Powered By Blogger

Thursday, March 31, 2022

ரயில் பயணிகளுக்கு சூப்பர் வசதி.. இந்திய ரயில்வே அசத்தல்!

 


ரயில் பயணிகளுக்கு சூப்பர் வசதி.. இந்திய ரயில்வே அசத்தல்!


ரயில்களில் முன்பதிவு செய்து பயணிக்கும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கியமான செய்தி வந்துள்ளது. பயணத்தின் போது உண்ணாவிரதம் இருப்பவர்களுக்கு இந்திய ரயில்வே சிறப்பு வசதிகளை செய்து வருகிறது. பயணத்தின் போது மக்களுக்கு நவராத்திரி சிறப்பு உணவு வழங்க இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (IRCTC) முடிவு செய்துள்ளது. அதாவது, இப்போது நீங்கள் உங்களுக்கு பிடித்த உணவை பயணத்தின் போது ஆர்டர் செய்து சாப்பிடலாம்


IRCTC இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஏப்ரல் 2ஆம் தேதி முதல் தொடங்கும் நவராத்திரி பயணத்தின் போது, பயணிகளுக்கு துரித உணவு வழங்கப்படும். பயணிகள் தங்களுக்கு விருப்பமான உணவை இ-கேட்டரிங் மூலம் ஆர்டர் செய்யலாம். பயணிகள் 1323 என்ற டோல் ஃபிரீ நம்பரை அழைத்து உணவுக்கு முன்பதிவு செய்யலாம். பூண்டு-வெங்காயம் இல்லாமல் இந்த உணவு தூய்மையாகவும், கல் உப்பு பயன்படுத்தி சமைக்கப்பட்டதாகவும் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.


பயணிகளின் விருப்பங்களைக் கருத்தில் கொண்டு IRCTC உணவு மெனுவைத் தயாரித்துள்ளது. இதன் கீழ் நான்கு விதமான தட்டுகள் காணப்படும். அவற்றின் விலை 125 முதல் 200 ரூபாய் வரை மட்டுமே இருக்கும். IRCTC கேட்டரிங் வசதியை வழங்கும் சுமார் 500 ரயில்களில் இந்த சிறந்த வசதி கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த துரித உணவு ரயில்களில் மட்டுமே கிடைக்கும். ரயில் நிலையங்களில் உள்ள IRCTC ஸ்டால்களில் கிடைக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உணவு மெனு:

- பக்வீட் பக்கோடா
- பூரி குருமா
- சபுதானா கிச்சடி
- லஸ்ஸி
- உப்பு சர்க்கரை இல்லாத பழச்சாறு
- பழங்கள்,
_ தேநீர்,
- ரப்ரி இனிப்பு
- உலர் பழங்கள் கீர் போன்ற உணவுகள் பயணிகளுக்குக் கிடைக்கும்


. கேமராமேன் சொல்லியும் கேட்காத ரஜினிகாந்த்

 


. கேமராமேன் சொல்லியும் கேட்காத ரஜினிகாந்த்


ரஜினிகாந்தின் சினிமா வாழ்க்கையில் பல எதிர்மறையான கருத்துகள் அப்போதே சந்தித்து தான் உள்ளார். அப்படிப்பட்ட கருத்துக்களை எடுத்துக் கொண்டு தான் தற்போது வரை சூப்பர் ஸ்டாராக நிலைத்து இருக்கிறார் ரஜினி. அந்த வகையில் பாபா படத்தில் மேக்கப்பினால் வந்த பிரச்சனை, அதற்கு ரஜினி எடுத்த முடிவு என்ன என்பது போன்ற செய்தி தற்போது வெளிவந்துள்ளது.


ரஜினிகாந்த், மனிஷா கொய்ராலா, நம்பியார் போன்ற பிரபலங்கள் நடிப்பில் வெளிவந்த படம் பாபா. மக்கள் எதிர்பார்த்த அளவு இந்த படம் ஓடாவிட்டாலும் ரஜினியின் ரசிகர்களுக்கு பிடித்திருந்தது என்று தான் கூற வேண்டும். இந்த படத்தின் படப்பிடிப்பின் போது ரஜினி 50 நாட்களில் முடிக்க வேண்டுஆனால் அதற்கு ரஜினி இந்த ஒரு காரணத்திற்காக ஷூட்டிங்கை தள்ளி போட வேண்டாம், இப்பொழுது லாங் சாட் எல்லாம் முடித்து விடுவோம் என தெரிவித்திருந்தார். மேலும் குளோஸ் அப் ஷார்ட்டுக்கு எல்லாம் அதே மாதிரி டிரஸ் மீண்டும் போட்டு அதையும் எடுத்து விடலாம் என கூறி நடித்து முடித்தார்.

மேலும் சில அரசியல் சர்ச்சைகளும் இப்படத்தை சுற்றி இருந்து வந்த நிலையில் பல விநியோகஸ்தர்களுக்கு இப்படம் நஷ்டத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாக ரஜினி நஷ்டமடைந்த விநியோகஸ்தர்களை கூப்பிட்டு எவ்வளவு பணம் நஷ்டம் அடைந்தார்களோ, அதை அவரே திருப்பி கொடுத்துள்ளார்.ம் என திட்டமிட்டிருந்ததாராம்.

அதன் பிறகு படம் ஆரம்பித்து பாதி முடிந்ததாம். பின்னர் படத்தில் எடுத்த காட்சிகளை போட்டு பார்த்த கேமரா மேனுக்கு திருப்தி ஏற்படவில்லையாம். அப்போது தான் ரஜினிக்கு போட்ட மேக்கப் செட்டாகவில்லை என்பது தெரியவந்தது . அப்போது போட்ட மேக்கப் எல்லாம் வெடிக்கிறது என்றும், அதனால் ரஜினியிடம் 20 நாள் கழித்து சூட்டிங் வைத்துக்கொள்ளலாம் என கூறியிருந்தனர்.
சென்னை 2-வது விமான நிலையம் இடம் தேர்வு இறுதிக் கட்டம்

 

பன்னூர் அல்லது பரந்தூர்: சென்னை 2-வது விமான நிலையம் இடம் தேர்வு இறுதிக் கட்டம்சென்னையில் அமையவுள்ள கிரீன்ஃபீல்ட் விமான நிலையத்திற்கு குறைந்தபட்சம் 2,000 முதல் 3,000 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது.


