Monday, January 31, 2022

சில நேரங்களில் சில மனிதர்கள்./

 சில நேரங்களில் சில மனிதர்கள். திரைப்பபத்தை குறித்து தன் எண்ணங்களை பதிவு செய்கிறார்   கீர்த்தனா பிருத்விராஜ்விபத்தை மையமாகக் கொண்ட 4 கதைகளின் கதாபாத்திரங்களின் மன மாற்றம் குற்றவுணர்வு கோபம் இவை தான் சில நேரங்களில் சில மனிதர்கள். 


தாயை இழந்து தந்தையின் அரவணைப்பில் வசிக்கும் அசோக் செல்வன் எதற்கெடுத்தாலும் தன் தந்தையின் மீது கோபத்தை வீசிக் கொண்டே இருக்கிறார். 


அசோக் செல்வனின் தந்தையான நாசர் சராசரி தகப்பனின் நிலையில் தனது நடிப்பை எப்போது போலும் அழகாக நடித்துள்ளார். 


அன்றோடு வேலையை விடும் அசோக் செல்வன் தன் தந்தை கல்யாணத்திற்கு பத்திரிகை வைத்து விடலாம் இன்று நல்ல நாளென்று கூறுவதை ஒரு நிமிடம் கூட காதில் வாங்காது தான் செய்வதை மட்டுமே செய்து கொண்டிருக்கிறார். 


கெளரவம், பணம், பெயர், புகழ், தன்னை விட உயர்ந்தவன் இல்லையென்ற பிரவின் வெளிநாட்டிற்கு செல்வதற்கு மனைவியான ரித்விக்காவிடம் கேட்கவே இல்லையென்று தங்களின் வாக்குவாதத்தில் நேர்ந்தது தான் அந்த விபரீதம் மற்றும் மனமாற்றம். 


லாட்ஜில் ரூம் சர்வீஸ் மேனேஜராக பணிபுரியும் மணிகண்டன் 24 மணிநேரமும் புகைப்பிடித்தலே முதன்மைத் தொழிலாக கொண்டுள்ளார். ஆனால்,வேறு வேலை வேண்டும் அதிக சம்பளம் வேண்டும் என்று பொலம்பும் மணிகண்டன் அதற்கு எவ்வித முயற்சியும் எடுப்பதில்லை. 


அபி ஹாசன் புகழ்பெற்ற இயக்குனர் கே. எஸ். ரவிக்குமாரின் ஓரே மகனாக நடித்துள்ளார். தனது முதல் படம் குறித்து அவருக்கும் தந்தைக்குமிடையேயான  பிரச்சினையாக கதை நகர்கிறது. 


தான் பஸ் ஸ்டாண்டில் இறக்கி விடாததால் தான் விபத்து ஏற்பட்டது என்று குற்றவுணர்வில் துடிக்கும் மணிகண்டன் தனது நடிப்பு திறமையை செம்மையாக காட்டியுள்ளார். எந்த கேரக்டர் கொடுத்தாலும் அதுவாகவே மாறும் மணிகண்டன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். 


அசோக் செல்வனின் காதலியாக நடிக்கும் ரியா இவற்றிற்கு எல்லாம் நீ தான் காரணம் என்று சொல்கிறார். அதை கேட்டு மனம் தளர்ந்து அழுகும் அசோக் செல்வனின் நடிப்பு அத்தனை வலியை தருகிறது. 


செய்த தவறிலிருந்து தப்பிக்க முயற்சிக்கும் பிரவின் மனைவி ரித்விக்காவிடம் இந்த சூழ்நிலையை எனக்கு சரி பண்ண முடியவில்லை. நீ உதவி செய்யென்று கேட்கும் தருவாயில் சில நேரங்களில் சில மனிதர்களின் நிலை புரிகிறது. 


ஒரு நிமிடம் கூட பிறரின் வார்த்தையை உள்வாங்க முயற்சிகாது செய்யாத தவறுக்கு வருந்தும் அபி ஹாசனின் மாற்றமானது பார்ப்போர்க்கு வாழ்க்கை என்பது சுலபமானது. அதில் எல்லாம் வந்து போகும் என்பதை தெளிவாக்குகிறது. 


நண்பனின் இழப்பை ஏற்றுக் கொள்ள முடியாது கதறும் இளவரசு அவருக்கு கொடுத்த கதாபாத்திரத்தில் அருமையாக நடித்துள்ளார். 


இயக்குனர் விஷால்  வெங்கட் அவர்கள் சொல்ல வந்ததை எளிமையாக சொல்லி விட்டார். 


உன் மீது தவறு இல்லையென்று உனக்கு தெரிந்தால் போதுமானது. அதை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை என்ற வசனம் தொடக்கமும் முடிவுமாக இருந்தது. 


நாம் அனைவரும் ஏதோவொரு விதத்தில் மற்றவரை வருத்தப்படுத்திக் கொண்டு தான் இருக்கிறோம். தெரிந்தும் தெரியாமலும் நாம் செய்யும் தவறுகளுக்கு வாய்ப்பு கிடைக்கும் போது மன்னிப்பைக் கேட்டுக் கொண்டு மாறுவது என்பது உடலுக்கும் மனதிற்கும் தேவையான ஆரோக்கியத்தை அளிக்கிறது. 


மாற்றம் உங்களிடமே! 


- கீர்த்தனா பிருத்விராஜ்


கவிதையாகவே வாழும் அய்யப்பமாதவன்

 கவிதையாகவே வாழ்கிறார் கவிஞர் அய்யப்பமாதவன்


கவிதை தன்னைப்பற்றி சொல்வைதை கேளுங்க
என் சொந்த ஊர் நாட்டரசன்கோட்டை என்கிற சிறு ஊர். இங்குதான் பத்தாம் வகுப்புவரைப் படித்தேன். பத்தாம் வகுப்புவரை எனக்கு இலக்கியம் தெரியாது. கவிதைகள் படித்ததில்லை. கவிதைகள் எழுதியதில்லை.


குறிப்பாய் என் வீட்டில் படித்தவர்கள் இருந்தார்கள். ஆனால் யாரும் இலக்கியம் கற்கவில்லை. இலக்கியம் பேசவில்லை. என் ஊரில் கம்பன் கழகமிருந்தது. அதில் இன்னொருவர் எழுதிக்கொடுத்து ராமாயணம் பற்றிப் பேசியிருக்கிறேன். அதற்குப் பிறகு என் ஊர் நூலகத்தில் வார சஞ்சிகளைப் படித்திருக்கிறேன்.


கல்கிப் பத்திரிகையில் தராசு என்ற கேள்வி பதில் பகுதியில் நிறைய கேள்வி கேட்டிருக்கிறேன். அதில் சிறந்த கேள்விக்கான பரிசு பத்துரூபாய் பெற்றிருக்கிறேன். பிறகு நண்பன் செழியன் மூலம் கவிஞர் மீராவின் அறிமுகம் கிடைத்தது.


செழியனின் ஊரான சிவகங்கைக்கு அவ்வப்போது அவனைப் பார்க்கப் போவேன். அப்போது அங்கிருந்த மீராவின் அன்னம் பதிப்பகத்திற்குப் போகத் தொடங்கி நிறைய நல் இலக்கிய நூல்கள் வாசிக்கத் தொடங்கினேன்.


அப்போதுதான் ஹைகூ கவிதை நூல் ஒன்றை மீரா அவர்கள் மொழி பெயர்த்து தமிழில் அழகாய் வெளியிட்டிருந்தார். அந்த மூன்று வரிக் கவிதைகளைப் படிக்கத் தொடங்கியபோதுதான் ஏன் நானும் இதுபோன்று மூன்று வரியில் கவிதைகள் எழுதக் கூடாதென்று எண்ணம் தோன்றியது. அப்படித்தான் என் முதல் கவிதையை எழுதத் தொடங்கினேன். கவிதை எழுதத் தொடங்கியபோது தொழிற்நுட்பக் கல்வியை முடித்திருந்தேன்.


நான் எழுதிய முதல் மூன்றுவரிக் கவிதை


கண்களுக்குத் தூண்டிலிட்டேன்

மாட்டிக்கொண்டது 

இதயம்.


இதை உடனே தாய்ப்பத்திரிகைக்கு அனுப்பி வைத்தேன். இந்தக் கவிதை உடனே பிரசுரமானது. கவிதை பிரசுரமான பத்திரிகையும் எனக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்தப் பத்திரிகையை நண்பர்களிடம் காட்டிக் காட்டி பெருமைப் பட்டுக்கொண்டேன். இப்படித்தான் என் கவிதைப் பயணம் தொடங்கியது. பிறகு பஞ்சமில்லாமல் மூன்று வரிகளை நிறைய எழுத ஆரம்பித்தேன். தொடர்ந்து தாய்ப்பத்திரிகையிலும் கவிதைகள் வரத் தொடங்கின.


பிறகு குறிப்பிட்ட அளவுக்கு கவிதைகள் சேர்ந்ததும் முதல் கவிதை போடும் ஆர்வம் பிறந்தது. அப்பா கொடுத்த தங்க மோதிரத்தையும் கைகடிகாரத்தையும் அடமானம் வைத்து ரூபாய் 900/ மீரா அவர்களிடம் கொடுத்து என் முதல் கவிதை நூலை வெளியிட்டேன்.


முழுக்க ஹைகூ கவிதைகள். அந்த நூலிற்கு என் ஊர் புலவர்களைக் கூட்டி வந்து சிவகங்கையில் அறிமுக விழாவெல்லா நடத்தினேன். ஒரு வழியாய் முதல் நூல் வெளியானதும் அடுத்தடுத்து ஹைகூ தவிர சாதாரண கவிதைகளும் எழுத தொடங்கினேன். பிறகு இரண்டாவது நூல் வெளியிட்டேன். ஊரிலிருந்து நகரத்திற்கு வந்ததும் இன்னும் வெவ்வேறு விதமான கவிதைகளை எழுதிப் பார்த்தேன். கவிதாசரண் போன்ற இலக்கிய பத்திரிகையில் என் கவிதை பிரசுரமானது. இப்படியே எழுதி எழுதி நவீன கவிதைகள் பக்கம் என் பார்வை திரும்பியது.


அப்போதுதான் நானென்பது வேறொருவன் என்ற என் மூன்றாம் கவிதை நூலை அன்னம் வெளியிட்டது. அந்த நூல் கவிதை உலகினிடையே பரவலான கவனம் பெற்றது. ஒரு பக்கம் வாழ்க்கைப் போராட்டம் நடந்துகொண்டிருந்தபோதும் நான் கவிதைகள் எழுதுவதை விட்டுவிடவில்லை. கவிதைகளுக்கிடையில் என் திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பிறகும் கவிதைகள் எழுதிக்கொண்டுதான் இருக்கிறேன்.


கவிதைகள் எழுதி கவிஞன் என்ற பெயர் மட்டுமே கிடைத்தது. ஆனால் அதுவே போதுமானது. ஆனால் குடும்பத்திற்கு அது போதவில்லை. கவிதைகள் வைத்து பணம் பண்ண முடியாதென்பது மிக துரதிருஷ்டவசமானது. ஆயினும் என் வாழ்க்கை கவிஞனாய் முடிந்துவிடுமென்பதில் ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது.


இதுவரை பதினைந்து கவிதை நூல்கள் வெளியிட்டிருக்கிறேன். தேர்ந்தெடுத்த கவிதை நூலொன்றும் வந்திருக்கிறது. என் கவிதைகளை குறும்படமாகவும் எடுத்திருக்கிறேன். இன்னும் கவிதைகள் என்னிடம் இருக்கின்றன எழுதுவதற்கு எனச் சொல்வதில் பெருமைப்படுகிறேன்.


