Friday, July 31, 2020

சா. கந்தசாமி

 


 


சா. கந்தசாமி சாகித்திய அகாதமி விருது பெற்ற ஒரு தமிழக எழுத்தாளர், நாவலாசிரியர் ஆவார்.


நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் 1940 ல்


பிறந்த இவர் 1968ல் எழுதிய சாயாவனம் புதினம் பிரசுரமானதிலிருந்து எழுத்துலகில் பிரபலமானார். இப் புதினத்தைத் தேசிய புத்தக அறக்கட்டளை நவீன இந்திய இலக்கியங்களில் சிறந்த ஒன்றாக அறிவித்தது. சவகர்லால் நேருபெரியார்உ. வே. சாமிநாதையர் மற்றும் வெ. சாமிநாத சர்மா போன்றோரின் படைப்புகளை கந்தசாமி இலக்கிய வாழ்க்கைக்கான தளமாக அமைத்தார்."இதன் மூலம் எனக்கு கிடைத்த கல்வி உதவித் தொகை எனக்கு வலிமை, நம்பிக்கை மற்றும் தன்மை ஆகியவற்றைக் கொடுத்துள்ளது, இது எனது படைப்புகளை நுட்பமாக பாதித்திருக்கிறது," என்று அவர் கூறுகிறார்.[] அவர் மேலும் , "எழுத்துக்கலை கலை அலங்காரமாக இருக்காது என்று நான் நம்புகிறேன். சிறந்த இலக்கியம், நேரம், கலாச்சாரம், மொழி மற்றும் அரசியல் சித்தாந்தத்தின் தடைகள் ஆகியவற்றை கடந்து செல்லும் ஒன்றாகும். இது ஒரு குறிப்பிட்ட சமூகம் அல்லது பாலினத்துடன் தொடர்புடையது அல்ல. மிக முக்கியமாக, உலகின் எந்தப் பகுதியிலிருந்தும் ஒரு வாசகர் ஒரு நாவலை அல்லது சிறுகதையை புரிந்துகொள்ள முடியும் என்கிறார்[


 தமிழக அரசின் லலித் கலா அகாதமியின் முன்னேற்றத்திற்காக இவர் ஆற்றிய பணியைப் பாராட்டும் வகையில் 1995ல் தமிழக அரசு இவருக்கு ஆய்வு உதவி ஊதியம் (fellowship) வழங்கி ஊக்குவித்தது. இவரது தென்னிந்திய சுட்ட மண் சிலைகள் (terracotta) பற்றிய ஆய்வினை அடிப்படையாகக் கொண்டு சென்னை தூர்தர்ஷன் காவல் தெய்வங்கள் என்னும் 20 நிமிட ஆவணப்படத்தைத் தயாரித்து வெளியிட்டது..


தென்னிந்திய டெரகோட்டா பற்றிய தனது ஆராய்ச்சி அடிப்படையில், சென்னை தூர்தர்சன் பொது தொலைக்காட்சி சேனல் 1989 ஆம் ஆண்டு சைப்ரசில் நிக்கோசியாவில் அங்கினோ திரைப்பட விழாவில் முதன்முதலாக 20 நிமிட ஆவணப்படமான "காவல் தெய்வங்கள்" தயாரித்தது. கலை வளர்ச்சிக்கான அவரது பங்களிப்புக்காக, தமிழ்நாடு அரசாங்கத்தின் லலித் கலா அகாடமி, மார்ச் 1995 இல் அவருக்கு ஒரு அங்கீகாரம் வழங்கியது. 


 1998ல் விசாரணைக் கமிசன் என்ற புதினத்திற்காக இவருக்குத் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது.[இவர் எழுதிய நிகழ் காலத்திற்கு முன்பு எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2006 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சுற்றுப்புறவியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.


 


' alt="Tamil Writer Sa Kandasamy passes away" class="image_listical c1" title="Tamil Writer Sa Kandasamy passes away" data-cl-slideshow="" data-cl-title="Tamil Writer Sa Kandasamy passes away" data-cl-description="" data-cl-imageid=392943-1 v:shapes="_x0000_i1025">


சகாக்களுடன் இணைந்து கசடதபற என்ற இலக்கிய இதழை உருவாக்கினார். பின்னர் குறும்படங்களையும் இயக்கினார் சா. கந்தசாமி. சுடுமண் சிலைகள் தொடர்பான அவரது குறும்படம் சர்வதேச விருது பெற்றது.


சிற்பி தனபால், ஜெயகாந்தன், அசோகமித்திரன் ஆகியோரது வாழ்வை குறும்படங்களாக்கி உள்ளார். 1989-ல் சா. கந்தசாமியின் காவல் தெய்வங்கள் ஆவணப்படம், சைப்ரஸ் விழாவில் முதல் பரிசு பெற்றது.


சா. கந்தசாமியின் விசாரணை கமிஷன் நாவலுக்கு 1998-ல் சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. அண்மைக்காலமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த சா. கந்தசாமி இன்று 31.07.2020சென்னையில் காலமானார்.


இல்லம் தேடி வரும் மகாலட்சுமி..


வரலட்சுமி விரதம் 2020:

 

இல்லம் தேடி வரும் மகாலட்சுமி..

 

. பூஜை செய்து நோன்பு கயிறு கட்ட நல்ல நேரம் கோவில்களில் போய் பண்டிகைகளைக் கொண்டாடுவோம்.

 

சில பண்டிகைகளையும், விரதங்களையும் மட்டும் வீட்டிலேயே கொண்டாடுவோம். அப்படி பெண்களால் வீட்டிலேயே கொண்டாடப்படும் பண்டிகைதான் வரலட்சுமி விரதம். நாளை வரலட்சுமி விரதம் கொண்டாடப்படுகிறது. பெண்கள் வீட்டினை அலங்கரித்து மகாலட்சுமியை நினைத்து விரதம் இருந்து கணவனின் ஆயுள் பலம் அதிகரிக்க நோன்புக்கயிறு கட்டி வணங்குவார்கள். இந்த விரதம் இருக்கும் திருமணம் ஆகாத கன்னிப்பெண்களுக்கு கல்யாண வரம் கிடைக்கும்

 

. மனதிற்கு பிடித்த கணவன் அமைவார். அதே போல திருமணம் ஆன பெண்களுக்கு தீர்க்க சுமங்கலி வரம் கிடைக்கும். மாங்கல்ய தோஷங்களும் நீங்கும். ஆண்டு தோறும் ஆவணி மாத பௌர்ணமிக்கு முன்னால் வரும் வெள்ளிக்கிழமையில் இந்த வரலக்ஷ்மி பூஜையானது வரும். சில வருடங்களில் ஆடி மாதத்தில் அமையும்.

இந்த மாதம் ஆடி 16ஆம் தேதி ஜூலை 31ஆம் தேதியன்று வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதம் கொண்டாடப்படுகிறது. நாளைய தினம் லட்சுமி பூஜை, துளசி பூஜை செய்யவும் ஏற்ற நாள். வரலட்சுமி நோன்பு நாளில் வீடுகளில் சுமங்கலி பெண்கள் விரதமிருந்து குங்குமம், பூ உள்ளிட்டவற்றை பெண்களுக்கு கொடுத்து வணங்கி வழிபாடு நடத்துவார்கள். வீடே கலகலப்பாக இருக்கும். இந்த லாக்டவுன் காலத்தில் வீட்டில் சமூக இடைவெளியோடும் சுகாதாரத்தோடும் வரலட்சுமி விரதத்தை கொண்டாடலாம்

. சுத்தமாகும் வீடுகள்

வரலட்சுமி விரதம் மேற்கொள்ளும் சுமங்கலி பெண்கள் முதல் நாளன்று வீட்டைச் சுத்தப்படுத்தி மாக்கோலம் இட்டு மாவிலை தோரணம் கட்ட வேண்டும். வீட்டின் தென்கிழக்கு மூலையில் ஒரு இடத்தில் சாணம் தெளித்து, கோலம் இட்டு,அதன் மீது ஒரு வாழை இலையில் ஒரு படி அரிசியை பரப்பி வைக்க வேண்டும். பித்தளை அல்லது வெள்ளி செம்பின் உள்ளே அரிசி, மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு,நாணயங்கள், எலுமிச்சை பழம், கருகமணி இவை உள்ள போட வேண்டும். வாசனை பொருட்களும் போடலாம். இந்த கலசத்தின் வாய்பகுதியில் மாவிலை வைத்து அதன் மீது தேங்காய் வைக்க வேண்டும். வரம் தரும் அம்மன் தேங்காயில் மஞ்சள் பூசி குங்குமமிட்டு அம்மன் திரு முகத்தை வைக்க வேண்டும். அம்மன் முகம் சந்தனத்தால் செய்தோ(அ)வெள்ளி முகம் வைத்தோ அவரவர் வசதிக்கு ஏற்ப வைக்கலாம்

 

வாசலுக்கு அருகில் அம்மனை வியாழக்கிழமை இரவே வைத்து விட வேண்டும் நாளை வரலட்சுமி விரதம் அன்று அதிகாலையில் குளித்து விட்டு வாசல் தெளித்து கோலமிட்டு விரதத்தை ஆரம்பிக்க வேண்டும். லட்சுமியை அழைப்போம் வாசலில் வைத்த அம்மனை அழைக்கும் விதமாக "எங்கள் வீட்டில் எழுந்தருளி எங்கள் இல்லத்தில் நிரந்தரமாக குடியேறி எல்லா ஐஸ்வர்யங்களை தந்து அருள்வாயாக!" என்று அம்மனை அழைத்து வந்து வீட்டில் கிழக்கு முகமாக வைக்க வேண்டும். பூஜை செய்யும் போது வடக்கு முகமாக அமர்ந்து பூஜிக்க வேண்டும். தீர்க்க சுமங்கலி வரம் அன்னைக்கு பல வகை சாதம், பாயசம், வடை, கொழுக்கட்டை, தயிர், பசும்பால், நெய், தேன் போன்றவற்றை நிவேதனம் செய்ய வேண்டும்


 

. வரலட்சுமி விரதம் இருப்பவர்களுக்கு தனம், தான்யம், ஐஸ்வர்யம், சந்தான பாக்கியம், செல்வம், செல்வாக்கு, நீண்ட ஆயுள், தீர்க்க சுமங்கலி வரம் கிடைக்கும் என்று அன்னை பார்வதி அருளியிருக்கிறார். நோன்பு சரடு கட்டுதல் மஞ்சள் சரடை கும்பத்தில் வைத்து சரடையும் கும்பத்துடன் சேர்த்து பூஜை செய்ய வேண்டும். மலர்களால், தீபங்களால் அம்பாளை ஆராதனை செய்து 9 இழைகள் கொண்ட மஞ்சள் சரடை எடுத்து வலது மணிக்கட்டில் பக்தி சிரத்தையுடன் கணவரிடம் கொடுத்தோ அல்லது மூத்த சுமங்கலிகளை கட்டி விடச் சொல்லி, சரடை கட்டிக் கொண்டு ஆசிர்வாதம் பெற வேண்டும். சுமங்கலி பெண்களுக்கும் நோன்புக்கயிறு கொடுக்க வேண்டும். மகாலட்சுமியின் அருள் சுமங்கலி பெண்களை வீட்டிற்கு அழைத்து அம்பிகையை எண்ணி உணவு கொடுத்து வெற்றிலைப்பாக்கு, மஞ்சள், குங்குமம், பூ, ரவிக்கைத்துணி, இனிப்பு, பழம் ஆகிய பொருட்களை தாம்பூலமாக கொடுத்து உபசரிக்க வேண்டும் இவ்வாறு செய்வதால் தீர்க்க சுமங்கலியாக வாழும் வரத்தை நமக்கு தருகிறாள் அன்னை வரலட்சுமி. சுமங்கலிகளுக்கு தாம்பூலம் கொடுப்பதால் கொடுப்பவர்களுக்கும் வாங்குபவர்களுக்கும் அன்னை மகாலஷ்மியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். வளமான வாழ்வு கிடைக்கும் பூஜை செய்த அன்று மாலையோ அல்லது மறுநாள் காலையோ எளிமையான பூஜை செய்து விட்டு விரதத்தை முடித்துக் கொள்ளலாம். பூஜைக்கு பயன்படுத்திய தேங்காய், பச்சரிசி வைத்து விட்டு மறு வெள்ளியன்று பாயசம் செய்து நிவேதனம் செய்யலாம்.

