxxxx என்ற இடத்தில் இதை என்டர் செய்ய வேண்டும் xxxxxxxxxx என்ற இடத்தில் நீங்கள் மெசேஜ் அனுப்ப விரும்பும் என்னை என்டர் செய்யுங்கள். உதாரணத்திற்கு எண் +91-9012345678 என்றிருந்தால் 919012345678 என்று டைப் செய்யவும். இப்போது எண்டர் அழுத்தவும்.


இறுதியாக இதை மட்டும் செய்தால் போதும் ஸ்க்ரீனில் Continue to Chat என்று பச்சை நிற பட்டன் இருக்கும். அதை அழுத்தவும். தானாக வாட்ஸ் அப் திறந்து அந்த நம்பருக்கு மெசேஜ் அனுப்பும் பக்கத்திற்குச் செல்லும். WhatsAppNumber என்பதற்குப் பதில் நம்பர் டைப் செய்து மெசேஜ் அனுப்பலாம்.

Rl

Tuesday, June 29, 2021

ஒரு குட்டி சிம்மில் எப்படி உலக முழுதும் பேசமுடிகிறது

 

ஒரு குட்டி சிம்மில் எப்படி உலக முழுதும் பேசமுடிகிறது ? 
  • ஒரு சிறிய சிம் கார்டு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

  • எங்கு வேண்டுமானாலும் பேச முடியும்.

  • சிம் பல வகைகள் உள்ளன

உங்கள் அன்றாட வாழ்க்கையில் நீங்கள் பயன்படுத்தும் சிம் எவ்வாறு செயல்படுகிறது மற்றும் அவற்றில் பல்வேறு வகைகள் என்ன தெரியுமா? மக்களுடன் பேச அல்லது இணையத்தை இயக்க பயன்படும் சிம்மின் பின்னால் என்ன தொழில்நுட்பம் உள்ளது என்று உங்களுக்குத் தெரியுமா? இல்லையென்றால், உலகில் எத்தனை வகையான சிம் கார்டுகள் உள்ளன, அவை எந்த தொழில்நுட்பத்தில் செயல்படுகின்றன என்பதை இன்று நாங்கள் உங்களுக்குக் கூறுவோம். சிம் கார்டு மிகவும் முக்கியமானது, ஏனெனில் இது உங்கள் தொலைபேசி எண் மற்றும் பிற பயனுள்ள தகவல்களை தன்னுடன் சேமித்து வைக்கிறது. எனவே இந்த சிறிய சிம் கார்டுகளைப் பற்றி விரிவாக அறிந்து கொள்வோம்.

முதலில் சிம் கார்டு எவ்வாறு செயல்படுகிறது நாம் அனைவரும் போனில் சிம் போடும்போது, ​​சிறிது நேரம் கழித்து போனில் சிக்னல் வரும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். இதைத்தான் நெட்வொர்க் என்று அழைக்கப்படுகிறது. சிம் செருகப்பட்ட பின்னர் நெட்வொர்க்குகள் தோன்றும். நாம் போனில் ஒரு சிம் வைக்கும்போது, ​​அந்த சிம் அந்த நிறுவனத்தின் அருகிலுள்ள டவருடன்  இணைகிறது.


 மொபைலின் ட்ரென்ஸ்லேட்டரிலிருந்து ஒரு சிக்னலுக்கு அனுப்புவதன் மூலம் இந்த GSM நெட்வொர்க் இணைக்கப்பட்டுள்ளது. இது இணைக்கப்படும்போது, ​​பயனர்கள் அதன் உதவியுடன் கால்களை செய்ய முடியும். எந்தவொரு சிம்மிலிருந்து  நாம் அழைக்கும் போதெல்லாம், அவர்கள் தங்கள் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட அருகிலுள்ள எந்த gsm  நெட்வொர்க்கிலிருந்தும் போனை அடையாளம் கண்டு, அழைப்பு விடுக்கப்படுகிறது.

சிம் கார்டுக்குள் வரிசை எண் மற்றும் அடையாளம் காணப்பட்ட குறியீடுகள் ஏற்கனவே உள்ளன.  அனைத்து தொடர்பு பட்டியல்களின் டேட்டா மற்றும் அனைத்து டெக்ஸ்ட் மெசேஜ்களும்  சிம் கார்டுக்குள் உள்ளன.

எத்தனை வகையான சிம் கார்டுகள் உள்ளன: 5 வகையான சிம் கார்டுகள் உள்ளன.

முழு சிம்: முழு சிம் முதல் சிம் கார்டு, இது இனி எந்த நபரும் பயன்படுத்தாது. இந்த சிம் 1990 இல் செய்யப்பட்டது. இந்த சிம்மின் அளவு 86X54 mm ஆகும். அதில் பெரும்பாலானவை பிளாஸ்டிக்கால் ஆனவை.

 

மினி சிம்: முழு சிமுக்குப் பிறகு மினி சிம் பயன்படுத்தத் தொடங்கியது. இந்த சிம் 1996 இல் செய்யப்பட்டது. இந்த சிம்மின் அளவு 25X15 mm . இருப்பினும், இந்த சிம் பயன்பாடு இப்போது இல்லாததாகிவிட்டது.

 

மைக்ரோ சிம்: மினி சிம்மிற்குப் பிறகு மைக்ரோ சிம் பயன்படுத்தத் தொடங்கியது. இந்த சிம் 2003 இல் செய்யப்பட்டது. இந்த சிம்மின் அளவு 15X12 mm இருந்த மினி சிம் விட குறைவாக இருந்தது. இந்த சிம் பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டது.

 

நானோ சிம்: இந்த சிம் 2012 இல் செய்யப்பட்டது. இந்த சிம்மின் அளவு மைக்ரோ சிம் கார்டை விட சிறியது, இது 12.3x8.8 mm ஆகும். இந்தியாவில் 4 ஜி நெட்வொர்க் அறிமுகப்படுத்தப்பட்டபோது இந்த சிம் பயன்பாடு இந்தியாவில் அதிகமாக அதிகரித்தது. இருப்பினும், நாங்கள் இன்னும் அதே சிம் பயன்படுத்துகிறோம். கிட்டத்தட்ட எல்லா Android மற்றும் iOS நானோ சிம்மையும் ஆதரிக்கிறது.

 

இ-சிம்: இந்த சிம் 2016 இல் தொடங்கப்பட்டது. இருப்பினும், இது ஒரு எலக்ட்ரோனிக் சிம் என்பதால் சிம் அளவு இல்லை. தற்பொழுது  இந்த சிம் அதிகம் யாரும்  பயன்படுத்தவில்லை

ரயில் கட்டண விலையில் விமான பயணம்.. ரூ.999ல் விமானத்தில் பறக்கலாம்..

 

ரயில் கட்டண விலையில் விமான பயணம்.. ரூ.999ல் விமானத்தில் பறக்கலாம்.. ஸ்பைஸ்ஜெட் ஆஃபர்..!கொரோனா காலகட்டத்தில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட துறைகளில், விமான துறையும் ஒன்று. ஏனெனில் அந்த நிறுவனங்களின் சேவை முழுவதும் முடக்கப்பட்டிருந்தது.

எனினும் செலவினங்கள் மட்டும் தொடர்ந்து இருந்தன. குறிப்பாக ஊழியர்களின் சம்பளம், பராமரிப்பு செலவு என தொடர்ந்து செய்ய வேண்டிய கட்டாயத்திற்குள் நிறுவனங்கள் இருந்து வந்தன. இந்த நிலையில் தற்போது மீண்டும் சேவையினை தொடங்கியுள்ளது

குறைந்த கட்டண சலுகை இந்தியாவின் முன்னணி பட்ஜெட் கட்டண விமான நிறுவனமான ஸ்பைஸ்ஜெட், mega monsoon sale என்ற அதிரடியான திட்டத்தினை அறிவித்துள்ளது. இதன்படி அதன் உள்நாட்டு விமான கட்டண தொகையானது 999 ரூபாயில் இருந்து ஆரம்பிக்கிறது.

