Posts

Showing posts from January, 2020

மறுபடியும் நயனா

Image
ரஜினிகாந்த் நடித்து வரும் ’தலைவர் 168’ திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மீனா மற்றும் குஷ்பு நடித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் ரஜினிக்கு மகள் அல்லது தங்கை கேரக்டரில் கீர்த்தி சுரேஷ் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது தற்போது  நயன்தாரா இணைந்து உள்ளதாக அதிகாரப்பூர்வமாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்தினரால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு  அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது   ஏற்கனவே மீனா, குஷ்பு, சுரேஷ் ஆகிய மூன்று நாயகிகள் இருக்கும் படத்தில் நயன்தாரா போன்ற பெரிய நடிகைக்கு அப்படி என்ன கேரக்டர் இருக்கும் என்பதுதான் மேலும் தர்பார் படத்தில் நயன்தாராவுக்கு போதிய சான்ஸ் தரமால் வீணடிக்கப்பட்ட நிலையில்  அவங்களுக்கு என்ன இந்த படத்தில் இருக்க போகிறது என நயன் ரசிகர்கள் புலம்புகிறார்களாம்

சமந்தாவின் புகைப்பட கிளிக்ஸ்

Image
சமந்தாவின் புகைப்பட கிளிக்ஸ்

நிர்பயா குற்றவாளிகள் 4 பேருக்கு நாளை காலை தூக்கு தண்டனை நிறைவேற்ற தடை

Image
நிர்பயா குற்றவாளிகள் 4 பேருக்கு நாளை காலை தூக்கு தண்டனை நிறைவேற்ற தடை விதித்து டெல்லி பாட்டியாலா விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  நாளை காலை 6 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட இருந்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.     இதற்கு முன்னதாக ஜனவரி 22 ஆம் தேதி தூக்கிலிடுவதாக இருந்த நிலையில், பிப்ரவரி-01ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 2வது முறையாக நாளையும் தூக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.    இந்த நிலையில், தூக்கில் போட மாட்டார்கள் என குற்றவாளிகளின் வழக்கறிஞர் சவால் விடுகிறார், தண்டனை அளிக்கும் வரை தொடர்ந்து போராடுவேன். அரசு அவர்களை தூக்கில் போட வேண்டும் என நிர்பயாவின் தாயார் ஆசா தேவி கண்ணீர் மல்க கூறியுள்ளது கல் மனதையும் கரைய வைத்துள்ளது.

ரஜினிகாந்துக்கு சாதகமாக வருமான வரித்துறையின் நடவடிக்கை

Image
2002 முதல் 2005 வரையிலான மூன்று ஆண்டுகளுக்கு வருமான வரி தாக்கலில் இருந்த குறைபாடுகள் காரணமாக ரஜினிகாந்த்துக்கு 66,22,436 ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், வருமான வரித்துறை மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தில் ரஜினிகாந்த் மீது தொடுக்கப்பட்ட வழக்கைத் திரும்பப்பெறுவதாக, வருமான வரித்துறை அறிவித்தது. இதையடுத்து, ரஜினிகாந்த் மீதான வழக்கைத் தள்ளுபடிசெய்வதாகத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது இந்த விவகாரத்தில், ரஜினிகாந்த் தரப்பில் கூறப்பட்ட விளக்கம்தான் தற்போது பெரிய அளவில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. தனக்கு வட்டித்தொழில் குறித்து தெரியாது என்றும், பொருளை அடமானம் வைத்து பணம் தருவதையே வட்டித் தொழில் என நினைத்தேன் என்றும் கூறியுள்ளார். மேலும், ``எனது நெருங்கிய நண்பர்களுக்கு மட்டுமே பணத்தைக் கடனாக வழங்கினேன். இது எப்படித் தொழிலாகும்" என்றும் கூறியுள்ளார். அதேவேளை, 18% வட்டிக்கு கடன் வழங்கியுள்ளதாகவும் அதில் ஒரு பகுதி வாராக்கடனாகிப் போனதாகவும் தெரிவித்துள்ளார். இவரது விளக்கத்தில், நெருங்கிய நண்பர்களுக்குப் பணம் வழங்கியது எப்படி தொழிலில் சேருமென்றும், இதை வியாபாரமாகச் செய்யவில்லை என்றும

ரஜினியை கொண்டுவர நினைத்தால் நான் நிச்சயம் எதிர்ப்பேன்.