சென்னையில் 2 ஆவது விமான நிலையத்திற்காக மாநில அரசு பரிந்துரைத்த இடங்களில் பன்னூர், பரந்தூர் ஆகிய இரண்டு தளங்களை இந்திய விமான நிலைய ஆணையத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிடைத்த தகவலின்படி, முதலில், சென்னையை சேர்ந்த குழு பன்னூர், பாரந்தூர், திருப்போரூர், படலம் ஆகிய நான்கு இடங்களை ஆய்வு செய்து, முன் சாத்தியக்கூறு அறிக்கையை தாக்கல் செய்தது. ஆனால், தற்போதுள்ள விமான நிலையத்தை திருசூலத்தில் தொடர அனுமதிப்பது குறித்து பேச்சு வார்த்தை நடந்து வருவதால், கிரீன்ஃபீல்ட் விமான நிலையத்திற்கு பயணிக்க பயணிகள் நீண்ட தூரம் செல்ல வேண்டியிருக்கும்.


நான்கு தளங்களின் பல்வேறு அம்சங்களை கவனமாக ஆலோசித்த பிறகு, இந்த இரண்டு இடங்களை இந்திய விமான நிலைய ஆணையம் பட்டியலிப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பன்னூர்

பன்னூர் கிராமம், திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் அமைந்திருந்தாலும், அங்கு ரோமன் கத்தோலிக் மக்களும், தெலுங்கு மொழி பேசுபவர்களும் அதிகளவில் வசிக்கின்றனர். திருவள்ளூரையும் காஞ்சிபுரத்தையும் இணைக்கும் மாநில நெடுஞ்சாலையில் பன்னூர் அமைந்துள்ளது.

பரந்தூர்

பரந்தூர் ஊராட்சி, தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வாலாஜாபாத் வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 2465 ஆகும். இவர்களில் பெண்கள் 1274 பேரும் ஆண்கள் 1191 பேரும் உள்ளனர்.

மற்ற பரிந்துரை தளங்களான, படலம் மற்றும் திருப்போரூரில் சில கட்டுப்பாடுகளும், வரம்புகளும் உள்ளதாக கூறப்படுகிறது. இறுதி முடிவு எடுப்பதற்கு முன், தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இரண்டு இடங்களிலும் நிலத்தின் விலை மற்றும் இருப்பு குறித்து ஆராயப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2,000 முதல் 3,000 ஏக்கர் நிலம்

சென்னையில் அமையவுள்ள கிரீன்ஃபீல்ட் விமான நிலையத்திற்கு குறைந்தபட்சம் 2,000 முதல் 3,000 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. எனவே, TIDCO ஒரு இடத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான அடுத்த நடவடிக்கை குறித்து மாநில அரசாங்கத்துடன் கலந்துரையாடவுள்ளது.

மற்றொரு வட்டாரம் அளித்த தகவலின்படி, இந்திய விமான நிலைய ஆணையம் கூடுதல் ஆய்வுகளுக்கு இரண்டு தளங்களை மட்டுமே பரிந்துரைத்துள்ளது. ஒரு தளத்தை இறுதி செய்வதற்கு முன், தொழில்நுட்ப சாத்தியம் ஆய்வு, தடைகள் வரம்பு மேற்பரப்பு மற்றும் வேறு சில சோதனைகள் செய்ய வேண்டும்.

பின்னர், மையத்திலிருந்து ஒரு வழிகாட்டுதல் குழு தளத்திற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். இதையடுத்து, கிரீன்ஃபீல்ட் விமான நிலையத்தை நிர்மாணிப்பதற்கு அந்த இடத்திற்கு பல அனுமதிகளைப் பெற வேண்டும். புதிய விமான நிலைய பணிகள் அதிவேகத்தில் நடைபெற்றாலும், விமான நிலையம் நிஜமாக குறைந்தது 5 ஆண்டுகள் ஆகலாம் என கூறப்படுகிறது.


முதலில் என்னை மூடியுள்ள உடைகளையும் ஆபரணங்களையும் அகற்றி வைக்கிறேன்!”

 “முதலில் என்னை மூடியுள்ள உடைகளையும் ஆபரணங்களையும் அகற்றி வைக்கிறேன்!”


