Monday, November 30, 2020

மருதாணி சிவப்பு..

 #வாழ்தல்_இனிது

 தொடர்   


-சங்கீதா ராமசாமி.

மருதாணி சிவப்பு..எனக்கெல்லாம் திருவிழா, நாளு, கெழமைல கிடைக்கிற உற்சாகத்துக்கு கொஞ்சமும் குறைஞ்சதில்லை மருதாணி அரைக்கிற வைபவம். 


விரல்களில் ஆங்கங்கே மூடி போட்ட வாக்கில் அடர்த்தியாக வெச்சும், நடுவில் அழகான ஒரு பெரிய வட்டமாக வைக்கிறது மட்டுமே எனக்கான நிரந்தர வடிவமாக நான் நினைச்சிருந்தேன். ஆனா இதுதான் மருதாணி விரும்பிகளின் வடிவம்னு பிறகுதான் தெரிஞ்சது. நடுவே சில பல குட்டி வட்டங்களும் விரும்பியபடி இட்டுக்கலாம். குறிப்பிட்ட நாளுக்கு முன்கூட்டியே பச்சை மருதாணி பறிக்கிற வைபவம் தொடங்கிடும் வீட்டுல.


 நல்ல முத்தின இலைகளை முள் குத்தாமல், காம்பு கையோட வராமல் பறிக்கணும். ஒரே அடுக்கில் துளிர்த்து வரும் இலைகளை அழகாக, நாசூக்காக உருவி எடுக்கணும். இல்லன்னா பூக்களோ, காய்களோ இடைப்பட்டு காரியத்தை தாமதப்படுத்தும்.


 அதோட மருதாணி பூக்கள் வேறு கொத்து கொத்தாக பூத்து அவ்விடத்தில் வாசனையை பரப்பும். அது இன்னும் கிறக்கத்தை உண்டு பண்ணி இலைகளையும் பறிக்கவிடாமல் அலைகழிப்பதாக எனக்கு தோணும். எதிர்படும் மருதாணி பூக்களை பறிச்சி தலையில் வெச்சிக்கிட்டா தூக்கம் நிறைவாக வரும். 


இப்படி பறிச்ச இலைகளோட கொஞ்சமாக புளி, எலுமிச்சை சாறு, சர்க்கரைக் கரைசல் கலந்து அரைச்சா நல்லா பிடிக்கும் னு சொல்வாங்க. எனக்கு இந்த கலவை கவலையை கொடுக்கும். எனக்கு எப்போதும் எலுமிச்சை சாறு மட்டுமே போதுமானதாக இருக்கும். ஆனாலும் நாட்டு மருதாணியில் அதற்கான நிறம்  நிறையவே இருக்கும்.


மருதாணி செவக்குதோ இல்லையோ அம்மியில் வழவழ'னு நாலா பக்கமும் பரப்பி பரப்பி, இழுத்து வெச்சி அரைக்கணும். கூடவே கை விரல்களை மட்டும் பயன்படுத்தி வழிச்சி வழிச்சி மையத்துல வைக்கும் போது அரைச்ச மருதாணி படும் இடமெங்கும் இளஞ்சிவப்பாக  இருக்கும்.  கூடவே கை சும்மா இருக்காமல் எல்லா பக்கமும் படுவது போல் பிரட்டி எடுத்து, வேணும்னே தடவி, பச்சையென பூக்கத் தொடங்கியிருங்கும் அதை பார்க்கறதே  எதிர்வரும் விழாவை வரவேற்கிறது போல் இருக்கும்.எனக்கெப்போதும் இந்த கோன் மருதாணிகளில் பெரிய ஆர்வமெல்லாம் இருந்ததில்ல. பிடிச்ச வடிவங்களை வரைய முடியுங்கறது உண்மைதான். ஆனாலும் பல வண்ணங்களில், தோலுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் கலப்படங்களோட கிடைக்கும் அதை வைக்கிறது சில நேரங்களில் பயத்தை மூட்டுவதாக இருக்கும். எல்லா இடங்களிலும் கோன் மருதாணிக்கான தயாரிப்பு முறை ஒரே மாதிரியாகத்தான் இருக்குதான்னு நினைச்சா அதுவும் கிடையாது. வியாபார நோக்கில் எல்லா நிறமூட்டிகளையும் கலந்துதான் அவங்க விற்பனைக்கு வைக்கிறாங்க'னு தெரியும். 


நிழலில் உலர்த்திய மருதாணி இலையை நல்லா அரைச்சி மெல்லிய ஷாலில் சலிச்சிச்செடுத்து, தேவைப்படும் போது டீகாஷன், எலுமிச்சை சாறு, யூக்கலிப்டஸ் தைலம் கலந்து ஒரு கவரில் இட்டு கோன் போலாக்கி தேவையான‌ வடிவங்களை வரைஞ்சிக்கலாம்.

