*போனவன் போனாண்டி*/ வெ.பெருமாள்சாமி
....* போனவன் போனாண்டி* தொடர் பகுதி (2 ) * போனவன் போனாண்டி* சங்க காலத்தில் கணவனை இழக்கும் பெண்களின் நிலையும் பெரிதும் வேறாக இல்லை. பிற்காலத்திய அவலங்கள் அப்போதும் நிகழ்ந்துள்ளன. வெளிமான் என்ற மன்னன் இறந்துவிடுகிறான். அவனுடைய உரிமை மகளிர் மார்பில் அறைந்து அழுகிறார்கள்.. அது இயற்கைதான்.. அப்படி அடித்து அழும் போது கை வளைகள் உடைந்து சிதறுகின்றன.. இப்போதெல்லாம் வாழை மரத்தின் தாரில் காய்கள் முதிர்கையில் முனையிலுள்ள பூவை அரிந்து சமைத்துவிடுகிறோம்.. அரியாமல் அப்படியே விட்டுப் பாருங்கள்.. பூக்கள் ஓரிரு நாளில் பொல பொலவென்று கொட்டிவிடும்.. அதுபோல அவர்கள் வளையல்கள் உதிர்ந்தன என்கிறார் பெருஞ்சித்திரனார். "வாழைப் பூவின் வளைமுறி சிதற" -- (புறம் 237) இன்னும் அவர்கள் தொடி என்னும் அணிகலன் இழப்பதை அவர், "தொடிகழி மகளிரின் வாடி" -- (238) என்று குறிக்கிறார். தாயங்கண்ணியார...