Posts

Showing posts from September, 2021

விழித்தெழட்டும் என் தேசம் /மகாகவி இரவீந்திரநாத் தாகூர் / மொழிபெயர்ப்பு: பிருந்தா சாரதி *

Image
  விழித்தெழட்டும் என் தேசம்  * உலக மொழிபெயர்ப்பு நாள் எங்கே இதயம்  அச்சமின்றி இருக்கிறதோ எங்கே தலை  நிமிர்ந்து நிற்கிறதோ எங்கே அறிவு தளையேதுமின்றி சிறகடிக்கிறதோ எங்கே உலகம் குறுகிய எண்ணங்களால்  துண்டு துண்டாகச் சிதறடிக்கப்படாமல் இருக்கிறதோ எங்கே உண்மையின் ஆழத்திலிருந்து  சொற்கள் வெளிப்படுகிறதோ எங்கே முயற்சிகள்  தளர்ச்சி இன்றி  முழுமை நோக்கித் தன் கரங்களை விரிக்கிறதோ எங்கே வழக்கொழிந்த பழக்கவழக்கங்கள் எனும் பாலைவனத்தால்  தெளிவான இலட்சிய நதி வழிமறிக்கப்படவில்லையோ எங்கே  என்றும் நிலைத்திருக்கும் எண்ணங்களும் செயல்களும்  இதயத்தை வழிநடத்துகிறதோ அந்த விடுதலையின் விண்ணகத்தில் என் தந்தையே   விழித்தெழட்டும் என் தேசம் . ம காகவி இரவீந்திரநாத் தாகூர் /  மொழிபெயர்ப்பு: பிருந்தா சாரதி  *  -  உலக மொழிபெயர்ப்பு நாள்

சிவாஜியின் டிரஸ்

Image
  சிவாஜியின் டிரஸ், மேக்கப் வைத்தே படத்தின் பெயர்களை எளிதாக சொல்லக்கூடிய அளவுக்கு மக்களின் மனதில் கரைந்து போயிருந்தார்.. அந்த படத்தின் கேரக்டரை பார்த்த உடனேயே அது என்ன படம் என்று சொல்லிவிடலாம்.. ராணுவ வீரனா, அது பதிபக்தி, தொழிலதிபரா அது 'பாசமலர்', இஸ்லாமிய இளைஞனா, அது 'பாவமன்னிப்பு', பணச்செருக்கு தந்தையா அது 'பார் மகளே பார்', பாதிரியார் உடையா, அது 'வெள்ளைரோஜா'.. இப்படித்தான் சிவாஜி, தன்னுடைய ரசிகர்களின் மனதில் பிரிக்க முடியாத அளவிற்கு படிந்து போனார். லிஸ்ட் கேரக்டர்கள் மட்டுமில்லை.. அவரது நடையை மட்டுமே பிரித்து வகை வகையாக பேசலாம்.. "பார்த்தாலே பசி தீரும்" படம் முழுக்க தாங்கி தாங்கி நடக்கும் தன்னம்பிக்கை நடை, "திருவிளையாடல்" படத்தில் சிவபெருமானின் மிடுக்கு நடை, "போனால் போகட்டும் போடா" என்று அலட்சிய நடை, "பாகப்பிரிவினை"யில் தட்டு தடுமாறும் தளர்ந்த நடை, "ஆண்டவன் கட்டளை"யில் நம்பிக்கை நடை, "முதல் மரியாதை" படத்தில் கேஷூவல் நடை, "தேவர் மகன்" படத்தில் கம்பீர நடை என லிஸ்ட் போட்டுக் கொண்டே போகல

சிவாஜி கணேசனின் பிறப்புச் சான்றிதழை வெள்ளிப் பேழையில்

Image
  1962,செப்டம்பர் 28ம் தேதி விழுப்புரம் நகரமன்றம் சார்பில், சிவாஜிக்கு பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. திறந்த ஜீப்பில் ஊர்வலமாக அழைத்து வரப் பட்டார் சிவாஜி கணேசன். விழா மேடைக்கு வரும் வழியில் நந்தவனம் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வள்ளலார் சத்திய ஞான சபைக் கட்டிடத் தைத் திறந்து வைத்தார். பின்னர் அப்போதைய நகரமன்றத் தலைவர் டி.எஸ்.பத்தர் தலைமை யில் விழா நடை பெற்றது. அதில், சிவாஜி கணேசனின் பிறப்புச் சான்றிதழை வெள்ளிப் பேழையில் வைத்து, நகராட்சி சார்பில் அவருக்கு அளிக்கப்பட்டது. இதனை மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்ட சிவாஜி கணேசன் “நான் பிறந்தது விழுப்புரத்தில்தான் என உறுதியாகக் கூறி, அதற்கான சட்ட பூர்வமான அத்தாட்சியை வழங்கியமைக்கு நன்றி: என் பிறப்பை பதிவு செய்தாரே ஒரு பியூன் அவருக்கு ஐம்பது அறுபது வயதிருக்கும். அவர் மூலம் எனக்கு அந்த சர்டிபிகேட் பிரசன்ட் செய்தார்கள். அன்று நான் அடைந்த சந்தோஷம் போல் என்றும் அடைந்ததில்லை. என்னுடைய பிறப்பிற்கு ஒரு முக்கியத்துவம் இருக்கிறதென்று, அப்போது நான் தெரிந்து கொண்டேன்'' என்றும் தன் சுய சரிதையில் கூறியுள்ளார். இணையத்தில் இருந்து எடுத்தது

