Posts

Showing posts from October, 2022

ஆவடியில் உள்ள இனிய உதயம் தொண்டு நிறுவனத்தில் வளரிளம் குழந்தைகளுக்கு வாழ்வியல் கல்வி பயிற்சி

Image
  திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் உள்ள இனிய உதயம் தொண்டு நிறுவனத்தில் வளரிளம் குழந்தைகளுக்கு வாழ்வியல் கல்வி பயிற்சி அக்-31 திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருந்ததிபுரத்தில் உள்ள இனிய உதயம் தொண்டு நிறுவனத்தில் காலை 10.30 மணி முதல் 12.30 வரை மாலைநேர திறண்வளர் மையங்களில் பயிலும்  வளரிளம் குழந்தைகளுக்கு வாழ்வியல் கல்வி பயிற்சி நடைபெற்றது.  இந்த பயிற்சியை டாக்டர் அழகர் ராமானுஜம் ஐயா அவர்களால் கொடுக்கப்பட்டது. முதலில் சமூக ஆர்வளரும் இனிய உதயம் தொண்டு நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டாளருமான அல்லாபகேஷ் அவர்கள் சிறப்பு அழைப்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் அழகர் ராமானுஜம் ஐயா அவர்கள் வாழ்வியலின் விஞ்ஞானத்தையும் தத்துவத்தையும் மிக தெளிவாக அருமையாக அற்புதமாக குழந்தைகள் புரிந்து கொள்ளும் வண்ணம் அருமையாக எடுத்துரைத்தார். இதனை தொடர்ந்து பிரபஞ்சத்தை இருக்கும்  விஞ்ஞானிகள் மற்றும் தத்துவஞானிகள் ஆகியோர்களின் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதை மிக மிக தெளிவாக எடுத்துரைத்தார். அதற்கான சிறு சிறு உதாரணங்களையும் கூறினார். தகவல் அல்லாபக்ஸ் 

வெற்றி தரும் விஷ்வக்சேனர் விரத வழிபாடு

Image
  வெற்றி தரும் விஷ்வக்சேனர் விரத வழிபாடு இன்று காலை 10.25 மணி முதல் நாளை காலை 8.47 மணி வரை பூராட நட்சத்திரம். இன்று விரதம் இருந்து விஷ்வக்சேனரை வழிபட மறக்காதீர்கள். பகவான் விஷ்ணுவின் நெருங்கிய தொண்டர்களாக அனந்தன், கருடன், விஷ்வக்சேனர் ஆகிய 3 பேரை சொல்வார்கள். பெருமாள் படுத்து தூங்கும் ஆதிசேஷ பாம்பணையை அனந்தன் என்பவார்கள். கருடன், பெருமாள் ஏறிச் செல்லும் வாகனமாக கருதப்படுகிறது. அது போல விஷ்வக்சேனரை பெருமாளின் முதன்மைத் தளகர்த்தர் என்று சொல்வார்கள். பெருமாள் கோவில்களில், விஷ்வக்சேனர் சந்நிதி நிச்சயமாக இருக்கும். தமிழில் அவரை சேனை முதலியார், சேனாதிபதி ஆழ்வான் என்று அழைப்பார்கள். அவருடைய அனுமதியின்றி பகவான் எந்தக் காரியத்தையும் செய்வதில்லை என்றும் சொல்வது உண்டு. பொதுவாக எந்த பூஜையோ, வழிபாடோ, உற்சவமோ செய்வதாக இருந்தாலும், முதலில் பிள்ளையாரைப் பிடித்து வைத்து பூஜை செய்து விட்டுதான் மற்ற பூஜைகளைச் செய்வார்கள். ஆனால் வைணவத்தில், விஷ்வக்சேன ஆராதனையை முடித்து விட்டுத்தான் திருமஞ்சனம், திருக்கல்யாண உற்சவம், திருவீதிவலம் செய்வார்கள். பெருமாள் வீதி உலா வருவதற்கு முன் விஷ்வக்சேனர் வலம் வந்து, அனும

