Posts

Showing posts from June, 2022

நிலையில்லாத ஆசை மனதில் நித்தம் நூறு கனவுகள்...

Image
  நிலையில்லாத ஆசை மனதில்  நித்தம் நூறு கனவுகள்... சென்ற ஆண்டு படைப்பாக்கம் செய்திருக்க வேண்டிய பாடல். இந்த ஆண்டுதான் கைகூடியது. பாடலாசிரியர் கார்மேகம் நந்தா அவர்களுடைய பல பாடல்களுக்கு நடன அமைப்பும் ஆடலும் செய்திருக்கிறேன். நோர்வே நாட்டில் எனது முதல் நடன ஆசானும் அவர்தான். எனக்காகவே அவர் எழுதி மேடையேறிய பாடல்களும் உள்ளன. கார்மேகம் நந்தா அவர்கள் நடனமும் கற்றிருப்பது இன்றுவரை அவருடைய வரிகளுக்கு வீரியம் சேர்ப்பதாவே இருக்கிறது.  நோர்வே நாட்டின் வேனிற் காலம் மிக அற்புதமாக மலரும். அருவிகளும் பூக்களும், மரங்களும் இயற்கை வனப்புமாக எப்போதும் மனதை துடிப்போடு வைத்துக்கொள்ளும் காலம். நோர்வே நாட்டின் சிறு துளி இயற்கையோடு...  அலையுரசிச் செல்லும் கரையில்... https://youtu.be/fIOB4sV6itY Vocal: Kalpana  Lyrics: Karmegam Nanda Music: K.S. Raghunathan Cinematography: Raja Rajan Production: Sri Santhana Arts KalaSaadhana - ADI Kavitha Laxmi

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படக்கூடிய கால் புண் விரைவில் குணம் பெற உதவும் குறிப்புகள்.

Image
 சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படக்கூடிய கால் புண் விரைவில் குணம் பெற உதவும் குறிப்புகள். சர்க்கரை நோயாளிகளுக்கு கணையத்தில் இன்சுலின் சுரப்பதில் குறைபாடு வருவதற்கு, பாரம்பரியம் ஒரு முக்கிய காரணமாக உள்ளது. சர்க்கரை நோய் உள்ள சிலருக்கு புண் ஏற்பட்டால் அது விரைவில் ஆறாது. ஒரு சிலருக்கு புண் மேலும் பெரிதாகி பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. மா இலை மற்றும் அத்தி இலை ஆகிய இரண்டையும் எடுத்து அரைத்து கொள்ளவும். பிறகு அடுப்பில் ஒரு மண் பாத்திரம் வைத்து அதில் ஒரு லிட்டர் தண்ணீர் ஊற்றி அதில் இந்த அரைத்த இலைகளை போட்டு அது பாதியாக வரும் வரை காய்ச்ச வேண்டும். பின்பு இதை ஒரு வெள்ளை துணியில் ஊற்றி வடிகட்டி அந்த சாறை மட்டும் தனியாக எடுத்து கொள்ளவும். இந்த சாற்றை தினமும் காலை உணவுக்கு முன்பு 50 மில்லி குடிக்க வேண்டும். அதேப்போல் இரவு உணவுக்கு பிறகு 50 மில்லி குடிக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து குடித்து வர உடலில் ஏற்பட்ட புண் விரைவில் சரியாகும். அத்தி இலை, வேப்பிலை, மஞ்சள் தூள் ஆகிய மூன்றையும் எண்ணெய்யில் போட்டு கலந்து புண் ஏற்பட்ட இடத்தில் இரவில் தூங்கும் முன்பு தடவி வந்தால் தீராத புண்களும் சரியாகிவிடும். அதே

தினந்தோறும் பாகற்காய் ஜூஸ் பருகுவதால்

Image
 தினந்தோறும் பாகற்காய் ஜூஸ் பருகுவதால் என்ன நன்மைகள்...?🌐⛔ * பாகற்காயில் வைட்டமின் ஏ, பி, சி, பீட்டா-கரோட்டின் போன்ற ஃப்ளேவோனாய்டுகள், லூடின், இரும்புச்சத்து, ஜிங்க், பொட்டாசியம், மாங்கனீசு, மக்னீசியம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. * ஒரு டம்ளர் பாகற்காய் ஜூஸ் தினந்தோறும் பருகி வந்தால் ஈரல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நீங்கும். * பாற்காயையோ, அதன் இலைகளையோ வெந்நீரில் வேக வைத்து தினந்தோறும் சாப்பிட்டு வந்தால், நோய்த்தொற்றுகள் அண்டாமல், உடலின் நோயெதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். * பாகற்காயை அடிக்கடி சமைத்து சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கெட்ட கொழுப்புகள் நீக்கபடுகிறது. இது செரிமான பிரச்சனையில் இருந்து நிவாரணம் அளிப்பதோடு குடல் இயக்கத்தை சீராக்கி மலச்சிக்கள் இருந்து விடுவிக்கும். * நீரழிவு நோயை எதிர்கொள்ள சிறந்த மருந்தாக பாகற்காய் சாறு பயன்படுகிறது. பாகற்காயை ஜுஸ் போட்டு அருந்தலாம். மேலும் பாகற்காய் பொரியல், வறுவல், தொக்கு, குழம்பு என்று ஏராளமான உணவு வகைகளில் பயன்படுத்தலாம். * பாகற்காயை சாறு பிழிந்து, அதனுடன் எலுமிச்சைச் சாறை மிக்ஸ் செய்து, தினந்தோறும் வெறும் வயிற்றில் பருகி வந்தால்