 

இவ்வாறு செய்வதால் வீட்டில் செல்வச் செழிப்பு பெருகும், என்றும் நிறைந்திருக்கும். 

 
 

  


 

 

ஆத்தி சூடி          (வூ) (ஊ)               * ஊருடன் கூடி வாழ்               *          ஒருவிகற்ப            இன்னிசை           வெண்பா               *

ஆத்தி சூடி
         (வூ) (ஊ)
              *
ஊருடன் கூடி வாழ்
              *
         ஒருவிகற்ப
           இன்னிசை
          வெண்பா
              *ஒலி ஒளி உணரஊருடன்
    கூடி
      உவந்துமே
        வாழ்வதால்


 சீருடன்
 (பெருமை)
    சேரச்
      சிறப்புமே
        கூடிடும்


 ஊருணி
    நீராய்
      உலகமே
        போற்றிட


 பாருடன்
   சேராய்
     பணிந்து.
             *
வணக்கத்துடன்🙏
ச.பொன்மணி


Thursday, July 30, 2020

Pre-Bridal Skin carePre-Bridal Skin care / Pre -Bridal Skin Care at Homeil /Bridal Skin care

 

 

/Beaulah Ronaldson . in this video  talking about Pre-Bridal Skin Care Routine . 1. Cleansing 2. Toning 3. Moisturizing 4.Lip care


 


by 
படிப்பில் ஆர்வம் உள்ளவர்கள் அனைவருக்கும் புத்தம்புது பூமி

படிப்பில் ஆர்வம் உள்ளவர்கள் அனைவருக்கும் புத்தம்புது பூமி


 படிப்பில் ஆர்வம் உள்ளவர்கள் அனைவருக்கும், புத்தம்புது பூமியை உருவாக்கும் வகையில், புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, தற்போதுள்ள, 10 + 2 என்ற பள்ளிக் கல்வி, 5 + 3 + 3 + 4 என மாற்றப்படுகிறது. மாணவர்கள், ஐந்தாம் வகுப்பு வரை தாய்மொழியிலேயே பாடங்களை படிக்கலாம்; 'குரூப்'கள் தொல்லை ஒழிக்கப்பட்டு, அனைவரும் அனைத்தையும் கற்க வாய்ப்பு அளிக்கப்படும். பட்டம் வேண்டுமா என்பதை, மாணவர்களே முடியும் செய்யும் வகையில், எந்த ஆண்டிலும் வெளியேறும் வசதி அளிக்கப்படுகிறது. எம்.பில்., ஆராய்ச்சிப் படிப்பு நிறுத்தப்படுகிறது.

தற்போது நாட்டில் நடைமுறையில் உள்ள கல்விக் கொள்கை, 1986ல் அமல்படுத்தப்பட்டது. கடந்த, 1992ல் அதில் சில திருத்தங்கள் செய்யப்பட்டன. கடந்த, 34 ஆண்டுகளாக உள்ள இந்தக் கல்விக் கொள்கைக்கு மாற்றாக, தற்போதுள்ள சூழ்நிலைக்கு ஏற்ப, புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு அறிவித்துள்ளது.

கடந்த, 2014ல் நடந்த லோக்சபா தேர்தலின்போதே, 'புதிய கல்விக் கொள்கையை அறிமுகம் செய்வோம்' என, பா.ஜ., தன் தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது. அதற்கான முயற்சிகளை, அப்போது மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்த ஸ்மிருதி இரானி மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து, பிரகாஷ் ஜாவடேகர் அதை வேகப்படுத்தினார்.

இதற்காக, 'இஸ்ரோ' எனப்படும், இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பின் முன்னாள் தலைவர், கே. கஸ்துாரி ரங்கன் தலைமையில், குழு அமைக்கப்பட்டது. பா.ஜ., இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சியைப் பிடித்தவுடன், கடந்தாண்டில், இந்தக் குழு, தன் வரைவு அறிக்கையை, மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்கிடம் ஒப்படைத்தது.

மேலும், அந்த அறிக்கை, பொது மக்களின் கருத்துக்காக, இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இந்தக் கல்விக் கொள்கை தொடர்பாக, லட்சக்கணக்கான பரிந்துரைகள் தெரிவிக்கப்பட்டன. பல மாநிலங்கள், எம்.பி.,க்கள் குழு என, பல்வேறு தரப்புடன் ஆலோசனைக் கூட்டங்களும் நடத்தப்பட்டன. இதையடுத்து, புதிய கல்விக் கொள்கை இறுதி செய்யப்பட்டது.

இதற்கு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்தும், புதிய கல்விக் கொள்கை குறித்தும், அமைச்சர்கள், பிரகாஷ் ஜாவடேகர், ரமேஷ் பொக்ரியால் அறிவிப்புகளை வெளியிட்டனர்.

''புதிய உலகின் சவால்களை மாணவர்கள் எதிர்கொள்ள, புதிய கல்விக் கொள்கை அவசியமாகிறது.புதிய இந்தியாவை உருவாக்கும் வகையில், நாட்டிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு மிக விரிவான விவாதங்கள், ஆலோசனைகள் நடத்தப்பட்டு, இது வடிவமைக்கப்பட்டுள்ளது,'' என, பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார். ''இந்தப் புதிய கல்விக் கொள்கை, நம் இந்தியாவை, அறிவுசார் சமூகமாக மாற்றும்,'' என, ரமேஷ் பொக்ரியால் குறிப்பிட்டுள்ளார்.

புதிய கல்விக் கொள்கையின் சிறப்பு அம்சங்கள் குறித்து, மத்திய உயர் கல்வித் துறை செயலர் அமித் கரே, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கல்வி மற்றும் கல்வியறிவு துறையின் செயலர் அனிதா கர்வால் விளக்கினர்.


 


 

புதிய மாற்றங்கள்புதிய கல்விக் கொள்கையில், பள்ளிக் கல்வியில் இருந்து உயர் கல்வி வரை, தற்போதுள்ள சூழ்நிலை மற்றும் எதிர்கால தேவையைக் கருத்தில் கொண்டு, பல சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய சவால்களை மாணவர்கள் சமாளிக்கும் வகையிலும், அறிவுசார் சமூகத்தை உருவாக்கும் வகையிலும், படிப்பில் ஆர்வம் உள்ள அனைவருக்கும் புத்தம்புது பூமியை உருவாக்கும் வகையில், இந்தக் கொள்கை வடிவமைக்கப் பட்டுள்ளது.

ஜி.டி.பி., எனப்படும் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 6 சதவீதம், கல்விக்கு செலவிடப்படும் என்ற அறிவிப்பு, கல்விக்கு மத்திய அரசு அளிக்கும் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக அமைந்துள்ளது. கடந்த, 1960களில் இருந்து இந்தக் கோரிக்கை இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், இனி, கல்வித் துறையாக அழைக்கப்படும் என்று, அமைச்சகத்தின் பெயரில் இருந்து சீர்திருத்தங்கள் துவங்கியுள்ளன.

பள்ளிக் கல்வியில் மாற்றம்புதிய கல்விக் கொள்கையில், பள்ளிக் கல்வியில், மாணவர்கள் விரும்பி படிக்கும் வகையில், பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

* தற்போது, ஆர்.டி.இ., எனப்படும் அனைவருக்கும் கட்டாய கல்வி உரிமை, 1 - 8ம் வரை உள்ளது. அது, பிரீ கே.ஜி., முதல், 12ம் வரை விரிவுபடுத்தப்படுகிறது.

* தற்போதுள்ள, 10 + 2 முறை மாற்றப்படுகிறது. இனி 5 + 3 + 3 + 4 என்ற முறை அமல்படுத்தப்படும்

* புதிய திட்டத்தின்படி, மாணவ - மாணவியர், 3 - 8 வயது வரை, அடித்தள நிலை என, முதல், ஐந்து ஆண்டுகள் படிப்பர். பிறகு, 8 - 11 வயது வரை, தயார்படுத்தும் நிலை என, மூன்று ஆண்டுகள் படிப்பர். அதன் பிறகு, 11 - 14 வயது வரை, நடுநிலை பள்ளியில் படிப்பர். அதைத் தொடர்ந்து, 14 - 18 வயது வரை, உயர் நிலைப் பள்ளி படிப்பர். அதாவது, 8ம் வகுப்பில் இருந்து, 12ம் வரை, உயர்நிலைப் பள்ளி கல்வி இருக்கும்

* பாடப் பிரிவுகளில் எந்த கட்டுப்பாடும் கிடையாது. அறிவியல் முதல் அனைத்தையும் படிக்கலாம். அதுபோல், துணைப் பாடங்கள், கூடுதல் பாடங்கள் போன்றவை கிடையாது. கலை, இசை, கைவினைப் பொருட்கள், விளையாட்டு, யோகா, சமூக சேவை போன்றவை, பாட திட்டத்திலேயே சேர்க்கப்படும்

* மத்திய, மாநில கல்வி வாரியத் தேர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் ஏற்படாத சூழ்நிலை உருவாகும். மாணவர்களின் திறன்கள், பாடத்தில் உள்ள அவர்களுக்கு உள்ள அறிவு, புரிந்து கொள்ளும் தன்மையே பரிசோதிக்கப்படும்

* தொழிற் கல்வி என்பது வழக்கமான பள்ளிக் கல்வியுடன் சேர்க்கப்படும். ஆறாம் வகுப்பில் இருந்து, ஒருங்கிணைந்த, தொழில் கல்வி முறையே இருக்கும்

* மேலும், 10 மற்றும் 12ம் வகுப்புக்கான வாரியத் தேர்வுகள் இருக்கும். ஆனால், தற்போதிருக்கும், மாணவர்களுக்கு மன அழுத்தத்தை, நெருக்கடியை தரும் வகையில் இருக்காது

* மும்மொழி திட்டத்தில், ஒரு பாடமாக சமஸ்கிருதத்தை எடுத்துக் கொள்ள முக்கியத்துவம் தரப்படும்.