இது நம்ம கைப்பட தயாரிச்சதுன்னு ஒரு மன நிறைவும் கூடவே கிடைக்கும். இம்முறையில் பண்ண கலவையை தலைக்கு தடவியும் குளிக்கலாம். இது கூந்தலுக்கு பளபளப்பைக் கொடுக்கும். 


சரி இந்த பச்சை மருதாணியை கைகளில் வைக்கிறதுக்கு சரியான நேரம்னு பார்த்தால் இரவு தான். அதுக்கான‌ முன்வேலைகளும் அதிகம். சாப்பிட்டு முடிச்சி, எண்ணெய் போக கைகளை துடைச்சி, போக வேண்டிய இடங்களுக்கெல்லாம் போயிட்டு வந்துட்டு பாயை விரிச்சி, பழைய போர்வையை காலுக்கிட்ட ரெடியாக வெச்சிட்டு, தலைமாட்டுல தண்ணி சொம்பு, எலுமிச்சை சாறு, முதுகு சொறிய ஏதேனும் சீப்போ, இல்ல சுருட்டி வெச்ச நோட்டு பேப்பரோ, விசிறியோ தயாரா இருக்கணும். ஏன்னா இதுபோன்ற இக்கட்டான நேரங்களில் தான் நடுமுதுகில்  நடுநாயகமாக அரிக்கும்.


இதைவிட நினைச்சவங்க யாரும் வெச்சிட முடியாது. இதுல கலைநயத்தை விட பொறுமை ரொம்ப முக்கியம். வைக்கிறவங்களும், வெச்சி விடறவங்களும் ஒரே அலைவரிசையில் ஒத்துப் போனால் மட்டுமே இந்த வைபவம் சிறப்பாக முடியும். இல்லைன்னால் பேசாமலாவது இருக்க பழகியிருக்கணும். இல்லன்னா கை பழுக்குதோ இல்லையோ கன்னம் பழுத்திடும்.


மருதாணியில் சிவப்பு நிறத்தைக் கொடுக்கக் கூடிய நிறமிக்கு 'லாசோன்' னு பெயர். இது தெரியாத கிராமத்து மக்கள் பிடிச்சவங்களை நினைச்சிட்டே கைகளில் வைக்கும் போது செவப்பா பிடிக்கும்னு சொல்வாங்க. இதை இப்பொழுதெல்லாம் திருமண நிகழ்வில் பெரிய விழாவாகவே நடத்தறாங்க. மணமக்களின் பெயரை ஒவ்வொருவரின் கையிலும் எழுதி கண்டுபிடிக்க சொல்வது இன்னும் காதலைக் கூட்டும்னு நம்பறாங்க.  இப்படியொரு சாய்ஸ் எனக்கெல்லாம் இருக்கும் போது தலயே சரணம்னு ஆசையோடு ஐக்கியமாகி இருந்த நேரமது.  இதுபோல் நிறைய சுவாரசியமான சம்பவங்களோட அவ்விரவு பொழுது கழியும்.


நேற்று இதே போல் பச்சை மருதாணியை சூழ்நிலை காரணமாக அம்மியில் அரைப்பதை விடுத்து, மிக்ஸியில் சின்ன ஜாரில் தண்ணி அதிகம் கலக்காமல், வெளியே தெரிச்சி வராமல் கவனமாக திறந்து மூடி அரைக்கையில் வெளி வந்த அந்த பச்சை வாசம் என்னை பால்யம் அழைத்துப் போனது. எதில் அரைத்தாலென்ன. இன்னமும் தன்  இயல்பு மாறாமல், அதே வாசனையுடன் இருப்பதில் மருதாணி மறக்க முடியாத மையலை எனக்குள்  கொடுத்துட்டே இருக்குன்'னு சொல்லலாம். 


இப்படியான இரவுக்குப் பின் குட்டி மகளின் சின்னஞ்சிறு கைகளின் வழியே என் மனசோட எண்ணங்களையும் வழித்து கவனமாக இட்டேன். அவளின் கை நல்லா சிவக்கணும்னு நினைச்சிட்டே தூங்கிட்டேன். காலையில விழிக்கையில் முகத்துக்கு நேராக சிரித்தபடியே கோவைப்பழ விரல்களை நீட்டி புன்னகைத்த மகள் அழகாக சிவந்திருக்கு என்றாள். மனசெல்லாம் நிறைஞ்சபடி அந்த சிவப்பெல்லாம் நான்தானே மகளே என புன்னகைத்தேன்.


#வாழ்தல்_இனிது

--சங்கீதா ராமசாமி.

இன்று குருநானக் ஜெயந்தி

 

இன்று குருநானக் ஜெயந்தி..!