பச்சை பட்டாணியின் மருத்துவ பயன்கள்

Image
  பச்சை பட்டாணியின் மருத்துவ பயன்கள் பற்றி தெரிந்துக்கொள்வோம் !!🌐⛔ * நுரையீரலுக்கும் இதயத்திற்கும் பலத்தைக் கொடுக்கக்கூடியது பச்சை பட்டாணி. பச்சைப் பட்டாணியில் பாஸ்பரஸ் நிறைந்து காணப்படுகிறது. இதில் கொலஸ்ட்ரால் இல்லை. புரத சத்தும், நார்சத்தும் நிறைந்து காணப்படுகிறது. * பட்டாணியில் போலிக் அமிலம் அதிகம் உள்ளது. செல்களுக்கு உள்ளே டி.என்.ஏ. தொகுப்பு இயக்கம் சீராக நடைபெற ஃபோலேட்ஸ் என்கிற பி.காம்ப்ளக்ஸ் விட்டமின்கள் அவசியம் தேவை. பட்டாணியில் அவை உள்ளது. பட்டாணி உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது. * கண் நன்றாக தெரிய வைட்டமின் இ மிகவும் அவசியம். உடல்வலி, தலைவலி ஆகியன ஏற்படாமலிருக்கவும் பல், எலும்பு முதலியவை உறுதியுடன் இருக்கவும் பட்டாணியில் உள்ள வைட்டமின்கள் உதவுகிறது. * பட்டாணி சாபிட்டால் வாய் துர்நாற்றமும் குறையும். பட்டணியில் அடங்கியுள்ள நியாஸின், ரிபோபிலவின், தயாமின் போன்ற  வைட்டமின்கள் உள் உறுப்புகள் அனைத்தையும் வலிமைப்படுத்துகின்றன. * வாய், நாக்கு முதலியவற்றில் உள்ள புண்கள் குணமாகவும், செரிமான உறுப்புகள் நன்கு செயல்படவும் பட்டாணியில் உள்ள வைட்டமின் டி நன்கு பயன்படுகிறது. * பச்சை ப

நிலையில்லாத ஆசை மனதில் நித்தம் நூறு கனவுகள்...

Image
நிலையில்லாத ஆசை மனதில்  நித்தம் நூறு கனவுகள்... சென்ற ஆண்டு படைப்பாக்கம் செய்திருக்க வேண்டிய பாடல். இந்த ஆண்டுதான் கைகூடியது. பாடலாசிரியர் கார்மேகம் நந்தா அவர்களுடைய பல பாடல்களுக்கு நடன அமைப்பும் ஆடலும் செய்திருக்கிறேன். நோர்வே நாட்டில் எனது முதல் நடன ஆசானும் அவர்தான். எனக்காகவே அவர் எழுதி மேடையேறிய பாடல்களும் உள்ளன. கார்மேகம் நந்தா அவர்கள் நடனமும் கற்றிருப்பது இன்றுவரை அவருடைய வரிகளுக்கு வீரியம் சேர்ப்பதாவே இருக்கிறது.  நோர்வே நாட்டின் வேனிற் காலம் மிக அற்புதமாக மலரும். அருவிகளும் பூக்களும், மரங்களும் இயற்கை வனப்புமாக எப்போதும் மனதை துடிப்போடு வைத்துக்கொள்ளும் காலம். நோர்வே நாட்டின் சிறு துளி இயற்கையோடு...  அலையுரசிச் செல்லும் கரையில்... https://youtu.be/fIOB4sV6itY Vocal: Kalpana  Lyrics: Karmegam Nanda Music: K.S. Raghunathan Cinematography: Raja Rajan Production: Sri Santhana Arts KalaSaadhana - ADI Kavitha Laxmi

பெயரில் என்ன இருக்கிறது? - தமிழச்சி தங்கப்பாண்டியன் உரை

Image
 அமிர்தம் சூர்யாவின் பெயரில் என்ன இருக்கிறது? - தமிழச்சி தங்கப்பாண்டியன் உரை video link by

