Posts

Showing posts from August, 2021

மன நலத்துடன் இருக்க என்ன உணவுகளை உண்ண வேண்டும்

Image
 மன நலத்துடன் இருக்க என்ன உணவுகளை உண்ண வேண்டும்?  உங்கள் மனநலம் என்பது, நீங்கள் உண்ணும் உணவுகளைப் பொறுத்தது. இதைப் பலர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மனநலம் என்பது எண்ணங்கள் மற்றும் உணர்வுகள் சம்பந்தப்பட்டது என்று அவர்கள் சொல்லலாம். அப்படியானால் உணவுக்கும் அதற்கும் என்ன தொடர்பு இருக்க முடியும் என்ற கேள்வி எழலாம். எப்படி உணவு நம்முடைய மனநலத்தை பாதிக்கும்? உணவுக்கும் மனநலத்துக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு உண்டு என்று நிபுணர்கள் சொல்கிறார்கள். இரவும் பகலும் நம் உடலுக்குள் நடக்கும் இயக்கங்களை நமது மூளை கட்டுப்படுத்துகிறது. மூளை செயல்படுவதற்கான ஆற்றல் உணவிலிருந்துதான் கிடைக்கிறது. ஆகவே, நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பது மனநலத்துக்கு மிகவும் முக்கியம். ஃபோர்டிஸ் மருத்துவமனையைச் சேர்ந்த மனநல மருத்துவர் கேதார் திலாவே பேசும்போது, "நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பது உங்கள் உணர்வுகளை நேரடியாக பாதிக்கும்" என்கிறார். உணவுக்கும் மனநலத்துக்கும் உள்ள தொடர்பு என்ன? உணவுப்பழக்கங்கள் மனநலத்தை பாதிக்கின்றவா? எப்படி பாதிக்கின்றன? இதுபோன்ற கேள்விகளுக்கு நிபுணர்களிடம் பேசி பதில்களைப் பெறலாம். உணவு எப்பட

#மனித_ #மூளையின்_ #அற்புதங்கள்..!!

Image
  #மனித_ #மூளையின்_ #அற்புதங்கள்..!! நமது உடல் உறுப்புகளில் மிகவும் மர்மமானது மூளை.  நமது மூளையின் முழுமையான ஆற்றலை ஆய்வு செய்தால்,  நாம் நமது மூளையை முழுமையாக பயன்படுத்துகிறோமா என்ற சந்தேகம் தான் வரும்.  உடல் உறுப்புகளில் இதயத்திற்கு அடுத்தபடியாக முக்கியத்துவம் வாய்ந்த மூளை,  நமது நினைவுகளை சேமிக்கிறது.  ஆளுமைக்கும், அறிவாற்றலுக்கும் மையமாக திகழ்கிறது. 1.  நமது மூளை  60 சதவீதம் கொழுப்பாலானது.  வேறு எந்த உறுப்பும்  இந்த அளவுக்கு கொழுப்பாலானது இல்லை. 2.  நமது மூளை வலியை உணராது.  ஏனெனில்  வலியை உணரும் வலி வாங்கிகள் மூளையில் இல்லை.  எனவே தான்  நமது மூளை மண்டையோட்டுக்குள் நகரும் போதும், உந்தும் போதும் நமக்கு அந்த வலி தெரிவதில்லை. 3.  மண்டையோட்டை  கழற்றி விட்டு மூளையில்  அறுவை சிகிச்சை செய்யும்போது  நாம் விழிப்பில்  தான் இருப்போம்,  வலி வாங்கிகள் இல்லாததால் நமக்கு வலி தெரியாது.  மருத்துவர்கள் ஏன் நம்மை விழிப்பில் வைத்து அறுவை சிகிச்சை செய்கிறார்கள் என்றால், அப்போதுதான் மூளையின் அறிவாற்றல் செயல்பாடுகளை கண்காணிக்க முடியும். 4.  நமது மூளை  25 வாட்ஸ் அளவுக்கு மின்சாரம் உற்பத்தி செய்கிறது.  அதாவ

விரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு

Image
 விரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு! - இது எப்படி ஏற்படுகிறது?   நம் உடலில், ஏதேனும் ஒரு இடத்தில் வலி ஏற்பட்டால், அப்பகுதியை நம் கையால் அழுத்திவிட்டுக் கொள்கிறோம். அப்படி செய்தால், வலி குறைகிறது. இது எப்படி ஏற்படுகிறது? நம் உடல் முழுவதும் அக்குப்பிரஷர் புள்ளிகள் உள்ளன. நாம் வலியுள்ள பகுதியில் அழுத்தம் கொடுக்கும் போது, அப்பகுதியில் உள்ள அக்குப்பிரஷர் புள்ளிகள் தூண்டப்படுகின்றன. அதனால் வலி குறைகிறது. உடலில் உள்ள சில குறிப்பிட்ட புள்ளிகளில் சில முறைகள் அழுத்தம் கொடுத்து தளர்த்துவதால், நம் நோய்கள் தீருகின்றன. நோய்கள் வராமல் தடுக்கப்படுகின்றன. சில நோய்களுக்கு அக்குப்பிரஷர் முறையில் தீர்வு காணும் எளிய முறைகளை காணலாம். தலைவலி : நமக்கு பிடிக்காத ஒரு வேலையை பிறர் நம்மை செய்ய சொல்லும் போது, “தலை வலிக்கிறது’ என்று கூறி தப்பித்து கொள்கிறோம். ஆனால், உண்மையில் தலைவலி வந்தால் என்ன செய்கிறோம்? வலி நிவாரணக் களிம்புகள் தடவுகிறோம். அவை கொடுக்கும் வெப்பத்தினால் தலைவலி குறைவது போல் உணர்கிறோம் அல்லது வலி நிவாரண மாத்திரைகள் எடுத்து கொள்கிறோம். அடிக்கடி மாத்திரைகள் எடுத்து கொள்வதால், அசிடிட்டியால் துன்பப்ப

சென்னையிலுள்ள அறம் செய்ய விரும்பு லயன்ஸ் கிளப்பின் தொடர் சேவையாக 29.8.2021 அன்று நடை பெற்ற மிகப்பெரிய ப்ராஜக்ட்

Image
 சென்னையிலுள்ள  அறம் செய்ய விரும்பு லயன்ஸ் கிளப்பின் தொடர் சேவையாக 29.8.2021 அன்று மிகப்பெரிய  ப்ராஜக்ட் நடை பெற்றது.  சங்கத்தின் சார்பாக நடந்த இந்த மெகா ப்ராஜெக்ட்க்கு அனைத்து ஏற்பாடுகளையும் முன் நின்று செய்த Project chair person  லயன் டாக்டர்.கருணாநிதி அவர்கள்  இதற்கு அவர் தனது பொன்னான நேரத்தை  சங்கத்திற்காக செலவிட்டு சோளிங்கநல்லூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர், பகுதி செயலாளர், வட்டச் செயலாளர் மற்றும்  பெருமளவு மக்களையும் அங்கு கூட்டி வந்து  சங்கத்தின் சேவையை உலகம் அறிய  செய்துள்ளார்  இந்த நிகழ்வுக்கு  வருகை தந்த ஒவ்வொருவரும் வாழ்த்தி தங்களது ஆதரவுகளை தெரிவித்தனர்.   இது  சங்கத்திற்கு  சந்தோஷத்தை அளித்த தருணம்.என சங்க செயலாளர் லயன் ஸ்ரீ பாலச்சந்தர் தெரிவித்தார் மேலும் அவர்  இந்த நிகழ்வுக்கு  தனது பொன்னான நேரத்தை நேரத்தை  சங்கத்திற்கு கொடுத்துக் கொண்டிருக்கும்   founder லயன் ASV சரவணகுமரன் அவர்களையும் மற்றும்  சங்கத்தின் president MJF லயன் A. தன பாலகிருஷ்ணன் அவர்களையும், நமது சங்கத்தின் பொருளாளர் லயன் T. கார்த்தீபன்.  சங்கத்தின் கிளப் Advisor லயன் கோகுல் அவர்களையும்,  முதல் vice pre