Image
ரஜினிகாந்த் ப்ரவுன்சுகர் வியாபாரி..?பாஜக பிரமுகர் சுப்ரமணியசாமி கடும் தாக்கு. .. நடிகர் ரஜினிகாந்த் சினிமாவில் சம்பாதித்த பணம்,கருப்பு பணத்தை வெளிநாட்டில் வைத்திருக்கிறார்.இதே போல் ...ப்ரவுன்சுகர் பிசினஸ் எல்லாம் மற்றவர்களைப் போல் ரஜினியும் செய்கிறார் என்று பாஜக பிரமுகர் சுப்ரமணியசாமி..குற்றம் சாட்டியிருக்கிறரர்....இந்த வீடியோவில் அவரால் அரசியலில் எந்த மாற்றமும் வரப்போவதில்லை. அவருடைய அரசியல் ஆன்மீக அரசியல்  என்று சொல்லியிருப்பதற்குள் நான் வரவில்லை. பிஜேபிக்குள் இன்னும் ரஜினியை கொண்டுவர நினைத்தால் நான் நிச்சயம் எதிர்ப்பேன். அதையும் மீறினால் நான் பிஜேபிக்குள் இன்னும் ரஜினியை கொண்டுவர நினைத்தால் நான் நிச்சயம் எதிர்ப்பேன். அதையும் மீறினால் நான் பாஜகவில் இருந்து விலகி வேறுமாதிரி செயல்படுவேன்.என கடுமையாக எச்சரித்திருக்கிறார்.  https://www.youtube.com/watch?v=WrYjw0bJ RJ4

தி ஹிந்து இதழ் ஆசிரியர் ராம் அவர்கள் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து மனித சங்கிலி போராட்டத்தில்

Image
தி ஹிந்து  இதழ் ஆசிரியர் ராம் அவர்கள் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து மனித சங்கிலி போராட்டத்தில் கலந்துகொண்டபோது செய்தியாளர் சந்திப்பு

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த இளைஞர் கைது

Image
  திருத்துறைப்பூண்டி அருகே நான்கரை வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே கட்டிமேடு கிராமத்தை சேர்ந்தவர் தினேஷ்குமார் (24). இவர் தனியார் மருந்த கத்தில் பணியாற்றி பின்னர் பல்வேறு வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று (ஜனவரி 30 ) மாலை தினேஷ் குமார் அவர் வசிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த நான்கரை வயது சிறுமியை மிட்டாய் வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி மறைவான இடத்திற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு வைத்து சிறுமிக்கு அவர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை காணவில்லை என அவரது தாய் தேடியுள்ளார். அப்போது தினேஷ் குமார் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்தது  கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த தாய், சிறுமியை மீட்டு சென்றார். இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் திருத்துறைப்பூண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், நடந்த சம்பவத்தை கூறி புகார் அளித்தார். இதையடுத்து, போலீஸார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து விச

வயநாட்டில் ராகுல் காந்தி பேரணி

Image
மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தை காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்த்து வருகிறது. இந்த சட்டத்துக்கு எதிராக தேசிய அளவிலும், மாநிலங்கள் அளவிலும் தொடர்ச்சியான போராட்டங்களில் அந்த கட்சியினர் ஈடுபட்டு உள்ளனர். இதைப்போல கட்சியின் முன்னாள் தலைவரும், கேரளாவின் வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக மத்திய அரசை தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். இதன் தொடர்ச்சியாக அவர் இந்த சட்டத்துக்கு எதிராக நேற்று வயநாட்டில் பிரமாண்ட பேரணி ஒன்றை நடத்தினார். ‘அரசியல் சாசனத்தை காப்போம்’ என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த பேரணியானது வயநாடு மாவட்டம் கல்பெட்டாவில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் இருந்து 2 கி.மீ. தொலைவுக்கு நடந்தது. இதில் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் கட்சிக்கொடியுடன் கலந்து கொண்டனர். கட்சியின் மாநில தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா, தேசிய செயலாளர் கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பலரும் இந்த பேரணியில் பங்கேற்று ராகுல் காந்தியுடன் நடந்து சென்றனர். இந்த பேரணி முடிவில் தொண்டர்களிடையே உரையாற்றிய ராகுல் காந்தி, மத்தி