ச்சீ|உறவு கவிதை.,./இன்றைய நயினா ரின் உணர்வுகள்

Image
 இன்றைய நயினா ரின் உணர்வுகள்  ச்சீ|உறவு கவிதை|uravu kavithaigal|tamil kavithai|Nynarin Unarvugal video link

சர்வதேச சிறுகோள் தினம்

Image
  இன்று ஜூன் 30 விண் கற்கள் நாள் (ASTEROIDS) விண்கற்கள் என்றால் என்ன? நமது சூரிய மண்டலத்தின் (SOLAR SYSTEM) செவ்வாய் கோளுக்கும் (MARS) வியாழன் கோளுக்கும் (JUPITER ) இடையே சிறிதும் பெரிதுமான கற்கள் சூரியனைச் சுற்றிவருகின்றன. இவையே விண்கற்கள் (ASTEROIDS) எனப்படுகின்றன. ... இந்த கற்கள் விண்ணில் இருப்பதனால் இவற்றை விண்கற்கள் என்கிறோம்ஒவ்வொரு வருடமும் ஜூன் 30 இல் மக்கள் இத்தினத்தை சர்வதேச சிறுகோள் தினமாக கொண்டாடுகின்றனர். இந்த நாளில் மக்களுக்கு விண்கற்கள் பற்றியும், அதனால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மேலும் இந்தப் பிரபஞ்ச ஆபத்தில் இருந்து எம்மை எப்படிக் காத்துக்கொள்ளலாம் என்றும் விவாதிக்கின்றனர். சூரிய மண்டலத்தில் பில்லியன் கணக்கில் சிறு கற்களும், உலோகப் பாறைகளும் நீந்திக் கொண்டிருக்கின்றன. இந்த விண்கற்கள் பூமியின் காற்று மண்டலத்திற் கூடாக, அதிவேகத்தில் வந்தடையும் போது, வளி மண்டலத்தின் உராய்வு வெப்பத்தினால் எரிந்து, ஒளிரும் பாதையை ஏற்படுத்துகின்றன. அப்பொழுது இவை எரிகல் அல்லது எரி நட்சத்திரம் (எரி வெள்ளி) என அழைக்கப்படுகின்றன. இவற்றில் சில முழுவதுமாக

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை துவக்கியவரான தாதாபாய் நௌரோஜி நினைவுநாள்

Image
 இன்று இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை துவக்கியவரான தாதாபாய் நௌரோஜி நினைவுநாள். (1917 ஜூன் 30). பார்ஸி இனத்தவரான இவர் இங்கிலாந்து பாராளுமன்ற (உறுப்பினராக பதவி வகித்த முதலாம் இந்தியர்..தாதாபாய் நௌரோஜி, 1885-ல் ஆலன் ஆக்டவியன் ஹியூம் மற்றும் உமேஷ் சந்திர பானர்ஜியுடன் சேர்ந்து இந்திய தேசிய காங்கிரஸை உருவாக்கினார்.   இவரது “பிரிட்டிஷ் கொடுங்கோல் ஆட்சியும், இந்தியாவின் வறுமையும்” (Poverty and Un-British Rule in India) என்கிற நூல்  பிரிட்டிஷ் ஆங்கிலேய அரசின் அரசின் கொடுங்கோன்மையைப் பற்றிய உண்மைகளை உலகிற்கு உணர்த்தியதுஇந்தியாவின் பொருளாதார வள ஆதாரங்கள் சுரண்டப்படுகின்றன என்று முதன் முதலில் பட்டியலிட்டார். இந்தியாவின் பொருளாதாரத்தின் மற்றொரு பிரிவில் ஏழைகள், விவசாயிகள் என்று சுரண்டப்பட்ட பெரும்பான்மை மக்கள் பெரும் துன்பத்திலும், வறுமையிலும் வாழ்கிறார்கள் என்ற உண்மையை வெளிப்படுத்தினார் தாதாபாய் நௌரோஜி 1917- ஆம் ஆண்டு ஜூன் 30- ஆம் நாள் தனது 92-ஆவது வயதில் மும்பையில் இப்பூவுலக வாழ்வை நீத்தார். அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக மும்பை, கராச்சி(பாகிஸ்தான்), ஃபின்ஸ்புரி(லண்டன்) ஆகிய இடங்களில் முக்கிய

