Posts

Showing posts from December, 2022

இருக்கின்ற நாட்களில் இன்புற்றிருப்போம், இருப்பவை பகிர்வோம்,

Image
2022 ஆம் வருடத்தின் இறுதி நாட்களில் இருக்கிறோம்.!! இந்த வருடத்தில் என்னால் உங்களுக்கேதும் நன்மை நடந்திருந்தால் அதற்காக மகிழ்கிறேன், வருத்தமோ தீமையோ நடந்திருப்பின் அதற்காக வருந்துகிறேன்.!! காலம் மிக விசித்திரமானது, கலைத்து போட்ட சீட்டு கட்டு மாதிரி, முன் பின் தெரியாதவர்களை நண்பர்களாக்கும், நண்பர்களை பகைவராக்கும், பகைவர்களை அன்பராக்கும்.!! உணர்வுகளின் அடிப்படையில் அமைகிறது மனித வாழ்க்கை, பல முடிவுகளும், சில தவறுகளும் கடந்தே பயணிக்கிறது வாழ்க்கை..!! ஆரம்பம் அறிந்த மனிதன், முடிவினை அறிய வாய்ப்பில்லை, அடுத்த ஆண்டு இந்த நேரம் இப்படி எழுத இயலுமா?! இவ்வுலகில் இருப்பதும் இல்லாததும் இறைவன் விருப்பம்.!! ஆகவே இருக்கின்ற நாட்களில் இன்புற்றிருப்போம், இருப்பவை பகிர்வோம், வருகின்ற ஆண்டு(2023 ) வளம், நலம் சேர்க்கட்டும்...!! நட்பு தொடருமென நம்பிக்கையில் பயணிப்போம்..!! நன்றி,வணக்கம். ஜெய் ஹிந்த்.  என்றும் அன்புடன், கவிமுரசு பிரவீன்..

கடன் தொல்லை அகற்றும் லட்சுமி நரசிம்மர்*

Image
கடன் தொல்லை அகற்றும் லட்சுமி நரசிம்மர்* ஸ்ரீரங்கத்திற்கு அடுத்தபடியாகப் போற்றப்படும் தலம். சிறந்த பிரார்த்தனைத்தலம். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே இருக்கிறது, அரியக்குடி என்ற ஊர். இங்கு லட்சுமி நரசிம்மர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் சக்கரத்தாழ்வாரும் அருள்பாலிக்கிறார். இத்தல லட்சுமி நரசிம்மருக்கு அர்ச்சனை செய்து, எழைகளுக்கு அன்னதானம் வழங்கினால், கடன் பிரச்சினைகள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஸ்ரீரங்கத்திற்கு அடுத்தபடியாகப் போற்றப்படும் தலம். தென் திருவேங்கடமுடையான் தலம். நகரத்தார் கோயில்களான 9 கோயில்களில் உள்ள வைணவத்தலம். சிறந்த பிரார்த்தனைத்தலம். இந்தத் தலத்திற்கு நேர் எதிரே இந்த லட்சுமி நரசிம்மப்பெருமாள் மகாலட்சுமியுடன் சேவை சாதிக்கிறார். பெருமாள் கோயிலுக்கு நிகரான தொன்மை சிறப்பு மிக்கது இந்த நரசிம்மர் கோயில். பிரசித்திபெற்ற அரியக்குடி ராமானுஜ அய்யங்காரின் அவதாரத் தலம். மகாலட்சுமியினை ஆலிங்கனம் செய்த வண்ணம் தென் திருவேங்கடமுடையான் நின்ற திருக்கோலத்தில் அருட் பாலிக்கிறார். கிழக்கு திருமுகமாக ஸ்ரீதேவி பூமி தேவி நாச்சியார் உள்ளனர். காரைக்குடியிலிருந்து கிழக்கே 4 கி.மீ. தூரத

திரைக் கலைஞர் ரோகிணி

Image
 திரைக் கலைஞர் ரோகிணி அவர்களை இருபத்தி ஐந்து ஆண்டுகளாய் அறிவேன் என்றாலும் பல வருடங்கள் ஆயிற்று அவரை நேரில் சந்தித்து.  நேற்று 'பிகினிங்' (#begining ) பட ப்ரமோஷனுக்காக தொலைக்காட்சி ஒளிப்பதிவு ஒரு ஒன்றுக்கு 'திருப்பதி பிரதர்ஸ்' அலுவலகம் வந்திருந்த அவரைச் சந்திக்க முடிந்தது.  பல ஆண்டுகள் ஆன போதும் நேற்று விட்ட இடத்தில் இருந்து இன்று உரையாடலைத் தொடங்குவதைப் போன்ற உணர்வு சிலரிடம் மட்டும்தான் உருவாகும்.  அது நேற்று கிடைத்தது. என் தோற்றம் முற்றிலும் மாறிவிட்டது என்றார் . இப்போது நானும் ஒரு நடிகன் என்றேன். வாய்விட்டு சிரித்து 'வாங்க வாங்க' என்றார். 'புத்தகக் கண்காட்சிக்கு என்ன கொண்டு வருகிறீர்கள்?' ஒரு கவிதைத் தொகுப்பு மேடம்... தலைப்பு 'முக்கோண மனிதன் ' 'வாழ்த்துக்கள் பிருந்தா ' மேலும் நீண்ட உரையாடலில் அவரது பிறந்த நாளில் நான் எழுதிய வாழ்த்தை நினைவு கூர்ந்து நேற்று நன்றி தெரிவித்தார்.  சென்ற ஆண்டின் சிறந்த படங்களில் ஒன்றான 'விட்னஸ்' திரைப்படத்தில் பங்கேற்றதற்காக அவரைப் பாராட்டினேன்.  கைக்குழந்தையாகப் பார்த்த அவரது மகன் இப்போது அட்லாண்டாவி

ISR Ventures 5நிமிட குறும்பட போட்டியின் விருது வழங்கும் விழா

Image
  ISR Ventures    5 நிமிட குறும்பட போட்டியின் விருது வழங்கும் விழா   ISR Ventures      குழந்தைகளின் உரிமை என்கிற தலைப்பில் நடத்திய   5  நிமிடக்குறும்படப்போட்டியின் விருது வழங்கும் விழா 29.12.2022 அன்று   தமிழ் நாடு திறந்த நிலைப்பல்கலைகழக அரங்கில் நடைபெற்றது .    இந்த நிகழ்வில் தேசிய விருது பெற்ற இயக்குநர் சேரன் கலந்துகொண்டு வெற்றிபெற்றவர்களுக்கு விருதுகளை வழங்கி கெளரவித்தார் .   ISR Ventures சோலையப்பன் , ISR செல்வகுமார் , இயக்குநர் ராசி அழகப்பன் தமிழ் நாடு திறந்தநிலைப்பல்கலைக்கழக பேராசிரியர்கள் எம் . மணிவண்ணன் மற்றும் பூ . தியாகராஜன் ஆகியோர் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் தமிழ் நாடு திறந்தநிலைப்பல்கலைக்கழகத்தின் இதழியல் மற்றும் புதிய ஊடகப்புலம் உதவி பேராசிரியர்கள் முனைவர் பூ . சித்ரா மற்றும் முனைவர் சி . கார்த்திகேயன் ஆகியோர் ISR செல்வகுமார் உடன் இணைந்து நிகழ்ச்சியை சிறப்பாக ஒருங்கிணைத்தனர் . ISR Ventures சோலையப்பன் அவர்கள் தலைமையில்   நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் முதல் பகுதியில் … . பேராசியர் எம் . மணிவண்ணன் மற்றும் பூ