சலுகை எப்போது வரை? இதன் மூலம் உள்நாட்டு பயணிகள் சில பகுதிகளுக்கு வெறும் 999 ரூபாயில் இருந்து பயணிக்க தொடங்கலாம். இந்த 999 ரூபாய் என்பது அனைத்து கட்டணங்களையும் உள்ளடக்கியது. மேலும் இந்த விமான கட்டணத்திற்கு ஈடான தொகைக்கு அதாவது 1000 ரூபாய் வரை இலவச விமான வவுச்சரும் கிடைக்கும் என அறிவித்துள்ளது.


எப்போது பயணிக்கலாம் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த சலுகை திட்டமானது ஜூன் 25 அன்று தொடங்கிய நிலையில், ஜூன் 30, 2021 வரையில் அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆகஸ்ட் 1, 2021 முதல் மார்ச் 31, 2022 வரை பயணித்துக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு ஆஃபர்களும் உண்டு எனினும் நேரடி உள்நாட்டு விமானங்களுக்கு மட்டுமே இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விமான நிறுவனத்தின் இணையத்தில் பதிவு செய்யும்போது, Grofers, Mfine, Medibuddy, Mobikwik, PARK Hotels உள்ளிட்ட நிறுவனங்களின் சிறப்பு ஆஃபர்கள் கிடைக்கும்

பல சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சில நிபந்தனைகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஒரு வழி பயணத்திற்கு மட்டுமே பொருந்தும். நேரடி உள்நாட்டு விமானங்களுக்கு மட்டுமே இந்த சலுகை பொருந்தும். அனைத்து சேனல்கள் மூலம் செய்யப்பட்ட முன்பதிவுகளுக்கு இந்த சலுகை பொருந்தும்.

ஸ்பைஸ்ஜெட்டின் இந்த சலுகையினை வேறு எந்த சலுகையுடனும் இணைக்க முடியாது. குழும முன்பதிவுகளுக்கு இந்த சலுகையானது பொருந்தாது. இந்த விற்பனையின் கீழ் பதிவு செய்யக்கூடிய இந்த டிக்கெட்டுகள் மாற்றக்கூடியவை. ரத்து செய்யக்கூடியவை. முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை. விமான நேரங்கள் மாற்றத்தக்கவை. இது தவிர இன்னும் சில நிபந்தனைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.


சிற்றன்னையும் உதிரிப்பூக்களும்

 எங்கிருந்தோ கதையை சுட்டு மூச்சு விடாமல் படம் எடுத்து பெயர் வாங்குபவர்களுக்கு மத்தியில் மகேந்திரன் வித்தியாசமானவரே. இதோ அவரது எழுத்தின் வழியே அவரே உங்களிடம் பேசுகிறார்...


"மற்றவர்களுக்கு அட்வான்ஸ் கொடுப்பதற்கு முன்னாடி முதலில் சிற்றன்னை எழுதிய புதுமைபித்தன் அவர்களின் குடும்பத்திற்கு மூலக்கதைக்கான ஒரு தொகையை கொடுங்கள்" என்றேன். அவரோ ஒரு மாதிரி தயங்கினார்.
"என்ன தயங்குறீங்க?"
"அது ஒண்ணும் இல்லே... நீங்க தந்த சிற்றன்னை புத்தகத்தை வாசிச்சேன்... ஆனா இப்ப நீங்க எழுதியிருக்கிற 'உதிரிப்பூக்கள்' கதைக்கும் சிற்றன்னைக்கும் எந்த சம்பந்தமில்லையே. அப்புறம் எதுக்கு அவுங்களுக்கு பணம் கொடுக்கனும்?"
பார்த்தீர்களா... ஒரு நாவல் சினிமாவுக்கான திரைக்கதையாக உருமாறும்போது, பாலகிருஷ்ணன் போன்ற தயாரிப்பாளர் மட்டும் அல்ல, சினிமாவுக்கு சம்பந்தமே இல்லாதவர்கள் கூட அடிப்படை உண்மை அறியாது எப்படித் தடுமாறுகிறார்கள்?
நான் சொன்னேன், "சிற்றன்னை கதையை நான் படிக்காமல் விட்டிருந்தால் இன்று இந்த 'உதிரிப்பூக்கள்' கதை உருவாகியிருக்காது. நானும் வருகிறேன், முதலில் அவர்களின் குடும்பத்திற்கு உரிய மரியாதையை முறைப்படி செய்து விட்டு வரலாம்.
அதன்படியே நடந்தது. என் மனம் நிறைந்தது
ஆனால் "உதிரிப்பூக்கள் வெற்றி கண்டதும் ஒரு இலக்கிய வட்டம் என்னைப் பழித்துக் கடிதம் எழுதியது எப்படி? இப்படி:
படத்தின் தொடக்கத்தில் டைட்டிலில் மூலக்கதை அமரர் புதுமைப்பித்தன் எழுதிய 'சிற்றன்னை' என்று போட்டிருக்கிறாய். அவர் பெயரை வைத்து வியாபாரம் நடத்தி விட்டாய்..."
நான் எவ்வளவு வேதனை பட்டிருப்பேன் (மனத்திற்குள் சிரித்திருப்பேன்) என்பதை இப்போது உங்களால் உணர முடியும்.
ஒரு நாவலை திரைக்கதையாக்கி படம் எடுப்பதில்,வெற்றி காண்பதில்,வாழ்த்தும் வசவும் சேர்ந்து தான் வரும். நான் இரண்டையும் ஒன்றாக ஏற்கிறேன்......"
இணையத்தில் இருந்து எடுத்தது

மொத்தமாக மாறுகிறது பட்ஜெட்..