இந்த வாக்கியம் உங்களுள் சில சலனங்களையும் அச்சங்களையும் முளைக்கவிடுகிறதா? எனில், கமலா தாஸ் எனும் அற்புத மனுஷியைப் பற்றி அவசியம் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். ஆபரணங்கள் மற்றும் ஆடைகளைக் அகற்றுவது குறித்து ஏன் அப்படி சொன்னார் என்பதைப் பிறகு சொல்கிறேன். அதற்கு முன்பு சில கேள்விகள்.
நீங்கள் ஆணாக இருந்தால், ஒரு பெண்ணின் அன்பில் திளைத்திருக்கிறீர்களா? காமவயப்பட்டுள்ளீர்களா? காதலின் சூடான குளிர் ஊசிகளை நெஞ்சில் வாங்கியிருக்கிறீர்களா? நிச்சயம் அவை அழகான தருணங்கள். அந்த அனுபவங்கள் ஒரு பெண்ணுக்கு எப்படி இருக்கும் எனத் தெரியுமா? மாதம் மாதம் மாதவிடாய் தருணங்கள், மாதவிடாய்க்கு முன்பான அந்த ஒரு வார உணர்வுக் கலவைகள் எனப் பெண்ணின் காதல் உணர்வுகளும் அத்தகையதே. ஆணின் காதல் கொண்டாட்டங்களைப் பதிவுசெய்தே வளர்ந்த இலக்கியங்களின் கட்டமைப்பே நம் சமூக அடித்தளம். பூவினால் தொட்டால்கூட சிறு கோடு விழுந்துவிடும் என்று தயங்கும் அளவுக்கு மென்மைகளின் இதழ்கள் வளர்த்த பெண்ணின் உணர்வுகள், காதல் தொட்டால் என்னென்ன அற்புதங்கள் நிகழ்த்தும்? பெண்ணின் காதல் உணர்வுகளை, காம ஆசைகளை அத்தனை அழகியலுடன் ஆயிரம் வண்ணங்களாக ஒளிர ஒளிர எழுதியவர் கமலா தாஸ்.
எந்தப் பெண்ணைச் சுற்றிலும் வானம் நிறைந்திருக்கும்; வண்ணங்கள் நிறைந்திருக்கும்; அழகுப் பூத்துக் குலுங்கியிருக்கும். ஆனால், உயிர்சக்தி நிரம்பிய அவள் ஆற்றல் வானத்தில் சிறகுகள் விரிக்க ஒரு தடை இருக்கும். அது காதலோ, அடக்க இயலாத காமப் பெருக்கோ, ஆணுக்கே கதவுகள் அடைக்கப்பட்டிருக்கும்போது, பெண்ணின் பாலியல் ஆசைகள் குறித்து இங்கே பேசமுடியுமா? அதிகம் வேண்டாம், கணவனிடம் தன் பாலியல் ஆசைகளைத் தயக்கமின்றி கூறும் மனைவிகள் இங்கே எத்தனை பேர்? அது, பெண்ணின் மிகமிக அழகான பக்கங்களில் ஒன்று. பருவம் எய்துவது முதல் பதின் வயதுகளில் தன்னைக் கவரும் ஆணை பற்றிய ஒரு பெண்ணின் எண்ணங்கள் இன்றுவரை இலக்கியங்களில் முழுமையாகப் பதிவுசெய்யப்படவில்லை. மனிதகுல அழகியல் பக்கங்களின் அதியழகான பக்கங்கள் அவை. தன் கதைகளில், கவிதைகளில் அந்த அழகுகளை மனம் தொடும் மெல்லிசையாகப் படரவிட்டவர் கமலா தாஸ்.
கேரளத்தின் புண்ணையூர்குளம் என்ற சிறு கிராமமே கமலாதாஸின் பூர்வீகம். அவரின் தந்தை வீ.எம்.நாயர் ‘மாத்ருபூமி’ என்ற மலையாள நாளிதழின் ஆசிரியர். தாய் பாலாமணியம்மாள் மலையாளக் கவிஞர். இந்தப் பின்னணியில் வளர்ந்த கமலாதாஸ் இளமையிலேயே கவிதைகள் எழுதத்தொடங்கினார். அவரது பூர்வீக கிராமத்தின் நாலப்பாட்டு வீடு ‘என் கதை’யின் மூலம் மிகப் பிரபலமானது. தனது 15 வயதில் மாதவ் தாஸ் என்னும் வங்கி அதிகாரியை மணந்தார். அவரின் பெரும்பாலான நாள்கள் கொல்கத்தாவிலேயே கழிந்தன. அவரின் முதல் ஆறு கவிதை தொகுப்புகள் ஆங்கில மொழியில்தான் வெளிவந்தன. பின்பு, அவர் மலையாளத்திலும் சிறுகதைகள் எழுதத் தொடங்கினார். அவரின் எழுத்தார்வத்திற்கு கணவர் மிகவும் உதவியாகயிருந்தார். பிரெஞ்ச், ஜெர்மன், ரஷ்யன், ஜாப்பனீஸ் போன்ற மொழிகளிலும் அவர் படைப்புகள் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. இந்திய நவீன கவிதைகளின் தாய் என டைம்ஸ் பத்திரிக்கை இவரைக் குறிப்பிட்டிருக்கிறது.
மாதவிக்குட்டி, கமலா தாஸ் என்ற பெயர்களில் இலக்கியம் படைப்பார். என்றேனும் உங்கள் அம்மாவின் காதல்கள் குறித்துக் கேட்டிருக்கிறீர்களா? காதல் இல்லை நண்பர்களே… ‘காதல்கள்’தான். மனித மனம் நிச்சயம் குரங்குதான். அதில் சந்தேகம் கிடையாது. காதலையும் காமத்தையும் சுற்றி படுபயங்கரமான அபத்தங்களைப் பூசிவைத்திருக்கும் இந்தச் சமூகத்தில், தன் காதல்களையும் காம ஆசைகளையும் ‘என் கதை’யில் செதுக்கியவர் கமலா தாஸ். அது, அவரின் சுயசரிதை. காதல் என்பது ஒருமுறை, ஒருவனுக்கு ஒருத்தி என்ற அடிப்படைவாதக் கொள்கைகளை அடித்து உடைத்ததுதான் கமலா தாஸ் எழுத்துகளின் வெற்றி. உடனே முகம் சுளிக்க வேண்டாம் நண்பர்களே… ‘என் கதை’ நமக்கு கமலாதாஸின் கதையை மட்டுமின்றி, காதலையும் அறிமுகப்படுத்தும்.
இன்று காதல் புதிய பரிமாணத்தை நோக்கி நகர்கிறது. ‘நீ என்னைக் காதலிக்கிறாயா? காதலி! எனக்கும் பிடித்திருக்கிறது. திடீரென்று நானில்லாதபோது காமப் பசி எழுகிறதா? சம்மதம் சொல்லும் இணையுடன் படுக்கையைப் பகிர்ந்துகொள். என்னிடம் ஓர் ஆத்மார்த்தமான நட்பை உணர்கிறாயா? சில ஹார்மோன் துடிப்புகளை உணர்கிறாயா? நான் பாரம் சுமக்கும்போது கேளாமலேயே உன் தோளையும் மடியையும் தருவாயா? உன்னைத்தான் தேடுகிறேன், வா இணைந்து வாழலாம்’ என்கிறது.
இப்படியான சில அற்புதங்கள் நிகழ, கமலா தாஸின் எழுத்துகள் விதை போட்டிருக்கிறது எனச் சொன்னால் அது மிகையில்லை. இன்றுவரை குறும்பட லட்சுமியையே ஏற்றுக்கொள்ளாத சமூகம், கமலா தாஸை எப்படி எதிர்கொண்டிருக்கும்? ஆம்! அழுத்தங்கள், மிரட்டல் மயம்… தன் இறப்புக்குச் சில வருடங்களுக்கு முன்பு இஸ்லாம் மதத்துக்கு மாறினார். கமலா சுரையா எனப் பெயரை மாற்றிக்கொண்டு தொடர்ந்து எழுதினார். 2009 மே 31-ம் திகதி மறைந்தார்.
1934 மார்ச் 31-ம் திகதி பிறந்த கமலா தாஸின் பிறந்தநாள் இன்று. எதற்காக அவர் உடைகளையும் ஆபரணங்களையும் அகற்றுவது குறித்து பேசினார் தெரியுமா?
‘முதலில் என்னைச் சூழ்ந்துள்ள உடைகளையும் ஆபரணங்களையும் அகற்றி வைக்கிறேன். பின்பு, இந்த மெல்லிய அரக்கு நிறத் தோலையும் அதனுள் இருக்கும் எலும்புகளையும் உதறுகிறேன். இறுதியில் வீடற்ற, அனாதையான, அதியழகு நிறைந்த தோல், எலும்புகள் என அனைத்துக்கும் அடியில் உள்ள என் ஆன்மாவை உங்களால் காண இயலும் என நம்புகிறேன்’
நன்றி:துருவி.காம்

