தமிழகம் முழுவதும், மேலும், ஒரு மாதத்திற்கு, ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது சென்னை : தமிழகம் முழுவதும், மேலும், ஒரு மாதத்திற்கு, ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. நாளை முதல், 15 நாட்களுக்கு, பஸ் போக்குவரத்து கிடையாது. இம்மாதம் முழுவதும், ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும், அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு, முழு முடக்கம் அமல்படுத்தப்படும். மற்ற நாட்களில், டீக்கடை, உணவகங்கள் செயல்படும். நோய் பரவல் அதிகம் உள்ள, ஐந்து மாவட்டங்களில், கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. முதல்வர் வெளியிட்டுள்ள அறிவிப்பு: * கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க, ஏற்கனவே நடைமுறையில் உள்ள, பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், தளர்வுகளுடனும், இன்று இரவு முடிவடைய உள்ள ஊரடங்கு, அடுத்த மாதம், 31ம் தேதி நள்ளிரவு, 12:00 மணி வரை, தமிழகம் முழுவதும் நீட்டிக்கப்படுகிறது . * சென்னை முழுவதிலும் மட்டுமின்றி, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மதுரை மாவட்டங்களில் குறிப்பிட்ட சில பகுதிகளில், தற்போது அமலில் உள்ள முழு ஊரடங்கு உத்தரவு, வரும், 5ம் தேதி வரை தொடரும். * சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில், ஜூன், 19க்கு முன்பிருந்த நிலை; மதுரை