உயர் கல்வியில் மாற்றம்:


உயர் கல்வி எனப்படும், பட்டப் படிப்பு முறையிலும், மாணவர்கள் தங்களுடைய விருப்பத்தின் அடிப்படையில், விரும்பி படிக்கும் வகையில், மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

* உயர் கல்வி நிறுவனங்களில் சேருவதற்காக, பொது நுழைவுத் தேர்வை நடத்துவதற்காக, 'நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி' எனப்படும், தேசிய திறன் சோதனை அமைப்பு உருவாக்கப்படும்

* இளநிலை பட்டப் படிப்பு, மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் கொண்டதாக இருக்கும். இதில், எந்த நேரத்திலும், மாணவர்கள் வெளியேறலாம்

* முதல் ஆண்டில் வெளியேறினால், சான்றிதழ் அளிக்கப்படும். இரண்டாம் ஆண்டில் வெளியேறுவோருக்கு, பட்டயம் தரப்படும். மூன்றாம் ஆண்டில் வெளியேறும் மாணவர்களுக்கு, பட்டம் வழங்கப்படும். இதற்கு மேலும், உயர்கல்வி படிக்க விரும்புவோர், நான்காம் ஆண்டு படிப்பை தொடரலாம்

* இதன் மூலம், மாணவர்கள், தங்களுடைய விருப்பதற்கேற்ப முடிவு செய்வதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. குடும்பம், பொருளாதாரம், உடல்நலப் பிரச்னைகளால் படிப்பை தொடர முடியாவிட்டாலும், அவர்களுக்கு, சான்றிதழ், பட்டயம், பட்டம், இவற்றில் ஏதாவது ஒன்று கிடைக்கும்

* புதிய கல்விக் கொள்கையின்படி, இணைப்பு கல்லுாரிகள் என்ற முறை, அடுத்த, 15 ஆண்டுகளுக்குள் முழுதுமாக நீக்கப்படும்

* வெளிநாடுகளைச் சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட பல்கலைகள், இந்தியாவில் கல்லூரிகள் துவங்க அனுமதி வழங்கப்படும்

* எம்.பில்., ஆராய்ச்சி படிப்பு கைவிடப்படுகிறது

* சட்டம் மற்றும் மருத்துவக் கல்லுாரிகளைத் தவிர்த்து, மற்ற உயர் கல்வி நிறுவனங்களை கட்டுப்படுத்த, ஒரே கண்காணிப்பு அமைப்பு உருவாக்கப்படும்

* அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு, பொதுவான நடைமுறை கொள்கை வகுக்கப்படும்

* கல்லூரிகளுக்கு தன்னாட்சி வழங்குவதற்கான நடைமுறை உருவாக்கப்படும்

* சமஸ்கிருதம் உள்பட பல்வேறு இந்திய மொழிகள் தொடர்பாக ஆய்வு செய்வதற்காக, இந்திய மொழிபெயர்ப்பு மற்றும் பொருள் விளக்க மையம் உருவாக்கப்படும்

* சமஸ்கிருத பல்கலைகள், பல்வழி கல்வி நிறுவனங்களாக மாற்றப்படும்

கட்டணத்தில் வெளிப்படை:


கல்வி கட்டணம் குறித்து, புதிய கல்விக் கொள்கையில் கூறப்பட்டுள்ளதாவது: அனைத்து உயர் கல்வி நிறுவனங்களும், தாங்கள் வசூலிக்கும் கல்வி கட்டணம் தொடர்பான தகவல்களை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். மேலும், ஒவ்வொரு கல்வி நிறுவனத்தின் வரவு, செலவு கணக்கும் தணிக்கை செய்யப்படும். லாப நோக்கம் இல்லாமல், கல்வி நிறுவனங்கள் செயல்பட வேண்டும். அவ்வாறு கிடைக்கும் லாபத்தையும், கல்வி நிறுவனத்திலேயே முதலீடு செய்ய வேண்டும். கல்விக் கட்டணம் தொடர்பான புகார்களை தெரிவிக்க, விசாரிக்க, ஒரு புதிய வழிமுறை ஏற்படுத்தப்படும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

மறுமலர்ச்சி ஏற்படும்!கல்வித் துறையில் நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த சீர்திருத்தத்தை, மறுமலர்ச்சியை, புதிய கல்விக் கொள்கை அளிக்கும். புதிய அறிவுசார் உலகில், கற்கும் முறை, ஆராய்ச்சி மற்றும் புதுமை ஆகியவை முக்கிய தேவைகளாகும். இந்தியாவை, ஒரு வலுவான அறிவு சார் மையமாக, இந்தக் கொள்கை உருமாற்றும்.
- நரேந்திர மோடி, பிரதமர்


படிப்பில் ஆர்வம் உள்ளவர்கள் அனைவருக்கும் புத்தம்புது பூமி


படிப்பில் ஆர்வம் உள்ளவர்கள் அனைவருக்கும், புத்தம்புது பூமியை உருவாக்கும் வகையில், புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, தற்போதுள்ள, 10 + 2 என்ற பள்ளிக் கல்வி, 5 + 3 + 3 + 4 என மாற்றப்படுகிறது. மாணவர்கள், ஐந்தாம் வகுப்பு வரை தாய்மொழியிலேயே பாடங்களை படிக்கலாம்; 'குரூப்'கள் தொல்லை ஒழிக்கப்பட்டு, அனைவரும் அனைத்தையும் கற்க வாய்ப்பு அளிக்கப்படும். பட்டம் வேண்டுமா என்பதை, மாணவர்களே முடியும் செய்யும் வகையில், எந்த ஆண்டிலும் வெளியேறும் வசதி அளிக்கப்படுகிறது. எம்.பில்., ஆராய்ச்சிப் படிப்பு நிறுத்தப்படுகிறது.

தற்போது நாட்டில் நடைமுறையில் உள்ள கல்விக் கொள்கை, 1986ல் அமல்படுத்தப்பட்டது. கடந்த, 1992ல் அதில் சில திருத்தங்கள் செய்யப்பட்டன. கடந்த, 34 ஆண்டுகளாக உள்ள இந்தக் கல்விக் கொள்கைக்கு மாற்றாக, தற்போதுள்ள சூழ்நிலைக்கு ஏற்ப, புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு அறிவித்துள்ளது.

கடந்த, 2014ல் நடந்த லோக்சபா தேர்தலின்போதே, 'புதிய கல்விக் கொள்கையை அறிமுகம் செய்வோம்' என, பா.ஜ., தன் தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது. அதற்கான முயற்சிகளை, அப்போது மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்த ஸ்மிருதி இரானி மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து, பிரகாஷ் ஜாவடேகர் அதை வேகப்படுத்தினார்.

இதற்காக, 'இஸ்ரோ' எனப்படும், இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பின் முன்னாள் தலைவர், கே. கஸ்துாரி ரங்கன் தலைமையில், குழு அமைக்கப்பட்டது. பா.ஜ., இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சியைப் பிடித்தவுடன், கடந்தாண்டில், இந்தக் குழு, தன் வரைவு அறிக்கையை, மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்கிடம் ஒப்படைத்தது.

மேலும், அந்த அறிக்கை, பொது மக்களின் கருத்துக்காக, இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இந்தக் கல்விக் கொள்கை தொடர்பாக, லட்சக்கணக்கான பரிந்துரைகள் தெரிவிக்கப்பட்டன. பல மாநிலங்கள், எம்.பி.,க்கள் குழு என, பல்வேறு தரப்புடன் ஆலோசனைக் கூட்டங்களும் நடத்தப்பட்டன. இதையடுத்து, புதிய கல்விக் கொள்கை இறுதி செய்யப்பட்டது.

இதற்கு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்தும், புதிய கல்விக் கொள்கை குறித்தும், அமைச்சர்கள், பிரகாஷ் ஜாவடேகர், ரமேஷ் பொக்ரியால் அறிவிப்புகளை வெளியிட்டனர்.

''புதிய உலகின் சவால்களை மாணவர்கள் எதிர்கொள்ள, புதிய கல்விக் கொள்கை அவசியமாகிறது.புதிய இந்தியாவை உருவாக்கும் வகையில், நாட்டிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு மிக விரிவான விவாதங்கள், ஆலோசனைகள் நடத்தப்பட்டு, இது வடிவமைக்கப்பட்டுள்ளது,'' என, பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார். ''இந்தப் புதிய கல்விக் கொள்கை, நம் இந்தியாவை, அறிவுசார் சமூகமாக மாற்றும்,'' என, ரமேஷ் பொக்ரியால் குறிப்பிட்டுள்ளார்.

புதிய கல்விக் கொள்கையின் சிறப்பு அம்சங்கள் குறித்து, மத்திய உயர் கல்வித் துறை செயலர் அமித் கரே, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கல்வி மற்றும் கல்வியறிவு துறையின் செயலர் அனிதா கர்வால் விளக்கினர்.


 


 

புதிய மாற்றங்கள்புதிய கல்விக் கொள்கையில், பள்ளிக் கல்வியில் இருந்து உயர் கல்வி வரை, தற்போதுள்ள சூழ்நிலை மற்றும் எதிர்கால தேவையைக் கருத்தில் கொண்டு, பல சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய சவால்களை மாணவர்கள் சமாளிக்கும் வகையிலும், அறிவுசார் சமூகத்தை உருவாக்கும் வகையிலும், படிப்பில் ஆர்வம் உள்ள அனைவருக்கும் புத்தம்புது பூமியை உருவாக்கும் வகையில், இந்தக் கொள்கை வடிவமைக்கப் பட்டுள்ளது.

ஜி.டி.பி., எனப்படும் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 6 சதவீதம், கல்விக்கு செலவிடப்படும் என்ற அறிவிப்பு, கல்விக்கு மத்திய அரசு அளிக்கும் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக அமைந்துள்ளது. கடந்த, 1960களில் இருந்து இந்தக் கோரிக்கை இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், இனி, கல்வித் துறையாக அழைக்கப்படும் என்று, அமைச்சகத்தின் பெயரில் இருந்து சீர்திருத்தங்கள் துவங்கியுள்ளன.

பள்ளிக் கல்வியில் மாற்றம்புதிய கல்விக் கொள்கையில், பள்ளிக் கல்வியில், மாணவர்கள் விரும்பி படிக்கும் வகையில், பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

* தற்போது, ஆர்.டி.இ., எனப்படும் அனைவருக்கும் கட்டாய கல்வி உரிமை, 1 - 8ம் வரை உள்ளது. அது, பிரீ கே.ஜி., முதல், 12ம் வரை விரிவுபடுத்தப்படுகிறது.

* தற்போதுள்ள, 10 + 2 முறை மாற்றப்படுகிறது. இனி 5 + 3 + 3 + 4 என்ற முறை அமல்படுத்தப்படும்

* புதிய திட்டத்தின்படி, மாணவ - மாணவியர், 3 - 8 வயது வரை, அடித்தள நிலை என, முதல், ஐந்து ஆண்டுகள் படிப்பர். பிறகு, 8 - 11 வயது வரை, தயார்படுத்தும் நிலை என, மூன்று ஆண்டுகள் படிப்பர். அதன் பிறகு, 11 - 14 வயது வரை, நடுநிலை பள்ளியில் படிப்பர். அதைத் தொடர்ந்து, 14 - 18 வயது வரை, உயர் நிலைப் பள்ளி படிப்பர். அதாவது, 8ம் வகுப்பில் இருந்து, 12ம் வரை, உயர்நிலைப் பள்ளி கல்வி இருக்கும்

* பாடப் பிரிவுகளில் எந்த கட்டுப்பாடும் கிடையாது. அறிவியல் முதல் அனைத்தையும் படிக்கலாம். அதுபோல், துணைப் பாடங்கள், கூடுதல் பாடங்கள் போன்றவை கிடையாது. கலை, இசை, கைவினைப் பொருட்கள், விளையாட்டு, யோகா, சமூக சேவை போன்றவை, பாட திட்டத்திலேயே சேர்க்கப்படும்

* மத்திய, மாநில கல்வி வாரியத் தேர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் ஏற்படாத சூழ்நிலை உருவாகும். மாணவர்களின் திறன்கள், பாடத்தில் உள்ள அவர்களுக்கு உள்ள அறிவு, புரிந்து கொள்ளும் தன்மையே பரிசோதிக்கப்படும்

* தொழிற் கல்வி என்பது வழக்கமான பள்ளிக் கல்வியுடன் சேர்க்கப்படும். ஆறாம் வகுப்பில் இருந்து, ஒருங்கிணைந்த, தொழில் கல்வி முறையே இருக்கும்

* மேலும், 10 மற்றும் 12ம் வகுப்புக்கான வாரியத் தேர்வுகள் இருக்கும். ஆனால், தற்போதிருக்கும், மாணவர்களுக்கு மன அழுத்தத்தை, நெருக்கடியை தரும் வகையில் இருக்காது

* மும்மொழி திட்டத்தில், ஒரு பாடமாக சமஸ்கிருதத்தை எடுத்துக் கொள்ள முக்கியத்துவம் தரப்படும்.

