உங்களுக்கு IQ குறைவா?.. வானதியை கண்டித்த பிடிஆர்
நிறுத்துங்கள்! நீங்கள் பிறவியிலேயே பொய்யரா?.. இல்லை உங்களுக்கு IQ குறைவா?.. வானதியை கண்டித்த பிடிஆர் உங்கள் பொய் மூட்டைகளுடன் என்னை டேக் செய்வதை நிறுத்துங்கள், அதற்கு பதிலாக ஏதேனும் பயனளிக்கக் கூடிய பணிகளை பாருங்கள் என பாஜக எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசனுக்கு அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் காட்டமாக பதில் அளித்துள்ளார். ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கோவாவிற்கு எதிராகவும் அந்த மாநிலத்தை அவமதித்ததும் தமிழக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக கோவாவின் போக்குவரத்துத் துறை அமைச்சர் மவ்வின் கோடின்ஹோ குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார். ஜிஎஸ்டி இழப்பீடு வழங்குவதில் கோவா போன்ற சிறிய மாநிலங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என கோடின்ஹோ கோரிக்கை வைத்தார். இதை பிடிஆர் எதிர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே கோவாவை அவமதித்த பிடிஆர் கோவா மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என அந்த மாநில அமைச்சர் கேட்டுக் கொண்டார். இதற்கு விளக்கமளித்த பிடிஆர் நடந்தவற்றை விளக்கிக் கூறி, தான் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமே இல்லை என கூறிவிட்டார். இந்த நிலையில் இந்த விவகாரத்தில் வானதி ஸ்ரீனிவாசன் தலையிட்