செப்டம்பர் 30 ஆம் தேதி உலக மொழி பெயர்ப்பு தினம்

Image
  உலகில் சுமார் 6500 மொழிகள் பேசப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது. அனைவராலும் அனைத்து மொழிகளிலும் தொடர்புகொள்ள முடியாது. அதாவது அனைவருக்கும் அனைத்து மொழிகளும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்நிலையில் தான் மொழிபெயர்ப்பு அவசியம். இதை கவனத்தில் கொள்ளவே ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது. மொழிபெயர்ப்பாளரின் தலைவராக கருதப்படும் பைபிள் மொழிபெயர்ப்பாளர் ஜெரோல் என்பவரின் நினைவாக செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி சர்வதேச மொழிபெயர்ப்பு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. உலகில் உள்ள பல நாடுகளில் மொழிபெயர்ப்புத் துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் முக்கியமானதாகக் கருதப் பட்டாலும், படைப்பு இலக்கியவாதிகளுக்கு கிடைக்கும் அங்கீகாரம் மொழிபெயர்ப்பாளர்களுக்கு இல்லை. மொழிபெயர்ப்பு இலக்கியம் என்பதற்காக பரிசு பெற்ற படைப்பாளிகள் கண்டுகொள்வதே இல்லை என்று குரல் இன்னும் உண்டு. மொழிபெயர்ப்பு படைப்பாளிகளுக்கு பாராட்டும், அங்கீகாரமும் மிகவும் அவசியம்.காரணம் மொழிபெயர்ப்பாளர்கள் இல்லையெனில் ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் 93 மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு இருக்க முடியாது. லெனின் படைப்புகள் 321 மொழிகளில் மொழியாக்கம

தமிழ் விக்கிப்பீடியாவுக்கு பர்த் டே

Image
  தமிழ் விக்கிப்பீடியாவுக்கு பர்த் டே செப்டம்பர் 30: எண்ணற்ற தகவல்களை அள்ளித் தரும் தமிழ் விக்கிபீடியா 2003 ஆம் ஆண்டு இதே நாளில்தான் தொடங்கப் பட்டது. தமிழ் விக்கிப்பீடியாவின் 60000க்கும் மேற்பட்ட கட்டுரைகளுடன் சேர்த்து இதன் மொத்தக் கட்டுரைகளான 24 மில்லியன் கட்டுரைகளும் உலகெங்கிலுமுள்ள தன்னார்வலர்களால் கூட்டாக எழுதப்படுகின்றன. பெரும்பாலும் இதன் எல்லாக் கட்டுரைகளும், இதனைப் பயன்படுத்தும் எவராலும் தொகுக்கப்பட முடியும்.

மீந்து போன சாத;ததில் மொறுமொறு முறுக்கு

Image
  மீந்து போன சாதம் 1 கப் இருந்தா போதும், ஈவினிங் டைம்ல மொறுமொறு முறுக்கு காலையில் செய்த சாதம் மீந்து போன என்னடா பண்றது? அப்படின்னு இனிமே யோசிக்க வேண்டாம். ஒரே ஒரு கப் சாதம் இருந்தால் கூட அசத்தலான சுவையில்  மொறுமொறுவென்று  முறுக்கு சுட்டு இப்படி கூட செய்து சாப்பிடலாம். பொதுவாக பல பேருடைய வீட்டில் இரவில் டிபன் வகை செய்வது உண்டு. அந்த நேரத்தில் காலையில் செய்த அல்லது மதியம் செய்த சாப்பாடு வீணாகி இருக்கும். இப்படி வீணாகிப் போன பழைய சாதத்தை கூட சுவையான ஈவினிங் ஸ்நாக்ஸ் ஆக மாற்றி காட்டலாம். .இந்த பழைய சாத முறுக்கு செய்வது எப்படி? என்பதை நீங்களும் தெரிந்து கொள்ளலாம் பழைய சாத முறுக்கு செய்ய தேவையான பொருட்கள்: மீந்து போன சாதம் – ஒரு கப், கடலை மாவு – கால் கப், அரிசி மாவு –  கால்  கப், கருப்பு எள் – ஒரு ஸ்பூன், மிளகாய் தூள் – அரை டீஸ்பூன், பெருங்காயத் தூள் – ஒரு சிட்டிகை, உப்பு – தேவையான அளவுக்கு, எண்ணெய் – தேவையான அளவு. பழைய சாத முறுக்கு செய்முறை விளக்கம்: உங்களிடம் இருக்கும் மீந்து போன பழைய சாதத்தை மாலையில் டீயுடன் மொறு மொறுவென்று முறுக்கு செய்து சாப்பிட்டால் எப்படி இருக்கும்?  இதற்கு  நிறைய பொர

உடல் நலம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா?

