Sunday, May 31, 2020

ஆத்தி சூடி             (கௌ)                 *  கௌவை அகற்று

ஆத்தி சூடி
            (கௌ)
                *
 கௌவை அகற்று
               *
      ஒருவிகற்ப
       இன்னிசை
        வெண்பா
               ஒலி ஒளி உணர
 கௌவை
   (பழி/துன்பம்)
    அகற்றிட
      கள்ளை
        விலக்குவோம்


 கௌட
    நெறிமுறைக்
      காட்டிக்
       கடமையாய்


 ஔவை
     மொழிவழி
       ஆற்றுப்
       படுத்தினால்


 தௌவல்
    (கேடு)
  விலகிடும்
     தான்.
           *
வணக்கத்துடன்🙏
ச.பொன்மணி


கமலா தாஸ்

கமலா தாஸ் (மலையாளம்കമല ദാസ്) என்ற இயற்பெயரைக் கொண்ட கமலா சுராயா அல்லது மாதவிக்குட்டி, (மார்ச் 311934 - மே 312009இந்திய எழுத்தாளர். இவர் ஆங்கிலம்மற்றும் மலையாளத்திலும் ஏராளமான சிறுகதைகள் மற்றும் கவிதைகளை எழுதியவர். கேரளாவில் இவரது சிறுகதைகள் மற்றும் இவரது தன் வரலாறு (என் கதா) ஆகியவை புகழ் பெற்றவைகமலாதாஸ் 1934 இல்கேரள மாநிலத்தில் மலபாரிலுள்ள 'புன்னயூர்க் குளம்என்ற ஊரில் பிறந்தார். ஆங்கிலத்தில் மட்டும் கவிதைகள் எழுதியவர். 'கல்கத்தாவில் கோடைகாலம்' (1965), 'வம்சத்தவர்' (1967), 'பழைய நாடகக் கொட்டகை மற்றும் கவிதைகள்' (1972) முதலிய தொகுப்புக்கள் வெளிவந்துள்ளன. குறிப்பாக, `என் கதா' (My Story) என்ற புத்தகம் பல்வேறு இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு உள்ளது.


ஆங்கிலக் கவிதைக்காக சாகித்திய அகாதமி விருதினை 1981இல் பெற்றார். 'மாதவிக்குட்டிஎன்ற பெயரில் மலையாளச் சிறுகதைகளையும் எழுதி வந்தவர்.


அவர் ஒரு பழமைவாத ஹிந்து நாயர் (நலாபத்) அரச[மேற்கோள் தேவை] குடும்பத்தில் பிறந்த‌வராக இருந்தாலும்டிசம்பர் 11, 1999 இல் இஸ்லாமிய மார்க்கத்தினை ஏற்றுக்கொண்டு தனது பெயரை கமலா சுரையா என மாற்றிக் கொண்டார். மே 31 2009 இல்தனது 75 வது வயதில் புனே மருத்துவமனையில் இறந்தார்.உயிரைப் பறிக்கும் புகைப்பழக்கம் வேண்டாமே

 

உயிரைப் பறிக்கும் புகைப்பழக்கம் வேண்டாமே! - உலக புகையிலை எதிர்ப்பு தினப் பகிர்வு


 


உலகப் புகையிலையற்ற தினம், 31 மே 2020


புகை நமக்குப் பகை, புகைப்பழக்கம் உடல்நலத்துக்குக் கேடு, புகைப்பழக்கம் உடல்நலத்துக்குத் தீங்கானது... பீடி, சிகரெட் அட்டைகளின் மேல் ஒட்டப்பட்டிருக்கும் இத்தகைய வாசகங்கள் புகைப்பழக்கத்துக்கு ஆளான எத்தனைபேரை மனம் மாறச் செய்திருக்கும்? இது... சிந்திக்க வேண்டிய ஒரு விஷயமாகும்.


புகைப்பழக்கம் இன்றைக்குப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. புகையால் பாதிக்கப்பட்டு, ஆண்டுதோறும் ஏறத்தாழ 60 லட்சம் பேர் உலகளவில் உயிரை விடுகிறார்கள் என்றால் நிச்சயம் வருத்தப்பட வேண்டிய செய்தியே. இந்தியாவில் மட்டும், ஏறத்தாழ 80 லட்சம் பேர் புகையால் பாதிப்படைந்துள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. ஒட்டுமொத்த புகையிலை பாதிப்புக்கு ஆளானவர்களில், பலர் புகைபிடிப்பவர்களின் அருகே இருந்து அதை சுவாசித்ததன்மூலம் பாதிப்புக்கு ஆளானவர்கள். இவர்களைப் போன்றே புகையிலையால் பாதிக்கப்படுபவர்கள், தங்களது வாழ்நாளில் 12 முதல் 20 ஆண்டுகள் வரை இழக்கிறார்களாம்.


1) புகையிலையைச் சுவாசிப்பதால், அதனுள்ளே இருக்கும் நிகோட்டின், உடலுக்குள் செல்கிறது. ரத்தத்துக்கு ஆக்சிஜன் சப்ளை செய்யக்கூடிய நுரையீரலில் நிகோட்டின் கலந்து ரத்தத்தை மாசுபடுத்துகிறது. அது நுரையீரல் புற்றுநோய்க்கும், ரத்தப் புற்றுநோய்க்கும் வழிவகை செய்கிறது.


2) புகையிலையில் இருக்கும் நிகோட்டின், ஒருவரது டி.என்.ஏ-வில் பாதிப்பை ஏற்படுத்தும் சக்தி படைத்தது. அந்த வகையில், அவர்களுக்கு அடுத்த தலைமுறைக்கு ஆஸ்துமா, மூச்சுக்குழாய் பாதிப்பு, கண் தெரியாமல் போவது போன்ற தீராத பிரச்னைகளால் பாதிப்பு ஏற்படலாம்.


3) புகையில் உள்ள கார்பன்-டை-ஆக்சைடு, ரத்தத்திலுள்ள ஹீமோகுளோபினை அழித்துவிடுகிறது. ஆக்சிஜன் உள்ளிழுக்க உதவியாக இருக்கும் ஹீமோகுளோபின் பாதிப்படைவதால், மூச்சுவிடுவதில் சிரமம் வருகிறது. இது, மாரடைப்பு, ரத்தக்குழாயில் அடைப்பு போன்ற இதயக்கோளாறுகளுக்கு வழிவகை செய்யும்.


4) புகைபிடிப்பது, நரம்பு மண்டலத்தைத் தூண்டிவிடும். செயற்கையாகத் தூண்டப்படும் நரம்பு மண்டலம், மிகவும் அதிக சக்தி பெற்றிருக்கும். நாளடைவில், புகைபிடிக்காமல் இருக்கும்போது, நரம்பு மண்டலம் மந்தமாகச் செயல்படுவதுபோலத் தோன்றும். இதன் கடைசி கட்டமாக, பக்கவாதம் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.


5) செகண்ட்-ஹேண்ட்-ஸ்மோக்கிங்க் (SECOND HAND SMOKING) மிகவும் ஆபத்தானது. அதாவது, ஒருவர் புகைபிடித்து வெளிவிடும் புகையை மற்றொருவர் உள்ளிழுப்பது பெரும்பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் பெரும்பாலும் பெண்களும் குழந்தைகளுமே அதிகமாகப் பாதிக்கப்படுவர். இது, பெண்களது இனப்பெருக்க உற்பத்தி செல்களில் பாதிப்பை ஏற்படுத்தும்.


என்னதான் எல்லா பாதிப்புகளும் தெரிந்திருந்தாலும், புகைப் பழக்கத்திலிருந்து தங்களை விடுவித்துக் கொள்வதாகத் தெரியவில்லை. 1987-ல் தொடங்கப்பட்ட இந்த உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை, ஆண்டுதோறும் ஏதாவதொரு 'தீம்'   கொண்டுதான் உலகச் சுகாதார நிறுவனம் அனுசரிக்கிறது.


 


புகையிலைப் பாதிப்பையும் அதனால் ஏற்படும் தவிர்க்கக் கூடிய நோயையும் மரணத்தையும் பற்றி உலகக் கவனத்தை ஈர்ப்பதற்காக இத்தினம் உலக சுகாதார நிறுவனத்தால் 1987-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.


உலக அளவில் மரணத்துக்கான முக்கிய காரணம் பக்கவாதத்தை உள்ளடக்கிய இதய நோய்கள் ஆகும். மிகை இரத்த அழுத்தத்தை அடுத்து இதய நோய்களுக்கு புகையிலையே முக்கிய காரணம். புகைத்தல் மற்றும் மறைமுகப் புகை இதய நோய் மரணத்தில் 12 % பங்கு வகிக்கிறது.


முக்கிய உண்மைகள்:


·         புகையிலையைப் பயன்படுத்துவர்களில் பாதிப் பேர் அதன் பாதிப்பால் மரணம் அடைகின்றனர்.


·         புகையிலைப் பாதிப்பு உலக நலப் பிரச்சினைகளில் ஒரு நோயெழுச்சி போல் காணப்படுகிறது. 70 லட்சம் மக்களைப் புகையிலை கொல்லுகிறது. இதில் 60 லட்சம் பேர் நேரடி பாதிப்பாலும், 8 90 000 பேர் மறைமுகப் பாதிப்பாலும் மரணம் அடைகின்றனர்.


உலக அளவில் புகையிலைப் பயன்பாட்டில் இந்தியா இரண்டாவது இடம் வகிக்கிறது. புகையிலை தொடர்பான மரணங்களில் ஆறில் ஒரு பகுதி இந்தியாவில் நிகழ்கிறது. புகையுடன் மற்றும் புகையற்ற பல வகைகளில் புகை பயன்படுத்தப் படுவதாலும் இதில் பல்வேறு சமூகக் கலாச்சார வேறுபாடுகள் கலந்திருப்பதாலும் இந்தியாவின் புகையிலைப் பிரச்சினை மிகவும் வேறுபட்ட தன்மை கொண்டதாகும்.


