Wednesday, September 30, 2020

தமிழகத்தில் ஒரே நாடு,ஒரே ரேஷன் திட்டம் நாளை முதல்

              தமிழகத்தில் ஒரே நாடு,ஒரே ரேஷன் திட்டம் நாளை முதல் அமல்படுத்தப்படுகிறது. மத்திய அரசு ஒப்புதல் அளித்த ஒரே நாடு,ஒரே ரேஷன் திட்டத்தை கடந்த ஜூலை மாதம் 1ம் தேதி முதல் அமல்படுத்தவிருந்த இத்திட்டம் கொரோனா காலத்தில் தடைபட்ட நிலையில் தற்போது நாளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைக்கிறார்


 


நாட்டின் எந்த மாநிலத்திலும் உள்ள நியாயவிலை கடைகளிலும் குடும்ப அட்டைதாரர்கள் அத்தியாவசிய உணவு பொருட்களை வாங்கி கொள்ளும் திட்டமே ‘ஒரே நாடு; ஒரே ரேஷன் கார்டு’ திட்டம் . இந்த திட்டமானது தமிழகத்தில் நாளை முதல் அமலாகிறது.


 


தனியார் பள்ளி பெண் முதல்வர் பெட்டிக்கடை வைத்து  தேநீர் விற்பனை

சேலம் மாவட்டத்தில்  வாழப்பாடி அருகே, பொதுமுடக்கத்தால் பள்ளி மூடப்பட்டு கிடப்பதால் வேலை இழந்த தனியார் பள்ளி பெண் முதல்வர் பெட்டிக்கடை வைத்து  தேநீர் விற்பனை செய்வது அனைவரையும்  கவர்ந்துள்ளது


சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த சோமம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிவா(35). இவரது மனைவி செல்வி(32). முதுநிலை இயற்பியல் மற்றும் பி.எட்., ஆசிரியர் பட்டம் பெற்றுள்ளார். 5 ஆண்டுகள் பல்வேறு தனியார் பள்ளிகளிலும், திருமணத்திற்கு பிறகு கடந்த 5 ஆண்டுகளாகத் தனது கணவரின் தனியார் பள்ளியில் முதல்வராகவும் பணியாற்றி வருகிறார்.


கடந்த மார்ச் 24 ஆம் தேதியிலிருந்து பள்ளிகள் மூடப்பட்டு கிடப்பதால் வேலை இழந்த இவர், பள்ளிக்கு எதிரே வண்ணாத்திகுட்டை பேருந்து நிறுத்தம் அருகே ஆவின் பாலகம் பெட்டிக்கடை வைத்து, தேநீர் விற்பனை செய்து வருகிறார். பள்ளி மாணவ-மாணவர்களின் பெற்றோர்களும், பொதுமக்களும் இவரிடம் வியாபாரம் செய்து ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்


இருதயம் காக்கும் இயற்கை உணவு வகைகள்

டாக்டர் ரேவதி அவர்களின்இயற்கை வைத்தியம்


 


இருதயம் காக்கும் இயற்கை உணவு வகைகள் | Natural foodstuffs to protect the Heart | World Heart Day


 


video link சோளமாவு அல்வா

சோளமாவு அல்வா


தேவையான பொருட்கள்


: சோளமாவு 1கப், சர்க்கரை 2 கப் , நெய்,முந்திரி , பாதாம் சிறிய துண்டுகளாக நறுக்கியது. தேவையான அளவு


. செய்முறை: ஒரு கப் சோளமாவை ஒன்றரை கப் தண்ணீரில் கரைத்து வைக்கவும். அடிக்கடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து சர்க்கரையுடன் நீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.சற்று பிசுபிசுப்பான சிரப் வந்தவுடன் சோளமாவு கரைச்சலை சேர்த்து கிளறவும். சுருண்டு வரும் போது கலர் நெய் சேர்க்கவும். பாத்திரத்தில் ஒட்டாது பதம் வந்ததும் நெய் தடவிய தட்டில் கொட்டி முந்திரி, பாதாம் தூவி ஆறியவுடன் துண்டு போடவும்.


பாம்பே அல்வா என்ற இந்த சோளமாவு அல்வா செய்வது சுலபம்.


சுவையாகவும் இருக்கும் .V.ஜான்சிராணி சென்னை- 21.


Tuesday, September 29, 2020

உலக இதய தினம்

 செப். 29 உலக இதய தினம்🌹


🌹 இன்று உலகம் முழுவதும் இதய தினமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. உணவு முறைகளில் ஏற்பட்டிருக்கும் மாறுதல்களால் அதிகம் பாதிக்கப்படும் உறுப்பாக இதயம் மாறி வருகிறது. அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.


* புகைப் பழக்கமே இல்லாத 6 லட்சம் பேர் ஒவ்வொரு வருடமும் காற்றில் கலக்கும் புகையால் பாதிப்பட்டு உயிரிழகின்றனர். இதில் உலக அளவில் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை 50 சதவீதம். புகைப் பிடிப்பதினால் 10 சதவீதம் பேர் இருதய நோயால் பாதிக்கப்படுகின்றனர்.


* புகைப்பிடிப்பதை நிறுத்தி 15 வருடமான பிறகும்கூட மாரடைப்பு வரலாம். அதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் உள்ளன.
அதிக கொழுப்பு, அதிக சர்க்கரை மற்றும் உப்பு உள்ள உணவை உண்ணுவது இதய நலனுக்கு எதிராவை. இதனால் இதய நோய் மற்றும் வலிப்பு நோய் உண்டாகிறது.


* உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் பிறக்கும் குழந்தைகளில் 10 லட்சம் குழந்தைகள் பிறவியிலேயே இதயக் கோளாறுடன் பிறக்கின்றன. இதயக் கோளாறு என்பது பெரும்பாலும் ஆண்களையும், வயதானவர்களையும் மட்டுமே தாக்கும் என்ற கருத்து பரவலாக உள்ளது. அது தவறு, பெண்கள், குழந்தைகள் உட்பட அனைத்து வயதினருக்கும் இதய பாதிப்பு ஏற்படலாம்.


* உலக அளவில், பத்துக்கு ஒன்று என்ற விகிதாச்சாரத்தில் பள்ளிக் குழந்தைகள் அதிக எடை உள்ளவர்களாக இருக்கிறார்கள். அதிக எடை, இதய நோய் மற்றும் வலிப்பு நோய்கள் வருவதற்கு காரணமாக அமையும்.


🌹கவனிக்க வேண்டியவை:🌹


* சமச்சீர் சத்துகள் உள்ள பழங்களும் காய்கறிகளும் இதய நோய் மற்றும் வலிப்பு நோய் வருவதைத் தடுக்க உதவுகின்றன.


* வெறுமனே உடற்பயிற்சியில் மட்டும் ஈடுபடாமல் தினமும் விளையாடுவது, மதி வண்டிகளை அதிகம் பயன்படுத்துவது, மாடிப்படிகள் ஏறி இறங்குவது உடல்நலத்திற்கு நல்லது.


* சரியான நேரத்தில் சீரான கலோரிகள் கொண்ட உணவை உட்கொள்வது.


* 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் சீரான இடைவெளியில் முழு உடற்பரிசோதனை செய்து கொள்வது நலம்.


* ரத்தத்தின் சர்க்கரை அளவை அடிக்கடி பரிசோதனை மூலம் கவனித்து வருவது


* எண்ணெணய் பண்டங்களை அதிகம் உட்கொள்வதை தவிர்ப்பது.


* நல்ல தூக்கம், அதிக மன அழுத்தம் வராமல் பார்த்து கொள்வது. 


 


இதயம்

இதயம் போல 
படபடக்கும் சிறகொலி தவிர 
சூழ்ந்து நிற்கும் 
பேரமைதியே பேரழகு


நிர்ச்சலனமாய் என்றாலும் 
நிறைந்து நிற்கும் காற்று 
என் 
பேரன்பு போல. 


உணரத்தான் வேண்டும், 
தோல் தடித்த மனங்கள் உணர்தலுக்கு அப்பால்.


சப்தமில்லாமல் நின்று 
கொஞ்சம்  
அமைதியின் இசைப்பையும் 
அன்பின் வழிதலையும் 
அரவணைத்துக்கொள்ளுங்கள்,
அன்பின் விசாலம் புரியும்!


 


 


 #மஞ்சுளா யுகேஷ்.


Monday, September 28, 2020

கன்ஃபூசியஸ்

கன்ஃபூசியஸ் ( தெளிவுபடுத்தியவர்) பிறந்த நாள்/ இன்று -செப்= 28


செப்டெம்பர் 28, கிமு 551 - கிமு 479


♨பல சிற்றரசர்களால் ஆளப்பட்டு, பல்வேறு நாடாகச் சிதறிக்கிடந்த சுமார் இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட சீனம் அது….


பிரபுக்களின் ஆதிக்கத்தினால் மக்கள் சித்ரவதைகளுக்கு ஆளாகி, வரி கொடுக்க முடியாமல் வறுமையில் உழன்றுகொண்டு இருந்தார்கள்.


அந்தச் சமயத்தில் மக்களின் மனசாட்சியாக மாறி, ‘ஒரு நல்ல அரசாங்கம் எப்படி நடக்கேவண்டும்’ என்பது பற்றி, தனது கருத்துக்களை பகிரங்கமாக வெளியிட்டார் கன்ஃபூசியஸ்.👀


‘‘அதிக வரியும், அதிகத் தண்டனைகளும் கொடுங்கோல் ஆட்சியின் இலக்கணங்கள். அரசன் என்பவன் தகுதியினால் தேர்வு டெய்யப்பட வேண்டுமே தவிர, பரம்பரை மட்டுமே தகுதியாக இருக்கக்கூடாது. மக்களுக்கு மகிழ்ச்சியும் நல்வாழ்வும் அளிக்க முடியாத அரசாங்கம், ஆட்சியில் நீடிக்க உரிமை இல்லை’’ என்று உரக்கக் குரல் கொடுத்தார். மக்கள் கூட்டம் கூட்டமாக அவர் பேச்சைக் கேட்க அணி திரள,
அரசன் அதிர்ந்து போனான்.