தொடர்ந்து கரையும் அன்னிய செலாவணி

Image
 தொடர்ந்து கரையும் அன்னிய செலாவணி: 2 ஆண்டில் இல்லாத அளவுக்கு சரிவு புதுடெல்லி: டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில், நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகராக ரூபாய் மதிப்பின் சரிவைத் தடுக்க, ரிசர்வ் வங்கி அதிகளவிலான டாலர்களை விற்பனை செய்தது. இதன் காரணமாக, அன்னிய செலாவணி கையிருப்பு வேகமாக சரிந்துள்ளது. ஆசியாவின் 3வது பெரிய பொருளாதார நாடாக விளங்கும் இந்தியா,  டாலருக்கு நிகராக ரூபாய் மதிப்பின் சரிவைச் சமாளிக்க முடியாமல் தடுமாறி வருகிறது. பல வாரங்களாக தொடர்ந்து, டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு ரூ.80க்கு அதிகமாகவே உள்ளது. வரலாற்றில் முதல் முறையாக, சமீபத்தில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 83ஐ தாண்டியது. இந்தாண்டு ரூபாய் மதிப்பு 10 - 12 சதவீதம் சரிந்துள்ளது. நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு அக்டோபர் 21 ம் தேதியுடன் முடிந்த வாரத்தில், 2 ஆண்டுகளில் இல்லாத அளவிற்குச் சரிந்துள்ளது. அக்டோபர் 21ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் அந்நியச் செலாவணி இருப்பு 3.85 பில்லியன் டாலர் குறைந்து, 52,400 கோடி அமெரிக

*குழந்தை திருமண சட்டத்தின் கீழ் வராது; 15 வயது முஸ்லிம் சிறுமிகளின் திருமணம் சட்டப்படி செல்லும்: பஞ்சாப் உயர் நீதிமன்றம் தீர்ப்பு

Image
 *குழந்தை திருமண சட்டத்தின் கீழ் வராது; 15 வயது முஸ்லிம் சிறுமிகளின் திருமணம் சட்டப்படி செல்லும்: பஞ்சாப் உயர் நீதிமன்றம் தீர்ப்பு* சண்டிகர்: ‘பதினைந்து வயதை தாண்டிய முஸ்லிம் சிறுமிகளின் திருமணம் சட்டப்படி செல்லும், அது குழந்தை திருமண சட்டத்தின் கீழ் வராது’ என பஞ்சாப்-அரியானா உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அரியானா மாநிலத்தை சேர்ந்த ஜாவேத் (26) என்பவர் கடந்த ஜூலை மாதம் 16 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டார். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்யப்பட்டு, மைனர் பெண் என்பதால் சிறுமி பஞ்ச்குலா சிறார் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டார். இதற்கிடையே, தனது மனைவியை மீட்டுத் தரக் கோரி ஜாவேத் தரப்பில் பஞ்சாப்-அரியானா நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி விகாஸ் பால் அளித்த தீர்ப்பில், ‘‘இஸ்லாமியர்களின் ஷரியத் சட்டப்படி 15 வயது பூர்த்தி அடைந்தாலே, அந்த பெண் திருமணம் செய்து கொள்ளலாம். அதன்படி, 15 வயதுக்கு மேற்பட்ட முஸ்லிம் சிறுமிகளின் திருமணம் சட்டப்படி செல்லும். அதை குழந்தை திருமண சட்டத்தின் கீழ் கொண்டு வர முடிய