.. மொத்தமாக மாறுகிறது பட்ஜெட்..
சென்னை: தமிழ்நாட்டில் புதிய அரசு பதவி ஏற்று இருக்கும் நிலையில், பட்ஜெட் எப்படி இருக்கும், என்னென்ன மாற்றங்கள் இருக்கும் என்று நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
கொரோனா காலம் என்பதால் தமிழ்நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் உள்ளது. கடந்த ஆட்சியில் வாங்கப்பட்ட கடன், அதிக செலவு, தவறான பொருளாதார கொள்கை என்று பல்வேறு காரணங்களால் தமிழ்நாடு பொருளாதாரம் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
இந்த நிலையில்தான் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட் அதிக கவனம் பெற்றுள்ளது. நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் என்ன மாதிரியான பட்ஜெட்டை தாக்கல் செய்வார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஐடியா இல்லை
அதன்படி தமிழ்நாட்டில் நிதியை மீண்டும் பெருக்குவதற்கு எந்த காலத்திலும் அரசு நிறுவனங்களை தனியாரிடம் ஒப்படைக்க மாட்டோம் என்று பிடிஆர் கூறியுள்ளார். கையில் காசு இல்லை என்பதற்காக அரசு நிறுவனங்களை தனியாருக்கு கொடுத்து நிதி திரட்டுவது தவறான செயல். அது மேலும் சிக்கலை ஏற்படுத்தும். இந்த பட்ஜெட்டில் சில அடிப்படை விஷயங்கள் மீது கவனம் செலுத்துவோம்.
அடிப்படை
வருமானம், செலவினங்கள் குறித்த அடிப்படை கொள்கையை மாற்றுவோம். அதேபோல் நில மேலாண்மை கொள்கையில் மாற்றம் ஏற்படும் வகையில் கண்டிப்பாக பட்ஜெட்டில் அம்சங்கள் இடம்பெறும். ஜிஎஸ்டியில் திருத்தம் கொண்டு வரும் வரை, எந்த ஒரு விஷயத்தையும், பெட்ரோல் உட்பட புதிதாக எதையும் ஜிஎஸ்டிக்கு கீழ் கொண்டு வர மாட்டோம்.
பட்ஜெட்
அடிப்படை மாற்றங்களை கொண்டு வரும் வகையில் இந்த பட்ஜெட் இருக்கும். வெளிவரவுள்ள தமிழ்நாடு பட்ஜெட் முதல்வர் ஸ்டாலின் அவர்களின் தொலைநோக்கு பார்வையுடன் உருவாகிறது. எனவே PTR பட்ஜெட் என்ற கூற்று தவறு. இதை பிடிஆர் பட்ஜெட் என்று சொல்ல கூடாது. எல்லாம் முதலமைச்சர் பட்ஜெட்தான்.
முன்பு என்ன நடந்தது
இதற்கு முன்பு அமைச்சர்கள் பட்ஜெட் எழுதும் போது ஐஏஎஸ் அதிகாரிகளை வைத்து பட்ஜெட் எழுதுவார்கள். ஆனால் இம்முறை வழக்கத்திற்கு மாறாக IAS அதிகாரிகள் எழுதி தரும் பட்ஜெட்டுக்கு மாற்றாக ஒரு அரசியல்வாதி எழுதியதாக இருக்கும். முழுக்க முழுக்க நானே இந்த பட்ஜெட்டை இந்த முறை எழுதுவேன், என்று நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
நன்றி: ஒன் இந்தியா தமிழ்

கார்த்திக் ராஜா பிறந்த நாள்

 கார்த்திக் ராஜா பிறந்த நாள் ஸ்பெஷல்: இசைஞானியின் பேர் சொல்லும் தலைமகன்இந்தியத் திரை இசை வரலாற்றில் தவிர்க்க முடியாத இடத்தைப் பெற்றுவிட்ட மேதையான இளையராஜா ஆயிரம் படங்களைக் கடந்து இன்னும் சினிமா இசையமைப்பாளராகத் தீவிரமாக இயங்கிவருகிறார். அவருடைய இளைய மகன் யுவன் சங்கர் ராஜாவும் மாபெரும் ரசிகர் படையைக் கொண்ட இசையமைப்பாளராகத் திகழ்கிறார். இளையராஜாவின் மூத்த மகனும் தந்தையையும் தம்பியையும்போலவே மிகத் திறமை வாய்ந்த இசையமைப்பாளருமான கார்த்திக் ராஜாவுக்கு (ஜூன் 29) இன்று பிறந்த நாள்.
கார்த்திக் ராஜா, 1990களிலும் புத்தாயிரத்தின் முதல் பத்தாண்டுகளில் பல மறக்க முடியாத பாடல்களைக் கொடுத்த பாடல்கள் தலைமுறைகளைக் கடந்து ரசிக்கப்பட்டுக்கொண்டே இருக்கும் என்பதில் ஐயமில்லை. பதின்ம வயதிலேயே தந்தையுடன் இசைப்பதிவு ஸ்டுடியோவுக்குச் செல்லத் தொடங்கிவிட்டார் கார்த்திக் ராஜா. மேற்கத்திய செவ்வியல் இசையையும் கர்நாடக இசையையும் முறைப்படி பயின்றார். இசையமைப்புப் பணிகளில் இளையராஜாவுக்குத் துணையாகவும் பக்க பலமாகவும் அன்று முதல் இன்றுவரை தொடர்ந்து பணியாற்றிவருகிறார்.
1992-ல் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் ரஜினிகாந்த்-குஷ்பு நடிப்பில் இளையராஜா இசையில் வெளியான 'பாண்டியன்' படத்தில் பிரபலமான காதல் பாடலான 'பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா' பாடலுக்கு இசையமைத்தவர் கார்த்திக் ராஜா. அதுவே அவர் இசையமைத்த முதல் பாடல். அதன் பிறகு இளையராஜா இசையமைப்பாளராகப் பணியாற்றிய 'உழைப்பாளி', 'அமைதிப்படை', 'சக்கரதேவன்' உள்ளிட்ட சில படங்களுக்குப் பின்னணி இசை அமைத்தவர் கார்த்திக் ராஜாதான்.
முதல் படத்துக்கே விருது
1996-ல் ராஜ்கிரண் - வனிதா விஜயகுமார் நடிப்பில் வெளியான 'மாணிக்கம்' படத்தின் மூலம் முதன்மை இசையமைப்பாளராக அறிமுகமானார் கார்த்திக் ராஜா. அந்தப் படத்தில் தங்கை பவதாரிணியைப் பாட வைத்து அவர் இசையமைத்த 'சந்தனம் தேச்சாச்சு என் மாமா சங்கதி என்னாச்சு' என்ற பாடல் ரசிகர்களை ஈர்த்தது. அடுத்ததாக அப்போதைய பெரிய நட்சத்திரங்களில் ஒருவரான விஜயகாந்தின் 'அலெஸாண்டர்' படத்துக்கு இசையமைத்தார். இந்தியில் ஜாக்கி ஷெராஃப் நடித்த 'கிரஹண்' படத்துக்கு இசையமைத்துச் சிறந்த புதுமுக இசையமைப்பாளருக்கான ஃபிலிம்ஃபேர் சிறப்பு விருதைப் பெற்றார்.