உலக வயதுவந்தோர் புகையிலை மதிப்பாய்வு-2ன் (GATS-2) படி 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட 26.7 கோடி மக்கள் (29% வயதுவந்தோர்) புகையிலையைப் பல்வேறு வடிவங்களில் பயன்படுத்துகின்றனர். ஆனால் இதன் முதல் மதிப்பாய்வில் இருந்து தற்போது 6% குறைந்துள்ளது.


புகையிலைப் பயன்பாட்டைக் குறைக்க உலக சுகாதார நிறுவனத்தினால் பரிந்துரைக்கப்பட்டு இந்தியாவில் செயல்படுத்தப்படும் MPOWER நடவடிக்கைகள்:


·         புகையிலைப் பொதிகளின் 85% பகுதிகளில் படத்தோடு கூடிய எச்சரிக்கை. 1 செப்டம்பர் 2018 ல் இருந்து புதிய வடிவிலான நல எச்சரிக்கை பயன்படுத்தப்படும்.


·         GATS-ன் இரண்டாவது சுற்றை மேற்கொள்ளுதல்.


·         தேசியப் புகையிலைக் கட்டுப்பாட்டுத் திட்டத்துக்கு 12 வது ஐந்தாண்டு திட்டத்தில் போதிய முதலீடு செய்தல்.


·         புகையற்ற புகையிலை வடிவங்களைத் தடை செய்தல்.


·         புகையிலை அற்ற படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்சிகளை நடைமுறைப்படுத்தல்.


·         இந்திய அரசின், சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் தேசிய புகையிலை விட்டொழித்தல் தொலைபேசி மற்றும் எம்-நிறுத்தம் சேவைகள் மூலம் தொடர் குறுஞ்செய்திகளை அலைபேசிகளில் அனுப்பிப் புகையிலைப் பயன்பாட்டளர்களை விட்டொழிக்க ஊக்குவிக்கும் எம்-சுகாதார முன்முயற்சிகள். Quitplan மூலம் புகையிலைப் பயன்பாட்டாளர்கள் இப்பழக்கத்தை விட்டொழிக்க உதவிகள் பெறலாம்.


மேலும் 011-22901701 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுக்கலாம் அல்லது www.nhp.gov.in/quit-tobacco என்ற முகவரியில் அலைபேசி எண்ணையும் மின் அஞ்சலையும் பதிவு செய்து இச்சேவைகளைப் பெறலாம்.


ஒவ்வொரு நாளையும் புகையிலையற்ற நாளாக மாற்றவும். 

தூக்கத்தை வரவழைக்கும் உணவுகள்

தூக்கத்தை வரவழைக்கும் உணவுகள்


மே 31, 2020    10:00தூக்கமின்மை பிரச்சினைக்கு பல காரணங்கள் இருக்கின்றன. சிலவகை இயற்கை உணவுகள் தூக்கத்தைத் தூண்டும் தன்மை கொண்டவை.


தூக்கமின்மை பிரச்சினைக்கு பல காரணங்கள் இருக்கின்றன. மன அழுத்தம், மனச்சோர்வு, செரிமான பிரச்சினை போன்றவையும் தூக்க சுழற்சி முறையை சிதைக்கக்கூடியவை. சிலவகை இயற்கை உணவுகள் தூக்கத்தைத் தூண்டும் தன்மை கொண்டவை.


தூங்க செல்வதற்கு முன்போ அல்லது பகல் வேளையிலோ சிறிதளவு பாதாம் சாப்பிட்டுவந்தால் தூக்கத்தை மேம்படுத்தும் என்பது ஆய்வில் கண்டறியப் பட்டுள்ளது. தூக்கத்தை ஒழுங்குபடுத்தும் ஹார்மோனான ‘மெலடோன்’ மற்றும் தூக்கத்தை ஊக்குவிக்கும் கனிமமான ‘மெக்னீசியம்’ இதில் ஏராளம் இருக்கிறது. அவை நீண்ட நேரம் மற்றும் ஆழமான தூக்கத்திற்கு வழிவகை செய்யும். மேலும் மூளை மற்றும் நரம்புகளில் இனிமையான விளைவுகளை ஏற்படுத்தும் டிரிப்டோபன் அமினோ அமிலத்தின் செயல்பாட்டையும் மேம்படுத்தும். அதன் காரணமாக தூக்கம் தடைபடுவது தவிர்க்கப்படும்.தூக்கமின்மை பிரச்சினைக்கு ஆளாகுபவர்கள், வாழைப்பழத்தையும் சாப்பிடலாம். அதிலும் டிரிப்டோபன் அமினோ அமிலம் நிறைந்திருக்கிறது. இது மூளைக்கு சமிக்ஞை கொடுத்து தூக்கத்தை வரவழைக்க செய்யும் வேதிப்பொருட்களை உருவாக்க உதவும்.


சாமந்தி டீ பருகுவதும் நல்ல தூக்கத்தை வரவழைக்கும். அதிலிருக்கும் அபிஜெனின் எனும் ஆன்டிஆக்சிடெண்டு மூளைக்கு செல்லும் நரம்புகளின் செயல்பாடுகளை தூண்டி ஆழ்ந்த தூக்கத்தில் ஆழ்த்திவிடும்.


தூக்கத்தை ஊக்குவிக்கும் தன்மை பாலுக்கும் இருக்கிறது. வெறுமனே பாலை பருகாமல் அதில் சிறிதளவு மஞ்சள், குங்குமப்பூ கலந்து பருகினால் நன்றாக தூக்கம் வரும். அதிலும் டிரிப்டோபன் அமினோ அமிலம் நிறைந்திருக்கிறது. நடைப்பயிற்சி, யோகா செய்பவர்கள் பால் பருகி வந்தால் எந்த இடையூறுமின்றி நன்றாக தூங்கி எழலாம்.


இரவு குறைவாக சாப்பிடுவதே நல்லது. ஓட்ஸ் உணவை சாப்பிட்டுவந்தால் ஆரோக்கியம் மேம்படுவதோடு ஆழ்ந்த தூக்கத்தையும் தூண்டும். அதில் மன அழுத்தத்தை குறைக்கும் வைட்டமின் பி6 சத்தும் நிறைந்திருக்கிறது.

 

பிரதமர் அலுவலக கூடுதல் செயலாளராக சென்னை ஐ.ஐ.டி. முன்னாள் மாணவர்

 


பிரதமர் அலுவலக கூடுதல் செயலாளராக சென்னை ஐ.ஐ.டி. முன்னாள் மாணவர்


புதுடில்லி: பிரதமர் அலுவலகத்தின் கூடுதல் செயலாளராக தமிழகத்தை சேர்ந்தவரும், சென்னை ஐ.ஐ.டி., முன்னாள் மாணவருமான மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி கோபாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான ஒப்புதலை பிரதமர் மோடி தலைமையில் நடந்த நியமன குழு அளித்துள்ளது. 1991ம் ஆண்டு ஐ.ஏ.எஸ்., பேட்ஜ் அதிகாரியான அவர் தற்போது, தகவல் தொழில்நுட்பத்துறை கூடுதல் செயலாளராக உள்ளார்.


சென்னை ஐ.ஐ.டி.,யில் எலெக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் பட்டப்படிப்பு படித்த அவர், பெங்களூருவில் உள்ள ஐ.ஐ.எம்., மில் பட்ட மேற்படிப்பு படித்துள்ளார். டெவலெட்மென்ட் ஸ்டடிஸ் தொடர்பாக நெதர்லாந்தின் ரோட்டார்டேமில் உள்ள எஸ்ராமஸ் பல்கலையில் பட்டம் பெற்றுள்ளார்.


அமைச்சரவை நியமன குழுவானது, பீஹார் கேடரை சேர்ந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஸ்ரீதரை, இணை செயலாளராகவும், ஹிமாச்சல பிரதேசத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி மீரா மொகந்தியை பிரதமர் அலுவலகத்தின் இயக்குநராகவும் நியமிப்பதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.

2001ம் ஆண்டு பேட்ஜ் அதிகாரியான ஸ்ரீதர், விவசாயத்துறையில் பட்டமேற்படிப்பு பெற்றுள்ளார். மேலும் மரபியல் துறையில் நிபுணத்துவம் பெற்றவர் ஆவார். தற்போது, முசோரியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக அகடமியில் மூத்த இணை இயக்குநராக பதவி வகித்து வருகிறார். மீரா மொகந்தி, அமைச்சரவை செயலகத்தில் பணியாற்றி வருகிறார்

 

தகவல்
ஆடைகளைக்கூட  தின்னும்   உலகம் சுற்றும் வெட்டுக்கிளிகள்ஆடைகளைக்கூட  தின்று  தள்ளிவிடும் உலகம் சுற்றும் வெட்டுக்கிளிகள் - அதிர வைக்கும் 15 உண்மைத் தகவல்கள்


  


பாலைவன வெட்டுக்கிளிகள். கரோனாவுக்கு அடுத்து இன்று அதிகம் உச்சரிக்கும் பெயர் இதுதான். அரபு நாடுகள்பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்குள் பெருங்கூட்டம் கூட்டமாகப் படையெடுத்துவரும் இந்த வெட்டுக்கிளிகளின் தாக்குதல்களால் இந்திய விவசாயிகள் கலக்கத்தில் உள்ளனர். இந்தப் பாலைவன வெட்டுக்கிளிகள் பற்றிய தகவல்கள் ஒவ்வொன்றும் அதிர வைக்கின்றன. இந்த வெட்டுக்கிளிகள் பற்றிய சில உண்மைத் தகவல்கள்:


ஆப்பிரிக்காவில் இனப்பெருக்கம் செய்யும் இந்த வெட்டுக்கிளி பூச்சிகள்ஏமன்ஈரான்சோமாலியாபாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்குள் வருகின்றன.