கன்ஃபூசியைஸக் கைது செய்தால் அசம்பாவிதம் நேரலாம் என யோசித்த அரசன், புத்திசாலித்தனமாக அவருக்கு ‘சட்டத்துறை அமைச்சர்’ ஒரு என ஒரு பதவி கொடுத்து நாட்டின் சட்டங்களை மாற்றும்படி கேட்டான். வேலைக்கு ஆட்கள், பெரும் மாளிகை, கை நிறையச் சம்பளம் எல்லாம் கொடுக்கப்பட்டது.


மக்கள் நலனுக்காக புதிது புதிதாகச் சட்டங்களை இயற்றி மன்னனிடம் ஒப்பைடத்தார் கன்ஃபூசியஸ். ஆனால், எதுவும் நடைமுறைப்படுத்தப்பட வில்லை.


சில வருடங்களிலேயே, இந்தப் பதவியினால் ஒரு பயனும் ஏற்படப் போவதில்லை என்பதைப் புரிந்துகொண்டு, பதவியில் இருந்து விலகிக் கொள்வதாக மன்னரிடம் சொன்னார்.‘‘சீமான் போல வாழ்வதைவிட்டு, ஏன் பிச்சைக்காரனாக வீதியில் திரியவிரும்புகிறீர்கள்’’ எனக் கோபத்துடன் கேட்டார் மன்னர்.


‘‘எது வசதியானதோ ஆதைச் செய்யாதே! எது சரியானதோ அதைச் செய்! என என் மனம் தொந்தரவு செய்கிறது’’ என்று சொல்லிவிட்டு வெளியேறினார்
கன்ஃபூசியஸ்.


அப்பேர்ப் பட்ட கன்ஃபூசியஸ்கிறிஸ்துவுக்கு முன், 551-ம் வருடம் செப்டம்பர் 28‍ம் தேதி பிறந்தபோது, அவரது தந்தையின் வயது 70. தாய்க்கு வயது 15. இவர் பிறந்த மூன்றாண்டுகளில் தந்தையை இழந்தார்.


இவருடைய தத்துவங்கள் கன்பூசியஸம் என அழைக்கப்படுகிறது. இவருடைய தத்துவங்கள் சீனர்கள் தங்களுடைய மத கோட்பாடுகளாகவே பாவித்து பெரும்பாலானவர்களால் பின்பற்றப்படுகிறது. பெரும்பாலான மக்கள் இவருடைய தத்துவங்களின் கோட்பாடுகள் மற்றும் விளக்கங்கள் மதசார்பற்றதாக உள்ளதாக கூறினர். ஆனால் இவருடைய ஆதரவாளர்கள் அந்த கொள்கை தான் கன்பூசிஸத்தின் வெற்றியாக கருதுகின்றனர். ஏனெனில் எந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு மட்டுமே தத்துவம் என்பது பொருந்தாது என்றும் ஆதரவு தெரிவித்தனர். மேலும் மதம் என்பது உலகம் முழுமைக்கும் சமம் எனவும் தெரிவித்தனர். கன்பூசியனிஸம் மக்களின் இறப்பிற்குப் பிறகான சொர்க்க வாழ்க்கைபற்றி எடுத்துரைக்கிறது. ஆனால் இது சில சமயக் கோட்பாடுகளுக்கு எதிராக உள்ளது (முக்கியமாக 'ஆன்மா' போன்றவற்றிற்கு). கன்பூசியஸிற்கு ஜோதிடத்தின் மேல் அதிகமான நம்பிக்கை உண்டு. கடவுள் நன்மை மற்றும் தீமை போன்ற இரண்டையுமே மக்களுக்கு தருகிறார் நல்ல மனிதர்கள் சரியானதை தேர்வு செய்வர். போன்ற இவருடைய தத்துவங்கள், சுய பகுப்பாய்வு, ஒழுக்கசீலர்களைப் பின்பற்றுதல், தீர ஆராய்ந்து முடிவு செய்தல் போன்றவற்றை எடுத்துரைத்தது.பழைய இலக்கியங்கள், அரசியல்,சட்டங்கள், மதக்கோட்பாடுகள் என எல்லாவற்றையும் படித்து, அவற்றைப் பற்றிச் சிந்திப்பதும், விவாதிப்பதும் கன்ஃபூசியஸின் தனிப்பெரும் குணமாக வளர்ந்தது. இளைஞர் ஆனதும், ஆர்வம் உள்ள மாணவர்களுக்குப் பாடம் சொல்லித் தந்தார்.


மதங்கள் எதுவும் மக்கள் துன்பத்துக்குத் தீர்வு சொல்ல்லவில்லை என்பதால்,அவற்ரை புறக்கணித்தார். அடுத்த பன்னிரண்டு ஆண்டுகள், சீனாவில் உள்ள பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்து, மக்கள் மனதில் புரட்சிக் கருத்துகளை விதைத்தார்.


பல நாடுகளின் அரசுகள் அவரைத் தங்கள் எல்லைக்கோட்டுக்குள்ளேயே அனுமதிக்காமல் விரட்டி அடித்தன.


‘ஒவ்வொரு தனிப்பட்ட மனிதனிடமும் தன்மானம், பெருந்தன்மை, கபடமின்மை, உண்மையாக இருத்தல், அன்பு எனும் ஐந்து குணங்கள் இருக்க வேண்டும். அப்போதுதான் தனி மனிதன் இன்பமாக இருக்க முடியும். தனி மனிதன் நிம்மதியாக இருந்தால் நாடும் சிறப்பாக இருக்கும்’ என மனிதர்களின்துன்பங்களுக்குத் தீர்வு சொன்னார் கன்ஃபூசியஸ்.


அதேபோல, வெற்றிபெற்ற மனிதனாக மாறுவதற்கும் அவர் வழி சொன்னார். ‘மனிதர்கள் இயல்பாகவே எளிதான செயல்களைச் செய்யவே ஆசைப்படுகிறார்கள். அது சரியல்ல. வெற்றி பெறேவண்டுமானால், எது வசதியானதோ அதைச் செய்யாதீர்கள்; எது சரியானதோ அதைச் செய்யுங்கள்!’ என்றார்.


அவர் வாழ்வினை மாற்றியதே இந்த மந்திரச் சொல்தான், சீனா முழுவதும் மதம்,சமுதாயம் மற்றும் அரசியலில் பெரும் மாற்றங்கள் உண்டாக்கவும் காரணமாக இருந்தது.


கி.மு.479 ஆம் ஆண்டில் தனது எழுபத்திரண்டாவது வயதில் ஹன்பூசியஸ் மரணமடைந்தார். தனது மரணம் அணிமித்தது தாங்காமல் தவித்த சீடர்களுக்குச் சொன்ன சத்தியவாசகம் இதுதான்: "நாம் செய்த நல்ல விஷயங்கள் என்றும் நிலைத்து நிற்கும். இதை உணர்ந்த மனிதன் மரணத்தைச் சந்திக்கும் போது வருந்தமாட்டான்". சு பு ன்ற இடத்தில் இவர் அடக்கம் செய்யப்பட்ட்டார். இதைச் சுற்றி சீடர்களால் வைக்கப்பட்ட மரங்கள் தற்போது குங் காடாக மாறியுள்ளது. கன்பூசியசின் கொள்கைகளே கன்பூசியம் எனும் பெயரில் பின்பற்றப்படுகின்றன. உண்மையில் இது ஒரு வாழ்க்கைமுறை. 1. நல்ல பண்புகள். • நல்லதைச் செய்ய என்று மனதுக்குள் ஆசைப்பட்டலே போதும் உங்களுடைய கெட்ட குணங்கள் எல்லாம் தலைதெறிக்க ஓடிவிடும்.

 • நல்லதைச் செய்வதற்குத்தேவை நிறைய மனஉறுதி.

 • நீங்கள் எப்போதும் நல்ல வழியிலேயே நடக்க வேண்டும்.

 • நல்ல பண்புகளைக் கற்றுக்கொள்ள வேண்டும்.

 • உயர்ந்த குணங்களைப் பின்பற்றவேண்டும்.

 • கலைகளில் உங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்.

 • நல்ல பண்புள்ளவர்களுக்கு நடுவேதான் நாம் எப்போதும் வாழவேண்டும். மற்ற எதுவும் வாழ்க்கையே இல்லை.


2. நல்லவர்கள் எப்படி இருப்பார்கள் • அவர்களுடைய பேச்சில் புத்திசாலித்தனம் இருப்பார். சுறுசுறுப்பாகச் செயல்படுவார்கள்.

 • ஆர்வத்துடன் உழைப்பார்கள்.

 • சோம்பலாக இருக்கமாட்டார்கள்.

 • பெரியவர்களை மதித்து நடப்பார்கள்.

 • புதிதாகக் கற்றுக்கொள்ள வேண்டும் என ஆர்வமாக இருப்பார்கள்.

 • அன்போடு பழகுவார்கள்.

 • நிலைமாறாமல் இருப்பார்கள்.

 • தங்களைப்பர்றிப் பெருமையடிக்க மாட்டார்கள்.

 • ஜாதி,மதம்,மொழி என்றெல்லாம் வேறுபாடு பார்க்கமாட்டார்கள்.

 • அனைவரையும் அரவணைப்பார்கள்.

 • எல்லோரிடமும் சமமாகப் பழகுவர்.

 • தர்மத்தின் பாதையில் நடப்பார்கள்.

 • சட்டத்தை மதிக்கிறார்கள்.

 • சுதந்திரமாக வாழ்வார்கள்.

 • பொறாமைப்பட மாட்டார்கள்.


3. நல்ல குணம் கிடைப்பதற்கு ஐந்து குணங்கள் • பணிவன்பு

 • சகித்துக்கொள்ளும் தன்மை

 • சக மனிதர்கள் மீது நம்பிக்கை

 • விடாமுயற்சி

 • கருணை


4. மென்மையான குணங்கள் எவை? • மனஉறுதி

 • விடாமுயற்சி

 • மென்மையாகப் பேசுவது


5. கெட்ட குணங்கள் • பாசாங்கு செய்தல்

 • கோபப்படுவார்கள்.

 • சண்டை செய்வார்கள்.

 • வதந்திகளை பரப்புவார்கள்.


