மிஸ்டர் ரவி".. ஸ்டாலினுக்காக பார்க்கிறோம், ரயிலில் அனுப்பிடுவோம்..
மிஸ்டர் ரவி".. ஸ்டாலினுக்காக பார்க்கிறோம், ரயிலில் அனுப்பிடுவோம்.. "கோமளவள்ளி"தான்.. ஈவிகேஎஸ் டமார் ரவி அவர்களே, குழந்தை குடும்பத்தோடு இருக்கீங்க.. ஒருவாரத்திற்குள் நீட் மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பவில்லை என்றால் காங்கிரஸ் போராட்டம் தீவிரமாகும்... ரவி உங்களை ரயிலில் டெல்லிக்கு அனுப்பி வைத்து விடுவோம்" என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசியது கொஞ்ச நேரத்திலேயே பரபரப்பை தந்துவிட்டது. 2 நாட்களுக்கு முன்பு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் அழகிரி ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.. அதில், ஆளுநருக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்த போவதாக கூறியிருந்தார். தமிழக நலன்களுக்கு விரோதமாக நீட் உள்ளிட்ட 13 மசோதாக்களை கிடப்பில் போட்டு குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக எதேச்சதிகார முறையில் செயல்பட்டு வரும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு, எதிர்ப்பு தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டத்தை அழகிரி நடத்த போவதாக அறிவித்தார். இளங்கோவன் அதன்படி, சைதாப்பேட்டை சின்னமலையில் உள்ள ராஜீவ்காந்தி சிலை அருகிலிருந்து புறப்பட்டு ஆளுநர் மாளிகையை நோக்க