Image
 உடல் நலம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா? அப்போ இவற்றை கைவிடுங்க ! 💚❤️ ஒருவர் தான் பின்பற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை காரணமாக வளர்சிதை மாற்ற நோய்கள், மூட்டு மற்றும் எலும்பு கோளாறுகள், இதய நோய்கள், உயர் ரத்த அழுத்தம், அதிக எடை உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாக நேரிடுகிறது. இவற்றை எல்லாம் தவிர்க்க நாம் நிச்சயமாக பின்பற்ற வேண்டிய சில பழக்க வழக்கங்கள் உள்ளன. அவற்றை முறையாக பின்பற்றாத காரணத்தால் நம் உடல்நலம் மற்றும் நோய் எதிர்ப்பு அமைப்புகள் மெது மெதுவாக பாதிப்புகளுக்கு உள்ளாகின்றன. தூக்கத்தில் சமரசம்: வாழ்க்கையில் முன்னேற ஒருவருக்கு உழைப்பு எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு அவரது உடல்நலனை பேண தூக்கம் மிக முக்கியம். சரியாக தூங்காமல் தூக்கத்தில் சமரசம் செய்து கொள்வது என்பது மிகவும் ஆபத்தான பழக்கங்களில் ஒன்று. நீங்கள் ஒரு இரவு சரியாக தூங்கவில்லை என்றால் அடுத்த நாள் உங்களுக்கு ஏற்படும் எரிச்சல் உணர்வு மற்றும் கிறக்கம் இவற்றை கவனித்துள்ளீர்களா? நம் உடலுக்கு தேவையான ஓய்வு கொடுக்கும் அளவிற்கு தூங்காமல், குறைவான மற்றும் தரமில்லா தூக்க பழக்கத்தை பின்பற்றுவதால் நோயெதிர்ப்பு மண்டலம், சுவாசம் மற

சூரியகாந்தி விதைகளின் அசரவைக்கும் நன்மைகள்..!

Image
 உடல் நலன் முதல் சரும நலன் வரை… சூரியகாந்தி விதைகளின் அசரவைக்கும் நன்மைகள்..!  💚❤️ தினமும் உணவில் ஏதோ ஒரு வகையில் சேர்த்துக்கொள்ள வேண்டிய ஆரோக்கியமான உணவு பொருட்களில் சூரியகாந்தி விதைகளும் ஒன்று. காலை உணவுகளில், சாலட்டுகளில் சேர்த்து சாப்பிடலாம். சூரியகாந்தி விதைகளில் நிறைய ஊட்டச்சத்துகள், அத்தியாவசிய வைட்டமின்கள் உள்ளன. ஒவ்வொரு நாளும் சுமார் 30 கிராம் அல்லது சிறிதளவு சூரியகாந்தி விதைகளை உட்கொள்வது போதுமானது. சூரியகாந்தி விதைகளை நீங்கள் தினமும் சாப்பிட்டு வந்தால் உங்கள் உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி, உங்கள் தோல் மற்றும் முடியையும் மேம்படுத்துகிறது. சூரியகாந்தி விதைகள் உங்கள் கூந்தல் மற்றும் சரும அழகை எவ்வாறு பாதுகாக்கிறது என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம். முகப்பரு மற்றும் வீக்கத்தைக் குறைக்கும்: சூரியகாந்தி விதைகள் கொழுப்பு மற்றும் கரையக்கூடிய ஆக்ஸிஜனேற்றங்களால் நிரம்பியுள்ளன. இது ஆக்ஸிஜனேற்ற சேதத்தை எதிர்த்துப் போராடவும், உங்கள் சருமத்தின் பொலிவை மேம்படுத்தவும் உதவுகிறது. இந்த விதைகளில் உள்ள மெக்னீசியம் ஹார்மோன் ஏற்றத்தாழ்வைக் கட்டுப்படுத்த உதவுகிறது, இதனால் அதிகப்படியான எண்ணெய்

