Wednesday, May 18, 2022

பூக்களால் உருவாக்கப்பட்ட வீடு.

 

பூக்களால் உருவாக்கப்பட்ட வீடு.. கண்ணை கவரும் உதகை ரோஜா மலர் கண்காட்சி


!


நீலகிரியில் ஆண்டுதோறும்  கோடை விழாவின் ஒரு பகுதியாக நடைபெறும்  ரோஜா மலர் கண்காட்சி நடைபெறும்.கொரொனா காரணமாக  2  ஆண்டுகளுக்குப் பின்பு  14/5/2022 அன்று ரோஜா கண்காட்சி  தொடங்கியது.

உதகை அரசு ரோஜா பூங்காவில் 17 வது ரோஜா கண்காட்சி இன்று துவங்கியது. 89,000 ரோஜா மலர்களை கொண்டு பல்வேறு வடிவங்களில் அலங்காரம் செய்யப்பட்டுள்ளதை  சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் ரசித்தனர்.

நீலகிரியில் ஆண்டுதோறும்  கோடை விழாவின் ஒரு பகுதியாக  ரோஜா மலர் கண்காட்சி நடைபெறும். அந்த வகையில்  ரோஜா கண்காட்சி  தொடங்கியது.

14.5.2022 மற்றும் 15,5,2022  என இரு நாட்கள் நடைபெற்றது இந்த  ரோஜா கண்காட்சியில் 89 ஆயிரம் ரோஜா மலர்களைக் கொண்டு பல்வேறு அலங்கார சிற்பங்கள் வைக்கப்பட்டன.

குறிப்பாக 41 ஆயிரம் ரோஜா மலர்களை கொண்டு கொண்டு மரத்தின் மேல் வீடு, 9000 ரோஜாக்களை கொண்டு படச்சுருள்,  6,000 ரோஜாக்களை கொண்டு குழந்தைகளைக் கவரும் வகையில் கார்ட்டூன் சித்திரங்களான மோட்டு , பட்லு, 5000 ரோஜாக்களால் பியானோ ஆகியவையும் , உதகை தோன்றி 200 ஆண்டுகளானதை  நினைவு கூறும் வகையில் ரோஜாக்களால் வடிவமைக்கப்பட்ட 00TY 200 ஆகிய அலங்கார வடிவங்கள் வைக்கப்பட்பது.

தமிழகத்தில் ஈரோடு, தர்மபுரி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் தோட்டக்கலை துறை சார்பில் ரோஜாக்களால் வடிவமைக்கப்பட்ட அலங்கார சித்திரங்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டதையும் .  ஒரே இடத்தில் லட்சக்கணக்கான ரோஜா மலர்களை  சுற்றுலா பயணிகள் கண்டு  ரசித்து சென்றனர்.


தூக்குக் கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல்

 


முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், 1991-ம் ஆண்டு, ஜூன் மாதம் 11-ம் தேதி பேரறிவாளன் என்கிற அறிவு கைதுசெய்யப்பட்டபோது அவருக்கு வயது 19. 1971-ம் ஆண்டு, ஜூலை 30-ல் வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் பிறந்தவர். தாய் அற்புதம்மாள், தந்தை குயில்தாசன் கவிஞர்.

சிறையிலிருந்தபடி பி.சி.ஏ., எம்.சி.ஏ முடித்தார். ஐந்துக்கும் மேற்பட்ட சான்றிதழ் படிப்புகளையும் முடித்துள்ளார். மேலும், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் Desktop Publishing டிப்ளோமா படிப்பில் முதல் மாணவராகத் தேர்ச்சிபெற்று தங்கப் பதக்கம் வென்றார். தான் எழுதிய, 'தூக்குக் கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல்' என்ற நூலில், தான் நிரபராதி என்பதற்கான ஆதாரங்களை உணர்ச்சிகளின் அடிப்படையில் அல்லாமல், உண்மைகள் மற்றும் தர்க்கங்களின் அடிப்படையில் எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது
நன்றி: விகடன்

மரண தண்டனை வேண்டாம் என்பதில் நம்பிக்கை உள்ளவன் நான்’’

 


"தொய்வில்லாத இந்த சட்டப்போராட்டத்தில், என் அம்மாவுடைய உழைப்பை உறிஞ்சிவிட்டேன் என்ற எண்ணம், வேதனை எனக்கு இருக்கும். இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டார்கள். எனவே, நியாயம் வெல்ல வேண்டும் என்ற எண்ணம் எப்போதுமே உண்டு. ஏதோ ஒரு வகையில் எல்லாருமே ஒவ்வொரு காலக்கட்டத்தில் தங்களுடைய சக்திக்கு மீறி அளவில்லாமல் உழைத்துள்ளார்கள். அவர்களை எல்லாம் வாழ்க்கையின் ஒருக்கட்டத்தில் வாய்ப்பு கிடைக்கிற பட்சத்தில் நேரடியாக சென்று நன்றி சொல்ல வேண்டும். இந்த நீண்ட போராட்டத்தில் மிகப்பெரிய திருப்புமுனை. அரசின் ஆதரவு என்ற தளத்தையும், மக்கள் ஆதரவு என்ற பெருந்தளத்தையும் உருவாக்கியதில் மிகப்பெரிய காரணம் என்னுடைய தங்கை செங்கொடியின் தியாகம்.

‘பேரறிவாளன் ஒரு நிரபராதி. அவரது வாக்குமூலத்தை தவறாக பதிவு செய்துவிட்டேன்’ என்று 2013-ல் தியாகராஜன் ஐ.பி.எஸ் அவர்கள் வெளிப்படையாக வந்து பேட்டி கொடுக்கும்போதும், உச்ச நீதிமன்றத்தில் வாக்குமூலமாக பதிவு செய்யும்போது மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்தது. அதன்பிறகு, உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு கொடுத்த கே.டி.தாமஸின் பேட்டி, கட்டுரைகளும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இதெல்லாம் சேர்ந்துதான் என்னை இங்கு கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது. அதேபோல, நீதியரசர் கிருஷ்ணய்யரைப் பற்றியும் சொல்ல வேண்டும்.
நான் இன்று வெளியில் வந்ததற்கும் அவர்தான் காரணம். முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கும் அவர் கடிதம் எழுதினார். ‘மண்டியிட்டு கேட்டுகொள்கிறேன்’ என்று எனக்காக நீதியரசர் கிருஷ்ணய்யர் மன்மோகன்சிங்கிடம் கேட்டுகொண்டார். அதுமட்டுமில்லாமல், நான் நினைத்துகூட பார்க்க முடியாத வழக்கறிஞர்களை உச்ச நீதிமன்றத்தில் அமர்த்திகொடுத்திருந்தார். இந்த விடுதலை சாத்தியப்படுத்துவதற்கு 6 ஆண்டுகளுக்கும் மேலாக பொருளாதாரத்தையும், கட்டணத்தையும் எதிர்பார்க்காமல் மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன் வாதாடியிருக்கிறார்.
அதேபோலவே, தமிழக அரசு தங்களுக்குள்ள அதிகாரத்தை நிலைநாட்டும் வகையில் அஃபிடவுட் ஃபைல் செய்தார்கள். மூத்த வழக்கறிஞரை வைத்து திறம்பட வாதாடி தீர்ப்பை பெற்றுத் தந்துள்ளனர். மரண தண்டனை காலங்களில் எங்களோடு துணையாக இருந்த மும்பையைச் சேர்ந்த வழக்கறிஞர் இக்மோர் சௌத்ரியையும் இந்த நேரத்தில் நினைத்துப் பார்க்கின்றேன். அதேபோல, ஊடகங்கள் இல்லையெனில் இந்த மாற்றம் ஏற்பட்டிருக்காது. உண்மைகள் வெளியில் வந்திருக்கிறது. சிறைத்துறை, காவல்துறையிலிருந்தும் எங்களுக்கு உதவி செய்திருக்கிறார்கள். 31 ஆண்டுகால சட்டப்போராட்டம்தான் என்னுடைய வாழ்க்கை. கொஞ்சம் காற்றை சுவாசிக்க வேண்டும். மூச்சு விட வேண்டும். ஆசுவாசப்படுத்திக் கொள்கிறேன். சட்டப்போராட்டத்துக்காகவே என்னுடைய வாழ்க்கையை செலவுப் பண்ணியிருக்கின்றேன். நீதி அமைப்பு முறையில் திறம்பட சட்டப்போராட்டம் நடத்தினால், ஏதோ ஒரு வகையில் வெற்றிப்பெறலாம். எதிர்காலம் குறித்த எல்லா கேள்விகளுக்கும் பின்னர் விடையளிக்கிறேன். மரண தண்டனை வேண்டாம் என்பதில் நம்பிக்கை உள்ளவன் நான்’’ என்றார் புன்னகை மலர்ந்த முகத்தோடு பேரறிவாளன்