தெய்வம் தந்த வீடு ..வீதியிருக்கு

 


அவள் ஒரு தொடர்கதை”திரைப்படத்தின் கதாசிரியர் திரு.எம்.எஸ்.பெருமாள். அமரர் சுகி.சுப்பிரமணியன் அவர்களின் புதல்வர்.திரு.சுகி.சிவம் அவர்களின் மூத்த சகோதரர். சென்னை தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும், வெவ்வேறு மாநிலங்களில் நிலைய இயக்குநராகவும் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். அவரிடம் பேசிக்கொண்டிருந்த போது “தெய்வம் தந்த வீடு” பாடல் பற்றி அபூர்வமான தகவல் ஒன்றைச் சொன்னார். தன் சம்பாத்தியத்தால் குடும்பத்தைத் தாங்குகிற இளம்பெண், ஊதாரியாகவும், ஊர்சுற்றியாகவும் குடிகாரனாகவும் இருக்கும் அண்ணனை வீட்டிலிருந்து வெளியேற்றுகிறாள்.அண்ணன் கதாபாத்திரம் ஆர்ப்பாட்டமாக வெளியேறுவதுதான் கதை. அங்கே ஒரு பாடல்வைக்க வேண்டுமென இயக்குநர் கே.பாலசந்தர் சொன்னதும் கடுமையாக எதிர்த்தவர் எம்.எஸ்.பெருமாள். அந்த இடத்திற்கும் சரி, கதாபாத்திரத்திற்கும் சரி, பாடல்காட்சி பொருந்தாது என்பது அவருடைய கட்சி. வாதங்களைப் பொறுமையாகக் கேட்டுவிட்டு பாலசந்தர் சொன்னாராம், “பெருமாள்! பாட்டெழுதப் போறது நீங்களோ நானோ இல்லை. கவிஞர் எழுதப் போறார்.சரியா வந்தா வைச்சுக்குவோம் .இல்லேன்னா விட்டுடுவோம்”

தயாரிப்பாளர் இராம.அரங்கண்ணல் அலுவலகத்தில் பாடல் கம்போஸிங் தொடங்கியது. நேரம் போய்க் கொண்டிருந்ததே தவிர அன்று கவிஞர் விளையாட்டுப் பேச்சிலும் வேடிக்கையிலும் நேரத்தைப் போக்கிக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்திற்குமேல் பொறுமையிழந்த எம்.எஸ்.வி. கவிஞருடன் ஊடல் கொண்டு கிளம்பிப் போக “போறான் போ” என்று தன் வேடிக்கைகளைத் தொடர்ந்தார் கவிஞர். அவரது மற்றொரு நெருங்கிய நண்பரான இராம.அரங்கண்ணல்,”கண்ணா! இப்படியே பண்ணிகிட்டிருந்தா கதையிலே வர்ற பொண்ணு மாதிரி நானும் உன்னைத் தூக்கி வீதியிலே வீசச் சொல்லிடுவேன்” என்றதும்,”டேய்! வீதின்னா கேவலமாடா? உன் ஆபீஸ் இல்லாட்டி என்ன? அது தெய்வம் தந்த வீடுடா!தெய்வம் தந்த வீடு ..வீதியிருக்கு” என்று பொழியத் தொடங்கிவிட்டார்.
எம்.எஸ்.வி.புறப்பட்டு சிலநிமிஷங்கள்தான் ஆகியிருந்தன. செல்ஃபோன் வசதிகள் இல்லாத காலம்.எம்.எஸ்.வி. வீட்டுக்கு தொலைபேசியில் அழைத்து, “கார் வந்தால் ஆர்மோனியத்தை இறக்க வேண்டாம்.பாடல் வந்டுவிட்டது. திரும்பி வரச்சொல்லுங்கள்”என்று சொல்லி கம்போஸிங் தொடர்ந்ததாம்.
வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட விட்டேத்தியான மனிதனின் அலட்சியக் குரலிலேயே அடர்த்தியான தத்துவங்களைப் பொழிந்திருப்பார் கண்ணதாசன்.
“கள்ளிக்கென்ன முள்ளில் வேலி”, “காட்டுக்கேது தோட்டக்காரன்” என்பது போன்ற கேள்விகளும், “வெறுங்கோயில் இதிலென்ன அபிஷேகம்?என் மனமென்னும் தெருக்கூத்து பகல்வேஷம் என்பது போன்ற கேலிகளும், “தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம், அது தெரியாமல் போனாலே வேதாந்தம்” போன்ற தெறிப்புகளும் நிறைந்த பாடல் அது.
நன்றி: மரபின்மைந்தன்.காம்

குற்ற வழக்கில் கைப்பற்றப்படும் வாகனங்கள்

 குற்ற வழக்கில் கைப்பற்றப்படும் வாகனங்களை நீதிமன்றத்திலோ அல்லது காவல்நிலையத்திலோ ஆண்டுக் கணக்கில் வைத்திருக்க தேவையில்லை.அவ்வாறு செய்வதால் வாகன உரிமையாளருக்கு மிகுந்த இழப்பு ஏற்படும்.  எனவே குற்ற வழக்கில் கைப்பற்றப்பட்ட வாகனங்களை புகைப்படம், வீடியோ எடுத்து அவற்றை நீதிமன்ற விசாரணையின் போது பயன்படுத்தி கொள்ள வேண்டும்.  இந்த நடைமுறையை எல்லா நீதிமன்றங்களும் கடைப்பிடிக்க வேண்டும்.


#வாகனம் உரிமையாளர்களிடம் வாகனத்தை ஒப்படைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் (#High_Court) தீர்ப்பு கூறியுள்ளது.