நெல்லிக்காய் சாப்பிட்டால் போதும்

Image
 நெல்லிக்காய் அதிக விட்டமின் சி மற்றும் சக்தி மிகுந்த அனடி ஆக்ஸிடென்ட் பெற்றவை. இந்த நெல்லிக்காய் ஒரு ஆப்பிளுக்கு சமம் என்பது  மட்டுமல்ல, ஒரு நெல்லிக்காய் ஒரு சொட்டு ரத்தத்திற்கு உத்திரவாதம் தரும். தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டால் போதும் உங்கள்  உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பலமடங்கு பெரும். அற்புத சத்துக்களைக் கொண்ட நெல்லிக்காயையும், தேனையும் கலந்து சாப்பிட்டால் வந்தால் எத்தனை நன்மைகள் கிடைக்கும். தேனில் ஊற வைத்து நெல்லிக்காய் சாப்பிடுவதால் உடலில் பலவித நன்மைகள் பெறலாம்.   தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை தினமும் ஒன்று என சாப்பிட்டு வந்தால், இரத்தம் சுத்தமாவதோடு, இரத்தணுக்களின் அளவு அதிகரித்து,  இரத்த சோகை நீங்கும். தினமும் தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை சாப்பிட்டு வருவதன் மூலம், இதய தசைகள் வலிமையடைந்து, இதய நோய்கள் வருவது  தடுக்கப்படும்.   கண் பிரச்சனை உள்ளவர்கள், தினமும் தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை சாப்பிட்டு வந்தால், கண்களில் ஏற்படும் எரிச்சல், கண்களில்  இருந்து நீர் வடிதல், கண்கள் சிவப்பாதல் போன்றவை குணமாகும். சில பெண்களுக்கு வெள்ளைப்படுதல் அதிகம் இருக்கும். அத்தகைய பெண்கள், தேனில்

கன்ஃபூசியஸ் பிறந்த நாள்

Image
  கன்ஃபூசியஸ் ( தெளிவுப்படுத்தியவ்ர்) பிறந்த நாள்/ இன்று -செப்= 28 பல சிற்றரசர்களால் ஆளப்பட்டு, பல்வேறு நாடாகச் சிதறிக்கிடந்த சுமார் இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட சீனம் அது…. பிரபுக்களின் ஆதிக்கத்தினால் மக்கள் சித்ரவதைகளுக்கு ஆளாகி, வரி கொடுக்க முடியாமல் வறுமையில் உழன்றுகொண்டு இருந்தார்கள். அந்தச் சமயத்தில் மக்களின் மனசாட்சியாக மாறி, ‘ஒரு நல்ல அரசாங்கம் எப்படி நடக்க வேண்டும்’ என்பது பற்றி, தனது கருத்துக்களை பகிரங்கமாக வெளியிட்டார் கன்ஃபூசியஸ். ‘‘அதிக வரியும், அதிகத் தண்டனைகளும் கொடுங்கோல் ஆட்சியின் இலக்கணங்கள். அரசன் என்பவன் தகுதியினால் தேர்வு செய்யப்பட வேண்டுமே தவிர, பரம்பரை மட்டுமே தகுதியாக இருக்கக்கூடாது. மக்களுக்கு மகிழ்ச்சியும் நல்வாழ்வும் அளிக்க முடியாத அரசாங்கம், ஆட்சியில் நீடிக்க உரிமை இல்லை’’ என்று உரக்கக் குரல் கொடுத்தார். மக்கள் கூட்டம் கூட்டமாக அவர் பேச்சைக் கேட்க அணி திரள, அரசன் அதிர்ந்து போனான். கன்ஃபூசியைஸக் கைது செய்தால் அசம்பாவிதம் நேரலாம் என யோசித்த அரசன், புத்திசாலித்தனமாக அவருக்கு ‘சட்டத்துறை அமைச்சர்’ ஒரு என ஒரு பதவி கொடுத்து நாட்டின் சட்டங்களை மாற்று

காய்கறிக்கடை/ அனன்யா பக்கம்

Image
  காய்கறிக்கடையும் அனன்யாவும்   காய்கறிக்கடைக்கு போயிருந்தேன். மறு நாள் சமயலுக்கு முதல் நாள் காய் வாங்கிக்கலாம்ன்னு. (ஆனாலும் ஃப்ரிஜ் நிரம்பி வழியறதே? என்னவா இருக்கும் மாயம்?) நிதானமா என்னென்ன காய்லாம் இருக்குன்னு தேடிண்டு இருந்தேன். அவியல் சாப்பிட்டு கொள்ளை நாளாச்சு. அவியல் பண்ணலாம். காய்க்கடைக்கார் தன்னுடைய ஃப்ரெண்டுடன் பேசிண்டு இருந்தார். பீன்ஸ் பதினைஞ்சு, காரெட் ஒண்ணு எடுத்து ஒரு பேசின்ல போட்டேன். ”சின்ன்ன்ன்னனத்தேங்கா இருக்கா? “ குரல் கேட்டு திரும்பி பார்த்தேன். ஒரு தாத்தா ட்ரெண்டியா தொப்பில்லாம் போட்டுண்டு சிரிச்ச முகமா நின்னு கேட்டுண்டு இருந்தார். ”சின்னத்தேங்கா இல்லியே சார்.....” வருத்தத்துடன் காய்க்கார் சொல்லிண்டு இருந்தார். ”சின்ன்ன்ன்னத்தேங்கா வேணுமே?” தாத்தாவுக்கு பரம அதிருப்தி. காய்க்காரரின் நண்பர் உடனே ”நீங்க பாய்க்கடையில போய் வாங்கிடுங்கசார். திறந்து தான் இருக்கும் இப்போ போனா..” மணி இரவு எட்டரை இருக்கும். அடெடே... தி ஆர்ட் அஃப் ஸேயிங் நோ டு கஸ்டமர்ஸ் பத்தி தெரிஞ்சுண்டு இருக்காறே, வெரி குட்ன்னு நினைச்சுண்டேன். சேனைக்கிழங்கு கொஞ்சூண்டு வேண்டி வரும். பெரும் பூஷணி இவர்ட்ட இல