* ‘லோகஸ்ட்’ என்றழைக்கப்படும் பாலைவன வெட்டுக்கிளிகள் அதிக தூரத்துக்கு புலம்பெயர்ந்து வலசை செல்லும் ஆற்றல் கொண்டவை. ஒரு நாளில் 150 கி.மீ. தூரம் வரை பறக்கும்.


ஆப்பிரிக்கக் காடுகளிலும் பாலைவனங்களிலும் உற்பத்தியாகும் இந்த வெட்டுக்கிளிகள்கடலுக்கு மேலே 2,000 மீட்டர் உயரத்தில் பறக்கும் சக்தியுள்ளவை. ஆப்பிரிக்காவுக்கும் அரேபியத் தீபகற்பத்துக்கும் இடையே உள்ள செங்கடலை இடைவிடாமல் பறந்துகடந்து ஆசியாவுக்குள் நுழைகின்றன.


வரும் வழியெல்லாம் இனப்பெருக்கம் செய்துஅந்தப் பகுதிகளில் உள்ள பயிர்களை இந்த வெட்டுக்கிளிகள் நாசம் செய்பவை.


நம் வீட்டருகில் உள்ள சாதாரண வெட்டுக்கிளிகளைப் போல் அல்லாமல் இந்தப் பாலைவன வெட்டுக்கிளிகள் ஒரு சதுர கி.மீ.யில் கோடிக்கணக்கில் இனப்பெருக்கம் செய்யும் ஆற்றல் பெற்றவை. ஒரு சதுர கி.மீட்டரில் 4 - 8 கோடி வெட்டுக்கிளிகள் கூட்டம் திரளாக இருக்கும். இதன் ஆயுட்காலம் சராசரியாக மாதங்கள்.


ஆப்பிரிக்கக் காடுகளில் வறட்சியைத் தொடர்ந்து மழை பெய்து மண் ஈரமாகும்போதுஇந்த லோகஸ்ட்’ வெட்டுக்கிளிகள் எண்ணிக்கையில் பல்கி கோடிக்கணக்கில் உற்பத்தியாகின்றன.


தொடக்கத்தில் வண்டுகள் போல வளரும் இவைஇறக்கைகள் முளைத்தவுடன் கூட்டம் கூட்டமாகப் பறக்கத் தொடங்கிவிடும்.


வெட்டுக்கிளி வகைகளிலேயே மோசமானதுஇந்தப் பாலைவன வெட்டுக்கிளிகள்தான். ஒரு பெரிய பாலைவன வெட்டுக்கிளி அதன் எடைக்கேற்ப உணவைத் தின்று தீர்த்துவிடும்.


* ‘லோகஸ்ட்’ வெட்டுக்கிளிகள் தனியாக இருந்தால் பிரச்சினை இல்லை. கூட்டமாகச் சேர்ந்தால் சிக்கல்தான். நம்மூரில் உற்பத்தியாகும் ஈசல்களைப் போல இந்த    வெட்டுக்கிளிகள்   பெருகிவிடும்.


இந்த வெட்டுக்கிளிகள் தோட்டப் பயிர்கள்பூக்கள்பழங்கள் மட்டுமல்லாமல்வீடுகளில் தொங்கும் ஆடைகளைக்கூட தின்று தள்ளிவிடும்.


ஒரு வெட்டுக்கிளி கூட்டம் ஒவ்வொரு நாளும் 400 மில்லியன் (40 கோடி) பவுண்டுகள் வரை தாவரங்களை உண்ணும் ஆற்றல் பெற்றவை!


வெட்டுக்கிளிகள்  கூட்டம் வீடுகளுக்குள் புகுந்துவிட்டால்வீட்டில் உள்ள மரப் பொருட்களையும் விட்டுவைக்காது என்கிறார்கள் பூச்சியியல் வல்லுநர்கள்.


இந்த வெட்டுகிளிகளின் தாடைகள் சக்தி வாய்ந்தவை. இவை சாப்பிடும்போது  எழும் சத்தத்தைத் தூரத்திலிருந்தே கேட்க முடியும்.


* 1954-ல் வடமேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து பிரிட்டனுக்கும், 1988-ல் மேற்கு ஆபிரிக்காவிலிருந்து கரீபியன் தீவுகள் வரை இந்த  வெட்டுக்கிளிகள்  நீண்ட தூரம் சென்ற பதிவுகள் உள்ளன. அப்போது இந்த வெட்டுக்கிளிகள் 10 நாட்களில் 4,989 கி.மீ. பயணம் செய்ததாகக் கூறப்படுகிறது.


கடந்த 27 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த முறைதான் இந்தியாவுக்குள்  வெட்டுக்கிளிகள்  கூட்டம் படையெடுத்துள்ளன. 

   


சென்னை பகுதிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள தளர்வு

 


சென்னை பகுதிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள தளர்வுகள் முழு விவரம்


மே 31, 2020 08:51 IST             


பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர மற்ற பகுதிகளில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.


ஓட்டலில் அமர்ந்து சாப்பிட அனுமதி (பழைய படம்)


* தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்களில், அந்நிர்வாகமே ஏற்பாடு செய்யும் வாகனங்களில் 20 சதவீத பணியாளர்கள் அதிகபட்சம் 40 நபர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது. எனினும், இயன்ற வரை பணியாளர்கள் வீட்டிலிருந்து பணிபுரிவதை தனியார் நிறுவனங்கள் ஊக்குவிக்க வேண்டும்.

* வணிக வளாகங்கள் தவிர்த்து, அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள் (நகை, ஜவுளி போன்றவை) 50 விழுக்காடு பணியாளர்களுடன் செயல்படலாம். மேலும், ஒரே நேரத்தில் அதிகபட்சம் 5 வாடிக்கையாளர்கள் மட்டும் கடைக்குள் வருவதை உறுதி செய்து, தகுந்த சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில், அனுமதிக்கப்பட வேண்டும். கடைகளில், குளிர் சாதன இயந்திரங்கள் இருப்பினும் அவை இயக்கப்படக் கூடாது.  * மத்திய அரசு உத்தரவின்படி 8.6.2020 முதல் உணவகங்களில் அமர்ந்து உணவு அருந்த அனுமதி அளிக்கப்படுவதோடு, உணவகங்களில், சமூக இடைவெளியை கடைபிடிக்கும் நோக்கத்துடன், உணவகங்களில் உள்ள மொத்த இருக்கைகளில், 50 விழுக்காடு இருக்கைகளில் மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படுகிறது. எனினும், உணவகங்களில் குளிர் சாதன இயந்திரங்கள் இருப்பினும் அவை இயக்கப்படக் கூடாது.

* டீ கடைகள், உணவு விடுதிகள் (7.6.2020 வரை - பார்சல் மட்டும்)  மற்றும் காய்கறி கடைகள், மளிகைக் கடைகள் ஆகியவை காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை அனுமதிக்கப்படுகிறது.  

* மத்திய அரசு உத்தரவின்படி 8.6.2020 முதல் தேநீர் கடைகளில் உள்ள மொத்த இருக்கையில் 50 விழுக்காடு அளவு மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உண்பதற்கு அனுமதிக்கப்படுகிறது.  


* வாடகை மற்றும் டாக்ஸி வாகனங்களை, ஓட்டுநர் தவிர்த்து, மூன்று பயணிகளை மட்டுமே கொண்டு, மண்டலத்திற்குள் இ-பாஸ் இன்றி பயன்படுத்தலாம்.


 * ஆட்டோக்களில், ஓட்டுநர் தவிர்த்து, இரண்டு பயணிகள் மட்டுமே பயணிக்கலாம். சைக்கிள் ரிக்சா அனுமதிக்கப்படுகிறது.

* முடிதிருத்தும் மற்றும் அழகு நிலையங்கள் குளிர் சாதன வசதியைப் பயன்படுத்தாமல் அரசு தனியாக வழங்கும் நிலையான செயல்பாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இயங்க அனுமதிக்கப்படுகிறது.

 

ReplyForwardகுடும்ப பொறுப்பு என்பது எல்லோருக்கும் ஒன்றுதான்

குடும்ப பொறுப்பு என்பது எல்லோருக்கும் ஒன்றுதான்          சரி நம்மை படைத்து-காத்து -அருளும் பரமனின் குடும்ப பொறுப்பு எப்படி இருக்கும் என்பதை சிந்தையில் கொண்டு வந்து கற்பனை செய்து அதை இங்கு பதிவிடுகிறேன் -


        --கயிலாயமலை --சிவபெருமான் இல்லம் ---தியானம் கலைந்து கண் விழித்தார் சிவபெருமான் ----அப்பா என்று அன்பாக அழைத்து கொண்டே ஓடி வந்து அவர் மடியில் அமர்ந்தான் அவர் மகன் கணபதி ---கணபதியை தன் வலது மடியில் அமர்த்திய சிவபெருமான் -- என் செல்ல மகனே கணபதி என்று கொஞ்சி முத்தமிட்டார் சிவனார்


   --அப்போது கணபதி சிவனாரிடம் --அப்பா என் இரு- தந்தத்தில் ஒரு தந்தத்தை பாரதம் எழுதும் போது ஒடித்தேன் அல்லவா ---இப்போது நீங்கள் சூடிய பிறை நிலவை பார்க்கும் போது என் தந்தம் போலவே காட்சியளிக்கிறது அப்பா --என்று மழலை   மொழியில் கூற --அதை கேட்டு சிவனார் கல கல வென சிரித்தார் -