தமிழ் எழுத்தாளர் புதுமைப்பித்தன் நினைவு நாள்

Image
 இன்று புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர் புதுமைப்பித்தன் நினைவு நாள் ஜூன் 30, 1948 புதுமைப்பித்தன்  என்ற புனைப்பெயர் கொண்ட சொ. விருத்தாசலம். நவீன தமிழ் இலக்கியத்தின் ஒரு முன்னோடியாக கருதப்படுகிறார். இவரது சிறுகதைகள் கலைமகள், ஜோதி, சுதந்திரச் சங்கு, ஊழியன், தமிழ்மணி, தினமணியின் ஆண்டு மலர், நந்தன் ஆகிய பத்திரிக்கைகளிலும் பிரசுரமாயின. 1940ல் புதுமைப்பித்தனின் கதைகள் என்ற அவரது சிறுகதைத் தொகுப்பு வெளியானது. சென்னையிலிருந்த காலத்தில் இவர் ஊழியன், தினமணி, மற்றும் தினசரியிலும் பணிபுரிந்தார் இவர் திரைப்படத் துறையிலும் ஆர்வம் செலுத்தினார். ஜெமினி நிறுவனத்தின் அவ்வை மற்றும் காமவல்லிபடங்களில் பணிபுரிந்தார். கூரிய சமூக விமர்சனமும் நையாண்டியும், முற்போக்குச் சிந்தனையும், இலக்கியச் சுவையும் கொண்ட இவருடைய படைப்புகள், இவரின் தனித்தன்மையினை நிறுவுகின்றன. இவரது படைப்புகள் தமிழ் இலக்கியத்தில் மிகவும் அதிகமாக விவாதிக்கப்பட்டுள்ளன. மிகக் குறுகிய காலமே படைப்புலகில் இருந்தாலும் தமிழ் இலக்கியத்தில் தனி முத்திரை பதித்த புதுமைப்பித்தன் 42-வது வயதில் (1948) மறைந்தார். இவரது படைப்புகள் 2002-ல் நாட்டுடைமை ஆக்கப்பட்டன.

தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் மு கருணாநிதி ஜெயலலிதா ஆட்சியில் கைது செய்யப்பட நாள்

Image
   வரலாற்றில் இன்று ஜூன் 30, 2001   தமிழக முன்னாள் முதல்வர்  கலைஞர்  மு கருணாநிதி ஜெயலலிதா ஆட்சியில் கைது செய்யப்பட நாள் அன்றய தினம் அதிகாலை 1.30 மணி அளவில் சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த முத்துக்கருப்பன் தலைமையிலான காவல்படை கருணாநிதியின் வீட்டில் அதிகாலையில் நுழைந்து உறங்கி கொண்டிருந்த அவரை எழுப்பி விட்டு கைது செய்தது கைலி மட்டுமே அணிந்திருந்த  . கருணாநிதியை துணி மாற்றக்கூட அனுமதிக்கவில்லை காவல்துறை. அணிந்திருந்த லுங்கியுடனே கைது செய்யப்பட்ட கருணாநிதியை ஓமந்தூரார் மாளிகைக்கு அருகில் இருந்த சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து சிறிது நேரம் விசாரணை செய்தனர் மேம்பாலம் கட்டும் பணியில் ஊழல் நடைபெற்றதாக சென்னை மாநகர ஆணையர் அளித்திருந்த புகாரை அடிப்படையாகக் கொண்டு அந்த கைது நடவடிக்கை  அங்கிருந்து அவசரமாக வேப்பேரி அழைத்து செல்லப்பட்டார் கருணாநிதி, ஆனால் அதையும் போலீசார் வெளிப்படையாக செய்யவில்லை, முன்பக்கத்தில் பத்திரிக்கையாளர்களை அழைத்துவிட்டு பின்பக்கமாக வேறு காரில் கருணாநிதியை அழைத்து சென்று விட்டனர். பின்னர் மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்தப்பட்டு ஜூலை 10ம் தேதி வரை சிறையில் அடைக்க. ரிமாண்ட் உ

இதே நாளில்தான் எம்.ஜி.ஆர் தமிழகத்தின் முதல்வராக முதன்முறை பொறுப்பேற்றார்

Image
  வரலாற்றில் இன்று. ஜூன் 30 -ம் தேதி. 1977-ம் ஆண்டு இதே நாளில்தான்  எம்.ஜி.ஆர் தமிழகத்தின் முதல்வராக முதன்முறை பொறுப்பேற்றார். தி.மு.க விலிருந்து பிரிந்து அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற பெயரில் தனிக் கட்சி தொடங்கிய எம்.ஜி. ராமச்சந்திரன் பொதுத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்று தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்றார். பதவி ஏற்பு விழா சென்னை ராஜாஜி மண்டபத்தில் நடந்தது. அப்போதைய தமிழக ஆளுநர் திரு பட்வாரி, எம்.ஜி.ஆருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு உறுதிமொழியையும், ரகசிய காப்பு உறுதி மொழியையும் கவர்னர் ஆங்கிலத்தில் படித்தார். அந்த வாசகங்களை எம்.ஜி.ஆர். தமிழில் கூறி, பதவி ஏற்றார். அவரோடு 14 பேர் கொண்ட அமைச்சரவையும் பதவியேற்றது