நூல்கள்


1. தீயின் பிணம்

2. மழைக்குப் பிறகும் மழை

3. நானென்பது வேறொருவன்

4. நீர்வெளி

5. பிறகொருநாள் கோடை

6. எஸ்.புல்லட்

7. சொல்லில் விழுந்த கணம்

8. நிசி அகவல்

9. ஆப்பிளுக்குள் ஓடும் ரயில்

10. குரல்வளையில் இறங்கும் ஆறு

11. குவளைக் கைப்பிடியில் குளிர்காலம்

12. லிங்கு - அய்க்கூ ( லிங்குசாமி கவிதைகள் குறித்த திறனாய்வு)

13. உரையாடலில் பெரும் மழை

14. தனிமைப்படுத்துதல்

15. எனக்குப் பிடித்த கவிதைகள்

16. எங்கோ தெரியவில்லை அந்த வெள்ளை நிறப்பறவை

17. யாமினி


18.பாலும் மீன்களுமே வாங்கிக்கொண்டிருந்தவள் ( சிறுகதை நூல் )

19.புத்தனின் விரல் பற்றிய நகரம் ( தேர்ந்தெடுத்த கவிதை நூல் )


எடுத்த குறும்படங்கள்


1. இன்று - காட்சியியல் கவிதை

2. சாலிட்டரி

3. சிகப்பு சுடி வேணும்ப்பா

4. பனிவீடு

5. ரோசம்மா.

//---அய்யப்பமாதவன்

‘என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல்

 இளையராஜா இசையமைத்த ‘என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்’ (வள்ளி), ‘காற்றில் எந்தன் கீதம்’ (ஜானி) போன்ற பாடல்களைக் கேட்கும்போதெல்லாம் இதயத்தை யாரோ பறித்தெடுத்துச் செல்வது போன்ற உணர்வுநிலைக்குத் தள்ளப்படுவேன்

. இந்த இரண்டு பாடல்களும் கீரவாணி ராகத்தால் மிக நுண்மையாக படைத்தப்பாடல்கள்

 இந்த ராகம் பறவைகளுக்குப் பிடித்தமான ராகம் என்று சங்கீத நூல்கள் குறிப்பிடுகின்றன என கேள்விப்பட்டிருக்கிறேன்

நம்  பயணத்தின்போது ‘என்னுள்ளே என்னுள்ளே’ பாடல், ஒரு மரத்தில் பறவைகள் பறந்து எழுந்து மீண்டும் அமர்வது போன்ற உணர்வை  தரும்


. பாடலுடன் பாடலின் நிரவல் இசைக்கோவையும் ஒன்றிணைந்து ஒரு காட்சிப் படிமமாகி, கவித்துவமான நுண் ஒலியால் நிரம்பியதே இளையராஜாவின் தனித்துவமான உலகம். 

வள்ளி திரைப்படத்திற்காக வாலி எழுதிய வரிகளுக்கு இசை அமைத்தவர்  இளையராஜா. பாடியவர் ஸ்வர்ணலதா, இந்த பாடலை நான் கேட்கும் போதெல்லாம் ஏனோ என் நினைவுகள் மறைந்து போன பாடகி ஸ்வர்ணலதாவையே சுற்றி வருகின்றது!


                                                                                இளையராஜாவின் கிட்டார் இசை, நரம்புகளுக்குள் ஏதோ செய்கின்றது, விபரிக்கமுடியாத ஏதோ உள்ளு ணர்வு வருடுவதுபோல ஒர் இசைத்தவிப்பு பாடலை நீங்களும் கேளுங்கள் அதை ஒத்துக்கொள்வீர்கள்! 


கண்ணிரெண்டில் நூறு வெண்ணிலாக்கள் தோன்றும்  வாலியின்வரிகள் மிக அழகானவை 


பொதுவாக நான் திரைப்பாடல்களின் காட்சிகளை பார்ப்பதைவிட கேட்பதில்தான் ஆர்வம்

 என் மனம் கவர் பாடல்களாய் இருப்பின் அதன் திரைக் காட்சிப்பாடுகளைக் காண்பதை தவிர்ப்பேன்


பல நிகழ்வுகளில்  நம் மனம் கவர்ந்த பாடல்கள் நம் கற்பனையில் சில காட்சிகளை காண்பிக்கும


அது விவரிக்க முடியாத ஒரு மன நிலை


’என்னுள்ளே என்னுள்ளே...’ பாடலின் இசை நிச்சயமாக ஆன்மிகத் தன்மை கொண்டது போல தோன்றுகிறது

 இசைஞானியின் பல பாடல்கள் அப்படித்தான். திரைக் கதையின்படி இது காம நிகழ்வொன்றில் இடம் பெறுவதாய் இருக்கிறது

 சங்க இலக்கியத்தில் ஓர் அருமையான பாடல் இருக்கிறது “யாரும் இல்லை தானே கள்வன்” என்று. அச்செய்யுளின் அடிகளை ஆழ்ந்து நோக்கினால்

 அதில் ஒரு பெண்ணின் அக ஆழத்தில் கேவித் தவிக்கும் ஆன்மாவின் குரலினைக் கேட்கலாம். இப்பாடலின் இசை அந்தச் சங்கப் பாடலுக்கு இசைஞானி இயற்றியிருக்கும் பொழிப்புரை என்று கருதலாம்

வாலி எழுதியிருக்கும் வரிகளிலும்கூட சிற்றின்பமானது பேரின்ப மொழியில்தான் பேசுகிறது. ‘காலம் என்னும் தேரே ஓடிடாமல் நில்லு’ என்னும் ஒரு வரி போதுமானது. வரியாகப் பார்க்கும்போது அது காலத்திற்கு இடும் ஆணை போல் தொனிக்கும்

 இசைஞானியின் மெட்டு அதனை ஓர் பிரார்த்தனை போல் நமக்கு சொல்லாமல் சொல்லும்

இங்கே ஸ்வர்ணலதாவின் குரல் மிகச் சரியான தேர்வு. அப்பாடகிக்கு அவர் அளித்த இசை தீட்சை இந்தப்பாடல்


 இந்தப்பாடலின் திரைக்காட்சி சரியாக கையாளவில்லை நமக்கு ஏமாற்றத்தைத்தான் தருகிறது


பாடல் காட்சி பாருங்கஉங்க கற்பனையில் நீங்களே படைத்த காட்சிகளை படக்காட்சியுடன் ஒப்பிட்டுககொள்ளுங்க


இசைஞானியின் பல பாடல்கள் இப்படிதான்


 அப்பாடலில் தொனிக்கும் ஆன்மிக உணர்வை சிலரே உணர்ந்துள்ளனர்

இந்தப்பாடலில் மேற்கத்திய இசை வடிவமான சிம்ஃபொனியின் கூறுகள் எப்படிக் கையாளப் பட்டுள்ளன என்பதை அறிய நமக்கு போதிய  மேதாவித்தானம் எனக்கு  இல்லை ‘


இளையராஜாவுடன் பணியாற்றிய அனைத்துப் பாடல்களிலும் தனக்கென ஒரு தனித்தன்மையைப் பிரதிபலிக்க ஸ்வர்ணலதா  ஒரு போதும் தவறியதில்லை. இளையராஜா இசையில் இவர் பாடிய ``மாலையில் யாரோ” தான் அவருக்கு மிகப்பெரும் அங்கீகாரத்தைப் பெற்றுக் கொடுத்தது. இன்றளவும் அப்பாடலில் உருகும் தேனென அவரின் குரல் அத்தனை மென்மையாய் ஒலித்துக்கொண்டேதான் 

ஸ்வர்ணலதாவின் குரல், அது வலிகளின் அடையாளம்; மோகத்தின் வடிவம்..! 


 முகம் காணாத நேசம் என்பார்களே அதைப் போன்றதோர் உணர்வை எட்டியிருந்த காலத்தில் அவரின் பல பாடல்கள் முணுமுணுப்பைத் தாண்டி ரசனையின் அடுத்தகட்டத்துக்கென என்னை அழைத்துச் சென்றிருந்தது. 

அக்கால கட்டத்தில் அவர் பாடிய பல பாடல்களைக்க  கேட்ட இரண்டொரு நொடிகளில் இது ஸ்வர்ணலதாவின் குரலென அடையாளம் காண முடிந்திருந்தது 

அவரின் தாய் மொழி தமிழில்லை என்று தெரிய வாய்ப்பே இல்லை. உச்சரிப்புக்கெனத் தனி அகராதி ஏதும் உண்டெனில் அதில் ஸ்வர்ணலதாவுக்கும் ஓர் இடமிருக்கும். அப்படியொரு தெளிவான உச்சரிப்பை இந்த இன்னிசைக் குயிலுக்கு எவர் கற்றுக்கொடுத்திருப்பார் என்று யோசித்ததுண்டு. 

உச்சரிப்பை எத்தனை முறை ரசித்தாலும் தகும்.  `கேப்டன் பிரபாகரன்’ படத்தில் வந்த ``ஆட்டமா தேரோட்டமா” பாடல்தான் ஸ்வரண்லதாவுக்குக் கிடைத்த முற்றிலும் மாறுபட்ட பாடல். அதற்கு முன் பாடிய எல்லாப் பாடல்களும் மெலடி வகையறாக்கள். ஆனால் இப்பாடல் அவரின் குரலின் மாறுபட்ட பரிமாணம். பாடல் முழுவதும் அவர் குரலின் வழி பரவும் குதூகலம் நம்மையும் ஒட்டிக் கொள்ளும். என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம் 

எங்கேங்கோ எங்கேங்கோ என் எண்ணம் போகும் தூரம் 


என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம் 

எங்கேங்கோ எங்கேங்கோ என் எண்ணம் போகும் தூரம் 

நான் மெய் மறந்து மாற ஓர் வார்தை இல்லை கூற 

எதுவோ மோகம்..................


என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம் 

எங்கேங்கோ எங்கேங்கோ என் எண்ணம் போகும் தூரம் 


கண்ணிரெண்டில் நூறு வெண்ணிலாக்கள் தோன்றும் 

ஆனாலும் அனல் பாயும் 

நாடி எங்கும் ஏதோ நாத வெள்ளம் ஓடும் 

ஆனாலும் என்ன தாகம் 

மெய் சிலிர்க்கும் வண்ணம் தீ வளர்த்ததென்ன 

தூபம் போடும் நேரம் தூண்டிலிடதென்ன 

என்னையே கேட்டு ஏங்கினேன் நான்


என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம் 

எங்கேங்கோ எங்கேங்கோ என் எண்ணம் போகும் தூரம் 


கூடு விட்டு கூடு ஜீவன் பாயும் போது 

ஒன்றி ஒன்றாய் கலந்தாட 

ஊண் கலந்து ஊனும் ஒன்று பட தியானம் 

ஆழ்நிலையில் அறங்கேற

காலம் என்ற தேரே ஆடிடாமல் நில்லு 

இக்கணத்தை போலே இன்பம் எது சொல்லு 

காண்பவை யாவும் சொர்க்கமே தான்


என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம் 

எங்கேங்கோ எங்கேங்கோ என் எண்ணம் போகும் தூரம் 

நான் மெய் மறந்து மாற ஓர் வார்தை இல்லை கூற 

எதுவோ மோகம்..................