8சீக்கியர்களின் முக்கியப் பண்டிகையான குருநானக் ஜெயந்தி இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

·         


இந்தியாவின் முக்கிய மதங்களில் ஒன்றான சீக்கியத்தை தோற்றுவித்தவரான குருநானக்கின் பிறந்தநாள்குருநானக் குருபுரப்அல்லதுகுருநானக் ஜெயந்திஎன்ற பெயரில் கொண்டாடப்பட்டு வருகிறது.ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தின் பெளர்ணமி நாளன்று குருநானக் அவர்களின் பிறந்த நாளாக கொண்டாடப்பட்டு வருகின்றது.அதன்படி இந்த ஆண்டிற்கான குரு நானக் ஜெயந்தி இன்று 30.11.2020 கடைபிடிக்கப்படுகிறது.
சீக்கிய மதத்தை தோற்றுவித்ததாக கருதப்படும் சீக்கியர்களின் முதல் குருவான குருநானக்,தற்போதைய பாகிஸ்தானில் உள்ள ஷேக்புரா மாவட்டத்தில் 1469-ஆம் ஆண்டு ஏப்ரல் 15-ஆம் நாள் பிறந்தார்.ஏப்ரல் மாதத்தில் பிறந்திருந்தாலும்,ஒவ்வொரு ஆண்டின் கார்த்திகை மாத பெளர்ணமி தினம் குருநானக் ஜெயந்தியாக கடைபிடிக்கப்படுகிறது.

குருநானக் ஜெயந்திக்கு இரண்டு நாட்களுக்கு முன்னரே சீக்கியர்களின் புனித நூலான குரு கிரந்த சாகிப் தொடர்ந்து 48 மணி நேரத்திற்கு ஒவ்வொரு சீக்கிய குருத்வாராக்களிலும் வாசிக்கப்படும்.சிலர் வீட்டிலும் இந்த வழிபாட்டை மேற்கொள்வார்கள்.அதன் பின்னர் குருநானக் ஜெயந்தியன்று,அதிகாலை 4 மணியளவில் சீக்கிய பக்திப் பாடல்கள்,குரு கிரந்த சாகிப்பில் உள்ள அறிவுரைகள் ஆகியவற்றுடன் குருநானக் ஜெயந்தி கொண்டாடங்கள் துவங்கும்.அதனை தொடர்ந்து லங்கர் எனப்படும் சமையலறை மூலம் லட்சக்கணக்கான மக்களுக்கு இலவசமாக உணவு பரிமாறப்படும்.

 

போராட்ட களத்தில் இறை வழிபாட்டில் ஈடுபட்ட விவசாயிகள்

 டெல்லி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் குரு நானக் ஜெயந்தியையொட்டி அமைதியுடன் இறை வழிபாட்டில் ஈடுபட்டனர்.


,


மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவற்றை வாபஸ் பெற கோரியும் அரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லி சலோ பேரணியில் கலந்து கொண்டுள்ளனர்.

இதற்காக, லாரிகளிலும், டிராக்டர்களிலும் படையெடுத்த விவசாயிகள், உணவு பொருட்களை உடன் எடுத்து சென்று, அவர்களே சமைத்து உண்டு, இரவில் கடும் குளிரில் படுத்து உறங்கி, தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுபற்றி டெல்லி வடக்கு பகுதிக்கான போலீஸ் இணை ஆணையாளர் சுரேந்திரா கூறும்பொழுது, அவர்கள் அமைதியுடனும், கட்டுப்பாட்டுடனும் உள்ளனர்.  விவசாயிகளுடன் நாங்கள் தொடர்பில் இருந்து வருகிறோம்.  எங்களுக்கு சட்டம் மற்றும் ஒழுங்கு பேணப்பட வேண்டும்.  அதற்காக போதிய படைகளை குவித்து உள்ளோம் என கூறினார்.

இந்த நிலையில் சீக்கியர்களின் மத குருவான குருநானக்கின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சிங்கு எல்லை பகுதியில், நின்றபடி தங்களது இறை வணக்கத்தினை செலுத்தி கொண்டனர்.  இதேபோன்று திக்ரி எல்லை பகுதியில் இருந்த விவசாயிகள் தரையில் அமர்ந்தபடி, இறை நூல்களை படித்தும், பிரார்த்தனையிலும் ஈடுபட்டனர்
.