ஹாங்காங் நகரம் பிரிட்டனிடமிருந்து சீனாவிடம் ஒப்படைக்கப்பட்ட நாள்

Image
 வரலாற்றில் இன்று ஹாங்காங் நகரம் பிரிட்டனிடமிருந்து சீனாவிடம் ஒப்படைக்கப்பட்ட நாள்  (1997 ஜூன் 30 )உலகின் மிக முக்கியமான நிதி மையம் ஹாங்காங். பிரிட்டிஷ் மற்றும் சீனக் கலாசார அம்சங்கள் கலந்துகட்டிய பூமி இது. உலகின் மிக முக்கியமான ஷாப்பிங் நகரான ஹாங்காங், இயற்கை ரசிகர்களுக்கு ஏற்ற கிழக்காசியாவின் பூலோக சொர்க்கம்!

#குறிஞ்சிவேலன் 81 பிறந்த நாள்

Image
 #குறிஞ்சிவேலன் 81 பிறந்த நாள் வாழ்த்துக்கள் 💐 * மலையாளத்திலிருந்து எண்ணற்ற புதினங்களையும், சிறுகதைகளையும், கட்டுரைகளையும், நேர்காணல்களையும் தமிழுக்கு மொழிபெயர்த்து வருபவரும்,  'திசை எட்டும்' மொழிபெயர்ப்புக் காலாண்டு இதழை பல்லாண்டுகளாகத் தொடர்ந்து நடத்தி வருபவரும்,  மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாதமி விருதினைப் பெற்றவருமான மொழிபெயர்ப்பாளர் #குறிஞ்சிவேலன் Arumugam Selvaraju  அவர்கள் 80 வயது நிறைவு செய்து 81இல் அடி எடுத்து வைக்கிறார். தன் நீண்ட பயணத்தில்  மொழிபெயர்ப்பு மூலமாகத் தமிழ் இலக்கியத்திற்கு  ஒரு பெரும் வளம் சேர்த்தவர் குறிஞ்சி வேலன் அவர்கள். மொழிபெயர்ப்பு என்பது எவ்வளவு பெரிய சவாலான காரியம் , செயல்பாடு என்பது குறித்த மலையாளக் கவிஞர் சச்சிதானந்தன் அவர்களின் கவிதை ஒன்றை   நினைவு இங்கே கூர்கிறேன். "கவிதையை மொழிபெயர்ப்பது  கூடு விட்டுக் கூடு பாய்வது.  மீன் தண்ணீரில் நீந்துவது போல் மொழிபெயர்ப்பாளன் மனங்களுக்குள் நீந்துகிறான். ஒவ்வொரு சொல்லின் கரையோரத்துப் பொடி மண்ணிலும் குனிந்திருக்கிறான் . ஒவ்வொரு பாசியின் நிறத்தையும் ஆராய்கிறான். ஒவ்வொரு சங்கையும் ஊதிப் பார்க்கிறான்.

சென்னையில் முதன்முறையாக மெட்ரோ ரயில் சேவை

Image
 ஜூன் 29, வரலாற்றில் இன்று. சென்னையில் முதன்முறையாக மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்ட தினம் இன்று (2015). சென்னை மெட்ரோவின் முதல் கட்ட சேவை சென்னை ஆலந்தூர், கோயம்பேடு இடையே ஜூன் 29, 2015 ஆம் ஆண்டு தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கிவைக்கப்பட்டது. இதன் மூலம் சென்னை இந்தியாவில் மெட்ரோ சேவையை பெற்ற  ஆறாவது நகரமாகியது சென்னை மெட்ரோவின் முதல் ஓட்டுநர் என்ற பெருமையை ப்ரீத்தி என்ற பெண் ஓட்டுநர் பெற்றார். இந்த முதற்கட்ட மெட்ரோ ரயிலின் அனைத்து  நிலையங்களும் உயர்நிலை நிலையங்களாகும்  பின்னர் இந்த சேவை சென்னை விமான நிலையம் வரை நீட்டிக்கப்பட்டது.