டோக்கியோபாராலிம்பிக்ஸில் இந்தியாவுக்கு இது முதல் தங்கம்

Image
 டோக்கியோ பாராலிம்பிக்ஸ்: 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதல் பிரிவில் இந்திய வீராங்கனை அவனி லெகாரா தங்கப்பதக்கம் வென்று சாதனை. டோக்கியோ பாராலிம்பிக்ஸில் இந்தியாவுக்கு இது முதல் தங்கம் டோக்கியோ பாராஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற அவனி லெகாராவுக்கு இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.  டோக்கியோ பாராஒலிம்பிக் போட்டியில் வரலாறு படைத்ததுடன், தங்கம் வென்ற முதல் இந்திய பெண் என்ற சாதனை படைத்ததற்காக வாழ்த்துகள் என ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார். உங்களுடைய சிறந்த செயல்பாட்டால் இந்தியா உற்சாகம் அடைந்து உள்ளது.   நீங்கள் படைத்த அற்புத சாதனையால், மேடையில் நமது மூவர்ண கொடி உயர பறக்கிறது என ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார்.

கண்ணனைக் கும்பிடுவோம் | கவிஞர் ச.பொன்மணி |

Image
  கண்ணனைக் கும்பிடுவோம் | கவிஞர் ச.பொன்மணி | பாடல், இசை, குரல் & ஒளி வடிவம் கவிஞர் ச.பொன்மணி by 

ஸ்ரீ கிருஷ்ண உபதேசம்:

Image
  ஸ்ரீ கிருஷ்ண உபதேசம்: செல்வ செழிப்புடன் வாழ உதவும் 5 பொக்கிஷம் வனவாசம் முடிந்து ஹஸ்தினாபுரம் திரும்பிய பாண்டவர்களுக்கும், தாய் குந்திக்கும், மனைவி திரௌபதிக்கும் ராஜா திருதிராஷ்டிரன் மற்றும் ராணி காந்தாரியும் அமோக வரவேற்பளித்தனர். இதைத் தொடர்ந்து ஹஸ்தினாபுர அரசராக பாண்டவர்களில் மூத்தவரான யுதிஷ்டிரனுக்கு மன்னர் திருதராஷ்டிரன் மூடிச்சூட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதற்கு முதல் நாள் இரவு யுதிஷ்டிரனை சந்தித்துப் பேசிய கிருஷ்ணர், வாழக்கையில் செல்வமும், செழிப்பும் பெற்று நாட்டை ஆள்வதற்கு தேவையான முக்கிய 5 பொக்கிஷங்களை பற்றி எடுத்துக் கூறியுள்ளார். தண்ணீர்: இந்து முறைப்படி, தண்ணீர் கொடுப்பது தெய்வபக்திக்கு நிகராக கருதப்படுகிறது. அதனால் தான் சூர்ய பகவானுக்கும், தேவிக்கும் தண்ணீர் வைத்து படையல் செய்கிறோம். அதோடு வீட்டிற்கு வரும் உறவினர்களை முதலில் தண்ணீர் கொடுத்து வரவேற்கிறோம். சந்தனம் : ஆயிரக்கணக்கான கொடிய பாம்புகள் சுற்றியிருந்தாலும் சந்தன மரம் தனது வாசனையை இழந்ததில்லை. அதேபோல் உன்னைச் சுற்றி எத்தனை தீமைகள் இருந்தாலும் வீட்டில் சந்தனம் இருந்தால் எந்த தீய சக்தியும் தாக்காது என்று ஸ்ரீ கிருஷ்ணர