6. படிப்பு • சிந்திக்காமல் படித்தால் அந்தப் படிப்பு வீண்

 • படிக்காமல் சிந்தித்தால் அந்த வாழ்க்கையே வீண்

 • உண்மையான அறிவு நமக்குத் தெரிந்தததை தெரியும் எனவும் தெரியாததை தெரியாது எனவும் ஏற்றுக்கொள்வது.

 • நல்ல குணமுள்ள கல்வியாளனாக இருக்கவேண்டும்.

 • ஞானத்தைப் பெறுவதற்கு ஆழமாகவும்,அகலமாகவும் படித்தால் போதாது.படிக்கிற விஷயத்தில் முழுக் கவனத்துடன் இருக்கவேண்டும்.


7. தலைவர் • பதவிக்கு மரியாதை கொடுப்பார்.

 • நம்பிக்கைக்குரியவர்.

 • உயிரைத் துச்சமாக மதிப்பர்.

 • நல்ல ஆட்சிக்கு போதுமான உணவு,ராணுவம்,மக்களின் நம்பிக்கை ஆகியவை தேவை.

 • நல்ல விஷயங்களை பின்பற்றுவார்கள்.

 • அமைதியாக இருப்பார்கள். 1. கடவுள்,கோயில்,சடங்குகள் • கடவுளை கும்பிடும் போது அடக்கம் வேண்டும்.

 • பெற்றோரின் தேவையறிந்து உதவிகள் செய்தல்.


8. வெறும் சில • கெட்டதை எண்ணாதே

 • நேர்மையின் வழியில் நட

 • தன்னடக்கத்துடன் இரு

 • மனஉறுதியுடன் இரு

 • கண்ட நேரத்தில் சாப்பிடாதே

 • வயிறு நிறையச் சாப்பிடாதே.

 • மற்றவர்களின் பொருள்மீது ஆசைபடாதே

 • எளிமையாக இரு

 • தவறு செய்தவர்களை மன்னித்திடு


இந்தியாவின் இசைக்குயில்

: த நைட்டிங் கேர்ள் ஆஃப்


,புகழப்படும் லதா மங்கேஷ்கரின் பிறந்தநாள் இன்று.💐


செப்டெம்பர் 281929)அன்றுபிறந்த இவ்ர் இந்தியாவின் மிகப்புகழ் பெற்ற ஒரு பாடகியாவார். இந்தியாவின் இசைக்குயில் எனப் போற்றப் படுபவர். இந்தியக் குடிமக்களுக்கு (civilian) வழங்கப்படும் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது பெற்ற இரண்டு பாடகர்களில் இவர் ஒருவராவார். இவரது கலையுலக வாழ்க்கை 70 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. நான்கு வயதில் பாடுவதற்கு ஆரம்பித்த இவர் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளா


70 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய இசை ரசிகர்களை இனிமையால் கட்டிப்போட்ட குரல்....


இந்திய அரசின் உயரிய விருதான பாரத ரத்னா, திரையுலகின் உயரிய விருதான தாதா சாகிப் பால்கே, 3 தேசிய விருதுகள், 6 பல்கலைக்கழகங்களின் டாக்டர் பட்டங்கள் இப்படி பல விருதுகளை, அங்கிகாரங்களை தனதாக்கியவர் லதா மங்கேஸ்கர்..


1942 ஆம் ஆண்டு “கிதி ஹசால்” திரைப்படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமாகிய இவர், இந்த 70 ஆண்டுகளில் பாடிய அனைத்து பாடல்களும் ஹிட். அவரின் பாடல்களுக்காகவே பல திரைப்படங்கள் திரையரங்குகளை மாதக்கணக்கில் நிறைத்தன


.1942 முதல் சினிமா துறையில் பாடத்தொடங்கிய அவர், அனில் பிஸ்வாஸ், ஷங்கர் ஜெய்கிஷன், நவ்ஷத், எஸ்.டி. பர்மன், சி. ராம்சந்த்ரா, ஹேமந்த் குமார், சலீம் சவ்திரி, கய்யாம், ரவி, சஜ்ஜத் ஹூசைன், ரோஷன், கல்யாண்ஜி, ஆனந்த்ஜி, வசந்த் தேசாய், சுதிர் பாட்கே, ஹன்ஸ்ராஜ் பெல், மதன் மோகன், மற்றும் உஷா கன்னா, ராகுல் தேவ் பர்மன், ராஜேஷ் ரோஷன், அனு மாலிக், ஆனந்த் மிலிந்த், ஷிவ் ஹரி, ராம் லட்சுமண், ஏ.ஆர் ரகுமான், இளையராஜா என கிட்டத்தட்ட எல்லா இசையமைப்பளர்களுடன் இணைந்து பாடியுள்ளார்.


கிட்டதட்ட 20 மொழிகளில் பாடியுள்ள அவர், அந்தந்த மொழிகளுக்கே உரித்தான பிரத்யேக தொனியிலும், உச்சரிப்பிலும் மிகுந்த கவனம் செலுத்தியவர். கமல்ஹாசன், அமலா நடிப்பில் உருவான ”வளையோசை கலகலவென” பாடல் இன்றளவும் தமிழ் ரசிகர்களால் நினைவு கூறப்படுவதற்கு லதா மங்கேஷ்வரின் குரல் ஒரு முக்கிய காரணம் என்பதை மறுப்பதற்கில்லை.


பாடல்களை தவிர்த்து “வாடல்” உள்ளிட்ட சில திரைப்படங்களையும் தயாரித்துள்ள லதா மங்கேஷ்கர் “ராம் ராம் பவ்ஹான” என்ற திரைப்படத்தின் மூலம் இசையாமைப்பாளராகவும் புதிய அவதாரம் எடுத்தார்


958 ஆம் ஆண்டு சலீம் சவுத்ரி இசையமைத்து வெளிவந்த “மதுமதி” என்ற திரைப்படத்தில், இவர் பாடிய “ஆஜா ரெ பரதேசி” என்ற பாடல், இவருக்கு முதல் ஃபிலிம்பேர் விருதினை பெற்றுத்தந்தது. பிறகு, 1961 ல் ஹேமந்த் குமார் இசையமைத்த “பீஸ் சால் பாத்” திரைப்படத்தில் “கஹின் தீப் ஜலே கஹின் தில்” என்ற பாடல் இவருக்கு இரண்டாவது ஃபிலிம்பேர் விருதினை பெற்றுத்தந்தது. 1973 ஆம் ஆண்டு, ஆர்.டி பர்மன் இசையமைத்து வெளிவந்த “பரிஜாய்” என்ற திரைப்படதில் இவர் பாடிய “பீதி நா பிட்டை” என்ற பாடல் சிறந்த பின்னனி பாடகருக்கான முதல் “தேசிய விருதை” பெற்றுத்தந்தது. 1969 ஆம் ஆண்டு “பத்ம பூஷன் விருது” வழங்கப்பட்டது. 1972 ஆம் ஆண்டு பீட்டி நா பிடாய் ரெய்னா (பரிஜாய்) என்ற பாடலுக்காக தேசிய விருது வழங்கப்பட்டது. 1974 ஆம் ஆண்டு உலகளவில் அதிக பாடல்களை பாடியதற்காக “கின்னஸ் புத்தகத்தில்” இடம் பிடித்தார். 1975 ஆம் ஆண்டு ரூதே ரூதே பியா (கோரா காகஸ்) என்ற பாடலுக்காக தேசிய விருது வழங்கப்பட்டது. 1989 ஆம் ஆண்டு “தாதா சாஹேப் பால்கே விருது” வழங்கப்பட்டது. 1990 ஆம் ஆண்டு யாரா சீலி சீலி (லேகின்) என்ற பாடலுக்காக தேசிய விருது வழங்கப்பட்டது. 1993 ஆம் ஆண்டு பிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருது. 1996 ஆம் ஆண்டு ஸ்டார் ஸ்க்ரீன் வாழ்நாள் சாதனையாளர் விருது. 1997 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி விருது. 1999 ஆம் ஆண்டு “பத்ம விபூஷன் விருது” வழங்கப்பட்டது. 1999 ஆம் ஆண்டு என்.டி.ஆர் விருது மற்றும் வாழ்நாள் சாதனையாளருக்கான ஜீ சினிமா விருது. 2000 ஆம் ஆண்டு லண்டனிலுள்ள ஐ.ஐ.எப்.ஏ மூலம் வாழ்நாள் சாதனையாளர் விருது. 2001 ஆம் ஆண்டு ஹீரோ ஹோண்ட மற்றும் ஸ்டார்டஸ்ட் இதழ் மூலமாக சிறந்த பின்னனி பாடகருக்கான மில்லேனியம் விருது வழங்கப்பட்டது. 2001 ஆம் ஆண்டு “நூர்ஜஹான் விருது” வழங்கப்பட்டது. 2001 ஆம் ஆண்டு “மகாராஷ்டிரா ரத்னா விருது” வழங்கப்பட்டது. 2001 ஆம் ஆண்டு “பாரத் ரத்னா விருது” வழங்கப்பட்டது. ஆஜா ரெ பர்தேசி (மதுமதி 1958), கஹி தீப் ஜலே கஹி தில் (பீஸ் சால் பாத் 1962), தும்ஹீ மேரே மந்திர் தும்ஹீ மெரி (க்ஹண்ட 1965), ஆப் முஜிகே அசே லக்னே லகே (ஜீனே கி ராஹ் 1969), தீதி தேரா தீவார் தீவானா (ஹம் ஆப்கே ஹே ஹைன் கோன் 1994) போன்ற பாடலுக்காக ஃபிலிம்பேர் விருது வழங்கப்பட்டது. லதா மங்கேஷ்கர் அவர்கள், பெங்கால் திரைப்பட பத்திரிக்கையாளர் கழக விருதுகள் என மேலும் பல விருதுகளை பெற்று, இன்றளவும் புகழ் பெற்ற பாடகியாக விளங்கி வருகிறார். 


1999ஆம் ஆண்டு லதா மங்கேஷ்வரை மாநிலங்களவை உறுப்பினராக்கிய இந்திய அரசு, ஓராண்டு இடைவெளியில் நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னாவை வழங்கியும் கௌரவித்தது. 


