Tuesday, November 30, 2021

பழசி ராஜா

 பழசி ராஜா மரணித்த நாளின்று!


😢
கேரளமண்ணிலே பதினெட்டாம் நூற்றாண்டிலே முதல்முதலில்யே பிரிட்டிஷ் ஆதிக்கத்தை எதுத்து போராடின ஒரு மன்னரிவர்…
வீர கேரள வர்மா பழசி ராஜாங்கிறது அவரோட முழுப்பேரு. ‘வயநாட்டுச்சிங்கம்’ நு அவருக்கு பட்டப்பேருண்டு. இப்ப உள்ள கோட்டயம் பகுதியிலே மன்னரா இருந்தார். ஆரம்பத்திலே அவர் பிரிட்டிஷ்காரங்களுக்கு ஆதரவாத்தான் இருந்தார். திப்புசுல்தானை எதுத்து பிரிட்டிஷ் படைகள் போர்செய்தப்போ அவர் அதுக்கு ஆதரவு தெரிவிச்சார்.
ஆனா போர் முடிஞ்சதுமே பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் மத்த ராஜாக்கள் மேலே கடுமையான வரிகளைச் சுமத்த ஆரம்பிச்சாங்க. அதுக்கு எதிரா போராடின பழசி ராஜாவுக்கு மத்த ராஜாக்களோட உதவிகள் கிடைக்கல்லை. ஆனாலும் அவர் தன்னந்தனியா நின்னு போராடினார். கட்டாய வரிவசூலை அவர் எதிர்த்தார். அதனால அவரை பிரிட்டிஷ்காரங்க எதிரியா நினைக்க ஆரம்பிச்சாங்க.
லெப்டினெண்ட் கோர்டான் தலைமையிலே அவரது அரண்மனையை தாக்கி அதை சூறையாடினாங்க. அதுக்கு முன்னாடியே அவர் ஊரைவிட்டு போயிருந்தார். தன் படையோட மலைப்பகுதியான வயநாட்டுக்குப்போய் இன்னைக்குள்ள மானந்தவாடி பக்கம் மலைகளுக்குள்ள முகாமிட்டு அங்க உள்ள ஆதிவாசிகளான குறிச்சியரை ஒண்ணாச் சேத்து ஒரு நல்ல படையை உண்டு பண்ணினார்.
பிரிட்டிஷார் அவரை பிடிக்க பலதடவை முய்ற்சிசெய்ஞ்சாங்க. முடியலை. அதனாலே அவர்கிட்ட சமாதானம் பேசினாங்க. ஆனா சமாதானம்கிற பேரிலே அவங்க போட்ட நிபந்தனைகளை பழசிராஜா ஏத்துக்கலை. அவர் மலைக்குப்போய் கொரில்லா முறையிலே போராட ஆரம்பிச்சார். அவரோட ஆதரவாளர்களான சுழலி நம்பியார், பெருவயல்நம்பியார், கண்ணவத்து நம்பியார் முதலிய நிலப்பிரபுக்களையெல்லாம் பிரிட்டிஷ்காரங்க பிடிச்சு ஜெயிலிலே போட்டாங்க. 1802லே அவரோட முக்கிய தளபதியான எடச்சேன குங்கன் நாயரும் இன்னொரு தளபதியான தலைக்கல் சந்துவும் சேந்து பனமரம் கோட்டையை கைப்பற்றி 70 பிரிட்டிஷ் துருப்புகளைக் கொன்னாங்க. அது பிரிட்டிஷ்காரங்களை பதற வைச்சுது. மும்பையிலே இருந்து இன்னும் படைகளை வரவழைச்சு அந்த எதிர்ப்பை அழிக்க திட்டம்போட்டாங்க.
1804லே கர்னல் மாக் லியோட் பழசிராஜாவை பிரிட்டிஷ் எதிரியா அறிவிச்சு தலைக்கு விலை வைச்சார். அவரைப்பற்றி தகவல்களை மறைக்கிரவங்களுக்கும் தூக்குத்தண்டனைன்னு அறிவிச்சார். 1804ல் தலைச்சேரிக்கு சப்கலக்டரா வந்த தாமஸ் ஹார்வி பாபர் பழசிராஜா விஷயத்தை கொஞ்சம் மென்மையா கையாளனும்னு நெனைச்சவர். ஆனால் பிரிட்டிஷ் படைகள் ரொம வெறியோட இருந்தாங்க. 1805 அக்டோபரிலே தலைக்கல் சந்து பிடிபட்டார். 1805 நவம்பர் 30 ஆம்தேதி பாபரின் படைகள் வயநாடு மலைகளில்கே பழசி ராஜாவைச் சூழ்ந்து தாக்கினாங்க. கடுமையான துப்பாக்கிச்சண்டைக்கு முன்னாடி பழசிராஜாவோட அம்புகளால பெரிசா ஒண்ணும் செய்ய முடியல்லை. சுட்டுக்கொன்னுட்டாங்க. அதோட அந்த கலகம் முடிவுக்கு வந்தது
பழசிராஜாவோட உடலை பாபர் தலைசேரிக்குக் கொண்டுட்டுபோய் உரிய மரியாதையோட அடக்கம்செய்தார். ‘நம்ம எதிரியா இருந்தாலும் அவர் ஒரு பெரிய வீரன்’ அப்டீன்னு தன் மேலிடத்துக்கு அவர் எழுதியிருக்கார்.
இந்த பழசிராஜாதான் கேரள சரித்திரத்திலே முதல் முதலா பிரிட்டிஷ் படைகள் கூட போராடினவர். இவர் கதையை கோகுலம் சிட்பண்ட் ஓனர் படமாகக் கூட எடுத்தார்
 Subash

கணினி பாதுகாப்பு தினம்...!.

 கணினி பாதுகாப்பு தினம்...


!.

💻 கணினி பாதுகாப்பு தினம் 1988ஆம் ஆண்டில் தொடங்கியது. கணினிகள் அந்நாட்களில் வீடுகளில் காணப்படாவிட்டாலும் கூட, அவை பொதுவானதாகிவிட்டன. 1980களில் கணினிகளின் பயன்பாடு குறிப்பாக வணிகத்திலும், அரசாங்கத்திலும் தான் அதிகரித்து இருந்தது. அதோடு இணையம் பயன்படுத்த ஆரம்பித்த காலமாக இருந்தது.
💻 இந்த நாட்களில், ஸ்மார்ட் போன்கள், டேப்லெட்டுகள் மற்றும் கணினிகள் போன்ற மின்னணு சாதனங்கள் நம் அன்றாட வாழ்க்கையின் ஒரு முக்கிய அங்கமாக அமைந்தது. முன்பை விட தகவல்தொடர்பு எளிதாகவும், திறமையாகவும் மாறிவிட்டாலும், இந்த தொழில்நுட்ப முன்னேற்றங்கள் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு குறித்த புதிய பிரச்சனைகளையும் கொண்டு வந்துள்ளன. உங்கள் ஆன்லைன் தரவைப் பாதுகாக்கவும், பாதுகாப்பாக வைத்திருக்கவும் ஒரு விடுமுறை கூட அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. எனவே கணினி பாதுகாப்பு தினம் ஆண்டுதோறும் நவம்பர் 30ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

திருச்செந்தூர் முருகன் பாடல்| எல்லாம் | கவிஞர் ச.பொன்மணி

 முருகுதமிழ் | 52.திருச்செந்தூர் முருகன் பாடல்| எல்லாம் | கவிஞர் ச.பொன்மணி |
கவிஞர் ச.பொன்மணி


மனைவியின் கேள்வி|உறவு கவிதை/இன்றைய நயினாரின் உணர்வுகளில்

 இன்றைய நயினாரின் உணர்வுகளில்


மனைவியின் கேள்வி|உறவு கவிதை|kanavan manaivi kavithai|husband wife|tamil kavithai|Nynarin Unarvugal

Nynarin Unarvuga

மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவர்களின் கல்வி உதவித்தொகை திட்டங்களுக்கான பெற்றோர்களின் வருமான வரம்பு ₹2 லட்சத்திலிருந்து ₹2.5 லட்சமாக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை!