           --அப்போது --அவரது இரண்டாவது மகன் முருகன் ஓடி வந்து ---சிவனாரின் இடது மடியில் அமர்ந்து ---அப்பா --நீங்கள் இன்று உலகோருக்கு படியளக்க கிளம்பும் போது நானும் உங்களுடன் வரவா --உலகை சுற்றி பார்த்து பல நாள் ஆயிற்று என்று கேட்க --கணபதி குறுக்கிட்டு ---தம்பி தாய்-தந்தை தான் உலகம் என்பதை மறந்து ---உன் மயிலேறி உலகம் சுற்றி வந்தாய் அல்லவா --இப்போது என்னவாம் உன் மயிலேறி செல்லவேண்டியதுதானே ஏன் அப்பாவை தொந்தரவு செய்கிறாய் --அதை கேட்டு முருகன் அழுது கொண்டே அம்மா இங்கே வாயேன் என்று அழைத்தான்


                   ---அட ட ட டா காலையிலே உங்க ரெண்டு பேர் சண்டையை ஆரம்பிச்சுட்டீங்களா கணபதி நீ எப்போ பார்த்தாலும் ஏன் முருகனை சீண்டிகிட்டே இருக்க உனக்கு பிடித்த கொழுக்கட்டை பண்ணி வச்சுருக்கேன் சாப்பிட வா நீ ---அப்புறம் பார்வதி தேவி சிவனாரை பார்த்து ---என்னங்க உலகத்துயிர்களுக்கு படியளக்க போனோமா வந்தோமான்னு இருக்கனும் அதை விட்டுட்டு யாரவது அடியவர்கள் பாடிய தேவார-திருவாசகத்தை கேட்டுட்டு அங்கையே மெய்-மறந்து அமர்ந்திரக்கூடாது புரியுதா ---ம்ம் உங்கிட்ட சொன்னாலும் இப்போ சரினு தலையாட்டிட்டு அப்புறம் நீங்க செய்றதை-தான் செய்விங்க ---நந்தி மகனே என்று பார்வதி அழைக்க --சொல்லுங்கள் அம்மா --என்று நந்தி-தேவர் பார்வதி தேவி முன் வந்து நின்று வணங்கி நிற்க ---பார்வதி --தேவி--நந்தி மகனே ----இவர் பாட்டுக்கு அடியவர்கள் பாடுறத கேட்டுட்டு எங்கையாச்சு மெய்-மறந்து நின்றுவிட்டாள் அங்கையே விட்டு விடாதே படியளக்கும் வேலை முடிந்ததும் கயிலைக்கு கூட்டிட்டு வந்துடு சரியா ---நந்திதேவர் ---ஆகட்டும் தாயே என்றார்


            ---முருகன் --அம்மா எனக்கு ஒரு சந்தேகம் அதற்க்கு விளக்கம் கூற முடியுமா ---பார்வதி தேவி --உன் தந்தைக்கே உபதேசம் செய்தவன் நீ உனக்கு சந்தேகமா --சரி கேளப்பா ---அம்மா --நம் கயிலை மலையில் ---மதுரை மீனாட்சி ஆட்சியா ?அல்லது --சிதம்பரம் நடராஜர் ஆட்சியா ?என்று கேட்க --பார்வதி தேவி-முருகா உனக்கு வேறு சந்தேகம் உதிக்க கூடாதா ---சரி நம் கயிலை மலையில் ---சிதம்பரம் நடராஜர் ஆட்சிதானப்பா என்று பார்வதி தேவி கூற --சிவபெருமான் குறுக்கிட்டு முருகா இல்லையில்லை ---நம் கயிலைமலையில் --மதுரை மீனாட்சி ஆட்சிதானப்பா----என்று கூற --கணபதியும் --முருகனும் குழம்பி --அம்மா-அப்பா உண்மையில் யார் ஆட்சி என்று கூறுங்கள் எங்களை குழப்பாதீர்கள் ---


                     சிவபெருமான் குறுக்கிட்டு ---கணபதி --முருகா குழப்பம் வேண்டாம் விளக்கம் அளிக்கிறேன் கேளுங்கள் --ஒரு குடும்பத்தில் கணவன் மனைவியை ஆளவேண்டும் ---மனைவி கணவனை ஆளவேண்டும் ---இருவரும் ஒருவரை ஒருவர் விட்டு கொடுத்து வாழ்தலே சிறந்த வாழ்க்கை ---கணவன் மனைவியின் சொல்லுக்கு மதிப்பளிக்கவேண்டும் --மனைவி கணவனின் சொல்லுக்கு மதிப்பளிக்கவேண்டும் ---இவள் தனதானவள் தன் உயிர் என தன் மனைவியை --அவள் - கணவன் நினைக்கவேண்டும் ---அதே போல் --இவன் தனதானவன் தன் உயிர் என கணவனை அவள் மனைவி நினைக்கவேண்டும் ---மதுரையில் மீனாட்சி ஆளும் போது சொக்கன் விட்டு கொடுத்து வாழ்கிறார் ---சிதம்பரத்தில் நடராஜர் ஆளும் போது சிவகாம -சுந்தரி விட்டு கொடுத்து வாழ்கிறாள் ---கணவனை பொறுத்தவரை தன்னை விட உயர்வானவள் மனைவி என நினைக்கவேண்டும் --மனைவியை பொறுத்தவரை தன்னை விட உயர்வானவன் கணவன் என நினைக்க வேண்டும் ---இப்படி ஒருவருக்கொருவர் புரிந்து வாழும் இல்லறமே நல்லறமாகும் ---என்று கூறி முடிக்க ---முருகனும்- கணபதியும் சிவனாரையும் --பார்வதியையும் அன்போடு வணங்க ---இருவருக்கும் ஆசி கூறினார்கள்


               சிவனாரும் --பார்வதி தேவியும் ---நாமும் நம் இல்லறம் நல்லறமாக சிறக்க நம் தாய் தந்தை ---சிவ-பார்வதியின் ஆசி பெறுவோம் ---ஓம் நமசிவாய


 


---/\--- படித்ததை பகிர்ந்தேன்.


ஜூன் மாதம் முழுவதும் காணொலிக்காட்சி மூலம் வழக்கு விசாரணை:

 

ஜூன் மாதம் முழுவதும் காணொலிக்காட்சி மூலம் வழக்கு விசாரணை: ஐகோர்ட்டு அறிவிப்பு


 மே 31, 2020 07:08 


கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சென்னை ஐகோர்ட்டில் கடந்த மார்ச் மாதம் 2-வது வாரத்துக்கு பின்னர் அவசர வழக்குகள் மட்டுமே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. பின்னர் மார்ச் 24-ந்தேதி முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அந்த அவசர வழக்குகளும் காணொலி காட்சி மூலமே விசாரிக்கப்பட்டன.

இந்த நிலையில், சென்னை ஐகோர்ட்டில் நாளை (திங்கட்கிழமை) முதல் அனைத்து வகையான வழக்குகளும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன.   இந்த வழக்குகளை எல்லாம் நீதிபதிகள் காணொலி காட்சி மூலமாக மட்டுமே விசாரிப்பார்கள்.இதுகுறித்து நேற்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், காலை 10.30 முதல் மதியம் 1.30 மணி வரை ‘இ-மெயில்’ மூலம் வழக்குகளை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்குகள் எல்லாம் சம்பந்தப்பட்ட நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு பட்டியலிடப்படும். அவர் இந்த வழக்குகளை காணொலி காட்சி மூலமே விசாரிப்பார்கள். ஜூன் மாதம் முழுவதும் இந்த நிலையே நீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது

 

ReplyForward 

ஊரடங்கு 5.0-ல் என்னென்ன தளர்வு

ஊரடங்கு 5.0-ல் என்னென்ன தளர்வுகள்... முழு விவரம்


மே 30, 2020     20:08


ஜூன் 30-ம்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் ஓட்டல்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.4-வது கட்டமாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு நாளையுடன் (ஞாயிற்றுக்கிழமை) முடிவுக்கு வருகிறது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு 2 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டபோதிலும் கொரோனாவின் தாக்கமும், உயிர் இழப்புகளும் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன.

இந்தியாவில், இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 7,964 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனையடுத்து, நாட்டில், கொரோனா உறுதிபடுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,73,763 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 265 பேர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 4,971 ஆக அதிகரித்தது.


கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்த போதிலும் மக்களின் வாழ்வாதாரம், பொருளாதாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, ஊரடங்கு தொடர்பான பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் அவ்வப்போது தளர்த்தின.

இதனால் நிபந்தனைகளுடன் கடைகள், தொழிற்சாலைகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் திறக்கப்பட்டு செயல்படுகின்றன. வாகன போக்குவரத்துக்கு இருந்து வந்த கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டு உள்ளன. உள்நாட்டு விமான போக்குவரத்து தொடங்கி உள்ளது. என்றாலும் பஸ், ரெயில்கள் ஓடாததால் மக்களின் வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை.

கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், ஊரடங்கு நாளையுடன் நிறைவடைய இருப்பதால், அது மேலும் நீட்டிக்கப்படுமா? அப்படி நீட்டிக்கப்பட்டால் எத்தனை நாட்கள் நீட்டிக்கப்படும்? மேலும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுமா? என்பன போன்ற கேள்விகள் எழுந்தன.

இந்தநிலையில், நாடு முழுவதும் ஊரடங்கை ஜூன் 30-ம் தேதி வரை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

அன் லாக் 1.0 என்ற பெயரில் புதிய அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. அதில்

ஜூன் 1-ம் தேதி முதல் 30ம் தேதி வரை படிப்படியாக இயல்புநிலையை கொண்டுவருவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.