குடமுழுக்கு தமிழ் சம்ஸ்க்ருதத்தில்

Image
*தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு தமிழ், சமஸ்கிருதம் இரண்டு மொழிகளிலும் நடத்தப்படும் -மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு* மதுரை தஞ்சை பெருவுடையார் எனும் பெரிய கோவில் கும்பாபிஷேகம் வருகிற 5-ந் தேதி நடக்கிறது. சமஸ்கிருத மொழியில் கும்பாபிஷேகம் நடத்த இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து இந்த விழாவில் முழுக்க முழுக்க தமிழிலேயே திருமுறைகள் சொல்லப்பட வேண்டும், வேத மந்திரங்கள் அனைத்தும் தமிழிலேயே படித்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள தஞ்சை பெரிய கோவிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கு மத்திய தொல்லியல் துறையிடம் அனுமதி பெறவில்லை, எனவே அந்த விழாவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வழக்கு தொடரப்பட்டது. சென்னை மைலாப்பூரை சேர்ந்த ரமே‌‌ஷ் என்பவர் தாக்கல் செய்த மனுவில், தஞ்சை கோவில் கும்பாபிஷேகத்தை சமஸ்கிருதத்தில் நடத்த உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த மனுக்களை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம் எந்த மொழியில் நடத்தப்பட உள்ளது என தெரிவிக்கும்படி அரசுக்கு உத்தரவிட்டது. இந்

கவர்ச்சியாக போஸ் தன்யா ரவிச்சந்திரன் இப்போ கவர்ச்சியில்

Image
 கருப்பன் பட புகழ் தன்யா ரவிச்சந்திரன் இப்போ க வர்ச்சியில்

அரவிந்த் கிருஷ்ணா ஐ பி எம் புதிய தலைவர்

Image
108 ஆண்டுகளாக தொழில்நுட்ப உலகில் அசைக்கமுடியாத நிறுவனமாக திகழ்கிற ஐ.பி.எம் நிறுவனதின்  தலைமை செயல் அதிகாரியாக இருந்த கின்னி ரோமேட்டி பதவி விலகும் நிலையில், அவரது இடத்திற்கு இந்தியாவை சேர்ந்த 57 வயதான அரவிந்த் கிருஷ்ணா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கான்பூர் ஐ.ஐ.டி பல்கலைக்கழகத்தில் எலெக்ட்ரிக்கல் பிரிவில் பட்டம்பெற்ற அவர், 1990 ஆம் ஆண்டு டாக்டரேட் பட்டம் பெற்ற இவர்  அதே ஆண்டே ஐ.பி.எம் நிறுவனத்தில் சேர்ந்து சுமார் 30 ஆண்டுகாலம் அந்நிறுவனத்தின் வெவ்வேறு துறைகளில் பணியாற்றி, கடந்த ஆண்டு முதல் ஐபிஎம் கிளவுட் மற்றும் அறிவாற்றல் மென்பொருளுக்கான  மூத்த துணைத் தலைவராக பொறுப்பேற்றார். இதனையடுத்து அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்த கின்னி ரோமேட்டி பதவி விலகும் நிலையில், வரும் ஏப்ரல் மாதம் அரவிந்த் கிருஷ்ணா தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்க உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