CRL. OP - 5278 /2007 & 9744/2010, Manager, Sundaram Finance Company Vs Inspector of police, Kaveripattinam P. S. Krishnagiri and Mani (2010-2-LW-CRL-1122)
காங்கிரஸார் நடத்திய ஒரு ஊர்வலங்கள்

 ஒருமுறை காங்கிரஸ் ஊர்வலம் திருவல்லிக்கேணித் தேரடியில் துவங்குவதாகவும் ஊர்வலத்தை சிவாஜி கணேசன் துவக்கி வைப்பதாகவும் ஏற்பாடாகி இருந்தது. மதியம் 3 மணிக்குத் துவங்க வேண்டிய ஊர்வலம் சிவாஜி கணேசன் வராததால் 4 மணிவரை துவங்கவில்லை. இதற்கிடையே வேடிக்கை பார்க்க வந்த ஜனங்கள் எங்களிடம் ‘சிவாஜி வந்தால் அவரை சரியாகப் பார்க்க முடியுமா அல்லது அவசரமாய் புறப்பட்டு விடுவாரா?’ என்று கேட்டுக் கொண்டிருந்தார்கள். “நேரமானாலும் பரவாயில்லை. நீங்கள் அவரைப் பார்ப்பதற்கு வசதியான சந்நிதித் தெருவில் ஒருமுறை அவரை வரச்சொல்கிறோம்” என்று சொல்லி வைத்திருந்தோம். சிவாஜி கணேசன் வந்தவுடன் அவரை அணுகி மக்களுடைய விருப்பத்தைத் தெரிவித்தோம். அவருடன் வந்த நபரொருவர் பிடிவாதமாக மறுத்துவிட்டார். இதற்கிடையே எங்களோடு வந்த சிறுவனொருவன் சிவாஜி கணேசனைத் தொட வேண்டுமென்ற ஆசையில் வேன் மீது ஏறிக் கையை நீட்டினான். இதைக்கண்டு சிவாஜி கணேசன் முகம் சுளித்தார். இதனால் கோபமுற்ற நாங்கள் ஊர்வலத்தை விட்டு வெளியேறினோம். இரவோடிரவாக ரசிகர் மன்றத்தை மாற்றி ‘மகாத்மா காந்தி நற்பணி மன்றம்’ என்று பெயரிட்டோம்.

சிம்சன் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக ஸ்தாபன காங்கிரஸ் கட்சி நடத்திய ஊர்வலத்தில் நாங்கள் கலந்து கொண்டோம். ஊர்வலத்தைக் கலைக்க தி.மு.க.வினர் தாக்குதல் நடத்தினார்கள். கட்சிக்காரர்களும் கொடியை உருவி விட்டுக் கையிலிருந்த கம்பத்தால் தாக்கினார்கள். சைக்கிள் டயரைக் கொளுத்தி வீசினார்கள். கண்ணீர்ப்புகை வீசினால் காற்றுத் திசைக்கேற்றவாறு ஓட வேண்டும் என்று எனக்குச் சொல்லப்பட்டது.
காங்கிரஸார் நடத்திய ஒரு ஊர்வலத்தில் சென்னை அண்ணாசாலையிலுள்ள அண்ணாதுரை சிலை மீது செருப்பு வீசப்பட்டது என்று தி.மு.க.வினர் குற்றம் சாட்டினார்கள். இத்தகைய அசம்பாவிதங்களைத் தவிர்ப்பதற்காக காமராஜர் ஒரு முயற்சி செய்தார். காங்கிரஸ் நடத்திய மௌன ஊர்வலத்தின்போது அண்ணாதுரை சிலைக்கருகே காமராஜர் நின்றுகொண்டார்.
ஊர்வலத்தில் வந்த தெய்வசிகாமணி என்ற இளைஞர் காமராஜரைப் பார்த்தவுடன் உற்சாக பூபதியாகி ‘காமராஜர் வாழ்க’ என்று குரல் எழுப்பினார்.
அவருக்குக் கிடைத்தது ஒரு அறை காமராஜரிடமிருந்து. மௌன ஊர்வலத்தில் சத்தம் போடக்கூடாதென்று தெய்வசிகாமணிக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆனால் தெய்வசிகாமணி அசரவில்லை. தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு தவைர் தன்னை அடித்த பெருமையை எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருந்தார்.
தமிழக முதல்வர் சி.என். அண்ணாதுரை அவர்களை அடையாறு கேன்சர் இன்ஸ்டிடியூட்டில் (ஜனவரி 1969) சேர்த்திருந்தார்கள். அவர் வந்த உடனே கேன்சர் இன்ஸ்ட்டிடியூட்டை மக்கள் சூழ்ந்து கொண்டார்கள். போலீஸால் நிலைமையைச் சமாளிக்க முடியவில்லை. அங்கிருந்த எல்லோரும் அழுது கொண்டிருந்தார்கள். மந்திரிகளும் வரும்போதே அழுதுகொண்டே வந்தார்கள். நான் ஒரு லேம்ப் போஸ்டில் ஏறித் தொத்திக்கொண்டு இதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். என் பக்கத்திலிருந்த ஒருவர் அழுதுகொண்டே கைக்கடிகாரத்தைக் கழற்றித் தூக்கி எறிந்தார். பெண்கள் மார்பில் அடித்துக்கொண்டு அழுதார்கள். கேட்டைத் திறந்துவிடச் சொல்லி அவர்கள் தலையை கேட்டில் மோதிக் கொண்டார்கள். சிலர் நடுத்தெருவில் புரண்டு அழுதார்கள். என்னால் அழுகையை அடக்க முடியவில்லை. நானும் அழுதேன்.
பிறகு வேன் வேனாகப் போலீஸ் வந்தது. அண்ணா நலமாயிருக்கிறாரென்று மந்திரிகள் மைக்கில் பேசினார்கள். மக்கள் ஒருவாறு சமாதானமடைந்த பிறகு பந்தோபஸ்து ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பொது மக்கள் குறிப்பிட்ட தூரத்திற்கு அப்பால் நிறுத்தப்பட்டார்கள். பாதுகாப்பு எல்லைக்குள் முக்கியஸ்தர்களுக்கு மட்டும் அனுமதி. பெரியப்பா வீடு இந்த எல்லைக்குள்ளேயே இருந்தது. ஆகவே, எங்களுடைய நடமாட்டத்திற்குத் தடையில்லை.
அண்ணாதுரை இங்கே ஒரு மாதமிருந்தார். எந்த நேரமும் அவர் இறந்துவிடக்கூடும் என்ற நிலைமையிருந்ததால் பந்தோபஸ்து போலீஸாருக்குக் கெடுபிடி அதிகம். குளியல், சாப்பாடு எல்லாமே பிரச்சனையாகிவிட்டது. எங்களுக்கும் போலீஸாருக்கும் இந்தச் சமயத்தில் நல்ல பழக்கம் ஏற்பட்டது. ஷூவையும், காலுறையையும் கழட்டி விட்டு அவர்கள் கொஞ்ச நேரம் வீட்டுக்குள் வந்து ஓய்வெடுத்துக் கொள்வார்கள். மேலதிகாரிகளுக்குத் தெரியாமல் கிணற்றில் குளிப்பார்கள். அரசாங்கம் கொடுக்கும் பொட்டலச் சோற்றைச் சாப்பிட முடியாமல் அவர்கள் சிரமப்படும்போது அக்கம்பக்கத்து வீடுகளிலிருந்து குழம்பு, ஊறுகாய், மோர் வாங்கிக் கொடுப்போம். லத்தி சார்ஜ் எப்படிச் செய்வது, போராட்டங்களை ஒடுக்க எப்படி சைக்கிள்களைப் போட்டு உடைப்பது என்பதையெல்லாம் அவர்கள் உற்சாகமாக விவரிப்பார்கள். ஒருநாள் காலையில் கண் விழித்தால் வாசலில் போலீஸ் இல்லை. இரவு அண்ணா காலமாகிவிட்டிருந்தார். இரவோடிரவாக எல்லாப் போலீஸாரும் ராஜாஜி மண்டபத்திற்குப் போய்விட்டார்கள்…
சில பயணங்கள் சில பதிவுகள்
- சுப்பு
நன்றி: வலம்