வெற்றியை ஈட்டித்தரும் ஜெயந்திநாதர்-சூரசம்ஹார விழா*

Image
  *வெற்றியை ஈட்டித்தரும் ஜெயந்திநாதர்-சூரசம்ஹார விழா* தமிழர்கள் வாழ்வு காதல், வீரம் என்ற இரண்டும் சுவைபடக் கலந்ததாகும். தமிழ் மக்கள் காதலைப் போலவே வீரத்தையும் அதிக அளவிற்குப் போற்றினர். போர்க்களத்தில் வீரர்கள் செய்த சாகசங்களையும் பெற்ற விழுப்புண்களையும்,வெற்றிகளையும் திரும்பத் திரும்பச் சொல்லக் கேட்டு மகிழ்ந்தனர். புறநானூறு, புறப்பொருள் வெண்பா மாலை முதலான நூல்கள் தமிழர்தம் வீரத்தையும், தனி மனித மனோதிடத்தையும் விரிவாகக்கூறுகின்றன. பரணி என்னும் இலக்கியம் வீரத்தைப் பாடவே விளைந்த இலக்கிய வடிவம் ஆகும். மக்கள், வீரர்கள் தீரத்துடன் போரிட்டு வீர மரணமடைந்து வீரசொர்க்கம் அடைந்த களங்களைக் காண்பதில் பெரு மகிழ்வு கண்டனர். அதைப் புலவர்கள் தனிச் சிறப்புடன் பாடினர். அதற்குக் களம் பாடியது என்பது பெயர்.     போர்க்களங்களைக் கண்டு தொழுவதிலும் அங்குள்ள காளியை வாழ்த்திப் பாடுவதிலும் புலவர்கள் பெருவிருப்பம் கொண்டிருந்தனர். போர்களை விவரித்துப் பாடுவதற்காகவே பல நூல்கள் எழுந்துள்ளன. அர்ச்சுனன் - வேடன் சண்டை, மயில் ராவணன் சண்டை, வாலி வதம் முதலியவை சண்டைகளைக் கூறும் நூல்களாகும். அருணகிரிநாதர் பாடிய போர்க்களத்தலகை

இருதயம் காக்கும் ஹோமியோபதி மருந்து

Image
 இருதயம் காக்கும் ஹோமியோபதி மருந்து நாம் உண்ணும் உணவு மற்றும் வாழ்க்கை முறை போன்றவற்றால் பல விதமான நோய்கள் நமக்கு ஏற்படுகின்றன.அவற்றில் நீரழிவு.உயர் இரத்த அழுத்தம்,இரத்தத்தில் அதிக அளவு கொழுப்புச் சத்து ,உடல் பருமன்,மனஅழுத்தம்,உடல் உழைப்பின் மை போன்றவை இருதய நோய்கள் உருவாவதற்கு வழிவகுக்கும்.      இருதயம் நம் உடலின் மிக முக்கியமான உறுப்பு.இருதயநோய் உருவாகாமல் தடுக்கும் வழி முறைகளை நாம் பின்பற்றி வாழ்வது மிக மிக அவசியம்.   இருதய தமனிகளில் கொழுப்பு படிவதால்  அவை சுருங்கி இருதய அடைப்பை ஏற்படுத்தும்.இது  கரோனரி ஆட்டரி நோய் எனப்படும்.முறையற்ற இரத்த ஓட்டம், ஒழுங்கற்ற  இருதயத்துடிப்பு, இருதய வால்வு நோய், இருதயதசை நோய் ,இருதய செயலிழப்பு போன்றவை ஏற்படும் வாய்ப்பு அதிகம்.    இந்நோய் வந்தவர்கள் "Terminalia arjuna Q "என்ற ஹோமியோபதி தாய்திரவம் வாங்கி  7 முதல் 10 சொட்டுக்கள் வீதம் கால் டம்ளர் தண்ணீரில் கலந்து காலை மாலை இரு வேளைகள் 30 நிமிடங்கள் உணவுக்கு முன் தொடர்ந்து 2 to 3 வாரங்கள் எடுத்து வந்தால் இருதய அடைப்பை நீக்கும்.   .இருதயத்தில் அடைப்பு உள்ளது என்று தெரிந்தால் இம்மருந்தை தாராளமாக ச

கந்த சஸ்டி விழா பத்துமலை முருகன் கோயில் மலேசியா

Image
Shasti pooja at Batu Caves பத்துமலை முருகன் கோயில் மலேசியா

சென்னை போரூர் மதனந்தபுரம் துர்கா லட்சுமி சரஸ்வதி கோயிலில் நடை பெற்ற கந்த சஸ்டி விழா

