Posts

Showing posts with the label சுற்றுலா

சென்னைக்கு அருகில் இப்படியொரு அழகான இடமா –

Image
  சென்னைக்கு அருகில் இப்படியொரு அழகான இடமா – பசுமையான நீர், வனப்பகுதி, ட்ரெக்கிங் – ஒரு நாள் சுற்றுலா! சென்னைக்கு அருகில் இப்படியொரு அழகிய இடமா என்று இந்த இடம் நம்மை வியக்க வைக்கிறது.  எங்கு பார்த்தாலும் பசுமை, அடர்ந்த வனாந்திரம், பச்சை நிற அழகிய தெளிவான நீர், கூழாங்கற்கள் பாதை  என இந்த இடம் பார்ப்பதற்க்கு ஏதோ நாம்  அந்தமானில் இருப்பது போன்ற  ஒரு உணர்வை தருகிறது. ஆனால் இந்த இடம்  சென்னையில் இருந்து வெறும் 3 மணி நேர பயண தூரத்தில் சென்னை - கடப்பா தேசிய நெடுஞ்சாலையில்  அமைந்துள்ளது. சென்னையில் இருந்து  ஒரு நாள் ட்ரிப் அல்லது பிக்னிக்  செல்ல இது சரியான சாய்ஸ் ஆகும். இந்த இடத்திற்கு ஒரு முறை சென்று வந்ததும் மீண்டும் மீண்டும் இங்கேயே செல்ல திட்டமிடுவீர்கள். இந்த இடத்தின் சிறப்பம்சங்கள் என்ன? எப்படி செல்வது? இங்கே என்னவெல்லாம் செய்யலாம் என்பது குறித்து கீழே பார்க்கலாம்! கடப்பா நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த மாமண்டூர் காடுகளை இயற்கை அன்னை மிகுதியாக ஆசீர்வதித்து இருக்கிறாள் என்று தான் சொல்ல வேண்டும். கிழக்கு தொடர்ச்சி மலைகளின் அரிய மரங்கள், தாவரங்கள்,...

சென்னை அருகே ஒரு நாளில் சுற்றிப் பார்க்கக்கூடிய சுற்றுலாத் தலங்கள்

Image
  சென்னை அருகே  ஒரு நாளில் சுற்றிப்  பார்க்கக்கூடிய  சுற்றுலாத் தலங்கள்   ஒரே நாளில் சென்னையில் இருந்து பிக்னிக் சென்று வர ஏகப்பட்ட சுற்றுலாத் தலங்கள் உள்ளன. லீவ் எதுவும் எடுக்காமல், ஒரே நாளில் நம் உள்ளத்துக்கும் உடலுக்கும் புத்துணர்ச்சி அளிக்க பார்க்கக்கூடிய  சுற்றுலாத் தலங்கள்   கடற்கரைகள், பழங்கால நகரங்கள், அழகிய நீர்வீழ்ச்சிகள், வினோதமான மலைவாசஸ்தலங்கள், பிரமிக்க வைக்கும் கட்டிடக்கலை மற்றும் அமைதியான சுற்றுலாத் தலங்கள் என இந்த பட்டியலில் பல இடங்கள்   இது பற்றி பார்ப்போம் ! வாங்க தடா  சென்னையில் இருந்து 70 கிமீ தூரத்தில் அமைந்துள்ள தடா நீர்வீழ்ச்சி சென்னைவாசிகளுக்கு மிகவும் பரிச்சயமான ஒரு பிக்னிக் ஸ்பாட் ஆகும். கடலோர உஷ்ண நகரமான சென்னையில் இருந்து கொஞ்ச தூர பயணத்திலேயே இயற்கை சார்ந்த ஒரு அழகிய ஸ்பாட்டை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால் தடாவிற்கு தான் செல்ல வேண்டும். அடர்ந்த வனத் தழைகளுக்கு மத்தியில் விழும் நீர்வீழ்ச்சிகள், இயற்கையில் அமைதியான நேரத்தை செலவிடுவதற்கும், மிதமான கடினமான மலையேற்றப் பயணத்துக்கும் ஒரு சிறந்த வழியாகும். ...

உலக அளவில் டிரெண்டான நம்ம கொல்லி மலை..

