தீபாவளி ஸ்பெஷல் பாதாம் ரெசிபிக்கள்*
தீபாவளி ஸ்பெஷல் பாதாம் ரெசிபிக்கள்* நட்ஸ் பற்றிய பல செய்திகளை நாம் கடந்து வந்திருப்போம். அதனுடைய நன்மைகளை, மருத்துவ பயன்களை எல்லாம் கேட்டிருப்போம். அதில் ஏராளமான நார்ச்சத்து மற்றும் புரோட்டீன் இருக்கிறது. இயற்கையில் விளைகின்ற பல பருப்பு வகைகள் எல்லாமே உடல்நலத்திற்கு தேவையான பல சத்துக்களை கொண்டவை தான். அந்த வகையில் எல்லோரும் உண்ணக்கூடிய பாதம் பருப்பில் எண்ணிலடங்கா சத்துக்கள் உள்ளன. பொதுவாகவே, பாதாம் பருப்பில் வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டிஆக்சிடன்ட்ஸ் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் ஆகியவை நிறைந்துள்ளன. நம் உடல் ஆரோக்கியத்திற்கு நாம் எதிர்பாராத நன்மைகளை தரக்கூடியது. இந்த பாதாம் பருப்பை அப்படியே சாப்பிடலாம் அல்லது ஊறவைத்தும் சாப்பிடலாம். இவற்றைத் தவிர அதில் சிறப்பு உணவுகளை சமைத்தும் சாப்பிடலாம். கிச்சன் வாசகிகளுக்காக பிரத்யேகமான பாதாம் ரெசிபிக்களை பற்றி தெரிந்து கொள்ளலாம். ஆல்மண்ட் ஸ்வீட் பொட்டேடோ டோஸ்ட் தேவையானவை : தோல் உரிக்கப்படாத பாதாம் - 3/4 கப், பிரெட் துண்டுகள் - 4, வட்டமாக வெட்டப்பட்டு ரோஸ்ட் செய்யப்பட்ட சர்க்கரைவள்ளிக் கிழங்கு - 2 கப், உப்பு - சுவைக்கு ஏற்ப, மிளகுத் தூள் -...