ரசிகர்களிடம் ஆலோசனை கேட்பதும், கூறுவதும் ரஜினியின் வழக்கம் தான்

 ரசிகர்களிடம் ஆலோசனை கேட்பதும், கூறுவதும் ரஜினியின் வழக்கம் தான்

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியதாவது:-


கொரோனா அச்சத்தால் ஏற்படுத்தப்பட்ட ஊரடங்கு இன்னும் முழுமையாக தளர்த்தப்படவில்லை,அரசியல் கூட்டங்களுக்கு இன்னும் இந்தியா முழுவதும் தடை உள்ளது, அப்படித் தடை உள்ள நிலையில் திமுக பிரச்சாரத்தை தொடங்கி இருப்பது அரசியல் ஆதாயத்திற்காக தான், கொரோனா காலத்திலும் வீட்டிற்குள் முடங்கிவிடாமல் மாவட்டம் மாவட்டமாக சென்று ஆய்வு கூட்டங்கள் நடத்தியவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி. ஆனால் அப்போது வீட்டிலேயே முடங்கி இருந்துவிட்டு தற்போது திமுகவினர் தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு வருவது அரசியல் ஆதாயத்திற்காவே. அது மக்கள் மத்தியில் எடுபடாது,தேர்தலை எப்போது எப்படி சந்திப்பது என்பதுஎங்களுக்கு தெரியும்.
திரையரங்குகள் திறக்கப்படாத நேரத்தில் சூரரை போற்று போன்ற படங்கள் ஒடிடியில் திரையிடப்பட்டது. தற்போது திரையரங்குகள் எல்லாம் திறக்கப்பட்டுவிட்டன. புதிய திரைப்படங்கள் திரையிடப்பட்டு வருகிறது. நடிகர் விஜய்யின் நடித்துள்ள மாஸ்டர் படத்தை தயாரித்த தயாரிப்பு நிறுவனம் அதனை திரையரங்குகளில் வெளியிடுவோம் என்று முடிவெடுத்து இருப்பது வரவேற்கத்தக்கது.

ரஜினிகாந்த் தனது மன்றத்தினரை சந்திப்பதால் எவ்வித மாற்றமும் ஏற்படப்போவதில்லை. வழக்கமாக தமது ரசிகர்களிடம் ஆலோசனை கேட்பதும், கூறுவதும் ரஜினியின் வழக்கம்தான். ரஜினி தமது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசிப்பதில் சிறப்பம்சம் ஒன்றும் இல்லை. ரஜினி அரசியலுக்கு வருவதும், வராததும் அவர் விருப்பத்தை பொறுத்தது; நான் கருத்து சொல்ல முடியாது.

அதிமுக மாற்றத்துக்கு உள்ளாகும் கட்சி அல்ல, ஒன்றரை கோடி தொண்டர்களை கொண்ட கட்டுக்கோப்பான கட்சி, என்றைக்கும் கட்டுக்கோப்பாக இருக்கும். எப்போதும் கட்டுக்கோப்பாக தான் உள்ளோம். தினகரன் வைத்திருப்பது தனி அமைப்பு, அதற்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை. சிகலா வெளியே வந்தாலும் எந்தவிதமான மாற்றமும் அதிமுகவில் இருக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.

வாணிஜெயராம்

 

வாணிஜெயராம் பிறந்த நாள் நவம்பர் 30.
தமிழகத்தின் வேலூர் நகரில் பிறந்த தமிழ்ப் பெண்ணான இவரது இயற்பெயர் 'கலைவாணி'.