என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம் 

எங்கேங்கோ எங்கேங்கோ என் எண்ணம் போகும் தூரம் 


என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம் 

எங்கேங்கோ எங்கேங்கோ என் எண்ணம் போகும் தூரம்

இளையராஜாவின் இசையில் பல பாடல்கள் பாடியிருந்தாலும் ``என்னுள்ளே என்னுள்ளே”பாடல் இன்றளவும் அவருக்கு ஒரு சிகரம்தான்  மோகத்துக்கென ஒரு வடிவமிருக்குமெனில் அது ஸ்வர்ணலதாவின் குரலாகத்தான் இருக்கும். ``மெய் சிலிர்க்கும் வண்ணம் தீ வளர்த்ததென்ன” என்று அவர் உச்சஸ்தாயில் பாடும் அக்குரலைக் கேட்கையில் கால்கள் இரண்டும் தரையில் இல்லாது மிதந்துகொண்டிருக்கும். இப்போதிருக்கும் தலைமுறைப் பாடகர்கள் கூட அப்பாடலை வெவ்வேறு விதமாக பாட முயற்சி செய்தாலும் ஸ்வர்ணலதாவின் குரலில் வெளிப்படும் மோகத்தின் சிறு அளவைக் கூட யாராலும் நெருங்க முடியவதில்லை என்பது நிஜம்


-உமாதமிழ்


தமிழறிஞர் ம.வே. பசுபதி

 


தமிழறிஞர் ம.வே. பசுபதி அவர்கள் மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கல். 


அவரது தமிழ்ப் பணி பற்றி இன்று இணையத்தில் படித்தறிந்தேன். 


தமிழ் இலக்கியத்தின் ஆணிவேராக இருக்கும் தொல்காப்பியம், சங்க இலக்கிய நூல்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, அவற்றோடு திருக்குறள் முதலான பதினென் கீழ்க்கணக்கு நூல்கள் , இரட்டைக் காப்பியங்களான சிலப்பதிகாரம்,   மணிமேகலை , மற்றும் முத்தொள்ளாயிரம், இறையனார் அகப்பொருள் உரை ஆகிய நூல்களைத் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்துக்காக ஒரே நூலாகத் தொகுக்கும் பணியினை மேற்கொண்டவர் என்பதைப் படித்தபோது இப்பணிக்காக அவர் எவ்வளவு நூல்களைப் படித்து ஒப்பிட்டிருக்கவேண்டும்; பாடபேதங்களை அறிந்து நுணுக்கமாகப் பணியாற்றி இருக்கவேண்டும் என்ற பிரமிப்பு உண்டானது.


அந்நூல் தவிர ஆய்வு நூல்கள், கட்டுரைகள், பதிப்புகள் என ஏறக்குறைய ஐம்பது நூல்கள் வெளியிட்டிருக்கிறார்.


அவருக்கு தமிழக அரசால் வழங்கப்பட்ட உ.வே.சா. விருது அவ்வளவு பொருத்தமானது. 


கம்பன் கழகக் கவிஞரங்குகளில் அவரது கவிதைகளைத் தூரத்தில் இருந்து கேட்டிருக்கிறேன். 


நான் கல்லூரியில் படித்த காலத்தில் அவர் பேராசிரியராகவும் முதல்வராகவும் பணியாற்றிய திருப்பனந்தாள் கல்லூரி கும்பகோணத்திற்கு மிக அருகில் இருந்தும் அவரை சந்திக்காமல் போய் விட்டோமே என்ற வருத்தம் மேலிடுகிறது.


ஒரு தமிழ்க் களஞ்சியம் மறைந்திருக்கிறது. தமிழுக்குத் தொண்டு செய்த ஒரு பேருழைப்பாளர் மறைந்திருக்கிறார் . 


அவரது மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கலும் அஞ்சலியும்.


 -


பிருந்தா சாரதி

அவளின் மூச்சு
உன்னை 

காண துடிக்கிறது 

மனம் 

அன்பே 

நீ 

அனுப்பும்

மொழிகள் 

வெறுமை 

அல்ல என 

உணர்ந்தேன் 

நான் 

விடும் 

மூச்சு

உனக்கு 

கேட்குதா 

எந்த 

வழி மறுப்பும் 

இல்லாமல்

வழி விடு காற்றே 

அவளின் 

மூச்சு 

எனக்கு 

கேட்கணும்
Sunday, January 30, 2022

இது நாகாலாந்து அல்ல.. தமிழகம்.. உருட்டல், மிரட்டல் அரசியலில் எடுபடாது" ஆளுநர் பற்றி முரசொலி

 தமிழகம் நாகாலாந்து அல்ல என்பதை தமிழக ஆளுநர் ரவி உணர வேண்டும் என முரசொலியில் தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இதுகுறித்து முரசொலியில் "கொக்கென்று நினைத்தாரோ; தமிழக ஆளுநர் ரவி!" என்ற தலைப்பில் தலையங்கம் தீட்டப்பட்டுள்ளது


அந்த தலையங்கத்தில், தமிழக ஆளுநர் பொறுப்பேற்றுள்ள ரவி சில நேரங்களில் தனது அதிகார எல்லை மீறி செயல்படத் தொடங்கியுள்ளாரோ என எண்ணிடத் தோன்றுகிறது! இன்றைய தமிழக ஆளுநர் ரவி தமிழக ஆளுநராகப் பொறுப்பேற்பதற்கு முன் நாகாலாந்தின் ஆளுநராகப் பொறுப்பேற்றுப் பணியாற்றிய போது நடந்து கொண்ட விவகாரங்கள் பெரும் விமர்சனத்துக்கு ஆளாகின!

 நாகாலாந்தின் தேசியவாத ஜனநாயக கட்சியின் தலைவர் சிங்வாங் கோன்யாக் அங்கு ஆளுநராகப் பணியாற்றிய ரவி குறித்து கருத்தறிக்கையில், ஆளுநர் ரவியின் செயல்பாடு மகிழ்ச்சி தருவதாக இருந்ததில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் செயல்பாடுகளில் அவரது குறுக்கீடு அதிகமிருந்தது என பகிரங்கமாகக் குற்றம்சாட்டியிருந்தார்

நமது ஆளுநராக வந்துள்ள ரவியின் அத்துமீறல்கள் நாகாலாந்து அரசு நிர்வாகத்தின் மீது மட்டுமல்ல, அங்குள்ள ஊடகவியாளர்கள் மீதும் இருந்துள்ளது. நாகாலாந்து ஆளுநர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு தமிழக ஆளுநராக அவர் நியமிக்கப்பட்ட நேரத்தில் ஆளுநர் ரவிக்கு அந்த அரசு சார்பில் ஒரு பிரிவு உபச்சார கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது பத்திரிகையாளர்கள் ஒட்டுமொத்தமாக ஆளுநர் ரவிக்குத் தரப்பட்ட பிரிவு உபச்சார விழாவைப் புறக்கணித்தார்கள். அந்தப் பிரிவி உபச்சார விழாவில் கலந்து கொள்ளுமாறு பத்திரிகையாளர்களுக்கு பல வேண்டுகோள்கள் வைத்தும், அவைகளை ஏற்க அவர்கள் முன்வரவில்லை. அந்த செய்தியாளர்களை அந்த அளவு நான் கவர்னராக நாகாலாந்தில் இருந்த காலத்தில் புண்படுத்தியுள்ளார் ரவி!

வரலாற்று பின்னணி இத்தகைய வரலாற்றுப் பின்னணிகளோடு தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டுப் பொறுப்பேற்றுள்ளார் ரவி! ஆளுநர் ரவி அரசியல்வாதியாக இருந்து அரசியல் தட்பவெப்பங்களை உணர்ந்து அனுபவங்கள் பல பெற்று ஆளுநர் ஆனவரில்லை. அவர் ஒரு காவல் துறை அதிகாரியாக இருந்து ஓய்வுக்குப் பின் கவர்னராக அமர்த்தப்பட்டவர். மிரட்டல் உருட்டல் பாணிகள் காவல் துறைக்கு தேவை. பல நேரங்கள் அந்த பாணி கை கொடுக்கும். ஆனால் அது அரசியலில் எடுபடாது என்பதை அவர் உணர்ந்திட வேண்டும்.
lநீட்டுக்கு எதிராக தமிழகச் சட்டசபை ஒரு மனதாகத் தீர்மானம் நிறைவேற்றி அதனை ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி மாதங்கள் சில கடந்தும் அது கிடப்பிலே கிடக்கிரது. அதன் நிலை என்ன என்று தெரியாத நிலையில் நீட் வருவதற்கு முன் இருந்த நிலையை விட நீட் வந்த பின் அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவப் படிப்பு சேர்க்கை அதிகரித்துள்ளது என கூறியிருக்கிறார். ஒட்டுமொத்தத் தமிழகமுமே நீட்டை எதிர்த்து நிற்கும் நிலையில் தமிழகத்தின் சட்டப்பேரவையே அதனை எதிர்த்து ஒருமித்துத் தீர்மானம் நிறைவேற்றியுள்ள வேளையில் அதுவும் அவரது பரிசீலனையில் இருக்கும் கால கட்டத்தில் ஒரு ஆளுநர் இப்படி அறிவிப்பது எந்த வகையில் நியாயம்


மேதகு ஆளுநர் ரவியின் குடியரசு தின செய்தி இன்று ஊடகங்களில் விவாதப் பொருளாகியுள்லது. ஆளுநரின் கருத்துக்கு உரிய எதிர்ப்பை தமிழக தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். ரவி ஆளுநர் பொறுப்பேற்றுள்ள தமிழ்நாடு, மற்ற இந்திய மாநிலங்களைப் போன்றது அல்ல என்பதை முதலில் அவர் உணர வேண்டும். இந்த மண் அரசியலில் புடம் போடப்பட்ட மண். இங்கே குக்கிராமங்களில் வசிப்பவர்கள் கூட அரசியல் தெளிவு மிகுந்தவர்கள். ஆளுநர் ரவி எத்தகைய கருத்தையும் தெரிவிக்கும் முன் தமிழகத்தை புரிந்து கொண்டு - அதன் வரலாற்றைத் தெளிவாகத் தெரிந்து கொண்டு கூறுவது அவரது பதவிக்கு பெருமை சேர்க்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

7 கோடி தமிழக மக்கள் ஏறத்தாழ 7 கோடி தமிழ் மக்களின் பிரதிநிதிகள் அடங்கிய தமிழகச் சட்டமன்றம் ஒரு மனதாக நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பிய தீர்மானத்தின் மீது எந்தக் கருத்தும் தெரிவிக்காது சட்டத்தின் சந்து பொந்துகளில் பதுங்கிக் கொண்டு இருப்பது எந்தவித நியாயம் என்பதை ஆளுநர் ரவி தெரிவிக்க வேண்டும். ஒரு கட்சி தனது கொள்கைகளைச் சொல்லி மக்களிடம் வாக்குப் பெற்ரு ஆட்சி பீடம் ஏறுகிறது. மக்களும் அவர்கள் எண்மத்தை அந்த கட்சி நிறைவேற்றம் என எண்ணி வாக்களிக்கிறார்கள். அந்த மக்களின் எதிர்பார்ப்பை தீர்மானமாக்கி அனுப்பும் போது அதை ஒரு ஆளுநர் அலட்சியப்படுத்துவது என்பது சுமார் 7 கோடி மக்களை அவமதிப்பது என்பதை உணர வேண்டும்.