Image
  உலக அளவில் டிரெண்டான நம்ம கொல்லி மலை.. நாமக்கல்லில் இருக்கும் கொல்லி மலை தற்போது உலக அளவில் டிரெண்டாகி உள்ளது. சமூக வலைத்தளங்களில் பலர் இந்த மலையின் புகைப்படத்தை பகிர்ந்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் இருக்கும் மிக முக்கியமான சுற்றுலா தளங்களில் கொல்லி மலையும் ஒன்று. இரண்டு முக்கியமான காரணங்களுக்காக இந்த கொல்லி மலை மக்கள் இடையே பிரசித்தி பெற்றது. முதல் காரணம் இந்த மலையின் மருத்துவ குணம். இந்தியாவில் அதிக மூலிகைகள் அடங்கிய மலைகளில் கொல்லி மலை மிக முக்கியமானது. பல நாள்பட்ட நோய்களுக்கு தீர்வு அளிக்க கூடிய மூலிகைகள் இப்போதும் கொல்லி மலையில் உள்ளது. கொல்லி மலை பல லட்சம் அரிய மூலிகைகள் கொல்லி மலையில் காணப்படுகிறது. சித்த மருத்துவம் தொடங்கி இந்தியாவின் பல்வேறு பாரம்பரிய மருத்துவ முறைகளில் கொல்லி மலை மூலிகைக்கு என்று தனி இடம் உண்டு. மருத்துவ ரீதியாக கொல்லி மலைக்கு இப்போதும் கூட பல நூறு பேர் பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். இதனால் இந்த மலையை காக்க வேண்டும். அதிக அளவில் சுற்றுலா பயணிகளை அனுமதித்து இங்கே குப்பைகளை போட கூடாது என்றும் கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. சுற்றுலா பயணிகள் மருத்துவ ...

Gudiyam caves/travel

Image
 today travel valasai jigidies presents Gudiyam caves This Gudiyam caves is an historical place where the prehistoric people lived.. the age of the cave is 2lakhs years!!, It is situated in Thiruvallur district, near poondi Dam, tamilnadu, from chennai it is 60-70 kms.. The caves located in a reserved forest which is very dense. adventurous people love to visit this place... by valasai jigidies

Europe 1 hour 4K Cinematic Tour with Relaxing Music

Image
  Europe 1 hour 4K Cinematic Tour with Relaxing Music Study Music, Aplha Waves, Relaxing, Studing Music, Brain Power, Focus Concentration, Paradise, Paradise Lost, Rich Lifestyle, Billionaire, Millionair Lifestyle Music, Tour, Europe Tour, 1 hour, nonstop Study Music and Concentration Music helps you to concentrate on your studies and work. You can study and work more efficiently when this calm melody music is in the background. This study and Focus music is ideal instrumental nature music to get focus and relax when your are in tension and stressed. Our music for concentration uses natural waves and binatural beats to boost concentration and brain power. Lot of doctors also suggest this kind of music have the healing power for some diceases. Thats why I suggest you to subscribe this channel to that you will get regular updates Europe 1 hour 4K Cinematic Tour with Relaxing Music by Paradise Lost

அலையாத்திக் காடுகள்;

Image
  அலையாத்திக் காடுகள்; ருசியான கடல் உணவு!  மதுரையிலிருந்து சாலை வழியாக சிவகங்கை, திருவாடனை, மணக்குடி வழியாகச் சென்றால் 3 மணி நேரத்தில் தொண்டி அருகேயுள்ள காரங்காடு மீனவ கிராமத்தை அடைந்துவிடலாம். மதுரை மாவட்டமே இயற்கை அழகும் வரலாறும் நிறைந்து கிடக்கும் அற்புத பூமி என்றால், மதுரையின் அருகிலுள்ள மாவட்டங்களோ மலையும் வனமும் கடலும் நிறைந்து இயற்கை அன்னை தாலாட்டும் தொட்டிலாகக் காட்சியளிக்கின்றன. அதேநேரம் கடலுக்குள் பயணித்து கடலுக்குள் உள்ள அற்புதங்களைக் கண்டு களித்தால் எப்படி இருக்கும்..?அப்படியொரு இயற்கை எழில் நிறைந்த கடல் பயணத்துக்குத்தான் இப்போது செல்லப்போகிறோம். காரங்காடு அலையாத்திக்காடுகள்..! மதுரையிலிருந்து சாலை வழியாக சிவகங்கை, திருவாடனை, மணக்குடி வழியாகச் சென்றால் 3 மணி நேரத்தில் தொண்டி அருகேயுள்ள காரங்காடு மீனவ கிராமத்தை அடைந்துவிடலாம். மலையிலும், நன்னீர் நிலத்திலும்தான் காடுகள் உருவாகும் என்ற நிலையில் அதற்கு மாறாக உப்பு நீர் சூழ்ந்த கடலில் உருவாகி பிரமிப்பூட்டுவதுதான் அலையாத்திக்காடுகள் கடல் உயிரினங்களின் உறைவிடமாகவும், அவற்றின் உணவாகவும் பயன்பட்டு வரும் இக்காடுகள் கடலோர மக்...

ரயில் மூலமும் ஏழுமலையான் தரிசனம்..