ஒரு பூங்கொத்து உரசி தீ பிடிப்பதெல்லாம்

Image
  அவளை என் கைகளால் தூக்கிய நேரத்தில் என் எடை என்ன என்றாள். இந்த நேரத்தில்.. என் தலை கணத்தைவிட குறைவு தான் என்றேன். வெட்கப்பட்டாள் வெட்கத்தின் எடையை கணக்கிட்டு.. இப்போது சற்று அதிகமாக கணக்கிறாய் என்றேன். வெட்கத்தோட சிரித்தாள். இன்னும் கணம் கூடுகிறது என்றேன். கைகளை கழுத்தோடு கட்டிக்கொண்டாள். அத்தனை பாரமும் என் கழுத்தில் இருக்கிறது என்றேன். எப்படி என்றாள் வெள்ளந்தியாக விம்மி புடைக்கும் மார்புகளில் சூட்டை இழக்கவா முடியும். உன் கைகளின் மத்தியில் என் கழுத்திற்கு.. பருத்த இரு உதடுகள் தரும் முத்தத்தின் எடை கூடாதா என்றேன். ஆடை அவிழ்ந்த அவசரம் போல புரிந்தவளாய் சுவற்றுக்கு மயிலிறகால் வண்ணமடிப்பது போல ஒரு அருவி தரை இறங்குவது போல ச்சீ..என சட்டென இறங்கினாள். ஒரு பூங்கொத்து உரசி தீ பிடிப்பதெல்லாம் பனி படர்ந்த அந்த காடுகளுக்கு எப்படித் தெரியும். 💘💘💘💘💘💘💘💘 நயினார்

சென்னைஅறம் செய்ய விரும்பு அரிமா சங்கத்தின் தொடர் சேவை

Image
    சென்னை அறம் செய்ய விரும்பு அரிமா சங்கத்தின் தொடர் சேவை நேற்று 28,06,2022  இரவு 7.00 மணியளவில்  Annai Anbalaya Trust Children and Old  Age Home   பராமரிப்பிலுள்ள      Womens old Age  Home. Royapettaah  ,   என்ற இடத்தில் சென்னை அறம் செய்ய விரும்பு அரிமா சங்கத்தின் சார்பாக சங்க செயலாளர் Ln.. பாலசந்தர் அவர்களின் மகளான செல்வி அகஷதா    தன் பிறந்த நாளை   அங்கேயே கொண்டாடி அங்கு  வசிக்கும் வயதான பெண்களுக்கு இரவு விருந்து உணவு வழங்கினார் இதந்கான தொகையான  ரூ,5,500யை சங்க செயலர்  Ln.. பாலசந்தர்  சென்னை அறம் செய்ய விரும்பு அரிமாr  சங்கம் மூலமாக வழங்கினார் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டு செல்வி அகஷதாவை  மனதார வாழ்த்தினார்கள் .. .......   Ln.. பாலசந்தர்  அவருக்கும்  அவரது குடும்பத்தினருக்கும்  வாழ்த்துக்கள்  வாழ்க வளமுடன் 🙏

*பாராட்ட கற்று கொள்ள வேண்டும்.*

Image
 *பாராட்ட கற்று கொள்ள வேண்டும்.* அதில் பொதுவாகவே நாம் கொஞ்சம் Weakதான். நிறைய பேருக்கு அதுதெரியாது. நம் வேலை முடிந்தால் அடுத்த வேலைக்குபறப்போம்.System அப்படி. பாராட்டுவதற்கு முதலில் பெரிய மனசு வேண்டும். பாராட்டு எல்லோருக்கும் பிடிக்கும். ஏன் உங்களுக்கே யாராவது பாராட்டினால் பிடிக்கும். குழந்தைகள் சிறப்பாக செய்தால்  சூப்பர்டா குழந்தே என்று பாராட்டி பாருங்கள். குழந்தைகளின் முகம் மலரும்.  அகம் மலரும். ஆனந்தம் மலரும். குடும்பத்தாரோடு உணவருந்தும் போது, உணவு சுவையாக இருந்தால் மனம் விட்டு பாராட்டுங்கள். நிறைய பேர் இதை செய்வதில்லை. இயந்திரத்தனமாக தட்டில் என்ன இருக்கிறது என்று கூட தெரியாமல் விழுங்குவார்கள். சுபாவத்தை மாற்றி பாருங்கள். சுற்றி இருப்பவர்களையும் சக ஊழியர்கள், நண்பர்கள், குடும்பத்தினர் சங்கோஜமின்றி பாராட்டுங்கள். *அவர்கள் மன மகிழ்வோதோடு மட்டுமல்ல, உங்களுக்குள்இருக்கும் மன இறுக்கமும் விலகும்*. *உங்களுக்கும் உடல் ரீதியில் மனரீதியில் பல நன்மைகள் விளையும்*. செலவில்லாத ஒரு Best gift. பொதுவாக உணவகத்திற்கு சென்றால், புறப்படும் போது உணவை பரிமாறிய Berrerக்கு நன்றி சொல்வது என்பழக்கம். ஆர்டர் எ