தமிழ்நாடு காவல் அருங்காட்சியகம்

Image
  சென்னை எழும்பூரில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு காவல் அருங்காட்சியகத்தை பொது மக்கள் பார்வைக்காக முதலமைச்சர் துவக்கி வைத்தார்: அருங்காட்சியகத்தை வரும் 30-ம் தேதி வரை பொதுமக்கள் இலவசமாக பார்வையிடலாம். அதே சமயம் அக்டோபர் 1-ம் தேதி முதல் அருங்காட்சியகத்தைப் பார்வையிட வரும் அரசுப் பள்ளி மாணாக்கர்களுக்கு அனுமதிக் கட்டணம் இல்லை.. ஆனால் ஏனையோரிடம் அக்டோபர் 1 முதல் நுழைவுக்கட்டணம் ரூ.5 வசூலிக்கப்படும். அது சரி இக்காட்சியகத்தில் என்னெ ஸ்பெஷல்? இதோ கட்டிங் கண்ணையா ஸ்பெஷல் ரிப்போர்ட் பிரிட்டிஷ் ஆட்சியின் சான்றாக சென்னையில் இருக்கும் கட்டடங்களில் எழுப்பூர் காவல் ஆணையர் அலுவலக கட்டடமும் ஒன்று. 1856 முதல் 2013 வரை காவல் ஆணையர் அலுவலகம் இங்குதான் செயல்பட்டு வந்துச்சு. 173 ஆண்டுகள் பழமையான இந்த கட்டடம்தான் 5 கோடி ரூபாய் நிதியில் இப்போ காவல்துறை அருங்காட்சியமாக மாற்றப்பட்டிருக்குதுது. இங்கு 1856இல் காவல் ஆணையராக இருந்த போல்டர்சன் தொடங்கி 2016 வரை காவல் ஆணையராக இருந்தவர்களின் பெயர் பலகை வைக்கப்பட்டிருக்குது. 1870இல் போலீசார் பயன்படுத்திய சீமை வண்டி எனப்படும் சைக்கிள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 1

தினமும் 2 டம்ளர்! மிளகு தூளை பொடியாக்கி.. இப்படி செய்து பாருங்கள்! நன்மைகள் ஏராளம் .

Image
 தினமும் 2 டம்ளர்! மிளகு தூளை பொடியாக்கி.. இப்படி செய்து பாருங்கள்! நன்மைகள் ஏராளம் ... மிளகு தூள் சமையலுக்கு தேவைப்படும் முக்கிய பொருளாகும். இதனால் உடல் ஆரோக்கியமும் மேம்படுகிறது. இதில் உடலுக்கு தேவையான வைட்டமின் சி, வைட்டமின் கே போன்ற சத்துக்கள் உள்ளதால் சமையலுக்கு மட்டும் பயன்படுத்தாமல் மிளகை பொடியாக்கி வெறும் தண்ணீரில் கலந்து தினமும் 2நாட்கள் குடித்து வந்தால் பல மடங்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். சரி வாங்க மிளகின் உள்ள மற்ற நன்மைகளை குறித்து பார்க்கலாம்.. தயாரிக்கும் முறை:- முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்து கொண்டு அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடுங்கள். பிறகு மிளகை வாணலியில் நன்றாக வறுத்து பொடியாக்கி கொள்ளுங்கள். தண்ணீர் நன்றாக கொதித்த பிறகு அதில் ரோஜா இதழ், 2 ஸ்பூன் அளவு மிளகு தூள் சேர்த்து கலந்து கொள்ளவும். பின்னர் வடிக்கட்டி தினமும் 2 டம்ளர் குடித்து வந்தால் நன்மைகள் ஏராளம். நன்மைகள்:- இந்த தண்ணீர் உங்கள் உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது. அதாவது மிளகில் உள்ள காரத்தன்மை உடலில் உள்ள கலோரிகளை விரைவாக கரைக்க உதவும். அதோடு டயட்டின் போது மிளகு தண்ணீரை குடித்து வந்

தக்காளி அதிகம் சாப்பிடுவதால் இந்த ஆபத்துக்கள் எல்லாம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாம்!