Image
  கந்த சஸ்டி விழா சென்னை போரூர் மதனந்தபுரம் துர்கா லட்சுமி சரஸ்வதி கோயிலில் நடை பெற்ற temple Durga Lakshmi Saraswati (madanathapuram porur)

அம்பத்த்துரில் நடைபெற்றமாண்புமிகு முதமைச்சரின் முன் காப்போம் திட்டம்

Image
    Manbumigu muthalamaicharin  varumun kappom thittam ( VKT)  Mega medical camp at Ebenezer Marcus school, Ambattur  . started with yoga demo for public by madesh crri

எழுத்தாளர் வண்ணநிலவன் படைப்புகள் குறித்த முழுநாள் கருத்தரங்கு

Image
 எழுத்தாளர் வண்ணநிலவன் படைப்புகள் குறித்த முழுநாள் கருத்தரங்கை நேற்று 29.10.2022 அன்று டிஸ்கவரி புக் பேலஸ் பிரபஞ்சன் அரங்கில் 'சிற்றில்' அமைப்பு நடத்தியது. நிகழ்ச்சி எளிமையாக, மிகச் சிறப்பாக நடைபெற்றது.  காலையில் கவிஞர் சுகுமாரன் தலைமை உரை,  பின் சிறுகதைகள் குறித்த அமர்வு.  முன்னோடியான ஒரு  எழுத்தாளரை முழுமையாக வாசித்து அவை குறித்த தங்கள் பார்வையை முன்வைப்பது வாழும் காலத்தில் அடுத்த தலைமுறை அவருக்கு செய்யும் மகத்தான மரியாதை. பொன்னாடைகளோ பணமுடிப்புகளோ அல்ல. அது நேற்று நிகழ்ந்தது. மாதம் ஒரு எழுத்தாளருக்கு  இப்படியான கருத்தரங்குகளை 'சிற்றில்' நிகழ்த்துவதாகவும் இவை தொகுக்கப்பட்டுப் பின் நூலாகவும் வெளியாகும் எனவும் நிகழ்ச்சியில் அறிந்தேன்.  'சிற்றிலு'க்கு என் வாழ்த்துக்கள். வண்ணநிலவனின் 'கடல்புரத்தில்....' படித்துப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அதே போல் அவரது ஆரம்ப கால சிறுகதைத் தொகுதியான 'எஸ்தரை'யும். பல ஆண்டுகளுக்குப் பிறகு அவை குறித்த உரைகளைக் கேட்கிறேன். எனக்குள் தூர்ந்து போயிருந்த ஒரு கிணறு ஊறத்தொடங்கிவிட்டது.  யதார்த்தம், நவீனம் , காவியத்தன்மை எல்லாம்

முருகு தமிழ் / திருச்செந்தூர் முருகன் சஷ்டி விரதப் பாடல் / வேலனை எண்ணியே / கவிஞர் முனைவர் ச.பொன்மணி

Image
  முருகு தமிழ் / திருச்செந்தூர் முருகன் சஷ்டி விரதப் பாடல் / வேலனை எண்ணியே / கவிஞர் முனைவர் ச.பொன்மணி பாடல், இசை, குரல் & ஒளிவடிவம் கவிஞர் முனைவர் ச.பொன்மணி video link முருகு தமிழ்  கவிஞர் முனைவர் ச.பொன்மணி

வி.சாந்தாராம் நினைவு நாள் இன்று.