இந்திய இசையுலகில் தனித்த அடையாளத்துடன் வலம் வரும் ”ஆஷா போஸ்லே” லதா மங்கேஷ்கரின் சகோதரி என்பது கூடுதல் தகவல்.


 


அவர் பாடிய சில பாடல்களை சேட்கஜெயந்தி


Sunday, September 27, 2020

உலக சுற்றுலா தினம்

செப்டெம்பர் 27,
வரலாற்றில் இன்று.


உலக சுற்றுலா தினம் இன்று.


உலக சுற்றுலா நிறுவனத்தின் ஆதரவில் செப்டெம்பர் 27ஆம் நாளில், 1980ஆம் ஆண்டிலிருந்து உலகெங்கும் இத்தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 


1979இல் ஸ்பெயினில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் உலக சுற்றுலா நிறுவனத்தின் மூன்றாவது பொது அவைக்கூட்டத்தில் இதற்கான தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.


சுற்றுலாவின் முக்கியத்துவத்தை உலகெங்கும் எடுத்துக்காட்டவும்,
சுற்றுலா எப்படி மக்களின் சமூக, கலாச்சார, அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை எடுத்துக்காட்டவும் இத்தினம் சிறப்பிக்கப்பட்டு வருகிறது.         "ஆயிரம் தடவைகள் ஒரு விடயத்தினை காதால் கேட்டுக் கொண்டிருப்பதைக் காட்டிலும் ஒரு தடவையாயினும் கண்களால் பார்த்து விடு" என்பார்கள். என் பயணங்கள் அனைத்திற்கும் பின்னால் உள்ள உத்வேகமும், உற்சாகமும் இதுதான். ஞாபகங்களை மட்டுமே மீட்டக் கூடிய வயதுகளில் அனுபவங்களை தேடி அலைய முடியாது என்பதை நான் அறிவேன். 


அவ்வயதுகளில் எனக்கு வாழக் கிடைத்தாலும் நீர் வீழ்ச்சிகளையும், மலைகளையும், காடுகளையும் என்னால் ஒரு தூரத்தில் காருக்குள்ளோ, வேனிற்குள்ளோ இருந்து பார்க்கத்தான் முடியும். அவற்றின் கரடு முரடான பாதைகள் தருகின்ற இன்பமான வலிகளையும், உச்சிகள் மட்டுமே ஒழித்து வைத்திருக்கின்ற காட்சிகளையும் எவ்விலை கொடுத்தும் என்னால் வாங்கிட முடியாது. 


உடல் வியர்த்து, கால் கடுத்து, கைகளில் சிராய்ப்புகளோடு ஏறி ஒரு மலையின் உச்சியை அடைந்ததும் மனதினை வருடும் சந்தோசத்தினையும், உடலை வருடுகின்ற குளிரினையும் ஒன்று சேர யாரேனும் அனுபவித்திருக்கின்றீர்களா?  கண்களை வியக்க வைக்கும் அக்காட்சிகளை கணாது வெறுமனே பணத்திற்காக வாழ்ந்து போனவர்கள் எல்லாமே என் பார்வையில் துர்ப்பாக்கியசாலிகள்தான். 


மலைகளுக்கும், காடுகளுக்கும் ஒரு பண்பு இருக்கின்றது.  ஒவ்வொரு மலையும், காடும் செல்வதற்கு இன்னும் பல மலைகளும், காடுகளும் உண்டு என்ற ஆசைத் தீயினைத்தான் மனதில் பற்ற வைத்துச் செல்லும். எந்தப்பயணமும் மனதில் போதுமென முற்றுப் புள்ளி இட்டு திருப்தியடைந்ததில்லை. ஏன் மரணம் கூட முற்றுப் புள்ளியில்லா ஒரு தொடர் பயணம்தான். 


ஒவ்வொரு பயணமும் ஒரு ஆசான். வாழ்வில் எங்கேயோ தேவைப்படும் ஏதோவொரு பாடத்தை அவை சொல்லித் தந்து கொண்டேதான் இருக்கின்றன. கிடைத்தவற்றில் திருப்திப்படவும், தன்னைத்தானே நம்பிடவும், தைரியமாய் முடிவெடுத்திடவும் சொல்லிக் கொடுத்தவை இப் பயணங்கள்தான்.


பயணங்கள் அற்புதமானவை... அவைதான் சுதந்திரத்தையும், உள்ளுணர்வையும், உடல் பலத்தினையும் காட்டித் தருபவை...


 


அதிசயம் நிறைந்த இடங்கள்  எங்கும் நிறைந்துள்ளது...


வருடம் முழுவதும் 
உழைத்ததின் பலனாய்
குடும்பத்தோடு கொண்டாடி
சுற்றுலா சென்று ஆனந்தம் கொள் ளலாம்...


இல்லாளின் முகத்தில் 
இன்பத்தை பார்க்கலாம்...


குழந்தைகள் முகத்தில் 
குதூகளம் பார்க்கலாம்...


பெரியோர்கள் முகத்தில் 
பரவசம் காணலாம்...


பார்த்து வந்த இடங்களை 
பட்டியலிட்டு அசை போட்டுக்கொண்டே 
அடுத்தடுத்த தினங்கலெல்லாம் 
அழகாய் செல்லும் 
மகிழ்ச்சியை பார்க்கலாம் ...


 துன்பம் கவலைகளை
 மறந்து 
சுற்றி பறக்கும் பறவை போல‌ 
சுற்றுலா சென்று 
நாமும் சுகமாய் வருவோம்..


மஞ்சுளா யுகேஷ்.சோளச் சுண்டல்

சோளச் சுண்டல்

 

         புரட்டாசி மாதத்தில் வரும் நவராத்திரி தினங்களில் மாலை வேளையில் முப்பெரும் தேவியருக்கு விதவிதமான நைவேத்தியங்கள் செய்து படைப்பது வழக்கம்.

அதிலும் ஒன்பது நாளும் ஒன்பது விதமான சுண்டல்கள் செய்து படைத்து எல்லோருக்கும் விநியோகிப்பது நல்லது.

ஏராளமான சத்துகள்கொண்ட சோளத்தில் சுண்டல் செய்து உண்பது என்பது வித்தியாசமானதும் சுவையானதும்கூட.

தேவையானவை:-

அதிகம் முற்றாத சோளம் - ஒன்று

மிளகு - ஒரு டீஸ்பூன்

தேங்காய்த் துருவல் - அரை கப்

எண்ணெய் - 3 டீஸ்பூன்

உப்பு - 2 சிட்டிகை

செய்முறை:-

சோளத்தை உரித்து முத்துகளை எடுத்து அலசி உப்பு சேர்த்து வேகவைத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெயில்லாமல் தேங்காய்த் துருவலை வறுத்து எடுத்துக்கொள்ளவும். அதே கடாயில் எண்ணெய்விட்டு சோள முத்துகளைப் போட்டு வதக்கி, பொடித்த மிளகைச் சேர்த்துக் கிளறி இறக்கவும். இதில் தேங்காய்த் துருவல் தூவிக் கலந்து அம்பிகைக்குப் படைக்கலாம். மாங்காய்த் துருவல், கொத்தமல்லித்தழை தூவினால் இன்னும் சுவை கூடும்.


 


மஞ்சுளாயுகேஷ்

இசை, பிரியாது!

இசை, பிரியாது!


காலவரையின்றி
கனமானக் குரல் கொண்டு
மிதமாகத் தாலாட்டியப் பாடல்
'ஸ்கிரீச்'சிடாமல் திக்கியோடி
ஐம்பது நாளில் நின்று போக,
'பிளே' பட்டனை அழுத்தியவனே
'இஜெக்ட்'டையும் அழுத்தினானோ?


பலப் பெண்களுக்கு 'நானா'வாக
திகழ்ந்த காந்தக் குரல்
ஒரு 'நாடா'வாக அறுப்படும்
என வூஹான் சந்தையிலேச்
சொல்லியிருந்தால் கூட
நம்பியிருக்கமாட்டோமே!


இத்தனைக் கோடி இருதயங்களையும்
தூக்கி நிறுத்தியவனை,
பட்டாடைப் போர்த்திப் பாராட்டி
மகிழ்ந்தோமே...
அவனைத் தலைக்கு மேல்
தூக்கியாடும்
பலமும் 
பாக்கியமும் 
என்னவோ
கடவுள்,
'கொரோனா'க்குத்தான்
கொடுத்தானோ!


உனையுண்ட
இக்கிருமி
இனி 
கொடூரத்தை இழந்திடுமே!


குழியில் புதையுண்டது
அவரல்ல,
வைரஸாக்கும்!!
"மண்ணைக் கவ்வியது கோவிட்19"
SPB யின் உயிர்ப் பிரியவில்லை,
ப...ர...வி...ய...து
இன்று!!!


- M மிருத்திகா


Saturday, September 26, 2020

சபரிமலையில் டோலி தூக்குவோர் காலை தொட்டு வணங்கிய எஸ்.பி.பி.

 


சபரிமலையில் டோலி தூக்குவோர் காலை தொட்டு வணங்கிய எஸ்.பி.பி.சென்னை: சபரிமலைக்கு பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் சென்ற போது தன்னை டோலியில் தூக்கிச் சென்றவர்களின் காலை தொட்டு வணங்கிய வீடியோ வரைலாகி வருகிறது.

மறைந்த பிரபல பாடகர் பன்முகத்தன்மை கொண்டவர் அது மட்டுமல்லாது சபரிமலை கோவிலுக்கும் அடிக்கடி சென்று வந்துள்ளார். அவர் சபரிமலைக்கு செல்லும் போதெல்லாம் டோலியில் பயணிப்பது வழக்கம். அவ்வாறு அவர் டோலியில் பயணிக்கும் முன்பாக டோலி தூக்குவோரின் கால்களை தொட்டு வணங்கிய பின்னரே டோலியில் அமர்வதை வழக்கமாக வைத்துள்ளார். அதன் வீிடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.
latest tamil news  


பெரியோர்களுக்கும் இறைவனுக்கு சேவை செய்வோருக்கும் மரியாதை தரும் வழக்கம் இந்தகால இளைஞர்களிடம் குறைந்து வருகிறது. அதே நேரத்தில் பெரிய பாடகராக இருந்தும் சாதாரண டோலி தூக்குவோரின் கால்களை கூட எஸ்.பி.பி., தொட்டு வணங்குவது இந்த கால இளைஞர்களுக்கு ஒரு பாடம்.
முதலும் கடைசியும்

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தமிழில் பாடி முதலில் வெளியான பாடல் எம்.ஜி.ஆரின் ‘அடிமைப்பெண்’ படத்தில் இடம் பெற்ற ஆயிரம் நிலவே வா.