டாப்ஸி  கிரிக்கெட் வீராங்கனை மித்தாலி ராஜ் பாத்திரத்தில்

Image
கிரிக்கெட் வீராங்கனையாக டாப்ஸி  நடிகை டாப்ஸி தற்போது  இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை மித்தாலி ராஜ் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்து வருகிறார்.      மித்தாலி ராஜ். 1999-ம் ஆண்டிலிருந்து இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடி வருகிறார். மகளிர் கிரிக்கெட் போட்டியில் தொடர்ந்து பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி இந்தியாவின் சிறந்த வீராங்கனையாக பார்க்கப்படும் இவர் கிரிக்கெட் போட்டியில் 20 ஆண்டுகளைக் கடந்த ஒரே வீராங்கனை என்ற பெயரும் எடுத்து இந்திய மண்ணிற்கு பெருமை சேர்த்துள்ளார்.   இந்நிலையில் தற்போது இவரது வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டு வருகிறது. இதில் நடிகை டாப்ஸி மித்தாலி ராஜ் ரோல் ஏற்று நடிக்கிறார். 'சபாஷ் மித்து' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை  'லம்கே', 'பர்சானியா' மற்றும் 'ராயீஸ்' உள்ளிட்ட படங்களை இயக்கிய ராகுல் தொலாகியா இயக்கவுள்ளார். 

ராஷி கண்ணா.special..

Image
 ராஷி கண்ணா...

ரூ.7 கோடி ஊழலை கண்டுபிடித்த பழங்குடியின பெண் அதிகாரி

Image
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடியைச் சேர்ந்தவர் சாந்தாமணி. பழங்குடி இனத்தைச் சேர்ந்த இவர், கேரள மாநில அரசின் பால்வளத்துறையில் டி.இ.ஓ (Diary Extension officer)-ஆக பணியாற்றி வருகிறார்.                    அவர் அட்டப்பாடியில் உள்ள ஒரு கூட்டுறவு சங்கத்தில் ரூ.7 கோடிக்கு ஊழல் நடந்துள்ளதை சாந்தாமணி கண்டுபிடித்துள்ளார்.   இதனால், கூட்டுறவு சங்கத்தில் உள்ள அதிகாரிகளும் ஆளும் சி.பி.எம் பிரமுகர்களும், சாந்தாமணிக்கு எதிரான செயல்களில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.                         சாந்தாமணிக்கு எதிராக பல்வேறு பொய்ப் புகார்களை மேலிடத்துக்கு அனுப்பியுள்ளனர். இதையடுத்து, ஊழல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், சாந்தாமணியை ஆலத்தூர் பகுதிக்கு இடமாற்றம் செய்துள்ளது கேரள அரசு. இது பழங்குடியின மக்கள் மற்றும் எதிர்க்கட்சிகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.                          சாந்தாமணியை மீண்டும் அட்டப்பாடிக்கே மாற்ற வேண்டும் என்று நாளுக்கு நாள் போராட்டம் வலுத்துவந்த நிலையில், பழங்குடி மக்கள், தாய்க்குல சங்கம், கேரள அ.தி.மு.க உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இணைந்து பேரணியாக வந்து

கொரோனா வைரஸ் பாதிப்புள்ளவர்களை கண்டறிய நாடு பரிசோதனை மையங்கள்

Image
கொரோனா வைரஸ் பாதிப்புள்ளவர்களை கண்டறிய நாடு முழுவதும் 6 பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.* இதுவரை 21 விமான நிலையங்களில் 234 விமானங்கள், 43346 பயணிகள் பரிசோதிக்கப்படுள்ளனர் - மத்திய சுகாதாரத்துறை. நாளை முதல் சென்னை உள்ளிட்ட மேலும் 6 நகரங்களிலும், பரிசோதனை மையங்கள் செயல்பட உள்ளன - மத்திய சுகாதாரத்துறை.