Image
வி.சாந்தாராம் நினைவு நாள் இன்று.  மகாராஷ்டிர மாநிலம் கோல்ஹாபூரில் பிறந்தவர். இளம் வயதிலேயே சினிமா மீது அளவுகடந்த ஆர்வம் இருந்தது. நடிகனாகும் முயற்சியிலும் ஈடுபட்டுவந்தார்.  பாபுராவின் சினிமா கம்பெ னியில் வேலைக்குச் சேர்ந்தார். சினிமா தயாரிப்பு, ஆய்வுக்கூட வேலை, ஸ்பெஷல் எஃபக்ட்ஸ் போன்ற நுட்பங்களை தெரிந்து கொண்டார். 1929-ல் நண்பர்களுடன் சேர்ந்து ‘பிரபாத் பிலிம் கம்பெனி’ தொடங்கினார்.  தாதா சாஹேப் பால்கே தயாரித்த ‘ராஜா ஹரிச்சந்திரா’ படத்தின் கதையை 1932-ல் ‘அயோத்யா கா ராஜா’ என்ற பெயரில் இயக்கினார். முதன் முதலில் பெண்களை நடிக்க வைத்தரிவர்.  மவுனப் படக் காலத்திலேயே 6 படங்களை இயக்கினார். இந்தி, மராத்தி, தமிழில் 1934-ம் ஆண்டுமுதல் படம் எடுக்கத் தொடங்கினார். ‘அம்ரித் மந்தன்’ படம் மூலம் புகழ்பெற்றார்.  இவரது ‘அமர்ஜோதி’ திரைப்படம் வெனிஸ் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. பெண்கள் பிரச்சினைகள் குறித்து ‘துனியா ந மானே’, பாலியல் தொழிலில் இருந்து மீள நினைக்கும் பெண்ணின் வாழ்க்கையை ‘ஆத்மி’ (1939) ஆகிய படங்கள் எடுத்துக்காட்டியது. இந்து - முஸ்லிம் ஒற்றுமையை ‘படோஸி’ திரைப்படம் வலியுறுத்திய

இன்று உலக சிக்கன நாள்

Image
  இன்று உலக சிக்கன நாள் ! இன்று ஒரு நாள் மட்டும் சிக்கனமாக இல்லாமல், வாழ் நாள் முழுக்கவே சிக்கனமாக இருங்கள். தண்ணீர், மின்சாரம்... என்று எல்லாவற்றிலும் சிக்கனமாக இருங்கள். 'யூஸ் அண்ட் த்ரோ...' எனும் 'தூக்கி எறியும்' வாழ்க்கை முறையை மாற்றி, 'ரீசைக்ளிங்' எனும் மறுசுழற்சி முறையை கடைபிடியுங்கள். உங்களின் சிக்கனம்... உங்கள் சந்ததிகளை நலமாக வாழ வைப்பதோடு, உலகத்தின் வாழ்நாளையும் அதிகரிக்கும்

கந்தசஷ்டி விழா: திருச்செந்தூர் கோவிலில் விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள்*

Image
 கந்தசஷ்டி விழா: திருச்செந்தூர் கோவிலில் விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள்* கந்தசஷ்டி திருவிழா கடந்த 25-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. சூரசம்ஹாரம் நிகழ்ச்சியை காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 25-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. திருவிழா தொடக்கம் முதல் தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கொட்டகைகளில் ஏராளமான பக்தர்கள் தங்கி விரதம் இருந்து வருகின்றனர். சூரசம்ஹாரம் நிகழ்ச்சியை காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். இந்நிலையில் பக்தர்களுக்கு செய்யப்பட்ட அடிப்படை வசதிகள், ஏற்பாடுகளை நேற்று கனிமொழி எம்.பி., அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு செய்தனர். பின்னர் கனிமொழி எம்.பி. தங்கி விரதம் இருக்கும் ஒவ்வொரு தற்காலிக கொட்டகைகளுக்கு சென்று பக்தர்களிடம் குறைகள் ஏதும் உள்ளதா? என கேட்டு, உங்களுக்கு வேண்டிய வசதிகளை கூறுங்கள் உடனடியாக நிவர்த்தி

மருத்துவமனையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மருத்துவ பரிசோதனை*

Image
 மருத்துவமனையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மருத்துவ பரிசோதனை* சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. சென்னை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அந்த பாதிப்பில் இருந்து அவர் விடுபட்ட நிலையில், தொடர்ந்து அரசு பணிகளையும், கட்சி பணிகளையும் கவனித்து வந்தார். இந்த நிலையில், நேற்று இரவு அவருக்கு முதுகு வலி ஏற்பட்டதை தொடர்ந்து, சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்தார். அவருக்கு டாக்டர்கள் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். அதன்பின்னர், அவர் வீடு திரும்பினார். இதுதொடர்பாக, ராமச்சந்திரா மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ''முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. முதுகு வலிக்காக இந்த பரிசோதனை நடந்தது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருக்கோவிலூர் திருவிக்கிரம பெருமாள் கோயில்*