இந்த பாடலை அவர் பி.சுசீலாவுடன் இணைந்து பாடினார். 

இந்த பாடலுக்கு இசையமைத்தவர் திரை இசைத்திலகம் கே.வி.மகாதேவன்.


 


எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கடைசியாக, ரஜினிகாந்த் நடிக்கும் ‘அண்ணாத்த’ படத்துக்காக இமான் இசையமைப்பில் பாடி உள்ளார்.

 அந்த பாடல் இனிமேல்தான் வெளியாகும்.

 


சாதனை திலகம்

மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்   


 


தனது அரை நூற்றாண்டுகால திரை வாழ்க்கையில் மறைந்த பாடகர்  எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நிகழ்த்திய சாதனைகள்


image.png


 

எஸ்.பி.பி 16 மொழிகள் மற்றும் 40,000-க்கும் மேற்பட்ட பாடல்கள் பாடி கின்னஸ் உலக சாதனையில் இடம்பிடித்து உள்ளார். 

 

இயக்குநர் கே.பாலச்சந்தர் தான் இயக்கிய ஏக் துஜே கேலியே படத்தின் மூலம் எஸ்.பி.பி-யை இந்தியில் அறிமுகம் செய்தார். அப்போது எஸ்.பி.பி-க்கு இந்தி துளியும் தெரியாது. எனினும் அப்படத்தில் வரும் 'தேரே மேரே பீச் மெயின்' பாடலை உணர்வுப்பூர்வமாக பாடியதற்காக அவருக்கு தேசிய விருது கிடைத்தது.

 

எஸ்.பி.பி 6 முறை (1979, 1981, 1983, 1988, 1995, 1996) சிறந்த பாடகருக்கான தேசிய விருது பெற்றுள்ளார். 

 

மத்திய அரசு வழங்கும் பத்ம ஸ்ரீ (2001), பத்ம பூஷன்(2011) விருதுகளை பெற்றுள்ளார். 

 

எஸ்.பி.பி தொடரந்து 12 மணி நேரம் பாடியும் சாதனை படைத்துள்ளார்.

 

தனது அரை நூற்றாண்டுகால திரை வாழ்க்கையில் ஆறு தேசிய விருதுகள், 25 நந்தி விருதுகள், 4 தமிழக அரசு விருதுகள் என 50-க்கும் மேற்பட்ட விருதுகளை எஸ்.பி.பி வாங்கி குவித்துள்ளார். ஆனால் அதைவிட கோடிக்கணகான உள்ளங்களை வென்றிருக்கிறார்.

 

1981-ஆம் ஆண்டு பிப்ரவரி 8-ஆம் தேதி, ஒரே நாளில் 21 பாடல்களை கர்நாடக இசையமைப்பாளர் உபேந்திராவுக்காக பாடியவர் எஸ்.பி.பி.

 

பாடகராக மட்டும் இல்லாமல் நடிகர், தயாரிப்பாளர் மற்றும் இசையும் அமைத்துள்ளார் எஸ்.பி.பி. ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனுக்கும் டப்பிங்கும் கொடுத்துள்ளார். 

 

எஸ்.பி.பி இயற்பெயர் ஸ்ரீபதி பண்டிதராத்யுலா பாலசுப்பிரமண்யம் 

 

1946 ஜூன் 4 ஆம் தேதி தமிழ்நாடு கொனெட்டம்பேட்டை கிராமத்தில் பிறந்த எஸ்.பி.பாலசுப்பிரமண்யம் அவரது இரத்தத்தில் கலை மரபணுக்களைக் கொண்டிருந்தார். அவரது தந்தை மறைந்த எஸ்.பி. சம்பமூர்த்தி முதன்மையாக ஹரிகதா கலைஞராக இருந்தார், அவர் நாடகத்திலும் நடித்து வந்தார்.

 

சிறு வயதிலேயே அவர் இசை மீது ஆர்வத்தை வளர்த்துக் கொண்டாலும், அதனை கற்றுக் கொண்டாலும், அவர் ஒரு இன்ஜினியராக வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆந்திராவின் ஜே.என்.டி.யு பொறியியல் கல்லூரியில் சேர்ந்தார்.ஆனால் டைபாய்டு காய்ச்சல் காரணமாக அவர் படிப்பை பாதியில் நிறுத்தினார். ஆனால் பின்னர் சென்னையில் உள்ள பொறியாளர்களின் நிறுவனத்தில் இணை உறுப்பினராக சேர்ந்தார்.

 

எஸ்.பி.பியின் பின்னணி பாடகராக 1966 ஆம் ஆண்டில் அறிமுகமான தெலுங்கு திரைப்படமான 'ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மரியாத ராமண்ணா'வுக்கு குரல் கொடுத்தார், அதன் பின்னணி இசை அவரது வழிகாட்டியான எஸ்.பி. கோதண்டபாணி வழங்கினார்.

 

பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் ஆரம்ப காலத்தில் தனது தமிழ் உச்சரிப்புக்காக முதலில் புறக்கணிக்கப்பட்டவர். ஒரு வருடத்தில் அனைவரையும் தன் குரலுக்காக ஏங்க வைத்தவர் எஸ்.பி.பி.

 

இசையமைப்பாளர் எம்.எஸ் விஸ்வநாதனின் அறிவுரைப்படி, ஒரு வருட கால பயிற்சிக்கு பிறகு அவர் பாடத் தொடங்கியபோது, தமிழை தாய்மொழியாக கொண்ட பாடகர்கள் பெரும் வியப்பில் ஆழ்ந்தார்கள்.

 

சக கலைஞர்களை நேசித்தவர் எஸ்.பி.பி. பாடகர் ஜேசுதாஸ் சினிமாவில் 50 வருடங்களை நிறைவு செய்ததற்காக நிகழ்த்தப்பட்ட ஒரு நிகழ்வில், பாதை பூஜை செய்து மரியாதை செய்தார்.
எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் முத்தான பாடல்கள்

எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் முத்தான பாடல்கள்
எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் முத்தான பாடல்கள்

 

 

செப்டம்பர் 26,  2020 

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அனைத்து மொழிகளிலும் பாடிய 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களும் மனதை விட்டு நீங்காத முத்தான பாடல்கள். அவற்றில் சில...

ஆயிரம் நிலவே வா, கம்பன் ஏமாந்தான், கடவுள் அமைத்து வைத்த மேடை, பாடும் போது நான் தென்றல் காத்து, அவள் ஒரு நவரச நாடகம், இயற்கை எனும் இளைய கன்னி, முத்து மணி மாலை, இது ஒரு பொன்மாலை பொழுது, ராஜா என்பார் மந்திரி என்பார், நதி ஓரம், யாதும் ஊரே யாவரும் கேளீர்.

மங்கையரில் மகராணி, தென்மதுரை வைகை நதி, என் கண்மணி உயிர் காதலி, ஆவாரம் பூவு ஆறேழு நாளா, யமுனா நதி இங்கே ராதை முகம் இங்கே, அப்பனே அப்பனே பிள்ளையார் அப்பனே, இருமனம் கொண்ட திருமண வாழ்வில், தேன் சிந்துதே வானம், சம்சாரம் என்பது வீணை, நிலவே நீ சாட்சி மன நிம்மதி நாடும், மடை திறந்து தாவும் நதி அலை நான், இலக்கணம் மாறுதோ, நான் என்றால் அது அவளும் நானும், வானுக்கு தந்தை அவனே, மண்ணில் இந்த காதல் இன்றி, மன்றம் வந்த தென்றலுக்கு, ராகங்கள் பதினாறு உருவான வரலாறு, காதலின் தீபம் ஒன்று ஏற்றினாளே என் நெஞ்சில்.

காதலெனும் தேர்வெழுதி, கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட, கண்மணியே காதல் என்பது கற்பனையோ, ஓ நெஞ்சே நீதான் பாடும் கீதங்கள், கண்டுபிடிச்சேன் கண்டுபிடிச்சேன் காதல் நோயை கண்டுபிடிச்சேன், நான் பொல்லாதவன், நீல வான ஓடையில், நிலாவே வா செல்லாதே வா, ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது, ஆணென்ன பெண்ணென்ன நீயென்ன, தேவி ஸ்ரீதேவி ஒரு திருவாய், என்னடி மீனாட்சி, சங்கீத மேகம், வளையோசை கலகல வென கவிதைகள், சங்கீத ஜாதி முல்லை, இளைய நிலா பொழிகிறதே, வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ, ஒருவன் ஒருவன் முதலாளி, தங்கத்தாமரை மகளே, பனிவிழும் மலர் வனம், சத்தம் இல்லாத தனிமை கேட்டேன். மலரே மவுனமா, வந்தேண்டா பால்காரன், தகிட ததிமி தகிட ததிமி தந்தானா, அந்தி மழை பொழிகிறது, காதல் ரோஜாவே.

இவை போன்ற பல அருமையான பாடல்களை அவர் பாடி இருக்கிறார்.

 Friday, September 25, 2020

ஆன்லைன் வாய்ப்பு இல்லாதவர்களுக்கு ஆசிரியை ஆன 8-ம் வகுப்பு பழங்குடியின மாணவி

ஆன்லைன் வாய்ப்பு இல்லாதவர்களுக்கு ஆசிரியை ஆன 8-ம் வகுப்பு பழங்குடியின மாணவி


செப்டம்பர் 25, 2020 13:16 IST


கோவை அருகே ஆன்லைனில் பாடம் கற்கமுடியாத மாணவர்களுக்கு 8-ம் வகுப்பு பழங்குடியின மாணவி வகுப்பு எடுத்து வருகிறார்.