Wednesday, March 30, 2022

தள்ளுவண்டியில் ஹோட்டல் நடத்தும் தி.மு.க., பெண் கவுன்சிலர்


 ஆத்தூர் :தள்ளுவண்டியில் ஹோட்டல் நடத்தும் தி.மு.க., பெண் கவுன்சிலர், தன் கணவருடன் உடல் தானம் செய்துள்ளார்.சேலம் மாவட்டம்,ஆத்தூர் அருகே, நரசிங்கபுரம் நகராட்சி, 8வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் புஷ்பாவதி, 47; இவர், தன் கணவர் கதிர்வேலுடன் சேர்ந்து, பல ஆண்டுகளாக ஆத்தூர், விநாயகபுரம் ஆர்.டி.ஓ., அலுவலகம் முன், சாலையோரம் தள்ளுவண்டியில் இரவு நேர ஹோட்டல் நடத்தி வருகிறார்.தற்போது, நகராட்சி கவுன்சிலராக வெற்றி பெற்றபோதும், வழக்கம்போல், தினமும்தள்ளுவண்டியில்ஹோட்டல் நடத்தும் தொழிலை செய்துவருகிறார்.

தன் வார்டில் உள்ளமக்களிடம், அடிப்படை பிரச்னைகளை கேட்டறிந்து, நகராட்சி அலுவலர்களிடம் தெரிவித்து, சரி செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.கவுன்சிலர் புஷ்பாவதி கூறியதாவது:நான், 17 ஆண்டுகளாக
தி.மு.க., உறுப்பினர். எங்கள் வார்டு மக்களின் விருப்பத்தால் போட்டியிட்டு வெற்றி பெற்றேன்.சாலையோரம் தள்ளுவண்டியில் ஹோட்டல் நடத்தி, என் இரண்டு மகளையும் திருமணம் செய்து கொடுத்துள்ளேன்.கவுன்சிலராக வெற்றி பெற்றதால், எங்களை காப்பாற்றிய தொழிலை விட்டு விட முடியாது. பலருக்கு உணவளிக்கும் தொழில் என்பதால், மனம் தளராமல் செய்து வருகிறோம்.எங்களது இறப்புக்கு பின், உடல் கூட மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்துடன்,ஆறு மாதங்களுக்குமுன், சேலம் அரசுமருத்துவமனையில், நானும், கணவரும்உடல் தானம் செய்வதாக எழுதி கொடுத்துஉள்ளோம். இவ்வாறு அவர்கூறினார்.
நன்றி: தினமலர்

தன்னை சந்திக்க வருபவர்களின் பிரச்சனைகளை தீர்க்க வேண்டும்

 
தாம் சினிமா துறையில் இருப்பதால் அதிமுக ஆட்சியில் கோவில்களில் ஆவணப் படம் எடுப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்ததாகவும் திமுக ஆட்சி அமைந்த பிறகு ஆவணப்பட எடுக்க அனுமதி கோரி விண்ணப்பித்த 30 நாட்களில் தனக்கு அனுமதி கிடைத்ததாகவும் பாராட்டினார் நடிகை ஷோபனா. முதலில் திமுக அரசு மீதும் தமக்கு நம்பிக்கையில்லாமல் தான் விண்ணப்பித்ததாகவும் ஆனால் எதிர்பாராத வகையில் அரசு சிறப்பாக செயல்பட்டு வருவதாக பாராட்டினார்.

அதைத் தொடர்ந்து பேசிய அவர், முதலமைச்சர் ஸ்டாலினை தாம் சந்தித்து பேசச் சென்ற போது, அவரை என்ன சொல்லி அழைப்பது என தாம் குழம்பியதாகவும் அப்போது தன்னுடன் வந்தவர்கள் 'தலைவர்' என்றும் 'தளபதி' எனவும் அழைக்குமாறு அறிவுறுத்தியதாக கூறினார். ஆனால் தாம் அவரை 'அண்ணா' என அழைத்ததாகவும் தன்னை சந்திக்க வருபவர்களின் பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என்பதில் அவர் தீவிரம் காட்டுவதாகவும் புகழாரம் சூட்டினார்.
நன்றி: ஒன்இந்தியா தமிழ்

நீ ஒரே ஒரு ரூபா சம்பளம் கொடு; நான் நடிச்சுத் தர்றேன்'