மரணதண்டனை விதிக்கப்பட்டால் ஆயுள் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை

 2014 இல் ராம்ஜெத்மாலனி கூறியது


முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோர் மீதான தூக்கு தண்டனையை நீக்க கோரி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் தூக்குதண்டனைக்கு தடை விதிக்கப்பட்டது நமக்கு கிடைத்த முதல் வெற்றியாகும்.
அதன் பின்னர் உச்சநீதிமன்றத்தில் தூக்கு தண்டனையை ரத்து செய்து வந்த அறிவிப்பு இரண்டாவது வெற்றியாகும். இந்த வெற்றி தொடரவேண்டும்.
இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா எடுத்த நடவடிக்கை சரியானதாகும். விதிமுறைகளை மீறாமல் சட்டத்துக்கு புறமாக எதுவும் செய்யவில்லை. தற்போது உச்சநீதிமன்றத்தில் விதிக்கப்பட்ட தடை தற்காலிகமானது.
இவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதில் இருந்து மரணத்தின் பிடியில், அதன் நிழலில் சிக்கி தவித்தனர். இது 5 ஆயுள் தண்டனைக்கு சமமானது. இதுபற்றி சுப்ரீம் கோர்ட்டில் விரிவாக எடுத்துரைப்பேன்.
தமிழக அரசு சரியான முடிவு
ஆனால் மத்திய அரசில் உள்ள சிலர் தமிழக அரசு தவறு செய்துவிட்டதாகவும், விதிமுறைகளை மீறிவிட்டதாகவும் கூறியிருப்பது சரியானதல்ல. பிரதமர் மன்மோகன்சிங் எதிர்ப்பு தெரிவித்து கூறியதற்கு வருகிற லோக்சபா தேர்தலில் மக்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவிப்பார்கள்.
உச்சநீதிமன்ற விதித்துள்ள தடையை எதிர்த்து, மத்திய அரசின் சீராய்வு மனுவை எதிர்த்து போராட எல்லா வழிவகைகளும் தமிழக அரசுக்கு உள்ளன. அவர்கள் விடுவிக்கப்பட்டதன் காரணம் இரண்டு தண்டனைகள் இருக்கக்கூடாது என்பதன் அடிப்படையில்தான். அவர்களுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டால் ஆயுள் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. அரசியல் சாசனத்திலேயே அப்படி இல்லை என்றார் ராம் ஜெத்மலானி.
நன்றி: ஒன் இந்தியா தமிழ்

அவர் இனி மகிழ்ச்சியாக சாதாரண வாழ்க்கை வாழ வேண்டும்

 


இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு குறித்து பேசியுள்ள முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி கே டி தாமஸ், தான் பேரறிவாளனை நேரில் சந்திக்க வேண்டும் என்றும், அவர் இனி மகிழ்ச்சியாக சாதாரண வாழ்க்கை வாழ வேண்டும் என்றும் வாழ்த்தியுள்ளார்.

ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி கே டி தாமஸ்,1999 ஆம் ஆண்டு ஏஜி பேரறிவாளனுக்கு தூக்கு தண்டனை விதித்த உச்ச நீதிமன்ற அமர்வுக்கு தலைமை தாங்கியவர் ஆவார். பின்னர், 2013 ஆம் ஆண்டு இந்த வழக்கில் ‘இரட்டை ஆபத்து’ பிரச்சினையை எழுப்பிய தாமஸ், 23 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றவாளிகளை தூக்கிலிடுவது அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று கூறினார். இது 2014ம் ஆண்டு மூன்று குற்றவாளிகளின் தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் குறைக்கம் உத்தரவுக்கு வழிவகுத்தது.
இது தவிர, நீதியரசர் தாமஸ், ராஜீவ் காந்தியின் மனைவி சோனியா காந்தியிடம் இந்த வழக்கில் பெருந்தன்மை காட்டுமாறு வேண்டி கேட்டுக்கொண்டார். மேலும் தமிழக ஆளுநரின் முடிவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பும் முடிவை “கேட்கப்படாதது மற்றும் அரசியலமைப்பிற்கு விரோதமானது” என்றும் குறிப்பிட்டு இருந்தார். அதோடு, மகாத்மா காந்தி படுகொலை வழக்கில் சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நாதுராம் கோட்சேவின் சகோதரர் கோபால் கோட்சேவின் 14 ஆண்டுகள் சிறைதண்டைனைக்குப் பிறகு 1964-ல் விடுவிக்க மத்திய அரசு எடுத்த முடிவையும் அவர் மேற்கோள் காட்டி இருந்தார்.
இந்நிலையில், பேரறிவாளன் விடுதலை குறித்து நீதியரசர் கேடி தாமஸ் கேரளாவின் கோட்டயத்தில் உள்ள தனது இல்லத்தில் இருந்து “தி இந்தியன் எக்ஸ்பிரஸ்” இதழுக்கு அளித்துள்ள பேட்டி பின்வருமாறு:
“பேரறிவாளனை நான் நேரில் பார்க்க விரும்புகிறேன். அவருக்கு நேரம் கிடைத்தால், அவர் தயவுசெய்து என்னைப் பார்க்கவும். நீண்ட சிறைதண்டனை மற்றும் 50 வயதில் விடுதலையான பிறகு, நான் அவரிடம் என்ன சொல்ல வேண்டும்? அவருக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும். அவர் தனது அன்பானவர்களுடன் மகிழ்ச்சியாக வாழ வேண்டும். மேலும் அவருடைய தாயாருக்கு (அற்புதம் அம்மாள்) முழுப் புகழையும் அளிக்கிறேன். அவர்தான் முழுப் புகழுக்கும் உரியவர்.
மாநில அரசின் அறிவுரைப்படி செயல்பட வேண்டிய ஆளுநர், அதை ஏன் புறக்கணித்தார்? எத்தனை வருடங்கள் தாமதம் பாருங்கள்.” என்று கூறியுள்ளார்.
மேலும், பேரறிவாளன் வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு மற்ற 6 குற்றவாளிகளுக்கும் பொருந்தும் என்றும் நீதிபதி தாமஸ் குறிப்பிட்டுள்ளார். “மற்றவர்களும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும். அவர்களை சிறையில் அடைக்க வேண்டுமானால், சிறை ஆலோசனைக் குழு அவர்களுக்கு எதிராக பாதகமான அறிக்கைகளை அளிக்க வேண்டும். எனக்கு தெரிந்த வரையில் அவர்களுக்கு எதிராக அப்படி எந்த புகாரும் இல்லை,” என்று தெரிவித்துள்ளார்.
நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்

எத்தனை நீண்ட நெடிய சட்ட போராட்டம் இந்த முதுமையிலும்,

 


"அரசியல்

பார்வையில்

ஆயிரத்தெட்டு

தர்க்கம்

உண்டு

இன்றைய

உச்ச நீதிமன்றத்தின்

பேரறிவாளன்

விடுதலை

அதிரடி

தீர்ப்பு..!!