பழைய ஆளுநர்கள் பட்டியல் தமிழக அரசியலில் பழுத்த பழங்களை ஆளுநராகக் கண்ட மாநிலம்! ஸ்ரீபிரகாசா, உஜ்ஜல்சிங், கேகே ஷா, பிசி அலெக்சாண்டர், பர்னாலா, பட்வாரி, சென்னா ரெட்டி, ரோசையா, புரோஹித் என அரசியல்வாதிகளையும் அதிகாரிகளையும் ஆளுநராக பார்த்த மாநிலம் தமிழ்நாடு! அரசியல் சட்டம் அவர்களுக்கு அளித்த அதிகாரத்தை மதித்துப் புகழ பெற்றவர்களும் மிதித்து களங்கங்களாக விளங்கியவர்களும் உண்டு! தமிழக அரசியல்வாதிகள் பல கருத்துகளில் ஒன்றுபடுவதில்லை. ஆனால் பல ஜீவாதார உரிமைகளில் அவர்கள் ஒன்று பட்டு நிற்பார்கள். அங்கே கட்சி வேறுபாடுகளைக் காண முடியாது . அப்படிப்பட்ட உரிமைகளில் ஒன்றுதான் நீட் வேண்டும் என்பது!
மாறுபட்ட கருத்தில்லை தமிழகத்தை பொருத்தவரை இரு மொழிக் கொள்கைதான். இதிலே ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் மாறுபட்ட கருத்தில்லை. பல பிரச்சினைகளில் எதிரும் புதிருமாக இருந்தாலும், தமிழகத்தின் சில பிரச்சினைகளில் ஒட்டுமொத்தத் தமிழகமும் ஒன்றிணைந்த நிற்கும்! அதிலே ஒன்ரு இரு மொழிக் கொள்கை. மற்றொன்று நீட் வேண்டாமென்பது! ஆளுநர் ரவி இதனை உணர்ந்து உரிய தகவலை மேலிடத்திற்கு தந்து ஒட்டுமொத்தத் தமிழகத்தின் உரிமைக் குரலுக்கு அங்கீகாரம் வாங்கித் தர முயற்சி செய்ய வேண்டும். அதனை விடுத்து இங்கே பெரியண்ணன் மனப்பான்மையோடு அரசியல் செய்ய நினைத்தால் கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா... எனும் பழங்கதை மொழியை அவருக்கு நினைவுப்படுத்த விரும்புகிறோம். அதாவது இது நாகாலாந்து அல்ல. தமிழகம் என்பதை அவர் உணர்ந்திட வேண்டும் என அந்த முரசொலியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ead more at: 


source:

https://tamil.oneindia.com/newsவெங்காயம் சேர்த்து இப்படி புதினா சட்னி செஞ்சு பாருங்க

 வெங்காயம் சேர்த்து இப்படி புதினா சட்னி செஞ்சு பாருங்க 

விதவிதமான சட்னி வகைகளில் புதினா சட்னி ரொம்பவே வித்தியாசமான சுவை உடையதாக இருக்கும். புதினாவின் சுவைக்கு அடிமையாகி போனவர்கள் அடிக்கடி துவையல், சட்னி செய்து சாப்பிடுவார்கள். பசியை தூண்டக் கூடிய இந்த புதினா இலைகள் உடல்நலக் கோளாறுகளை சரி செய்யக்கூடியது. இதன் மணமும், குணமும் முழுமையாக நமக்குக் கிடைக்க இப்படி ஒரு புதினா சட்னிபுதினா சட்னி செய்ய தேவையான பொருட்கள்: புதினா – ஒரு கட்டு, கொத்தமல்லி – ஒரு கைப்பிடி, வெங்காயம் – 2, உளுத்தம் பருப்பு – கால் கப், பூண்டு – 4, இஞ்சி – 2 துண்டு, வர மிளகாய் – 5, தேங்காய் – ஒரு கப், புளி – பெரிய நெல்லிக்காய் அளவு, உப்பு – தேவையான அளவு, பெருங்காயத் தூள் – கால் டீஸ்பூன், தாளிக்க எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், உளுந்தம் பருப்பு – அரை டீஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கொத்து.


புதினா சட்னி செய்முறை விளக்கம்: முதலில் புதினா இலைகளை காம்பைப் பிடித்துக் கொண்டு ஒரு முறை நன்கு தட்டிக் கொள்ளுங்கள் அப்போது தான் பூச்சி, புழுக்கள் இருந்தால் கீழே விழுந்துவிடும். பின்னர் பச்சையாக இருக்கும் இலைகளை மட்டும் தனியாக ஆய்ந்து எடுத்து அலசி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். தேங்காய் சில்லு சில்லாக நறுக்கி வைத்துக் கொள்ளலாம் அல்லது துருவியும் வைத்துக் கொள்ளலாம்.


இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வைத்து கொள்ளுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உளுந்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும். உளுந்து பாதி அளவு வறுபட்டதும், காய்ந்த மிளகாய், இஞ்சி, பூண்டு, பெருங்காயத்தூள் ஆகியவற்றை சேர்த்து வறுத்துக் கொள்ளுங்கள். பின்னர் இவற்றுடன் பொடிப்பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து வதக்குங்கள்.


வெங்காயம் கண்ணாடி பதம் வர நன்கு வதங்கியதும் புதினா மற்றும் நறுக்கிய கொத்தமல்லி இலைகளை அலசி சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் பெரிய நெல்லிக்காய் அளவிற்கு கொஞ்சமாக புளி சேர்த்து வதக்கி கொள்ளுங்கள். புதினா மற்றும் கொத்தமல்லி இலைகள் சுருள வதங்கியதும் அடுப்பை அணைத்து விட்டு ஆற விட்டு விடுங்கள். இவை நன்கு ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்து அதில் இதனை சேர்த்து தேங்காய் மற்றும் தேவையான அளவிற்கு உப்பு போட்டு நைஸாக இல்லாமல் கொரகொரவென்று அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு இதற்கு ஒரு சிறு தாளிப்பு கொடுக்க வேண்டியது தான்.

அதற்கு அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு தாளிக்கும் கரண்டியை வைத்து கொள்ளுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு நன்கு காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும் சீரகம் சேர்த்து தாளித்துக் கொள்ளுங்கள். பின்னர் உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து, ஒரு கொத்து கறிவேப்பிலையை கழுவி உருவி சேர்த்துக் கொள்ளுங்கள். பிறகு இந்த தாளிப்பை புதினா சட்னியுடன் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். அவ்வளவுதாங்க

இரும்புக்குள் ஒரு சிங்கம் டத்தோ நோரா மனாஃப்

 🌟 டத்தோ நோரா மனாஃப் 🌟அழகும் அறிவும் நிறைந்த இரண்டு எழுத்து மந்திரம்


கடந்த டிசம்பர் 14ஆம் தேதி, ஆசிய பசிபிக் மற்றும் ஆசியான் வணிகத் தலைவர் விருதுகளுக்காக 10 புகழ்பெற்ற தலைவர்கள் கௌரவிக்கப்பட்டனர். பொதுத்துறை, தனியார் துறை, கல்வித்துறை மற்றும் சிவில் சமூகத்தைச் சேர்ந்த 10 முக்கியஸ்தர்கள் ஆசிய பசிபிக் பிராந்தியத்திற்கான அவர்களின் பங்களிப்புகளுக்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். 


முன்னாள் மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு துணை அமைச்சர் டத்தோஸ்ரீ ஹாஜா ரோஹானி பிந்தி அப்துல் கரீம் விழாவைத் தொகுத்து வழங்கினார். மலேசியாவுக்கான நியூசிலாந்து உயர் ஸ்தானிகர் திருமதி பமீலா டன் அவர்களும் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார். 

விருது பெற்ற 10 வணிகத் தலைவர்களில், ஒருவர் எனக்கு நன்கு அறிமுகமானவர். அவர் என்னுள் தொடர்ந்து உத்வேகத்தை விதைத்து வரும் அழகும் அறிவும் நிறைந்த இரண்டு எழுத்து மந்திரமான டத்தோ நோரா மனாஃப். 


மலேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட மிகப் பெரிய நிறுவனமும் மற்றும் ஆசியாவின் மிகப்பெரிய வணிக வங்கிகளில் ஒன்றான மேபேங்கின் குழுமத் தலைமை மனித மூலதன அதிகாரியாகச் செயல்படுகிறார் அவர். உலகெங்கிலும் உள்ள 46,000 ஊழியர்களைக் கண்காணிக்கும் 300 பேர் கொண்ட குழுவை அவர் வழிநடத்துகிறார். 

அவர் பட்டய கணக்காளராக தகுதி பெற்றவர். வங்கித் துறையில் நுழைவதற்கு முன்பு, அவர் ஓர் ஆசிரியராகவும், பின்னர் தொலைத்தொடர்பு உட்பட பல தொழில்களில் ஆலோசகராகவும் இருந்தார். வங்கி துறையில் அவர் காலடி எடுத்து வைப்பதற்கு முன், தொலைத்தொடர்பு தான் அவரது கடைசித் துறையாக இருந்தது. அவர் பணியாற்றிய முதல் வாங்கியான ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டுடன் 9.5 வருடங்கள் தனது பயணத்தை மேற்கொண்டார். 


அவர் செப்டம்பர் 2008 இல் மேபேங்கில் சேர்ந்தார். அதன் பின்னர் டத்தோ நோரா மேபேங்கின் மனித மூலதன உத்தியை முதலாளிகளின் வர்த்தகத்தில் மட்டும் கவனம் செலுத்தாமல், பணியாளர்களின் நன்மைகள் மற்றும் திறமை பல்வகைப்படுத்தல்களில் கவனம் செலுத்தி வருகிறார். பாலினம், இனம் மற்றும் தேசியம் மட்டுமின்றி, வேலைவாய்ப்புக்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளும் - மேபாங்கில் ஒவ்வொரு விதத்திலும் பலதரப்பட்ட பணியாளர்கள் இருப்பதை அவர் உறுதி செய்தார்.


கரும்பு தோற்கிற இனிமையும்

இரும்பு தோற்கிற துணிவும்

எறும்பு தோற்கிற சுறுசுறுப்பும் கொண்ட இந்த இரும்பு பெண்மணிக்குள் உறுமிக்கொண்டே இருக்கிறது ஒரு சிங்கம். 

அவர் விரும்பாவிட்டாலும், அவர் செய்யும் எல்லாவற்றிலும் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதில் அவர் உறுதியான நம்பிக்கையைக் கொண்டவர். அதுவே அவர் வாழ்க்கையின் தாரக மந்திரமாகவும் இருக்கிறது. 26 ஆண்டுகளுக்கும் மேலான திறமை, மேலாண்மை, அனுபவம் மற்றும் உலகளாவிய முதல் 50 மனித வள நிபுணராக அவர் அங்கீகாரம் பெற்றுள்ளதால், ஊழியர்களைக் கட்டியெழுப்பும் அறிவியலைப் பற்றிய அவரது நுண்ணறிவு பட்டயம் வங்கியாளர்களுக்குத் தொழிலின் தங்கத் தரத்தை உருவாக்குவதற்கு ஒரு தூண்டுதலாக உள்ளது. 


மேபாங்கில் உள்ள அனைவரும் அவரின் எளிமையான மற்றும் அடக்கமான அணுகுமுறையால் அவரை மிகவும் விரும்புகிறார்கள். அதனால் தான் எனக்கு மிகவும் பிடித்த...நான் அண்ணாந்து பார்க்கிற வணிகத் தலைவர்களில் இவரும் ஒருவராக இருக்கிறார். 


இவரை போன்ற திறமையான வணிகத் தலைவர்கள் இந்த நாடு போற்றிப் பாதுகாக்க வேண்டிய பொக்கிஷங்கள். இவரின் நட்பை பெற்றதற்கு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்; பாக்கியசாலியாகவும் கருதுகிறேன். நல்ல உறவு பாங்கான விளை நிலம், அதில் அறுவடையாகும் வற்றாத புதையல் டத்தோ நோரா மனாஃப் போன்ற நல்ல உள்ளம் கொண்ட மனிதர்கள். 