 🦉
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவர்களின் கல்வி உதவித்தொகை திட்டங்களுக்கான பெற்றோர்களின் வருமான வரம்பு ₹2 லட்சத்திலிருந்து ₹2.5 லட்சமாக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை!இந்த அரசாணையின் மூலம் பள்ளி மேற்படிப்பு பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை உயர்வதோடு, பள்ளி கல்லூரி இடைநிற்றலை தவிர்க்கவும் உதவும் என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது

மரமல்லியின் மருத்துவப் பயன்கள்/ டாக்டர் ரேவதி அவர்களின் இயற்கை வைத்தியம்

 டாக்டர்  ரேவதி அவர்களின் இயற்கை வைத்தியம்


மரமல்லியின் மருத்துவப் பயன்கள்
மரமல்லியின் மருத்துவப் பயன்கள் | Health Benefits of Tree Jasmine or Indian cork treeDr.S.Revathi's Vlog

'83’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீடு

 '83’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீடு1983 ஆம் ஆண்டு இந்திய அணி உலகக்கோப்பையை வென்றதையும், கபில்தேவின் வாழ்க்கை வரலாற்றையும் அடிப்படையாக கொண்ட படம் 


கபில்தேவ்வாக ரன்வீர் சிங், தமிழக வீரர் ஸ்ரீகாந்தாக ஜீவா நடித்துள்ளனர்


வருகிற டிசம்பர் 24 ஆம் தேதி ரிலீஸ் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட 4 மொழிகளில் வெளியாகிறது

பராக் அகர்வால்

: யார் இந்த பராக் அகர்வால்? இளம் வயதிலேயே இந்தியர் ஒருவர் டுவிட்டரின் சிஇஓவானது எப்படி?சர்வதேச நிறுவனங்கள், முக்கியமாக அமெரிக்காவின் டாப் நிறுவனங்களில் இந்தியர்கள்தான் சிஇஓ உள்ளிட்ட உயர் பொறுப்புகளில் நியமனம் செய்யப்பட்டு வருகிறார்கள். மைக்ரோசாப்ட் சிஇஓவாக சத்யா நாடெல்லா, கூகுள் சிஇஓவாக தமிழரான சுந்தர் பிச்சை, ஐபிஎம் உள்ளிட்ட மற்ற பெரிய நிறுவனங்களின் சிஇஓவாகவும் இந்தியர்களே உள்ளனர். 

பிரபல சமூக வலைதள நிறுவனமான டுவிட்டரின் சிஇஓ பதவியிலிருந்து ஜான் டோர்சி விலகியதையடுத்து புதிய தலைமை செயல் அதிகாரியாக  இந்தியாவை சேர்ந்த பராக் அகர்வால் பொறுப்பேற்றுள்ளார். 


சமூக வலைதளங்களில் ஒன்றான டுவிட்டரை பிரபலங்கள் பலரும் உலகளவில் பயன்படுத்தி வருகின்றனர். முக்கிய தகவல் பரிமாற்ற தளமாகவும் ட்விட்டர் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் ட்விட்டர் சிஇஓ பதவியை ஜேக் டார்ஸி நேற்று ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து டுவிட்டர் நிறுவனத்தில் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக (சிடிஓ) இருந்த பராக் அகர்வால் டுவிட்டரின் புதிய சிஇஓவாக அறிவிக்கப்பட்டுள்ளார்.


இந்தியாவில் பிறந்த பராக் அக்ரவால், மும்பை ஐஐடியில் பிடெக் பிரிவில் கம்யீட்டர் சைன்ஸ் பயின்றார். பின்னர் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பயின்றார். அங்கேயே பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றி பின் அங்கேயே குடியுரிமை பெற்று குடியேறினார். பின்னர் மைக்ரோசாப்ட் நிறுவனம், யாஹூ நிறுவனங்களில் சிறிய அளவிலான எஞ்சினியர் தொடங்கி பெரிய அளவிலான டீம் லீடர் பொறுப்புகளை கூட வகித்து இருக்கிறார்.


கடந்த 2011ஆம் ஆண்டு டுவிட்டர் நிறுவனத்தில் மென்பொறியாளராக வேலையில் இணைந்தார். அந்நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்பத் தலைவர் ஆக இருந்த ஆடம் அப்பதவியில் இருந்து விலகியதை அடுத்து மார்ச் 8, 2018ல் பராக் அக்ரவால் ட்விட்டரின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக (CTO) பொறுப்பேற்றார். இப்போது 2021 நவம்பரில் பராக் அகர்வால், டுவிட்டரின் சிஇஓவாக பதவி ஏற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

சர்வதேச நிறுவனங்கள், முக்கியமாக அமெரிக்காவின் டாப் நிறுவனங்களில் இந்தியர்கள்தான் சிஇஓ உள்ளிட்ட உயர் பொறுப்புகளில் நியமனம் செய்யப்பட்டு வருகிறார்கள். மைக்ரோசாப்ட் சிஇஓவாக சத்யா நாடெல்லா, கூகுள் சிஇஓவாக தமிழரான சுந்தர் பிச்சை, ஐபிஎம் உள்ளிட்ட மற்ற பெரிய நிறுவனங்களின் சிஇஓவாகவும் இந்தியர்களே உள்ளனர். உலகின் டாப் 500 நிறுவனங்களின் சிஇஓக்களில் பராக் அகர்வாலும், மார்க் ஜூக்கர்பர்கும் மிகவும் இளமையானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 
மினி பேருந்து சேவை இன்று தொடக்கம்

 🦉மினி பேருந்து சேவை இன்று தொடக்கம்*சென்னை, மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து 12 மினி பேருந்துகள் சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்


*மெட்ரோ ரயில் பயணிகளின் வசதிக்காக கூடுதலாக மினி பேருந்து சேவை இன்று தொடக்கம்


இந்த சேவையை  முதலமைச்சர்  தொடங்கி வைத்தார். ஆலந்தூர்-மடிப்பாக்கம், போரூர், விமான நிலையம்-குன்றத்தூர், கோயம்பேடு-மதுரவாயில் ஏரிக்கரைக்கு மினி பேருந்து சேவை தொடங்கப்பட்டது. திருவொற்றியூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து மணலிக்கும் மினி பேருந்து சேவை தொடங்கப்பட்டது. மேலும், லடாக் –காரகோரம் கணவாயிலிருந்து மலரி வரை பனிச்சருக்கு மூலம் இந்திய ராணுவ வீரர்கள் சென்ற குழுவில் பங்கேற்ற திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ராணுவ வீரர் கேப்டன் எஸ்.குபேர காந்திராஜ்-ன் சாதனையை கெளரவித்து பாராட்டு சான்றிதழை முதலமைச்சர் வழங்கினார்.
ஜெகதீஷ் சந்திர போஸ்

 🦉இந்தியாவின் முதல் விண்ணலை அறிவியலாளர் ஜெகதீஷ் சந்திர போஸ் பிறந்த நாள் இன்று!ஒரு சராசரி இந்தியக் குடும்பத்தில் பிறந்த 'போஸ்' விஞ்ஞானி .போஸ் ஆக உதவியது பெரும்பாலும் பிரிட்டிஷார்கள். படிப்பில் இவருக்குள்ள அக்கறையைப் பார்த்து வியந்து அவரை இங்கிலாந்து அனுப்பி அங்கு நாலைந்து பட்ட படிப்புகளை படிக்க உதவி செய்தார்கள்


அப்படி அங்குப் படித்துக் கொண்டிருக்கும் போதே கண்டுப் பிடித்த அரிய டெக்னாலஜிதான் இன்றைய இந்திய ஊழலுக்கு அச்சாரமாகும்! என்ன புரிய வில்லையா?


உலகம் முழுவதுமுள்ள விஞ்ஞானிகள் பலர் மனித இனத்திற்கு நன்மை பயக்கக் கூடிய வகையில் கண்டு பிடித்த வானொலி,தொலைக்காட்சி, தொலைக் காட்சிக்குத் தேவையான அலைவாங்கி(Antenna), தொலைபேசி, கம்பியில்லாமல் தந்தி அனுப்பும் முறை, விமான நிலையக் கட்டுப்பாடு அறையில் செயற் படுத்தப்படும் 'ராடார்' தொழில் நுட்பங்கள் போன்ற அனைத்திற்கும் தேவையான அடிப்படை மின்னோட்ட, 'மின்னியல்'கண்டுபிடிப்புகளை நம்ம .போஸ் தான் கண்டு பிடித்தார்.


ஆனால் அந்தோ பரிதாபம், இவர் தனது கண்டு பிடிப்புகளை 'ஏனைய விஞ்ஞானிகள்' போல் இரகசியமாக வைத்துக் கொள்ளாமல், இங்கிலாந்திலும், பிரிட்டிஷ் இந்தியாவிலும் தன்னோடு உடன் படித்த மாணவர்கள், மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பகிரங்கமாக வெளியிட்டார்.


இவரது கண்டுபிடிப்புகளை அடிப்படையாக வைத்தே விஞ்ஞானி 'மார்க்கோனி' வானொலிப் பெட்டியையும்', கிரஹாம் பெல் தொலைபேசியையும் கண்டுபிடிக்க முடிந்தது.