ஆயினும்

தனிப்பட்ட

முறையில்

அந்த தாயுடன்

பழகி

இருக்கிறேன்,

அறிவையும்

இரண்டு முறை

வேலூர்

மத்திய

சிறைச்சாலையில்

சந்தித்து

இருக்கிறேன்,

தானும்

படித்து

மற்றவர்களையும்

படிக்க

வைத்திருக்கிறார்

சிறைச்

சாலையில்,

நன்னடத்தை..!!


இளம் வயது

பேரறிவாளன்

தமிழ் தேசிய

அரசியலால்

உந்தப்பட்டு

தன்

தந்தை

குயில்

தாசனின் 

பெரியாரிய

கருத்தியல்

பார்த்து

வளர்ந்தவர்..!!


தமிழகமே

அன்று

அந்த

ஈழ மக்கள்

அவல நிலை

பார்த்து 

உதவத்

துடித்தது,

அன்றைய

முதல்வர்

பொன்மனச்

செம்மல்

உட்பட..!!


விசாரணையில்

கூட

(அந்த துன்பியல்

சம்பவம்

மூண்றே

பேருக்கு, இயக்க தலைமைக்கு

மட்டுமே

தெரியும் நடக்கும்

வரை என தெரிவிக்க பட்டுள்ளது ).!! 


உணர்ச்சி

வசப்பட்டு

அந்த உதவி

எதற்கென்றே

தெரியாமல்

சின்ன உதவி

செய்தவர்கள்

தான்

பலிகடா

ஆனார்கள்..!!


நான் முறைப்படி

சட்டம்

படிக்கவில்லை, 

ஆயினும்

பல

வருடங்களுக்கு

முன்பே

சொன்னேன்,

ஏழு பேர்

விடுதலை

என்பது சட்ட

சிக்கல்கள்

நிறைந்தது,

தனியாக

பேரறிவாளன்

விடுதலையை

மட்டும்

முன்னெடுத்து

செல்லுங்கள்

என,

இதோ இன்று

அந்த ஒரு

முன்னெடுப்பு

தான்

அறிவின்

விடுதலைக்கு

உதவி

இருக்கிறது..!!


மீண்டும்

சொல்கிறேன்

இன்றைய

இளைஞர்கள்

அரசியல்வாதிகளின் மேடைப்பேச்சு

கேட்டு புல்லரித்துப்

போய்

உணர்ச்சிவசப்பட்டு

செய்யும்

சிறு தவறும்

அவர்கள்

வாழ்க்கையை

திசை

திருப்பி விடும்..!!


எத்தனை

நீண்ட நெடிய

சட்ட போராட்டம்

இந்த

முதுமையிலும், 


மனமார்ந்த

நல்வாழ்த்துக்கள்

அம்மா,

மகிழ்ச்சி

அறிவு..!! "


கவிமுரசு பிரவீன்.


அஸ்ஸாம் மாநிலத்தில் 4 நாள்களாக தொடர் கனமழை


 அஸ்ஸாம் மாநிலத்தில் 4 நாள்களாக தொடர் கனமழை பெய்துவருகிறது. பிரம்மபுத்திரா, கொபிலி உள்ளிட்ட முக்கிய ஆறுகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. மொத்தம் 20 மாவட்டங்களை சேர்ந்த 652 கிராமங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. 2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 7 பேர் உயிரிழந்துள்ளனர். 1,400-க்கும் மேற்பட்ட கால்நடைகள் வெள்ளித்தில் அடித்துச் செல்லப்பட்டன. 16 ஆயிரத்து 645 ஹெக்டேர் பயிர் நிலங்கள் மூழ்கின. 300 வீடுகள் மூழ்கின.தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுக்களுடன் காவல்துறை, தீயணைப்புத்துறை அலுவலர்கள் தீவிர மீட்புப்பணியில் ஈடுபட்டுவருகின்றனர். 7 மாவட்டங்களில் 55 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

 90% திமுக அமைச்சர்களுக்கு ஆங்கிலம் தெரியாது என்பதற்கு.. தமிழக அமைச்சர்கள் பதில் : தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அண்ணாமலை விமர்சனம் செய்து இருந்த நிலையில் ரிலீஸாகி வைரலாகும் காணொளி

சிரிக்கும் புத்தர்'

 1974 ஆம் ஆண்டு இதே மே 18ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் இந்தியா முதல் முறையாக அணுகுண்டு சோதனையை நடத்தியது. அப்போது இந்திரா காந்தி பிரதமராக இருந்தார். புத்த பூர்ணிமா அன்று நடத்தப்பட்ட இந்த சோதனை, 'சிரிக்கும் புத்தர்' என்றும் அழைக்கப்பட்டது.

சிரிக்கும் புத்தர்... என்ற பெயரில், இந்தியாவின் முதல் அணுகுண்டு சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்ட நாள் இன்று. 47 ஆண்டுகளுக்கு முன் இந்தியா பதிவு செய்த அந்தச் சாதனை மூலம், உலகிற்கு தன் அணு ஆயுத வலிமையைப் பறைசாற்றி நிருபித்தது. அது பற்றிய ஒரு வரலாற்றுப் பார்வை...


அகிம்சை என்னும் அமைதிப் பாதையை உலகிற்கு அறிமுகம் செய்த இந்தியா... ஆன்மிகம் செழித்து வளர்ந்த இந்தியா... ரத்தம் சிந்திய புரட்சிகளாலும்... கொத்துக் கொத்தாக உயிர்களைப் பலிவாங்கிய போர்களாலும்... உலக நாடுகள் சுதந்திரம் பெற்றுக் கொண்டிருந்த வேளையில், அகிம்சையை ஆயுதமாகப் பயன்படுத்தி 500 ஆண்டுகால அடிமைத்தளையில் இருந்து விடுபட்ட இந்தியா... அணு ஆயுத சோதனை நடத்தி, அணுகுண்டை வெடித்துக் காட்டும் கட்டாயத்தைக் காலம் ஏற்படுத்தியது.

இரண்டாம் உலகப்போரின்போதே அணுகுண்டைத் தயாரித்து, அமெரிக்கா உலகப் பேட்டைக்காரனாக மாறிவிட்டிருந்தது. உலகின் பேட்டைக்காரன் நீ அல்ல... நான் தான் என்று அமெரிக்காவுக்கு சவால் விட்டுக் கொண்டிருந்த, சோவியத் ரஷ்யாவும் அணுகுண்டுகளை உற்பத்தி செய்து குவித்து வைத்திருந்தது. இந்த இரண்டு நாடுகளுக்கும் மத்தியில் இருந்த பிரிட்டனும், பிரான்சும் தங்கள் பங்குக்கு அணுகுண்டுகளை வைத்திருந்தன. இந்தியாவின் தலைக்கு மேல் கத்தியாகத் தொங்கிக் கொண்டிருக்கும் சீனாவும் அப்போதே அணுகுண்டுகளை வைத்திருந்தது. இந்தச் சூழலில் இந்தியாவில் இருந்து பிரிந்து போன பாகிஸ்தான், இந்தியாவிற்கு ஒவ்வொரு நாளும் முடிவில்லாத துயரங்களைக் கொடுத்துக் கொண்டிருந்தது. இப்படிப்பட்ட இக்கட்டான சூழலில், அணுகுண்டுகள் என்பது இந்தியாவின் அத்தியாவசியத் தேவையாக மாறிவிட்டிருந்தது.