 


மாணவர்களுடன் அனாமிகா


கோவை:

தமிழகம்- கேரள எல்லையில் உள்ளது அட்டப்பாடி பழங்குடியினர் மலை கிராமம். இங்கு வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு மின்சாரம், சாலை வசதி உள்ளிட்டவைகள் இல்லை.செல்போன், டி.வி. இல்லாதததால் கொரோனா காலத்தில் ஆன்லைன் வகுப்பில் இங்குள்ள மாணவர்களால் கல்வி கற்க முடியாமல் அவதியடைந்தனர்.

இதே பகுதியில் உள்ள சோலையூரை சேர்ந்த கூலித்தொழிலாளி சுதிர். இவரது மனைவி சஜி. இவர்களின் மூத்த மகள் அனாமிகா (வயது 14). இவர் திருவனந்தபுரத்தில் உள்ள உண்டு உறைவிட பள்ளியில் தங்கி 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.

கொரோனா ஊரடங்கில் விடுதியில் தங்கியிருந்த அனாமிகா ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் சொந்த ஊருக்கு வந்தார். இங்கு மின்சாரம் மற்றும் ஸ்மார்ட்போன் இல்லாததால் அனாமிகா ஆன்லைனில் பாடம் கற்கமுடியாமல் சிரமம் அடைந்தார்.

இதே நிலை நீடித்தால் கல்வியை இழக்க வேண்டும் என்று பயந்த அனாமிகா தனது தந்தையின் உதவியோடு கூரைகளால் ஒரு வகுப்பறையை உருவாக்கினார். தன்னை போலவே ஆன்லைனில் பாடம் கற்கமுடியாத மாணவர்களை வீடுவீடாக தேடிச்சென்று தான் உருவாக்கிய வகுப்பறைக்கு பாடம் படிக்க வருமாறு அழைப்பு விடுத்தார்.

அதன்படி அந்த கிராமத்தில் படித்து வரும் 10 மாணவ, மாணவிகள் படிக்க முன் வந்தனர். மாணவி அனாமிகாவுக்கு அவரது பள்ளியில் தமிழ், மலையாளம், ஆங்கிலம், ஜெர்மனி ஆகிய 4 மொழிகள் கற்றுக்கொடுக்கப்படுகிறது. அதனை இங்குள்ள மாணவ, மாணவிகளுக்கும் அதே மொழிகளையும் கற்றுக்கொடுத்து வருகிறார்.

தனது வகுப்பறையில் குழந்தைகளை அமர வைத்து பாடம் நடத்துகிறார். அவர்களது சந்தேகங்களை தீர்த்து வைக்கிறார். மேலும் தனது பாடங்களையும் அனாமிகா கற்று வருகிறார். மாணவியின் இந்த முயற்சி அந்த பகுதியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.வைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய் சட்னி

    
 

வைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய் சட்னி


24-09- 2020


நெல்லிக்காயில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும். இரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக்க உதவும். மற்றும் இன்சுலின் சுரப்பையும் தூண்ட செய்யும். இது நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்தது.


 


நெல்லிக்காய் சட்னி


தேவையான பொருட்கள் :

பெரிய நெல்லிக்காய் - 6,


தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 4,
உப்பு - தேவையான அளவு.

தாளிக்க:

கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன்,
கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு,
பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்,
எண்ணெய் - சிறிதளவு. 

செய்முறை:

பெரிய நெல்லிக்காயை கொட்டை நீக்கி, சிறுசிறு துண்டுகளாக நறுக்கவும்.

இதனுடன் தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து மிக்சியில் நன்றாக அரைக்கவும்.

தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை எண்ணெயில் தாளித்து துவையலில் சேர்த்துப் பயன்படுத்தவும்.


உடலுக்கும் மிகவும் நல்லது இந்த நெல்லிக்காய் சட்னி.


 எஸ்.பி.பி. ஒரு சகாப்தம்

இசையால் என்றென்றும் வாழ்வார்


                             எஸ்.பி.பி. ஒரு சகாப்தம்


25-09-2020


பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். 74   வயதான அவர் கடந்து வந்த பாதையைப் பார்ப்போம். .


 


எஸ்.பி.பாலசுப்ரமணியம்


ஆந்திராவில் பிறந்து வளர்ந்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் என இந்தியாவின் அனேக மொழிகளிலும் பாடி ஒட்டுமொத்த தேசத்தின் குரலாக ஒலித்தவர். இதுவரை எஸ்.பி.பாலசுப்ரமணியம் வென்றுள்ள ஆறு தேசிய விருதுகளும் 4 வித்தியாசமான மொழிகளில் இருந்து கிடைத்தது என்பது எஸ்.பி.பியின் பன்மொழி திறனுக்கு சான்று.


40 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ள எஸ்.பி.பாலசுப்ரமணியம் உலகின் அதிக பாடல்கள் பாடிய பாடகர் என்ற சாதனைக்காக கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். மேலும் ஒரே நாளில் 21 பாடல்களை பாடிய பாடகர் என்ற தகர்க்க முடியாத சாதனை ஒன்றையும் தன்வசப்படுத்தி இருக்கிறார்.


 


 


ஆரம்பத்தில் மோசமான தமிழ் உச்சரிப்புக்காக புறந்தள்ளப்பட்ட எஸ்.பி.பி, பின்னர் எம்எஸ்வி-யின் ஆலோசனைக்கு இணங்க ஓராண்டு பயிற்சி பெற்று தமிழ் சினிமாவில் பாடும் வாய்ப்பை பெற்றார். அதன்பின் கிடைத்த முதல் வாய்ப்பில் இருந்து இன்றுவரை 54 ஆண்டுகளாக எல்லா மொழிகளிலும் சரியான உச்சரிப்புடன் பாடும் பாடகர் என்ற சிறப்பைப் பெற்றார்.


 


எம்.எஸ்.விஸ்வநாதன் தமிழ் சினிமாவில் கோலோச்சி வந்த காலகட்டத்தில் அறிமுகமான எஸ்.பி.பாலசுப்ரமணியம், இளையராஜா இசையமைப்பாளராக வலம் வந்த நேரத்தில் உச்சத்தில் இருந்து வந்தார். பின்னர் ஏ.ஆர்.ரகுமான் தலைமுறையிலும் தன்னை தக்க வைத்துக்கொண்டு தற்போது இளம் இசையமைப்பாளராக இருக்கும் அனிருத் வரை பல தலைமுறை இசையமைப்பாளரை கடந்தும் தனது தன்னிகரில்லாத கம்பீரக்குரலால் ரசிகர்களை வசீகரித்தவர்.


 


 


பாடகராக தமிழ் சினிமாவில் உச்சத்தில் வலம் வந்தபோது நடிகராக பல திரைப்படங்களில் நடித்துள்ள எஸ்.பி.பாலசுப்ரமணியம் புதிய முயற்சிகளை முயன்று பார்ப்பதில் எப்பொழுதும் ஆர்வம் காட்டியவர். கேளடி கண்மணி திரைப்படத்தில் மண்ணில் இந்த காதலன்றி பாடலையும், அமர்க்களம் திரைப்படத்தில் சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் பாடலையும் மூச்சுவிடாமல் பாடி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறார்.


 


இதுபோக பத்மஸ்ரீ, பத்மபூஷன் ஆகிய இந்திய அரசின் மிக உயரிய விருதுகள் எஸ்.பி.பி-யின் திரை பயணத்தை அலங்கரிக்கின்றன. அரை நூற்றாண்டுக்கும் அதிகமாக தமிழ்சினிமாவை ஆக்கிரமித்துள்ள எஸ்பிபியின் காந்தக் குரல் மீண்டும் நலமுடன் எழுந்து வந்து அதே வசீகரத்துடன் ஒலிக்க வேண்டும் என்பதே எல்லோரது விருப்பமாகவும் இருந்தது.


 


கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதில் இருந்து, சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், உலகெங்கும் இருக்கும் ரசிகர்கள் எஸ்.பி.பி. நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என்று பிரார்த்தனை செய்தார்கள். அவரின் குரல் மீண்டும் ஒலிக்காதா என்று ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், அவர் இன்று (செப் 25) பிற்பகல் 1.04 மணிக்கு காலமானார். அவர் இறந்தாலும், அவர் பாடிய பாடல்கள் பல தலைமுறைகள் கேட்கும்.


....செ ஏ துரைபாண்டியன்


 


உங்கள் பாடல்களில் உங்கள் ஸ்பரிசத்தை உணர்வோம்

            உங்கள் பாடல்களில் உங்கள் ஸ்பரிசத்தை உணர்வோம்


                                                     ----  இயக்குனர் பிருந்தா சாரதி


 


   


ந்த உலகம் இறந்த  பிறகு பலருக்கும்  நல்ல மனிதர் என்று பட்டம் கொடுக்கும். சாவு கொடுக்கும் சலுகை அது. ஆனால் வாழும்போதே நல்ல மனிதர் என்று பெயரெடுத்தவர் எஸ். பி. பி. அவர்கள். அது மிகவும் கடினம் . உண்மையிலேயே உள்ளும் புறமும் ஒன்றாக இருக்க வேண்டும். அந்தக் குணம் எஸ். பி. பி. இடம் இருந்தது. 


அவர் மேடைக்கு வந்தால் அங்கு ஒரு ஈரக் காற்றடிக்கும்.  அன்பு அலையடிக்கும். அவரது புன்னகை எல்லா முகங்களிலும் ஒளியேற்றும். பாடல்களால் இதயத்தை வருடுவார். பின் நல்ல வார்த்தைகளால் நம் உயிரைத் தொட்டுவிடுவார். 


அவர் பாடல் கேட்காத நாளே இந்த அரை நூற்றாண்டில் இல்லை. இனியும் பல நூற்றாண்டுகள் இருக்கப் போவதில்லை. 


நேரில் பார்க்காத ஒருவரைக் கூட தம் குடும்ப உறுப்பினராக அவரை நினைக்க வைத்தார். எவ்வளவு நல்ல மனிதர்! தனக்குச் சமமாக அனைவரையும் மதிக்கக் கூடியவர்.


அதுதான் இன்று கவிந்திருக்கும் இந்த சோகத்திற்குக் காரணம். 