* ஜூன் 8-ம் தேதி முதல் வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி அளிக்கப்படுகிறது.


* ஜூன் 8-ம் தேதி முதல் ஓட்டல்கள், ரெஸ்டாரன்ட்ஸ் திறக்க மற்றும் விருந்தோம்பல் சேவைகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.


* ஷாப்பிங் மால்கள் திறக்க அனுமதி


* திருமணம் மற்றும் துக்க நிகழ்ச்சிக்கான கட்டுப்பாடு தொடர்கிறது.

* பொது இடங்களில் மது, போதைப் பொருட்களை பயன்படுத்துவது தடை செய்யப்படுகிறது

* சூழ்நிலைக்கு ஏற்ப தியேட்டர், உடற்பயிற்சிக் கூடங்கள் திறப்பது குறித்து முடிவு செய்யலாம்.

* பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறப்பது குறித்து மாநில அரசுகளுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும்.

* பொது இடங்களில் முக கவசம் அணிவதும், சமூக இடைவெளியைப் பின்பற்றுவதும் கட்டாயம்.

* கடைகளில் 5 நபருக்கு மட்டுமே அனுமதி.

* அதிக எண்ணிக்கையில் கூடுவதும் தடை செய்யப்படுகிறது.

* சிறப்பு ரெயில்கள், பயணிகள் ரெயில்கள், உள்நாட்டு விமான சேவை, வெளிநாட்டு விமான சேவை ஆகியவை கட்டுப்பாடுகளுடன் தொடரும்.

* இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும்.

* தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை மாவட்ட நிர்வாகமே முடிவு செய்யலாம்.

* மாநிலங்களுக்கு இடையே மற்றும் உள்ளேயும் சரக்கு வாகனங்களை இயக்க தடை இல்லை.

தடை செய்யப்பட்ட பகுதிகளில் ஜூன் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கபடுவதாக  அறிவிப்பு வெளியாகி உள்ளது.ஜூன் 30-ந்தேதி வரை சில தளர்வுகளுடன் பொதுமுடக்கம் நீடிக்கும்:

ஜூன் 30-ந்தேதி வரை சில தளர்வுகளுடன் பொதுமுடக்கம் நீடிக்கும்: தமிழக அரசு அறிவிப்பு4-வது கட்ட பொதுமுடக்கம் இன்றுடன் முடிவடைகிறது. இந்நிலையில் நேற்று கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் மட்டும் நாடு தழுவிய பொது ஊரடங்கு ஜூன் 30-ந்தேதி வரை நீட்டிக்கப்படுகிறது என்று மத்திய அரசு அறிவித்தது.

மேலும் 8-ந்தேதியில் இருந்து வழிபாட்டு தலங்கள், ஓட்டல்கள், மால்களை திறக்க அனுமதி அளித்தது.இந்நிலையில் தமிழகத்தில் ஜூன் 30-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. மறு உத்தரவு வரும் வரை தடைகள் அப்படியே நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஊரடங்கு 5.0

 

ஊரடங்கு 5.0-ல் என்னென்ன தளர்வுகள்... முழு விவரம்


மே 30, 2020     20:08


ஜூன் 30-ம்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் ஓட்டல்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.புதுடெல்லி:

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.4-வது கட்டமாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு நாளையுடன் (ஞாயிற்றுக்கிழமை) முடிவுக்கு வருகிறது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு 2 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டபோதிலும் கொரோனாவின் தாக்கமும், உயிர் இழப்புகளும் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன.

இந்தியாவில், இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 7,964 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனையடுத்து, நாட்டில், கொரோனா உறுதிபடுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,73,763 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 265 பேர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 4,971 ஆக அதிகரித்தது.


கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்த போதிலும் மக்களின் வாழ்வாதாரம், பொருளாதாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, ஊரடங்கு தொடர்பான பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் அவ்வப்போது தளர்த்தின.

இதனால் நிபந்தனைகளுடன் கடைகள், தொழிற்சாலைகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் திறக்கப்பட்டு செயல்படுகின்றன. வாகன போக்குவரத்துக்கு இருந்து வந்த கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டு உள்ளன. உள்நாட்டு விமான போக்குவரத்து தொடங்கி உள்ளது. என்றாலும் பஸ், ரெயில்கள் ஓடாததால் மக்களின் வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை.

கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், ஊரடங்கு நாளையுடன் நிறைவடைய இருப்பதால், அது மேலும் நீட்டிக்கப்படுமா? அப்படி நீட்டிக்கப்பட்டால் எத்தனை நாட்கள் நீட்டிக்கப்படும்? மேலும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுமா? என்பன போன்ற கேள்விகள் எழுந்தன.

இந்தநிலையில், நாடு முழுவதும் ஊரடங்கை ஜூன் 30-ம் தேதி வரை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

அன் லாக் 1.0 என்ற பெயரில் புதிய அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. அதில்

ஜூன் 1-ம் தேதி முதல் 30ம் தேதி வரை படிப்படியாக இயல்புநிலையை கொண்டுவருவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.


* ஜூன் 8-ம் தேதி முதல் வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி அளிக்கப்படுகிறது.


* ஜூன் 8-ம் தேதி முதல் ஓட்டல்கள், ரெஸ்டாரன்ட்ஸ் திறக்க மற்றும் விருந்தோம்பல் சேவைகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.


* ஷாப்பிங் மால்கள் திறக்க அனுமதி


* திருமணம் மற்றும் துக்க நிகழ்ச்சிக்கான கட்டுப்பாடு தொடர்கிறது.

* பொது இடங்களில் மது, போதைப் பொருட்களை பயன்படுத்துவது தடை செய்யப்படுகிறது

* சூழ்நிலைக்கு ஏற்ப தியேட்டர், உடற்பயிற்சிக் கூடங்கள் திறப்பது குறித்து முடிவு செய்யலாம்.

* பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறப்பது குறித்து மாநில அரசுகளுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும்.

* பொது இடங்களில் முக கவசம் அணிவதும், சமூக இடைவெளியைப் பின்பற்றுவதும் கட்டாயம்.

* கடைகளில் 5 நபருக்கு மட்டுமே அனுமதி.

* அதிக எண்ணிக்கையில் கூடுவதும் தடை செய்யப்படுகிறது.

* சிறப்பு ரெயில்கள், பயணிகள் ரெயில்கள், உள்நாட்டு விமான சேவை, வெளிநாட்டு விமான சேவை ஆகியவை கட்டுப்பாடுகளுடன் தொடரும்.

* இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும்.

* தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை மாவட்ட நிர்வாகமே முடிவு செய்யலாம்.

* மாநிலங்களுக்கு இடையே மற்றும் உள்ளேயும் சரக்கு வாகனங்களை இயக்க தடை இல்லை.

தடை செய்யப்பட்ட பகுதிகளில் ஜூன் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கபடுவதாக  அறிவிப்பு வெளியாகி உள்ளது.

 

 

உணவில் அதிகளவு தக்காளியை சேர்த்தால்

உணவில் அதிகளவு தக்காளியை சேர்த்தால் கிட்னியில் கல் வருமா?


மக்களிடையே சில உணவுப் பொருட்களால் கூட சிறுநீரக கற்கள் உண்டாக வாய்ப்புள்ளது என்று நம்புகின்றனர். அந்த வகையில் பார்க்கும்போது தக்காளி சிறுநீரக கற்களை உண்டாக்கும் என்ற நம்பிக்கை இருந்து வருகிறது. அது உண்மைதானா -  இல்லை, அது வெறும் கட்டுக்கதையா?.

தக்காளி ஒவ்வொரு இந்திய உணவு வகையிலும் இன்றியமையாத ஒன்று. நாம் சாப்பிடும் கறிக் குழம்பில் இருந்து கெட்ச்அப் வரை இதன் பயன்பாடு இன்றியமையாதது. தக்காளியின் தனித்துவமான சுவை மேலும் உணவிற்கு சுவை சேர்க்கிறது.அதுமட்டுமல்லாமல் தக்காளியில் ஏகப்பட்ட ஊட்டச்சத்துகள் காணப்படுகின்றன. விட்டமின் ஏ, பொட்டாசியம், நார்ச்சத்து, புரதம் ஆகிய ஏராளமான ஊட்டச்சத்துகள் உள்ளன. தக்காளி கண் பார்வைக்கு நல்லது. நீரிழிவு சிக்கல்களை களைய உதவுகிறது. சூரிய பாதிப்பிலிருந்து காக்கிறது. புரோஸ்டேட் புற்றுநோயின் அபாயத்தை குறைக்கிறது.

சிறுநீரக கற்களில் பல வகைகள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் கால்சியம் கற்கள். நமது சிறுநீரகங்களில் அதிகளவு கால்சியம் ஆக்ஸலேட் படிவதால் தான்இந்த மாதிரியான கற்கள் உருவாகிறது. இந்த கால்சியம் ஆக்ஸலேட் பல்வேறு வகையான காய்கறிகளிலும் பழங்களிலும் காணப்படுகிறது. மேலும் நம் கல்லீரலும் தினமும் குறிப்பிட்ட அளவு கால்சியத்தை உற்பத்தி செய்கிறது. நமது எலும்புகள் மற்றும் தசைகள் இரத்தத்தில் இருந்து அதிகளவு கால்சியத்தை உறிஞ்சி விடுகின்றன.

இதுவே இந்த கால்சியம் அளவு இரத்தத்தில் அதிகமாக இருக்கும் போது சிறுநீரின் வழியாக வெளியேற்ற வேண்டிய சூழல் உண்டாகிறது. ஆனால் சிறுநீரகத்தால் அவ்வளவு கால்சியத்தை வெளியேற்ற முடியாது. எனவே இந்த கால்சியம் படிப்படியாக படிந்து படிகக் கற்களின் வடிவத்தை அடைகிறது. எனவே தான் தக்காளியில் ஆக்ஸலேட் இருப்பதால் அதை சிறுநீரக கற்களுடன் இணைக்கின்றனர்.