உலக சரித்திரம்... அறிவியலின் அவசியம்... தொலைநோக்குப் பார்வை... தொழில்நுட்பங்களின் தேவை... என்பதில் கரை கண்ட இந்தியாவின் முதல் பிரதமர் நேரு, இந்தியாவும் அணு ஆய்வில் தன்னிறைவு அடைய வேண்டும் என எண்ணத் தொடங்கினார். இதையடுத்து, இந்தியாவின் அணுசக்தி தொடர்பான பொறுப்புக்களை ஹோமிபாபா என்ற விஞ்ஞானியிடம் நேரு ஒப்படைத்தார்.

இந்திய அணு சக்தித் துறைக்குப் பொறுப்பேற்ற ஹோமிபாபா, உலக நாடுகளிடம் இருந்து அணு சக்தி தொடர்பான தொழில் நுட்பங்களைத் தேடித்தேடி வாங்கினார். பிரிட்டன் உதவியுடன், 1955-ம் ஆண்டு அப்சரா என்ற அணு உலையை இந்தியாவில் அமைத்தார். அமெரிக்கா, கனடா நாடுகளிடம் உதவியைப் பெற்று, சைரஸ் என்ற அணு உலை இந்தியாவில் அமையக் காரணமானார்.

ஓரளவுக்கு அணுசக்தி மையத்தைப் பலப்படுத்திய ஹோமிபாபாவும், ஜவஹர்லால் நேருவும், அடுத்தகட்டமாக அணுகுண்டு தயாரிப்பதற்கான ஆரம்ப வேலைகளைத் திட்டமிட்டனர். அணுகுண்டு தயாரிக்கத் தேவையான புளுட்டோனியத்தை இந்தியாவிலேயே உற்பத்தி செய்ய முடிவெடுத்தனர். இந்திய அணு உலைகளில் யுரேனியத்தைப் பிளப்பதன் மூலம் கிடைக்கும், புளுட்டோனியத்தை சேகரிக்கும் வேலைகள் தீவிரமடைந்தன. ஆனால், துரதிருஷ்டவசமாக 1964-ம் ஆண்டு நேரு மரணமடைந்தார். அதன்பிறகு பிரதமரான லால் பகதூர் சாஸ்திரி அணுகுண்டுத் தயாரிப்பில் ஆர்வம் காட்டவில்லை. அதனால், வேலை மந்தமடைந்தது.

1966-ஆம் ஆண்டு லால் பகதூர் சாஸ்திரி மரணமடைந்தார். அதையடுத்துப் பிரதமரான இந்திராகாந்தி, மீண்டும் அணுகுண்டுத் தயாரிப்பில் ஆர்வம் காட்டினார். ஆனால், அந்த நேரத்தில் ஹோமிபாபாவும் மரணமடைந்தார். இதையடுத்து இந்திய அணுசக்தித் துறைக்கு விக்ரம்சாராபாய் பொறுப்பேற்றார். அவர் தலைமையில் நடந்த, புளுட்டோனியம் சேகரிப்பு 1969-ம் ஆண்டு நிறைவு பெற்றது. இப்போது இந்தியாவிடம் அணுகுண்டு தயாரிப்பதற்கான புளுட்டோனியம் இருந்தது.

இதையடுத்து, அணுகுண்டு தயாரிக்கும் பொறுப்பு விஞ்ஞானி ராஜா ராமண்ணாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் தலைமையிலான குழுவில், பி.கே.அய்யங்கார், ஆர்.சிதம்பரம், பிரணாப், வி.சி.ராய் உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் பணியாற்றினர். அவர்களின் அயராத உழைப்பில் இந்தியாவின் அணுகுண்டு வடிவம் பெற்றுக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில், 1971-ம் ஆண்டு பாகிஸ்தானுடன் போர் ஏற்பட்டது. அதனால், இடையில் சிலகாலம் அணுகுண்டு தயாரிக்கும் பணி மீண்டும் மந்தமானது. ஆனால், அந்தப் போரில் வெற்றி பெற்ற இந்திரா காந்தி, புதிய உற்சாகத்தோடு, மீண்டும் அணுகுண்டு தயாரிக்கும் பணிகளை வேகப்படுத்தினார்.

உலக நாடுகளின் உளவுத்துறைகள் அத்தனைக்கும் தெரியாமல், அவை மிக ரகசியமாக, இந்தியாவின் தார் பாலைவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டன. 1974 மே 16 மற்றும் 17 தேதிகளில் அவை அங்கு வைத்தே ஒன்றாகப் பொருத்தி முழுமை அடையச் செய்யப்பட்டது.

பிரதமர் இந்திராகாந்தியின் உத்தரவுப்படி, உலகிற்கு அகிம்சையைப் போதித்த புத்தரின் பிறந்தநாளான பூத்தபூர்ணிமா அன்று, காலை 8 மணி ஐந்தாவது நிமிடத்தில், அந்த அணுகுண்டு வெடித்துப் பார்க்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. ராஜஸ்தான் மாநிலத்தின், தார்பாலைவனத்தில் உள்ள பொக்ரானில் நடைபெற்ற அந்தச் சோதனை வெற்றிகரமாக முடிந்தது.

வெற்றிச் செய்தியை பிரதமர் இந்திராகாந்திக்குத் தெரிவித்த விஞ்ஞானிகள், புத்தர் சிரித்துவிட்டார் என சங்கேத மொழியில் அதைத் தெரிவித்தனர்.

அமெரிக்கா, சோவியத் ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா என்ற 5 அணு ஆயுத நாடுகளின் பட்டியலில் இந்தியா இணைந்தது. உலக நாடுகளின் பிரதானப் பத்திரிகைகள் அனைத்தும், இந்தியாவின் பெண் பிரதமர் இந்திரா காந்தியின் சாதனையைத் தலைப்புச் செய்தியாக்கின. வல்லரசு நாடுகள் கோபமடைந்தன.

ஆனால், அனைத்தையும் எதிர்கொள்ளத் தயராக இருந்த பிரதமர் இந்திரகாந்தி, இந்தியா அணுகுண்டுகள் தயாரித்தது, எந்த நாட்டிற்கு எதிராகவும் அதைப் பயன்படுத்துவதற்கு இல்லை. மாறாக, தனது வலிமையை உலகிற்குக் காட்டவும், இந்தியாவை அச்சுறுத்த நினைக்கும் நாடுகளை எச்சரிக்கவுமே அணுகுண்டுகளைத் தயாரித்தது என்று சொல்லி இந்தியாவின் பெருமையை உலகிற்கு பிரகடனம் செய்தார்.

முதல் அணுகுண்டு சோதனைக்குப் பிறகு, இந்தியா தனது இரண்டாவது அணுகுண்டு சோதனையை, வாஜ்பாய் பிரதமராக இருந்த 1998-ம் ஆண்டு மே 11 மற்றும் 13-ம் தேதிகளில் செய்து முடித்தது. ஆப்ரேஷன் சக்தி என்ற பெயரில் நடைபெற்ற அந்தச் சோதனைக்குப் பிறகே பாகிஸ்தான் தன் முதல் அணுகுண்டு சோதனையை நடத்தியது.

அகிம்சையைப் போதித்த இந்தியா, அணு ஆயுத நாடாகவும் தன்னை வலிமைப்படுத்திக் கொண்டதற்கு காரணமாக இரண்டு அணு ஆயுத சோதனைகளும் மே மாதத்தில் நடந்தது குறிப்பிடத்தக்கது. 47 ஆண்டுகள் கடந்துவிட்ட அந்த வரலாற்றுச் சாதனைக்குப் பின்னால், 28 ஆண்டு கால உழைப்பும், போராட்டமும் உள்ளது என்பதும் இங்கே நினைவுகூரத்தக்கது.