தன் கணவர் பெயருடன் சேர்த்து வாணிஜெயராமாக உருவெடுத்த வாணிஜெயராம் முதலில் கலக்கியது மராத்தி மொழியில். மராத்தியில் இவர் பாடிய பாடல் பல விருதுகளை இவர் குரலுக்கு பரிசாக கொடுத்தது.பின்னர் வட நாட்டில் மராத்தி உட்பட குஜராத்தி,மர்வாரி,போஜ்புரி என அணைத்து மொழிகளிலும் தென் நாட்டில் தமிழ் ,மலையாளம் ,கன்னடம்
தெலுங்கு என அணைத்து மொழிகளிலும் பாடிய தமிழ் பாடகி என்ற் அந்தஸ்தை பெற்றார்.
மற்றும் நாட்டின் பிரபலமான இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடி இந்தியாவின் அணைத்து தரப்பு ரசிகர்களின் மனதிலும் நீங்காத இடத்தை பெற்றிருக்கிறார்.
வாணிஜெயராம் அவர்கள் இசை கற்றது, பாடத் தொடங்கியது எல்லாமே வட நாட்டில்தான். எடுத்த எடுப்பிலேயே அவரது இந்திப் பாடல் பிரமாத வெற்றி பெற்றுவிட்டதாகவும் . அதன் வெற்றியைக் கண்டு சில இந்திக்காரர்களுக்குப் பொறாமைகூட வந்ததாகவும். வாணிஜெயராமை வைத்து எந்த இசையமைப்பாளர் பாட்டு எடுக்கிறாரோ, அவருடைய இசையமைப்பில் தான் பாடுவதில்லை என்று பிரபல இந்திப் பாடகி ஒருவர் ஸ்டிரைக் செய்ததாகவும் சொல்லி கேள்விபட்டிருக்கிறேன். இன்னமும் ஒரிஸாவிலும், வங்காளியிலும், நான்கு திராவிட மொழிகளிலும் வாணியின் கொடிதான் பறந்து கொண்டிருக்கிறது.
வாணிஜெயராமின் குரலுக்கு, குடும்பப் பாடல்களே கவர்ச்சிகரமானவை. 'காபரே' பாடல்களை அவர் மிக அழகாகப் பாடினாலும், அவை என்னவோ வாணிஜெயராமின் குரலுக்கு ஒத்துவராதவைபோல் தோன்றும்.
இவர் காபரே பாடல்களை தவிர்ப்பது நல்லது என கவிஞர் கண்ணதாசனே தெரிவித்ததாக குறிப்புகள் தெரிவிக்கின்றன.
இவரை பார்த்தாலே ஏதோ என்பது போல தோன்றும் ஆனால் இவர் பாடகி என்றவுடன் நிச்சயம் இவர் சங்கீத பாடகியாக இருப்பார் என நினைத்தால் அதுவும் தவறு. அழகான இவர் முகமும் அழகான இவர் குரலும் அழகாக பின்னப்பட்ட காவியம் ஆகும்
வாணி ஜெயராம், இந்திய இசை உலக மகுடத்தில் மின்னும் வைரம். கடந்த 37 ஆண்டுகளாக ரசிக நெஞ்சங்களில் இசைமழை பொழிந்துவரும் மேகம். 'வர்ண'ஜாலம் காட்டிவரும் வானம்பாடி.10000 பாடல்களை கடந்த இவரது இசைப்பயணம் 2 வயதிலேயே தொடங்கிவிட்டது என்றால் நம்புவதற்கு சிரமமாகத்தான் இருக்கு. அந்தப் பிஞ்சு வயதில் ராகங்களையும், இசைக் குறிப்புகளையும் இவரால் இனம் கண்டுகொள்ள முடிந்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. 'கலைவாணியின்' பரிபூரண அருளுடன், முறையான சங்கீதப் பயிற்சியும் இவரது திறமையை மெருகேற்றின.
திருமணத்துக்குப் பிறகு மும்பை சென்றவர், உஸ்தாத் அப்துல் ரஹ்மான் கானிடம் இந்துஸ்தானி மெல்லிசைப் பயிற்சியும் பெற்றார். தினமும் 18 மணிநேர அசுர சாதகம்...தும்ரி பஜன் மற்றும் கஜல் பாடுவதில் மிகுந்த தேர்ச்சி பெற்றார் வாணி. 1969, மார்ச் 1ம் தேதி அரங்கேற்றத்தில் பொழிந்த இசை மழையில் நனைந்த ரசிகர் கூட்டம் ஆனந்தக் கூத்தாடியது. மும்பையின் அத்தனை சபாக்களும் வாணியிடம் தேதி கேட்டு மொய்த்தன. இந்தி இசை அமைப்பாளர் வசந்த் தேசாயிடம் இருந்தும் அழைப்பு வந்தது. அடுத்த நாளே பாடல் பதிவு. இதைத் தொடர்ந்து மாரத்தி பாடல் வாய்ப்புகள் குவிந்தன. இயக்குனர் ரிஷிகேஷ் முகர்ஜி,
இசையமைப்பாளர் வசந்த் தேசாய் கூட்டணியில் உருவான 'குட்டி' திரைப்படத்தில் வாணியின் குரல் தேன் சொட்டியது. அத்தனை பாடல்களும் சூப்பர் ஹிட். அந்த படத்தில் பாடிய 'போல் ரே பபி ஹரா' 5 விருதுகளை அள்ளிச் சென்றது. தான்சேன் விருதும் தானே வந்தது.
1976... 'அபூர்வ ராகங்கள்' திரைப்படத்தில் ஒலித்த 'ஏழு ஸ்வரங்களுக்குள்' பாடல் தமிழ் ரசிகர்களை கிறங்க வைத்தது. தேசிய விருதும் தேடி வந்தது. அழகே உன்னை ஆராதிக்கிறேன், மீரா, சங்கராபரணம், ஸ்வாதிகிரணம்...என்று இந்த இசைக் குயிலின் தேவராகத்தில் பிறந்த பாடல்கள் ரசிகர்களின் உள்ளங்களையும், விருதுகளையும் கொள்ளையடித்தன. நௌஷாத், மதன் மோகன், ஓ.பி.நையர், ஆர்.டி.பர்மன், கல்யாண்ஜி ஆன்ந்த்ஜி, லஷ்மிகாந்த் ப்யாரேலால், கே.வி. மகாதேவன், மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன், ராமமூர்த்தி, இளையராஜா...என்று இவர் பாடாத இசையமைப்பாளர்களே இல்லை. குஜராத், ஒரிசா, தமிழகம், ஆந்திர மாநில அரசுகளும் விருதுகளை வழங்கி கவுரவித்துள்ளன.
இங்கிலாந்து, அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, அரபு நாடுகள், பக்ரைன், கத்தார், பிரான்ஸ், ஜெர்மனி, சுவிஸ்...என்று இவர் இசை நிகழ்ச்சி நடத்தியுள்ள நாடுகளின் பட்டியல் நீள்கிறது. இவை இவரது சாதனை சரித்திரத்தில் சில பக்கங்கள் மட்டுமே.
வாணி ஜெயராம் பெற்ற விருதுகள்...
குடியரசுத் தலைவரின் தேசிய விருது அபூர்வ ராகங்கள் (தமிழ், 1976),
சங்கராபரணம் (தெலுங்கு, 1980), ஸ்வாதிகிரணம் (தெலுங்கு, 1992).
மியான் தான்சேன் விருது சிறந்த பின்னணிப் பாடகி, 1971 (இந்தி, போல் ரே பபி ஹரா)
குஜராத் அரசு விருது சிறந்த பின்னணிப் பாடகி, 1972 (குஜராத்தி, 'குங்கத்').
தமிழக அரசு விருது சிறந்த பின்னணிப் பாடகி, 1980 (தமிழ், அழகே உன்னை ஆராதிக்கிறேன்).
பிலிம்பேர் விருது சிறந்த பின்னணிப் பாடகி, 1980 (மீரா)
ஆந்திர அரசு விருது சிறந்த பின்னணிப் பாடகி, 1980 (சங்கராபரணம்).
ஒரிசா அரசு விருது சிறந்த பின்னணிப் பாடகி, 1982 (ஒரியா, 'தேஜ்பானி').
தமிழக அரசின் கலைமாமணி விருது 1991
மும்பை 'சுர் சிங்கார் சம்ஷத்' வழங்கும் சங்கீத பீட விருது 1992 1972 (குஜராத்தி, 'குங்கத்').
தமிழக அரசு விருது சிறந்த பின்னணிப் பாடகி, 1980 (தமிழ், அழகே உன்னை ஆராதிக்கிறேன்).
பிலிம்பேர் விருது சிறந்த பின்னணிப் பாடகி, 1980 (மீரா)
ஆந்திர அரசு விருது சிறந்த பின்னணிப் பாடகி, 1980 (சங்கராபரணம்).
ஒரிசா அரசு விருது சிறந்த பின்னணிப் பாடகி, 1982 (ஒரியா, 'தேஜ்பானி').
தமிழக அரசின் கலைமாமணி விருது 1991
மும்பை 'சுர் சிங்கார் சம்ஷத்' வழங்கும் சங்கீத பீட விருது 1992
தமிழக அரசு வழங்கும் 'எம்.கே. தியாகராஜ பாகவதர் - வாழ்நாள் சாதனையாளர்' விருது 2