உயர் கல்வியில் மாற்றம்:


உயர் கல்வி எனப்படும், பட்டப் படிப்பு முறையிலும், மாணவர்கள் தங்களுடைய விருப்பத்தின் அடிப்படையில், விரும்பி படிக்கும் வகையில், மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

* உயர் கல்வி நிறுவனங்களில் சேருவதற்காக, பொது நுழைவுத் தேர்வை நடத்துவதற்காக, 'நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி' எனப்படும், தேசிய திறன் சோதனை அமைப்பு உருவாக்கப்படும்

* இளநிலை பட்டப் படிப்பு, மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் கொண்டதாக இருக்கும். இதில், எந்த நேரத்திலும், மாணவர்கள் வெளியேறலாம்

* முதல் ஆண்டில் வெளியேறினால், சான்றிதழ் அளிக்கப்படும். இரண்டாம் ஆண்டில் வெளியேறுவோருக்கு, பட்டயம் தரப்படும். மூன்றாம் ஆண்டில் வெளியேறும் மாணவர்களுக்கு, பட்டம் வழங்கப்படும். இதற்கு மேலும், உயர்கல்வி படிக்க விரும்புவோர், நான்காம் ஆண்டு படிப்பை தொடரலாம்

* இதன் மூலம், மாணவர்கள், தங்களுடைய விருப்பதற்கேற்ப முடிவு செய்வதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. குடும்பம், பொருளாதாரம், உடல்நலப் பிரச்னைகளால் படிப்பை தொடர முடியாவிட்டாலும், அவர்களுக்கு, சான்றிதழ், பட்டயம், பட்டம், இவற்றில் ஏதாவது ஒன்று கிடைக்கும்

* புதிய கல்விக் கொள்கையின்படி, இணைப்பு கல்லுாரிகள் என்ற முறை, அடுத்த, 15 ஆண்டுகளுக்குள் முழுதுமாக நீக்கப்படும்

* வெளிநாடுகளைச் சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட பல்கலைகள், இந்தியாவில் கல்லூரிகள் துவங்க அனுமதி வழங்கப்படும்

* எம்.பில்., ஆராய்ச்சி படிப்பு கைவிடப்படுகிறது

* சட்டம் மற்றும் மருத்துவக் கல்லுாரிகளைத் தவிர்த்து, மற்ற உயர் கல்வி நிறுவனங்களை கட்டுப்படுத்த, ஒரே கண்காணிப்பு அமைப்பு உருவாக்கப்படும்

* அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு, பொதுவான நடைமுறை கொள்கை வகுக்கப்படும்

* கல்லூரிகளுக்கு தன்னாட்சி வழங்குவதற்கான நடைமுறை உருவாக்கப்படும்

* சமஸ்கிருதம் உள்பட பல்வேறு இந்திய மொழிகள் தொடர்பாக ஆய்வு செய்வதற்காக, இந்திய மொழிபெயர்ப்பு மற்றும் பொருள் விளக்க மையம் உருவாக்கப்படும்

* சமஸ்கிருத பல்கலைகள், பல்வழி கல்வி நிறுவனங்களாக மாற்றப்படும்

கட்டணத்தில் வெளிப்படை:


கல்வி கட்டணம் குறித்து, புதிய கல்விக் கொள்கையில் கூறப்பட்டுள்ளதாவது: அனைத்து உயர் கல்வி நிறுவனங்களும், தாங்கள் வசூலிக்கும் கல்வி கட்டணம் தொடர்பான தகவல்களை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். மேலும், ஒவ்வொரு கல்வி நிறுவனத்தின் வரவு, செலவு கணக்கும் தணிக்கை செய்யப்படும். லாப நோக்கம் இல்லாமல், கல்வி நிறுவனங்கள் செயல்பட வேண்டும். அவ்வாறு கிடைக்கும் லாபத்தையும், கல்வி நிறுவனத்திலேயே முதலீடு செய்ய வேண்டும். கல்விக் கட்டணம் தொடர்பான புகார்களை தெரிவிக்க, விசாரிக்க, ஒரு புதிய வழிமுறை ஏற்படுத்தப்படும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ள


 நாடு முழுவதும் அமலில் இருந்த இரவு நேர ஊரடங்கு ரத்து

நாடு முழுவதும் அமலில் இருந்த இரவு நேர ஊரடங்கு ரத்து


பொது ஊரடங்கில் இருந்து 3-ம் கட்ட தளர்வுகளை வெளியிட்டது        மத்திய அரசு 


 


புதுடெல்லி: கொரோனா பொது ஊரடங்கில் இருந்து நாடு முழுவதும் 3-ம் கட்ட தளர்வுகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் கடந்த மார்ச் மாதம் இறுதியில் இருந்து நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மக்களின் வாழ்வாதாரத்தை கணக்கில் கொண்டு ஜூன் மாதம் முதல் படிப்படியாக ஊரடங்கில் சில தளர்வுகளை மத்திய அரசு வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் 3-ம் கட்ட தளர்வுகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. ஆகஸ்ட் 1 முதல் கொரோனா பொதுமுடக்கத்தின் 3ஆம் கட்ட தளர்வுகள் அமலுக்கு வரும் என்றும் கொரோனா பாதிப்பு சூழலை கருத்தில் கொண்டு மாநில அரசுகள் முடிவு எடுத்துக்கொள்ளலாம். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.

பொது ஊரடங்கில் இருந்து மத்திய அரசு வெளியிட்டுள்ள தளர்வுகள்:
* நாடு முழுவதும் இரவில் தனிமனித நாடமாட்டத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடை முற்றிலுமாக திரும்பப் பெறப்பட்டது
* பள்ளி, கல்லூரிகளை ஆகஸ்ட் 31ம் தேதி வரை திறக்க அனுமதி இல்லை
* உள்நாட்டில் குறைந்த அளவில் மட்டுமே விமானங்களை இயக்க அனுமதி
* சர்வதேச விமான சேவைக்கு தடை நீட்டிப்பு; வெளிநாடு வாழ் இந்தியர்களை அழைத்துவரும் பணி தொடரும்


* மெட்ரோ ரயில்கள், திரையரங்குகள், நீச்சல் குளங்களுக்கு செயல்பட விதித்த தடை நீட்டிப்பு


* திருவிழாக்கள், அரசியல் கூட்டங்கள், விளையாட்டு நிகழ்வுகள் ஆகியவைகளுக்கும் தடை நீட்டிப்பு


* பொழுதுபோக்கு பூங்காக்கள், மதுபானக் கூடங்கள், அரங்குகள் செயல்பட விதித்த தடை தொடர்கிறது.


* மாநிலங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் தனி நபர்கள் மற்றும் சரக்கு போக்குவரத்துக்கு தடை இல்லை- இ-பாஸ் தேவையில்லை
* வாடிக்கையாளர்களின் சமூக இடைவெளியுடன் வர்த்தக நிறுவனங்கள் இயங்க அனுமதி


* 65 வயதிற்கு மேற்பட்டோர், கர்ப்பிணிகள், 10 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான கட்டுப்பாடுகள் தொடரும் என்றும் அறிவித்துள்ளது.

 தமிழகத்தில் ஆக. 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

 

தமிழகத்தில் ஆக. 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு


அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமல்


சென்னை: கொரோனாவை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட 6வது கட்ட ஊரடங்கு நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில், நேற்று அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமை செயலகத்தில் இருந்தபடி  வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து முதல்வர் எடப்பாடி, இன்று காலை 10 மணிக்கு 19 பேர் அடங்கிய மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் தலைமை செயலகத்தில் வைத்து ஆலோசனை நடத்துகிறார்.


இதனை தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், இந்தியா முழுவதும், கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ்,  தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. நான் பல்வேறு தினங்களில் நடத்திய ஆய்வுக் கூட்டங்களின் அடிப்படையிலும், மூத்த இந்திய ஆட்சிப் பணி அலுவலர்களைக் கொண்டு அமைக்கப்பட்ட 12  ஒருங்கிணைப்புக் குழுக்களின் கருத்துக்களின் அடிப்படையிலும், பல்வேறு தினங்களில் மாவட்டஆட்சியர்களின் காணொலிக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையிலும், மருத்துவ நிபுணர் கள் மற்றும் பொது சுகாதார  வல்லுநர்கள் குழுவுடன் நடத்தப்பட்ட கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையிலும், மத்திய அரசின் அறிவுரைகளின்படியும், தமிழகத்தில் 31.7.2020 முடிய ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டது.


இருப்பினும், பொது மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும், பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நோக்கத்திலும், பெருநகர சென்னை காவல்துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகள் மற்றும் தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் பல்வேறு பணிகளுக்கு வரைமுறைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மாண்புமிகு அம்மாவின் அரசு, கொரோனா நோய்த் தொற்றிலிருந்து பொது மக்களை பாதுகாத்து, அவர்களுக்கு தேவையான தடுப்பு நடவடிக் கைகளை எடுத்தும், சிகிச்சைகளை வழங்கியும், நிவாரணங்களை வழங்கியும் முனைப்புடன் செயல்பட்டு  வருகிறது. அதனால்தான், தமிழ்நாட்டில் சிகிச்சைக்குப் பின் குணமடைந்து வீடு திரும்புவோர் சதவீதம் நாட்டிலேயே அதிகமாகவும், நோடீநுத் தொற்றினால் ஏற்படும் உயிரிழப்பு மிகக் குறைவாகவும் இருந்து வருகிறது.


பல்வேறு தினங்களில் நான் நடத்திய ஆய்வுக் கூட்டங்களின் அடிப் படையில், குறிப்பாக 29.7.2020 அன்று நடத்தப்பட்ட காணொலிக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையிலும், மருத்துவ நிபுணர்கள்  மற்றும் பொது சுகாதார வல்லுநர்கள் குழுவுடன் 30.7.2020 அன்று நடத்தப்பட்ட ஆலோசனை களின் அடிப்படையிலும், மூத்த அமைச்சர்களுடன் கலந்தாலோசித்தும், கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை தடுப்பதற்காக தேசிய பேரிடர்  மேலாண்மைச் சட்டத்தின் கீழ்,


* 31.7.2020 முடிய தற்போதுள்ள ஊரடங்கு உத்தரவு, ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், தளர்வுகளுட னும், 31.8.2020 நள்ளிரவு 12 மணி வரை தமிழ்நாடு முழுவதும் மேலும் நீட்டிப்பு செய்யப்படுகிறது.


* மேலும், ஆகஸ்ட் மாதத்தில் உள்ள அனைத்து ஞாயிற்றுக் கிழமை களிலும் (2.8.2020, 9.8.2020, 16.8.2020, 23.8.2020 & 30.8.2020) எவ்வித தளர்வுகளும் இன்றி, தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல் படுத்தப் படும். 


* பெருநகர சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர மற்ற பகுதிகளில் ஏற்கனவே அனு மதிக்கப்பட்ட பணிகளுடன் கீழ்காணும் பணிகளுக்கும் 1.8.2020 முதல் அனுமதி அளிக்கப்படுகிறது:


1) தற்போது 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படும் அனைத்து தொழில் நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள், 75 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக் கப்படும்.

2) உணவகங்கள் மற்றும் தேநீர்க் கடைகளுக்கென அரசால் ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் உள்ள மொத்த இருக்கை களில், 50 விழுக்காடு இருக்கைகளில்  மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை உணவு அருந்த அனுமதிக்கப்படுகிறது.

எனினும், உணவகங்களில் குளிர் சாதன வசதி இருப்பினும், அவை இயக்கப்படக் கூடாது. உணவகங்களில் முன்பு இருந்தது (31.7.2020 வரை) போன்று காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படும்.


3) ஏற்கனவே அரசு அறிவித்துள்ள நிலையான வழிகாட்டு நடைமுறை களை பின்பற்றி, ஊராட்சி, பேரூராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் உள்ள சிறிய திருக்கோவில்கள், அதாவது 10,000 ரூபாய்க்கும் குறைவாக ஆண்டு வருமானம் உள்ள திருக்கோவில்களிலும், சிறிய மசூதிகளிலும், தர்காக்களிலும், தேவலாயங்களிலும் மட்டும் மாவட்ட ஆட்சித் தலைவர் களின் அனுமதியுடன் பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்படும்.


பெரிய வழிபாட்டுத் தலங்கள் மற்றும் மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் , பொது மக்கள் தரிசனம் அனு மதிக்கப்பட மாட்டாது.


4) காய்கறி கடைகள், மளிகைக் கடைகள் ஆகியவை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இக்கடைகள் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது.