ஒரு கலாசாரத்தை மதிப்பிட பாலியல் சுதந்திரம்தான் அளவுகோலா?''

 ஒரு கலாசாரத்தை மதிப்பிட பாலியல் சுதந்திரம்தான் அளவுகோலா?''


''ஆமா, கலாசாரம்னு பேசுனா, மொதல்ல அங்கே இருந்துதானே தொடங்கணும்? ஒழுக்கம், ஒழுக்கம்னு எங்கே கூச்சல் கேட்குதோ, அங்கேதான் நிறைய ஒழுக்கக்கேடு இருக்கும். ஒவ்வொருத்தனும் மனசுக்குள்ள ஆயிரம் தடவை சோரம் போறான். வெளியே பேசுறது பதிவிரதத்தனம். சென்னையிலேயே, ரெண்டு மூணு வருஷத்துக்கு முன்னாடி நடந்துச்சா இல்லையா? கம்ப்யூட்டர் கம்பெனியில கக்கூஸு அடைச்சு, குழாயை உடைச்சப்ப வண்டி வண்டியா ஆணுறைகளை எடுத்த கதை நாடு முழுக்க நாறுச்சா இல்லையா? அப்ப வெளியே மூடிக்கிட்டு உள்ள வெறியோட அலையுறதுல என்ன இருக்கு? அட, பச்சப்புள்ளைங்க மேல எவ்வளவு வன்முறை நடக்குது? என்னடா, இந்தக் கி.ரா. இந்த வயசுல இப்படிப் பேசுறானேனு நெனைக்கக் கூடாது. இந்த வயசுல நான் பொய் பேசக் கூடாது, இல்லையா? மொதல்ல இங்கே குடும்பம்கிற அமைப்பு உடையணும்னு நெனைக்கிறேன்.''
''இந்தியாவுக்குப் பாலியல் கல்வி வேண்டும் என்று நினைக்கிறீர்களா?''
''கண்டிப்பா வேணும்னு சொல்றேன். இல்லைன்னா, குட்டிச்சுவராப் போயிடும். எப்படி வாழணும்னு மொதல்ல நாம கத்துக்கணும். பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுக்கணும். மறைச்சு மறைச்சு வெச்சுதான் பெரிய விஷயமாக்கிட்டோம். பிள்ளைங்க இது ஒரு பெரிய விஷயம்னு நெனைச்சு, அந்த ஞாபகமாகவே அலையுது. நான் கேட்குறேன்... ஒரு நாள்ல முக்கா நாளு ஒருத்தன் இந்த நெனைப்பாவே திரியுறான்னா, அது சிக்கலா, இல்லையா? அது அவனோட சிக்கல் மட்டும்தானா... சமுதாயத்தோட சிக்கலுமா? கம்ப்யூட்டர் மூலமா மணிக்கணக்கா உறவாடுறானே, அவனோட ஆழ்மனசுத் தேவை என்ன? கிராமப்புறங்கள்ல மேல் வயித்துப் பசி, கீழ் வயித்துப் பசினு சொல்வாங்க. ரெண்டு பசியுமே மோசமானது. ஆனா, இங்கே எல்லாருமே மேல் வயித்தைப் பசியைத் தீர்க்குறதைப் பத்தி மட்டும்தான் பேசுறோம். கீழ் வயித்துப் பசியை மறந்துடுறோம்.''
''சமூக வலைதளங்களை எல்லாம் கவனிக்கிறீர்களா?''
''சங்கதி என்ன நடக்குதுனு மட்டும் தெரியும். என்ன, முன்னே மறைச்சுவெச்சுப் படிச்சோம்... இப்பம் மறைச்சுவெச்சுப் பார்த்துக்குறீங்க, உறவாடிக்கிறீங்க.''
''இந்த வயதில் காதலைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? உங்கள் முதல் காதலை இப்போது நினைவுகூர முடியுமா?''
''முதல் காதல்... ஹா... ஹா... பசிக்குது. அந்தச் சமயத்துல பக்கத்துல நல்ல சாப்பாடு. உடனே கிடைச்சுட்டா, அதை ஒரு விஷயமா நெனைப்போமா? அப்படித்தான் இந்தக் காதலும். கிடைச்சுட்டா, அந்த நேரச் சாப்பாடு. கிடைக்காட்டி, அதுக்குப் பேர் காதல். கிடைக்கவே கிடைக்காட்டி, அது அமரக் காதல், காவியக் காதல். ஒரு விஷயம் சொல்லலாம். காதல் ஒரு தடவை மட்டும் வர்றது இல்லை. வந்துக்கிட்டே இருக்குறது.''
''நம் சமூகத்தில், பெரும்பாலான படைப் பாளிகள் தனிப்பட்ட வாழ்க்கையில் தோல்வி அடைந்து இருக்கிறார்கள்.வெற்றிகரமான உதாரணங்களில் ஒருவர் என்ற முறையில் இந்தப் பிரச்னைக்கு என்ன காரணம் என்று சொல்லுங்களேன்..?''
''ரெண்டு காரணங்கள். ஒண்ணு, ஒரு படைப்பாளியோட நேரத்தை அவன் வீட்டுல அனுமதிக்கணும். எனக்கு ராத்திரியில எழுத வருது; அது சம்பந்தமா, முக்கியமா நான் ஒரு புத்தகத்தைப் படிக்கணும்னு வெச்சுக்குங்க. அப்போ நான் படிச்சாகணும். அப்போ பார்த்து என் பொண்டாட்டி, 'தூக்கத்தைக் கெடுக்காமப் படுங்க’னு சொன்னா வேலைக்கு ஆகாது. ஏன்னா, எழுத்து நம்ம இஷ்டப்பட்ட நேரத்துக்கு வராது. அதேபோல, அவளோட கஷ்டத்தையும் நான் புரிஞ்சுக்கணும். என்னோட அனுசரணையை அவ எதிர்பார்க்குறானு வெச்சுக்குங்க. பொய்யா யாவது சில வார்த்தைகள் ஆறுதலாப் பேசணும். நடிக்கணும். தப்பு இல்லே. மனசைக் காயப்படுத் துற மாதிரி உண்மையைப் பேசுறதைவிட இது மேல். இன்னொரு விஷயம் இருக்கு. படைப்பு சார்ந்து வர்ற உறவுகளை, குடும்பத்துக்கு உள்ளே நுழையவிடாம வெச்சுக்குறது. உங்க எழுத்தைப் படிச்சுட்டு ஒரு பொண்ணு, 'நான் உங்க அடிமை’னு சொல்லிக்கிட்டு வர்றானு வெச்சுக்குங்க. அவளை எங்கே நிப்பாட்டணும்னு உங்களுக்குத் தெரியணும். இது ரெண்டும் தெரியாததுதான் நிறையப் பேருக்குப் பிரச்னை ஆயிடுது.''
- கி.ரா. பேட்டி
நன்றி: விகடன்