Image
 ரயில் மூலமும் ஏழுமலையான் தரிசனம்..! ஒரு நாள் சுற்றுலாவாக இந்திய ரயில்வே கழகம் ஏற்பாடு! திருப்பதி ஏழுமலையான் தரிசனத்தை எளிதாக்க ஒரு நாள் சுற்றுலா திட்டத்தை இந்திய ரயில்வே சுற்றுலா உணவுக்கழகம் தொடங்கி உள்ளது. 'டிவைன் பாலாஜி தரிசனம்’ என்ற பெயரில் ஒருநாள் சுற்றுலாவாக நபர் ஒருவருக்கு 900ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நாட்டின் எந்த ஒரு பகுதியில் இருந்தும் தங்கள் சொந்த செலவில் காலை 8 மணிக்குள் ரயில் மூலம் திருப்பதிக்கு வந்து இறங்கும் பக்தர்கள், திருச்சானூர் பத்மாவதி தாயார் தரிசனம், ஏழுமலையான் தரிசனம் உள்ளிட்டவற்றை முடித்துக் கொண்டு மாலை அல்லது இரவு ரயில் மூலம் மீண்டும் ஊர் திரும்பும் வகையில் ஐ.ஆர்.சி.டி.சி. இந்தத் திட்டத்தை வகுத்துள்ளது.

எம்_ஜி_ஆர்

Image
  எம்_ஜி_ஆர் பிறந்த நாள் இலங்கையில் உள்ள கண்டியில் பிறந்தாலும் எம்.ஜி.ஆர், இலங்கையைச் சேர்ந்தவர் அல்ல; அவரது தந்தை கோபாலமேனனின் (மேனன் அல்ல; மேன்மைக்குரியவர் என்ற அர்த்தத்தில் அழைக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.) பூர்வீகம் கோவை அடுத்த காங்கேயம் எனச் சொல்லப்படுகிறது. அங்கு மன்றாடியார் வகுப்பைச் சேர்ந்தவர் என பின்னாளில் எம்.ஜி.ஆர் பிறப்பு குறித்து ஆய்ந்து எழுதப்பட்ட ’செந்தமிழ்வேளிர் எம்.ஜி.ஆர்’ என்ற நூலில் கூறப்பட்டுள்ளது. அதெல்லாம் உண்மையல்ல என்போருமுண்டு ஆனால் நீதித்துறையில் மாஜிஸ்திரேட்டாக பணியாற்றிய கோபாலன் கேரளாவைச் சேர்ந்த வடவனுரில் பணிநிமித்தமாக நீண்ட காலம் வசித்தார். அப்போதுதான் மருதூரைச் சேர்ந்த சத்யபாமாவைச் சந்தித்திருக்கிறார். இருவருக்குள்ளும் காதல் உருவாகி திருமணம் செய்துகொண்டதாகச் சொல்லப்படுகிறது. அந்தத் திருமணத்தில் சத்யபாமா குடும்பத்தினருக்கு விருப்பம் இல்லாதநிலையில், தனியே வசித்தார்கள் தம்பதியினர். தொடர்ந்து பணி நிமித்தமாக சத்யபாமா குடும்பம் அரூர் கரூர், திருச்சூர் மற்றும் கேரளாவின் பாலக்காடு உள்ளிட்ட இடங்களில் வசித்திருக்கிறது. எம்.ஜி.ஆர்கோபாலன் நேர்மையான மனிதர்; மனித...

வோக்கா சுற்றுலா உலகையே ஈர்க்கும் விசித்திரம்..

Image
 வோக்கா சுற்றுலா நாகாலாந்து மாநிலத்தின் தென் பகுதியில் அமைந்துள்ள வோக்கா என்ற நகரம் ஒரு மாவட்டத் தலைமையகமாகும். இங்கு நாகலாந்தின் மிகப்பெரும் பழங்குடிப் பிரிவினரான லோதாக்கள் அதிகமாக வாழ்ந்து வருகின்றனர். இதன் வரலாற்றின் பெரும்பாலான பகுதியில், நாகலாந்தின் பிற பகுதிகளைப் போன்று, உலகின் ஏனைய பகுதிகளிலிருந்து தனிமைப்பட்டே இருந்துள்ளது. 1876-ஆம் ஆண்டில் தான் ஆங்கிலேயர்கள் இங்கு வந்து, இதனை நாகா மலைகள் மாவட்டத்தின் தலைமையகமாக, அஸ்ஸாமின் கீழ் கொண்டு வந்துள்ளனர். வோக்கா ஏராளமான மலைகள் மற்றும் மலைமுகடுகளால் சூழப்பட்டுள்ளதனால் இது, அழகிய இயற்கைக்காட்சிகள் நிறைந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் கண்கவர் சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. இது வடக்குப்புறத்தில் மோக்கோக்சங் மாவட்டத்தாலும், கிழக்குப்புறத்தில் சூன்ஹேபோட்டோவினாலும், மேற்குப்புறத்தில் அஸ்ஸாமினாலும் சூழப்பட்டுள்ளது. வோக்காவில் சுற்றுலா லோதா பழங்குடியினர் மிகவும் அன்பானவர்கள். வோக்கா வரும் சுற்றுலாப் பயணிகளை நட்போடு வரவேற்று மனதார அரவணைக்கின்றனர். இங்கு விமரிசையாகக் கொண்டாடப்படும் முக்கிய விழாக்களான டோக்கு, பிக்குச்சாக் மற்றும் இமோங்...