மலேசிய வங்கித் துறையை மேம்படுத்துவதில் அவர் மேலும் மேலும் வண்ணமயமான பயணத்தை எதிர்கொள்ள வாழ்த்துகிறேன் 🙏


அவர் ஆளுமையை ரசித்து 

மலர்ந்த மலர்களில் நானும் ஒருவன், 


ராஜ் குமார் (மலேசியா)


காத்திருக்கிறேன்/சகுந்தலா ஸ்ரீனிவாசன்

 இந்த உலகத்தில்

வெறுப்பதற்கு ஒன்று
உண்டு என்றால்
அது காத்திருப்பது
அதுவும் பிடித்தவருக்காக..
காத்திருப்பது
பிடித்தவருக்கே அப்படின்னா
பிடிச்சவனுக்கு..
ஆம்..
காத்திருக்கிறேன்
ஒரு கதவின் வழியாக...
சகுந்தலா ஸ்ரீனிவாசன் ✍️


மின் நுகர்வோரின் திருப்தியே குறிக்கோள்: வாரியத்திற்கு குறை தீர்ப்பாளர் அறிவுரை

 மின் நுகர்வோரின் திருப்தியே குறிக்கோள்: வாரியத்திற்கு குறை தீர்ப்பாளர் அறிவுரை

----------------*-----------------*------------------*---------------

மின் நுகர்வோரின் திருப்தியே குறிக்கோளாக இருக்க வேண்டும்' என மின் குறைதீர்ப்பாளர் அறிவுறுத்தியுள்ளார்.


சென்னை ஆலந்துாரைச் சேர்ந்த பெனாசிர் அலி என்பவர் கொரோனா காலமான 2020 ஏப்ரல் மே மாதங்களில் கடை மூடப்பட்டிருந்த போது மின் கட்டணம் அதிகம் வந்துள்ளதாக ஆலந்துார் உதவி பொறியாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து மீட்டர் சோதனை முடிந்த பின் மின் கட்டணம் செலுத்துமாறு பொறியாளர் தெரிவித்துள்ளார். மூன்று மாத தவணை அபராத தொகையுடன் மின் கட்டணத்தை நுகர்வோர் செலுத்தியுள்ளார்.தான் அளித்த புகாரின் அடிப்படையில் தன் மீட்டர் ஆய்வு செய்யப்படாததால் அவர் சென்னை தெற்கு மின் நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் புகார் செய்துள்ளார்.


அங்கு அளித்த தீர்ப்பால் அதிருப்தியடைந்த அவர் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் மின் குறைதீர்ப்பாளரிடம் மேல் முறையீடு செய்துள்ளார். இதற்கு மின் வாரியம் பதில் மனு செய்துள்ளது.


இரு தரப்பு வாதங்களை விசாரித்த பின் மின் குறை தீர்ப்பாளர் தேவராஜன் அளித்த உத்தரவு விபரம்:


மின்சார ஒழுங்குமுறை ஆணைய விதிகளின் படியும் அரசின் வழிகாட்டுதல் படியும் மேல்முறையீட்டாளரின் மின் இணைப்பில் மின் கட்டணம் வசூலிக்கப்பட்டு உள்ளது. அதில் விதிமீறல் ஏதுமில்லை.புகார் தெரிவித்தும் மீட்டரில் குறைபாடு இல்லை என்பதற்கு ஆதார சோதனை அறிக்கையுடன் பதில் அளிக்காதது மின் வாரியத்தின் சேவை குறைபாடு.மேலும் மின் ஊழியர் மீட்டர் சோதனை அறிக்கை வரும் வரை மின் கட்டணம் செலுத்த வேண்டாமென தெரிவித்தது தவறான வழிகாட்டுதல்.இதன் விளைவாகவே கட்டணத்தை உரிய காலத்தில் செலுத்தவில்லை எனவும் அதனால் தாமத மற்றும் மறு இணைப்பு கட்டணம் செலுத்த நேரிட்டதாக அறிய முடிகிறது.

மின் நுகர்வோரிடம் காட்டும் மின் வாரியத்தின் அணுகுமுறையில் மாற்றம் தேவை. நுகர்வோரின் திருப்தியே மின் வாரியத்தின் குறிக்கோளாக இருக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.பிறப்புச் சான்றிதழில் தந்தையின் பெயரை குறிப்பிட வேண்டிய அவசியமில்லை-

 பிறப்புச் சான்றிதழில் தந்தையின் பெயரை குறிப்பிட வேண்டிய அவசியமில்லை- சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் அதிரடி தீர்ப்பு. (#High_Court)

::::::::::::::::::*:::::::::::::::::*:::::::::::::::::*::::::::::::::::::: மதுமிதா ரமேஷ் என்பவர் தனது குழந்தை தவிசி பெரேரா என்பவரின் பிறப்புச் சான்றிதழில் உள்ள மணிஷ் மதன்லால் மீனா என்ற பெயரை நீக்க  திருச்சி மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிடக்கோரிசென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில்  வழக்கு தொடர்கிறார்.


மனுதாரர் மதுமிதா ரமேஷ் என்பவர் தனது கணவரிடமிருந்து பரஸ்பர விருப்பத்தின் பேரில் முறையாக விவாகரத்து பெற்றவர்.


 பின்னர் தனது விருப்பத்தின் பேரில்  மருத்துவமனை உதவியுடன் ஒரு ஆண் உயிரணு கொடையாளி (  Sperm donor  ) மூலம் செயற்கை கருத்தரிப்பின் வழியே ஒரு குழந்தையை 23. 4. 2017 அன்று பெற்றெடுக்கிறார்.


 இந்த குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் வழங்கிய திருச்சி மாநகராட்சி சான்றிதழில் தந்தையின் பெயர் என்ற இடத்தில் ஏற்கனவே sperm donate செய்தவரின் பெயரை கட்டாயப்படுத்தி குறிப்பிட்டு சான்றிதழை வழங்குகிறது.


பிறப்புச் சான்றிதழில் குறிப்பிடப்படும் மணிஷ் மதன்லால் மீனா அந்தப் பெண்ணின் கணவரோ குழந்தையின் தந்தையோ கிடையாது. எனவே பிறப்புச் சான்றிதழில் அந்த பெயரை நீக்க வேண்டும் என்பதே மனுதாரரின் கோரிக்கை.


 இதுதொடர்பாக, மனுதாரர் உரிய மாநகராட்சி அதிகாரியிடம் கோரிக்கை மனு ஒன்றை அளிக்கிறார். ஆனால் அதிகாரியோ சான்றிதழில் உள்ள பெயரில் பிழை  இருந்தால் மட்டுமே தன்னால் சரி ( rectification) செய்ய முடியும். பெயரை நீக்குவதற்கு (removal)  தனக்கு அதிகாரம் இல்லை எனத் தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்கிறார்.


 பிரச்சினை உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு வருகிறது. நீதிமன்றம் தனது உத்தரவில் மனுதாரர் உரிய வருவாய் கோட்டாட்சியரை அணுகுமாறு அறிவுறுத்தி வழக்கை முடித்து வைக்கிறது.


 ஆனால் கோட்டாட்சியரோ மனுவின் மீது உத்தரவிட, பிறப்பு இறப்பு பதிவாளருக்கே ( Registrar of Births and Deaths) அதிகாரம் உள்ளது என மனுவை நிராகரிக்கிறார்.


 பிரச்சினை மீண்டும் உயர்நீதிமன்றத்திற்கு வருகிறது.


 மனுதாரரின் வழக்காடி தனது வாதத்தில், Registration of Births and Deaths Act 1969 , பிரிவு-15 மற்றும் Tamilnadu Registration of Births and Deaths Rules 2000, விதி- 11 -ன்படி  பதிவாளரே இவ்விஷயத்தில் உத்தரவிட முடியும் என தெரிவிக்கிறார்.


 இதற்கிடையில், மனுதாரரின் முன்னாள் கணவரும், மனுதாரருக்கு sperm donate செய்தவரும், தாங்கள் சம்பந்தப்பட்ட குழந்தையின் தந்தை என உரிமை கோர மாட்டோம் எனவும் அதற்கான முகாந்திரம் எதுவும் இல்லை எனவும் தனித்தனியே பிரமாண பத்திரம் (Affidavit )தாக்கல் செய்கின்றனர்.


 மனுவினை விசாரித்த உயர்நீதிமன்றம், வாத பிரதிவாதங்களின் அடிப்படையில் கீழ்க்கண்ட தீர்ப்பினை வழங்கியது.


 ◆ பிறப்புச் சான்றிதழில் தவறு ஏற்படும் போது அதனை திருத்தும் அதிகாரத்தை சட்டமும் விதிகளும் பதிவாளருக்கே வழங்குகிறது. எனவே, பதிவாளர்  உரிய விசாரணை மேற்கொண்டு உரிய திருத்தத்தை மேற்கொள்ள உரிய பிறப்பு-இறப்பு பதிவு அலுவலர்களுக்கு உத்தரவிட வேண்டும்.


◆ செயற்கை கருத்தரிப்பிற்காக மருத்துவமனையின்  முன்னெடுப்போடு  உதவிக்கு வந்த நபரின்  பெயரை குழந்தையின்  தந்தை என பிறப்புச்சான்றிதழில்  குறிப்பிட்டது தவறு.


◆  இது போன்ற சூழலில், குழந்தையை பெற்றெடுக்கும் தாயார் சமர்ப்பிக்கும் பிரமாணப் பத்திரத்தின்  அடிப்படையில் மட்டுமே பிறப்புச் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும்.


 ◆ பிறப்பு சான்றிதழில் தந்தையின் பெயர்  குறிப்பிடப்பட  வேண்டியது  கட்டாயம் என எந்தச் சட்டமும் தெரிவிக்கவில்லை.


 ◆ ஆண்களால் கைவிடப்பட்ட  தனித்த பெற்றோர்(single parent ) மற்றும் பாலியல் வன்முறைகளால் திருமணம் ஆகாமல் ( rape victims) குழந்தை பெற்றுக்கொள்ளும்  பெண்களிடம் பிறப்புச் சான்றிதழில் தந்தையின் பெயரை குறிக்க வேண்டும் என கட்டாயப்படுத்தக் கூடாது. அதற்கு சட்டத்தில் இடமில்லை.


 ◆ குழந்தையை தனது கருப்பையில் சுமக்கும் தாயாரின் முடிவின்படி பிறப்புச் சான்றிதழில் தந்தையின் பெயர் உள்ள இடத்தை காலியாக விட வேண்டும்.
Saturday, January 29, 2022

FROZEN MUSIC தியாகராஜ பாகவதர்

 அழகான கட்டடத்தை FROZEN MUSIC என்பார்கள்

. எது ஒன்று அழகாக இருந்தாலும் அதை இசையாய்ப் பார்ப்பவர்கள் நாம். திருச்சியிலோ ஓர் அழகே இசையாகவும் இருந்தது. அவர்தான் தியாகராஜ பாகவதர். தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார். அழகனான எம்.ஜி.ஆர் வியந்த அழகன் அவர். 'நடிகன் குரல்' பத்திரிகையில் எம்.ஜி.ஆர் சொன்னார், “எத்தனை விளக்குகள் எரிந்தாலும் பாகவதர் ஒரு இடத்தை விட்டுச் சென்றுவிட்டால் அந்த இடத்தை இருள் கவ்விக்கொள்ளும். அவரைச்சுற்றி ஒரு ஒளி எப்போதும் இருக்கும்” என்று.