மக்சிம் கார்க்கியின் 'தாய்' போன்றவர் என் அம்மா - பேரறிவாளன் நெகிழ்ச்சி

 மக்சிம் கார்க்கியின் 'தாய்' போன்றவர் என் அம்மா - பேரறிவாளன் நெகிழ்ச்சி

பேரறிவாளன்
May be an image of 1 person
TWITTERCopyright: TWITTER
மக்சிம் கார்க்கியின் 'தாய்' போன்றவர் என் அம்மா என, பேரறிவாளன் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய பேரறிவாளன், "அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும், செவ்வியான் கேடும் நினைக்கப்படும்" என்பது குறள். கெட்டவர்கள் நன்றாக வாழ்வதையும், நல்லவர்கள் வீழ்த்தப்படுவதையும் இந்த உலகம் நினைத்து பார்க்கும் என்பது இந்த குறள். 'செவ்வியான் கேடு' தான் என் சிறை வாழ்க்கை.
தமிழ்நாடு மக்கள் என் மீது அன்பு செலுத்தினார்கள். தங்கள் வீட்டில் ஒரு பிள்ளையாக என்னை நினைத்தார்கள். என் விடுதலையின் மூலக்காரணம் என் அம்மா. என் அம்மாவின் தியாகம், அவரின் போராட்டம் தான் இதற்கு காரணம்.
ஆரம்ப காலங்களில் நிறைய அவமானங்களையும் புறக்கணிப்புகளையும் அம்மா சந்தித்துள்ளார். நிறைய வேதனை, வலிகளை சந்தித்துள்ளார். அதையெல்லாம் கடந்து 31 ஆண்டுகள் இடைவிடாமல் போராடியுள்ளார். இதற்கு காரணம் எங்கள் பக்கம் இருந்த உண்மை, நியாயம். அதுதான் எங்களுக்கு வலிமையை கொடுத்தது.
மக்சிம் கார்க்கியின் 'தாய்' நாவலை நான் நான்கு முறை படித்திருக்கிறேன். சிறிய வயதிலும் சிறைபட்ட போதும், தூக்கு தண்டனை வழங்கியபோதும் படித்திருக்கிறேன். ஒவ்வொரு காலத்திலும் அது ஒவ்வொரு உணர்வை தந்திருக்கிறது. ஒரு காலகட்டத்திற்கு பிறகுதான் அதனுடன் என் அம்மாவை நான் ஒப்பிட ஆரம்பித்தேன். இதனை நான் அம்மாவிடம் சொல்லியதில்லை. ஏனெனில், எங்களுக்குள்ளான இயல்பான உணர்வு போய்விடக் கூடாது என நினைத்தேன். இந்த நேரத்தில் சொல்ல வேண்டும் என நினைக்கிறேன்.
அப்பா, என் இரு சகோதரிகள், அவர்களுடைய கணவர்களும் காட்டிய அன்பும், பாசமும் தான் இவ்வளவு தூரம் என்னை கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது" என்றார்.
நன்றி: பிபிசி தமிழ்
May be an image of 1 person

தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் கோரிக்கைகள்


தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின்  கோரிக்கைகள்

நிறைவேற்றிட தர்ணா போராட்டம் 17.05.2022 அன்று காலை செங்கற்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது அது தொடர்பான புகைப்படங்களை இங்கே காணலாம்


பகிர்வு மற்றும் செய்திமனிதம் நிறைந்த கவிஞர் கவிதை நிறைந்த மனிதர்

 ஏர்வாடியார் 75

*

மனிதம் நிறைந்த கவிஞர்

கவிதை நிறைந்த மனிதர்

*நல்ல மனிதர்கள் சிறந்த கவிஞர்களாகவோ  சிறந்த மனிதர்கள்  நல்ல கவிஞர்களாகவோ  ஒன்றாக அமைவது அரிது. இந்த இரண்டுமாக இருப்பவர் கவிஞர் ஏர்வாடி ராதாகிருஷ்ணன் அவர்கள். 


அவர் ஒரு வங்கி அதிகாரி. அவரைக் கவிஞராகப் பார்ப்பதற்கு முன் அவருக்குள் இருக்கிற மனிதரைப் பற்றி ஒரு சம்பவத்தின் மூலமாக உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். அவர் பணியில் சேர்ந்த ஆரம்ப வருடங்களில் வங்கியில் கடன் வாங்கிய ஒருவர் பணத்தை திருப்பிக் கட்டவில்லை. அதை வசூல் செய்து வரும் பொறுப்பை உயர் அதிகாரி ராதாகிருஷ்ணன் அவர்களிடம் கொடுக்கிறார். கடன் வாங்கியவருடைய முகவரிக்குச் சென்று அவரைப் பற்றி விசாரிக்கிறார். அவரை சந்திக்கிறார்.  ஒரு அச்சகம் தொடங்குவதற்காக வங்கியிலிருந்து அவர் கடன் பெற்று இருக்கிறார் என்பதை அறிகிறார்.  


கடன் வாங்கிய தொகை முழுவதும் அச்சு இயந்திரத்தை வாங்குவதற்கே செலவாகி விட்டது. மின்சார இணைப்பு கொடுப்பது, அச்சு எழுத்துக்கள் வாங்குவது , அந்த நிறுவனத்தை தொடங்குவதற்கான ஆரம்பச் செலவினங்கள் போன்றவற்றிற்கான பணம் அவரிடம் இல்லை. அச்சு இயந்திரத்தை மட்டும் வாங்கிப் பல மாதங்களாக அது அங்கேயே இருப்பதால்  அவரால் பெற்ற கடனை திருப்பிச் செலுத்த முடியாதது மட்டுமல்ல... அந்த இடத்துக்கு வாடகை கூட கட்ட இயலாத நிலையில் இருக்கிறார்.  வீட்டில் இருக்கிற பணம், நகை போன்றவை அனைத்தையும் இதில் முதலீடு செய்து விட்டார். அவரால் இனி எதுவும் செய்ய முடியாது என்ற நிலையில் இருப்பது ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு நன்றாகத் தெரிகிறது.   


கடன் பெற்ற தொகைக்கு மேலும் கொஞ்சம் பணம் இருந்தால்தான் அந்த நிறுவனம் தொடங்கி செயல்பட முடியும் என்பதை உணர்ந்து தன்னுடைய கைப்பணத்தையும் தன்னுடைய நண்பர்கள் மூலமாகச் சில  உதவிகளையும் பெற்று அந்த அச்சக உரிமையாளருக்குக் கொடுக்கிறார். அதைப் பெற்று அந்த அச்சகம் செயல்படத் தொடங்குகிறது. 

அது மட்டுமல்ல...

முதல் பணியாக தன்னுடைய கவிதை நூல் ஒன்றினை அச்சிடும் பொறுப்பையும் அவரிடம் கொடுக்கிறார். சில மாதங்களில் அந்தப் பகுதியில் ஓரளவு புகழ் பெற்ற நிறுவனமாக அந்த அச்சகம் செயல்படத் தொடங்கிவிட்டது. வங்கிக் கடன் தொகையையும் அவர் மெல்ல மெல்ல செலுத்தத் தொடங்கிவிட்டார். 


வங்கி அதிகாரி ராதாகிருஷ்ணன் அவர்களைப்  பாராட்டியது மட்டுமல்ல... கடன் வாங்கியவரும் நெகிழ்ந்துபோய்  நன்றி கூறினார். வங்கிக்கும் வரவேண்டிய பணம் வந்து விட்டது. கடன் பெற்றவரும்

எதற்காக கடன் பெற்றாரோ அந்தத் தொழிலை த்

தொடங்கி நடத்த முடிந்தது.


ஒரு அதிகாரி ஒரு மனிதனாகவும் இருந்ததால் நடந்த ஒரு நல்ல நிகழ்வு இது. 