தமிழின் சிறந்த மொழியியல் அறிஞரான வ.ஐ.சுப்ரமணியம்

Image
 ஜூன் 29, தமிழின் சிறந்த மொழியியல் அறிஞரான வ.ஐ.சுப்ரமணியம் அவர்களின் நினைவு நாள் இன்று. இவர், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் துணை வேந்தர் என்பது குறிப்பிடத்தக்கது. சுப்பிரமணியன் நாகர்கோயில் அருகில் உள்ள வடசேரியில் பிறந்தவர். வடசேரியில் தொடக்கக்கல்வி பயின்றவர் நெல்லை இந்துக்கல்லூரியில் இடைநிலைக் கல்வியைத் தொடர்ந்தார். பின்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி கற்றார். ஐக்கிய அமெரிக்காவில் இந்தியானா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் மொழியியலில் பெற்றார். இவர் சில காலம் புதுதில்லி அனைத்து இந்திய வானொலியிலும் பணியாற்றியுள்ளார். பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை அவர்களின் அன்புக்குரிய மாணவர். கேரளப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை வளர்ச்சியிலும் மொழியியல் துறை வளர்ச்சியிலும் மிகப்பெரிய பங்களிப்பு செய்தவர். மொழியியல் நிறுவனம் உருவாகவும் தமிழ்ப்பல்கலைக்கழகம் செழித்து வளரவும் காரணமானவர். தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இருமுறை துணைவேந்தராகப் பணியாற்றியவர். ஆந்திராவில் உள்ள குப்பம் திராவிடப் பல்கலைக்கழகத்தின் வளர்ச்சியில் மூலகர்த்தாவாக விளங்கியதுடன் அப்பல்கலைக்கழகத்தின் முதலாவது இணைவேந்தராகவு

ஆர்.எஸ்.மனோகர்

Image
 தமிழ் நாடக உலகில் புரட்சியை ஏற்படுத்தி, 'நாடகக் காவலர்' என்று போற்றப்பட்ட நடிகர் ஆர்.எஸ்.மனோகர் பிறந்த தினம் இன்று ஜூன் 29. நாமக்கல்லில் (1925) பிறந்தவர். தந்தை சுப்பிரமணியன் அஞ்சல் துறையில் பணியாற்றியவர். சினிமா உலகில் கதாநாயகனாக அறிமுகமான பத்து, பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு வில்லன் கதாபாத்திரத்தில் முத்திரை பதித்தவர். 'வண்ணக்கிளி', 'கைதி கண்ணாயிரம்', 'வல்லவனுக்கு வல்லவன்', 'ஆயிரத்தில் ஒருவன்', 'அடிமைப்பெண்', 'இதயக்கனி' உட்பட 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர். * இசைப்பேரறிஞர், நாடகக் காவலர் உட்பட பல விருதுகள், பட்டங்கள் பெற்றவர். தமிழ் நாடகத் துறையில் ஒரு திருப்புமுனையை  உருவாக்கிய ஆர்.எஸ்.மனோகர் 81-வது வயதில் (2006) மறைந்தார்.

மீர் அல்லது மிர்

Image
  ஜூன் 29 - வரலாற்றில் இன்று - மீர் அல்லது மிர் (Mir, ரஷ்ய மொழி: Мир), சோவியத் ஒன்றியத்தின் (தற்போதைய ரஷ்யா) பூமியைச் சுற்றி வர ஏவப்பட்ட ஒரு விண் நிலையம் ஆகும். விண்வெளியில் முதன் முதலில் நிறுவப்பட்ட நீண்ட-கால தொழிற்பாடுடைய விண்நிலையம் இதுவாகும். உலக அமைதியின் சின்னமாக சோவியத் ஒன்றியம் இதனை உருவாக்கியது. 1986 ஆம் ஆண்டு பெப்ரவரி 19 இல் இந்நிலையம் விண்ணுக்கு ஏவப்பட்டது. இந்த விண்வெளி நிலையத்துடன் அமெரிக்காவின் அட்லாண்டீஸ் மீள் விண்கலம் 1995ம் ஆண்டு ஜூன் 29ம் தேதி இணைந்தது