5) ஏற்கனவே காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்க அனுமதிக்கப்பட்ட மற்ற கடைகள், தற்போது காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை இயங்க அனுமதிக்கப்படும்.


6) அத்தியாவசிய மற்றும் அத்தியாவசியமற்ற பொருட்கள் உட்பட அனைத்து பொருட்களையும், மின் வணிக நிறுவனங்கள் மூலமாக வழங்க அனுமதிக்கப்படுகிறது.


பெருநகர சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதி தவிர, தமிழ் நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட பகுதிகளிலும் நோய் கட்டுப் பாட்டு பகுதிகள் தவிர மற்ற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பணிகளுடன்  கீழ்காணும் பணிகளுக்கு 1.8.2020 முதல் அனுமதி அளிக்கப்படுகிறது:

1) அரசு ஏற்கனவே வெளியிட்டுள்ள நிலையான வழிகாட்டு நடைமுறை களைப் பின்பற்றி, ஏற்கனவே ஊராட்சிப் பகுதிகளில் அனுமதிக்கப் பட்டுள்ள நிலையில், பேரூராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் உள்ள சிறிய திருக்கோவில்கள், அதாவது  10,000 ரூபாய்க்கும் குறைவாக ஆண்டு வருமானம் உள்ள திருக்கோவில்களிலும், சிறிய மசூதிகளிலும், தர்காக்களிலும், தேவலாயங்களிலும் மட்டும் மாவட்ட ஆட்சித் தலை வர்களின் அனுமதியுடன் பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்படும்.
பெரிய வழிபாட்டுத் தலங்கள் மற்றும் மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும், பொது மக்கள் தரிசனம் அனுமதிக் கப் பட மாட்டாது.       


பொது • குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144ன் கீழ் பொது இடங்களில் ஐந்து நபர்களுக்கு மேல் கூடக் கூடாது என்ற நடைமுறை தொடர்ந்து அமலில் இருக்கும்.


• தமிடிநநாடு முழுவதும் நோடீநுக் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளின்படி, எந்தவிதமான தளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும்.


• அனைத்து, தொழில் மற்றும் வணிக நிறுவனங்கள் தங்களது ஊழியர்கள் / பணியாளர்களை வீட்டிலிருந்தபடி பணிபுரிய ஊக்குவிப்ப தோடு, தொழில் மற்றும் வணிக நிறுவனங்களில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக  கடைபிடிக்க வேண்டும்.


• இரயில் மற்றும் விமான போக்குவரத்தைப் பொறுத்தவரை தற்போதுள்ள நிலையே தொடரும்.


• ஏற்கனவே உள்ள நடைமுறைப்படி, மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும்போதும், வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு வரும் போதும், சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவரிடம் / சென்னை மாநகராட்சி ஆணையரிடம் முறைப்படி  E-Pass பெற வேண்டும்.


• தமிழ்நாடு முழுவதும் ஆகஸ்ட் 15ம் தேதி, மத்திய அரசின் வழிகாட்டுதல்களின்படி, சமூக இடைவெளி, முககவசம் அணிதல் போன்றவற்றை கடைபிடித்து சுதந்திர தின விழா கொண்டாடப்படும்.

ஏற்கனவே நடைமுறையில் உள்ள கீழ்காணும் செயல்பாடுகளுக்கான தடைகள், மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து அமலில் இருக்கும்:-

• மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள அனைத்து வழிபாட்டுத்தலங்களிலும் மற்றும் தமிடிநநாட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும் உள்ள பெரிய வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் வழிபாடு.


• அனைத்து மதம் சார்ந்த கூட்டங்கள்.


• நீலகிரி மாவட்டத்திற்கும், கொடைக்கானல், ஏற்காடு போன்ற அனைத்து சுற்றுலா தலங்களுக்கும், வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல தடைதொடரும்.


• தங்கும் வசதியுடன் கூடிய ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள், பிற விருந்தோம்பல் சேவைகளுக்கு தடை தொடரும். எனினும், மருத்துவத் துறை, காவல் துறை உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலர்கள் மற்றும் வெளி மாநிலத்தவர்களை  தனிமைப்படுத்துவதற்கு மட்டும் விலக்குஅளிக்கப்படுகிறது.

• வணிக வளாகங்கள்
• பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்துக் கல்வி நிறுவனங்கள். எனினும், இந்நிறுவனங்கள் இணைய வழிக் கல்வி கற்றல் தொடர்வதுடன், அதனை ஊக்குவிக்கலாம்.

• மத்திய உள் துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட பணிகளைத் தவிர சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை நீடிக்கும்.

• மெட்ரோ ரயில் / மின்சார ரயில்.
• திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், நீச்சல் குளங்கள்,
கேளிக்கைக் கூடங்கள், மதுக்கூடங்கள் (க்ஷயச), பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள், கடற்கரை, சுற்றுலாத் தலங்கள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் போன்ற பொது மக்கள் அதிகம் கூடும் இடங்கள்.

• அனைத்து வகையான சமுதாய, அரசியல், விளையாட்டு,பொழுதுபோக்கு, கலாச்சார நிகடிநவுகள், சமய, கல்வி, விழாக்கள், கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள்.

• மாநிலங்களுக்குள் உள்ள பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து. மேற்கண்ட கட்டுப்பாடுகளில், தொற்றின் தன்மைக்கேற்றவாறு,
படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்படும்.

அரசு ஊரடங்கை அமல்படுத்தினாலும், பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தாலும், மக்களின் ஒத்துழைப்பு இல்லையென்றால், இந்த நோய் பரவலை தடுக்க இயலாது. பொதுமக்கள் வெளியில் செல்லும்போதும், பொது இடங்களிலும் முககவசம்  அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்பை பயன்படுத்தி கை கழுவுவதையும், வெளியிடங்களில் முககவசத்தை அணிந்து செல்வதையும், சமூக இடைவெளியை தவறாமல்  கடைபிடித்தும், அவசிய தேவை இல்லாமல் வெளியில் செல்வதைத் தவிர்த்தும், அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்கினால்

தான், இந்த நோய்த் தொற்றை கட்டுப்படுத்த முடியும். மாண்புமிகு அம்மாவின் அரசு அமல்படுத்தி வரும் ஊரடங்கு மற்றும் நோடீநு கட்டுப்பாட்டு பகுதிகளில் தீவிர பரிசோதனை மூலம் நோடீநுத்தொற்று அதிகரிக்கும் வேகம் குறைந்திருந்தாலும், நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை கணிசமாக உள்ள நிலையில் மக்களைக் காக்க தற்போதுள்ள ஊரடங்கு நடைமுறையை மேலும் தொடர வேண்டிய நிலையில் அரசு உள்ளது. இதனால்
நோய்ப்பரவலை மேலும் கட்டுப்படுத்த இயலும்.

எனவே, பொதுமக்கள் அரசின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு நல்க கேட்டுக் கொள்கிறேன். நோய் தொற்றின் போக்கு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, பொதுமக்களின் ஒத்துழைப்பையும், நோய் தொற்றின் நிலையையும் கருத்தில் கொண்டு  அவ்வப்போது படிப்படியாக தளர்வுகள் வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

 

 

எலிக்காது இலையின் மருத்துவ பயன்கள்
 
 


டாக்டர் ரேவதி அவர்களின் இயற்கை வைத்தியம்

 

 
Health Benefits of Elikaadhu ilai or Merremia emarginata or Kidney bean morning glory எலிக்காது இலையின் மருத்துவ பயன்கள் To read about this herb in English, click this link: https://drsrevathi.blogspot.com/2020/... #HealthBenefits #Elikaadhu #KidneyLeaf #எலிக்காது 

 

 

 

 
 

 ஆத்தி சூடி          (வு)  (உ)               ***   உத்தமனாய் இரு               ***          ஒருவிகற்ப           இன்னிசை             வெண்பா

ஆத்தி சூடி

         (வு)  (உ)

              ***

  உத்தமனாய் இரு

              ***

         ஒருவிகற்ப

          இன்னிசை

            வெண்பா

               ***ஒலி ஒளி உணர உத்தமன்

    என்னும்

      ஒழுக்கம்

         உலகினில்

 

 நித்தமும்

    உந்தன்

      நிலையை

        உயர்த்திடும்

 

 தத்துவம்

   சொல்லும்

     தகைமை

       இதுபெரும்

 

 சத்திய

    வாக்காம்

      சகத்து.

            ***

வணக்கத்துடன்🙏

Wednesday, July 29, 2020

lnduction and Installation of  newly formed  Office bearers of Aram Seiyya Virumbu Lions Club of Chennai

 


Aram Seiyya Virumbu Lions Club of Chennai-Region -4
Zone3 ,Dist 324-A1 had  convened its second year inaugural meeting on 22.07.2020


At  League Club, MMDA,Chennai


The meeting had the function of lnduction and Installation of  newly formed  Office bearers


For the  lionistic year 2020-2021


Induction and installation had been conducted by
PMJF Lion S.V.Manickam ,First Vice Dist.Governor.Felicitation given to  Ln.Santha Lakshmi ,Region Chair Person .
Ln.A.Saravana Kumaran ,Zone Chair Person


The details of newly formed Office bearers are :


Ln.Rajesh Sanker.V.G   :  President
Ln.Dinesh                        .L.Secretary
Ln. Ganesh Kumar. S    :  Ln.TreasurerOther Office Bearers for the Lionistic Year.2020-2021First Vice –President            : Ln.Siva.G
Second Vice President        : Ln Dhanabala Krishnan.A
Imm.Past President            : Ln Saravana Kumaran.A
LCIF Coordinator                : Ln Saravana Kumaran.A
Club Service Chair Person : Ln Balachander.S
Membership Chair Person : Ln Jayaraman. R

Club Administrator              : Ln Gokul.B

Com Chair Person (YT)      : Ln Umakanthan.N.S
Com Chair Person (FB)     : Ln Jayaraman. P
Joint Secretary                  : Ln Saravanan.M
Joint Treasurer                  : Ln  Karthideepan

Board of Directors

Ln.Balu Reddy
Ln.Biju Varghese
Ln.Sekar. N
Ln.Prakash G.P
Ln.Vivek Prakasam
Ln.Naveen Kumar. S
Ln.Sankar.R
Ln.Saravanakumar


 


video link Photos and news: muralikrishnakumar


மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வீட்டில் 4 கிலோ தங்கம், 601 கிலோ வெள்ளி

மறைந்த முன்னாள் ஜெயலலிதா வீட்டில் 4 கிலோ தங்கம், 601 கிலோ வெள்ளி


 


29 -  07  - 2020  


 


சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் வாழ்ந்த வேதா நிலையம்வீடு அரசுடைமை ஆக்கப்பட்டது குறித்து அரசிதழில் வெளியிடப்பட்டது. அதில் ஜெ.வீட்டில் உள்ள அசையும் மற்றும் அசையா சொத்துகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

சென்னைபோயஸ் தோட்டத்தில்மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த, 'வேதா நிலையம்வீடுஅரசுடைமை ஆக்கப்பட்டது. அதற்கான தொகை, 68 கோடி ரூபாயைநீதிமன்றத்தில் செலுத்திஜெ.வீட்டை தமிழக அரசு மீட்டெடுத்தது. இந்நிலையில்வேதா நிலையம் வீட்டை அரசுடைமை ஆக்கப்பட்டதை தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டது. இந்த அரசிதழில் வீட்டில் உள்ள அசையும் மற்றும் அசையா சொத்துகள் பட்டியலிடப்பட்டுள்ளன. இதில் மொத்தம் 32,721 பொருட்கள் வீட்டில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.