அழிவில்லாமல் வீசும் காற்று
1997-ல் அமிதாப் பச்சன் தயாரிப்பில் ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில் அஜித் - விக்ரம் - மகேஷ்வரி நடித்த 'உல்லாசம்' படம் கார்த்திக் ராஜாவுக்குப் பெரும்புகழைப் பெற்றுத் தந்தது. அந்தப் படத்தின் 'வீசும் காற்றுக்கு' என்ற பாடல் அன்று முதல் இன்றுவரை எப்போதும் ரசிகர்களால் மிகவும் விரும்பிக் கேட்கப்படும் பாடலாக அமைந்தது. அதே படத்தில் இளையராஜா பாடிய 'யாரோ யார் யாரோ', கமல்ஹாசன் பாடிய 'முத்தே முத்தம்மா' ஆகிய பாடல்களும் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றன.
அடுத்த ஆண்டில் சுந்தர்.சி இயக்கிய 'நாம் இருவர் நமக்கு இருவர்', கமல்ஹாசனின் 'காதலா காதலா' ஆகிய படங்களுக்கு இசையமைத்தார் கார்த்திக் ராஜா. இரண்டிலும் சிறப்பான பாடல்கள் அமைந்திருந்தன. குறிப்பாக 'காதலா காதலா'வில் 'சரவண பவ வடிவழகா' என்ற கர்நாடக இசையை அடிப்படையாகக் கொண்ட ஆன்மிகப் பாடல் பாணியில் அமைந்த காதல் பாடலை மிகப் புதுமையான வடிவத்தில் ரசிக்கத்தக்க வகையில் உருவாக்கியிருந்தார்.
ரசவாதம் செய்த ரகசியம்
2001-ம் ஆண்டு மணிரத்னம் தயாரிப்பில் அழகம் பெருமாள் இயக்குநராக அறிமுகமான 'டும் டும் டும்' படம் கார்த்திக் ராஜாவின் திரை வாழ்வில் ஒரு பொக்கிஷம் எனலாம். 'தளபதி' படத்துக்குப் பிறகு தான் இயக்கும் படங்கள் மட்டுமல்லாமல் தயாரிக்கும் படங்களிலும் இளையராஜாவுடன் பணியாற்றியிராத மணிரத்னம் இந்தப் படத்தில் கார்த்திக் ராஜாவை இசையமைப்பாளர் ஆக்கினார். இந்தப் படத்தில் அனைத்துப் பாடல்களும் வெற்றிபெற்றன என்றாலும் 'ரகசியமாய்' என்ற கர்நாடக ராகத்தின் அடிப்படையில் அமைந்த காதல் பாடலை எப்போதும் கேட்டாலும் மனதில் ஏதோ ரசவாதம் நிகழ்வதை உணர முடியும். 'உன்பேரைச் சொன்னாலே' என்ற மென்சோக மெலடிப் பாடல் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் பொலிவிழக்காமல் இருக்கிறது.
இந்த நூற்றாண்டின் முதல் இருபது ஆண்டுகளில் 'டும் டும் டும்', 'உள்ளம் கொள்ளை போகுதே', 'ஆல்பம்', 'குடைக்குள் மழை', 'நெறஞ்ச மனசு', 'நாளை', 'படைவீரன்' உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கும் கார்த்திக் ராஜா இவற்றில் பல வெற்றிப் பாடல்களைக் கொடுத்துள்ளார்.
பின்னணி இசையில் முன்னணி
பாடல்கள் மட்டுமல்லாமல் தந்தையைப் போலவே பின்னணி இசையிலும் ஜொலித்தவர் கார்த்திக் ராஜா. இளையராஜாவே 'இசை' என்று தன் பெயரைத் தாங்கிவரும் படங்களுக்கு இவரைப் பின்னணி இசையமைக்க அனுமதித்திருக்கிறார் என்பதிலிருந்து பின்னணி இசையில் கார்த்திக் ராஜாவின் அபாரத் திறமையைப் புரிந்துகொள்ளலாம். அதோடு விஜய் நடித்த 'புதிய கீதை' உள்பட யுவன் சங்கர் ராஜா இசையமைத்த சில படங்களுக்கும் 'அரண்மனை', 'தில்லுக்குத் துட்டு' உள்ளிட்ட வேறு சில பிரபலமான வெற்றிப் படங்களுக்கும் பின்னணி இசையமைத்தவர் கார்த்திக் ராஜா என்பது குறிப்பிடத்தக்கது.
தந்தைக்கு தக்க துணை
ஒரு இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜாவைக் காட்டிலும் இளையராஜாவின் பாணியை அதிகமாகப் பின்பற்றியவர் கார்த்திக் ராஜா. கார்த்திக் ராஜாவின் இசையே இளையராஜாவின் இசைக்கு மிக நெருக்கமானது என்று சொல்லலாம். மெலடி, செவ்வியல் இசைப் பாடல்கள், ஆட்டம் போட வைக்கும் வேகப் பாடல்கள், மேற்கத்திய இசை பாணியைச் சார்ந்த பாடல்கள் என பல வகையான பாடல்களில் தன் திறமையை நிரூபித்தவர் கார்த்திக் ராஜா.,
பல வெற்றிப் பாடல்களையும் சிறந்த பின்னணி இசையையும் கொடுத்திருந்தாலும் 50க்கும் குறைவான படங்களுக்கே இசையமைப்பாளராகப் பணியாற்றியிருக்கிறார் கார்த்திக் ராஜா. தனித்து இயங்குவதை விட தந்தைக்கு, தந்தையின் பிரம்மாண்ட சாதனைகளுக்குத் துணையாக இருப்பதிலேயே அதிக கவனம் செலுத்துகிறார் என்பதே இதற்குக் காரணம். இப்போது இளையராஜா இசையமைக்கும் படங்களுக்கு இசைக் கருவிகளை ஒழுங்குபடுத்துபவராகவும் (Arranger) உலகின் பல பகுதிகளில் நடக்கும் இளையராஜாவின் இசை நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பவராகவும் தொடர்ந்து செயல்படுகிறார்.
அடுத்ததாக சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் 'மாமனிதன்' படத்துக்கு முதல் முறையாக இளையராஜா - கார்த்திக் ராஜா- யுவன் சங்கர் ராஜா மூவரும் இணைந்து இசையமைத்து வருகிறார்கள். இந்தப் படம் இசை ரசிகர்களுக்கு மறக்க முடியாத விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
தொடர்ந்து கார்த்திக் ராஜா நிறையப் படங்களுக்கு இசையமைத்து திரையிசை ரசிகர்களை மென்மேலும் மகிழ்விக்க வேண்டும். இசைத் துறையில் பல சாதனைகளை நிகழ்த்த வேண்டும் என்று இந்தப் பிறந்த நாளில் அவரை மனதார வாழ்த்துவோம்.
நன்றி: இந்து தமிழ் திசை