Image
 தக்காளி அதிகம் சாப்பிடுவதால் இந்த ஆபத்துக்கள் எல்லாம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாம்! ஒவ்வொரு வீட்டிலும் அன்றாடச் சமையலிலில் இடம் பெறும் தவிர்க்க முடியாத ஒரு பழம் தக்காளி. வைட்டமின் ஏ, சி, பி, பி6, நார்ச்சத்து, நியாசின் உயிர்ச்சத்து, இரும்புச்சத்து, மாவுச்சத்து, ஃபோலேட், சாச்சுரேட்டட் கொழுப்பு, பாஸ்பரஸ், மக்னீசியம், கால்சியம், தாமிரம் போன்ற சத்துக்கள் தக்காளியில் உள்ளன மற்றும் பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டது.   தக்காளிகள் நம் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று கூறினாலும், அளவுக்கு அதிகமாக இந்த தக்காளியை உட்கொள்வதும் தீங்கு விளைவிக்கும் மற்றும் உடலை பல வழிகளில் சேதப்படுத்து இதனை அதிகமாக எடுத்து கொள்ளும்போது சில பக்கவிளைவுகளை ஏற்படுத்தகூடியது. அந்தவகையில் தக்காளியை அதிகம் எடுப்பதனால் கிடைக்கும் பக்கவிளைவுகள் என்ன என்பதை பார்ப்போம்.     தக்காளியில் அதிக அளவு மாலிக் மற்றும் சிட்ரிக் அமிலங்கள் உள்ளது. செரிமானம் தொடங்கியவுடன் தக்காளி இரைப்பையில் அதிக அமிலத்தாக்கங்களை ஏற்படுத்தும். இதனால் உணவுக்குழாயில் அதிக அமிலப்போக்கு ஏற்பட்டு நெஞ்செரிச்சல் ஏற்படும்.     தக்காளியின் செரிமானம் அடையாத தோல் மற்றும் விதைகள்

குடல் புண்களுக்கும் மற்றும் குடலின் அனைத்து நோய்களுக்கும் குணம் தரும் வெந்தயக் கீரை - மருத்துவ பயன்கள்

Image
 குடல் புண்களுக்கும் மற்றும் குடலின் அனைத்து நோய்களுக்கும் குணம் தரும் வெந்தயக் கீரை - மருத்துவ பயன்கள் சாதாரணமாகச் சமையலில் பயன்படுத்தப்படும் வெந்தயத்தின் தழைதான் வெந்தயக்கீரை எனப்படுகிறது. இது சத்து நிறைந்த கீரை. வெந்தயம் விதைகளின் மூலம் பயிரடப்படுகிறது.  வெந்தயக்கீரையில் ஏ வைட்டமின் சத்தியும், சுண்ணாம்புச்சத்தும் இருப்பதால் இதைப் சாப்பிடும் போது மாரடைப்பு, கண்பார்வை குறை, வாதம், சொறி சிரங்கு, இரத்தசோகை ஆகியவை குணமடையவும், பசியைப்போக்கவும் பயன்படுகிறது. குடல் புண்களும் குணமாகின்றன 👉🏼வெந்தயக் கீரையில் வைட்டமின்களும், தாது உப்புகளும் அதிக அளவில் இருக்கின்றன. சொறி, சிரங்கை நீக்குகிறது. பார்வைக்கோளாறுகளைச் சரி செய்கின்றது. வெந்தயக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டால் காசநோயும் குணமாவதாகக் கூறுகின்றனர். இந்தக் கீரை வயிற்று நோய்களையும் குணப்படுத்துகின்றது.  👉🏼வெந்தயக் கீரையை வேக வைத்து அதனுடன் தேன் கலந்து கடைந்து உண்டால் மலம் சுத்தமாகும். உடல் சுத்தமாகும். குடல் புண்களும் குணமாகின்றன. மலம் கழிக்கும்போது ஏற்படும் உளைச்சலையும் எரிச்சலையும் வெந்தயக்கீரை குணப்படுத்துகின்றது.  👉🏼மூலநோய், குடல

பேரீச்சையில் நிறைந்துள்ள அதிக அளவிலான இரும்புச்சத்து,

Image
 பேரீச்சையில் நிறைந்துள்ள அதிக அளவிலான இரும்புச்சத்து, ரத்தச்சோகையை சரிசெய்கிறது. உடலுக்குத் தேவையான எனர்ஜி மற்றும்  ஆரோக்கியத்தைத் தருகிறது.  ரத்த உற்பத்திக்கு வழிவகுக்கிறது. ரத்தம் சம்பந்தமான நோய்களைக் குணப்படுத்த உதவுகிறது #health