 
* 4 
கிலோ 372 கிராம் தங்கம் பொருட்கள் - 14
* 601 
கிலோ 424 கிராம் வெள்ளிப் பொருட்கள் - 867
டிவிகள் - 11
பிரிட்ஜ்கள் - 10
ஏசி.,கள் - 38
பர்னிச்சர் பொருட்கள் - 556
துணிகள்துண்டுகள்போர்வைகள்தலையணை உறைகள்செருப்புகள் உள்ளிட்டவை - 10,438
தொலைபேசி / மொபைல்போன் - 29
புத்தகங்கள் - 8,376
ஸ்டேசனரி பொருட்கள் - 253
சூட்கேஸ்கள் - 65
கடிகாரங்கள் - 6
ஜெராக்ஸ் மிஷின் - 1
லேசர் பிரிண்டர் - 1


  


 


உங்களை இளமையாக காட்டும் புருவங்கள்

உங்களை இளமையாக காட்டும் புருவங்கள் வேண்டுமா?


29.07. 2020


 


இளமையாக காட்டும் புருவங்கள்புருவங்களை இப்போது அகலமாக வைத்துக் கொள்வதே ஃபேஷன். அதுதான் இளமையாக காண்பிக்கும். புருவம் எளிதில் அடர்த்தியாக வளர சில எளிய வழிமுறைகள்.


அழகான புருவங்கள் ஒருவரது முகத்தை உயர்த்திக் காட்டும். புருவங்களை இப்போது அகலமாக வைத்துக் கொள்வதே ஃபேஷன். அதுதான் இளமையாக காண்பிக்கும். புருவத்தை எளிதில் அடர்த்தியாக வளர சில எளிய வழிமுறைகள்.

கற்றாழை : சருமத்திற்கும், கூந்தலுக்கும் என்ன பயன்படுத்துவது என்றால் முதலில் வரும் பொருள் கற்றாழைதான். எல்லோருக்கும் தெரிந்த பொருள்தான். ஆனால், எளிதில் கிடைப்பதால் பயன்படுத்துவதில்லை.. இதில், அலோனின் என்ற சத்து புருவம் வளர உதவும். முடி உடையாமல் இருக்க, கெரட்டின் போன்ற சத்து இதில் இருக்கிறது. சிறிது கற்றாழையை எடுத்து, மேல் தோலை சீவி விட்டு, உள்ளே இருக்கும் ஜெல் மட்டும் புருவத்தில் தடவினால் போதும். வேறு எந்தப் பொருளையும்விட இது எளிமையானது, நல்ல வளர்ச்சியை கொடுக்கக்கூடியது.வெந்தயத்தை இரவு தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் அதை ஒரு பேஸ்ட் போல அரைத்து புருவங்களில் தடவி. அரை மணி நேரம் கழித்து கழுவி விட்டால்  இது புருவ முடிக்கு நல்ல பொலிவைத் தரும்.  இதில் உள்ளநிகோடினிக் அமிலம், புரதச் சத்து, லெசிதின் ஆகியவை இயற்கையான நிறத்தை தக்கவைத்து, புருவம் வளர மிகவும் உதவும்.


பழங்காலத்தில் இருந்து கடைபிடிக்கப்படும் மிகவும் பயனுள்ள பொருளான  விளக்கெண்ணெயை விரல் நுனிகளால் தடவி, மசாஜ் செய்து ஒரு மணிநேரம் வைத்திருந்து துடைத்துவிடலாம். தினமும் பயன்படுத்தினால், அடர்த்தியான, கருமையான புருவங்கள் வளரும். விளக்கெண்ணெயில், புரதச்சத்து, ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் வைட்டமின்கள் இருப்பதால் புருவத்தின் வேருக்கு நல்ல ஊட்டச்சத்து அளிக்கிறது.

ஆலிவ் எண்ணெய்யில் வைட்டமின் ஈ சத்து நிறைந்து இருப்பதால்,  புருவங்கள் நன்றாக வளர உதவும். வெது வெதுப்பான ஆலிவ் எண்ணெய்யை புருவங்களுக்கு தினமும் தடவ வேண்டும்.


முட்டையின் மஞ்சள் கருவில் புரதச்சத்து மற்றும் பயோடின் என்னும் சத்து அதிகம் இருப்பதால், புருவம் வளர மிகவும் உதவுகிறது. முட்டையின் மஞ்சள் கருவை ஒரு தூரிகையின் உதவியுடன் தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவவும் . இது புருவங்களை அடர்த்தியாக வளர உதவுவதுடன, கூந்தல் உதிர்வதற்கான வாய்ப்புகளையும் குறைக்கிறது.

ஜோஜோபா எண்ணெய் புருவம் வளருவதற்கு ஏதாவது அடைப்பு இருந்தால் அதை நீக்கிவிடும். அதனால் முடி வேகமாக வளரும். இந்த எண்ணெய்யையும் தூங்கும்போது பயன்படுத்தலாம்.


வெங்காயத்தில், சல்பர், செலினியம், மினெரல்ஸ், வைட்டமின் பி, சி ஆகியவை உள்ளதால் புருவம் நன்றாக வளரும். மயிர்கால்களை நன்றாக உறுதியாக்குகிறது. வெங்காயத்தை தோல் உரித்து, ஜூஸ் செய்து, அதை தடவினால் போதும். வெங்காயம் ஒரு வாசனை கொடுக்கும் என்பதால், சிறிது எலுமிச்சை சாறு கலந்து தடவலாம்.

தேங்காய் எண்ணையே போதுமானது! இது தண்ணீரைப்போல இருப்பதால், பெரும்பாலும் உதாசீனப்படுத்துகிறோம். ஆனால் தேங்காய் எண்ணெய் கண்டிஷனர் போல வேலை செய்யும். இயற்கையான புரதச்சத்து முடி உடைவதை தவிர்க்க உதவுகிறது. மேலும், இதில் உள்ள லாரிக் அமிலம், ஆன்டி-மைக்ரோபையல் தன்மை கொண்டதால், முடிக்காலில் தொற்று ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும். வாரத்தின் சில நாட்கள் பயன்படுத்தினாலே நல்ல பிரதிபலன் கிடைக்கும். இரவு தூங்கும்முன் புருவங்களில் தடவிக்கொண்டு தூங்கலாம்.


 தொப்புள் கொடி மூலம் கர்ப்பப்பையில் இருந்த குழந்தைக்கு பரவிய கொரோனா

தொப்புள் கொடி மூலம் கர்ப்பப்பையில் இருந்த குழந்தைக்கு பரவிய கொரோனா ஜூலை 28, 2020 


புனே: நாட்டில் முதல்முறையாக, புனே மருத்துவமனையில், தாயின் கருவில் இருந்த குழந்தைக்கு, தொப்புள் கொடி மூலம் கொரோனா தொற்று பரவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

புனே சாசூன் பொது மருத்துவமனையில், கொரோனா அறிகுறிகள் தென்படாத தாயிடமிருந்து, தொப்புள் கொடி வழியாக, கர்ப்பப்பையில் உள்ள குழந்தைக்கு பிரசவத்திற்கு முன்பே கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை டாக்டர்கள் கண்டுபிடித்துள்ளனர். கர்ப்பிணிக்கு நடத்தப்பட்ட சோதனையில், கொரோனா முடிவுகள் 'நெகடிவ்' என வந்த நிலையில், குழந்தை பிறந்த பின், பிறந்த பெண் குழந்தைக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.


 


 


பிறந்த குழந்தையின் தொப்புள் கொடி, சளி ஆகியவற்றை சோதனை செய்ததில், குழந்தைக்கு கொரோனா பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இரண்டு வாரங்களில் குழந்தை குணமானதையடுத்து, தாயும், சேயும் டிஸ்சார்ஜ் செய்ப்பட்டனர். இருவரும் நலமாக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 குற்றவாளி மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கிற்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை

ரூ.4,500 கோடி கையாடல் செய்த விவகாரம் : குற்றவாளி மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கிற்கு


12 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு!!


 கோலாலம்பூர்: மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கிற்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஊழல், மோசடி உள்ளிட்ட 7 குற்றச்சாட்டுகளின் கீழ் நஜீப் ரசாக்கிற்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தேசிய முன்னணி கூட்டணி கட்சியை சேர்ந்தவரான நஜீப் ரசாக், தாம் பிரதமராக இருந்த போது 2015ம் ஆண்டு அந்நாட்டின் அரசு முதலீட்டு நிதியுமான 1 எம்.டி.பி. நிறுவனத்தில் 4,500 கோடி ரூபாய் கையாடல் செய்தார் என்பது குற்றச்சாட்டாகும். இந்த புகார் மலேசியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு பெரும் போராட்டங்களுக்கும் வித்திட்டது.


இதையடுத்து அவருக்கு சொந்தமான சொத்துக்கள் மீது மலேசிய ஊழல் தடுப்பு பிரிவினர் நடத்திய சோதனைகளின் போது 273 மில்லியன் டாலர் பெறுமதியான நகைகள் மற்றும் பணம் கைப்பற்றப் பட்டிருந்தன. இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார் அவருடைய 408 வங்கி கணக்குகளையும் முடக்கி வைத்திருந்தனர். அரசாங்க நிதியிலிருந்து தொகையை நஜீப்பும் அவருக்கு நெருக்கமானவர்களும் சொந்த காரணங்களுக்காக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அரசாங்க நிதியிலிருந்து சுமார் 10 மில்லியன் டாலர் தொகையை நஜீப் பெற்றுக்கொண்டதாக கூறப்பட்டது. இதையடுத்து, ஊழல், மோசடி உள்ளிட்ட 7 குற்றச்சாட்டுகளின் கீழ் நஜீப் ரசாக் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சுமார் 5 ஆண்டு காலம் நடைபெற்று வந்த வழக்கு விசாரணையில் இன்று காலை தீர்ப்பு அளிக்கப்பட்டது.

அதில், மொத்தம் 7 வழக்குகளில் நஜீப் ரசாக் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டது. மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் பதவியில் இருந்தபோது தமது அதிகாரத்தை தவறுதலாக பயன்படுத்தியது நிரூபிக் கப்பட்டு விட்டதாக கோலாலம்பூர் நீதிமன்றம் தெரிவித் துள்ளது. இது குறித்த குற்றச்சாட்டுகளுக்கான அனைத்து ஆதாரங்களும் முழுமையாக பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டதாகவும், அவையனைத்தும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணமாகியுள்ளதாகவும் நீதிபதி அறிவித் துள்ளார். பிரதமர் நஜீப் ரசாக்கிற்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் தீர்ப்பை நஜீப் ரசாக் மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


 4 மாதங்களில் பி.எப்., பணம் ரூ.30 ஆயிரம் கோடி காலி

4 மாதங்களில் பி.எப்., பணம் ரூ.30 ஆயிரம் கோடி காலி 


புதுடில்லி: ஊரடங்கினால் வேலையிழப்பு, சம்பள குறைப்பு போன்றவற்றால் ஏப்ரல் தொடங்கி ஜூலை வரையிலான நான்கு மாதங்களில் ரூ.30 ஆயிரம் கோடியை பி.எப்., கணக்கிலிருந்து மக்கள் வெளியே எடுத்துள்ளனர்.


வருங்கால வைப்பு நிதி நிறுவனம் 6 கோடி சம்பளதாரர்கள் மற்றும் அவர்களது நிறுவனங்களிடமிருந்து கட்டாய பங்களிப்பின் மூலம் பெறப்பட்ட ரூ.10 லட்சம் கோடி நிதியை நிர்வகிக்கிறது. தொற்றுநோய் பரவுவதை கட்டுப்படுத்த மார்ச் மாத இறுதியில் நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கொரோனா சூழலால் பி.எப்., கணக்கிலிருந்து எளிதில் பணம் எடுக்கும் திட்டத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.