Image
 வைணவ திவ்ய தேச உலா - . திருக்கோவிலூர் திருவிக்கிரம பெருமாள் கோயில்* திருமாலின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் செங்கை மாவட்டம் திருக்கோவலூர் திருவிக்கிரம பெருமாள் கோயில் 42-வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகிறது. இக்கோயில் திருமாலும், துர்க்கையும் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கின்றனர். மூலவரின் திருமேனி மரத்தால் ஆனது. சாளக்கிராமத்தால் ஆன கிருஷ்ணர் தனி சந்நிதியில் அருள்பாலிக்கிறார். இத்தலத்தை பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளனர். திருமங்கையாழ்வார் பாசுரம்: மஞ்சாடு வரை ஏழும் கடல்கள் ஏழும் வானகமும் மண்ணகமும் மற்றும் எல்லாம், எஞ்சாமல் வயிற்றடக்கி ஆலின் மேல் ஓர் இளந்தளிரில் கண் வளர்த்த ஈசன் தன்னை, துஞ்சா நீர்வளம் சுரக்கும் பெண்ணைத் தென்பால் தூய நான்மறையாளர் சோமுச் செய்ய செஞ்சாலி விளைவயலுள் திகழ்ந்து தோன்றும் திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே. மூலவர்: திருவிக்கிரமர் (உலகளந்த பெருமாள்) உற்சவர்: ஆயனார், கோவலன், தாயார்: பூங்கோவல் நாச்சியார், புஷ்பவல்லி தாயார், தலவிருட்சம்: புன்னை மரம், தீர்த்தம்: பெண்ணையாறு, கிருஷ்ண தீர்த்தம், ஸ்ரீசக்ரதீர்த்தம் ஸ்ரீம

ஈரான் அமைப்புக்கு அமெரிக்கா பொருளாதார தடை..!!*

Image
 ஈ ரான் அமைப்புக்கு அமெரிக்கா பொருளாதார தடை..!!* சல்மான் ருஷ்டியின் தலைக்கு விலை நிர்ணயித்த ஈரான் அமைப்புக்கு அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது. வாஷிங்டன், பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி, 'சாத்தானின் கவிதைகள்' என்ற நூலை எழுதியதற்காக அச்சுறுத்தலுக்கிடையே வாழ்ந்து வருகிறார். கடந்த ஆகஸ்டு மாதம், அமெரிக்காவில் நியூயார்க் நகரில் ஒரு இலக்கிய நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் மீது ஒருவர் கொலைவெறி தாக்குதல் நடத்தினார். அதில், சல்மான் ருஷ்டி ஒரு கண் பார்வையை இழந்தார். ஒரு கையின் செயல்பாட்டை இழந்தார். இதற்கிடையே, சல்மான் ருஷ்டியை கொலை செய்பவருக்கு பல கோடி டாலர் பரிசாக வழங்கப்படும் என்று ஈரான் நாட்டைச் சேர்ந்த கோர்டாட் பவுண்டேசன் என்ற அமைப்பு அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. அந்த அமைப்புக்கு அமெரிக்கா நேற்று பொருளாதார தடை விதித்தது. அமெரிக்க நிதித்துறையின் வெளிநாட்டு சொத்து கட்டுப்பாட்டு பிரிவு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ''உலகளாவிய கருத்து சுதந்திரம், மத சுதந்திரம், பத்திரிகை சுதந்திரம் ஆகியவற்றுக்கு ஈரான் ஆட்சியாளர்களால் ஏற்படும் அச்சுறுத்தலை அமெரிக்கா வேடிக்ைக பார்க்காது'&#

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்குகிறது: 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு*