கந்தர்வக் குரல் கொண்ட அந்த மாபெரும் பாடகன் 40000 பாடல்களுக்கு மேல் பாடிவிட்டார். இந்திய மொழிகள் பலவற்றில் பாடிவிட்டார். ஆங்கிலத்தில் கூட பாடியிருக்கிறார். உயிரே உனக்காக படத்தில்( I want to be a rich man ) .ஓய்வின்றிப் பாடினார் . பல படங்களில் நடித்தார். பல நட்சத்திரங்களுக்கு டப்பிங் குரல் கொடுத்தார். ஆனால் ஒரு துளி கர்வமும் வரவில்லையே! எப்படி? ஆச்சரியமாக இருக்கிறது. அவர் ஓர் அழகான குழந்தை... வளர்ந்த குழந்தை.


அவரது இழப்பு நெருங்கிய ஒருவரின் இழப்பாக தென்னிந்தியா முழுவதும் பரவியிருக்கிறது. 


இந்திய சினிமாவின் சாதனை சரித்திரத்தில் ஒன்றை இழந்துவிட்டோம்.
அதைவிட மேலாக நம் இசைத் தோழனை இழந்து விட்டோம். உயிரின் நண்பனைப் பறிகொடுத்தோம்.


இதோ வானமும் இருள்கிறது. குமுறுகிறது. அழத் தொடங்கிவிட்டது. நாம் எம்மாத்திரம்?


எஸ். பி. பி. சார்...
கடவுளின் தேசம் உங்களை அழைக்கையில் நாங்கள் என்ன செய்யமுடியும்?


ஒரு பாடல் மௌனமானது.
கடவுள் தன் இசைக் கருவியைத் திரும்பப் பெற்றுக் கொண்டார்.


போய் வாருங்கள் சார். இனி உங்கள் பாடல்களில் உங்கள் ஸ்பரிசத்தை உணர்வோம். ஒளிப்பதிவுகளில் உங்கள் முகம் பார்த்து ஆறுதல் அடைவோம்.
*
இயக்குனர் பிருந்தா சாரதி


தொப்பை குறைய, இருமல் குணமாக பட்டை மிளகு டீ

தொப்பை குறைய, இருமல் குணமாக பட்டை மிளகு டீ


24-09-2020


இயற்கை முறையிலேயே எந்த உடற்பயிற்சியும் செய்யாமல் தொப்பையை குறைக்க உதவும் டீ தயாரிப்பது


 


பட்டை மிளகு டீ


தேவையான பொருள்கள் :

தண்ணீர் - 250 மில்லி


பட்டை - ஒரு துண்டு
மிளகு - 10
மஞ்சள் - சிறிதளவு
இஞ்சி - ஒரு துண்டு

செய்முறை:

250 மில்லி தண்ணீர் எடுத்து பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வை.  மிளகை இடித்து  போடு.  சிறிதளவு பட்டையை பொடித்து போடு.  இவற்றை சிறு தீயில் கொதிக்க வை.

மஞ்சள் தூளை நன்கு கொதித்து கொண்டிருக்கும் தண்ணீரில் போடு.

ஒரு சிறு துண்டு இஞ்சி எடுத்து டீயை குடிக்க இருக்கும் டம்ளரில் சிறு துண்டுகளாக நறுக்கி போடு.

கொதிக்க வைத்த தண்ணீரை இந்த டம்ளரில் ஊற்றி பத்து நிமிடம் கழித்து இந்த தண்ணீரை அருந்து.

இதனை காலை வேளையில் வெறும் வயிற்றில் குடி. முடியாதவர்கள் இரவு தூங்க செல்லும் முன் கூட அருந்தலாம்.


இடுப்பு, கால், கழுத்து பகுதிகளில் இருக்கும் வலி குறையும். பால் கொடுக்கும் தாய்மார்களும் குழந்தை பிறந்த மூன்று மாதங்களுக்குப் பிறகு குடிக்கலாம். நீரழிவு நோயாளிகளும் குடிக்கலாம்.புரதம் நிறைந்த சைவ உணவுகள்!

புரதம் நிறைந்த சைவ உணவு


24-09-2020

 


 


நன்றி குங்குமம் டாக்டர்


* நம்முடைய உடல் ஆரோக்கியத்துக்குத் தேவையான சத்துக்களில், புரதம் (Protein) தனி இடம் பெறுகிறது. அத்தகைய சிறப்புத்தன்மை வாய்ந்த இந்த ஊட்டச்சத்து அசைவ உணவு வகையான கோழி இறைச்சி, முட்டை போன்றவற்றில்தான் அதிகளவில் உள்ளது என பெரும்பாலானோர் நினைத்துக் கொண்டிருப்பதில் ஓரளவு உண்மை இருக்கிறதுது. ஆனாலும், பாரம்பரிய பின்னணி கொண்ட சைவ உணவுப்பண்டங்களிலும் அசைவ உணவுப்பொருட்களை மிஞ்சும் வகையில், புரதச்சத்து கூடுதலாக காணப்படுகிறது. அவர்களுக்காகவே புரதம் நிறைந்திருக்கிற தானியங்கள், காய்கறிகள் மற்றும் அவற்றில் உள்ள இந்த சத்தின் அளவு முதலானவை தொகுத்து தரப்பட்டுள்ளன.


 


*பாதாம்பருப்பு
வளரும் குழந்தைகள் மட்டுமில்லாமல், முதுமைப் பருவத்தினருக்கும் அத்தியாவசியத் தேவையாக பாதாம் பருப்பு திகழ்கிறது. ஏனெனில் வயோதிக காலத்தில் ஏற்படுகிற நினைவாற்றல் குறைதல் போன்ற மூளை தொடர்பான பாதிப்புக்களை சரி செய்யவல்லது பாதாம்பருப்பு. பாதாம் புரோட்டீன் சத்தை தருவதோடு மட்டுமில்லாமல், உடல் ஆரோக்கியத்துக்குத் தேவையான வைட்டமின் A, D, C போன்றவற்றையும் தருகிறது. இன்னொரு கூடுதல் தகவல்... 100 கிராம் முட்டையிலிருந்து வெறும் 11 கிராம் புரோட்டீன் சத்து மட்டுமே கிடைக்க, அதே அளவுள்ள பாதாம், 10.15 கிராம் கூடுதலாக, 21.15 கிராம் புரோட்டீனை அளிக்கிறது.


*வேர்க்கடலை
புரோட்டீன் எனும் ஊட்டச்சத்தை ஏராளமாக நமக்கு அள்ளித்தருகிற பயறு வகையில், மணிலா எனக் குறிப்பிடப்படுகிற நிலக்கடலையும் ஒன்று.. கோழி இறைச்சியில் எந்த அளவிற்கு புரதச்சத்து காணப்படுகிறதோ அந்த அளவுக்கு சமமாக வேர்க்கடலையிலும் புரதம் உள்ளது. 100 கிராம் அளவுள்ள கோழி இறைச்சியில் இருந்து 27 கிராம் புரோட்டீன் நமக்குக் கிடைத்தால், அதே அளவுள்ள மணிலா பயிர் மூலமாக, 26 கிராம் புரோட்டீனைப் பெறலாம்.


*பூசணிவிதை
நம்முடைய உடல் நலனுக்குத் தேவையான புரோட்டீன் மட்டுமின்றி மக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் நார்ச்சத்து போன்றவை பூசணி விதையில் போதுமான அளவு காணப்படுகின்றன. எலும்பு தேய்மானம், உடல் எடை அதிகரித்தல் போன்ற பிரச்னைகளைச் சரி செய்வதோடு, விரக்தி போன்ற மனம் தொடர்பான பாதிப்புக்களையும் பூசணி விதை குணப்படுத்த வல்லது. 100 கிராம் பூசணி விதையில் இருந்து, 600 கிராம் கலோரி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
*கறுப்புபட்டாணி
‘ஏராளமான ஊட்டச்சத்துக்களைத் தன்னிடம் கொண்டுள்ள பயறு என்ற ஒரே காரணத்துக்காக, எண்ணற்ற குடும்பத் தலைவிகள், சமையலில் கறுப்பு பட்டாணியை மூலப்பொருளாக (Ingredient) அடிக்கடி பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். உலர்ந்த பட்டாணியில் காணப்படுவதைவிட, இரவு முழுவதும் சுத்தமான நீரில் ஊற வைத்த கறுப்பு பட்டாணியில் புரோட்டீன் அளவு கூடுதலாக இருக்கிறது. 100 கிராம் எடையுள்ள முட்டையில் 11 கிராம் மட்டுமே புரதச்சத்து கிடைக்க, அதே அளவுள்ள கறுப்பு பட்டாணியில் 17 கிராம் புரோட்டீன் நமக்குக் கிடைக்கிறது. கிட்டத்தட்ட 6 கிராம் புரதம் அதிகம்.


*அவரைக்காய்
நமது முன்னோர்கள் காலந்தொட்டே, சமையலில் தவறாமல் இடம்பிடித்து வரும் உணவுப்பொருள் அவரை. உடல் நலனைப் பேணிப் பாதுகாத்திட உதவும் அவரையில், கொழுப்புச்சத்து மிகவும் குறைவு. அதே வேளையில் புரதம் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைய உள்ளன. ஒரு கப் அவரைக்காயில் 13 கிராம் அளவிற்குப் புரதச்சத்தும், நார்ச்சத்து 9.2 கிராமும் உள்ளது. முற்றிய அவரையைப் பயன்படுத்துவதால், எவ்வித நன்மையும் இல்லை.Thursday, September 24, 2020

விஜயகாந்த் பூரண உடல்நலத்துடன்உள்ளதாக அக்கட்சியின் தலைமை அலுவலகம் அறிவிப்பு

தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் பூரண உடல்நலத்துடன் உள்ளதாக அக்கட்சியின் தலைமை அலுவலகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


 

 

தேமுதிக தலைவர் விஜயகாந்த்(வயது 68) உடல் நலக்குறைவு காரணமாக, பெரிய அளவில் கட்சி பணிகளில் கவனம் செலுத்தாமல், வீட்டில் ஓய்வில் இருந்து வருகிறார். இந்நிலையில் சென்னை, மணப்பாக்கத்தில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் நேற்று மாலை விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டார்.