தொடர் இருமலை கட்டுக்குள் வைக்க உதவும் திப்பிலி

Image
 தொடர் இருமலை கட்டுக்குள் வைக்க உதவும் திப்பிலி ! # இளைப்பு நோய் கட்டுக்குள் கொண்டுவர திப்பிலிப் பொடி கடுக்காய் பொடியை சம அளவு எடுத்து தேனில் குழைத்து காலை மாலை குடித்து வந்தால் இளைப்பு நோய் குறையும். # வீட்டில் சுக்கு, மிளகு இருப்பது போல திப்பிலியும் இருந்தால் நுரையீரல் பாதுகாப்பாக இருக்கும்.   # திப்பிலி பொடியை கால் ஸ்பூன் எடுத்து கம்மாறு வெற்றிலை வைத்து தேன் கலந்து சாப்பிட காய்ச்சல் கோழை இருமல் விலகும் ஐந்து முதல் பத்து நாட்கள் இதை செய்ய வேண்டும்.   # சிலருக்கு தீராத விக்கல் இருக்கும் அவர்கள் திப்பிலி 10 கிராம் சீரகம் 10 கிராம் லேசாக வறுத்து கஷாயம் செய்து தேன் கலந்து குடித்து வர நீண்ட நேர விக்கல் உடனே நிற்கும்.   # சிலருக்கு உடலில் தேமல் இருக்கும் அது மறைய திப்பிலியை தூள் செய்து அத்துடன் வில்வ இலை பொடி அரை ஸ்பூன் கலந்து தேனுடன் காலை மாலை சாப்பிட்டு வர தேமல் மறைந்து ஒரு மாதம் தொடர்ந்து சாப்பிடவும்.     # திப்பிலி 100 கிராம் கரிசலாங்கண்ணி இலை 1 பிடி எடுத்து இடித்து 500 மில்லி நீரில் போட்டு காய்ச்சி சுண்டிய பின் அடியில் நீக்கும் திப்பிலி கரிசாலை  வறுத்து பொடி செய்து அதில் தேவையான அளவு

வயிற்றுப் புண்ணை நீக்கும் பீட்ரூட்..

Image
 வயிற்றுப் புண்ணை நீக்கும் பீட்ரூட்.. பீட்ரூட் கிழங்கு வகையை சேர்ந்தது. சிவப்பு அல்லது நாவல் நிறத்தில் உள்ள இதனை செங்கிழங்கு என்றும் குறிப்பிடுகிறார்கள். இது சாலட் வகை உணவுகளில் அதிகம் சேர்க்கப்படுகிறது. ரத்தத்தின் அளவினை அதிகரிக்கும் தன்மைக் கொண்ட பீட்ரூட்டில் பல வகை நன்மைகள் உள்ளன. இதனை சமையல் செய்தும் சாப்பிடலாம் அல்லது பச்சையாகவும் சாப்பிடலாம். *பீட்ரூட் கிழங்கைச் சமைத்து அளவாக சாப்பிட்டு வந்தால் உடல் நலம் சிறப்பாக இருக்கும். அதன் கீரையில் வைட்டமின் ‘ஏ’, இரும்புச்சத்து, ரிபோஃபிளேவின் அதிகமாக இருக்கின்றன. பீட்ரூட்டினை மட்டும் சாப்பிடாமல் அதன் கீரையையும் சேர்த்துச் சமைத்து சாப்பிட்டு வந்தால் ரத்தம் தினமும் புதுப்பிக்கப்படும். கண் பார்வை சிறப்பாக இருக்கும். *மருத்துவக் குணங்கள் அதிகம் நிறைந்த காய்கறிகளில் பீட்ரூட் கிழங்கும் ஒன்றாகும். அது பித்தப்பை, சிறுநீரகம் ஆகியவற்றில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றி உடலுக்கு நன்மை செய்கிறது. *ரத்தச் சோகை உள்ளவர்கள் பீட்ரூட் கிழங்கை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதைத் துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் ஒர

சிறப்புகளையும், அதிசயங்களையும் உள்ளிடக்கிய மனித உடல்

Image
 சிறப்புகளையும், அதிசயங்களையும் உள்ளிடக்கிய மனித உடல்  💚❤️ மனிதர்களின் உடலில் பல அதிசயங்கள் இருக்கின்றன. நம்முடைய ஒவ்வொரு அங்கமும் ஒவ்வொரு சிறப்புகளையும், அதிசயங்களையும் உள்ளிடக்கியதாகத்தான் இருக்கிறது. அவற்றில் சிலவற்றை அறிவோம். மனித உடலில் உள்ள நரம்புகளின் மொத்த நீளம், சுமார் 72 மீட்டர். நம் உடலில் உள்ள மொத்த ரத்தம் 5 லிட்டர். அது ஒரு நாளில், 30 கோடி கி.மீ. பயணிக்கிறது. நுரையீரல் ஒரு நாளில், 23 ஆயிரத்து 40 முறை சுவாசத்தை உள்ளிழுத்து வெளியிடுகிறது. நுரையீரலில் 3 லட்சம் மில்லியன் ரத்த நாளங்கள் உள்ளன. இதனை ஒன்றிணைத்தால் 2 ஆயிரத்து 400 கிலோமீட்டர் தூரம் இருக்குமாம். இதயம், ஒரு நாளில் 1 லட்சத்து 3 ஆயிரத்து 689 முறை துடிக்கிறது. மனித உடலில் சதை அழுத்தம் அதிகமாக உள்ள பகுதி, நாக்கு. அதில் சுவையை அறியக்கூடிய 3 ஆயிரம் செல்கள் உள்ளன. உடல் எடையில் 14 சதவீதம் எலும்பும், 7 சதவீதம் ரத்தமும் உள்ளது. நம்முடைய உடலில் உள்ள ஒவ்வொரு சிறுநீரகமும், ஒரு மில்லியன் வடிகட்டிகளை கொண்டிருக்கிறது. மனித கண்கள் 24 கிராம் எடை கொண்டது. ஆனால் அதற்கு 500 விதமான ஒளியை பிரித்தறியும் சக்தி உண்டு. கண்களின் தசை ஒரு நாளில்,