தேசிய கேமரா தினம்

 தேசிய கேமரா தினம் 

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 29ஆம் தேதி அமெரிக்காவில்


தேசிய கேமரா தினம் கொண்டாடப்படுகிறது. புகைப்படக் கருவி கண்டுபிடிக்கப்பட்டது மற்றும் உலகம் முழுவதும் உள்ள புகைப்படக்கலைஞர்கள் அங்கீகரிக்கவும் கௌரவிக்கும் இந்த தினம் ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது. புகைப்படங்களும், புகைப்பட கலைஞர்களும் உலகின் பல மாற்றங்களை நிகழ்த்தியுள்ளனர். பல போர்களை வெளி உலகத்திற்கு காட்டியது, ஆப்பிரிக்க நாடுகளின் வறுமை உலகத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியதும், அகதிகளில் துயர் மிகுந்த வாழ்க்கையை உலகின் கண்களுக்கு காட்சிப்படுத்தியது, வியட்நாம் போரில் நிகழ்ந்த கொடூரங்களை வெளி உலகத்திற்கு காட்டியது புகைப்படங்களும் புகைப்பட கலைஞர்களும் தான்.அதேபோல, பிரின்சஸ் டயானா உயிரைப் பறித்தது ஒரு புகைப்பட கலைஞன் எடுத்த புகைப்படம் தான்.ஆக இதை எல்லாம் அசை போட தூண்டும் நாளின்று

Daily Workout from home and training program


TRIDENT FITNESS PARADISE

presents daily workout from home

today first training programme
 
 Daily Workout from home and training program 1

5 weeks training program plus meal plan for routine. BASED ON BMI AND FRAME STRUCTURE to join the program kindly contact : tridentfitness01@gmail.com

video link

by
TRIDENT FITNESS PARADISE


மிஸ்க்ட் வெஜிட்டப்ள் பிக்கிள் / அனன்யா பக்கம்

 