சர் ஜகதீஷ் சந்திர போஸ்

 

ர் ஜகதீஷ் சந்திர போஸ் தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்ற உண்மையை உலகுக்கு வெளிப்படுத்திய இந்திய அறிவியலாளர். வானொலி அறிவியலின் முன்னோடிகளில் ஒருவர் என ஐஇஇஇ அதிகாரப்பூர்வமாக நூறு வருடங்கள் கழித்து அறிவித்தது


போஸ் என்ற பெயரால் நன்கு அறிமுகமான அவர் 1858ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் நாள் இன்றைய பங்களாதேஷில்டாக்கா நகருக்கு அருகில் ஃபரீத்பூர் மாவட்டத்தை சேர்ந்த மைமென்சிங் என்ற ஊரில் பிறந்தார். போஸ் தமது துவக்கக் கல்வியைத் தூய சேவியர் உயர்நிலைப் பள்ளியில் பெற்றார். பின்னர் தமது கல்வியைக் கொல்கத்தாகேம்பிரிட்ஜலண்டன் ஆகிய இடங்களில் தொடர்ந்தார். 1885இல் கொல்கத்தா மாநிலக்கல்லூரியில் இயற்பியல் துறையில் துணைப் பேராசிரியராகச் சேர்ந்தார்; தமது பெரும்பாலான கண்டுபிடிப்புகளுக்கான ஆய்வுகளை, போஸ் இக்கல்லூரியில் தான் மேற்கொண்டார். இவரது மனைவி பிரபல சமூக சேவகி அபலா போஸ்