சமூக வலைதளங்களில் ஆபாச பதிவுகள் மற்றும் அவதூறு பரப்புவோர் மீது கருணை காட்ட முடியாது

Image
சமூக வலைதளங்களில் ஆபாச பதிவுகள் மற்றும் அவதூறு பரப்புவோர் மீது கருணை காட்ட முடியாது": சென்னை உயர் நீதிமன்றம் "சமூக வலைதளங்களில் ஆபாசமாக, அவதூறு கருத்துக்களை பதிவு செய்பவர்களை கண்டறிய வேண்டும்" "2 மாதத்திற்குள் சிறப்பு பிரிவை அமைக்க வேண்டும்" தமிழக காவல்துறை தலைமை இயக்குனருக்கு  சென்னை உயர் நீதிமன்றம் ஆணை

கோலமிடுவதால் ஏற்படும் நன்மைகள்

Image
  வாசலில் கோலமிடுவதால் ஏற்படும் நன்மைகள் தெரியுமா?                கோலமிடும் வீட்டில் மகாலெஷ்மி நிரந்தர வாசம் செய்கின்றாள். சூரிய உதயத்திற்கு முன் வாசலில் சாணம் தெளித்து கோலமிட வேண்டும். வீட்டில் இருந்து யாரேனும் வெளியே கிளம்பும் முன்பாக கோலமிட வேண்டும்.கோலத்தில் புள்ளி,கோடு போன்றவை போடும் போது சிறு தவறு ஏற்படும் போது காலினால் அழிக்க கூடாது. கையால் அழிக்க வேண்டும். வீட்டின் வெளிமுற்றம், சமையல் அறை, பசுவின் கொட்டகை, துளசிமாடம், பூஜை அறை இவற்றில் கோலமிட வேண்டும். அதிகாலையில் அரிசி மாவினால் கோலமிடும் போது எறும்பு போன்ற சிறு உயிரிகளின் பசியைப் போக்கிய புண்ணியம் கிடைக்கும். அதேபோல அமர்ந்தவாறும் போடுதல் கூடாது. வேலையாட்களாலும் போடுதல் கூடாது.சுபகாரியங்களின் போது இரண்டைக்கோடு வருவது போலவும் அசுபகாரியங்களின் போது ஒற்றைக்கோடு வருவது போல் போட வேண்டும். பயன்கள்: தமிழர்கள் இயற்கையை அரவணைத்து வாழக்கூடியவர்கள்.                  இந்த பூமியின் மண்ணின் தன்மை கெடாமல் இருப்பதற்காக நாம் பசு சாணத்தைத் தெளிக்கிறோம். பசு சாணத்தால் ஆன ஈரம், ஓசோன் வாயுப் படலம் சூழ்ந்திருக்கக்கூடிய சூரிய உதயத்திற்கு முன் இருக்கக

நஷ்ட ஈடுகேட்டு. ரஜினி வீட்டை முற்றுகையிட்ட விநியோகஸ்தர்கள்...

Image
படம் வெளியாகி 4 நாட்களில்  150 கோடி வசூல் செய்துள்ளதாக லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டாலும்... ஆனால் படம் எதிர்பார்த்த அளவு வசூலை பெறவில்லை என்று  கூறப்படுகிறது. 65 கோடி ரூபாய் கொடுத்து  படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் தர்பாரால் மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்...இதையடுத்து தர்பார் பட நஷ்டம் குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்திப்பதற்காக செங்கல்பட்டு உள்ளிட்ட..சில ஏரியாக்களின் விநியோகஸ்தர்கள் ராகவேந்திரா மண்டபத்தில் கூடி ஆலோசனை செய்துள்ளனர். இதையடுத்து ...தங்களுக்கு ஏற்பட்ட பெருத்த நஷ்டத்தை ஈடு செய்ய இழப்பீட்டுத் தொகை பெற்றுத்தர, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்..ரஜினிகாந்தை நேரில் சந்தித்து வலியுறுத்த முடிவு செய்தனர். ...இதற்காக 9 மாவட்டங்களைச் சேர்ந்த விநியோகஸ்தர்கள் சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினி இல்லத்திற்கு இன்றுமதியம் சென்றுள்ளனர். ஆனால் விநியோகஸ்தர்களை இன்று சந்திக்க முடியாது என்றும், நாளை சந்திப்பதாகவும் ...ரஜினி தரப்பிலிருந்து உறுதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது. ... லிங்கா,,2,0 ,கபாலி,காலா, பேட்ட படங்களை தொடர்ந்து தர்பார் படமும தோல்வி யாராலும் ரஜன