இசையை ரசிக்காத 23-ம் புலிகேசி மாதிரி ஒரு மன்னனிடம் ஒரு கவிஞன் சொன்னான், ’மன்னா, உங்கள் இதயத்தை எந்த எதிரியின் வாளாலும் துளைக்கமுடியாது’ என்று. ’ஏன்’ என்றான் மன்னன். கவிஞன் சொன்னான், ’இசையாலேயே துளைக்க முடியாத உங்கள் இதயத்தை வாளாலா துளைக்க முடியும்’ என்று.
உண்மைதான். இசை மென்மையானது, வலிமையானது, கூர்மையானது. அதனால்தான் பாரதிதாசன் “தெள்ளு தமிழில் இசைத்தேனைப் பிழிந்தெடுத்துத் தின்னும் தமிழ் மறவர் யாம் யாம்” என்று துள்ளினார்.
இப்படியான ’இசைத் தமிழில்’ அதிக மக்களால் ரசித்தும் ருசித்தும் கேட்கப்படுவது திரை இசைப் பாடல்கள்தான். ஒருவகையில் இசையை, அதன் கடுமையான இலக்கண மரபிலிருந்து விடுவித்து; ஜனாயகப்படுத்தியதும் திரையிசைதான்.
இன்று இசை கேட்பதற்கு விதவிதமான கருவிகள் வந்துவிட்டன. ஒருகாலத்தில் ரேடியோ, சினிமா, இசைத்தட்டு மூன்றும்தான். டேப்ரெக்கார்டர் பின்னால் வந்து சேர்ந்தது. எத்தனை கருவிகள் வந்தாலும் பாட்டும் இசையும்தான் அடிப்படை. அதுவும் பாடும் குரலில் வழியும் தேன் நம்மை மயங்கடிக்கும். விதவிதமான குரலழகால் மனமும் காற்றும் நிரம்பி வழியும். அப்படியான ஒரு குரல்தான் பாகவதரின் குரல். “ராதே உனக்கு கோபம் ஆகாதடி” என்று அவர் பாடினால் அவர் ராதைக்கு மட்டுமல்ல, எந்த ராதைக்கும் கோபம் தணியும்.
“மன்மதலீலையை வென்றார் உண்டோ” என்று ஒரு சாதாரண தொழிலாளி சுத்த சங்கீதத்தில் பாடுகிறான். சாஸ்திர சங்கீதம் எளியவர்களுக்குப் புரியாது என்ற பிம்பத்தை உடைத்தது அது. பிரச்னை சங்கீதத்தில் இல்லை, பாடும் முறையிலும் குரல் வளத்திலும் உள்ளது என்பதை மரபான சங்கீத உலகை ஏற்கவைத்தார் பாகவதர். அதனால்தான், சங்கீத விமர்சனத்தைக்கூட எல்லோரையும் படிக்கவைத்த எழுத்தாளர் கல்கி, பாகவதரின் கச்சேரியைக் கேட்டுவிட்டு, “இந்தக் குரலையும் பாட்டையும் கேட்டுவிட்டு, வேறு பாட்டைக் கேட்டுக் காதைக் கெடுத்துக்கொள்ளக்கூடாது” என்று சபாவை விட்டுப் போய்விட்டாராம். ஒரு நல்ல காபியைக் குடித்துவிட்டால் வேறு காபி குடிக்க மனசு வராதல்லவா, அப்படி இது.
ஒரு முப்பது ஆண்டுகள் தன் குரலால் தமிழ்நாட்டைக் கட்டிப்போட்டு மயக்கிய பாகவதர் 'திருச்சியின் மகன்' என்பது நம் ஊரின் பெருமைதான்
நன்றி: விகடன்

பி.ஆர்.தேவர்

 
ஜவஹர்லால் நேரு

பி. ரத்தினவேலு தேவரைச் சந்திக்க இரண்டுமுறை அவர் வீட்டுக்கே வந்தார். 1936-ல் 'தேவர் விலாஸ்' வீட்டில்தான் நேரு தலைவாழை விருந்தைத் தரையில் அமர்ந்து சாப்பிட்டார். நேரு தரையில் உட்கார்ந்தது பி.ஆர்.தேவருக்குத் தந்த மரியாதையாகப் பார்க்கப்பட்டது. உலகின் தலைசிறந்த புத்தகங்களில் இரண்டை எழுதிய நேருவே பாராட்டும் அளவுக்கு அவரிடம் மிகப்பெரிய நூலகம் இருந்தது. அவற்றில் சில நூல்களை மட்டுமே நம்மால் பார்க்க முடிந்தது. ஆங்கில இலக்கியத்தின் மீது அவருக்கு ஈடுபாடு அதிகம். அதைவிட விளையாட்டென்றால் அவருக்கு உயிர். விதிகளுக்குக் கட்டுப்பட்டு வாழும் ஒழுங்கை விளையாட்டுதான் கற்றுத்தரும் என்பது அவர் கட்சி. ஏராளமான விளையாட்டுப் புத்தகங்களைத் தன் சேகரிப்பில் வைத்திருந்தார். குறிப்பாக கிரிக்கெட் புத்தகங்கள் அவரிடம் அதிகம். புதிதாக வரும் புத்தகங்களை உடனே தனக்கு அனுப்புவதற்கு ஹிக்கின் பாதம்ஸோடு ஒரு உடன்படிக்கை செய்துகொண்டவர் பி.ஆர்.தேவர். தான் படித்து முடித்த புத்தகங்களில் தேதியைக் குறித்துவைக்கும் பழக்கமும் அவரிடமிருந்தது.
நேரு வருகையின்போது
இப்போது டவுன்ஹால் என்று அழைக்கப்படும் ராணி மங்கம்மாள் தர்பார் ஹாலில்தான் நேருவுக்கு வரவேற்பு விழா நடந்தது. நேரு பி.ஆர்.தேவரைப் பாராட்டிப்பேசியதைத் தீரர் சத்தியமூர்த்தி மொழிபெயர்த்தார்.
1937-ல் பி.ஆர்.தேவர் சட்டமன்ற உறுப்பினர் ஆனார். ராஜாஜி அமைச்சரவை அமைத்தார். ராஜாஜி அமைச்சர் பதவிக்கு அழைத்தும், சுதந்திரமாய் வேலைசெய்ய முடியாது என்பதால் மறுத்துவிட்டார். அதன்பிறகே TSS ராஐன் அமைச்சரானார். நகரசபைத் தலைவருக்குத் தரப்பட்டுவந்த வாகன அலவன்ஸ் 125 ரூபாயைக்கூட வேண்டாம் என்றவர் அவர்.
முதுகுளத்தூர் கலவரம் தமிழ்நாட்டு அரசியலில் மாறாத வடு. நட்போடு இருந்த காமராஜரையும் முத்துராமலிங்கத் தேவரையும் அந்தக் கலவரம் அரசியலில் பிரித்துவிட்டது. பி.ஆர்.தேவர் காமராஜரின் தலைமையை ஏற்றவர். இந்தச் சூழ்நிலையில் முத்துராமலிங்கத் தேவர் கைது செய்யப்பட்டு புதுக்கோட்டை சிறையில் இருந்தார். அவர் சிறையிலிருந்து வெளியே வந்தபோது தங்கியது பி.ஆர்.தேவரின் வீட்டில்தான். அதுவும் ஓய்வுக்காகவும் சிகிச்சைக்காகவும் இரண்டு ஆண்டுகள் தங்கியிருந்தார். பி.ஆர்.தேவர் மறைவுக்குப் பிறகும் நட்பைப் பேணும் குடும்பமாக அவரது குடும்பம் இருந்ததை பார்க்கமுடிகிறது.
காந்தியடிகளுக்கு திருச்சி நகரமன்றத்தின் சார்பில் புத்தாரில் பிரமாண்ட வரவேற்பை பி.ஆர்.தேவர் கொடுத்தார். அந்தக் காலத்தில் இது ஒரு புரட்சியாகப் பார்க்கப்பட்டது. தான் அணிந்திருந்த விலை உயர்ந்த மூன்று கற்கள் பதித்த மோதிரத்தை காந்தி திரட்டிய ஹரிஜன சேவை நிதிக்கு பி.ஆர்.தேவர் வழங்கினார். அவரின் உடல்நலமில்லாத ஒரே மகள் பாப்பம்மாவுக்குக் கடிதம் எழுதும் அளவுக்கு அவர்மீது காந்தி மதிப்பும் அன்பும் கொண்டிருந்தார்.
காந்தியடிகளின் கட்டளையை ஏற்று 1940-ல் 'தனிநபர் சத்தியாகிரகத்தில்' பங்கேற்ற பி.ஆர்.தேவர் ஒரு ஆண்டு திருச்சி சிறையில் இருந்தார். அப்போது அவர் எம்.எல்.ஏ ஆகவும் ஜில்லா போர்டு தலைவராகவும் இருந்தார் என்பது முக்கியமானது. சிறைக்குக் கிளம்பும் போதும் தன் தாய் வள்ளியம்மாளின் காலில் விழுந்து வணங்கி விடைபெற்றார். அந்த வீரத் தாயும் தன் மகனைச் சிறைக்கு மகிழ்வோடே அனுப்பிவைத்தார்.
நன்றி: விகடன்

திருலோக சீதாராம்.

 
அழுக்கற்ற அவரின் வாழ்க்கை நெறிதான் காமராஜரையும் அண்ணாவையும் ஒரே நேரத்தில் அவரை நேசிக்க வைத்தது. மனுதர்ம சாஸ்திரத்தைத் தமிழில் மொழிபெயர்த்த அவர்தான் பெரியாரை அவர் நடத்திய எழுத்தாளர் சங்க மாநாட்டில் பேச அழைத்துள்ளார். அவர் அச்சகமும் வீடும் பல எழுத்தாளர்களின் பர்ணசாலையாக இருந்தன. வல்லிக்கண்ணன், ந.பிச்சமூர்த்தி கரிச்சான்குஞ்சு, கு.ப.ரா, தி.ஜா, கி.வா.ஜ, எம்.வி.வெங்கட்ராம், அகிலன், ஜெயகாந்தன், கொத்தமங்கலம் சுப்பு, நா.பார்த்தசாரதி, இந்திரா பார்த்தசாரதி, சுகி.சுப்பிரமணியம், வாலி என்ற அந்தப் பட்டியல் நீளும்.

1952 தேர்தலில் சுயேச்சையாக ஶ்ரீரங்கத்திலும் துறையூரிலும் திருலோகம் போட்டியிட்டார். இரண்டு ஜீப், மைக் எல்லாம் ஜி.டி.நாயுடு கொடுத்தார். செலவை என்.எஸ்.கிருஷ்ணன் பார்த்துக்கொண்டார். பாரதி பாடல்களை ஓங்கிப் பாடி உணர்ச்சியோடு பேசுவார் திருலோகம். அதுதான் பிரசாரம். பின்னால் வருகிற அவரின் நண்பர் அ.வெ.ர.கிருஷ்ணசாமி ரெட்டியார் ஓட்டு கேட்பார். யாரையும் திட்டாத, வாக்குறுதி தராத ஒரு வேட்பாளரைச் சந்தித்த புது அனுபவம் திருச்சிக்கு.
ஜி.டி.நாயுடுவைச் சந்தித்து நண்பரானதே தனிக்கதை. நாயுடுவின் வீட்டைக் கடந்தபோது பார்க்க ஆசைப்பட்ட இவரிடம் ஒரு படிவத்தைக் கொடுத்துப் பூர்த்தி செய்யுங்கள். காரணம் சரியாக இருந்தால் மட்டுமே ஐயா பார்ப்பார் என்றார்கள். இவர் பார்க்கும் நோக்கம் என்ற இடத்தில் “சும்மா” என்று எழுதினார். நாயுடு திருலோகத்தை உடனே அழைத்தார். இப்படித் தொடங்கிய நட்பு அது. நல்லவர்கள் நட்பு என்பதால் வளர்ந்தது. “உழைப்பின் உயர்வு”, “அதிசய மனிதர் ஜி.டி.நாயுடு” என்று இரண்டு புத்தகங்கள் எழுதினார் திருலோகம். உங்களுக்கு என்ன வேண்டும் கேளுங்கள் என்றார் அந்த விந்தை மனிதர். எங்கள் திருச்சி சீத்தாலட்சுமி பள்ளிப் பெண்களுக்கு ஒரு பேருந்து கொடுங்கள் என்றார் திருலோக சீதாராம். மேதை தந்த பேருந்தை கவிதை வாங்கி வந்த அதிசயத்தைப் பள்ளி பார்த்தது. ஊரார் பிள்ளைகளை பஸ்ஸில் அனுப்பியதால் அவர் பிள்ளைகள் இன்று காரில் போகிறார்கள்.
நன்றி: விகடன்

பக்தனுக்காக தை அமாவாசையை பெளர்ணமியாக்கிய அபிராமி

 today

sumischannel

பக்தனுக்காக தை அமாவாசையை பெளர்ணமியாக்கிய அபிராமி|secret of Abirami Anthathi|sumischannel
இதன் தொடர்ச்சியாக இந்த திரைப்பட காணொளி
பாருங்க
by


கைபேசி செயலி மூலம் மின்கட்டணம் கணக்கிடும் முறை

 கைபேசி செயலி மூலம் மின்கட்டணம் கணக்கிடும் முறை

தமிழ்நாடு


கைபேசி செயலி மூலம் மின் கட்டணம் கணக்கீடு செய்யும் நடைமுறையை பிப்ரவரி 1ம் தேதி முதல் சோதனை முறையில் தொடங்க தமிழக மின்வாரியம் முடிவு செய்துள்ளது.