சாதாரணமாக எமது வீடுகளில் ஒலிக்கும் 'அழைப்பு மணி'கூட(Calling bell) யாரால் கண்டு பிடிக்கப் பட்டது? என்று வரலாற்றின் பக்கங்களில் தேடினால் 'ஜோசப் ஹென்றி' என்ற பெயரே நமக்கு விடையாகக் கிடைக்கும் அவர்தான் இதைக் கண்டு பிடித்தார் என்பது உண்மையே, ஆனால் மிகவும் கடினமான செயற் பாடுகளின் மூலம் இயக்கக் கூடிய அந்தத் தொழில் நுட்பத்தை இலகுபடுத்திய/நவீனப் படுத்திய பெருமை போஸ்ஸையே சாரும்.


இந்த போஸ் கண்டு பிடித்த டெக்னாலஜிபடிதான் இப்போது அலைபேசி கூட சாத்தியமாகி இருக்கிறது. அதாவது இந்த 2ஜி - 3 ஜி- 4ஜி க்கெல்லாம் வித்திட்டவர் போஸ்தானாம்!


இதற்கிடையில் போஸ் தனது கண்டு பிடிப்புகள் எவற்றிற்குமே காப்புரிமை வாங்காமல் இருந்துவிட்டார். இது வரலாற்றில் அவர் விட்ட மாபெரும் தவறு என்று பல அறிவியல் நிபுணர்களாலும் இன்றும் கருதப் படுகிறது.


இத்தகைய விமர்சனங்களுக்கு .போஸ் பதில்தான் என்ன? "நான் எனது கண்டுபிடிப்புகளை மனித இனத்திற்கு நன்மை பயப்பதற்காகவே கண்டுபிடித்தேன், இதன்மூலம் 'கோடி ரூபாய்கள்' கிடைக்கும் என எதிர்பார்த்து நான் ஆராய்ச்சிகளில் இறங்கியதில்லை.இந்த மனித இனத்திற்கு எனது கண்டுபிடிப்புகளால் நன்மை கிடைக்குமானால் அதுவே நான் இம்மண்ணில் பிறப்பெடுத்தமைக்கான பயனாகும்" எனக் கூறினாராம். ஹும். இப்படியும் சில மனிதர்!

Monday, November 29, 2021

முக்கியமான வீட்டுக் குறிப்புகள்..

 

வீட்டில் உள்ள நம் அனைவருக்கும் தெரிந்திருக்க வேண்டிய சில முக்கியமான வீட்டுக் குறிப்புகள்...

.


வெள்ளி ஆபரணங்களுடன் சிறிது கற்பூரத்தைப் போட்டு வைப்பதால் வெள்ளி ஆபரணங்கள் கறுப்பாவதைத் தடுக்கலாம்.
வீட்டில் எறும்புப் புற்று இருந்தால் அங்கே கொஞ்சம் பெருங்காயத் தூளைத் தூவிவிட்டால் எறும்புத் தொல்லை இருக்காது.
ஒரு டம்ளர் தண்ணீரில் நான்கு ஸ்பூன் டேபிள் உப்பு கலந்து அதை அறையின் நான்கு பக்க ஓரங்களில் தெளித்துவிட்டால் எறும்பு நடமாட்டம் இருக்காது.
குத்துவிளக்கு, காமாட்சி அம்மன் விளக்கின் மேல் நுனியில் ரப்பர் பேண்டைச் சுற்றிப் பூ வைத்தால் கீழே விழாது.
துணிகளில் எண்ணெய் கறையோ, கிரீஸ் தாரோ பட்டு விட்டால் அவற்றைத் துவைக்கும் போது சில சொட்டுக்கள் நீலகிரித் தைலம் விட்டுக் கழுவினால் கறைகள் போய்விடும்.

6. எவர்சில்வர் பாத்திரங்கள் நாளடைவில் பளபளப்பு மங்கினால் வாரத்துக்கு ஒரு முறை விபூதியைக் கொண்டு நன்கு தேய்த்து வாருங்கள். வெள்ளிப் பாத்திரங்கள் போல் மின்னுவதைப் பார்க்கலாம்.

7. அசைவம் சமைத்த பிறகு பாத்திரங்களில் வீசும் துர்நாற்றத்தை நீக்கப் பாத்திரங்களில் சிறிதளவு புளியைத் தடவிப் பிறகு வழக்கம் போல் கிளீனிங் பவுடர் போட்டுத் தேய்க்க வேண்டும்.

8. உங்கள் பிளாஸ்டிக் பக்கெட் ஓட்டையாகி விட்டால் அதைக் கவிழ்த்து பழைய டூத் பிரஷைத் தீயில் காட்டி உருகும் திரவத்தை அந்த ஓட்டை மீது படியச் செய்யவும். ஓட்டை அடைபடும்.

9. எப்பொழுதாவது உபயோகிக்கும் “ஷூ”க்களில் ரசகற்பூர உருண்டை ஒன்றை ஒவ்வொரு “ஷூ”விலும் போட்டு வைத்தால் பூச்சிகள் அணுகாது.
ஷாம்பு வரும் சிறு பிளாஸ்டிக் கவர்கள் காலியானதும் அவற்றைத் துணிகளை ஊறவைக்கும் போது அதனுடன் போட்டு ஊறவைத்தால் துணி வாசனையாக் இருக்கும்.

11. பிரஷர் குக்கரை உபயோகபடுத்தாத நேரங்களில் மூடி வைக்கக் கூடாது.

12. பிரிட்ஜ் இல்லாதவர்களுக்கு இட்லி மாவு, தோசை மாவு புளித்துப் போகாமல் தடுக்க அரைத்த மாவை பிளாஸ்டிக் டப்பா அல்லது பக்கெட்டில் போட்டு மூடினால் புளித்துப் போகாமல் இருக்கும்.

13. வீட்டில் குளிர்சாதனப் பெட்டி இல்லாதவர்கள் காய்கறிகளின் மீது ஈரத் துணியைப் போட்டு மூடி வையுங்கள். வாடாமல் இருக்கும்.

14. பொருட்களை கறையான் அரிக்காமல் இருக்க கற்பூரத்தைப் பொடி செய்து தூவி வையுங்கள்.

15. வெள்ளி சாமான்களை பீரோவில் வைக்கும்போது அதற்குள் கற்பூரத்தைப் போட்டு வைப்பது நல்லது.

16. அசைவம் சமைத்த பிறகு பாத்திரங்களில் வீசும் துர்நாற்றத்தை நீக்கப் பாத்திரங்களில் சிறிதளவு புளியைத் தடவிப் பிறகு வழக்கம் போல் கிளீனிங் பவுடர் போட்டுத் தேய்க்க வேண்டும்.

குழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கலை சரிசெய்வது எப்படி

*குழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கலை சரிசெய்வது எப்படி?* குழந்தைகளுக்கு உணவு தருவதில் மட்டுமே கவனமாக இருந்தால் போதாது. சாப்பிட்ட உணவு சரியாக செரிமானமாகி, மலமாக வெளியேறுகிறதா எனக் கவனிப்பதும் முக்கியம். ஏனெனில் செரிக்கப்பட்ட உணவிலிருந்து சத்துகள் உறிஞ்சப்பட்ட பின் மீதமுள்ள கழிவானது உடலிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும். இது சரியாக நடக்காவிட்டால் குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்படும். மலம் வெளியேறாமல் கஷ்டப்படும் குழந்தைகளுக்கு மலச்சிக்கலைத் தவிர்க்கும் வழிகளை முறையாக பின்பற்றினாலே போதும். மலச்சிக்கல் பிரச்னை நீங்கிவிடும்; குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்கும்.


மலச்சிக்கல் ஏற்படுவதற்கான காரணங்கள் என்னென்ன?


 

பொதுவாகவே ஒரு வயதுக்கு கீழ் தாய்ப்பால் மட்டுமே குடித்து வளரும் குழந்தைகளுக்கு மலம் கழிப்பதில் பெரிதாக சிக்கல் ஏற்படுவதில்லை. தாய்ப்பால் குடிக்கும் குழந்தை மலம் கழிக்காவிட்டால் அது குழந்தைக்கு சரியாகப் பால் கிடைக்காததன் அறிகுறியாக இருக்கலாம். பசும்பால், பாக்கெட் பால் மற்றும் இதர உணவுகளைக் குழந்தைச் சாப்பிட தொடங்கியவுடன்தான்  மலச்சிக்கல் ஆரம்பமாகிறது.


எப்படிக் கண்டுபிடிப்பது?


தொடர்ச்சியாக 2 அல்லது 3 நாள்கள் மலம் கழிக்காமல் இருத்தல்

மலம் கழிக்கும்போது, வலி ஏற்பட்டு அழுவது

மலம் கழிக்க மறுத்து, ஆத்திரமடைவது

மலம் கழிக்க வேண்டுமென்ற பயத்தில் சாப்பிட மறுப்பது

பசியின்மை

எடை குறைவு

மலம் கழிக்கும்போது முகத்தைச் சுருக்கி முக்குவது

மலம் கழிக்க முயற்சி செய்தும் மலம் வெளியேற முடியாமல் குழந்தை அழுவது

மலம் இறுகி வெளியேறும்போது அதில் காணப்படும் ரத்தக் கசிவு

அடிவயிற்றில் வலி

இது போன்ற அறிகுறிகள் இருந்தால் அது மலச்சிக்கலாக இருக்கலாம்.