குழந்தை உரிமை பாதுகாப்பு குழு உறுப்பினர்களுக்கு திறன் வளர்ச்சி பயிற்சி

Image
  செங்கல்பட்டு மாவட்டம் திருநீர்மலை பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் இன்று (29.08.2021)காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை குழந்தை  உரிமை பாதுகாப்பு தோழமை  கூட்டமைப்பு மற்றும் இனிய உதயம் தொண்டு நிறுவனம் இணைந்து குழந்தை உரிமை பாதுகாப்பு குழு உறுப்பினர்களுக்கு திறன் வளர்ச்சி  பயிற்சி நடைபெற்றது.  இந்த பயிற்சிக்கு இனிய உதயம் தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் திருமதி கோமளா அவர்கள் தலைமையிலும், திருநீர்மலை கிராம நிர்வாக அலுவலர் திரு சிவகுமார் அவர்கள் முன்னிலையில் ACDS நிறுவனத்தின் இயக்குனர் திரு தேவன்பு அவர்கள் பயிற்சி அளித்தார்.  இப்பயிற்சியில் குழந்தை உரிமை மற்றும் பாதுகாப்பு சட்டங்கள் குறித்தும் CRPF செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. குறிப்பாக UNCRC, போக்சோ சட்டம், குழந்தை திருமண தடை சட்டம், குழந்தைத் தொழிலாளர் (ஒழுங்குமுறை) மற்றும் (முறைப்படுத்துதல்) சட்டம் போன்றவற்றின் மீது பயிற்சி விரிவாக வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து, ஒருங்கிணைப்பாளர் திரு சுரேஷ் அவர்கள் கிராம அளவில் குழந்தைகளுக்காக உள்ள வளங்கள், வாய்ப்புகள், குழந்தைகளுக்கான பிரச்சினைகள் எவ்வாறு கண்டுபிடி

வட்டு எறிதல் போட்டியில் இந்திய வீர‌ர் வினோத் குமார் வெண்கல பதக்கம்

Image
 வட்டு எறிதலில் இந்திய வீரர் வினோத் குமார் வெண்கலம் வென்றிருக்கிறார். பாராலிம்பிக் 2020 : வட்டு எறிதல் போட்டியில் இந்திய வீர‌ர் வினோத் குமார் வெண்கல பதக்கம் வென்றார் பாராலிம்பிக் 2020 வட்டு எறிதல் போட்டியில் இந்திய வீர‌ர் வினோத் குமார் வெண்கல பதக்கம் வென்றா 19.91 மீட்டருக்கு வீசி ஆசிய ரெக்கார்ட் செய்தார். அதன் மூலம் மூன்றாம் இடம்பிடித்தார்.

உயரம் தாண்டுதலில் இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம்

Image
  டோக்கியோ பாராஒலிம்பிக்; உயரம் தாண்டுதலில் இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம் டோக்கியோ பாராஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம் கிடைத்து உள்ளது.

கிராம்பு எண்ணெயின் நன்மைகள்...!!

Image
 கிராம்பு எண்ணெயின் நன்மைகள்...!! தற்போதுள்ள உலகில் அழகு ஆரோக்கியம் இரண்டிற்கும் உதவும் பொருட்கள் குறைந்த அளவே உள்ளன. அப்படி ஒரு பொருள் நம் வீட்டின் சமையலறையில் இருக்கிறது. ஆம், கிராம்பு எண்ணெய் பல வழிகளில் நமக்கு பலனுள்ளதாக இருக்கிறது. முகப்பரு நீக்க: அதிக அளவு முகப்பரு இருந்தால் கிராம்பு எண்ணெயுடன், பாதாம் அல்லது தேங்காய் எண்ணெய் கலந்து முகத்தில் அப்ளை செய்து 15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.இப்படி தினமும் செய்து வர முகப்பரு நீங்கும். மன அழுத்தம் நீங்க: கிராம்பு எண்ணெய் அற்புதமான் நறுமணம் கொண்டிருக்கும். இது நரம்புகளுக்கு புத்துணர்வு அளிக்கும் அதனால் மனம் அமைதி பெறும். தலைவலி நீங்க: கிராம்பு எண்ணெயை தடவி வர தலைவலி நீங்கும். பல்வலிக்கு: வலி உள்ள இடங்களில் கிராம்பு எண்ணெய் வைத்து சிறிது நேரம் கழித்து உப்பு நீரில் வாய் கொப்பளித்தால் பல் வலி நீங்கும்.