சில அதிகாரிகள் விவசாயத்திற்குக் கடன் பெற்ற ஏழை, எளியவர்களிடம் கூட மனிதாபிமானமற்ற முறையில் வீட்டை ஜப்தி செய்வது, டிராக்டரை ஜப்தி செய்வது, வீட்டிலுள்ள பண்ட பாத்திரங்கள் எல்லாவற்றையும் ஜப்தி செய்வது, விவசாயிகளையும் அந்த குடும்பத்தில் இருக்கிற பெண்களையும் தாறுமாறாகப் பேசுவது போன்ற மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளை எடுப்பதை நாம் தொலைக்காட்சி மூலமாகவும் செய்தித்தாள் வாயிலாகவும் அறிகிறோம். பெற்ற கடனைத் திருப்பிக் கொடுப்பதற்கு வசதியிருந்தால் அந்த விவசாயி ஏன் பணம் தராமல் இருக்கப் போகிறார்? இதைப் பற்றி மாதம்தோறும் கைநிறைய சம்பளம் வாங்கும் அந்த அதிகாரிகளுக்குச் சிந்திக்கத் தெரியவில்லை. அவர்களுடைய வாழ்க்கை நல்ல விதமாகப் போகிறது. ஆகவே கடன் பெற்றவரை ஏதோ பிச்சைக்காரனைப் பார்ப்பது போல் பார்க்கிறார்.


ராதாகிருஷ்ணன் போன்றவர்கள் எதிராளியின்  சூழலைச் சிந்திப்பார்களாக இருப்பதனால்தான் இந்த மண்ணில் இன்னும் மழை பெய்துகொண்டிருக்கிறது.


இந்த சம்பவத்தில் ஏர்வாடியார் ஒரு புத்திசாலித்தனமான அதிகாரியாகவும் செயல்பட்டிருக்கிறார்.

ஒரு நல்ல மனிதனாகவும் நடந்து கொண்டிருக்கிறார்


இப்படிப்பட்ட ஈரமான  இதயம் கொண்ட மனிதர் ஒரு கவிஞராக இருப்பதில் என்ன வியப்பு இருக்க முடியும்? 


அவருடைய கவிதைகள் மிகவும் எளிமையானவை. மரபுக் கவிதையோ புதுக்கவிதையோ எந்த வடிவத்தில் எழுதினாலும் படிப்பவர்களைச் சிரமப்படுத்தாத சுலபமான வாக்கியங்களில் எளிமையான சொற்களில் எழுதுகிறவர். உதாரணமாக ஓரிரு வரிகள்:


சிலர் சிறையில் இருக்கிறார்கள் 

சிலர் ஜாமீனில் இருக்கிறார்கள் 

சிலர் சிக்காமல் இருக்கிறார்கள்.

*

விநாயகர் சதுர்த்தி கொண்டாடிவிட்டு விநாயகரைக் கரைப்பது போல் 

தேர்தலைக் கொண்டாடிவிட்டு ஜனநாயகத்தைக் கரைந்து விடுகிறோம்.

*

வானொலி நாடகங்கள் புகழ் பெற்றிருந்த காலத்தில் அதில் தனக்கென ஒரு தடம் பதித்தவர். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், பத்திரிகைக் கட்டுரைகள் போன்றவற்றையும் அவர் விட்டு வைப்பதில்லை.


'மனதில் நின்ற மனிதர்கள்' என்ற தலைப்பில் மாதந்தோறும் 'கவிதைஉறவு' இதழில் அவர் எழுதிவரும் கட்டுரைகளை நான் தொடர்ந்து வாசிக்கிறேன். அவற்றின் மூலம் உயர்ந்த மனிதர்களிடம் இருக்க வேண்டிய பண்புகள் பலவற்றை நாம் கற்றுக் கொள்ளலாம்.


கவிதை உறவு இதழின்  மூலமாகப் பல இளம் கவிஞர்களைத் தமிழ் இலக்கிய உலகத்திற்கு அறிமுகம் செய்துவரும் அரும்பணியினை எந்த ஆடம்பரமும் இல்லாமல், அதன் மூலமாக கிடைக்கும் எந்த  அங்கீகாரத்துக்கும் ஆசைப்படாமல், எவ்வித புகழ்ச்சிக்காகவும்   இல்லாமல் 'இது என் கடமை' என்பதை போல் இயல்பாகச் செய்து வருபவர். 


ஆண்டுதோறும் கல்வி உதவி தேவைப்படும் ஏழை மாணவர்களுக்கு அவரும் நண்பர்கள் மூலமும்  இணைந்து இயன்ற உதவிகள் செய்துவருகிறார். கொரோனா காலகட்டத்தில் 'உதவிக் கூடை' என்ற ஒன்றை அமைத்து  உதவி தேவைப்படும் கலைஞர்களுக்கும் உதவி செய்வதற்குத் தயாராக இருக்கும் நண்பர்களையும் இணைத்து பாலமாக இருந்து உதவி வந்தார். செல்வம், புகழ் இவற்றின் மூலமாக ஒரு மனிதன் எதைச் செய்ய வேண்டுமோ  எதைச் செய்ய இயலுமோமோ அதை ஏர்வாடியார் செய்கிறார்.


பணி ஓய்வு பெற்ற பிறகும்  பரபரப்பாகச் செயல்படும் இளைஞர். தலை நரைத்தாலும் சிந்தனை  நரைக்காத அறிஞர்.


மாதம் தவறாமல் கவிதை உறவு இதழை ஒற்றை மனிதராக அலுக்காமல் கொண்டு வருகிறார். நாளிதழ்களில் வாழ்வியல் கட்டுரைகள் எழுதுகிறார். தொலைக்காட்சி உரைகளை வழங்குகிறார். 


ஆண்டுதோறும் அவருடைய பிறந்த நாளில் தமிழகத்தில் இருக்கிற  படைப்பாளிகளின் பலருக்கும் பரிசு வழங்கி ஒரு திருவிழாப் போல அதை கொண்டாடுகிறார் 


இந்தக் கோடையிலும் கூட அங்கங்கே மழை பெய்து வருகிறது . ஏர்வாடியார் போன்ற மனிதம் போற்றும்

மனிதர்கள் இந்த மண்ணில் வாழ்கிறார்கள். எனவேதான் மழை பொழிகிறது.


உடல் நலத்தோடும்  மன வளத்தோடும் உறவும் நட்பும்  சூழ ஏர்வாடியார்

நூற்றாண்டு காண்க என்று இந்த 75வது பிறந்த நாளில் அவரை அன்புடன் வாழ்த்தி

வணங்குகிறேன்.


அன்புடன் 

பிருந்தா சாரதி 


18.05.2022

*

மீண்டும் மீண்டும் வரலாற்றில் நினைவுகூறத்தக்கது .

 


பேரறிவாளன் என்ற தனிமனிதனின் விடுதலை மட்டுமல்ல கூட்டாச்சித் தத்துவத்துக்கும்,மாநில சுயாட்சி மாண்புக்கும் இலக்கணமாகவும் அமைந்தவிட்ட இந்த தீர்ப்பு  மீண்டும் மீண்டும்  வரலாற்றில் நினைவுகூறத்தக்கது . அது மட்டுமில்லாமல்  மாநில அரசின் முடிவில் ஆளுநர் எல்லை தாண்டி தலையிட அதிகாரம் இல்லை என்பது உறுதியாகி இருக்கிறது.  - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி

பேரறிவாளன் விடுதலை

 பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கு சுப்ரீம்கோர்ட் நீதிபதி நாகேஸ்வராவ் தலைமையிலான அமர்வு முன் விசாரணை நடைபெற்று வருகிறது. முன்னதாக கடந்த 11ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, நீதிபதிகள் ‘‘கடந்த முறை இந்த வழக்கு விசாரனைக்கு வந்தபோது, பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் மத்திய அரசுக்கு இரண்டு வாய்ப்புகள் வழங்கினோம். அதில் ஏதேனும் முடிவு செய்து உள்ளீர்களா?’’ என கேள்வி எழுப்பினர். அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நடராஜ், இந்த வழக்கில் சில வாதங்களை முன்வைக்க உள்ளதாக கூறினார். அப்போது நீதிபதிகள், கவர்னர் அமைச்சரவை முடிவை ஜனாதிபதிக்கு அனுப்ப அதிகாரம் உள்ளதா? என்று கேள்வி எழுப்பினர்.