மலச்சிக்கலைத் தீர்க்க எளிய வழிகள்


உணவு மாற்றம் அவசியம்:


மலச்சிக்கலை சரிப்படுத்த நார்ச்சத்தும் நீர்ச்சத்தும் நிறைந்த உணவுகளை சரியான விகிதத்தில் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும்.


கேரட், முருங்கைக்காய், தினம் ஒரு கீரை வகைகளோடு நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்துள்ள காய்களான வெண்டைக்காய், அவரைக்காய், சுரைக்காய், முள்ளங்கி போன்றவற்றை உணவில் சேர்க்க வேண்டும். குழந்தைகளுக்கு மேற்சொன்ன காய்களை நன்கு மசித்துத் தரலாம். பற்கள் இருக்கும் குழந்தைகளுக்கு நன்கு மென்று சாப்பிட சொல்லி வலியுறுத்துங்கள்.


வாழைப்பழம் சிறந்த மலமிலக்கியாக செயல்படும். வாழைப்பழத்தை தனியாகச் சாப்பிட பிடிக்காத குழந்தைகளுக்கு பாலுடன் சேர்த்து தரலாம். குழந்தைகளின் மலச்சிக்கலைத் தீர்க்க மலை வாழைப்பழம் பெஸ்ட்.


இரவு ஊறவைத்த 5-10 உலர்திராட்சைகளைக் காலை மற்றும் மாலையில் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.


பேரீச்சை – 2, அத்திப்பழம் – 1 ஆகியவற்றைத் தண்ணீரில் ஊறவைத்து காலையில் நன்கு மசித்துக் கொடுக்கலாம்.


கேரட்டை அரைத்து சாறெடுத்து அதனுடன் எலுமிச்சை சாறு பிழிந்து தரலாம்.


அரிசி உணவை மட்டுமே கொடுக்காமல் உணவில் சிறுதானியங்களைச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.


மைதாவால் செய்யப்பட்ட பரோட்டா மற்றும் துரித உணவுகளைக் கட்டாயமாகக் குழந்தைகளுக்குக் கொடுக்கக் கூடாது.


மலச்சிக்கலைத் தடுக்கும் தண்ணீர்:


விளையாட்டு ஆர்வத்தில் குழந்தைகள் தண்ணீர் குடிக்க மறந்தாலும்கூட தேவையான தண்ணீரைக் குடிக்க பழக்க வேண்டியது அவசியம்.


தினமும் தூங்கி எழுந்த பின் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீரைக் குடிக்க கொடுங்கள். இதனால் வயிற்றில் உள்ள கழிவுகள் வெளியேறும். உணவு சாப்பிட்ட அரை மணி நேரத்துக்கு பிறகு ஒரு டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீர் கொடுக்கலாம். இது குழந்தையின் செரிமானத்தைத்  தூண்டி மலச்சிக்கலைத் தடுக்கும்.

*பூண்டு தரும் ஆச்சரியமான அழகு ரகசியங்கள்*

*பூண்டு தரும் ஆச்சரியமான அழகு ரகசியங்கள்* சமையலில் பிரதானமாக இடம் பிடிக்கும் பூண்டுவை கொண்டு அழகையும் மேம்படுத்தலாம். பூண்டு பல மருத்துவ குணங்களையும், ஆச்சரியமான அழகு ரகசியங்களையும் கொண்டிருக்கிறது. பூண்டின் ஐந்து அழகு நன்மைகள் குறித்து பார்ப்போம்.


1. முகப்பருவுக்கு பூண்டு சிறந்த நிவாரணம் அளிக்கும். பூண்டுவை தோல் நீக்கி நன்றாக நசுக்கி சாறாக்கவும். முகப்பரு இருக்கும் இடங்களில் பூண்டு சாறுவை தேய்த்துவிட்டு ஐந்து நிமிடம் கழித்து கழுவிவிடலாம். முகத்தில் சிவப்பு நிறத்தில் திட்டுகள், வீக்கம் இருந்தாலும் பூண்டுச் சாறை பயன்படுத்தலாம்.


2. சிலருக்கு முகத்தில் புள்ளிகளும், திட்டுகளும் காணப்படும். ஒரு பூண்டுவை தோல் நீக்கி அதனுடன் பாதி தக்காளி பழத்தை சேர்த்து விழுதாக அரைத்து முகத்தில் தடவவும். 10 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவிவிடலாம். தொடர்ந்து இவ்வாறு செய்துவந்தால் முகம் பிரகாசத்துடன் காட்சியளிக்கும்.


3. பிரசவத்திற்கு பிறகு வயிற்றில் படர்ந்திருக்கும் தழும்புகளை நீக்குவதற்கும் பூண்டை பயன்படுத்தலாம். பூண்டு சாறுடன் 100 மி.லி. ஆலிவ் எண்ணெய் சேர்த்து சூடாக்கி தழும்பு இருக்கும் இடங்களில் தடவி மசாஜ் செய்து வர வேண்டும். தொடர்ந்து செய்துவந்தால் தழும்புகள் மறைய தொடங்கிவிடும்.


4. உச்சந்தலை, முழங்கைகள், முழங்கால்களில் சிலருக்கு சருமம் சிவத்தல், அரிப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படும். இத்தகைய சரும அழற்சிக்கு பூண்டுவை நசுக்கி சருமத்தில் தடவி வரலாம்.


5. வயதாகும்போது சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படுவது இயல்பானது. ஆனால் இளம் வயதிலேயே நிறைய பேர் சரும சுருக்க பிரச்சினையை எதிர்கொள்கிறார்கள். காலையில் ஒரு டம்ளர் நீரில் ஒரு டேபிள்ஸ்பூன் தேன், எலுமிச்சை சாறுடன் சிறிதளவு பூண்டு சாறை கலந்து பருகி வந்தால் முகத்தில் சுருக்கங்கள் தோன்றாது. இளமையை பாதுகாக்கும் தன்மையும் பூண்டுக்கு இருக்கிறது.

*உடல் பருமன் முடி உதிர்வை அதிகரிக்குமா?

  *உடல் பருமன் முடி உதிர்வை அதிகரிக்குமா?* முடி எவ்வளவு ஆரோக்கியமாக இருக்கிறது என்பது உங்களுடைய ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியத்தையும் வெளிப்படுத்தும். அதிகமான முடி உதிர்வு, பொடுகு, முடி வறண்டு போதல் ஆகியவை நீர் சத்து குறைபாடு உள்ளிட்ட பல்வேறு உடல் நலக் குறைபாடுகளுடன் நேரடியாக தொடர்புடையதாகும். உடல் பருமனால் உங்கள் முடியின் ஆரோக்கியமும் பாதிக்கப்படும் என்பதைப் பலரும் அறிந்திருக்கவில்லை. உடல் பருமனால் முடி உதிர்வு எப்படி அதிகரிக்கிறது என்று பார்க்கலாம்.


உடல் பருமனால் உண்டாகும் பல்வேறு உடல்நலக் கோளாறுகளைப் பற்றி பலரும் அறிந்திருப்போம். முட்டி வலி, ரத்தத்தில் அதிக அளவு சர்க்கரை, கல்லீரல் பாதிப்பு, இதய நோய்கள் உள்ளிட்ட பல நோய்கள் உடல் பருமனால் ஏற்படும். அதே போல, உடல் பருமன் நேரடியாகவும் மறைமுகமாகவும் உங்கள் முடியின் அடர்த்தியையும் ஆரோக்கியத்தையும் பாதிக்கும். அதிக கொழுப்புள்ள உணவுகளை சாப்பிடுவது, தேவைக்கு அதிகமாக சாப்பிடுவது மற்றும் மரபணு காரணங்களால் ஏற்படும் உடல் பருமன் உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பாதிக்கும். உடல் பருமன் உடலின் பல்வேறு கூறுகளை பாதிப்பதால், ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும்.