இந்த உணவுகளை வெறும் வயிற்றில் பருகினால்

Image
 இந்த உணவுகளை வெறும் வயிற்றில் பருகினால். காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சில வகை பானங்களை பருகும் வழக்கத்தை பலரும் பின்பற்றுகிறார்கள். இரவில் சாப்பிட்ட பிறகு 8-9 மணி நேரம் கழித்து வெறும் வயிற்றில் எழுந்திருக்கும்போது முதலில் சாப்பிடுவதை வயிறு, குடல் சட்டென்று உறிஞ்சிவிடும். வெறும் வயிற்றில் திரவ உணவுகளை பருகுவது நச்சுக்களை வெளியேற்றவும், பசியை அதிகரிக்கவும், எடையை குறைக்கவும், சரும ஆரோக்கியத்தை பாதுகாக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவும். வெறும் வயிற்றில் என்னென்ன பானங்களை பருகலாம்? அதனால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன? மஞ்சள் பால்: இந்திய உணவுகளில் மஞ்சள் சிறந்த ஆன்டி ஆக்சிடென்டுகளை கொண்டது. இது அனைத்து விதமான அழற்சியையும் போக்கும். குறிப்பாக சுவாச பிரச்சினைகளுக்கு சிறந்த நிவாரணியாக செயல்படக்கூடியது. சளி, இருமல் போன்ற பல்வேறு பாதிப்புகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. ஒரு கப் சூடான பாலில் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், சிறிதளவு உப்பு சேர்த்து கலக்க வேண்டும். சுவைக்கு தேன் அல்லது சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்துக்கொள்ளலாம். தினமும் காலையில் எழுந்ததும் இந்த மஞ்சள் ப

உடற்பயிற்சிகள் நம் நினைவாற்றலை கூர்மையாக வைத்திருக்க உதவுமா.?

Image
உடற்பயிற்சிகள் நம் நினைவாற்றலை கூர்மையாக வைத்திருக்க உதவுமா.? சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு சுவாரஸியமான புதிய ஆய்வில் வழக்கமான உடற்பயிற்சிகள் மூளை ஆரோக்கியத்தை அதிகரிக்கும் வாய்ப்புகள் இருப்பது தெரிய வந்துள்ளது. உடற்பயிற்சியின் போது தசைகளால் உற்பத்தி செய்யப்படும் ஹார்மோன் ஒன்று மூளைக்குள் சென்று நியூரான்களின் ஆரோக்கியத்தையும் செயல்பாட்டையும் மேம்படுத்துவதால் சிந்தனை மற்றும் நினைவாற்றலை கூர்மையாக இருக்கும் என்பது இந்த ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. இந்த ஆய்வுக்கு எலிகள் பயன்படுத்தப்பட்டன. இதற்கு முந்தைய ஆய்வில் உடற்பயிற்சிகளை செய்யும் போது மனிதர்களும் எலிகள் உற்பத்தி செய்த அதே ஹார்மோன்களை உற்பத்தி செய்தது கண்டறியப்பட்டது. ஐரிசின் (Irisin) என்ற ஹார்மோன்களே நாம் உடற்பயிற்சி செய்யும் போது நம் உடலில் உற்பத்தி ஆகிறது. மேலும் இதனுடன் கூடிய கண்டுபிடிப்புகள் வயதான மற்றும் டிமென்ஷியாவால் ஏற்படும் நினைவாற்றல் பாதிப்பை தினசரி நடைபயிற்சி மாற்றக்கூடும் என்றும் கூறுகின்றன. உடற்பயிற்சி மூளைக்கு நல்லது என்பதற்கு ஏற்கனவே ஏராளமான சான்றுகள் உள்ளன. உடற்பயிற்சிகள் மூளையின் நினைவு மையத்தில் புதிய நியூரான்க