 


இந்த நிலையில் ஏப்ரல் தொடங்கி ஜூலை மூன்றாம் வாரம் வரையிலான இடைப்பட்ட காலத்தில் 80 லட்சம் சந்தாதாரர்கள் ரூ.30 ஆயிரம் கோடி பணத்தை வெளியே எடுத்துள்ளனர். மிகப்பெரிய அளவில் நிதி வெளியே சென்றிருப்பது 2021 நிதியாண்டின் வருவாயை பாதிக்கும். கொரோனா பாதிப்பு உயர்ந்து வருவதால், திரும்பப் பெறுவோர் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. தற்போதைய போக்கு தொடர்ந்தால் வரவிருக்கும் நாட்களில் கிட்டத்தட்ட ஒரு கோடி சந்தாதாரர்கள் சேமிப்பிலிருந்து விலகுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.தற்போது எடுக்கப்பட்டுள்ள பணத்தில், 30 லட்சம் பேர் கொரோனா சூழலால் ரூ.8000 கோடியை திரும்ப பெற்றதாகவும், மீதம் ரூ.22,000 கோடியை 50 லட்சம் பேர் பொதுவான காரணங்கள் கூறி பெற்றிருப்பதாகவும் பிஎப் நிறுவனம் அறிவித்துள்ளது.


 30 ஆண்டுகளில் முதல் முறையாக தடைபட்ட மொய் விருந்துகள்

30 ஆண்டுகளில் முதல் முறையாக தடைபட்ட மொய் விருந்துகள் 

கொரோனா ஊரடங்கால், புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 30 ஆண்டுகளாக நடத்தப்பட்ட மொய் விருந்துகள் முதல் முறையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

 

 
மொய் விருந்து 


கீரமங்கலம்:

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பகுதியில் 1985-ம் ஆண்டு கால கட்டத்தில் மொய் விருந்து விழா தொடங்கப்பட்டது. பின்னர் படிப்படியாக விரிவடைந்து அருகில் உள்ள புதுக்கோட்டை மாவட்டத்தில் 1990-ம் ஆண்டு கால கட்டத்தில் நெடுவாசல், கீரமங்கலம், கொத்தமங்கலம், வடகாடு, மாங்காடு, அணவயல், குளமங்கலம், பனங்குளம், நெய்வத்தளி, பாண்டிக்குடி, மேற்பனைக்காடு, செரியலூர், வேம்பங்குடி பைங்கால் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் தொடங்கி நடந்தது. தற்போது ஆலங்குடி வரை மொய் விருந்து கலாசாரம் பரவியுள்ளது.

 


கடந்த ஆண்டு வரை 2 மாவட்டங்களிலும் சேர்த்து சுமார் ஆயிரம் கோடி ரூபாய் வரை மொய் விருந்து வசூல் கிடைத்துள்ளது. அதேபோல் சமையல் கலைஞர்கள், ஆட்டுக்கறி, அரிசி, விறகு தொடர்பான தொழில் செய்பவர்கள், மொய் எழுத்தர்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் பயனடைந்துள்ளனர். ஒரு தனி நபரின் அதிக பட்ச மொய் வசூல் ரூ.5 கோடி வரை கடந்த ஆண்டு வசூல் செய்யப்பட்டது.

கடந்த 2018-ம் ஆண்டு கஜா புயல் தாக்கியதில், விவசாயிகளுக்கு வருமானம் கொடுக்கும் தென்னை, வாழை உள்ளிட்ட விவசாயம் முற்றிலும் அழிந்ததால் கடந்த ஆண்டு மொய் வசூல் கணிசமாக குறைந்தது. அதாவது எதிர்பார்த்ததைவிட பாதி அளவே மொய் வசூலானது. இதில் பலரும் கடன் வாங்கி மொய் செய்தனர். பலர் மொய் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் இந்த ஆண்டு ஓரளவு மொய் வசூல் கிடைக்கும் என்று எதிர்பார்ப்புடனும், கனவுகளுடனும் விழா நடத்த வேண்டியவர்கள் காத்திருந்தனர். ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று பரவல் ஏற்பட்டு, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் மொய் விருந்து விழா நடத்த இருந்தவர்களின் கனவு தகர்ந்து போனது.

அதாவது ஒவ்வொரு ஆண்டும் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆடி மாதத்திலும், தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆவணி மாதம் முழுவதும் மொய் விருந்து நடப்பது வழக்கம். ஆனால் கொரோனா ஊரடங்கால் இந்த ஆண்டு மொய் விருந்துகள் நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால், ஒரு மொய் விருந்து கூட நடத்தப்படவில்லை.

இது குறித்து இந்த ஆண்டு மொய் விருந்து நடத்த காத்திருப்பவர்கள் கூறுகையில், விவசாயிகள் கொஞ்சம் கொஞ்சமாக சேமித்து மொய் விருந்துகளில் மொய் செய்து, 5 ஆண்டுக்கு ஒரு முறை மொய் விருந்து நடத்தி மொத்தமாக வசூல் செய்வது வழக்கம். அந்த பணத்தை அவர்கள் திருமணம், தொழில், விவசாயம், கல்வி போன்றவற்றுக்கு பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் கஜா புயல் விவசாயத்தை அழித்தது. அதனால் கடந்த ஆண்டு மொய் விருந்து முடங்கியது. இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் விவசாய பொருட்கள், வாழைத்தார்கள் போன்றவற்றை விற்பனை செய்ய முடியவில்லை.

இதனால் இந்த ஆண்டு மொய் விருந்துகளை இதுவரை தொடங்க முடியவில்லை. தொடங்கினாலும் விவசாயிகள் மொய் செய்ய முடியாத நிலையில் உள்ளனர். அதாவது கடந்த 30 ஆண்டுகளில் முதல் முறையாக கொரோனா பரவல் காரணமாக மொய் விருந்துகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த ஆண்டு மொய் விருந்து நடத்த இருந்த சுமார் 5 ஆயிரம் பேர் வருகிற தை மாதம் முதல் படிப்படியாக மொய் விருந்துகள் நடத்த ஆலோசித்து வருகிறார்கள். அந்த நேரத்திலும் மொய் வசூல் குறைவாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம், என்றனர்.

 

 


 


 


ஆத்தி சூடி ( வீ) * வீடு பெற நில் * ஒருவிகற்ப இன்னிசை வெண்பா

ஆத்தி சூடி
             ( வீ)
               *
     வீடு பெற நில்
               *
        ஒருவிகற்ப
         இன்னிசை
         வெண்பா
                *ஒலி ஒளி உணர
 வீடு
   பெறவே
     விரைந்தே
       அனுதினம்


 நாடு
    அறத்தை
     நலங்கள்
       பெருகிட


 தேடு
   பலவாய்
     திறங்கள்
       வகுத்திட


 கூடு
   அறவோர்
     குணம்
           *
வணக்கத்துடன்🙏
ச.பொன்மணி


Tuesday, July 28, 2020

அப்துல்கலாம் நினைவு தினம்

அப்துல்கலாம் நினைவு தினம்


 தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் அப்துல்கலாம் நினைவு நாளினை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.


                                                                  அப்துல்கலாம் நினைவு நாளினை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம்,ஆசிரியர்கள் ஸ்ரீதர்,முத்துலெட்சுமி,முத்தமீனாள் ஆகியோரால்  மரக்கன்றுகள் நடப்பட்டது.ஆசிரியர்கள்  அப்துல்கலாம் படத்திற்கு முன்பு மெழுகுவர்த்தி ஏற்றி  அஞ்சலி செலுத்தினார்கள்.


  சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் அப்துல்கலாம் நினைவு நாளினை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம்,ஆசிரியர்கள் ஸ்ரீதர்,,முத்துலெட்சுமி,முத்தமீனாள் ஆகியோரால்  மரக்கன்றுகள் நடப்பட்டது.ஆசிரியர்கள்  அப்துல்கலாம் படத்திற்கு முன்பு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.


ஆத்தி சூடி              ( வி)              *  வித்தை விரும்பு              *         ஒருவிகற்ப          இன்னிசை         வெண்பா

ஆத்தி சூடி
             ( வி)
             *
 வித்தை விரும்பு
             *
        ஒருவிகற்ப
         இன்னிசை
        வெண்பா
              *ஒலி ஒளி உணர
 வித்தை
   விரும்பி
     வினைகள்
       புரிந்திட


 மொத்தக்
    கலைகள்
      முழுதாய்
        தெரிந்திடும்


 நித்தம்
   உழைப்பால்
     நிமிர்ந்தே
       வாழ்ந்திட


 சித்தம்
   அமைப்பாய்
     சிறந்து.
          *
வணக்கத்துடன்🙏
ச.பொன்மணி


இளைஞர் எழுச்சி நாளை வீட்டிலேயே ஓவியம் ,கவிதை,பேச்சு என நினைவு கூர்ந்து பள்ளி மாணவர்கள் 

அப்துல் கலாம் நினைவு நாள்


ஊரடங்கு நேரத்தில் இளைஞர் எழுச்சி நாளை வீட்டிலேயே ஓவியம் ,கவிதை,பேச்சு என நினைவு கூர்ந்து பள்ளி மாணவர்கள் 


 
தேவகோட்டை -  சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன்  மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் ஊரடங்கு நேரத்தில் அப்துல் கலாம் நினைவு நாளை வீட்டிலேயே ஓவியம் வரைந்தும் ,கவிதை சொல்லியும் , அப்துல் கலாமின் சிறப்புகளை  பேசியும்   நினைவு கூர்ந்தனர் .


                            சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் அப்துல் கலாம் நினைவு நாளை முன்னிட்டு இளைஞர் எழுச்சி நாளாக ஆண்டுதோறும் மாணவர்களுக்கு ஓவியம்,கவிதை சொல்லுதல்,பேச்சு போட்டி என பல்வேறு போட்டிகள்   நடைபெறுவது வழக்கம். கொரோனாவால் பள்ளி  மாணவர்கள் வீட்டிலேயே முடங்கி கிடப்பதை கருத்தில் கொண்டு  மாணவர்கள் வீட்டிலேயே ஓவியம் வரைய சொல்லியும்,கவிதை மற்றும் பேச்சு போட்டிகளில் பங்கேற்ற   மாணவர்களை ஆன்லைன் வழியாக வீடியோவாக அனுப்ப சொல்லி பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் ஸ்ரீதர்,கருப்பையா ,முத்துமீனாள் ,செல்வமீனாள் ,முத்துலெட்சுமி ஆகியோர் அலைபேசி மூலம் மாணவர்களை தொடர்பு கொண்டு ஊக்குவித்தனர். மாணவர்கள் தொடர்ந்து வீட்டில் இருந்தபடியே இது போன்ற போட்டிகளில் பங்கேற்க செய்வது அவர்களது உடல்நலம் மற்றும் மனநலத்துக்கு  உதவுவது ஆகும் . ஓவியம்,கவிதை,பேச்சு போட்டிகளில்   பங்கேற்ற மாணவர்கள் ராஜேஸ்வரி,சண்முகம்,புகழேந்தி,முகேஷ் ,திவ்யஸ்ரீ,பிரதிஷா ,முத்தய்யன் , தேவதர்ஷினி,ஜெயஸ்ரீ,பிரஜித்,வெங்கட்ராமன்,நதியா ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.பள்ளி திறந்த பிறகு போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளது.இப்பள்ளி மாணவர்களுக்கு  ஆன்லைன் வழியாக  பாட  வகுப்புகளும், பல்வேறு மத்திய,மாநில அரசுகள் நடத்தும் ஆன்லைன் போட்டிகளில் மாணவர்களை பங்கேற்க வைப்பதும்  , சதுரங்க பயிற்சிகள்  நடைபெற்று வருவதும்  ஊரடங்கு காலத்தில் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கும் மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது என்று பெற்றோர்கள்  தெரிவித்தனர்.
 சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் அப்துல் கலாம் நினைவு நாளை முன்னிட்டு வீட்டிலேயே ஓவியம், கவிதை,பேச்சு போன்ற போட்டிகளில் பங்கு கொண்டு ஆன்லைன் மூலம் வீடியோக்களை அனுப்பினார்கள்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் ஸ்ரீதர்,கருப்பையா ,முத்தமீனாள் ,செல்வமீனாள் ,முத்துலெட்சுமி ஆகியோர் மாணவர்களை போட்டிகளில் பங்கேற்க ஊக்குவித்தனர்.