இதனையடுத்து விஜயகாந்திற்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு, அவருக்கு தொடர்ந்து கொரோனாவிற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் இன்று தேமுதிக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் பூரண உடல்நலத்துடன் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் வழக்கமாக 6 மாதத்திற்கு ஒருமுறை உடல் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு செல்வது வழக்கம் என்றும் மருத்துவமனைக்கு சென்ற போது லேசாக தென்பட்ட கொரோனா அறிகுறி, உடனடியாக சரி செய்யப்பட்டு விட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் மருத்துவமனையில் இன்னும் சில தினங்கள் விஜயகாந்த் சிகிச்சை பெறுவார் என்றும் முழுமையாக குணமடைந்த பின்னர் வீடு திரும்புவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

அக்.1ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அனுமதி

தமிழகத்தில் அக்.1ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அனுமதி அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

 


,

 

உலக  அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ள நிலையில், நாடு முழுவதும் நான்காம் கட்ட பொதுமுடக்க தளர்வுகளை மத்திய உள்துறை அமைச்சகம், கடந்த ஆகஸ்ட் 29 ஆம் தேதி வெளியிட்டது. அதில் ஒரு பகுதியாக பள்ளிகள் முதற்கட்டமாக செப்டம்பர் 21 முதல் திறக்க அனுமதிக்க இருப்பதாக மத்திய அரசு தெரிவித்தது. அதில் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்கள் தன்னார்வ அடிப்படையில் பள்ளிக்கு வர செப்.21 முதல் அனுமதி அளிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது.
 

இந்நிலையில் தமிழகத்தில் அக்.1ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அனுமதி அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்படி அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு வர அனுமதி அளிக்கப்படுவதாக தலைமைச்செயலாளர் தெரிவித்துள்ளார். மேலும் 10,11, 12ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் என்றும் விருப்பத்தின் பேரில் மாணவர்கள் செல்லலாம் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.Advertisement
சென்னையில் இருந்து கேரளா, கர்நாடகாவுக்கு மேலும் 3 சிறப்பு ரயில்கள்

சென்னையில் இருந்து கேரளா, கர்நாடகாவுக்கு மேலும் 3 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

 
 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் காரணமாக கடந்த மார்ச் 24ம் தேதி பொது போக்குவரத்துக்கு அரசு தடை விதித்தது. அதன் பிறகு ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்ட போதும், பொதுபோக்குவரத்து சேவைகளுக்கு அரசு அனுமதி அளிக்கவில்லை. இருப்பினும், வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்தில் சிக்கிக் கொண்டிருந்த புலம் பெயர் தொழிலாளர்களுக்காகவும், அவசரத் தேவைகளுக்காக செல்லும் மக்களுக்காகவும் ஒரு சில சிறப்பு ரயில்கள் தமிழகத்தில் இயக்கப்பட்டு வந்தது. இந்தசூழலில் தற்போது சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கும் மாநிலங்களுக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

 

இந்நிலையில் சென்னையில் இருந்து கேரளா, கர்நாடகாவுக்கு 3 சிறப்பு ரயில்கள் (சென்னை- திருவனந்தபுரம், சென்னை - மசூரு, சென்னை- மங்களூரு) இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும், செப்.27 ம் தேதி முதல் சென்னை சென்ட்ரலில் இருந்து மங்களூரு செல்லும் தினசரி விரைவு ரயில் இயக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.அமெரிக்க இராணுவத் தளத்திற்கு அருகில் விண்வெளி ஏலியன் சுட்டுக் கொல்லப்பட்டது

சுட்டுக்கொல்லபட்ட வேற்று கிரகவாசி மறைக்கபட்ட உடல்; அமெரிக்க விமானப்படை மேஜரின் அனுபவம் 1978 ஆம் ஆண்டில் அமெரிக்க இராணுவத் தளத்திற்கு அருகில் விண்வெளி ஏலியன் சுட்டுக் கொல்லப்பட்டது என முன்னாள் அமெரிக்க விமானப்படை மேஜர் ஜார்ஜ் ஃபில்லர் கூறியுள்ளார்.

  

விருது பெற்ற புலனாய்வு நிருபர் ஜான் எல். குரேரா எழுதிய ஒரு விமானப்படை புலனாய்வு அதிகாரியின் உண்மைக்கதை (Strange Craft: The True Story of an Air Force Intelligen வேற்றுகிரகவாசி குறித்துவிவரித்துள்ளார்.
 

புத்தகத்தில் அவர் 1978 ஆம் ஆண்டு ஜனவரி 18 ஆம் தேதி, டிக்ஸ் கோட்டையில் ஏலியன் ஒன்று சுடப்பட்டு, மெகுவேர் விமானப்படை தளத்தின் ஓடுபாதை முடிவில் கண்டுபிடித்தாக மூத்த மாஸ்டர் சார்ஜென்ட் ஃபில்லரிடம் கூறியுள்ளார்.


கொரோனாவை மறைக்க உலக சுகாதார நிறுவனம் உதவி


 


கொரோனாவை மறைக்க உலக சுகாதார நிறுவனம் உதவியதாக, சீனா வைராலஜி நிபுணர் கூறியுள்ளார்.

 


 

உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்துள்ள கொரோனா வைரஸ் தொற்று குறித்து சீன அரசு மீது விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

 

இது போன்ற சூழலில் கடந்த சில தினங்களுக்கு முன், சீனாவைச் சேர்ந்த வைராலஜி நிபுணர்  லீ மெங் யான் என்பவர் கொரோனா வைரஸ் உகான் மாகாண ஆராய்ச்சிக் கூடத்தில் உருவாக்கப்பட்டதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.


Wednesday, September 23, 2020

கண்ணதாசன் அவர்களின் பெண் வாழ்க

தமிழ் இலக்கியத்திலிருந்து

இன்றையச்சுவை

கண்ணதாசன் அவர்களின் பெண் வாழ்க

என்ற கவிதை

 

 


சக்தியொரு பாதியாய்ச் சிவனுமொரு பாதியாய்த்

தர்மத்தில் இணைந்து வாழ்வோம்

கத்திவழி நேர்மையாய்ப் பண்புவழி மேன்மையாய்ப்

பாரெல்லாம் வணங்க வாழ்வோம்!

பள்ளியறை கொள்வதில் பரமனடி சேர்வதில்

பக்கத்தில் பங்கு கொள்வோம்!

பாதாதி கேசமும் சீரான நாயகன்

பளிச்சென்று துணைவி வாழ்க!

படுவதொரு துயரேனும் வருவதொரு சுகமேனும்

பாதியாய்த் துணைவன் வாழ்க!

தாய்வீடு விட்டபின் தன்வீடு தாய்வீடு

என்றெண்ணியே தலைவி வாழ்க!

சமகால யோகமிது வெகுகால யாகமென

சம்சாரம் இனிது வாழ்க!

சுஷாந்த் சிங் ராஜ்புத் மட்டுமே போதைப்பொருள் பயன்படுத்தினார்

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்  மரண விசாரணையின் போது போதைப்பொருள் வழக்கில் காதலில் ரியா சக்ரவர்த்தி செப்டம்பர் 9 ஆம் தேதி கைது செய்யப்பட்டு மும்பை சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

 

இரண்டுமுறை ஜாமீன் அப்பீல் செய்தும் அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை இந்த நிலையில்  ரியா சக்ரபோர்த்தி, போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் தனக்கு எதிராக சூனிய வேட்டை நடத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார். \\ 


சுஷாந்த் சிங் ராஜ்புத் "தனது போதை பழக்கத்தைத் தக்க வைத்துக் கொள்ள தனக்கு நெருக்கமானவர்களைப் பயன்படுத்திக் கொண்டார்" என்றும் அவர் குற்றம் சாட்டி உள்ளார்.

 

ரியா சக்ரபோர்த்தி மற்றும் அவரது சகோதரர் ஷோயிக் ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் மும்பை உயர் நீதிமன்றத்தால் நாளை விசாரிக்கப்பட உள்ள நிலையில் மும்பையில் பலத்த மழை காரணமாக இது ஒரு நாள் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

 

ரியா ஜாமீன் மனுவில், "சுஷாந்த் சிங் ராஜ்புத் மட்டுமே போதைப்பொருள் பயன்படுத்தினார். அவர் தனது ஊழியர்களை தனக்கு போதைப்பொருள் வாங்குமாறு அறிவுறுத்தினார் என்று  தெளிவாகிறது. "மறைந்த நடிகர் இன்று உயிருடன் இருந்திருந்தால், அவர் சிறிய அளவிலான பயன்பட்டிற்காக குற்றம் சாட்டப்பட்டிருப்பார், இது ஒரு வருடம் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் ஜாமீன் இல்லா குற்றமாகும்.

 

சுஷாந்த் சிங் ராஜ்புத் தனது போதை பழக்கத்தைத் தக்க வைத்துக் கொள்ள தனக்கு நெருக்கமானவர்களைப் பயன்படுத்திக் கொண்டது துரதிர்ஷ்டவசமானது, மேலும் அவை ஏற்படும் அபாயங்களுக்கு அவற்றை அம்பலப்படுத்துவது பொருத்தமானது என்று நினைத்தேன்.

 

"ஆகவே, மறைந்த சுஷாந்த் சிங் ராஜ்புத் மட்டுமே போதைப்பொருள் நுகர்வோர் மற்றும் அவரைச் சுற்றியுள்ளவர்களை அவரது போதை பழக்கத்தை எளிதாக்கும் பழக்கத்தில் இருந்தார் என்பது புலனாய்வு அமைப்புகளால் சேகரிக்கப்பட்ட ஆதாரங்களில் இருந்து தெளிவாகிறது.

 

தனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறைவான குற்றங்களின் எல்லைக்குள் வரும் என கூறி உள்ளார்.  

 

Featured Post

மனிதனை மீறிய சந்தர்ப்பங்கள் வாழ்க்கையை எவ்வளவு தூரம் திருப்பிவிடுகின்றன

  மனிதனை மீறிய சந்தர்ப்பங்கள் வாழ்க்கையை எவ்வளவு தூரம் திருப்பிவிடுகின்றன என்பதற்கு நான் ஓர் உதாரணம்.’’ – இது, ‘சரித்திர நாவல்களின் ஜாம்பவான...