'பிளாக் காபி' உடல் எடையை குறைக்க உதவுமா

Image
 'பிளாக் காபி' உடல் எடையை குறைக்க உதவுமா..? சாதாரணமாக ஒருநபர் ஒரு நாளைக்கு 5 முறையாவது காபியை குடிக்கின்றனர். அதிலும் குறிப்பாக பிளாக் காபி (Black Coffee). பிளாக் காபி குடிப்பதற்கும், எடை குறைப்பிற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. இதில் அதிகளவு கஃபைன் உள்ளது. இதன் முக்கியமான பலன்களில் ஒன்று புற்றுநோய்க்கு எதிராக போராடுவதாகும். இந்த பதிவில் பிளாக் காபிக்கும், எடை குறைப்பிற்கும் இடையே இருக்கும் ரகசிய தொடர்பு என்னவென்று பார்க்கலாம். பிளாக் காபி என்பது காபி பிரியர்களின் பிரியமான பானமாகும். இது அவர்களுக்கு போதை மற்றும் சுவை அளிப்பதைத் தவிர, இது ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். இதில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளது. இது ஒரு உடனடி பவர் பூஸ்டர் அதோடு புற்றுநோய், இருதய நோய்கள், நீரிழிவு போன்ற பல்வேறு நோய்களைத் தடுக்கும் என்று கூறப்படுகிறது. இதைத் தவிர, எடை இழப்புக்கு உதவுவதிலும் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பிளாக் காபி (Black Coffee) வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் மற்றும் கொழுப்பை எரிக்க உதவுகிறது. எடை இழப்பு நன்மைகளைப் பெறுவதற்கு, சர்க்கரை, பால், கிரீம் போ

உணவின் கலோரி அளவை கணக்கிட உதவும் ஃபார்முலா

Image
 உடல் எடையை குறைக்க நினைப்போர் உணவின் கலோரி அளவை கணக்கிட உதவும் ஃபார்முலா இதுதான்..!  உடல் எடையை குறைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் பொதுவாக எடை இழப்புக்கான டயட் முறைகள் பற்றி தெரிந்திருக்கும் என்றாலும் ஒருவர் தாங்கள் தினசரி எடுத்து கொள்ளும் உணவுகளில் கலோரிகளை கட்டுப்படுத்துவதன் மூலம் வெகுவாக எடை இழப்பு ஏற்படும் என்பது பலருக்கு தெரியாது. குறைந்த கலோரி உணவுகளை கொண்ட டயட்டை பின்பற்றுவது எடை இழப்பிற்கு உதவும் என்று பல ஆய்வுகள் காட்டுகின்றன. இதற்கு அர்த்தம் என்னவென்றால் குறிப்பிட்ட அளவு உடல் எடையை இழக்க வேண்டும் என்ற இலக்கு கொண்டிருப்பின், அவர்கள் கலோரி உட்கொள்ளலில் கவனம் செலுத்த வேண்டும். மேலும் கலோரி விஷயத்தில் அவர்கள் இலக்கிற்கு ஏற்ப தேவையான மாற்றங்களை செய்ய வேண்டும். நீங்கள் எடை குறைப்பு முயற்சியில் ஈடுபட்டுள்ளீர்கள் என்றால் உங்களுக்கு தினசரி தேவைப்படும் கலோரி அளவுகள் எவ்வளவு என்ற குழப்பம் ஏற்படும். எனவே உங்களுக்கு உதவ பிரபல ஊட்டச்சத்து நிபுணரான நான்சி டெஹ்ரா சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை ஷேர் செய்து உள்ளார். அதில் அளவான கலோரி எடுத்து கொள்வது எடை குறைப்பில் எப

உடம்ப குறைக்கும் ஐடியா இருந்தா முதலில் இதை கவனிங்க!