போஸ் தமது 19ஆவது வயதிலேயே பட்டப் படிப்பை முடித்துவிட்டார்; பின்னர் கேம்பிரிட்ஜ் சென்று அங்கு தமது கல்வியை 1884ஆம் ஆண்டு நிறைவு செய்தார். போஸ் தாம் .சி.எஸ். முடித்துவிட்டு அரசில் உயர் அதிகாரியாக வரவேண்டுமென்று விரும்பினார். தந்தைக்கும் அதில் விருப்பம் இருந்தாலும், மகன் உயர் படிப்பு முடித்துச் சமுதாயத்திற்கும், நாட்டிற்கும் பயன்படும் வகையில் ஆசிரியராகப் பணியாற்ற வேண்டுமென்று விரும்பினார்லண்டனில் இருக்கும்போது போஸ் தாவரவியல், விலங்கியல் ஆகியவற்றில் ஆர்வம் காட்டினார்; ஆனால் அவர் பி.எஸ்சி இல் அறிவியலும், மருத்துவமும் படித்து வந்தார். இந்நிலையில் லண்டனில் லார்ட் ரிலே (Lore Rele) என்ற அறிவியல் அறிஞரின் தொடர்பு போஸுக்குக் கிடைத்தது. அவருடைய தூண்டுதல் மற்றும் வழிகாட்டுதலின் துணையோடு தாவரங்களைப் பற்றி அறிந்து கொள்வதில் போஸ் பெரும் ஆர்வம் காட்டினார்.

கொல்கத்தா மாநிலக்கல்லூரியில் ஜகதீஷ் சந்திர போஸுக்கு இயற்பியல் துறையில் விரிவுரையாளர் வேலை கிடைத்தது; ஆனால் ஊதியத்தைப் பொறுத்தவரை ஆங்கிலேயர்களுக்குக் கொடுப்பதில் 2/3 பங்கு மட்டுமே கொடுக்கப்பட்டது. இந்தியர்கள் அறிவியல் துறையில் பின்தங்கியவர்கள், அதனால் அவர்கள் முழு ஊதியம் பெறத் தகுதியற்றவர்கள் என்று அப்போது காரணம் கூறப்பட்டது. ஆனால் போஸ் தமது அறிவுக்கூர்மையால் கல்லுரி நிர்வாகத்தினர் போற்றிப் பாராட்டும்படிப் பணியாற்றினார்; திருப்தியடைந்த கல்லூரி நிர்வாகம் போஸுக்கும் முழு ஊதியம் வழங்க ஆணையிட்டதோடு, ஏற்கனவே பணியாற்றிய காலத்திற்குத் தரவேண்டிய நிலுவைத் தொகையையும் வழங்க ஆணையிட்டது. அவ்வாறு தரப்பட்ட நிலுவைத் தொகையைக் கொண்டு போஸ் ஓர் அறிவியல் ஆய்வுக்கூடத்தை நிறுவினார்; அங்கு தாவரவியல், இயற்பியல் துறைகளில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டார். அடிப்படையில் இயற்பியல் அறிஞரான அவர் ரேடியோ அலைகளில் மிகுதியும் ஆய்வு நடத்தினார். மார்க்கோனிக்கு முன்னரே கம்பியில்லா ஒலிபரப்பு அமைப்பினை போஸ் கண்டுபிடித்தார்; இருப்பினும் அஃது அறிவியல் உலகினரால் கவனிக்கப் படாமல் போய்விட்டது. 22 மி.மி. முதல் 5 மி.மி. வரையான அலைநீளம் கொண்ட மின்காந்த அலைகளை (electromagnetic waves) உருவாக்கவும் அவற்றின் பகுதி-ஒளித் (quasi-optical) தன்மைகளைக் கண்டறியக்கூடியதுமான ஒரு கருவியைப் போஸ் கண்டுபிடித்தார். அனைத்து வகையான தூண்டல்களுக்குமான (stimuli) பொதுவான மின் துலங்கல்களையும் (responses) கண்டறிந்தார்.

மிகக் குறைந்த அலை நீளமுடைய நுண்ணலைகளை உருவாக்கும் ஓர் எந்திரத்தை இவ்வுலகில் முதன் முதலில் வடிவமைத்த பெருமை போஸ் அவர்களையே சாரும். மூலக்கூறுகளின் பண்புகளில் மேற்கொண்ட ஆய்வின் மூலம் புதியதோர் ஒளிப்படக் கோட்பாட்டை (photographic theory) அவர் உருவாக்கினார்கணிப்பொறி அறிவியலின் துவக்க கால ஆய்வாளர்களில் போஸும் அடங்குவார். உலகின் மிகச் சிறந்த அறிவியல் ஆய்வாளர்களில்/சிந்தனையாளர்களில் போஸ் அவர்களுக்கு ஓரு சிறப்பான இடம் உண்டு.