ஆனால் உண்மையில் தக்காளியில் காணப்படும் ஆக்ஸலேட் அளவு மிகவும் குறைவு. இந்த ஆக்ஸலேட் அளவு சிறுநீரக கற்களை உருவாக்காது. 100 கிராம் தக்காளியில் 5 கிராம் அளவு ஆக்ஸலேட் மட்டுமே இருக்கிறது. எனவே தக்காளியை சாப்பிட்டால் சிறுநீரக கற்கள் உருவாகும் என்பதை நீங்கள் நம்ப வேண்டாம். நீங்கள் ஆரோக்கியமாக இருந்தால் உங்க சிறுநீரை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். நீங்கள் விரும்பும் அளவிற்கு தக்காளியை உணவில் சேர்த்துக் கொள்ள முடியும். இதுவே நீங்கள் சிறுநீரக தொடர்பான பிரச்சினைகளை கொண்டு இருந்தால் கீரை, பீன்ஸ், பீட்ரூட் போன்ற அதிக அளவு ஆக்ஸலேட் உணவுகளை தவிருங்கள். காய்கறிகளை சாப்பிடுவதற்கு முன்பு சரியாக சமைத்து சாப்பிடுங்கள்.


 

ReplyForwardசென்னை: தமிழகத்திலும், ஜூன் 30 வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

சென்னை: தமிழகத்திலும், ஜூன் 30 வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இது இன்றுடன்( மே 31) முடிவடைகிறது. இந்நிலையில், மத்திய அரசு பல்வேறு தளர்வுகளுடன் நாடு முழுவதும் ஊரடங்கை ஜூன் 30 வரை நீட்டித்தது. இதனடிப்படையில், தமிழகத்திலும் ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மாநில பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழும், மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிக்கையின் அடிப்படையிலும் தற்போதுள்ள ஊரடங்குஉத்தரவு ஜூன் 30 நள்ளிரவு 12 மணி வரை ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், கீழ்கண்ட சில தளர்வுகளுடனும் நீட்டிக்கப்படுவதாக அறிவித்துள்ளது.

ஏற்கனவே நடைமுறையில் உள்ள தடைகள் மறு உத்தரவு வரும் வரை அமலில் இருக்கும்.
* வழிபாட்டு தலங்கள், பொது மக்கள் வழிபாடு மற்றும் அனைத்து மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை
* நீலகிரி, கொடைக்கானல் மற்றும் ஏற்காடு சுற்றுலா தலங்களுக்கும், வெளியூர் சுற்றுலா செல்லவும் தடை
* தங்கும் வசதியுடன் கூடிய ஓட்டல்கள், ரிசார்ட்கள், பிற விருந்தோம்பல் சேவைகளுக்கு தடை தொடரும். எனினும், மருத்துவத்துறை, காவல்துறை, அரசு அலுவலர்கள் உள்ளிட்ட வெளி மாநிலத்தவர் மற்றும் தனிமைபடுத்தப்படும் பணிகளுக்கு மட்டும் விலக்கு
* வணிக வளாகங்களுக்கு தடை நீடிக்கிறது
* பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கு திறக்கக்கூடாது. இந்நிறுவனங்கள் ஆன்லைன் வழி கல்வி கற்றல் தொடரலாம். அதனை ஊக்கப்படுத்தலாம்.
* மத்திய உள்துறை அமைச்சகத்தால், அனுமதிக்கப்பட்ட பணிகளை தவிர சர்வதேச விமான போக்குவரத்திற்கு தடை நீடிக்கும்
*மெட்ரோ ரயில் / மின்சார ரயில் சேவை கிடையாது
* திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், நீச்சல் குளங்கள், கேளிக்கைக் கூடங்கள், மதுக்கூடங்கள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள், கடற்கரை, சுற்றுலா தலங்கள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் போன்ற பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு தடை
* அனைத்து வகையான சமுதாய, அரசியல், விளையாட்டு, பொழுது போக்கு, கலாசார நிகழ்வுகள், சமய, கல்வி, விழாக்கள், கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்களுக்கு தடை
* மாநிலங்களுக்கு இடையிலான பஸ் போக்குவரத்து
மேற்கண்ட கட்டுப்பாடுகள், தொற்றின் தன்மைக்கு ஏற்ப படிப்படியாக தளர்வு அளிvக்கப்படும்.latest tamil news


* திருமண நிகழ்ச்சிகளில் 50க்கு மேல் பங்கேற்க கூடாது.
* இறுதி ஊர்வலத்திற்கும் ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகள் தொடரும்.
* சென்னையில் கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர்த்து மற்ற இடங்களில் சலூன்கள், அழகு நிலையம் செயல்பட அனுமதி
* வணிக வளாகங்கள் தவிர மிக பெரிய கடைகள் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படலாம்.சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு தவிர்த்து மற்ற மாவட்டங்களில் 50 சதவீத பஸ்கள் இயங்கும்.60 சதவீத பயணிகள் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படும்
* போக்குவரத்திற்காக தமிழகம் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. மண்டலங்களுக்கு இடையே செல்ல தடை நீடிக்கப்படுகிறது.
* பஸ்களில் பயணிக்க இ-பாஸ் தேவையில்லை
* மண்டலங்களுக்குள் பயணம் செய்ய இ-பாஸ் தேவையில்லை.
* பிற மண்டலத்திற்கு செல்லும் போது இ-பாஸ் முறை நீடிக்கும்
* மாநிலங்களுக்கு இடையிலான பஸ் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்படுகிறது.
* ஜூன் 8 முதல் தேநீர் கடைகள், உணவகங்களில் 50 சதவீத இருக்கைகளுடன் நிபந்தனையுடன் அனுமதி
* வாடகை டாக்சிகள் 3 பேருடன் இயங்க அனுமதி
* அத்தியாவசிய கடைகள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதிகொரோனா பாதிப்பு உலக அளவில் 61 லட்சத்தை தாண்டியது

கொரோனா பாதிப்பு உலக அளவில் 61 லட்சத்தை தாண்டியது; இறப்பு 3.70 லட்சம்


உலகளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 61,53,372 ஆக அதிகரித்து உள்ளது.


மே 31,  2020   08:18 AM


 


வாஷிங்டன்


 


உலகளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 61,53,372 ஆக அதிகரித்து உள்ளது.குணமடைந்தோர் எண்ணிக்கை 27,34,548 ஆக உள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,70,870 ஆக அதிகரித்து உள்ளது.


 


அமெரிக்காவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18,16,820 ஆக அதிகரித்து உள்ளது.கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,05,557 ஆக உயர்ந்து உள்ளது.


 


நேற்று ஒரே நாளில் 23 ஆயிரத்து 300 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டதால் அங்கு வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 லட்சத்து 16 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் நோய்த் தொற்றினால் ஆயிரம் பேர் வரை உயிரிழந்ததால் இதுவரை ஒரு லட்சத்து 5 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். 17 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதால் அங்கு மரணிப்போர் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


 


இந்த நிலையில் பெரும் தொற்றினால் அதிகம் பாதிக்கப்பட்டிருந்த நியூயார்க் பகுதியில் மரணிப்போர் எண்ணிக்கை குறைந்து வருவதாக மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார். ஆனால் பெரிய அளவிலான கூட்டங்களை தவிர்க்குமாறு பொதுமக்களை அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இதனிடையே அமெரிக்க - தென்கொரிய கூட்டுப்படைகளுக்கு அதிகாரிகளாக நியமிக்கப்பட்ட இருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதுSaturday, May 30, 2020

மாங்காய் ஊறுகாய்

kunkuma dhivya's kitchen receipes


 Mangai oorugai/mango pickle/pickle variety in Tamil/Home made mango pickle/traditional mango pickle


This is the traditional way of making mango pickle. No preservatives. No food colour


to see preparation liveby


தீபாவும், தீபக்கும் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள்

தீபாவும், தீபக்கும் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள் -  தீர்ப்பில் திருத்தம் செய்து ஐகோர்ட்டு அறிவிப்புதீபாவும், தீபக்கும் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள் என்று தெளிவுப்படுத்தியும், தீர்ப்பில் திருத்தம் செய்தும் சென்னை ஐகோர்ட்டு அறிவித்துள்ளது.


30-05-2020   05:30 


 


சென்னை


 


மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான சென்னை போயஸ் கார்டன் இல்லம் உள்பட சுமார் ரூ.913 கோடி மதிப்புள்ள சொத்துக்களை நிர்வகிக்க ஒரு நிர்வாகியை நியமிக்க வேண்டும் என்று அ.தி.மு.க. நிர்வாகி புகழேந்தி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.


 


அதேபோல, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, மகன் தீபக் ஆகியோர் தங்களை ஜெயலலிதாவின் வாரிசுகள் என்று அறிவிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகள் நீதிபதிகள் என்.கிருபாகரன், அப்துல்குத்தூஸ் ஆகியோர் விசாரித்து கடந்த 27-ந்தேதி தீர்ப்பு அளித்தனர். அதில், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, மகன் தீபக் ஆகியோர் இரண்டாம் நிலை வாரிசுகள் என்று கூறப்பட்டு இருந்தது.


 


இந்தநிலையில், இந்து வாரிசு முறைச் சட்டத்தின்படி தங்களை நேரடி வாரிசுகளாக அறிவிக்க வேண்டும் என்றும் இரண்டாம் நிலை வாரிசுகள் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதை திருத்தம் செய்ய வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் தீபாவும், தீபக்கும் ஒரு மனுவை தாக்கல் செய்தனர்.