இதனையடுத்து மத்திய அரசு வழக்கறிஞர், ‘‘இந்த வழக்கில் விடுதலை தொடர்பான அதிகாரம் 72-வது அரசியல் சாசனத்தின்படி மத்திய அரசுக்கு மட்டுமே உள்ளது. ஓரு வழக்கின் விசாரணையை எந்த விசாரணை அமைப்பு மேற்கொள்கிறதோ, அதைப் பொறுத்தே அதில் முடிவெடுக்கும் அதிகாரம் யாருக்கு என்பது முடிவு செய்யப்படும். எனவே இவ்வழக்கில் மத்திய அரசின் விசாரணை அமைப்புகள் விசாரணை நடத்தியதால் இந்த வழக்கில் நிவாரணம் வழங்கும் அதிகாரம் மத்திய அரசுக்கே உண்டு. அதன்படி மாநில அரசின் வரம்புக்குள் வரும் அமைப்புகள் விசாரித்து அதில் தண்டனைப்பெற்றவர்களை, தண்டனை காலத்துக்கு முன்னரே விடுவிப்பது தொடர்பான முடிவை மாநில அரசு எடுக்கலாம். ஆனால் பேரறிவாளன் விவகாரத்தில் அவ்வாறு இல்லை’’ என்று வாதிட்டார்.

தொடர்ந்து நீதிபதிகள், தமிழக அமைச்சரவையின் முடிவை ஜனாதிபதிக்கு கவர்னர் அனுப்பி வைத்த போது என்னென்ன சட்டப்பிரிவுகளின் கீழ் அதிகாரம் இருக்கிறது என்ற விவரங்களை ஏன் குறிப்பிடாமல் அனுப்பி வைத்துள்ளார்? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு தமிழக அரசு தரப்பில், கவர்னரே இந்த விவகரத்தில் கையெழுத்திட்டு முடித்திருக்க வேண்டும், ஆனால் அதைவிடுத்து ஜனாதிபதிக்கு அனுப்பி, அவரையும் இந்த வழக்கினுள் இழுத்து விட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், அமைச்சரவையின் முடிவிற்கு கையொப்பம் இட வேண்டியது கவர்னரின் வேலை. ஆனால் அதனை செய்யாமல் ஆவணங்களை கிடப்பில் போட்டு வைத்திருந்தார் எனவும் பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் தமிழக அமைச்சரவையின் முடிவை ஏற்றுக் கொள்ளாததன் மூலம் மிகப்பெரிய அரசியல் சாசன பிழையை தமிழக கவர்னர் செய்துவிட்டதாக தெரிவித்தார்.

இதையடுத்து, இந்த வழக்கின் மற்ற வாதங்களை அனைத்து தரப்பும் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் இந்த வழக்கை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக ஒத்திவைத்து உத்தரவிட்டிருந்தனர். 

இந்நிலையில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளனை விடுவிக்க கோரிய வழக்கில் சுப்ரீம்கோர்ட்டு நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வு பேரறிவாளன் வழக்கில் தீர்ப்பு வழங்கினர்.

பேரறிவாளன் விடுதலை கோரிய வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் நாகேஸ்வராவ், பி.ஆர்.கவாய், ஏ.எஸ்.போபண்ணா தீர்ப்பை வாசித்தனர்.

அதில், 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்த நிலையில் பேரறிவாளனை விடுவித்தது சுப்ரீம் கோர்ட்டு ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனை சுப்ரீம் கோர்ட்டு விடுதலை செய்தது
Thanks:dailythanthi

Tuesday, May 17, 2022

இரண்டு கால்களும் பாதிக்கப்பட்ட நிலையில்மாணவி சிந்துக்கு பரீட்சை எழுத ஆம்புலன்ஸ் வசதி

May be an image of 5 people and people standing

 மாடியில் இருந்து தவறி விழுந்து இரண்டு கால்களும் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது வீட்டில் படுத்த படுக்கையாக இருக்கிறார் சிந்து. தனது 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை தந்தையின் உதவியுடன் எழுதிக் கொண்டிருக்கிறார். இவரின் நிலையை அறிந்து அவருடைய கல்விச் செலவையும், மருத்துவச் செலவையும் தமிழக அரசு ஏற்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். அவரை சமீபத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவருடைய இல்லத்தில் சந்தித்து சிந்துவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியிருக்கிறார்.

சிந்துசிந்து
சிந்துவின் தந்தை சக்தி கடை கடையாக சென்று டீ வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார். அதுவரை செக்யூரிட்டியாக வேலை பார்த்து வந்த சிந்துவின் தாய் தேவி வேலையை விட்டுவிட்டு சிந்துவை பார்த்துக் கொள்கிறார். பத்தாம் வகுப்பு வரையில் சுட்டிப் பெண்ணாக வலம் வந்துக் கொண்டிருந்தவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஒரே அறைக்குள் முடங்கிக் கிடக்கிறார். இரண்டு கால்களிலும் ஏகப்பட்ட ஆப்ரேஷன் செய்தும் அதற்கான பலன் எதுவும் கிடைக்கவில்லை. அவருடைய காலில் சீழ் வடிந்த வண்ணம் இருக்கின்றன. அந்த சீழ் வடிவதற்கு காலில் வைக்கப்பட்ட பிளேட் தான் காரணம் எனக் கூறி அதனை அகற்றியும் பார்த்திருக்கிறார்கள். ஆனால், இன்று வரை சீழ் குணமாகவில்லை.
கால் எலும்பு கூடுவதற்கும், சீழ் வருவதை சரி செய்வதற்கும் மருத்துவ ரீதியாக ஏதாவது உதவி செய்தால் நன்றாக இருக்கும் என சிந்து எதிர்பார்க்கிறார். அவர் கீழே விழுந்ததில் அவருடைய வாய்ப்பகுதியும் சேதமடைந்திருக்கிறது. சாப்பிடக் கூட முடியாமல் தவிக்கிறார். வாயை சரி செய்ய வேண்டுமெனில் அதற்கு முதலில் காலையும், சீழ் வடிதலையும் சரி செய்ய வேண்டும் என்கிறார்களாம் பல் மருத்துவர்கள். வாலிபால் பிளேயர் ஆக வேண்டும் என்கிற ஆசையோடும், மிலிட்டரியில் வேலை பார்க்க வேண்டும் என்கிற லட்சியத்துடனும் இருந்தவரின் வாழ்க்கை இந்த அளவிற்கு தலைகீழாய் மாறும் என அந்தக் குடும்பத்தில் ஒருத்தரும் நினைத்திருக்க மாட்டார்கள்.
அமைச்சர் மா. சுப்பிரமணியன் சிந்துவின் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறியபோது, சிந்துவும் அவரது தந்தை சக்தியும் தேர்வு எழுத சென்று வருவதற்கு ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்திக் கொடுத்தால் உதவியாக இருக்கும் என்று கோரிக்கை வைத்திருந்தனர். தமிழக அரசு அவர்களுடைய கோரிக்கைகளை ஏற்று ஆம்புலன்ஸ் வசதி செய்து கொடுத்திருக்கிறது.
நன்றி: விகடன்
May be an image of 5 people and people standing
1

Featured Post

பூக்களால் உருவாக்கப்பட்ட வீடு.

  பூக்களால் உருவாக்கப்பட்ட வீடு.. கண்ணை கவரும் உதகை ரோஜா மலர் கண்காட்சி ! நீலகிரியில் ஆண்டுதோறும்  கோடை விழாவின் ஒரு பகுதியாக நடைபெறும்  ரோஜ...