Image
 Weight Loss | உடம்ப குறைக்கும் ஐடியா இருந்தா முதலில் இதை கவனிங்க!  ஒரு கட்டடத்திற்கு அடித்தளம் எவ்வளவு முக்கியமோ, அதேபோல் உடல் எடையை குறைக்க வேண்டும் என்றவுடனேயே நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் உடலில் உள்ள கலோரி அளவை குறைப்பது தான். கலோரியை குறைக்கவில்லை என்றால் உடல் எடை குறையாது. உங்கள் உயரம், எடையை பொறுத்து உங்கள் உடம்பிற்கு ஒரு குறிப்பிட்ட அளவு கலோரி தேவைப்படும். இரண்டாவதாக நீங்கள் கவனிக்க வேண்டியது அடிப்படையான உடற்பயிற்சிகள். இதற்காக நீங்கள் ஜிம்மிற்கு செல்ல வேண்டும் என்பதில்லை. வீட்டிலிருந்தே பணிபுரியும் நிலையில் உள்ளவர்கள் உடல் எடையைக் குறைக்க வேண்டும் எனில், முதலில் எளிதான மற்றும் அடிப்படையான உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். தினமும் 30 நிமிடங்கள் உடற்பயிற்சியும் உணவில் கலோரியின் அளவை கட்டுக்குள் வைப்பதுமே உடல் எடையைக் குறைக்க உதவும் முக்கிய கூறுகள் ஆகும். மேலும், உங்கள் எடை விரைவில் குறைவதை உணருவீர்கள். குறைந்த கலோரி கொண்ட உணவுகளை உட்கொள்வது என்பது சருமத்திற்கு மட்டுமல்ல நோய்களையும் தடுக்க உதவும். கீட்டோ மற்றும் இண்டர்மிட்டண்ட் ஃபாஸ்ட்டிங் போன்ற டயட்களை பின்பற்றுவதற்கு பதிலாக,

இரவில் தயிர் சாப்பிடலாமா?

Image
  இரவில் தயிர் சாப்பிடலாமா?  தயிருக்கு உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளும் தன்மை உண்டு. அதனால்தான் பரவலாக அது உபயோகத்தில் இருக்கிறது. தயிரில் உள்ளடங்கி இருக்கும் நல்ல பாக்டீரியாக்கள் செரிமானம் சீராக நடைபெற உதவும். குடல் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும். * பகல் நேரங்களில் வெப்பநிலை அதிகமாக இருக்கும் என்பதால் உடல் உஷ்ணத்துடன் காணப்படும். அந்த சமயத்தில் தயிர் சாப்பிடுவது உடல் சூட்டை தணிக்க உதவும். அதனால்தான் சாப்பிடும்போது தயிரை தவிர்க்காமல் உணவில் சேர்த்துக்கொள்கிறார்கள். * சிலர் தயிரை இரவு உணவிலும் சேர்த்துக்கொள்வார்கள். இரவு நேரத்தில் உடலின் வெப்பநிலையில் மாற்றம் ஏற்படும். அந்த சமயத்தில் தயிரை சேர்த்துக்கொண்டால் சளிப்பிரச்சினை உருவாக வாய்ப்பிருக்கிறது. * அதிலும் இருமல், ஆஸ்துமா பாதிப்புக்கு ஆளாகி இருப்பவர்கள் தயிரை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அது சளியை அதிகப்படுத்திவிடும். * ஆனால் மோர் எல்லா நேரத்திற்கும், எல்லோருக்கும் ஏற்றது. மோரில் சிறிதளவு மிளகுத்தூள் கலந்து பருகலாம். அது உடல் வெப்பநிலையை அதிகரிக்க செய்யும் என்பதால் சளி பிரச்சினை ஏற்படாது.