எழுத்தாளர் அனுராதா ரமணன் பிறந்த நாள்

Image
 ஜூன் 29, (1947) எழுத்தாளர் அனுராதா ரமணன் பிறந்த நாள்  இன்று. பல்வேறு தலைப்புகளில் புதினங்கள், சிறுகதைகளை எழுதியுள்ளார். இவரது சில கதைகள் தொலைக்காட்சித் தொடர்களாகவும், திரைப்படங்களாகவும் வெளிவந்திருக்கின்றன. தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் இவரது படைப்புகள் வெளியாகிச் சிறப்பு பெற்றிருக்கின்றன. இவருடைய பல கதைகள் தொலைக்காட்சித் தொடர்களாக வெற்றி பெற்றிருக்கின்றன. சுபமங்களா, வளையோசை போன்ற பத்திரிகை களுக்கு ஆசிரியராக இருந்த அனுபவமும் இவருக்கு உண்டு. எழுத்துக்கான பல விருதுகளும் இவரைத் தேடிவந்தன. அன்புடன் அந்தரங்கம் என்னும் பத்தியின் மூலம் பலருக்குப் பிரச்சினைகளை எதிர்கொள்ள ஆலோசனை தந்தார். 2004இல் காஞ்சிமடத் தலைவர் ஜெயேந்திர சரஸ்வதி தன்னிடம் முறைதவறி நடந்ததாகக் குற்றம் சாட்டியது அனுராதாவுக்குப் பல எதிரிகளையும் நண்பர்களையும் உருவாக்கியது. . பெண்களில் பலர் இவரைத் தங்களுக்கு உற்றவராகப் பார்த்தார்கள்; பலர் இவரைத் துரோகியாகவும் பார்க்க முற்பட்டனர். எதனாலும் பாதிக்கப்படாமல் அனுராதா தொடர்ந்து கதை எழுதிக்கொண்டும் தங்களுள் ஒருத்தியாக மற்றவர் கருதும்படி நகைச்சுவையுடனும் நயத்துடனும் நட்புடனு

தேசிய புள்ளியியல் தினம்

Image
 இன்று 29 ஜூன்  ************************************************** தேசிய புள்ளியியல் தினம் ************************************************** பிரசண்ட சந்திர மகாலானோபிஸ் (Prasanta Chandra Mahalanobis) என்கிற விஞ்ஞானி ஜூன் 29, 1893 ஆம் ஆண்டு கல்கத்தாவில் பிறந்தார் . இவர் இந்திய புள்ளியியல் நிறுவனத்தை ஆரம்பித்து பல்வேறு புள்ளி விவரங்களைச் சேகரித்தார் . பொருளாதாரத் திட்டமிடல் மற்றும் புள்ளி விவர வளர்ச்சித் துறைகளில் இவரின் பங்களிப்பு மிக உன்னதமானதாக இருந்தது . எழுத்தறிவு , வேலை வாய்ப்பு , தொழிலாளர் , வறுமை , குழந்தைகள் என பல புள்ளி விவரங்களை சேகரித்தார் . இவர் பிறந்த தினமான ஜூன் 29 ஐ தேசிய புள்ளியியல் தினமாக அரசு அறிவித்தது . இத்தினத்தை புள்ளியியல் அமைச்சகம் , மாநில அரசுகள் , புள்ளியியல் நிறுவனங்கள் , புள்ளி விவர சேகரிப்பு அதிகாரிகள் , பல்கலைக்கழகங்கள் , புள்ளியியல் துறையைச் சார்ந்தவர்கள் கொண்டாடுகின்றனர் .

அருணா ஆசஃப் அலி நினைவு நாள்

Image
 இன்று விடுதலை போராட்ட வீராங்கனை அருணா ஆசஃப் அலி நினைவு நாள் ஜூன் 29, 1996 சுதந்திர இந்தியாவுக்கு முந்தைய ஒருங்கிணைந்த பஞ்சாப் மாநிலமான கால்கா நகரில் 1909-ஆம் ஆண்டில் வங்காள குடும்பத்தில் பிறந்தவர் அருணா ஆசஃப் அலி. லாகூர் சேக்ரட் ஹார்ட் கான்வென்ட்டில் பள்ளி படிப்பையும், நைனிடால் ஆள் சைன்ட்ஸ் கல்லூரியில் பட்டப் படிப்பையும் முடித்துள்ளார். கல்கத்தாவின் கோகலே நினைவு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றியவர். நாட்டின் மீது தீரா பற்று கொண்ட அவர் விடுதலை போராட்டத்திற்காக காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அப்போது காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான ஆசஃப் அலியை சந்தித்துள்ளார். இருவரது சிந்தனையும் ஒரே மாதிரியாக இருந்ததால் அதுவே அவர்களை வாழ்க்கை பயணத்திலும் கரம் கோர்க்க செய்துள்ளது. அன்றைய கால கட்டத்தில் சமய எதிர்ப்பை உடைத்தெறிந்த திருமணங்களில் அருணா ஆசஃப் அலியின் திருமணமும் ஒன்று. 1942ஆம் ஆண்டு வெளையனே வெளியேறு இயக்கத்தின் போது பல தலைவர்கள் முன்னதாகவே கைது செய்யப்பட்டிருந்த நிலையில் மும்பையில் கோவாலியா குள மைதானத்தில் காங்கிரசின் கொடியை பலத்த தடைகளை மீறி ஏற்றினார். விடுதலைக்குப் பின்னர் சோசியலிச இயக்