தருமபுரியில் முழு ஊரடங்கு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஜூலை வரும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு என்று அரசு அறிவித்துள்ளது


 இந்த மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமையான 26/7/2020 தருமபுரியில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது இதனால் அனைத்து கடைகளும் மூடப்பட்டிருக்கிறது பால் மற்றும் மருந்தகம் கடைகள் மட்டுமே இயங்கி வருகிறது இன்று 80 சதவீத பொதுமக்கள் மட்டுமே ஒத்துழைப்பு தந்து வருகிறார்கள் அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே வெளியே வர வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது அரசு அறிவிப்பை மதிக்காமல் சிலர் சாலையில் சுற்றி வருகின்றனர் இதில் சிலர் மாஸ்க் அணியாமல் வருகின்றனர். அரசு அறிவித்துள்ள ஊரடங்கு இந்த மாதம் கடைசி ஞாயிற்றுக் கிழமையாக இன்று முடிவடைகிறது மேலும் ஊரடங்கு நீடிக்கிறதா ?இல்லையா ? என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடை பெற்ற பின்னரே தெரியவரும்.


 


செய்தியாளர். கணபதி தருமபுரி


ஓபிசி இட ஒதுக்கீட்டிற்கு தடை இல்லை

 

ஓபிசி இட ஒதுக்கீட்டிற்கு தடை இல்லை... மத்திய அரசு சட்டம் இயற்ற சென்னை ஐகோர்ட் உத்தரவு


 


 ஜூலை 27, 2020 13:39


மருத்துவப் படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக மத்திய அரசு சட்டம் இயற்ற சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.


மருத்துவ மாணவர் சேர்க்கை


புதுடெல்லி:


 


தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ பட்டப்படிப்புகளில் 15 சதவீத இடங்களும், மருத்துவ மேற்படிப்புகளில் 50 சதவீத இடங்களும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்காக மத்திய தொகுப்புக்கு வழங்கப்படுகிறது.


 


இவ்வாறு மத்திய தொகுப்புக்கு வழங்கப்படும் இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு, திமுக, அதிமுக, திராவிடர் கழகம், பாமக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் தமிழக அரசு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. 


 


இந்த வழக்கில் மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், மருத்துவ படிப்புக்களில் அந்தந்த மாநிலங்களின் பின்பற்றப்படும் இடஒதுக்கீட்டு முறையை பின்பற்ற அனுமதிக்கலாம் எனவும், ஆனால், அந்த இடஒதுக்கீடு மொத்த இடங்களில் 50 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டு இருந்தது.


 


உச்சநீதிமன்ற தீர்ப்பு மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில் விதிப்படி, இட ஒதுக்கீடு தொடர்பாக மாநில அரசு சட்டம் இயற்றாமல் இருந்தால் மட்டுமே மத்திய அரசு முடிவெடுக்க முடியும் என்றும், மத்திய அரசு கவுன்சிலிங் நடத்தும் அமைப்பு மட்டுமே என்றும், இட ஒதுக்கீடு தொடர்பாக முடிவெடுக்க மாநில அரசுகளுக்கே முழு அதிகாரம் உள்ளதாக மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது


 


தமிழக அரசு தரப்பில் அரசு தலைமை வழக்கறிஞர் விஜய்நாராயண் ஆஜராகி, தமிழகத்தில் 69% இடஒதுக்கீடு முறை இருக்கும் போது மத்திய அரசு 27% இடஒதுக்கீடு வழங்குவது தவறானது என்றும், தமிழகத்தில் தான் அதிகளவில் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிறபடுத்தப்பட்ட மக்கள் உள்ளனர் எனவும் சுட்டிக்காட்டினார்.


 


ஒவ்வொரு மாநிலத்திலும் சாதி வாரியான மக்கள் தொகையின் அடிப்படையில் 50 % என்ற இடஒதுக்கீடை அதிகரிக்கலாம் என உச்சநீதிமன்றமே தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டிய அவர், பட்டியலின பழங்குடியின பிரிவினருக்கு மட்டும் இட ஒதுக்கீடு வழங்கிவிட்டு, இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இட ஒதுக்கீடு மறுப்பது சட்ட விரோதமானது என்றும் வாதிட்டார்.


 


அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதிகள், மாநில அரசுகளின் ஒதுக்கீட்டு முறையை பின்பற்ற வேண்டும் என்ற முந்தைய உச்சநீதிமன்ற உத்தரவுகளுக்கு ஏன் மத்திய அரசு கட்டுப்படவில்லை? என கேள்வி எழுப்பினர். பின்னர் வழக்கின் மீதான தீர்ப்பை ஒத்திவைத்தனர். 


 


அதன்படி இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசிக்கு 50 சதவீத இடஒதுக்கீடு தர மத்திய அரசு சட்டம் இயற்றலாம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். 30 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட முடிவு என்பதால் தற்போதைய நிலை கருதி சட்டம் இயற்ற வேண்டும் என்றும் கூறினர்.


 


ஓபிசிக்கு 50 சதவீத இடஒதுக்கீடு தர உச்சநீதிமன்றம் தான் முடிவு செய்யும் என்ற மருத்துவ கவுன்சில் விளக்கத்தை ஏற்க முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். மருத்துவ படிப்புகளில் இடஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

 

 

5 வயது மகனை காண 1,800 கி.மீ பயணம் செய்த தாய்

5 வயது மகனை காண 1,800 கி.மீ பயணம் செய்த தாய்


 ஜூலை 27, 2020 


 


ஜாம்ஷெட்பூர்: இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் போக்குவரத்து தடைப்பட்டன. ஆனால், அடுத்தடுத்த ஊரடங்கு தளர்வினால், தற்போது சில பகுதிகளில் ஆட்டோ, டாக்ஸி, பைக்குகள் அனுமதிக்கப்படுகின்றன.
இதனால், மாநிலம் கடந்து வேலை பார்த்து வரும் சிலர் சிறப்பு ரயில்கள் மூலமாகவோ, சைக்கிள், பைக் உள்ளிட்ட வாகனங்கள் மூலமாக பல்லாயிரம் கி.மீ பயணம் செய்து சொந்த ஊர் செல்கின்றனர். அந்த வகையில் பெண் ஒருவர் தனது 5 வயது மகனை பார்க்க 1,800 கி.மீ பைக்கில் பயணம் மேற்கொண்டுள்ளார்.

ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூர் நகரை சேர்ந்தவர் சோனியா தாஸ். இவர் தனது குடும்பம், 5 வயது குழந்தையை விட்டுவிட்டு மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில், பெண்களுக்கான விடுதியில் தங்கி வேலை செய்து வந்தார். ஆனால் ஊரடங்கு காரணமாக வேலை இழந்ததால், வாடகை கொடுக்க முடியாமல் தவித்த அவர், விடுதியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அந்த நேரத்தில், புனேவில் வசிக்கும் அவரது தோழி சாபியா பனோ, தனது இல்லத்தில் சோனியா தாசுக்கு அவர் அடைக்கலம் கொடுத்தார். புனேவில் நாட்களை கழித்து கொண்டிருந்த நேரத்தில், தனது 5 வயது மகனை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் சோனியா தாசுக்கு உருவானது.இதனால், தனது தோழில சாபியா உடன் புனேவில் இருந்து கிட்டத்தட்ட 1,800 கி.மீ தொலைவில் உள்ள ஜாம்ஷெட்பூர்-க்கு இரு சக்கர வாகனத்தில் கிளம்பினர். ஜூலை 20ம் தேதி புறப்பட்ட அவர்கள், 24ம் தேதி ஜாம்ஷெட்பூர் சென்றனர். இது தொடர்பாக சோனியா கூறியதாவது: என்னிடம் பணம் இல்லை. வேலையும் இல்லை. அத்துடன் தங்குவதற்கு இடமும் இல்லை. எனவே புனேவில் உள்ள சாபியா பனோவின் வீட்டிற்கு சென்று விட்டேன். ஜார்கண்ட் முதல் அமைச்சர் ஹேமந்த் சோரனுக்கு நான் டுவீட் செய்தேன். அத்துடன் மஹாராஷ்டிரா, ஜார்கண்ட் மாநில அரசுகளின் உதவி எண்களை அழைத்தேன்.


ஜாம்ஷெட்பூர் சென்றதும், எனது மகன் மற்றும் குடும்பத்தினரை பாதுகாப்பான தொலைவில் இருந்து பார்த்தேன். அவர்கள் மாடியின் மேலே நின்று கொண்டிருந்தனர். நான் சாலையின் ஓரத்தில் நின்று அவர்களை பார்த்தேன். அதன்பின் நானும், எனது தோழியும் தனிமைப்படுத்துதல் முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டோம். எனக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில், கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்ட பிறகு, மறுநாள் (ஜூலை 25ம் தேதி) எனது மகன் அங்கு அழைத்து வரப்பட்டார். நாங்கள் ஆண்கள் தோற்றத்தில் இருந்ததால் அது ஒருவகையில் பாதுகாப்பாக இருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.ஆண் சிங்கத்துடன் மோதும் பெண் சிங்கம்

ஆண் சிங்கத்துடன் மோதும் பெண் சிங்கம்: வைரல் வீடியோ 


 


காந்திநகர்: குஜராத்தில் உள்ள கிர் வனப்பகுதியில், ஆண் சிங்கத்துடன் பெண் சிங்கம் நேருக்கு நேர் மோதும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நீங்கள் எத்தனையோ சிங்கங்கள் குறித்த வீடியோவை பார்த்திருப்பீர். ஆனால் பெண் சிங்கம், ஆண் சிங்கத்துடன் மோதும் வீடியோ பார்த்திருக்கிறீர்களா. குஜராத்தை சேர்ந்த பா.ஜ., தலைவரும், வனவிலங்கு புகைப்படக் கலைஞருமான ஜூபின் ஆஷாரா தான் இந்த வீடியோவை பதிவு செய்துள்ளார். மூன்று ஜீப்களில் தொலைவில் நிற்கும் சுற்றுலா பயணிகள், மண் சாலையின் நடுவே சிங்கங்கள் சண்டையிட்டு கொள்வதை நேரில் பார்க்கின்றனர்.

எப்போது படம்பிடிக்கப்பட்டது என தெரியாத நிலையில், வைல்டு லைப் என்னும் டுவிட்டர் பக்கத்தில் இந்த வீடியோ பகிரப்பட்டிருந்தது. 22 நொடிகள் கொண்ட வீடியோவில், சிங்கங்கள் ஒன்றை ஒன்று நேருக்கு நேர் உறுமியப்படி பார்த்து கொண்டே முன்னங்கால்களை தூக்கி சண்டையிடுகின்றன. சிங்கங்கள் சண்டையிட்டு கொள்ளும் வீடியோவை ஒரே நாளில் டுவிட்டரில் 2.6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்து ரசித்துள்ளனர். காய்கறிகள் வாங்க சென்று, கொத்தமல்லி வாங்காமல் வீட்டுக்கு வரும் கணவன் எனவும், இரு சிங்கங்கள் இடையேயான சண்டையை கணவன் மனைவி பிரச்னை என நெட்டிசன்கள் பலர் கமெண்டுகளை பதிவிட்டுள்ளனர்.https://www.dinamalar.com/news_detail.asp?id=2584188


கடந்த மாதம் பிரதமர் மோடி, கிர் வனப்பகுதியில் உள்ள ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். குஜராத் அரசின் கணக்கெடுப்பின்படி, தற்போது கிர் சரணாலயத்தில் 674 ஆசிய சிங்கங்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை சிங்கங்கள் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. கடைசியாக 2015ம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், கிர் தேசிய பூங்காவில் 523 சிங்கங்கள் வாழ்ந்து வந்தது குறிப்பிடத்தக்கது.


 


  

Featured Post

மனிதனை மீறிய சந்தர்ப்பங்கள் வாழ்க்கையை எவ்வளவு தூரம் திருப்பிவிடுகின்றன

  மனிதனை மீறிய சந்தர்ப்பங்கள் வாழ்க்கையை எவ்வளவு தூரம் திருப்பிவிடுகின்றன என்பதற்கு நான் ஓர் உதாரணம்.’’ – இது, ‘சரித்திர நாவல்களின் ஜாம்பவான...