Image
த மிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்குகிறது: 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு* விழுப்புரம், கடலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு வாய்ப்புள்ளது. சென்னை, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்று முதல் தொடங்க இருக்கிறது. இந்த முதல் மழைப்பொழிவு அடுத்த மாதம் (நவம்பர்) 4-ந்தேதி வரை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, இன்று தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், விழுப்புரம், கடலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 17 மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் மிதமான மழையும், நீலகிரி, கோவை, திருப்பூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை

புனித் ராஜ்குமார்

Image
கன்னட சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வந்தவர் புனித் ராஜ்குமார். பிரபல நடிகர் ராஜ்குமாரின் மகனும், டாப் ஹீரோ சிவராஜ்குமாரின் தம்பியுமான புனித் ராஜ்குமார், திரையுலகில் தனக்கென ஒரு ஃபார்முலாவை பிடித்து தொடர்ந்து ஹிட் படங்களில் நடித்து வந்தார். இவர் ஆரம்பத்தில் சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். அதன் பிறகு 2002-ஆம் ஆண்டு வெளியான ‘அப்பு’ தான் புனித் கதையின் நாயகனாக நடித்த முதல் படம். இந்த படத்தின் ஹிட்டிற்கு பிறகு புனித் ராஜ்குமாருக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘அபி, வீர கன்னடிகா, மௌரியா, ஆகாஷ், அஜய், அரசு, வம்ஷி, ராம், ப்ரித்வி, ஜாக்கி, பரமாத்மா, அண்ணா பாண்ட், பவர், ரண விக்ரமா, சக்ரவியூகா, ராஜகுமாரா, அஞ்சனி புத்ரா, யுவரத்னா’ என கன்னட படங்கள் குவிந்தது. 1999-ஆம் ஆண்டு அஷ்வினி என்பவரை திருமணம் செய்து கொண்டார் புனித் ராஜ்குமார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். கடந்த ஆண்டு (2021) இதே அக்டோபர் 29-ஆம் தேதி திடீரென புனித் ராஜ்குமாருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இயற்கை எய்தினார். அடிசினல் சேதி :  அவர் உயிரோடு இருந்த

உலக பக்கவாத நோய் விழிப்புணர்வு தினமின்று

Image
உலக பக்கவாத நோய் விழிப்புணர்வு தினமின்று பக்கவாத நோய் பாதிப்புகளிலிருந்து தப்பிக்க வேண்டுமெனில் பக்கவாத நோயைப் பற்றிய பல்வேறு உண்மைகளை நாம் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய மிக மிக அவசியமாகும். பக்கவாதம் என்றால் நம் உடலில் உள்ள ஒரு பாதி முகம், கால், கை செயல் இழந்து போதல். இந்த நிலை எப்படி வருகிறது என்றால் நம் மூளையின் ஒரு பாதிக்கோ அல்லது ஒரு பகுதிக்கோ ரத்த ஓட்டம் தடைப்பட்டால் அல்லது அந்தப் பகுதி மூளை அதன் செயலாற்றலை இழந்துவிடும். அதனால் கை, கால்கள் செயல் இழந்து நோயாளி படுத்த படுக்கையாகிவிடுவார். சிலருக்குப் பேசும் திறன் அற்றுப்போகும். ஆதலால் இந்த நோயை ஆரம்பக் கட்டத்திலேயே அறிந்து அதற்கு சிகிச்சை அளிப்பதன் மூலம் மூளையைக் காப்பாற்றி நோயாளியை நிரந்தர ஊனத்திலிருந்து காப்பாற்றலாம். இந்த நோய் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தாக்கினாலும், 50 வயது கடந்தவர்களையே, அதிகமாக பாதிக்கிறது. இந்த நோய் பாதிப்பு வராமல் தடுக்க சில வழிமுறைகளை பின்பற்றலாம். உடல் எடையை சீராக பராமரிப்பது மிகவும் முக்கியமானது. மன அழுத்தம் பாதிக்காதவாறு, உடலையும், மனதையும் உற்சாகமாக வைத்துக்கொள்ளுங்கள். புகை, மது பழக்கத்தை தவிர்க