இதனால் முடி உதிர்வு தூண்டப்பட்டு கணிசமான அளவில் முடி இழப்பு உண்டாகும். இளம் வயதிலேயே ஆண் மற்றும் பெண் இருபாலருக்கும் அதிகமான முடி உதிர்வு ஏற்படுவதற்கு உடல் பருமன் தான் முக்கிய காரணமாக இருக்கிறது. உடல் பருமனால் எவ்வாறு முடி உதிர்வு ஏற்படுகிறது என்பதை பற்றி ஈஸ்தட்டிக்ஸ் கிளினிக்கின், சரும மருத்துவ ஆலோசகர், காஸ்மெட்டிக் சரும மருத்துவர், மற்றும் சரும அறுவை சிகிச்சை நிபுணரான மருத்துவர் ரிங்கி கபூர் பகிர்ந்துகொண்ட காரணங்கள் இங்கே


மன அழுத்தம்: உடல் பருமன் மன அழுத்தத்துடன் நேரடியாக தொடர்புடையது. ‌‌மேலே கூறியது போல இளம் வயதிலேயே ஆண் மற்றும் பெண்களுக்கு வழுக்கை விழுவது, அதிகப்படியான முடி உதிர்வது ஆகியவற்றுக்கு ஆக்சிடேஷன் ஸ்ட்ரெஸ் தான் காரணம். உங்கள் உடலில் கார்டிசால் எனப்படும் ஹார்மோன் சுரந்து ஆரோக்கியமான ஹார்மோன்கள் சுரப்பை தடுத்து முடி ஆரோக்கியத்தை பாதிக்கிறது.


ஹார்மோன் குறைபாடுகள்:உடல் பருமனால் உடலில் ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வு அதிகமாக காணப்படும். அதுமட்டுமின்றி அதிகப்படியாக சுரக்கும் ஈஸ்ட்ரஜன் ஹார்மோன் சுரக்கும் முடி உதிர்வதற்கு முக்கியமான காரணமாக இருக்கும்.


தைராய்டு குறைபாடு: உங்கள் உடலில் போதிய அளவு தைராய்டு சுரக்கவில்லை என்றால் அது உடல் பருமன், எடை அதிகரிப்பு ஆகியவற்றை உண்டாக்குவதோடு தீவிரமான முடி உதிர்வை ஏற்படுத்தும்.


நீரிழிவு அல்லது நீரிழிவு ஏற்படும் அபாயம்: நீரிழிவு உடல்பருமனோடு நேரடியாகத் தொடர்புடைய நோய்களில் முதன்மையான நோயாகும். ரத்தத்தில் இருக்கும் அதிகப்படியான சர்க்கரை அளவு, ரத்த ஓட்டத்தை பாதிக்கிறது. நீங்கள் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட்டாலும் இரத்த ஓட்டக் குறைபாடு ஏற்படுவதால் உங்கள் முடிக்கு போதிய அளவு சத்துக்களும் கிடைப்பதில்லை. இது உதிர்ந்து வளரும் சுழற்சி, முடியின் அடர்த்தி, ஆகியவற்றை பாதித்து முடி உதிர்வை ஏற்படுத்தும்.


இதய நோய்கள்: உடல் பருமனால் ஏற்படக்கூடிய மிகவும் அபாயகரமான நோய்களில் ஒன்று இதய நோய். இதய நோய் பாதிப்பபின் அறிகுறிகளில் ஒன்று முடி உதிர்வு என்று பல ஆண்டுகள் நடத்தப்பட்ட ஆய்வுகள் தெரிவித்துள்ளன. இதயத்தில் போதுமான அளவு ரத்த ஓட்டம் ஆக்சிஜன் சப்ளை இல்லை என்னும் பொழுது அது முடிக்கும் போய் சேராது. பெரும்பாலான சூழலில், தீவிரமான முடி உதிர்வுக்கு உடல்பருமன் முக்கியமான காரணியாக இருக்கிறது. ஆனாலும் இதற்கு எடைக்குறைப்பு மட்டுமே தீர்வு கிடையாது. நீங்கள் ஆரோக்கியமான உணவு முறை மற்றும் வாழ்க்கை முறையை மேற்கொள்ள வேண்டும். உடல் எடையை குறைத்து கட்டுக்குள் வைத்திருக்கும் பயிற்சிகளோடு ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளையும் உட்கொள்ள வேண்டும். முடி உத்திரவுக்கு வேறு காரணங்கள் இருந்தால், மருத்துவரிடம் ஆலோசித்து முறையான சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

Sunday, November 28, 2021

கோவிலில் கொடுக்கக் கூடிய அதே சுவையில் புளியோதரை

 கோவிலில் கொடுக்கக் கூடிய அதே சுவையில் புளியோதரை . இப்படி மசாலா அரைத்து ஒரு முறை செய்து பாருங்கள். அற்புதமான சுவையில் இருக்கும்
கோவில் பிரசாதத்தை சாப்பிடுவதில் அனைவருக்கும் அலாதியான விருப்பம் இருக்கும். இதற்காக ஒரு தனிப்பட்ட சுவையான மசாலா ஒன்றை மட்டும் அரைத்து வைத்துக்கொண்டால் போதும். நினைக்கும் நேரத்தில் எல்லாம் சுவையான கோவில் புளியோதரையை வீட்டிலேயே சமைத்து சாப்பிடலாம்.புளியோதரை செய்ய தேவையான பொருட்கள்:

 புளி – எலுமிச்சைப்பழ அளவு, வேர்க்கடலை ஒரு ஸ்பூன், முந்திரி பருப்பு – 10, கடலைப்பருப்பு – ஒரு ஸ்பூன், உளுத்தம்பருப்பு  ஒரு ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 5, மஞ்சள் தூள் – அரை ஸ்பூன், கார மிளகாய் தூள் – அரை ஸ்பூன், பெருங்காயத்தூள் – அரை ஸ்பூன், நாட்டுச் சர்க்கரை – அரை ஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து, கடுகு – அரை ஸ்பூன், எண்ணெய் – 50 கிராம்.


மசாலா அரைக்க தேவையான பொருட்கள்: 

தனியா– 11/2 ஸ்பூன், உளுத்தம் பருப்பு – 2 ஸ்பூன், கடலைப் பருப்பு – 2 ஸ்பூன், வெந்தயம் – அரை ஸ்பூன், மிளகு – அரை ஸ்பூன், எள் – ஒரு ஸ்பூன், மஞ்சள் தூள் – கால் ஸ்பூன், பெருங்காயத்தூள் – கால் ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 5, கருவேப்பிலை – கால் கைபிடி, உப்பு – அரை ஸ்பூன்.


செய்முறை: முதலில் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைத்து, உப்பு, பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் இவை மூன்றையும் தவிர மசாலா அரைப்பதற்கு எடுத்து வைத்துள்ள பொருட்கள் அனைத்தையும் அதில் சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும். பிறகு இவற்றை ஆறவைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.


பிறகு புளியை தண்ணீரில் ஊறவைத்து கெட்டியாக கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

 அதன்பின் அடுப்பின் மீது கடாயை வைத்து எண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு வேர்க்கடலை, முந்திரி பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும்.


பின்னர் அரை ஸ்பூன் மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் மற்றும் காய்ந்த மிளகாய் தூள் சேர்த்து லேசாக கலந்து விட்டு, அரை டம்ளர் தண்ணீர் சேர்க்க வேண்டும். பிறகு கரைத்து வைத்துள்ள புளி கரைசல் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும். இந்த குழம்பு நன்றாக கொதித்து எண்ணெய் பிரிந்து வந்தவுடன் வடித்து வைத்துள்ள சாதத்தை இதில் சேர்த்து அடுப்பை அனைத்துவிட வேண்டும்.

பிறகு கொத்தமல்லி தழை தூவி விட வேண்டும். அதன்மேல் ஒரு கப் சாதத்திற்கு 2 ஸ்பூன் மசாலா சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். அவ்வளவுதான் கோவில் சுவையில் வீட்டிலேயே புளிசாதம் தயாராகிவிட்டது.வெங்காயம் தக்காளி இல்லாமல் சூப்பர் வெஜ் குருமா 10 நிமிடத்தில் தயார்.

 குக்கரில் ஒரே 1 விசில் விட்டால் போதும். வெங்காயம் தக்காளி இல்லாமல் சூப்பர் வெஜ் குருமா 10 நிமிடத்தில் தயார்.

வெங்காயம் தக்காளி வாங்க முடியவில்லை என்று நினைப்பவர்கள் இந்த குருமா ரெசிபியை ஒருவாட்டி உங்க வீட்டில ட்ரை பண்ணி பாருங்க. வெங்காயம் தக்காளி சேர்க்காமல் குருமா சுவையாக இருக்குமா? என்ற எந்த சந்தேகமும் வேண்டாம்.


முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்துக்கொள்ளுங்கள். அதில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, பச்சை மிளகாய் – 2, தோல் உரித்த பூண்டு பல் – 10, சிறிய இஞ்சித் துண்டு – 1, முந்திரி பருப்பு – 10, தேங்காய் துருவல் – 1/4 கப், கசகசா – 1 ஸ்பூன், சோம்பு – 1 ஸ்பூன், இந்த எல்லா பொருட்களையும் சேர்த்து 2 லிருந்து 3 நிமிடங்கள் நன்றாக வறுத்துக் கொள்ள வேண்டும்.வதக்கிய இந்த எல்லா பொருட்களையும் நன்றாக ஆற வைத்து மிக்ஸியில் போட்டு கொஞ்சம் தண்ணீர் ஊற்றி விழுதுபோல் அரைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இது அப்படியே இருக்கட்டும்.