இன்றைய அனன்யா பக்கத்தில்

மிஸ்க்ட் வெஜிட்டப்ள் பிக்கிள்
மிஸ்க்ட் வெஜிட்டப்ள் பிக்கிள்

இந்த பூவுலகத்துலேயே எனக்கு இருக்கற ஒரே வீக்னெஸ்ஸு . அவ்வ்.. அப்படில்லாம் நாக்கு மேல பல்லைப்போட்டு சொல்ல மிடியாது. பல தீனி வீக்னெஸ் இருக்கு. இருந்தாலும் இந்த மிக்ஸ்ட் வெஜிட்டப்ள் பிக்கிள் தான் அதில் முக்கியமான வீக்குனெஸ். டு ஸ்டார்ட் வித்.. பேரே ஒரு அழகு தான். எப்பப்பாரு மாங்கா, எலுமிச்சங்கா, நார்த்தங்காய், கடாரங்காய், கொழுமிச்சங்காய், கிட்டத்தெட்ட எல்லாமே ஒரே டேஸ்டு தான். இதுல பீமகிருஷ்ண ராமுடு, ராமகிருஷ்ண பீமுடுன்னு கொஞ்சம் சிட்ரஸ் சுவையும் வாசனையும் முன்ன பின்ன இருக்கும். எத்தனை காலந்தான் இதையே சாப்பிட்டுண்டு இருக்கறதாம்.
அபுதாபி போனப்போ தான் இந்த மிக்ஸ்ட் வெஜ் பிக்கிளை ஒரு ஹைப்பர் மார்கெட் ராக்ல பார்த்தேன். Mother's Recipe ப்ராண்ட். லேபிளே கொள்ளையழகு. உள்ளே கால் லிட்டர் எண்ணைக்கு நடுவுல் ரெண்டு ஸ்பூன் பிக்கிளை பேக் பண்ணியிருப்பாங்கறது வேற விஷயம். எக்ஸ்போர்ட் குவாலிட்டி ஊறுகாய்கள் வேறு விதம். கொஞ்சம் எல்லாம் ஃப்ரெஷ்ஷாகவே இருக்கும். லோக்கல் மார்கெட் மாதிரி காலாவதியான விஷயங்களை யூ ஏ ஈ லஅனுமதிக்கமாட்டா. மளிகையெல்லாம் ஃப்ர்ஸ்ட் குவாலிட்டி தான் கிடைக்கும். உண்மையை சொல்லணும்ன்னா அழக்க்கா கலர் கலரா காய்கறியை போட்டு ஊறுகாய் பண்ணலாங்ககறதே எனக்கு புது நியூஸ். அடடே...கேரட்லாம் ஊறுகாய்ல இருக்கேன்னு ரொம்ப ஆச்சர்யப்பட்டேன்.
பேக்கேஜ்ட் ஊறுகாய்களின் தலைவன்னா அது படேக்கர்ஸ் பிக்கிள் தான். அடிச்சுக்க முடியாத டேஸ்ட். அப்பா தனியா பாம்பேல (அப்பெல்லாம் பாம்பே தான்) இருந்தப்போ அவருடைய ஸ்டேப்பிள் சாப்பாடே தச்சி மம்மூ & படேக்கர் பிக்கிள் தான். நாங்க சென்னைலேந்து அங்கே போறோம்ன்னா யதா சக்தி ரெண்டு மூணு டைப் படேக்கர் ஊறுகாய் பாட்டில்களை வாங்கி ஸ்டாக் பண்ணிடுவார்.
அதுக்கப்புறம் ஊறுகாய் வெளில வாங்கினதா நினைவில்லை.
ஆச்சு ரெண்டு வருஷம் முன்னால வரைக்கும் ரெடிமேடு ஊறுகாய்கள் மறந்தே கூட போயாச்சு. எப்பவாவது என் ஜென்ம விரோதி ஒருத்தனுக்கு இஞ்சி ஊறுகாய் பிடிக்கும்ன்னு வாங்கி வைச்சிருக்கேன். ”ஏய் மார்கெட்ல புது ஊறுகாய் வந்திருக்கு, பாருடி”ன்னு சொல்லி ஒரு பாட்டிலை காமிச்சப்போ, வல்லபா கொஞ்சூண்டு டேஸ்டு பண்ணி பார்த்துட்டு என்னை செம்ம லட்சார்ச்சனை. என்னன்னு கேட்டப்போ ”ரெடி மேட் ஊறுகாய்களில் பூரா ப்ரிஸர்வேட்டிவ்ஸ் போடுவா, வினிகர் நல்லதே இல்லை. வாங்காதே”ன்னு என் அகக்கண்களை திறந்தாள். அப்புறந்தான் எனக்கு ஒரு விஷயம் புலப்பட்டது. எல்லா ஊறுகாயிலேயும் ஏகப்பட்ட வினிகரை போட்டுப்போட்டுத்தான் ஒரே புளிப்பா தயாராக்கறா போல்ருக்கு! எந்த உருப்படியான ஊறுகாயிலும் சாஸ்திரத்துக்கு கூட காரமே இருக்காது. நான்ஸென்ஸ். சில ஊறுகாய்களில் பழைய எண்ணெய் வாடை வரும். மிச்ச ஊறுகாய்களில் பீஸே காணாது. வெறும் புளிப்பு செமி சாலிட் திரவம் தான் இருக்கும். 126/- எள்! ஐய்யய்யே இத்தனை நாளா வினிகரை தான் இண்டைரக்டா ஊறுகாய்ன்னு நினைச்சுண்டு சாப்பிட்டுண்டு இருக்கோம் போல்ருக்கு! ஹெள அன்னாச்சுரல்! அதுலேந்து ரெடி மேடு ஊறுகாய்க்கு பெரிய நோ சொல்லியாச்சு.
சமீபத்துல ராஜசுவைன்னு ஒரு விளம்பரம் பார்த்து, ஆஹ்ஹ்ஹா.. எப்படி இருக்கும் அந்த ராஜசுவைன்னு ஜொள் கொட்டிண்டு இருந்தேன். குறிப்பா அந்த மிக்ஸ்ட் வெஜ் பிக்கிள்ன்னு அவன் காமிச்ச விஷுவல்ஸ் இருக்கே.. சத்யமா வாட்டர்ஃபால் கொட்டிடுத்து! காரெட், பீன்ஸ் எல்லாத்தையும் சிவப்ப்பா மிளகாய்ப்பொடியோட காமிச்சு நம்ம வயத்தெரிச்சலை கொட்டிண்டான் பார்த்துக்குங்கோ! கடைல்லாம் திறந்தாச்சுன்னு சொன்னதும் கூட்டமில்லாத ஒரு நாளைக்கி மெதுவ்வா போய் தட் ராஜஸ்ஸுவை ஊறுகாய் பாட்டிலை எடுத்து பேக்ல போட்டுண்டு ஓடியாந்துட்டேன். அஃப்கோர்ஸ் பில் பண்ணிட்டு தான்!
தச்சு மம்மூவை ரெடி பண்ணிண்டு கஷ்டப்பட்டு லேபிளை திறந்தா திரவம் மட்டுந்தான் இருக்கு. நானும் ஸ்பூனை போட்டு துழாவித்துழாவி தேடிப்பார்க்கறேன் ஒரு மிக்ஸ் வெஜ்ஜிட்டபுளை காணோம்! ஆத்தாடி என்ன ஒரு பித்தலாட்டம்ஸ்ன்னு செம்ம கோபம் எனக்கு. கடைசியா ஒரு பீஸ் கிடைச்சது. அஹ்ஹான்னு எடுத்துப்பார்த்தா சுமார் எழு நூறு நாட்களுக்கு முன்னால எண்ணெயில் போடப்பட்ட சவுக் சவுக் மாங்கா. நாமெல்லாம் வயசானா தலைமுடியை இழக்கறதில்லையா? அதே மாதிரி தட் மாங்கா பீஸ் தனது மேல்சட்டையை முதுமை காரணமா இழந்திருந்தது. தோலையே காணோம். சர்வகேவலம்! லேபிளை உத்து நோக்கினாத்தான் நமக்கொரு உண்மை புலப்படுது. Buy one get one freeயாமா! இதையே திங்க மிடியாது இதுல இன்னொரு பாட்டில் வேற. பழைய இஸ்ட்டாக்ன்னு தெரியாம ஏமாந்துட்டியே அனன்யே. மைண்ட்வாய்ஸ் ரோபோ ரஜினி மாதிரி பல காப்பீஸ் எடுத்து நின்னுண்டு கை கொட்டி ஷிரித்தார்ஹள்ள்ள்!ந்னா பார்த்துக்குங்கோ!
ராஜசுவையை தேடிப்போனா ஒரே புளிப்பு, பழைய எண்ணெய். திடம்மா மனசுல ஒரு முடிவு பண்ணினேன். இனி நம்ம லைஃப்ல நோ வினிகர், நோ சிட்ரிக் ஆஸிட். ஸ்ட்ரிக்ட் பாலிஸி. (குறிப்பா சிட்ரிக் ஆஸிட்ங்கற புளிப்பு க்றிஸ்டல்ஸ் கார்ன் ஸிரப்பில் படியும் பூஞ்சையாம். கஷ்டம்! எவ்ளோ அறியாமையில் இருந்திருக்கோம்? போன தீபாவளிக்கு ஜிலேபி பண்றதுக்கு வாங்கி வைச்சிருந்தேன். இதை படிச்சதும் அதை தூர எறிஞ்சுட்டேன்.
அன்னைக்கு மதருக்கு ஃபோன் பண்ணி மிக்ஸ்ட் வெஜ் பிக்கிளின் மோசமான ஏமாத்து வேலையை பத்தி அரை மணிக்கூர் அரற்றிண்டு இருந்தேன். விசும்பி விசும்பி அழுததில், மதர் சொன்னா, போறும்டி இதெல்லாம் என்ன பிரமாதம். ஒரு பீட்ரூட், ஒரு கேரட், ஒரு முள்ளங்கி இருந்தா போறும், ஆத்துலேயே மிக்ஸ்ட் வெஜ் ஊறுகாய் போட்டுட்டா போச்சு. இதெல்லாம் ஜுஜுபி. கண்ல ஆனந்தக்கண்ணீர் பெருக கடைக்கு ஓடினேன்.
பீட்ரூட், கேரட், முள்ளங்கி எல்லாத்தையும் வாங்கிண்டு வந்து ஜூலியன்ஸா நறுக்கினேன். எலுமிச்சம்பழமும் நிறைய வாங்கிண்டேன். இல்லேன்னா ஊறுகாய் கெட்டுடும். நேச்சுரல் ப்ரிஸர்வேட்டிவ் யூ ஸீ! எக்ஸ்ட்ராவா இன்னும் ரெண்டு பழம் நறுக்கினேன். ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை ராகம்ங்கற மாதிரி தக்குனூண்டு எம்ளிச்சம்பழத்துக்குள்ளே எவ்வளோ ஜூஸ்! நம்ம ஸ்டையில் படி நல்லெண்ணெயில் கடுகு தாளிச்சு , மஞ்சள் பொடி, பெருங்காயப்பொடி ,வெந்தியப்பொடி, உப்பு, மிளகாய்ப்பொடி சேர்த்து ட்ரெடிஷனலா 100% ஆத்தெண்டிக் மிக்ஸ்ட் வெஜ் பிக்கிள் ரெடி பண்ணினேன்.
ஆனாலும் பீன்ஸ் நறுக்கும்போது, ”தட் ராஜசுவைக்காரன் ஏதோ விளம்பரத்துக்காக கலர்ஃபுல்லா காமிச்சா, உனக்கெங்கே போச்சு மூளை.? பீன்ஸெல்லாம் ஊறுகாய்ல போடவே மாட்டா.. லூசு.. ஏழு பீன்ஸும் க்ருஷ்ணார்ப்பணந்தான் . திங்காம தூக்கிப்போடப்போறேன்னு என்னை நானே லட்ச்சார்ச்சனை பண்ணிண்டேன். ஐய்யாம் மை பெஸ்ட் க்ரிட்டிக் யூ க்னோ?
ஒரு ஏழெட்டு குட்டி எம்ளிச்சம்பழம் பிழிஞ்சு விட்டு கலந்து விட்டுட்டு ஃப்ரிஜ்ல எடுத்து வைச்சுட்டேன். யாரு கிட்டே? ரெண்டு நாளா ஃப்ரிஜ்ல வைச்சாத்தான் ஸ்பைஸஸ்ல நன்னா ஊறி காய்லாம் கர்க் முர்க்ன்னு சாப்பிட ஜோரா இருக்கும்ன்னு பொறும்மையா காத்திண்டு இருந்தேன். ஏக்கத்துல ரெண்டு கிலோ இளைச்சே போய்ட்டேன்.
வீக்கெண்டே ஊறுகாய் போட்டாச்சேன்னு நேத்திக்கு டப்பாலேந்து ஒரு ஸ்பூன் எடுத்துண்டு போட்டுண்டேன். கலவையா காய்களும் அதனுடன் கொஞ்சம் செமி சாலிட் திரவமும் தட்டில் விழுந்தது. அஹ்ஹா... இதுவல்லவோ உண்மையான ராஜஸ்ஸ்ஸ்ஸ்சுவை! ஸ்லர்ப்ப்ப்ப்ப்! ஆங் சொல்ல விட்டுப்போச்சு. அந்த பீன்ஸானா எண்ணெய்ல ஊறி அவ்ளோ அருமையா இருக்கு!