போஸ் மிகச் சிறந்த இரு நூல்களை இயற்றி உலகப்புகழ் பெற்றார். உயிரினங்களின் மற்றும் உயிரற்றவைகளின் துலங்கல் தன்மை (Response in the Living and Non-Living) என்பது ஒரு நூல்தாவரங்களின் நரம்புச் செயலமைவு (The Nervous Mechanism of Plants) என்பது மற்றொரு நூல். இவ்விரு நூல்களின் வாயிலாக வெப்பம்குளிர்ஒலிஒளி ஆகிய புறத்தூண்டுதல்கள் மனிதர்களையும், பிற விலங்கினங்களையும் எவ்வாறு பாதிக்கின்றனவோ அவ்வாறே தாவரங்களையும் பாதிக்கின்றன என்பதை நிரூபித்தார். மேலும் பரிசோதனை ஒன்றையும் போஸ் செய்து காட்டினார்புரோமைட் (Bromide) என்ற நச்சுத் தனிமத்தை எலி ஒன்றுக்கு ஊசி மூலம் செலுத்தப்பட்டது; தாவரம் ஒன்றுக்கும் ஊசி மூலம் செலுத்தப்பட்டது; எலிதாவரம் ஆகிய இரண்டும் சாவின் விளிம்பில் போராடியதைக் கண்டு அறிவியல் உலகம் போஸ் அவர்களின் ஆராய்ச்சியை ஆரவாரத்துடன் கைதட்டிப் பாராட்டியது.

1915ஆம் ஆண்டு லண்டன் ராயல் கழகத்தில் போஸ் அவர்கள்புறத்தூண்டுதல்களுக்குத் தாவரங்கள் எவ்வாறு பொறுமையுடன் நடந்து கொள்ளுகின்றனஎன்பதைப் பற்றி ஒரு சொற்பொழிவு நிகழ்த்தினார். தாமே வடிவமைத்துத் தயாரித்த இந்தியக் கருவிகளின் துணைகொண்டு பல்வகையான செயல்முறை விளக்கங்களைச் செய்து காட்டினார். 1920ஆம் ஆண்டு லண்டன் ராயல் கழகத்தின் உயர்நிலை உறுப்பினர் பதவியைப் பெற்றதன் மூலம் போஸ் அவர்கள் இந்திய அறிவியலுக்குப் பெருமை தேடித் தந்தார்.

தாவரங்களும் நம்மைப் போன்றே உணவு உண்டு செறிக்கின்றன; அவைகளும் மனிதர்களைப்போல் இரவில் உறங்கி, காலையில் விழிக்கின்றன; அவையும் பிறக்கின்றன, இறக்கின்றன; அவைகட்கும் நம்மைப் போன்றே மகிழ்ச்சிதுன்பம் ஆகிய உணர்ச்சிகள் உண்டு என்ற உண்மைகளைக் கண்டறிந்தார்.

கொல்கத்தாவில் போஸ் நிறுவனம் என்ற ஆய்வுக்கூடத்தை நிறுவி பல்வேறு அறிவியல் ஆராய்ச்சிகளையும் மேற்கொள்வதற்கான வசதிகளை அங்கு செய்து தந்தார். போஸின் பல்வேறு அறிவியல் சாதனைகளையும், ஆய்வுகளையும், கண்டுபிடிப்புகளையும், குறிப்பாகத் தாவர இனங்களில் அவருக்கிருந்த ஆர்வத்தையும் பாராட்டி கல்கத்தா மக்கள் கழகம் அவருக்கு 1928ஆம் ஆண்டு ஒரு பாராட்டு விழா நடத்தியது. அப்போது அவர் பின்வருமாறு கூறினார்:

எல்லா உயிரினங்களுக்கும் உள்ள உயிர் ஒன்றே; மனித உயிரும் அத்தகையதே; எனவே அனைத்து உயிரினங்களும் பொறுமை, ஒற்றுமை, இணைந்து வாழ்தல் ஆகியவற்றைக் கடைபிடிக்க வேண்டும். இதில் மனிதர்களின் பங்கு மகத்தானது. எல்லா நாட்டு மக்களும் ஒருவர் மீது ஒருவர் பகைமை பாராட்டாமல், அவநம்பிக்கை கொள்ளாமல் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும்.”

இத்தகு சிறப்பு வாய்ந்த போஸ் அவர்கள் 1937ஆம் ஆண்டு நவம்பர் 23ஆம் நாள் இயற்கையுடன் இணைந்தார். மனவுறுதி, துணிச்சல், நாட்டுப்பற்று, தன்னம்பிக்கை, பொறுமை ஆகியவைகட்கு உறைவிடமாய் விளங்கிய ஜகதீஷ் சந்திர போஸ் தாம் மேற்கொண்ட அனைத்து அறிவியல் ஆராய்ச்சிகளிலும் பெரு வெற்றியும், பெரும் புகழும் ஈட்டியதன் வாயிலாக இந்தியாவின் புகழை உலகில் மிளிரச் செய்தார் எனில் அதில் மிகையேதுமில்லை

[

Featured Post

மனிதனை மீறிய சந்தர்ப்பங்கள் வாழ்க்கையை எவ்வளவு தூரம் திருப்பிவிடுகின்றன

  மனிதனை மீறிய சந்தர்ப்பங்கள் வாழ்க்கையை எவ்வளவு தூரம் திருப்பிவிடுகின்றன என்பதற்கு நான் ஓர் உதாரணம்.’’ – இது, ‘சரித்திர நாவல்களின் ஜாம்பவான...