அடுத்தபடியாக ஒரு குக்கரை அடுப்பில் வைத்து கொள்ளுங்கள். அதில் எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் பட்டை – 2, சோம்பு – ஒரு ஸ்பூன், நட்சத்திர சோம்பு – 1, இலவங்கம் – 3, கல்பாசி – சிறிய துண்டு, இந்த பொருட்களை சேர்த்து தாளித்து ஒரு கொத்து கறிவேப்பிலை போட்டு வதக்கி விட்டு பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, உங்கள் விருப்பம் போல இன்னும் பச்சை பட்டாணி, நூல்கோல் போன்ற உங்களுக்கு பிடித்த எந்த காய்கறிகளை வேண்டுமென்றாலும் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி விட வேண்டும். (காய்கறிகள் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப அளவாக சேர்த்துக் கொள்ளுங்கள்.)


அதன் பின்பு மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன், குழம்பு மிளகாய் தூள் – இரண்டு ஸ்பூன், தேவையான அளவு உப்பு, போட்டு ஒரு நிமிடம் வதக்கி குருமாவுக்கு தேவையான அளவு தண்ணீரை ஊற்றி, நன்றாக கலந்து விட்டு ஒரு கொதி வந்ததும் மிக்ஸியில் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் விழுதை சேர்த்து, மீண்டும் நன்றாக ஒருமுறை கலந்து விட்டு, குக்கரை மூடி மிதமான தீயில் ஒரே ஒரு விசில் வைத்தால் போதும். மணக்க மணக்க சூப்பர் குருமா தயார்.


இட்லி தோசைக்கு தொட்டுக் கொள்ள வேண்டுமென்றால் கொஞ்சம் தண்ணீராக இந்த குருமாவை வைத்துக்கொள்ளலாம். சப்பாத்தி பூரிக்கு தொட்டுக் கொள்ள வேண்டுமென்றால் தண்ணீரை குறைவாக ஊற்றி, தேங்காய் விழுதை கெட்டியாக ஊற்றி கொஞ்சம் கிரேவி பக்குவத்தில் இந்த குருமாவை தயார் செய்து கொள்ளலாம். அது அவரவர் விருப்பம் தான்விமான நிலையத்தில் சோதனையை கடுமையாக்க உத்தரவிட்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன்

 

சென்னை விமான நிலையத்தில் சோதனையை கடுமையாக்க உத்தரவிட்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன்
உலகையே புரட்டி போட்ட கொரோனா வைரசை மருத்துவத்துறையினர் போராடி கட்டுக்குள் கொண்டு வந்தாலும் அவ்வப்போது உருமாறி வீரியத்துடன் மக்களை தாக்கி வருகிறது.


அந்த வகையில் இப்போது புதிய வகை உருமாறிய மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும் கொரோனா வைரஸ் வெளிநாடுகளில் பரவி வருகிறது


 தென்ஆப்பிரிக்கா, பிரேசில், சீனா, நியூசிலாந்து, ஹாங்காங், வங்காளதேசம், இங்கிலாந்து, சிங்கப்பூர், ஜிம்பாப்வே உள்ளிட்ட 12 நாடுகளில் இதன் தாக்கம் அதிகமாக உள்ளது.

எனவே இந்த வைரசை கட்டுப்படுத்த மருத்துவ துறையினர் போராடி வருகின்றனர். இந்த வைரஸ் இந்தியாவில் பரவாமல் தடுப்பதற்காக பிரதமர் மோடி இன்று உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளும்படி அனைத்து மாநில அரசுகளும் உஷார்படுத்தப்பட்டு உள்ளன. தமிழகத்திலும் தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கும்படி சுகாதாரத்துறைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் இன்று சென்னை விமான நிலையத்தை ஆய்வு செய்தனர்.

பகல் 12.45 மணியளவில் தோகாவில் இருந்து வந்த விமான பயணிகள் பரிசோதிக்கப்படுவதை அவர்கள் பார்வையிட்டனர்.

பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

புதிய வகை கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. கிட்டத்தட்ட கொரோனா கட்டுப்பாட்டு வளையத்துக்குள் சென்னை விமான நிலையம் கொண்டு வரப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் அதிலும் குறிப்பாக மேற்கண்ட 12 நாடுகளில் இருந்து வரும் பயணிகளும் 48 மணி நேரத்துக்குள் கொரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் சான்றிதழை பதிவேற்றம் செய்திருக்க வேண்டும்.

2 தவணை தடுப்பூசி போட்டு இருந்தால் ஆர்.டி.பி.சி.ஆர். சோதனை தேவையில்லை. ஒரு தவணை மட்டும் போட்டு இருந்தால் கண்டிப்பாக சோதனைக்கு உட்படுத்த வேண்டும். அப்போது கொரோனா அறிகுறி இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுவார்கள்.

பரிசோதனையில் அறிகுறி இல்லாவிட்டாலும் அவர்கள் ஒரு வாரம் கட்டாயம் வீட்டு தனிமையில் இருக்க வேண்டும். அந்த நாட்களில் தங்களை தாங்களே சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

காய்ச்சல், இருமல் போன்ற ஏதேனும் அறிகுறி இருந்தால் உடனே மருத்துவமனையை தொடர்பு கொள்ள வேண்டும். 8-வது நாள் மீண்டும் ஆர்.டி.பி.சி.ஆர். சோதனை செய்யப்படும். அதில் கொரோனா அறிகுறி இல்லாவிட்டால் மட்டுமே வெளியே நடமாட அனுமதிக்கப்படுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

கொரோனா கட்டுப்பட்டுள்ளதால் அடுத்த மாதம் (டிசம்பர்) 11-ந்தேதி முதல் அனைத்து வெளிநாட்டு விமானங்களையும் இயக்க மத்திய அரசு திட்டமிட்டு இருந்தது.

தற்போது வெளிநாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் வெளிநாட்டு விமான சேவையை தொடங்குவது பற்றி விமான நிலைய அதிகாரிகளுடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்கள்.

வெளிநாட்டு விமானங்களை இயக்குவது தள்ளி போக வாய்ப்பு உள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரூ. 30,000 செலவில் நான்கு பேர் செல்லும் ஸ்கூட்டர் தயார்

ரூ. 30,000 செலவில் நான்கு பேர் செல்லும் ஸ்கூட்டர் தயார்

இரண்டு பேர் மட்டுமே செல்லக் கூடிய இருசக்கர வாகனத்தை நான்கு பேர் செல்லக் கூடிய மூன்று சக்கர வாகனமாக இளைஞர் ஒருவர் மாற்றியமைத்திருக்கின்றார்


இருசக்கர வாகனத்தில் இருவருக்கு மேல் ஒருவர் (மூன்றாவது நபர்) செல்வது போக்குவரத்து விதிகளின்படி குற்ற செயலாகும். ஆனால், இங்கு ஓர் மனிதர் மூன்று அல்ல நான்கு பேர் வரையில் செல்லும் வகையில் தனது இருசக்கர வாகனத்தை மூன்று சக்கர வாகனமாக மாற்றி அமைத்திருக்கின்றார்


அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஓர் இளைஞரே, இரண்டு பேர் பயணிக்கக் கூடிய இரு சக்கர வாகனத்தை நான்கு பேர் பயணிக்கக் கூடிய மூன்று சக்கர வாகனமாக மாற்றியிருக்கின்றார். பழைய பஜாஜ் சேத்தக் ஸ்கூட்டரை அவர் இவ்வாறு மாடிஃபை செய்திருக்கின்றார். கூடுதலாக இரு பயணிகள் அமர்வதற்கான இருக்கை அமைப்பையும் ஸ்கிராப் செய்யப்பட்ட பஜாஜ் சேத்தக் ஸ்கூட்டரில் இருந்தே அவர் பெற்றிருக்கின்றார்

இரண்டையும் இணைத்ததன் வாயிலாக தற்போது நான்கு பேர் அமர்ந்து செல்லும் பயணிக்கக் கூடிய வாகனமாக பஜாஜ் சேத்தக் ஸ்கூட்டர் மாறியிருக்கின்றது. இரண்டாவதாக பின் பகுதியில் சேர்க்கப்பட்டிருக்கும் பஜாஜ் சேத்தக்கின் முகப்பு பகுதி முழுமையாக நீக்கப்பட்டிருக்கின்றது. கால் வைக்கும் பகுதி வரை விடப்பட்டு மற்ற முன் பக்க அம்சங்கள் பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன.