சலூன் கடைக்காரர் களுக்கு காவல்துறையினர் எச்சரிக்கை

Image
 சலூன் கடைக்காரர் களுக்கு காவல்துறையினர் எச்சரிக்கை  திண்டுக்கல்லில் உள்ள சலூன் கடைக்காரர்கள் தேவையில்லாமல் ஒழுங்கற்ற முறையில் கலர் கொடுத்து (புள்ளிங்கோ ஸ்டைலில்) முடி வெட்டுவது, இது போன்ற செயல்களில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்

வழியனுப்ப கூட வராத பிடன்.. முன்னுரிமை கொடுக்காத அமெரிக்க ஊடகங்கள்?.. மோடி பயணத்தில்

Image
  வழியனுப்ப கூட வராத பிடன்.. முன்னுரிமை கொடுக்காத அமெரிக்க ஊடகங்கள்?.. மோடி பயணத்தில்  இந்திய பிரதமர் மோடி அமெரிக்கா பயணத்தை முடித்துவிட்டு இன்று இந்தியா திரும்பினார். 5 நாட்கள் அமெரிக்க பயணத்தில் குவாட் மீட்டிங் தொடங்கி ஐநா பேச்சு வரை பல்வேறு முக்கியமான கூட்டங்களில் கலந்து கொண்டு இன்று பிரதமர் மோடி இந்தியா திரும்பினா பிரதமர் மோடி இந்த அமெரிக்க பயணத்தில், அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸை சந்தித்தார். இரண்டு நாட்டு உறவு குறித்தும் ஆசிய பிரச்சனைகள் குறித்தும் இருவரும் உரையாடினார்கள். பின்னர் குவாட் எனப்படும் அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். அமெரிக்காவின் முக்கிய நிறுவனங்களான குவால்காம், அடோப், பர்ஸ்ட் சோலார், ஜெனரல் அட்டாமிக்ஸ், பிளாக் ஸ்டோன் போன்ற நிறுவனங்களின் சிஇஓக்களை நேரில் சந்தித்து உரையாடினார். அதன்பின் அதிபர் பிடனை வெள்ளை மாளிகையில் சந்தித்து பேசினார். பின்னர் இறுதியாக நியூயார்க்கில் ஐநா பொதுக்கவுன்சில் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். பிரதமர் மோடியின் இந்த அமெரிக்க பயணம் இந்தியாவில் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. முக்கிய

மீந்துபோன தோசை மாவில் சூப்பரான மெதுவடை

Image
  மீந்துபோன தோசை மாவில் சூப்பரான மெதுவடை இந்த அற்புதமான ரெசிபியை தயார் செய்ய உங்களுக்கு அதிக நேரம் பிடிக்காது. வெறும் 10 நிமிடங்கள் போதும். அப்படி என்ன ரெசிபி என்றால், தின்னத் தின்னத் திகட்டாத மீந்துபோன தோசை மாவில் செய்த மெதுவடை மீந்துபோன தோசை மாவில் மெதுவடை செய்யத் தேவையான பொருட்கள்:- பிரட் துண்டுகள் – 3 (பிரட் துண்டை உதிர்த்து மிக்சியில் இட்டு அரைத்து கொள்ளவும்) ரவை – 1/2 கப் மீந்துபோன தோசை மாவு – 1 கப் இஞ்சி – பொடியாக நறுக்கியது பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது) பச்சை மிளகாய் – 1 (பொடியாக நறுக்கியது) மிளகு தூள் – 1/2 ஸ்பூன் கருவேப்பிலை, கொத்தமல்லி – பொடியாக நறுக்கியது உப்பு – தேவையான அளவு மீந்துபோன தோசை மாவில் மெதுவடை ஈஸி செய்முறை:- முதலில் மிக்சியில் இட்டு அரைத்த பிரட் துண்டை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும். அவற்றுடன் ரவை மற்றும் மீந்துபோன தோசை மாவு சேர்க்கவும். பிறகு பொடியக நறுக்கிய இஞ்சி, பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றைச் சேர்க்கவும். அவற்றுடன் மிளகு தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வடை மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். இதன்