முகப்பரு வந்தால் கடைபிடிக்க வேண்டியவை

Image
 முகப்பரு வந்தால் கடைபிடிக்க வேண்டியவை  * நிறைய தண்ணீர் அருந்துதல் வேண்டும். ஒரு நாளைக்கு குறைந்தது நான்கு அல்லது ஐந்து லிட்டராவது தண்ணீரை குடிக்க வேண்டும். * ஒரு நாளைக்கு நான்கு அல்லது ஐந்து முறை வெறும் நீரால் முகம் கழுவுதல் வேண்டும். * முகத்தை கழுவும்போது காலை மற்றும் மாலை நேரத்தில் மட்டும் ரோஸ் வாட்டரில் முகம் கழுவினால் சருமத்தில் உண்டான சூடு குறைந்து குளிர்ச்சி கிடைக்கும். * ஜெல் பேஸ், ஃபேஸ் வாஷ்களை பயன்படுத்துதல் வேண்டும். * பயத்தம் பருப்பு அல்லது நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் குளியல் பொடி கொண்டும் முகத்தைக் கழுவலாம். * வெயில் நேரத்தில் வெளியில் செல்லும் போது முகத்தை மூடி வெயில் நமது சருமத்தை நேரடியாகத் தாக்காதவாறு பாதுகாப்பாகச் செல்ல வேண்டும். * வெளியில் செல்லும்போது சூரிய ஒளி நேரடியாகத் தாக்காதவாறு சன் க்ரீம்களை பயன்படுத்தலாம். இது சருமத்தை சற்று பாதுகாக்கும். * கைபேசிகள் வழியாக வெளியேறும் ரேஷர் கதிர்கள் முகத்தை தாக்கும் தன்மை கொண்டது. எனவே கைபேசி பயன்பாட்டை குறைப்பதுடன், தூங்கும்போது அருகில் வைப்பதை தவிர்த்தல் வேண்டும். * சாலிட்டிரிக் ஆயில் அல்லது டீ ட்ரீ ஆயில் உள்ள ஃபேஸ

சகுந்தலா ஸ்ரீனிவாசனின் காதல் கவிதைகள் எழுதும் நேரம்

Image
  காதல் கவிதைகள் எழுதும் நேரம் --- சகுந்தலா ஸ்ரீனிவாசனின் கவிதைகள் 1 . ஏனென்றால் நீ வேண்டும் ஏன் அழ வேண்டும் ஏன் புன்னகைக்க வேண்டும் ஏன் சினம் கொள்ள வேண்டும் ஏன் தவிப்புக்குள்ளாக வேண்டும் ஏன் தனிமை வேண்டும் ஏன் பசிக்கமாலிருத்தல் வேண்டும் ஏன் தூக்கத்தை இழக்க வேண்டும் ஏன் பைத்தியமாக வேண்டும் ... ஏனென்றால் நீ வேண்டும் என்பதற்காகத்தான் இவ்வளவும் 2 . உன் கோபத்தில் நான் யார்... மௌனம் கொள் மென்று விழுங்கு உமிழ்நீர் உறைய வை உலகை நிறுத்து வானை உடை வாளினை கூர்செய் நீண்ட தூரம் செல் நீளும் காதலை அமைதியாக்கு.. இப்போது சொல் உன் கோபத்தில் நான் யார்... 3 . என் விழிகளுக்கான பருவமழை . விழுந்து கிடக்கும் மலர்களுக்கும் இலைகளுக்கும் நடுவில் சுற்றித்திரியும் ஒற்றை எறும்பினைப்போல் ஊர்ந்துக்கொண்டிருக்கிறேன்.. எந்நேரமும் பெருமழையொன்று வருவதற்கான முகாந்திரத்தை ஏற்படுத்தி தருகிறது மனது.. என் விழிகளுக்கான பருவமழையை உன் வருகையினால் பொய்த்து விடச்செய் கவிதைகள் by சகுந்தலா ஸ்ரீனிவாசன்