வங்கிகள் வேலை நிறுத்தம்

Image
வங்கி ஊழியர்கள் அடுத்த இரு நாட்களுக்கு வேலை நிறுத்தம்* 🔹🔹12.25 சதவீத ஊதிய உயர்வை ஏற்க மறுத்துள்ள வங்கி ஊழியர் சங்கங்கள் நாளை மற்றும் மறுநாள் அறிவித்துள்ள வேலை நிறுத்ததின் எதிரொலியாக, அடுத்த இரண்டு நாட்களுக்கு வங்கி சேவைகள் பாதிக்கப்படலாம் என கூறப்படுகிறது. 🔹🔹20 சதவிகித ஊதிய உயர்வு, வாரத்திற்கு 5 வேலை நாட்கள், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வங்கி ஊழியர் சங்கங்கள் முன்வைத்துள்ளன. ஆனால் 12புள்ளி 25 சதவிகிதம் மட்டுமே ஊதிய உயர்வு அளிக்க வங்கி நிர்வாகங்கள் தயாராக உள்ளதால் ஊழியர் சங்கங்கள் வேலை நிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளன. 🔹🔹கடந்த 8 ஆம் தேதி நடந்த பாரத் பந்திலும் வங்கி ஊழியர்கள் பங்கேற்றனர்.அடுத்த கட்டமாக மார்ச் மாதம் 11 ஆம் தேதி முதல் 3 நாட்களும், கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்திலும் ஈடுபடப் போவதாக வங்கி ஊழியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன  

திருத்துறைப்பூண்டியில் அரசு உதவிபெறும் புனித தெரசாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா

Image
                            திருத்துறைப்பூண்டியில் அரசு உதவிபெறும் புனித தெரசாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. மாவட்ட கூடுதல் கலெக்டர் கமல்கிஷோர் தலைமை வகித்தார் உணவு த்துறைஅமைச்சர் காமராஜ் திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, கோட்டூர் ஒன்றியங்களைசேர்ந்த அரசு மேல்நிலைப்பள்ளி, உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த 2,363 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கி பேசினார். இதில் நகர வங்கி தலைவர் சண்முகசுந்தர், நிலவள வங்கி தலைவர் சிங்காரவேலு, தாசில்தார் ராஜன்பாபு மற்றும் அனைத்து பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தியாகராஜன் வரவேற்றார், பள்ளி தலைமையாசிரியர் செல்வராணி நன்றி கூறினார். செய்தியாளர். பாலா திருத்துறைப்பூண்டி. படங்கள். மு. அமிர்தலிங்கம்

மகாத்மா காந்தி நினைவிடத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் மரியாதை.

Image
மகாத்மா காந்தியின் நினைவு தினம் :  டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் மரியாதை.

டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்தை அனுமதிக்ககூடாது ,

Image
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஒன்றிய குழு கூட்டத்தில் டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்தை அனுமதிக்ககூடாது , டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றம். திருத்துறைப்பூண்டி ஒன்றிய குழு கூட்டத்திற்கு தலைவர் பாஸ்கர் தலைமை வகித்தார், துணைத்தலைவர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். இதில் எம்எல்ஏ ஆடலரசன், தாசில்தார் ராஜன்பாபு, ஒன்றிய ஆணையர்கள் சுப்பிரமணியன் , தமிழ்ச்செல்வன் ,மேலாளர் முருகானந்தம் ,பொறியாளர் சூர்யமூர்த்தி , அரசு போக்குவரத்து கிளை மேலாளர் ஜெய்சங்கர், கூட்டு குடிநீர் திட்டம் டெக்னீசியன் ராகவன் மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள், அனைத்து ஒன்றிய கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர் . செய்தியாளர். பாலா திருத்துறைப்பூண்டி படம். அமிர்தலிங்கம்

மகாத்மா காந்தி நினைவு தினம்

Image
*மகாத்மா காந்தியின் நினைவு தினம் : சென்னை மெரினாவில் உள்ள காந்தி சிலைக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மலர் தூவி மரியாதை:* *முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களும் மகாத்மா காந்திக்கு மரியாதை.*

மோனலிசா..

Image
கவர்ச்சிகாட்டும் .