மின்நுகர்வோரே மின்சார கட்டணத்தைக் கணக்கிடும் வகையில் கைபேசி செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த செயலியை கைபேசியில் பதிவிறக்கம் செய்து, கட்டணத்தை கணக்கீடு செய்யலாம். செயலியில் மீட்டர் புகைப்படத்தை பதிவேற்றம் செய்த ஒரு சில நிமிடங்களில் மின் கட்டண விவரம், குறுஞ்செய்தியாக நுகர்வோருக்கு அனுப்பப்படும். சோதனை முயற்சியாக மின்வாரிய ஊழியர்களுக்கு இந்தச் செயலி வழங்கப்பட்டு பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பணிகளை தொடங்க உத்தரவிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக சென்னை மற்றும் வேலூர் மண்டலங்களில் சோதனை அடிப்படையில் இந்த நடைமுறை செயல்படுத்தப்பட உள்ளது.


>


கர்ப்பமாக இருந்தால் வேலை கிடை. யாதுசர்ச்சைக்குள்ளான எஸ்.பி.ஐ யின் புதிய திருத்தம்

 கர்ப்பமாக இருந்தால் வேலை கிடை. யாதுசர்ச்சைக்குள்ளான எஸ்.பி.ஐ யின் புதிய திருத்தம்

பெண்கள் 3 மாதத்திற்கு மேல் கர்ப்பமாக இருந்தால் வங்கியின் அனைத்து தேர்வுகளிலும் வெற்றி பெற்றாலும் பணியில் சேர எஸ்.பி.ஐ தடை விதித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 


“பெண்களுக்கு எதிரான” எஸ்பிஐ வழிகாட்டுதல்களை திரும்பப் பெற வேண்டும் என்று அனைத்திந்திய ஜனநாயக மகளிர் சங்கம் (AIDWA) கோரியுள்ளது. பாரத ஸ்டேட் வங்கி, சமீபத்திய சுற்றறிக்கையில், கர்ப்பிணிப் பெண்களை நியமனம் செய்வது தொடர்பான வழிகாட்டுதலைத் திருத்தியுள்ளது.


திருத்தப்பட்ட வழிகாட்டுதலின்படி, மூன்று மாதங்கள் மற்றும் அதற்கு மேல் கர்ப்பமாக இருக்கும் தேர்வர்கள் தற்காலிகமாக தகுதியற்றவர்களாகக் கருதப்படுவார்கள் மற்றும் குழந்தை பிறந்த நான்கு மாதங்களுக்குள் பணிக்கு சேர அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இருந்த வழிகாட்டுதலில், ஆறு மாத காலம் வரை கர்ப்பமாக இருக்கும் பெண்கள், வங்கியில் வேலை செய்வது கருவின் வளர்ச்சியில் எந்த பாதிப்பை ஏற்படுத்தாது என்று தகுந்த மருத்துவரின் சான்றிதழ் சமிர்பித்தால் பணியில் அமர்ந்தலாம் என்று கூறியது. இதில் தற்போது திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது பல்வேறு தரப்பில் எதிர்ப்பை கிளப்பியுள்ளது.


இதுக்குறித்து கருத்து தெரிவித்துள்ள அகில இந்திய ஜனநாயக மகளிர் சங்கம் “கர்ப்பிணிப் பெண்களுக்கான நியமனம் தொடர்பான அறிவுறுத்தலை எஸ்பிஐ திருத்தியுள்ளது.3 மாதங்கள் மற்றும் அதற்கு மேல் கர்ப்பமாக இருக்கும் பெண்கள் பணியில் நியமிக்கப்பட மாட்டார்கள். பிரசவம் முடிந்து 3 மாதங்களுக்குப் பிறகுதான் அவர்கள் நியமிக்கப்படுவார்கள். இந்த திருத்தப்பட்ட வழிக்காட்டுதல் பாகுப்பாடு நிறைந்தது என்று தெரிவித்துள்ளது.
கடந்த 2009 இல் ஸ்டேட் பேங்க் அதன் உள்ளூர் தலைமை அலுவலகங்களுக்கு பெண்களுக்கு உடனடியாக பணி நியமனம் அல்லது பதவி உயர்வுக்காக கர்ப்பத்தை ஒரு ஊனமாக கருதக்கூடாது என்பதற்கான வழிமுறைகளை வழங்கியது என்று AIDWA யின் தலைவர் மாலினி பட்டாச்சார்யா கூறுகிறார். மேலும் அப்போது அந்த அறிவிப்பு வருவதற்கு, கேரளத்தை சேர்ந்த சில பெண்கள் அமைப்புகள் போராட்டம் மற்றும் அப்போதைய கேரள முதலமைச்சர் வி.எஸ்.அச்சுதானந்தன் பிரதமருக்கு எழுதிய கடிதம் ஆகியவற்றின் விளைவாக அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்று தெரிவிக்கிறார்.


பணி நியமனம் மற்றும் பணி உயர்வு நேரத்தில் பெண் பணியாளர்கள் கர்ப்பமாக இருக்கிறார்களா என்பதைத் தீர்மானிக்கவும், கர்ப்ப காலத்தில் பணி நியமனம், பதவி உயர்வு போன்றவற்றை தள்ளிப்போடும் வகையில் அவர்களின் மாதவிடாய் சுழற்சியின் விவரங்கள் அடங்கிய அறிவிப்பைச் சமர்ப்பிக்கவும் எஸ்.பி.ஐ வலியுறுத்தியது என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் பெண் ஊழியர்கள் தங்கள் மாதவிடாய் விவரங்களை அறிவிக்க வேண்டும் எனவும் கருப்பை, மார்பகம் தொடர்பான நோய்பாதிப்பு குறித்தும் எந்தவொரு ஆதாரத்திலும் உறுதியளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த 2009 ஆம் ஆண்டில் எஸ்.பி,ஐ யானது, கருவில் எந்தவொரு பாதிப்பு ஏற்படாது என்று சிறப்பு மகளிர் மருத்துவ நிபுணரின் சான்றிதழை அளித்தால், அத்தகைய தனிப்பட்ட விவரங்கள் இல்லாமல், பெண்கள் கருவுற்ற ஆறாவது மாதம் வரை பணியமர்த்துவது என்று முடிவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.


Last Updated Jan 28, 2022, 8:31 PM IST


<1>


This is the last page

23 சான்றிதழ்களை இ-சேவை மையத்தில் உடனுக்குடன் பெறலாம்” - பள்ளிக் கல்வித்துறை

 “23 சான்றிதழ்களை இ-சேவை மையத்தில் உடனுக்குடன் பெறலாம்” - பள்ளிக் கல்வித்துறை

பள்ளிக் கல்வித்துறையின் 23 வகையான சான்றிதழ்களை இ-சேவை மையம் மூலமாக பெற்றுகொள்ள வழிவகை செய்யும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

பள்ளிக் கல்வித்துறையின் 23 வகையான சான்றிதழ்களை இ-சேவை மையம் மூலமாக பெற்றுகொள்ள வழிவகை செய்யும் அரசாணையை பள்ளிக் கல்வித்துறை இன்று வெளியிட்டுள்ளது. 


இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், “2021-2022ஆம் ஆண்டு பள்ளிக் கல்வித்துறையின் மானியக்கோரிக்கையின் போது கல்வித்துறை அமைச்சரால் ஏனையவற்றுடன் வரிசை எண் 18-ல் மின்னணு சேவைகள் என்ற தலைப்பில் கீழ்க்கண்ட அறிவிப்பு வெளியிடப்பட்டது. 


பள்ளிக் கல்வித் துறையில் பொது மக்கள் மற்றும் மாணவர்களுக்கு வழங்கப்படும் சான்றுகளான நன்னடத்தைச் சான்று, ஆளறிசான்று, தமிழ் வழியில் படித்ததற்கான சான்று உள்ளிட்ட அனைத்துச் சான்றுகளும் அவர்தம் இல்லத்திற்கு அருகில் உள்ள அரசு பொது சேவை மையங்களின் வாயிலாக விண்ணப்பித்து காலவிரயமின்றிப் பெற்றுக் கொள்ளும் திட்டம் செயல்படுத்தப்படும். 


பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக பள்ளிக் கல்வித் துறையில் உள்ள பல்வேறு இயக்ககங்களின் வாயிலாக இரண்டாம்படி மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் பட்டியல் நகல், புலப்பெயர்வு சான்றிதழ் (Migration Certificate), கல்வி இணைச் சான்றிதழ் (Equivalence Certificate), தமிழ் வழியில் கல்வி பயின்றமைக்கான சான்றிதழ் போன்ற பல்வேறு வகையானச் சான்றிதழ்களை, தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிக் கல்வித் துறையைச் சார்ந்த பல்வேறு அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் வாயிலாக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பெற்று வருகின்றனர் என்றும், இச்சேவைகள் சிறப்பான முறையில் அளிக்கப்பட்டு வந்தாலும், மாணவர்கள். பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கே நேரில் சென்று பெற்றுவரும் நிலை இருந்து வருகிறது என்றும் இதனால் சம்பந்தப்பட்ட நபருக்கு காலவிரையம் மற்றும் பணவிரையம் ஏற்படுவதுடன், அரசு அலுவலகங்களுக்கும் பணிச்சுமை கூடி வருகிறது. எனவே பள்ளிக் கல்வித்துறையின் 23 வகையான சான்றிதழ்களை இ-சேவை மையம் மூலம் மாணவர்கள் பெற்றுக்கொள்ள புதிய திட்டம் வகுக்கப்பட்டியிருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கும் கண்டிராத ஈசனின் திருக்கோலம்..

 எங்கும் கண்டிராத ஈசனின் திருக்கோலம்..!! நான் பார்த்ததெல்லாம் சிவலிங்க வழிபாடு, முகலிங்க வழிபாடு இல்லையேல் சிவனின் முழு உருவ கோலம். ஆனால், இந்த வடிவம் ஆவுடை மீது லிங்கம் இருக்கும் இடத்தில் நந்தி தேவர் மீது அமர்ந்த கோலத்தில், ஜடாமுடி மற்றும் இதர அணிகலன்கள் அணிந்து காட்சியளிக்கின்றார் ரிஷபவாகனதேவர்.