வாலிபக் கவிஞர் எனப் பாராட்டப்படும் வாலியின் பிறந்த நாள் இன்று

Image
வாலிபக் கவிஞர் எனப் பாராட்டப்படும் வாலியின் பிறந்த நாள் இன்று தமிழ் திரையுலகில் பல கவிஞர்கள் புகழ்பெற்று விளங்கி உள்ளனர்.   அவர்களில் வாலி மிகவும் குறிப்பிடத்தக்கவர்.   இவர் இயற்பெயர் ரங்கராஜன்.  இவர் 1931ஆம் வருடம் அக்டோபர் மாதம் 29ஆம் தேதி பிறந்தவர்.  இவர் சிவாஜி, எம் ஜி ஆர் காலம் தொடங்கி தற்போதைய கதாநாயகர்கள் நடித்த படங்கள் வரை பல தலைமுறையாக புகழ் பெற்ற பாடலாசிரியராக விளங்கியவர். 1958ஆம் வருடம் அழகர்மலைக்கள்ளன் என்னும் திரைப்படத்தில் தனது முதல் பாடலை எழுதினார்.   ஆனாலும், 1963ஆம் வருடம் வெளியான கற்பகம் என்னும் திரைப்படத்தின் மூலம் தான் இவர் புகழ் பெற ஆரம்பித்தார்.    எம் ஜி ஆரின் மனதைக் கவர்ந்த இவர் தொடர்ந்து எம் ஜி ஆரின் கொள்கைப் பாடல்களை எழுத ஆரம்பித்தார்.   இவரின் பல பாடல்கள் அந்த காலகட்டத்தில் புகழ் பெற்று விளங்கிய கண்ணதாசன் பாடல்கள் என்றே பலரும் கருதினர்.    எம் ஜி ஆருக்கு மட்டும் இன்றி அப்போது புகழ் பெற்ற கதாநாயகனான சிவாஜிக்கும் பல பாடல்களை எழுதி உள்ளார். அன்று தொடங்கிய அவர் கலைப்பயணம் பல தலைமுறைகளைத் தாண்டியும் தொடர்ந்தது.   அவர் பாடல்களில் தாயைப் புகழ்ந்து எழுதிய “அம்மா என்ற

'காதல்' - தமிழ் வெகுஜன இதழ்களில் மைல்கல்

Image
  'காதல்' - தமிழ் வெகுஜன இதழ்களில் மைல்கல் தி.ஜானகிராமனின் 'குளிர்' சிறுகதை எந்த இதழில் பிரசுரமானது தெரியுமா? 'காதல்' பத்திரிகையில்! யெஸ், பத்திரிகையின் பெயரே 'காதல்'தான். மட்டுமல்ல கு.அழகிரிசாமி, ஆர்.சூடாமணி, மு.வரதராசனார், டாக்டர் மா.ராசமாணிக்கனார், வல்லிக்கண்ணன், அகிலன், மாயாவி... என பல பிரபலங்கள் இந்த மாத இதழில் தொடர்ச்சியாக எழுதியிருக்கிறார்கள். ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. இப்படியொரு பெயரில் மாத இதழ் ஒன்றை நடத்த இந்த 2022லும் யோசிக்கிறோம். அப்படியிருக்க 1947ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்தப் பத்திரிகை பிறந்திருக்கிறது - அதுவும் தமிழில் - என்றால் எப்படி வியக்காமல் இருக்க முடியும்? முதல் இதழில் 'காதல்' பத்திரிகையின் அவசியம் குறித்து ஆசிரியர் எழுதியிருப்பதை பாருங்கள்: //இந்தியா சுதந்திரம் அடைந்துவிட்டது. இதுவரை சுதந்திரம் ஒன்றுதான் நமது ஒரே இலட்சியமாக இருந்து வந்தது. இனி, நம்முடைய லட்சியங்கள் பல. முதலில் சென்ற நூற்றைம்பது வருஷங்களாக அல்ல, சென்ற ஆயிரம் வருஷங்களாக நம் சமூகத்தில் குவிந்து வந்த குப்பைகளை வாரிக் கொட்ட வேண்டும். மக்கள் வாழ்க்கைத் து