 


இந்த மனுவை நீதிபதிகள் என்.கிருபாகரன், அப்துல் குத்தூஸ் ஆகியோர் நேற்று விசாரித்தனர். பின்னர், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-


 


கடந்த 27-ந்தேதி பிறப்பித்த தீர்ப்பில், ஜெயலலிதாவின் இரண்டாம் நிலை வாரிசுகள் தீபா, தீபக் என்றும் ஜெயலலிதா தன் தாயாரிடம் இருந்து பெற்ற பரம்பரை சொத்துக்களும், அவர் வாங்கிய சொத்துக்களுக்கும் இவர்கள்தான் வாரிசுகள் என்றும் கூறப்பட்டு இருந்தது.


 


இந்து வாரிசு முறை சட்டப்பிரிவுகளின்படி, திருமணம் ஆகாத ஜெயலலிதாவுக்கு நேரடி வாரிசுகள் இல்லை என்பதால், தீபாவும், தீபக்கும் அவரது வாரிசுகள் என்று அறிவிக்கிறோம். தீர்ப்பில் இவர்களை ஜெயலலிதாவின் இரண்டாம் நிலை வாரிசுகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளதை நீக்குகிறோம். அதற்கு பதில் இவர்கள் நேரடி வாரிசுகள் என்று தீர்ப்பில் திருத்தம் செய்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


 


வழக்கு விசாரணையின்போது நீதிபதிகளிடம் அட்வகேட் ஜெனரல், ‘போயஸ் கார்டன் வீட்டை அரசு கையகப்படுத்துவது தொடர்பாக அறிவித்துள்ள நிலையில், கடந்த 27-ந்தேதி ஐகோர்ட்டு தீர்ப்பு வந்ததும், ‘தீபா தன் கணவருடன் போயஸ் கார்டன் வீட்டுக்கு சென்று அங்கு பிரச்சினை செய்தார்‘ என்று கூறினார்.


 


இதுகுறித்து தீபாவின் வக்கீல் சாய்குமரனிடம் நீதிபதிகள் விளக்கம் கேட்டனர். அதற்கு அவர், ‘தீபா அங்கு சென்று இருக்கலாம். ஆனால், சட்டவிரோதமாக எந்த ஒரு செயலிலும் ஈடுபடவில்லை. பிரச்சினை செய்யவில்லை. வீட்டை பார்க்க சென்று இருக்கலாம்‘ என்று பதில் அளித்தார்.


 


இதையடுத்து நீதிபதிகள், ‘ஜெயலலிதாவின் வாரிசுகள் என்று தீபா, தீபக்கை இந்த ஐகோர்ட்டு அறிவித்துள்ளது. எனவே, ஜெயலலிதாவின் சொத்துக்களை எடுப்பது தொடர்பாக அரசு சட்டம் இயற்றினால், அதை எதிர்த்து நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்து, நிவாரணம் பெறவேண்டும்‘ என்று அறிவுரை வழங்கினர்.


 ஜெயலலிதாவின் சொத்துக்கள் பற்றி முழுமையாக அறிய விசாரணை கமிஷன்

ஜெயலலிதாவின் சொத்துக்கள் பற்றி முழுமையாக அறிய விசாரணை கமிஷன் தேவை: திருநாவுக்கரசர் எம்.பி.


சென்னை: ஜெயலலிதாவின் சொத்துக்கள் எவ்வளவு என்பதை முழுமையாக அறிய விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்று திருநாவுக்கரசர் எம்.பி. தெரிவித்துள்ளார். மேலும் ஜெயலலிதாவின் வாரிசுகளாக தீபா, தீபக்கை நீதிமன்றம் அறிவித்தது மகிழ்ச்சியளிக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.


 ஆத்தி சூடி             (கோ)              *     கோதாட்டு ஒழி

ஆத்தி சூடி
            (கோ)
             *
    கோதாட்டு ஒழி
             *
     ஒருவிகற்ப
      இன்னிசை
       வெண்பா
             *ஒலி ஒளி உணர  கோதினை
    ஆட்டும்
     குணத்தை
      ஒழித்தால்


  வாதினை
    மாற்றி
     வளத்தைப்
       பெறலாம்


 சூதினை
   ஓட்டும்
     சுகத்தை
      உணர


 ஓதிநீ
    உயர்வாய்
      உணர்ந்து.
            *
வணக்கத்துடன்🙏
 ச.பொன்மணி


லட்சக்கணக்கானோரை புகை பிடிப்பதை கைவிட வைக்கிறது கொரோனா.

லட்சக்கணக்கானோரை புகை பிடிப்பதை கைவிட வைக்கிறது கொரோனா...


கொரோனா வைரஸ், புகை பிடிப்போர் வாழ்வில் ‘கேம் சேஞ்சர்’ என்பது போல பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் சூழல் உருவாகி உள்ளது.


 


புதுடெல்லி:

சிகரெட் புகைப்பது உள்பட புகையிலையை எந்த வகையில் ஒருவர் பயன்படுத்தினாலும் அது அவர்களுக்கு பகை, உயிராபத்தை ஏற்படுத்தும் புற்றுநோய்க்கு வழிவகுத்து விடும் என்றெல்லாம் காலகாலமாக எச்சரிக்கை விடப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது.புகைப்பது உடல்நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் என்று சிகரெட் பாக்கெட்டில் விளம்பரம் செய்யப்பட்டிருக்கிறது. ஆனாலும் எளிதில் யாரும் புகை பிடிப்பதை விட்டு விட முன்வருவதில்லை. மது போதை போல சிகரெட் போதையில் கோடிக்கணக்கானோர் உலகமெங்கும் அகப்பட்டுள்ளனர். இப்போது கொரோனா வைரஸ்அவர்கள் வாழ்வில் கேம் சேஞ்சர்’ என்பது போல பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் சூழல் உருவாகி உள்ளது.

இதற்கு காரணம் இல்லாமல் இல்லை.

கொரோனா வைரஸ் தாக்கம் தீவிரமாகிறபோது அது மனிதர்களின் நுரையீரலில்தான் பெருத்த பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது. சுவாசிப்பதில் சிக்கலை உண்டுபண்ணுகிறது. வென்டிலேட்டர் என்னும் செயற்கை சுவாச கருவிகளை பொருத்தி சுவாசிக்க வைக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. அதிலும் வென்டிலேட்டர் கருவிகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.

இந்த நிலையில் புகை பிடிக்கிறவர்களுக்குகொரோனா தொற்று ஏற்பட்டால் பாதிப்பு அதிகம் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்தது. அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் எச்சரித்தது. புகை பிடிப்பதை தவிர்க்க வேண்டும் என்று இந்திய சுகாதார அமைச்சகமும் வலியுறுத்தியது.

கொரோனா வைரஸ் பாதிப்பு அச்சம் காரணமாக லட்சக்கணக்கானோர் இப்போது மனம் மாறி வருகிறார்கள்.

யுகாவ்புகைபிடித்தல் மற்றும் ஆரோக்கியம் என்ற பிரசார குழுவின் சார்பில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வில்கொரோனா வைரஸ் அச்சத்தால் லட்சத்துக்கும் அதிகமானோர் இங்கிலாந்து நாட்டில் புகைப்பிடிக்கும் பழக்கத்தை விட்டுவிட்டதாக தெரிய வந்தது. மேலும், 5½ லட்சம் பேர் புகை பிடிப்பதை விட முயற்சித்துள்ளனர். 24 லட்சம் பேர் தினமும் புகைக்கிற அளவை குறைத்துள்ளனர்.

இந்த நிலையில் லட்சக்கணக்கானோர் சிகரெட் புகைப்பதை விட்டு விட விரும்புகின்றனர் என்று உலக சுகாதார நிறுவனத்தின் சுகாதார மேம்பாட்டு இயக்குனர் ருடிகர் கிரெச் கூறுகிறார். இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், “இந்த கொரோனா வைரஸ் தொற்று நோய் நெருக்கடிகளுக்கு மத்தியில் லட்சக்கணக்கானோர் புகை பிடிக்கும் பழக்கத்தை விட்டுவிட விரும்புவதை இப்போது நாங்கள் பார்க்கிறோம். இந்த நெருக்கடியான காலகட்டத்தில்புகையிலை பொருட்கள் பயன்படுத்தும் பழக்கத்தை நிறுத்தும் திட்டங்களில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. புகை பிடிப்பதை கைவிட எங்களுக்கு ஆதரவு காட்டுங்கள் என்று கோரிக்கை விடுக்கிறார்கள்” என்று குறிப்பிட்டார்.

பல நாடுகளிலும் புகையிலை பொருட்கள் பயன்படுத்துவதை நிறுத்தும் திட்டங்களுக்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது என்று உலக சுகாதார நிறுவனத்தின் புகையிலை இல்லை’ பிரிவின் ஒருங்கிணைப்பாளரான விநாயக் பிரசாத் கூறுகிறார்.

மெக்சிகோஜோர்டான்இந்தியாசீனா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் இப்படி புகையிலை பொருட்களை கைவிட விருப்பம் தெரிவித்துள்ளனர். இவர்களுக்காக நாங்கள் புதிய தீர்வுகளைதொழில்நுட்ப தீர்வுகளை தேடுகிறோம்” என்கிறார் விநாயக் பிரசாத்.

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் புகை பிடிப்போரும்புகையிலை பொருட்களை பயன்படுத்துவோரும் தங்கள் பழக்கத்தை முடிவுக்குக் கொண்டு வந்தால் அது அவர்களுக்கும் நல்லதுமற்றவர்களுக்கும் நல்லது.இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத சரிவு ஏற்பட்டுள்ளது

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத சரிவு ஏற்பட்டுள்ளது


புதுடெல்லி


 


இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கடந்த 44 காலாண்டுகளில் அதாவது கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத சரிவு ஏற்பட்டுள்ளது என்று மத்திய புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது. அதேபோல், 2019-20-ஆம் நிதியாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.2 சதவிதமாக குறைந்துள்ளது.