 இது 16 ஆம் நூற்றாண்டை சேர்ந்த புரசோமேஸ்வரர் கோவில், ஷிமோகா மாவட்டத்தில் இருப்பதாக ஒரு பதிவு இருந்தது.


இன்று  மஹா சனி பிரதோஷ நாளில் கண்டு அருள் பெறுவோம்

ஓம் நமசிவாய🙏🙏🙏சிவ வழிபாடு முழுமை பெற வணங்க வேண்டிய கடவுள்கள்.

 சிவ வழிபாடு முழுமை பெற வணங்க வேண்டிய கடவுள்கள். சிவ வழிபாடு என்பது மிகப் பெரிய செயல் ஆகும். அதற்கு தடைகளும், இடையூறுகளும் வருவது இயற்கையே. இதற்கு காரணம் நமது கர்மவினைகளே. கர்மவினைகளை அழிக்க பல எளிய வழிகள் உண்டு. கர்மவினைகளை அழிக்கும் செயலே இயற்கைக்கு மாறான ஒன்றாகும். 


நாம் பிறந்த இந்த பூமியானது ஒரு கர்ம பூமி. இதில் பிறந்த ஒவ்வொருவரும் அவரவர் தம் கர்ம வினைகளை தொலைக்க பிறந்தவர்களே. இந்த கர்மவினைகள் இரண்டாகும். அவை நல்வினை மற்றும் தீவினை ஆகும். நல்வினை மற்றும் தீவினை இவற்றை நாம் அனுபவித்தே ஆக வேண்டும். இது தான் விதி என்று அழைக்கப்படுகிறது.


 மதி என்கிற சந்திரனை சூடிய கடவுள்கள் வழிபாடு நமது கர்மவினைகளை போக்கக்கூடியது. பிறைசூடிய தெய்வங்கள் சிவபெருமானை பிரதிபலிக்கும் தெய்வங்கள் ஆகும். அவ்வாறு இருக்கும் தெய்வங்கள் சிவபெருமானின் அம்சம் பொருந்தியவையே. நமது சிவ வழிபாட்டில் வரும் தடைகளும், இடையூறுகளும் முதலில் நமது மனதை பாதிக்கக்கூடியவை. இவ்வாறு வரும் இடையூறுகளை களைந்து சிவ வழிபாடு முழுமை பெற இரண்டு சிவ வடிவங்களின் அருள் மிகவும் தேவை.


 முதலில் வரும் சிவ வடிவம் அமைதியே உருவான தென்முகக்கடவுள் (தட்சணாமூர்த்தி). இறுதியாக வரும் சிவ வடிவம் பைரவர். பைரவர் என்றால் எந்த பைரவர் வேண்டுமானாலும் இருக்கலாம். இந்த இரண்டு சிவ வடிவங்களின் துணையின்றி சிவ வழிபாடு முழுமை பெறாது. 


இந்த இரண்டு சிவ வடிவங்கள் மொத்தம் உள்ள 64 சிவ வடிவங்களிலும், வழிபாட்டிற்குரிய 25 சிவ வடிவங்களிலும் மிக மிக முக்கியமானவை. தட்சணாமூர்த்தி மற்றும் பைரவர் ஆகிய இரு சிவ வடிவங்களும் ஒவ்வொரு சிவாலயங்களிலும் தனித்தனி சந்நிதி கொண்டு அருள் வழங்கும் வடிவங்கள் ஆகும். தட்சணாமூர்த்தி மற்றும் பைரவர் ஆகிய சிவ வடிவங்களும் சென்னியில் பிறையை சூடியவர்கள். இவர்களது தலையில் மூன்றாம் பிறை சந்திரனை நாம் காணலாம்.


 தட்சணாமூர்த்தி சிவபெருமானின் யோகவடிவம். ஞானகுரு என்றழைக்கப்படும் தட்சணாமூர்த்தி அமைதியே உருவானவர். சிவ வடிவங்களில் மிகவும் சிறப்பானவர். தென் திசையை நோக்குபவர். இவரை வழிபடுவது மிகவும் எளிது. இவரை வழிபட கடினமான வழிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் ஏதும் கிடையாது. இவரை தொடர்ந்து வழிபட ஞானமும், செல்வமும், வெற்றியும் உண்டாகும். நமது கர்மவினைகள் படிப்படியாக நீங்கும். மந்திர செபம் செய்பவர்களுக்கு உகந்த கடவுள் இவரே. இவரை வழிபட மனம் அமைதி பெறும். இவரிடம் வேண்டிய கோரிக்கைகள் மட்டுமல்லாமல் வேண்டாமல் மறந்து போன கோரிக்கைகளும் நிறைவேறும். மந்திர செபம் செய்பவர்களின் மந்திர செபங்களுக்கு சக்தியை தருபவரும் இவரே. மனநிம்மதியை தருபவரும் இவரே.


 “ஓம் நமோ பகவதே தக்ஷ்ணாமூர்த்தயே மஹ்யம் மேதாம் ப்ரஞ்ஞாம் ப்ரயச்ச ஸ்வாஹா”


 மேற்கண்ட மந்திரம் தட்சணாமூர்த்தியின் சிறப்பான மந்திரம் ஆகும். இதற்கு பெரிய கட்டுப்பாடுகள் ஏதும் இல்லை. அசைவம் ஒன்று மட்டும் சாப்பிடக்கூடாது. 


 கடைசியாக வருபவர் கர்மவினைகளை தன் பார்வையாலே எரிக்கும் வல்லமை கொண்ட பைரவர் ஆவார். இவரே சிவத்தலத்தில் இறுதி சிவ வடிவம் ஆவார். பைரவர்களுள் சொர்ணபைரவரே வீட்டில் வைத்து வழிபாடு செய்யத்தக்கவர். மற்ற அனைத்து பைரவ வடிவங்கள் கோவிலிலோ அல்லது காடுகளிலோ அல்லது மலைகளிலோ வைத்து வழிபடத்தக்கன. பைரவ வடிவம் சிவ வழிபாட்டில் ஏற்படும் கர்மவினை பாதிப்புகளை நீக்க வல்ல வடிவம் ஆகும். பைரவரை தொடர்ந்து வழிபடுவதால் மட்டுமே நாம் செய்யும் சிவ வழிபாட்டின் பலனை அடையமுடியும். பைரவரே நவக்கோள்களின் அதிபதி ஆவார். 


சிவ வழிபாட்டின் பலனை நமக்கு தருமாறு நவக்கோள்களுக்கு ஆணையிடும் தலைவரும் பைரவரே ஆவார். இவரை வழிபடாமல் இருந்தால் நமக்கு சிவ வழிபாட்டின் பலன் கிடைக்காது.


பைரவரே காலத்தையும், காலனையும் வென்றவர். காலகாலர் என்ற பெயரை கொண்டவரும் பைரவரே ஆவார். 


தெற்கு திசை நோக்கும் பைரவர் மிகவும் சக்தி வாய்ந்தவர்.


பைரவர் சிவபெருமானின் கோபமே உருவான ருத்ர வடிவம். 


பைரவர் நம்மை நவக்கோள்களின் பாதிப்பிலிருந்து காப்பார். கர்மவினைகளை வேரோடு சாய்ப்பார். இவரிடம் வேண்டிய கோரிக்கைகள் மட்டுமல்லாமல் வேண்டாமல் மறந்து போன கோரிக்கைகளும் நிறைவேறும். சிவ வழிபாட்டின் இறுதி நிலையே பைரவர் வழிபாடு ஆகும்.


 எத்தனையோ பிறவிகளில் புண்ணியம் செய்தவர்கள் மட்டுமே பைரவர் வழிபாடு செய்கின்றனர். முதலில் காலபைரவரை வழிபாடு செய்யும் அனைவரும் படிப்படியாக சொர்ணபைரவர் வழிபாடும் செய்வார்கள். பின்பு இரண்டு வழிபாடுகளும் தொடர்ந்து செய்வார்கள். 


இறுதியில் சொர்ணபைரவர் வழிபாடு மட்டும் செய்வார்கள். இது தான் பைரவர் வழிபாட்டின் ரகசியம் ஆகும். 


தன் கர்ம வினைகளை முற்றிலும் நீக்கி பிறவியில்லா பெருநிலையை அடைய தகுதி படைத்தவர்களே பைரவர் வழிபாட்டை தொடர்ந்து செய்கிறார்கள். கர்மவினைகளை அழித்து முக்தியை அடைகிறார்கள். பைரவரை வழிபாடு செய்வது மிகவும் எளிது.


 “ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் சொர்ணபைரவாய ஹும் பட் ஸ்வாஹா”


 மேற்கண்ட மந்திரம் சொர்ணபைரவரின் சிறப்பான மந்திரம் ஆகும்.


 தென்னாடுடைய சிவனே போற்றி…!


எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!
காத்திருக்கிறேனடா காதலா/ரேகா

 
பல மைல்களுக்கு அப்பால்

நீ இருந்தாலும்

உன்னைப் பற்றிய 

என் நினைவலைகள் எப்போதும் 

உன் நெருக்கத்திலே 

இருக்கிறது


எதிர்பார்ப்புகள் 

ஏமாற்றங்களை தரும் என்பதை 

நான் அறிவேன்


உன்னை குறித்தான எதிர்பார்ப்பு களிலேயே 

என் நாட்கள் நீண்டு 

கொண்டிருக்கிறது

 வாழ்வதற்கான காரணமும் 

தோன்றுகிறது


உன் 

இரவுகளில் எப்போதும்

 யாரேனும் துணைக்கு

 இருக்கத்தான் செய்கிறார்கள்


என் இரவுகளில் 

உன் நினைவுகள்

 மட்டும்

 எப்போதும் என்னோடு

உறக்கத்தின் பல நேரங்களில் கனவுகளிலும் 

நீ என்னோடு


என்னைப்பற்றி

 சிந்திப்பதற்கான நேரம் 

உனக்கு உண்டா என்று

 எப்போதும் 

எனக்கு ஐயமில்லை


காரணம் 

தினம் வரும் 

விக்கல் சொல்கிறது

 என்னைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறாய்

 என்று


புனிதமானதா

 புண்ணியமானதா

 என்றெல்லாம் எனக்கு

 தெரியாது


நாளை காலை வரவேண்டும்

காலையில் என்னை நான் ஆரோக்கியம் செய்ய வேண்டும்

என்னை அழகாய் அலங்காரம் செய்ய வேண்டும் என்கிற ஆசை எல்லாம்


தொடர்ந்து வருவதற்கு

 நீ ஒரு காரணம்


நினைவாய் என் கனவாய்

வந்து கொண்டே இரு என்னோடு


தொட்டுவிடும் தூரத்தில் நீ இல்லை என்றாலும்

என்றாவது எட்டிப் பிடித்து விடுவேன் உன்னை என்கின்ற நம்பிக்கையில் இந்த இரவு இனிதாகட்டும்


காத்திருக்கிறேனடா காதலா

என்னை நீ வந்து அடையும் வரை பூத்திருப்பேனடா 

காதலா---ரேகா

Featured Post

மனிதனை மீறிய சந்தர்ப்பங்கள் வாழ்க்கையை எவ்வளவு தூரம் திருப்பிவிடுகின்றன

  மனிதனை மீறிய சந்தர்ப்பங்கள் வாழ்க்கையை எவ்வளவு தூரம் திருப்பிவிடுகின்றன என்பதற்கு நான் ஓர் உதாரணம்.’’ – இது, ‘சரித்திர நாவல்களின் ஜாம்பவான...