-அனன்யாபிகு
இந்த குறிப்பு பற்றி அனன்யா கிட்டே கேட்டோம்.
ரொம் ப நல்லா இருக்கு என சொல்ல உங்களுக்காக
பதிவுட்டுளளோம்

Monday, June 28, 2021

கவிஞரது நெஞ்சத்தில் நீங்காத இடம் பிடித்த தேவிகா

 கண்ணதாசனின் நட்புக் களஞ்சியத்தில் கடைசிவரை நம்பகமான தோழியாக உலா வந்து, கவிஞரது நெஞ்சத்தில் நீங்காத இடம் பிடித்தவர் தேவிகா.

கண்ணதாசனின் நட்புக் களஞ்சியத்தில் கடைசிவரை நம்பகமான தோழியாக உலா வந்து, கவிஞரது நெஞ்சத்தில் நீங்காத இடம் பிடித்தவர் தேவிகா.
குமுதம் வார இதழில் வெளியானது கவிஞர் கண்ணதாசனின் ‘இந்த வாரம் சந்தித்தேன்’ தொடர். அதில் ஓர் அத்தியாயத்தில், தனக்கும் தேவிகாவுக்கும் இடையே நிலவிய தோழமை குறித்தும் விரிவாக எழுதியுள்ளார் கவிஞர்.
‘சினிமா நடிகைகள் எல்லாருமே ஒரே மாதிரி குணங்கெட்டவர்களோ, நடத்தை கெட்டவர்களோ அல்ல; அவர்களிலே உன்னதமான குணம் கொண்டவர்கள் பலர் இருக்கிறார்கள்.
சுற்றம் காத்தல், விருந்தோம்பல், மரியாதை அனைத்தும் தெரிந்தவர்களாக அவர்கள் இருக்கிறார்கள். தயாரிப்பாளர்களின் கழுத்தை நெரித்த நடிகைகளும் உண்டு. கை கொடுத்து உதவிய உத்தமிகளும் உண்டு. அதில் இரண்டாம் வகையைச் சேர்ந்தவர் தேவிகா!
அவர் கதாநாயகியாக நடித்த போது இன்றைய பல நடிகைகளை விட, நன்றாகவே நடித்தார். அழகாகவே இருந்தார். வாழ்க்கையை தேர்ந்தெடுக்கத் தெரியாத காரணத்தால் தோல்வி அடைந்தார். இல்லையென்றால் தேவிகாவின் குணத்துக்கும், நடத்தைக்கும், எவ்வளவோ நிம்மதியான வாழ்க்கை அமைந்திருக்கும்.
‘என்ன, உங்கள் படங்களில் தேவிகாவை விட்டால் வேறு யாரும் கிடைக்க வி வில்லையா?’ என்று நண்பர்கள் பலர் என்னைக் கேட்பார்கள்.
‘எந்தக் குடை என்னை மழையிலிருந்தும் வெயிலிலிருந்தும் காப்பாற்றுகிறதோ - அந்தக் குடையைத்தானே நான் தேர்ந்தெடுக்க முடியும்’ என்பேன் நான்.
தேவிகா படப்பிடிப்புக்கு நேரத்தில் வருவார். பணம் கொடுத்தால் தான் வருவேன் என்று பிடிவாதம் செய்ய மாட்டார். தயாரிப்பாளர்களின் கஷ்ட நஷ்டங்களில் முழுக்கப் பங்கு கொள்வார்.
என்னைப் பொறுத்தவரை, சில நேரங்களில் நான் திட்டிவிட்டாலும், அழுது விடுவாரே தவிர, முறைத்துக் கொள்ள மாட்டார்.
தமிழ் நாட்டிலேயே அதிகம் வளர்ந்த ஆந்திரப் பெண்மணியான தேவிகா, தெலுங்கை விடத் தமிழைத்தான் அழகாக உச்சரிப்பார்.
குடும்பப் பெண்ணாக நடித்தால், மயக்கம் தரக்கூடிய உருவங்களில் இவரது உருவமும் ஒன்று. இந்த வாரம், ஒரு தெலுங்குப் படம் எடுப்பது பற்றிப் பேச அவர் என்னைச் சந்தித்தார்.
குடும்பத்துக்காகவே வாழும் சினிமா நடிகைகளில் தேவிகாவும் ஒருவர். எந்தக் காலத்திலும் சொந்த ஆசைகளுக்காக, குடும்பத்தின் நலனை அவர் தியாகம் செய்ததில்லை.
‘அப்பா ’ என்றொரு தமிழ் சொல் தமிழில் உண்டு. இது ’பா ’ என்பதன் எதிர்மறை. ’பிரதட்சிணம் அப்பிரதட்சிணம்’ என்பது போல், ‘ஒரு பாவமும் அறியாதவர்’ என்பதே அதற்குப் பொருள்.
மனமறிந்து அல்ல தற்செயலாகக் கூட யாருக்கும் தீங்கு செய்தறியாதவர் தேவிகா.
‘ஆண்டவன் நல்லவர்களை சோதிப்பான்’ என்றபடி, அவருக்குச் சில சோதனைகள் வந்தன. ஆண் துணை இல்லாத தேவிகா, அந்தச் சோதனைகளிலிருந்து தம்மைத் தாமே காத்துக் கொள்ள வேண்டியவரானார்.
‘நந்தன் படைத்த பண்டம், நாய்பாதி, பேய்பாதி’ என்பார்கள் என் தாயார்.
அது போல், தேவிகாவின் பணத்தையும் சிலர் சாப்பிட்டு விட்டுப் போனார்கள். அதனை எண்ணி தேவிகா துன்புறவில்லை.
எப்போது அவருக்கு எந்தத் துன்பம் வந்தாலும், எனக்குத்தான் டெலிபோன் செய்வார். என்னவோ ஆண்டவன் அவருக்கும் எனக்கும் ஓர் ஒற்றுமையைக் கொடுத்தான். எனக்கு இருப்பது போலவே தேவிகாவுக்கும் ரத்தக் கொதிப்பு இருக்கிறது.
சினிமா உலகில், ஒவ்வொரு நாளும் சோதனைகளைத் தாங்கிக் கொண்டு மற்றவர்களுக்காகவே வாழும் உயர்ந்த பெண்களில் ஒருத்தி தேவிகா.
துரதிர்ஷ்டவசமாக எனது மங்கல மங்கை படம் பாதியிலேயே நின்று விட்டது. அதில் ஒரு விரகதாபப் பாடலுக்கு தேவிகா நடித்ததைப் போல அதற்கு முன்னாலும் பின்னாலும் எவரும் நடித்ததில்லை.
லால்பகதூர் சாஸ்திரி காலத்தில் பாகிஸ்தான் யுத்தத்தின் போது, சினிமா நடிகர் நடிகைகள் பெரும்பாலோரோடு, நானும் பஞ்சாப் முழுவதும் சுற்றுப் பிரயாணம் செய்தேன்.
இரண்டு விமானப் படை வானூர்திகளில் பயணம். விமானம் உயரமாக இருக்கும். அதற்கும் ஏணிக்கும் உள்ள தூரம் மூன்றடி உயரம் இருக்கும்.
எல்லாரும் மளமளவென்று ஏறி விடுவார்கள். எனக்கு மட்டும் கால்கள் நடுங்கும். அந்நேரம் எனக்குக் கை கொடுத்து விமானத்துக்குள், இழுத்துக் கொள்வார் தேவிகா.
வாழும் போது உலகம் கூட வரும். தாழும் போது ஓடி விடும். இது வாடிக்கை. இதை நன்றாக உணர்ந்தவர் தேவிகா.
சினிமா படப்பிடிப்பு, இப்போது தெருக்கூத்து மாதிரி ஆகிவிட்டது. அந்தக் காலங்களில் அது ஒரு தெய்வீக அம்சமாக இருந்தது.
கதை, வசனம், பாட்டு, இயக்கம், நடிப்பு எல்லாமே பொறுப்போடு இயங்கிய காலம் அது.
சமயங்களில் தனியாக உட்கார்ந்திருக்கும் போது அந்தக் காலங்களை நினைத்துப் பார்ப்பேன்.
சில உன்னதமான உருவங்கள் படம் படமாகத் தோன்றும். அவற்றில் தேவிகாவின் வடிவமும் உண்டு.
தேவிகா - ஒரு நாள் கூடப் படப்பிடிப்பை ரத்து செய்து என் தூக்கத்தைக் கலைக்காத தேவிகா.
என் முகம் கொஞ்சம் வாடியிருந்தால் கூட, ‘அண்ணனுக்கு என்ன கவலை?’ என்று கேட்டு, என்னைப் புகழ்ந்தாவது ஒரு நிம்மதியை உண்டாக்கி விடும் தேவிகா.
அவர் ஒரு சினிமா நடிகைதான்.
ஆனால் பல குடும்பப் பெண்களை விட உயர்ந்த குணம் படைத்தவர்.
‘பிரமீளா’ என்ற தேவிகாவை நான் நினைக்கும் அளவுக்கு யார் நினைக்கப் போகிறார்கள்?’