 


அதற்கு முந்தையை 2018-19-ஆம் நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி 6.1 சதவிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. கொரோனா பாதிப்பு காரணமாக, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்த சரிவு ஏற்பட்டுள்ளதாகவும், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சரிவு இன்னும் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


 


மேலும் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டிற்கான முடிவுகள் வரும் போது தான் இந்தியாவில் கொரோனா ஏற்படுத்திய தாக்கம் முழுமையாக தெரியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.விவசாயத்தை அடுத்து  இரண்டாவது பெரிய துறையான கட்டுமானத் துறை மார்ச் மாதத்துடன் முடிவடைந்த மூன்று மாதங்களில் இரண்டாவது காலாண்டில் 2.2% ஆக சரிவடைந்தது. நகரங்களில் இருந்து புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு சென்றதால்  ஜூன் காலாண்டில் கட்டுமான நடவடிக்கைகள் மேலும் பாதிக்கப்படும்.


 


இந்த மாதத்தில், சிமெண்ட் மற்றும் எஃகு உற்பத்தி முறையே 86 சதவீதம்மற்றும் 83.9 சதவீதமாக ஆக சரிவடைந்தது. அதே நேரத்தில் மின்சாரம் மற்றும் நிலக்கரி உற்பத்தி முறையே 22.8 சதவீதம்  மற்றும் 15.5 சதவீதம்  சரிவடைந்தது. இந்தியாவின் உற்பத்தி கொள்முதல் மேலாளர்களின் குறியீடு, அல்லது பி.எம்.ஐ, ஏப்ரல் 27.4 ஆக மிகக் குறைந்த அளவிற்கு சரிந்தது, அதே நேரத்தில் வர்த்தக ஏற்றுமதி 60 சதவீதம் சரிவடைந்தது.


சீனாவின் பிடியில் உலக சுகாதார அமைப்பு

சீனாவின் ஹூய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் என்ற தகவல் மற்றும் வைரஸ் தொடர்பான விவரங்களை சீன அரசு மறைத்து விட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.இந்த வைரசின் தீவிரத்தன்மை குறித்து பிற நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்காமல் சீனாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்ததாக உலக சுகாதார அமைப்பு மீது டொனால்டு டிரம்ப் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
 
அந்த அமைப்பின் தாமதமான செயல்கள் உலக நாடுகளுக்கு பல்வேறு பின்விளைவுகளை ஏற்படுத்தி விட்டதாக தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனாவுக்கு ஆதாரவாக உலக சுகாதார அமைப்பு உள்ளது. எனவே அந்த அமைப்பிற்கு வழங்கும் நிதியை நிறுத்துவதாக அறிவித்தார். இதையடுத்து முதல் கட்டமாக கடந்த ஏப்ரலில் ரூ. 3000 கோடி நிதியை டிரம்ப் நிறுத்தினார்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் விவகாரத்தில் உலக சுகாதார அமைப்புடனான உறவை அமெரிக்கா துண்டித்துக் கொள்கிறது என அதிபர் டிரம்ப் அதிரடியாக அறிவித்தார்.

இதுதொடர்பாக, அதிபர் டிரம்ப் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
 
சீனாவின் பிடியில் உலக சுகாதார அமைப்பு சிக்கியுள்ளது. ஆண்டுக்கு 450 மில்லியன் டாலர் வழங்கி வந்த அமெரிக்காவின் உறவை விட ஆண்டுக்கு 40 மில்லியன் டாலர் கொடுக்கும் சீனாவுடன் உலக சுகாதார அமைப்பு உறவு வைத்துள்ளது. இது தவறு உடனே திருத்திக்கொள்ளுமாறு உலக சுகாதார அமைப்பினை வலியுறுத்தியும் செவி சாய்க்கவில்லை.

இனி அந்த அமைப்புடனான உறவை அமெரிக்கா துண்டித்துக்கொள்கிறது. அந்த அமைப்பிற்கு வழங்கும் நிதியை வேறு சுகாதார அமைப்பிற்கு வழங்க எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.Friday, May 29, 2020

ஆத்தி சூடி            (கொ)               *        கொள்ளை         விரும்பேல்

ஆத்தி சூடி
           (கொ)
              *
       கொள்ளை
        விரும்பேல்
               *
        ஒருவிகற்ப
         இன்னிசை
          வெண்பா
               *ஒலி ஒளி உணர
 கொள்ளை
    விரும்பும்
      குணத்தை
        விடுத்திட


 அள்ளக்
    குறையா
      அருளும்
       அமைந்திடும்


 தெள்ளத்
   தெளிந்த
     திறமாய்த்
      தினந்தினம்


 கொள்வாய்
    இதயம்
      குளிர்ந்து.
           *
வணக்கத்துடன்🙏
ச.பொன்மணி


பொன்மகள் வந்தாள் திரைப்பட விமர்சனம்

ponmagalvanthaal #ponmagalvandhal #padameppadiirukku


Ponmagal Vandhal Movie Review | Ponmagal Vandhal Detailed Review by VJ Venkat | Ponmagal Vanthal


BY Padam Eppadi Irukkuதிரை விமர்சனஙம் உங்கள்


VJ Venkat 


இலக்கியச் சோலையிலே


 


இலக்கியச் சோலையிலே


 


சுமார் 36 ஆண்டுகளுக்கு முன் வந்த படத்தில் உள்ள, ஒரு பாடல், ஆடல், இசை, அபிநயங்கள்.  . நீங்களும் இலக்கியச் சோலையினுள் புகுந்து பாடலில் உள்ள வரிகளை, இசையை, நடனத்தை, நடிப்பை ஒரு சேர இரசியுங்களேன்.


... சா... மக மக சா
மக மக சா... சா...

அழகு மலராட அபிநயங்கள் கூட
சிலம்பொலியும் புலம்புவதை கேள்
என் சிலம்பொலியும் புலம்புவதை கேள்

அழகு மலராட அபிநயங்கள் கூட
சிலம்பொலியும் புலம்புவதை கேள்

விரல் கொண்டு மீட்டாமல்
வாழ்கின்ற வீணை
குளிர் வாடை கொஞ்சமல்
கொதிக்கின்ற சோலை

பகலிரவு பல கனவு
இரு விழியில் வரும்பொழுது

அழகு மலராட அபிநயங்கள் கூட
சிலம்பொலியும் புலம்புவதை கேள்

ஆகாயம் இல்லாமலே
ஒரு நிலவு தரை மீது தல்லாடுது
ஆதாரம் இல்லாமலே
ஒரு கொடியும் ஆடாமல் தலை சாயுது

தாளத்தில் சேராத தனி பாடல் ஒன்று
சங்கீதம் காணாமல் தவிக்கின்றது
விடியாத இரவேதும் கிடையாது என்று
ஊர் சொன்ன வார்தைகள் பொய்யானது

வசந்தம் இனி வருமா
வாழ்வினிமை பெருமா
ஒரு பொழுது மயக்கம்
ஒரு பொழுது கலக்கம்
பதில் ஏதும் இல்லாத கேள்வி


படம்   வைதேகி காத்திருந்தாள்


நடிகர்கள்    விஜயகாந்த், ரேவதி


பாடலாசிரியர்  வாலி


இசை  இளையராஜா


பாடியவர்  எஸ். ஜானகி


ஆண்டு  1984


பாடலை காண

  

ஒரு லட்சம் பேர் உயிரிழப்பு என்ற மிகவும் சோகமான சாதனை

ஒரு லட்சம் பேர் உயிரிழப்பு என்ற மிகவும் சோகமான சாதனை: டொனால்டு டிரம்ப் வேதனை


28-05- 2020    20:26


 அமெரிக்காவில் கொரோனாவால் ஒரு லட்சம் பேர் உயிரிழந்திருப்பது சோகமான சாதனை என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது டுவிட்டர் பதிவில் வேதனையோடு தெரிவித்திருக்கிறார்.


டொனால்டு டிரம்ப்


உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 58,22,571 ஆக உள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,58,126 ஆக உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்றுக் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25,22,999 ஆக உள்ளது.


 


இந்நிலையில், அமெரிக்காவில் கொரோனா வைரசால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது. அதாவது அமெரிக்காவில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,02,197 ஆக அதிகரித்துள்ளது.


 


கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 17,47,781 ஆக உள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,90,356 ஆக உள்ளது. தற்போது சிகிச்சையில் இருப்பவர்கள் எண்ணிக்கை 11,55,238 ஆக உள்ளது.


 


இதனைத்தொடர்ந்து ஸ்பெயின், பிரேசில், ஜெர்மனி, இத்தாலி, ரஷ்யா, துருக்கி, ஈரான், சீனா ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘கொரோனாவால் ஒரு லட்சம் பேரை இழந்திருக்கிறோம் என்ற சோகமான சாதனையை எட்டியுள்ளோம். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு என்னுடைய மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடவுள் எப்போதும் உங்களுடன் இருப்பாராக’’ எனப் பதிவிட்டுள்ளார்.


 Featured Post

மனிதனை மீறிய சந்தர்ப்பங்கள் வாழ்க்கையை எவ்வளவு தூரம் திருப்பிவிடுகின்றன

  மனிதனை மீறிய சந்தர்ப்பங்கள் வாழ்க்கையை எவ்வளவு தூரம் திருப்பிவிடுகின்றன என்பதற்கு நான் ஓர் உதாரணம்.’’ – இது, ‘சரித்திர நாவல்களின் ஜாம்பவான...