இதையடுத்தே இயக்க நிலையில் இருக்கும் மற்றுமொரு சேத்தக் ஸ்கூட்டரின் பின் பகுதியுடன் அது இணைக்கப்பட்டு நான்கு பேர் செல்லும் வாகனமாக மாற்றியமைக்கப்பட்டிருக்கின்றது. இதுபோன்ற வாகன மாடிஃபிகேஷன்களுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது. இருப்பினும், வாகன ஆர்வலர்கள் சிலர் தங்களின் இதுபோன்ற தனித்துவமான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்

இருசக்கர வாகனத்தை மூன்று சக்கர வாகனமாக மாற்றியிருக்கும் அதுல் தாஸ், சொந்தமாக ஏடி ஆட்டோமொபைல்ஸ் (AD Automobile) நிறுவனத்தை நடத்தி வருகின்றார். அவர் சில வாரங்களுக்கு முன்னரே இருசக்கர வாகனத்தை மூன்று சக்கர வாகனமாக மாற்றியமைத்ததாக தெரிவித்திருக்கின்றார்.


தற்போதைய எரிபொருள்களின் அதிகபட்ச விலை மற்றும் பெரிய குடும்பத்தினர்களின் பயன்பாடு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த ஸ்கூட்டரை வடிவமைத்திருப்பதாக தெரிவித்துள்ளார். இருசக்கர வாகனத்தின் உருமாற்றத்திற்காக அவர் ரூ. 30 ஆயிரம் வரை செலவு செய்திருப்பதாக தெரிவித்திருக்கின்றார். இந்த மிகக் குறைவான தொகையிலேயே நான்கு பேர் செல்லக் கூடிய மூன்று சக்கர வாகனம் தயார் செய்யப்பட்டிருக்கின்றது

தற்போது இந்த இருசக்கர வாகனத்திலேயே தனது மனைவி, பிள்ளைகளுடன் அவர் வலம் வந்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இது மட்டுமின்றி தனது நண்பர்களுடனும் பயணிக்க இவ்வாகனத்தை பயன்படுத்தி வருவதாக தாஸ் கூறியிருக்கின்றார். ஆனால், இது போக்குவரத்து விதிகளின்படி குற்ற செயலாகும்.

இதுபோன்ற வாகன மாடிஃபிகேஷன் அங்கீகாரம் இல்லை என்பதால் போக்குவரத்துத்துறை எப்போது வேண்டுமானாலும் தாஸ் மீது கடும் நடவடிக்கை எடுக்கலாம் என தெரிகின்றது. வாகனங்களின் உருவத்தையோ அல்லது அடையாளத்தையோ மாற்றுவதற்கு எந்தவொரு அங்கீகாரமும் இல்லை. அதே நேரத்தில் உரிய அனுமதியைப் பெற்று வாகனங்களை மாற்றிக் கொள்ளலாம். சில பெரும் நிறுவனங்கள் இதுமாதிரியான செயல்களில் ஈடுபட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. அதேநேரத்தில், ஆய்விற்காக தயாரிக்கப்படும் வாகனங்கள் பொதுசாலையில் பயன்படுத்தாத வரையிலும் அந்த வாகனங்கள் மீது எந்தவொரு நடவடிக்கையும் காவல்துறை எடுக்காது என்பதும் இங்கு கவனிக்கத்தகுந்தது.

https://tamil.drivespark.com/

courtesy:


இந்த தேதியில் பிறந்தவரா நீங்கள்? புத்திசாலி

 

இந்த தேதியில் பிறந்தவரா நீங்கள்? புத்திசாலி! நன்றாக பணம் சம்பாதிப்பவர்!


ஜோதிடம் போலவே, எண் கணிதத்திலும் ஒருவரின் பிறந்த தேதியின் மூலம் அவரது குணாதிசயங்களை அறிய முடியும். ஜோதிட சாஸ்திரத்தில் ஒருவரின் ராசியின் அடிப்படையில் பலன்களை சொல்வதுபோல,  எண் கணிதத்தில் நபரின் ரேடிக்ஸ் (radix) இதைப் பற்றி கூறுகிறது. எண் கணிதத்தில் 1 முதல் 9 வரை ரேடிக்ஸ் உள்ளன. இந்த ரேடிக்ஸ் என்பது பிறந்த தேதியின் கூட்டுத்தொகையாகும். உதாரணமாக,  15 ஆம் தேதி பிறந்தவருக்கு ரேடிக்ஸ் எண் 6 (1+5). எந்த ரேடிக்ஸ் எண்ணில் பிறந்தவர்கள் மிகவும் புத்திசாலிகள், அதிக பணம் சம்பாதிப்பவர்கள் என்பது தெரியுமா?
 
பிறந்த மாதம் எதுவாக இருந்தாலும் சரி,  5, 14 அல்லது 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் ரேடிக்ஸ் எண் 5 ஆகும். எண் கணிதத்தின் படி, ரேடிக்ஸ் எண் 5 (Radix Number) உள்ளவர்கள் பிறக்கும்போதே அறிவாளிகள்.  அவர்கள் தங்கள் புத்திசாலித்தனத்தைபயன்படுத்தி நன்றாக பணம் சம்பாதிப்பார்கள்.  

புத்திசாலித்தனத்தால் நிறைய பணம் சம்பாதிக்கும் இவர்கள், ஆடம்பரமான வாழ்க்கையை நடத்துகிறார்கள். அதுமட்டுமின்றி, அவர்களின் புத்திசாலித்தனம் மற்றும் திறமையால், மிகுந்த மரியாதையையும் பெறுபவர்கள் 5 என்ற ரேடிக்ஸ் எண்ணில் பிறந்தவர்களே... அதிர்ஷ்டத்தை விட கர்மாவை அதிகம் நம்பும் இவர்கள், வாழ்க்கையில் சவால்களை ஏற்று சமாளிப்பதை மிகவும் விரும்புவார்கள்.

முட்டை சட்னி

 

இந்த முட்டை சட்னியை செய்து வீட்டில் இருக்கும் எல்லாருக்கும் கொடுங்கள். அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்
முட்டை சட்னியை சாப்பிட்டிருக்க மாட்டோம். முட்டை சட்னி மிகவும் சுவையாக அற்புதமாக இருக்கும். வாங்க இதை எப்படி செய்வது என்று தெரிந்துக் கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்
தக்காளி - 1
வெங்காயம் - 1

கறிவேப்பிலை - சிறிது

பூண்டு - 2 பற்கள்

கடுகு - 1/2 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்

பச்சை மிளகாய் - 2

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

முட்டை - சட்னி செய்யும் தேவைக்கேற்ப


செய்முறை

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் அதில் பூண்டு, வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின் கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பின்பு தக்காளியை  நன்கு வதங்கும் வரை வதக்க வேண்டும்.

அதில் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து பிரட்டி விட வேண்டும். கலவையானது சட்னி போன்று நன்கு வதங்கியதும், அதில் முட்டையை உடைத்து ஊற்றி, ஒரு முறை கிளறி, உடனே இறக்கி விட வேண்டும். ஒருவேளை அப்படியே அடுப்பில் வைத்து கிளறிக் கொண்டே இருந்தால், சட்னியானது முட்டைப் பொரியல் போன்று ஆகிவிடும். இறுதியில் அதனை தோசை, இட்லி ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.


சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’பற்றி எனது கருத்துகள்/உமா தமிழ்

 சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்பற்றி

எனது கருத்துகள்


சமீபத்திலே சோனி லைவ் ஓடிடி தளத்தில்பார்த்த படம்

சோனி லைவ் ஓடிடி தளத்தில்

 சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்பற்றி

எனது கருத்துகள்

இது வெவ்வேறு காலகட்டங்களைச் சேர்ந்த சரஸ்வதி, தேவகி, சிவரஞ்சனி ஆகியோரது வாழ்க்கையின் ஒரு பகுதியாக ஒரு அன்தாலாஜி யாக வெளிவந்துள்ளது

 

, இந்தப்படம் கேரள சர்வதேச திரைப்பட விழா, பெங்களூரு சர்வதேச திரைப்பட விழா, புனே சர்வதேச திரைப்பட விழா மட்டுமல்லாமல் ஜப்பான், ஸ்வீடன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் திரைபப்ட விழாக்களிலும் போட்டியிட்டு பல்வேறு விருதுகளையும் சிறந்தப் படமாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளது என தெரிந்து கொண்டேன்

 முதல் கதை காலகட்டம் 1980

சரஸ்வதி


தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் சந்திரனின் (கருணாகரன்) மனைவி சரஸ்வதி (காளீஸ்வரி ஸ்ரீனிவாசன்). கைக்குழந்தையுடன் இருக்கும் அவர் செய்யும் சிறு சிறு விஷயங்கெளுக்கெல்லாம் எரிந்து விழுந்து ஒரு நாள்  இரவில் குழந்தை அழுவதால் எரிச்சலடையும் கருணாகரன் மனைவியை அடிக்கிறார்.

அதற்குப்பின்….

 அவரை ஒரே ஒரு வார்த்தையான என்னை அடிக்க வேண்டாம் என  எதிர்த்துப் பேசும் சரஸ்வதியின் வாழ்க்கை அன்று முதல் மாறுகிறது.