--கண்ணதாசன்.
நன்றி: yari.comகண்ணதாசனின் நட்புக் களஞ்சியத்தில் கடைசிவரை நம்பகமான தோழியாக உலா வந்து, கவிஞரது நெஞ்சத்தில் நீங்காத இடம் பிடித்தவர் தேவிகா.
குமுதம் வார இதழில் வெளியானது கவிஞர் கண்ணதாசனின் ‘இந்த வாரம் சந்தித்தேன்’ தொடர். அதில் ஓர் அத்தியாயத்தில், தனக்கும் தேவிகாவுக்கும் இடையே நிலவிய தோழமை குறித்தும் விரிவாக எழுதியுள்ளார் கவிஞர்.
‘சினிமா நடிகைகள் எல்லாருமே ஒரே மாதிரி குணங்கெட்டவர்களோ, நடத்தை கெட்டவர்களோ அல்ல; அவர்களிலே உன்னதமான குணம் கொண்டவர்கள் பலர் இருக்கிறார்கள்.
சுற்றம் காத்தல், விருந்தோம்பல், மரியாதை அனைத்தும் தெரிந்தவர்களாக அவர்கள் இருக்கிறார்கள். தயாரிப்பாளர்களின் கழுத்தை நெரித்த நடிகைகளும் உண்டு. கை கொடுத்து உதவிய உத்தமிகளும் உண்டு. அதில் இரண்டாம் வகையைச் சேர்ந்தவர் தேவிகா!
அவர் கதாநாயகியாக நடித்த போது இன்றைய பல நடிகைகளை விட, நன்றாகவே நடித்தார். அழகாகவே இருந்தார். வாழ்க்கையை தேர்ந்தெடுக்கத் தெரியாத காரணத்தால் தோல்வி அடைந்தார். இல்லையென்றால் தேவிகாவின் குணத்துக்கும், நடத்தைக்கும், எவ்வளவோ நிம்மதியான வாழ்க்கை அமைந்திருக்கும்.
‘என்ன, உங்கள் படங்களில் தேவிகாவை விட்டால் வேறு யாரும் கிடைக்க வி வில்லையா?’ என்று நண்பர்கள் பலர் என்னைக் கேட்பார்கள்.
‘எந்தக் குடை என்னை மழையிலிருந்தும் வெயிலிலிருந்தும் காப்பாற்றுகிறதோ - அந்தக் குடையைத்தானே நான் தேர்ந்தெடுக்க முடியும்’ என்பேன் நான்.
தேவிகா படப்பிடிப்புக்கு நேரத்தில் வருவார். பணம் கொடுத்தால் தான் வருவேன் என்று பிடிவாதம் செய்ய மாட்டார். தயாரிப்பாளர்களின் கஷ்ட நஷ்டங்களில் முழுக்கப் பங்கு கொள்வார்.
என்னைப் பொறுத்தவரை, சில நேரங்களில் நான் திட்டிவிட்டாலும், அழுது விடுவாரே தவிர, முறைத்துக் கொள்ள மாட்டார்.
தமிழ் நாட்டிலேயே அதிகம் வளர்ந்த ஆந்திரப் பெண்மணியான தேவிகா, தெலுங்கை விடத் தமிழைத்தான் அழகாக உச்சரிப்பார்.
குடும்பப் பெண்ணாக நடித்தால், மயக்கம் தரக்கூடிய உருவங்களில் இவரது உருவமும் ஒன்று. இந்த வாரம், ஒரு தெலுங்குப் படம் எடுப்பது பற்றிப் பேச அவர் என்னைச் சந்தித்தார்.
குடும்பத்துக்காகவே வாழும் சினிமா நடிகைகளில் தேவிகாவும் ஒருவர். எந்தக் காலத்திலும் சொந்த ஆசைகளுக்காக, குடும்பத்தின் நலனை அவர் தியாகம் செய்ததில்லை.
‘அப்பா ’ என்றொரு தமிழ் சொல் தமிழில் உண்டு. இது ’பா ’ என்பதன் எதிர்மறை. ’பிரதட்சிணம் அப்பிரதட்சிணம்’ என்பது போல், ‘ஒரு பாவமும் அறியாதவர்’ என்பதே அதற்குப் பொருள்.
மனமறிந்து அல்ல தற்செயலாகக் கூட யாருக்கும் தீங்கு செய்தறியாதவர் தேவிகா.
‘ஆண்டவன் நல்லவர்களை சோதிப்பான்’ என்றபடி, அவருக்குச் சில சோதனைகள் வந்தன. ஆண் துணை இல்லாத தேவிகா, அந்தச் சோதனைகளிலிருந்து தம்மைத் தாமே காத்துக் கொள்ள வேண்டியவரானார்.
‘நந்தன் படைத்த பண்டம், நாய்பாதி, பேய்பாதி’ என்பார்கள் என் தாயார்.
அது போல், தேவிகாவின் பணத்தையும் சிலர் சாப்பிட்டு விட்டுப் போனார்கள். அதனை எண்ணி தேவிகா துன்புறவில்லை.
எப்போது அவருக்கு எந்தத் துன்பம் வந்தாலும், எனக்குத்தான் டெலிபோன் செய்வார். என்னவோ ஆண்டவன் அவருக்கும் எனக்கும் ஓர் ஒற்றுமையைக் கொடுத்தான். எனக்கு இருப்பது போலவே தேவிகாவுக்கும் ரத்தக் கொதிப்பு இருக்கிறது.
சினிமா உலகில், ஒவ்வொரு நாளும் சோதனைகளைத் தாங்கிக் கொண்டு மற்றவர்களுக்காகவே வாழும் உயர்ந்த பெண்களில் ஒருத்தி தேவிகா.
துரதிர்ஷ்டவசமாக எனது மங்கல மங்கை படம் பாதியிலேயே நின்று விட்டது. அதில் ஒரு விரகதாபப் பாடலுக்கு தேவிகா நடித்ததைப் போல அதற்கு முன்னாலும் பின்னாலும் எவரும் நடித்ததில்லை.
லால்பகதூர் சாஸ்திரி காலத்தில் பாகிஸ்தான் யுத்தத்தின் போது, சினிமா நடிகர் நடிகைகள் பெரும்பாலோரோடு, நானும் பஞ்சாப் முழுவதும் சுற்றுப் பிரயாணம் செய்தேன்.
இரண்டு விமானப் படை வானூர்திகளில் பயணம். விமானம் உயரமாக இருக்கும். அதற்கும் ஏணிக்கும் உள்ள தூரம் மூன்றடி உயரம் இருக்கும்.
எல்லாரும் மளமளவென்று ஏறி விடுவார்கள். எனக்கு மட்டும் கால்கள் நடுங்கும். அந்நேரம் எனக்குக் கை கொடுத்து விமானத்துக்குள், இழுத்துக் கொள்வார் தேவிகா.
வாழும் போது உலகம் கூட வரும். தாழும் போது ஓடி விடும். இது வாடிக்கை. இதை நன்றாக உணர்ந்தவர் தேவிகா.
சினிமா படப்பிடிப்பு, இப்போது தெருக்கூத்து மாதிரி ஆகிவிட்டது. அந்தக் காலங்களில் அது ஒரு தெய்வீக அம்சமாக இருந்தது.
கதை, வசனம், பாட்டு, இயக்கம், நடிப்பு எல்லாமே பொறுப்போடு இயங்கிய காலம் அது.
சமயங்களில் தனியாக உட்கார்ந்திருக்கும் போது அந்தக் காலங்களை நினைத்துப் பார்ப்பேன்.
சில உன்னதமான உருவங்கள் படம் படமாகத் தோன்றும். அவற்றில் தேவிகாவின் வடிவமும் உண்டு.
தேவிகா - ஒரு நாள் கூடப் படப்பிடிப்பை ரத்து செய்து என் தூக்கத்தைக் கலைக்காத தேவிகா.
என் முகம் கொஞ்சம் வாடியிருந்தால் கூட, ‘அண்ணனுக்கு என்ன கவலை?’ என்று கேட்டு, என்னைப் புகழ்ந்தாவது ஒரு நிம்மதியை உண்டாக்கி விடும் தேவிகா.
அவர் ஒரு சினிமா நடிகைதான்.
ஆனால் பல குடும்பப் பெண்களை விட உயர்ந்த குணம் படைத்தவர்.
‘பிரமீளா’ என்ற தேவிகாவை நான் நினைக்கும் அளவுக்கு யார் நினைக்கப் போகிறார்கள்?’
--கண்ணதாசன்.
நன்றி: yari.com

Featured Post

மனிதனை மீறிய சந்தர்ப்பங்கள் வாழ்க்கையை எவ்வளவு தூரம் திருப்பிவிடுகின்றன

  மனிதனை மீறிய சந்தர்ப்பங்கள் வாழ்க்கையை எவ்வளவு தூரம் திருப்பிவிடுகின்றன என்பதற்கு நான் ஓர் உதாரணம்.’’ – இது, ‘சரித்திர நாவல்களின் ஜாம்பவான...