 அருணாச்சலம்' படத்துல ரஜினிக்கு மாமியார் கேரக்டர்ல நடிச்சேன். அப்போ, `கல்யாணம் பண்ணாம உங்களை எப்படி விட்டு வெச்சாங்க'னு ஆச்சர்யமா கேட்டார். நான் கல்யாணம் பண்ணிக்காம இருந்ததுக்கு என் அம்மாவும் அப்பாவும்தான் காரணம். சின்ன வயசுல நான் ரொம்ப துறுதுறுப்பா இருப்பேன். நான் வேகமா நடந்தா `வேகமா நடந்து கீழே விழுந்து மூக்கை உடைச்சிக்கிட்டீன்னா உன்னை யாரும் கல்யாணம் பண்ணிக்க மாட்டாங்க'ன்னு கண்டிப்பாங்க. வேகமா படியிறங்கினா, `கீழே விழுந்து காலை உடைச்சிக்கிட்டினா உன்னை யாரும் கல்யாணம் பண்ணிக்க மாட்டாங்க'னு திட்டுவாங்க. இந்தப் பேச்சை அடிக்கடி கேட்டுக் கேட்டு சலிப்பாகி ஒரு கட்டத்துல `என்னை யாரும் கல்யாணம் பண்ணிக்க வேணாம்'னு சொல்ல ஆரம்பிச்சிட்டேன். இதைவிட முக்கியமான காரணம் எங்கப்பாவோட சந்தேக குணம். எங்கம்மா ரொம்ப அழகா இருப்பாங்க. நாம நினைச்சே பார்க்க முடியாத அளவுக்கு எங்கப்பா, எங்கம்மாவை சந்தேகப்படுவார். `அப்பா மாதிரியே நமக்கும் ஹஸ்பண்ட் அமைஞ்சுட்டா என்ன பண்றது'ங்கிற பயத்துலேயே கல்யாணத்தை ஒத்திப்போட்டுட்டு வந்துட்டேன்'' என்கிறார் வெண்ணிற ஆடை நிர்மலா.

``என் அண்ணனுங்க மூணு பேரும் சேர்ந்து ஒரு படம் தயாரிச்சாங்க. அதுல நிறைய நஷ்டமாயிடுச்சு. அந்த நேரத்துல எம்.ஜி.ஆர் சார் கூட ஒரு படத்துல நடிச்சுக்கிட்டிருந்தேன். ஒரு நாள் `நீ ஒரு படம் எடு. நான் நடிச்சுத் தர்றேன்'னு சொன்னார் எம்.ஜி.ஆர். `உங்களை வைச்சு நான் படம் எடுக்கிறதா'ன்னு நான் ஆச்சர்யப்பட, `நீ ஒரே ஒரு ரூபா சம்பளம் கொடு; நான் நடிச்சுத் தர்றேன்'னு சொன்னார் என்றும் கூறினார்.
நன்றி: விகடன்

கதை எழுதலாம் வாங்க I Amirtham Surya

 அமிர்தம் சூர்யாவின்


கதை எழுதலாம் வாங்க I Amirtham Surya I Karumaandi junction

video link


by


அமாவாசையில் சுபகாரியங்கள் செய்யலாமா|sumis channel

 இன்றைய 

sumis channel

அமாவாசையில் சுபகாரியங்கள் செய்யலாமா |dos and don'ts on amavasya day|sumis channelvideo link\எனக்கும் அந்த செக்ஸ் ஆசை|தமிழ் கவிதை

 இன்றைய நயினாரின் உணர்வுகளில்

எனக்கும் அந்த செக்ஸ் ஆசை|தமிழ் கவிதை|kavithai in tamil|Nynarin Unarvugal
video link
Tuesday, March 29, 2022

முதல்வர் ஸ்டாலின் ஏ.ஆர்.ரஹ்மான் சந்திப்பு


 துபாய் சர்வதேச தொழில் கண்காட்சியை பார்வையிட சென்ற என்னை நண்பர் இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தன்னுடைய ஸ்டுடியோவுக்கு அழைத்து, தான் தயாரித்துள்ள மூப்பில்லா தமிழே தாயே ஆல்பத்தைக் காண்பித்தார். தமிழுக்கும், இசைக்கும் உலகில் எல்லை இல்லை''

- முதல்வர் ஸ்டாலின்
நன்றி: தினமணி

ஆஸ்கர் விருதுகள் - சிறந்த நடிகருக்கான விருதை வென்றார் வில் ஸ்மித்

 


ஆஸ்கர் விருதுகள் - சிறந்த நடிகருக்கான விருதை வென்றார் வில் ஸ்மித்

சிறந்த நடிகர் - வில் ஸ்மித்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

சிறந்த நடிகர் - வில் ஸ்மித்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் 94வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது.  

இதுவரை வழங்கப்பட்ட விருதுகளில், சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு, சிறந்த படத்தொகுப்பு, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த பின்னணி இசை, சிறந்த சவுண்ட், சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் ஆகிய பிரிவுகளில், 'டுன்' என்ற திரைப்படம்  விருதுகளை குவித்துள்ளன. சிறந்த அனிமேஷன் படமாக, டிஸ்னி தயாரித்த 'என்காண்டோ' (Encanto) திரைப்படம் தேர்வாகியுள்ளது.

சிறந்த நடிகருக்கான விருதை, 'கிங் ரிச்சர்ட்' என்ற திரைப்படத்திற்காக நடிகர் வில் ஸ்மித் வென்றுள்ளார். சிறந்த நடிகைக்கான விருதை, 'தி ஐஸ் ஆஃப் டாமி ஃபயே' திரைப்படத்திற்காக, நடிகை ஜெசிகா சாஸ்டெய்ன் வென்றுள்ளார்.

ஆறு விருதுகளைப் பெற்ற திரைப்படம் - டுன்

பட மூலாதாரம்,WARNER BROS

படக்குறிப்பு,

ஆறு விருதுகளைப் பெற்ற திரைப்படம் - டுன்

சிறந்த துணை நடிகைக்கான விருது, 'வெஸ்ட் சைட் ஸ்டோரி' திரைப்படத்தில் நடித்த ஹரியானா டிபோஸ் என்ற நடிகை வென்றுள்ளார். இவர் நடிப்பு பிரிவில், ஆஸ்கர் விருது பெறும் முதல் குயர் பெண் என்பது குறிப்பிடத்தக்கது. கோடா திரைப்படத்திற்காக நடிகர் டிராய் காஸ்டர் சிறந்த துணை நடிகராக தேர்வு செய்யப்பட்டார்.

Oscar 2022

பட மூலாதாரம்,GETTY IMAGES

கடந்த ஆண்டு சவுண்ட் ஆஃப் மெட்டலுக்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ரிஸ் அகமது, அனீஸ் கரியாவின் லைவ் ஆக்சன் குறும்படமான தி லாங் குட்பைக்காக இந்த ஆண்டு முதல் அகாடமி விருதை வென்றுள்ளார்.