தேவகி

 காலகட்டம் 1995


ஒரு அரசு அலுவலகத்தில் உயர் பொறுப்பில் இருக்கிறார் தேவகி (பார்வதி). அதே அலுவலகத்திலேயே அவரது கணவர் மணியும் (சுந்தர் ராமு) பணிபுரிகிறார். நடுத்தர வர்க்கம் .கூட்டுக்குடும்பம். .மகிழ்ச்சியாகவே சென்று கொண்டிருந்த  அவர்களது வாழ்வில் ஒரு டைரியால் திடீரென ஒரு புயல் வீசுகிறது. அதுவே தேவகியின் வாழ்க்கையில் ஒரு முக்கிய மாற்றத்துக்கு அடித்தளமாகிறது.

சிவரஞ்சனி

காலகட்டம் 2007


சிறு வயது முதலே ஓட்டப்பந்தயத்தில் வீராங்கனையாகத் திகழ்ந்த ர் சிவரஞ்சனி (லஷ்மி ப்ரியா) . கல்லூரி சார்பாக பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு கோப்பைகளை வெல்பவருக்கு படிப்பை முடிக்கும் முன்னரே ஹரியுடன் (கார்த்திக் கிருஷ்ணா) திருமணம்  நடந்து விடுகிறது.அவரது அந்த கனவான ஓட்டப்பந்தய வீராங்கனை பலிக்காமல்  குழந்தையை வயிற்றில் சுமந்தபடி கல்லூரிக்கு வருகிறார். தன்னுடைய கனவை மனதில் சுமந்தபடியே கணவன், மாமியார், குழந்தை ஆகியோரது விருப்பத்துக்கேற்ப  இன்றைய தற்கால வாழ்க்கையை அமைத்துக்கொண்டு வாழ்ந்து கொண்டு  இருக்கிறார்.

         ஒட்டு மொத்தமாக இந்த மூன்று படங்களுமே வெவ்வேறு காலகட்டங்களைச் சேர்ந்த பெண்களைப் பற்றிய கதை என்றாலுமே கிட்டத்தட்ட மூவரது வாழ்விலும் ஒரே விஷயங்கள்தான் மாறாமல் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. மிகவும் ஏழ்மையான சூழலில் காலத்தைத் தள்ளும் சரஸ்வதி வாயைத் திறந்தாலே கணவர் எரிந்து விழுகிறார். அடிக்கிறார். பதிலுக்கு அவர் சொல்லும் ஒரு வார்த்தையை கணவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதன்பின் கணவர் எடுக்கும் முடிவால் அவளது வாழ்க்கையே திசை மாறிப் போகிறது

. சரஸ்வதியின் நிலை இப்படியென்றால் சமூகத்தின் உயர்நிலையில் இருக்கும் தேவகி மற்றும் சிவரஞ்சனியின் இவர்களின் வாழ்க்கையிலும் பெரிய வித்தியாசம் ஏதுமில்லை. பெரிய வீடு, வேலை, வசதி இருந்தாலும் அவர்களது வாழ்க்கையை தீர்மானிப்பவர் ஒரு ஆணாகவே இருக்கிறார்.

மூன்று படங்களின் நாயகிகளான காளீஸ்வரி சீனிவாசன், பார்வதி, லஷ்மி ப்ரியா மூவருமே தங்கள் பாத்திரங்களின் தன்மை உணர்ந்து  இயல்பாக நடித்துள்ளனர்.

 வழக்கமாக நகைச்சுவை பாத்திரங்களில் வரும்  கருணாகரன் தனது ஒரு புதிய பரிணாமத்தைச் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். சுந்தர் ராமு, கார்த்திக் கிருஷ்ணா, ஜி.மாரிமுத்து என மற்றவர்கள் அனைவருமே தங்கள் இயல்பான நடித்துள்ளனர்

படத்தின் இயக்கம் வசந்த் (சாய்).

 

படத்தில  எந்தவொரு திடீர் திருப்பம், இல்ல  வசனம் குறைவு, அதிரவைக்கும் இசை இல்லை

. நம் வீட்டில் ஒரு கேமராவை வைத்துப் படமெடுத்தால் என்னவெல்லாம் நடக்குமோ அதையே படமாக காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் என சொல்லலாம்

எழுத்தாளர்கள் அசோகமித்ரன், ஆதவன், ஜெயமோகன் ஆகியோரது சிறுகதைகளைப் படமாக்கியுள்ள இயக்குநர் அவற்றில் வணிக ரீதியான கமர்ஷியல் அம்சங்களை சேர்க்கல மற்றும் அவர்  எந்த காம்பரமைஸ் இல்லாமல்  அந்தந்தக் கதைகளுக்கு நியாயம் செய்துள்ளார் என சொல்லலாம்

மூன்று படங்களிலுமே முடிவு இதுதான் என்று இயக்குநரே தீர்ப்பை எழுதாமல் அதைப் பார்வையாளர்களிடமே விட்டது சிறப்பு

என்.கே.ஏகாம்பரம், ரவீ ராயின் ஒளிப்பதிவு படத்தின் கதைக்களத்துக்கு   பக்க பலம்

 

இசை ராஜா சார்

இசை ஒலிக்க வேண்டிய இடத்தில் ஒலித்து மவுனமாக வேண்டிய இடங்களில் மவுனம் என சொல்லாம்

 

சரஸ்வதி படத்தில் வரும் பின்னணி இசையில் இளையராஜா அற்புதம்  மனதைப் பிசைகிறார்

இந்த மூன்று கதைகளை மூன்று எழுத் தாளர்களின் படைப்பு என சொல்ல பட்டு இருக்கு. இந்த மூன்றில் சரஸ்வதி. தேவகி. சிவரஞ்சனி யார் யாருடையது னு தெரியல

பொதுவா டைட்டில் கார்டு ல வருது

இந்த மூன்று பாத்திரங்களில் சிவரஞ்சனி பாத்திரம் கதை சட்டென மனதில்  ஒட்டிக்கொள்கிறது

.


இந்த மூன்று பாத்திரங்களும் இந்த ஆணின் ஆதிக்கத்தில் தங்களுடைய உணர்வுகள் சாகடிக்க பட்டு அவனின் ஆதிக்கத்தில் தான் வாழ் வதை சகித்து கொண்டு வேறு வழி தெரியாமல் இருப்பது போலவே இயக்குனர் படைத்துள்ளார்

 

இந்த படத்தில் மூன்று பேருக்கும் ஒவ்வொரு சமயத்தில் உயரத்தில் இருக்கும் ஒரு பொருளை தேடுவது போல் காட்சி இருக்கிறது

சரஸ்வதி பொருள் கிடைக்காமல் விழுந்து விடுவார்

தேவகி அவர் தேடிய பொருள் கிடைத்துவிடும்

சிவரஞ்சனி க்கு கிடைக்காது

இயக்குனர் இந்த symbolic shots மூலம் அந்த மூன்று பாத்திரங்களின் குணாதிசயத்தை சொல்லி விடுகிறார்

சரஸ்வதி எதிர்ப்பு காட்டி பின் அதனால ஏற்படும் வாழ்க்கையை  ஏற்று கொள்கிறார்

தேவகி எதிர்த்து தனியா போய்விடுகிறார்

சிவரஞ்சனி எதிர்க்க முடியாம கிடைத்தை ஏற்று கொள்கிறார்

பெண்கள் எந்த உயரத்துக்குச் சென்றாலும் அவர்களது வாழ்க்கை இன்னும் ஆண்களையே சார்ந்திருக்கும்படியான சமூகக் கட்டமைப்பை மாறவில்லை என்பதை பல காட்சிகளின் வழியே நெற்றிப் பொட்டில் அடித்தாற்போல்

. வழக்கமான பெண்களை மையமாகக் கொண்ட படங்களில் அழுகை  மற்றும் வசனங்கள் நம்மை படுத்தும்

இயல்பான  காட்சிகளின் வழியே பெண்களின் நிலையைப் படமாக்கியதற்ககாக இயக்குநர் வசந்த்தை மனதாரப் பாராட்டலாம்.கடைசி காட்சியில்

சிவரஞ்சனியின் அந்த ஓட்டம் ,பின் அவர் தன்னை மறந்து சிரிப்பது

இன்னும் மனதில் நிற்கிறது

  ---உமா தமிழ்

 

Featured Post

மனிதனை மீறிய சந்தர்ப்பங்கள் வாழ்க்கையை எவ்வளவு தூரம் திருப்பிவிடுகின்றன

  மனிதனை மீறிய சந்தர்ப்பங்கள் வாழ்க்கையை எவ்வளவு தூரம் திருப்பிவிடுகின்றன என்பதற்கு நான் ஓர் உதாரணம்.’’ – இது, ‘சரித்திர நாவல்களின் ஜாம்பவான...