'கோடா'வில் மீனவர் மற்றும் தந்தையாக நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான அகாடமி விருதை வென்ற முதல் காது கேளாதவர் என்ற பெருமையை டிராய் கோட்சூர் பெற்றார். இந்த வெற்றி அவருக்கு ஒரு உணர்ச்சிகரமான தருணமாக அமைந்தது. நிகழ்ச்சி மேடையில் பேசிய டிராய் கோட்சூர், விருது பெற்றதற்காக தனது தந்தைக்கு நன்றி தெரிவித்தார். எனது தந்தையே எனது 'ஹீரோ' என்று அவர் அழைத்தார். 53 வயதாகும் டிராய் கோட்சூர், தனது மிகப்பெரிய ரசிகர்கள் தனது மனைவி மற்றும் மகள் என்று கூறினார். இந்த விருதை காதுகேளாத நிலையில் பிள்ளைகளை வளர்த்தெடுக்கும் கோடா சமூகத்துக்கு அர்ப்பணிப்பதாக டிராய் கோட்சூர் தெரிவித்தார்.

ஜப்பானின் 'டிரைவ் மை கார்' படம், சிறந்த சர்வதேச அம்சத்திற்கான ஆஸ்கர் விருதை வென்றுள்ளது. மனைவியை இழந்த நபருக்கும் அவருக்கு ஹிரோஷிமாவைச் சுற்றி காண்பிக்க வாடகைக்கு அமர்த்தப்பட்ட பெண்ணுக்கும் இடையிலான பிணைப்பை காண்பிக்கும் வகையில் இந்த படம் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

சிறந்த அனிமேஷன் திரைப்படம் - என்காண்டோ

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

சிறந்த அனிமேஷன் திரைப்படம் - என்காண்டோ

க்ரூயெல்லா படத்திற்காக ஜென்னி பீவன் சிறந்த ஆடை வடிவமைப்பிற்கான ஆஸ்கர் விருதை வென்றுள்ளார். அவர் சிறந்த ஆடை வடிவமைப்பிற்கான அகாடமி விருதுக்கு பதினொரு முறை பரிந்துரைக்கப்பட்டார், எ ரூம் வித் எ வியூ (1985) படத்திற்காக மூன்று விருதுகளை வென்றார், அதற்காக அவர் ஜான் பிரைட்டுடன் மேட் மேக்ஸ்: ப்யூரி ரோடு (2015) படத்துக்கான விருதை பகிர்ந்தார். இதேபோல க்ரூல்லா (2021) படத்துக்காக சிறந்த ஆடை வடிமைப்பாளர் விருதையும் இவர் வென்றுள்ளார்.

ஆஸ்கர் விழாவில் யுக்ரேனுக்காக பகிரப்பட்ட செய்தி

ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில் யுக்ரேன் மக்களுக்கு ஆதரவைத் தெரிவிக்கும் வாசகங்கள் திரையிடப்பட்டன. முன்னதாக இந்த விழாவில் யுக்ரேனிய அதிபர் ஸெலென்ஸ்கி காணொளி காட்சி வாயிலாக தோன்றிப் பேசுவார் என்று கூறப்பட்டது. ஆனால் அதற்குப் பதிலாக, திரையில் சில இடம்பெற்ற வாசகங்களில் "மோதல் காலங்களில் நமது மனிதாபிமானத்தை வெளிப்படுத்த திரைப்படம் ஒரு முக்கியமான வழியாகும், உண்மையில் மில்லியன் கணக்கான குடும்பங்கள் யுக்ரேனில் உணவு, மருத்துவ பராமரிப்பு, சுத்தமான நீர் மற்றும் அவசர சேவைகளின் தேவைக்காக காத்திருக்கின்றன," என்று கூறப்பட்டிருந்தது.

ஆஸ்கர் விருதுகள் - பட்டியல்:

சிறந்த நடிகர் - வில் ஸ்மித் (திரைப்படம் - கிங் ரிச்சர்ட்)

சிறந்த நடிகை - ஜெசிகா சாஸ்டெய்ன் (திரைப்படம் - தி ஐஸ் ஆஃப் டாமி ஃபயே)

சிறந்த திரைப்படம் - கோடா

சிறந்த இயக்குனர் - ஜென் ஷாம்பியன் (திரைப்படம் - தி பவர் ஆஃப் டாக் )

சிறந்த அனிமேஷன் திரைப்படம் - என்காண்டோ

சிறந்த படத்தொகுப்பு - ஜோ வாக்கர் (திரைப்படம் - டுன்)

சிறந்த துணை நடிகை - ஹரியானா டிபோஸ் (திரைப்படம் - வெஸ்ட் சைட் ஸ்டோரி)

சிறந்த துணை நடிகர் - டிராய் காஸ்டர் (திரைப்படம் - கோடா)

சிறந்த தழுவல் திரைக்கதை - சியான் ஹேதர் (திரைப்படம்- கோடா )

சிறந்த திரைக்கதை - சர் கென்னித் ப்ரானா (திரைப்படம் - பில்ஃபெஸ்ட்)

சிறந்த ஆடை வடிவமைப்பு - ஜென்னி பீவன் (திரைப்படம் - க்ரூயெல்லா)

சிறந்த சர்வதேச திரைப்படம் - டிரைவ் மை கார்

சிறந்த ஆவணப்படம் - சம்மர் ஆஃப் சோல்

சிறந்த பின்னணி பாடல் - நோ டைம் டூ டை (பில்லி ஐலிஷ் மற்றும் ஃபினியஸ் ஒ'கனல்)

சிறந்த பின்னணி இசை - ஹன்ஸ் ஸிம்மர் (திரைப்படம் - டுன்)

சிறந்த ஒளிப்பதிவு - க்ரெக் ஃப்ராசர் (திரைப்படம் - டுன்)

சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் - டுன்

சிறந்த சவுண்ட் - டுன்சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு - டுன்

சிறந்த ஒப்பனை மற்றும் சிகையலங்காரம் - தி ஐஸ் ஆஃப் டாமி ஃபயே

சிறந்த லைவ் ஆக்சன் குறும்படம் - தி லாங் குட்பை

சிறந்த அனிமேஷன் குறும்படம் - தி விண்ட்ஷில்ட் வெப்பர்

சிறந்த ஆவண குறும்படம் - தி குயின் ஆஃப் பாஸ்கெட்பால்


நன்றி

https://www.bbc.com/tamil/arts-and-culture-60896694